அத்தியாயம் : 5
சிவபிரசாத்தோடு தொழில் தொடர்புக்கு முதலில் ரங்கராஜன் ஒத்துக் கொள்ளவே இல்லை.
"வேண்டாம் சித்துமா… முதலில் இது போல சிறு சிறு வேலைகள் அவர்களுக்கு நாம் செய்து கொடுத்தோம் தான். ஆனால் அப்போ வெறும் பிசினஸ் நோக்கம் மட்டும்தான். இப்பொழுது நம் பெண் அந்த வீட்டில் வாழ்றா.. சம்பந்தம் வைத்தவர்களோடு அதுவும் கொண்டான் கொடுத்தானோடு தொழில்துறை வைத்துக் கொள்வதெல்லாம் சரியாக இருக்காது. அவரை வேறு இடத்தில் பார்த்துக்கொள்ள சொல்" என்று அவர் அந்த பேச்சைக் கத்தரிக்க முயன்றார்.
ஆனால் சிவப்பிரசாத்தோ "அங்கிள் என் அண்ணன் இப்பதான் என்னை நம்பி முழுசா இந்த வேலையை கொடுத்திருக்கிறான். இதை நான் சொதப்பினால் அவ்வளவுதான் எனக்கு பியூச்சரே இல்லாமல் பண்ணிடுவான். எங்க அண்ணனை பத்தி தான் உங்களுக்கு தெரியுமே அங்கிள். எனக்கு கன்ஸ்ட்ரக்ஷன் பத்தி எந்த பயமும் இல்லை. பக்காவா டீம் இருக்கு நானும் ப்ளானிங் எல்லாம் நல்லா போட்டு இருக்கேன்.. கிட்டத்தட்ட முக்கால்வாசி முடிஞ்சது. ஆனா சித்து என்கூட இருந்தா உள்ள இந்த இன்டீரியர் இருந்து நான் போட்டிருக்கிற சில பிளானிங் எல்லாம் கரெக்டா பார்த்து சொல்லுவா.. உங்க பொண்ணோட திறமை தான் உங்களுக்கே தெரியுமே அங்கிள்! அந்த திறமை இதுல கொஞ்சம் காட்ட சொல்லுங்க அங்கிள்.. இதன் மூலம் சித்துவோட பேரும் வெளியில தெரியும். எங்க அண்ணன் எனக்கு கொடுத்த ப்ராஜெக்ட்டை நான் கச்சிதமாக செய்து முடித்து விட்டேன் என்றால் என் மீது அவனுக்கு நம்பிக்கையும் வரும். ப்ளீஸ் அங்கிள் புரிந்து கொள்ளுங்க.." என்று அத்தனை கெஞ்சி அவன் பேசினான்.
இவர்கள் பேசும்போது வீடியோ காலில் இருந்த ஆகாஷீம் கேட்டுக் கொண்டுதான் இருந்தான். அவனுக்கும் சிவப்பியசாந் சொல்லுவது உசிதமாய் தான் இருந்தது. மகனை திரும்பி அவர் கண்களால் பார்க்க..
"சிவப்பிரசாத் சொல்வதும் சரிதானப்பா! அவனுக்கு ஒரு பொறுப்பு வந்திருக்கு. அவனை நிரூபிக்க ஆசைப்படுகிறான்.. பண்ணட்டுமே.. அதுவும் இல்லாமல் நம்ம சித்துமாவுடைய திறமையும் இதில் நல்லா வெளிவரும்னு எனக்கு தோணுது. அவன் ஆல்ரெடி என்கிட்ட அந்த வீட்டோட டிசைனிங் காமிச்சான். நல்லா பெருசா காரைக்குடி செட்டியார் மாளிகை மாதிரி நல்லாவே டிசைன் பண்ணி இருக்கான் பா.. சேரந்து பண்ணினா சூப்பரா பண்ணிடலாம்" என்று கூற இவரும் சரி என்று ஒப்புதல் கொடுத்தார்.
"தேங்க்யூ.. தேங்க்யூ.. அங்கிள் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்! என்னை நம்பி நீங்க சித்துவை ஒப்படைத்ததற்கு" என்றதும் அவர் கேள்வியை பார்க்க "எல்லாம் இந்த ப்ராஜெக்ட் விஷயமாக" என்றான்.
"சரி சரி ஆனால் மாலை 6 மணிக்கு மேல் அவள் எந்த சைட்டுக்கும் வரமாட்டா.. அதை இப்பவே நல்லா ஞாபகம் வச்சுக்கோ" என்றார்.
"நீங்க இவ்வளவு தூரம் என்னை நம்பி அனுப்புவதே போதும் அங்கிள். கரெக்டா 6:00 மணிக்கு எல்லாம் டான்னு அவ உங்க வீட்ல இருப்பா பாருங்க" என்றான்.
வீட்டில் வந்து பெரியம்மாவிடம் அதை பகிர்ந்து கொண்டாள் சித்ரலேகா .கலாவதிக்கும் பெருமைதான். "நான் டிவில பார்க்கும்போது அந்த வீட்டெல்லாம் பார்த்தா நானும் வாயை பிளந்து பார்ப்பேன் சித்துமா.. அதனை நீ டிசைன் பண்றதை நான் பாக்கணும். எனக்கு இப்பவே ஒரு எக்சைட்டிங்கா இருக்கு" என்று தன்னுடைய மகிழ்ச்சியை அவரும் அவளுக்கு பிடித்த உணவுகளை செய்து கொடுத்து காண்பித்தார்.
சென்னையிலேயே ஒரு பிளாட்டில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தான் சிவப்பிரசாத். எப்படியும் இந்த வேலையை முடியும் வரை அவன் ஹோட்டல் தங்குவதற்கு இது மேல் என்று நினைத்து தான். அன்று இரவு தனது தோழி தாத்ரிக்கு அழைத்து "எல்லாம் சரியா போகுதுடி… நீ சொன்ன மாதிரியே சொல்லி சித்துவ போய் ஒத்துக்க வச்சிட்டேன். இப்பதான் நிம்மதியா இருக்கு. இதுல எப்படியாவது ஜெயிச்சுடனும் நான்" என்று அத்தனை வருத்தத்தோடு அவன் பேசினான்.
"டேய் நண்பா நாம் எல்லாம் பொறந்ததே ஜெயிக்கிறதுக்கு தான். இப்படி நீ மூஞ்ச தொங்கப்போட்டு கிட்டே அவகிட்ட போகாத. நல்ல பிளஸண்டு ஸ்மைலோட போ. அப்பதான் அந்த குட்வைப் அவளையும் நல்லா சிந்திக்க வைச்சு டிராயிங் பண்ண வைக்கும். புரியுதா?" என்று அவனுக்கு இன்னும் நிறைய அறிவுரை கூறிய பாடம் எடுத்தாள் தாத்ரி.
ஏற்கனவே கட்டுமான பணி நடந்து கொண்டு இருந்ததில் தான் இடையில் இன்டீரியருக்கு இவளை அழைத்து இருந்தான். முக்கால்வாசி முடிந்துவிட்ட அந்த வீட்டினில் அவ்வப்போது இவளது பங்கும் சேர்ந்து கொள்ள இன்னும் அழகாய் வளர்ந்து வந்து கொண்டிருந்தது அந்த மாளிகை போன்ற வீடு.. வீடு மட்டுமல்ல சிவப்பிரசாத்தின் நெருக்கம் சித்திவிடும் அதிகரித்தது.
முன்பு தோழியின் தங்கையாக பார்த்தவன் இப்பொழுது உரிமையாய் பேசினான். அவளிடம் உரிமையாய் பழகினான். உரிமையோடு கண்டித்தான். சில சமயம் அவளிடம் அறிவுரை கேட்டான். பல சமயங்களில் அவளுக்கு அறிவுரை கூறினான். இப்படி அவனின் நெருக்கங்கள் அவளிடம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
ஆனால் சிதிரலேகாவிடம் அவன் போன்ற எண்ணங்கள் எதுவுமே இல்லை. எப்பொழுதும் போல வேலையில் வேலையில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருந்தாள். கூடவே அக்காவின் நண்பன் இப்பொழுது உறவினன் அந்த எண்ணத்தை தாண்டி வேற எதுவும் அவளது மனதை தொடவே இல்லை. ஏற்கனவே அந்த மனதில் தான் யட்சன் புகுந்து உள்ளே ஆட்டிப்படைத்துக் கொண்டே இருந்தானே…
இப்போதெல்லாம் இரவு வந்தாலே அவளுக்கு கூடவே நடுக்கம் வந்து விடுகிறது.
கனவு கண்டது என்னவோ அன்று ஒரு நாள் மட்டும் தான். ஆனால் அடிக்கடி அந்த கனவு மாநாடு படத்தை போல ரிப்பீட்டாக வந்து வந்து அவள் முன்னே சென்று கொண்டிருக்க அதில் பதைபதைத்து போனாள் சித்ரலேகா.
கனவில் ஏதோ ஒரு ராட்சசன் வந்து தூக்கிக் கொண்டு சென்றான்.. பேய் பிசாசு வந்தது என்றால் கோவிலுக்கு சென்று மந்திரித்து கயிறு கட்டலாம். பூஜைகள் செய்யலாம் ஏன் வேப்பிலை கூட அடிக்கலாம்.
ஆனால் வந்து தூக்கியது கந்தர்வன் போல அழகாய் ஒருவன் அல்லவா? இதை யாரிடம் சொன்னாலும் கேலி தானே பேசுவார்கள். எங்கிருந்து பெண்ணின் மனதை புரிந்து கொள்ள போகிறார்கள் என்று இரவெல்லாம் பயந்து பயந்து அரைகுறையாய் தூங்கி எழ, அதன் தாக்கம் வேலையிலும் தெரிய வேலை நேரத்திலும் தூங்கி வழிந்தாள் சித்ரா.
அப்படி ஒரு நாள் தூங்கி வழிகின்ற வேளையில் தான் அவள் முன்னே நின்றிருந்தான் அந்த யட்சன்.
அவள் சொல்வது போல ஒயிட்டா.. வெயிட்டா.. ஹைட்டா!
தன் முழு உயரத்திற்கும் நின்று மார்பில் குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டு அவளைத்தான் நெற்றிச் சுருங்கப் பார்த்
துக் கொண்டிருந்தான் விஷ்ராவணன்!
தொடரும்…
