யட்சன் 7

 

(@manvi-aathreesh)
Member Moderator
Joined: 3 days ago
Messages: 10
Thread starter  

அத்தியாயம்: 7

 

"அண்ணைய்யா…" என்று இவன் அழைக்க, அவனை திரும்பி கூர்ப்பார்வை பார்த்த இராவணின் விழிகளில் அத்தனை கண்டனங்கள்.

 

திரும்பி சித்ரலேகாவை பார்த்தவன் "நான் சொன்ன கரெக்ஷன் எல்லாம் இதுல சரியா இருக்கணும். ஒவ்வொரு ஏரியா ஒர்க் முடிந்தவுடன் அதையெல்லாம் போட்டோவை எடுத்து ஒரு பைலாக்கி எனக்கு நீ தனியா அனுப்பணும். என்னோட நம்பரை இவனிடம் கேட்டு வாங்கிக்கோ. அப்பப்போ நீ செஞ்ச டிசைன்ஸ் எல்லாத்தையும் எனக்கு வாட்ஸ் அப் பண்ணிடு" என்று கடகடவென கட்டளைகளை போட்டவன், அவளை கேள்வியாய் பார்க்க.. பதில் சொல்லனுமோ "சரி சரி பாவா" என்றாள்.

 

அது என்றபடி முன்னே வேகமாக நடந்தவன் சிவப்பிரசாத்திடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை.

 

சித்ரலேகாவிடம் 'இவர் எப்ப வந்தார்?' என்று சைகையில் கேட்க, "நான் வந்து அரை மணி நேரத்திற்கு மேல் ஆகுதடா தம்புடு" என்று முன்னே சென்று கொண்டிருந்தவன் தெலுங்கில் அவனுக்கு பதில் கூறினான்.

 

இவருக்கு தலையை சுத்தி கண்கள் போல என்று புலம்பிக்கொண்டே "வந்துட்டேன் அண்ணையா" என்று வேகமாக அண்ணன் பின்னே ஓடினான்.

 

பின் அவனை ஓரமாக நிற்க வைத்தவன் தெலுங்கில் கண்டபடி பேசினான். ஆனால் வார்த்தைகள் உயரவில்லை. ஒன்றுகூட சித்ரலேகாவின் காதுக்கு கேட்கவில்லை. கேட்டாலும் புரிந்து இருக்காது என்பது வேறு விஷயம். ஏனென்றால் இருவர்களும் உரையாடிக் கொண்டிருந்தது தெலுங்கில் மட்டுமே.

 

"பெரிய லாடு லபக்குதாஸ் இவங்க தெலுங்குல தான் பேசுவாங்க. அருகே தெலுங்கு தெரியாதுங்க இருக்காங்களே அவங்க முன்னாடி பேசுறோம்னு கொஞ்சமாவது இருக்கா? அப்படி என்னதான் அண்ணனுக்கும் தம்பிக்கும் உள்ள ரகசியமோ? பேசிகட்டுமே! இருங்க.. இருங்க.. இதுக்கே ஒரு நாள் உங்க வீட்டுக்கு வந்து என் அக்கா முன்னாடி தமிழ்ல பேசி உங்களை வெறுப்பேத்துறேன்" என்று அவளுக்கு அப்போதுதான் நினைவு வந்தது "ஆமா இல்ல இவ்வளவு நேரம் இவர் என்கிட்ட தமிழ்ல தான் பேசினார்" என்று வியந்தாள்.

 

'சிவபிரசாத் இங்கே ஐந்து வருடங்கள் போல இருந்தவன் அவனுக்கு தமிழ் சுலபமாக வருவது லாஜிக்… ஆனால் இவர் எங்கே எப்போது கற்றார்?' என்று புரியாமல் முழித்தவளின் காதில் ஏற்கனவே இம்மாதிரி சில பல தெலுங்கு கேட்டதாய் ஞாபகங்கள் எழ.. அவை வார்த்தைகளாய் வந்து விழ தலையை உலுக்கி கொண்டாள்.

 

அதற்குள் அவனை அனுப்பி வைத்து விட்டு முகத்தை தொங்க போட்டு கொண்டு வந்தான் சிவப்பிரசாத்.

 

"என்ன அண்ணன் தம்பிக்குள் அவ்வளவு பெரிய ரகசியம்? எங்களுக்கெல்லாம் புரிய கூடாதுன்னு தெலுங்குலயே பேசிக்கிறீங்க?" என்று கிண்டல் அடித்தாள் சித்ரா.

 

"நாங்க அலிபாபா குகையை எப்படி திறக்கிறதுன்னு ரகசியம் பேசினோம். ஏம்மா நீ வேற? அண்ணையா என்னை காட்டு காட்டுன்னு காட்டிட்டு இருந்தாரு. அது யாருக்கும் புரிய கூடாதுன்னு தெலுங்குல பேசிட்டு இருந்தார்" என்று அயர்ந்து அவளுக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

 

"ஏனாம்? என்னவாம் உங்க அண்ணனுக்கு? எதுக்கு உங்களை அப்படி திட்டிட்டு போறாராராம்?" என்று கணினியில் அவன் செய்த திருத்தங்களை கவனித்தவாறு தலையை மட்டும் அவனிடம் திருப்பி கேட்டாள் சித்ரா.

 

"எல்லாம் உன்னால தான் எனக்கு திட்டு!" என்றான்.

 

"எது என்னாலையா? நான் என்ன பண்ணுனேன்? உங்க அண்ணன் தம்பிக்குள்ள நான் என்னத்துக்கு உள்ள வரேன்? நான் உண்டு என் பேப்பர் சார்ட்ஸ் உண்டுனு நான் பாட்டுக்கு தானே ஒரு ஓரமா இருக்கேன். நான் என்ன பண்ணுனேன்… ஒரு வேலை… நான் அவர் வரும்போது கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன்… அதுக்காக திட்டிட்டாரோ?" என்று இவள் வருந்தி அவனிடம் பேசினாள்.

 

"இல்ல.. இல்ல.. நீ தூங்குனதுக்காக எல்லாம் அவர் என்னை திட்டல"

 

"நல்ல வேளை எங்கே அதுக்காக திட்டிடுவாரோனு பயந்துட்டேன் அப்புறம் என்னவாம் உங்கள் அண்ணனுக்கு? ஒரு வேலை உங்களுக்கு என்னிடம் சொல்ல பிடிக்கலையா? சாரி.. உங்க பிரைவசிக்குள்ள நான் வந்துட்டேன். நான் இனி கேக்கல" என்று கணினியின் முன் இவள் திரும்பிக் கொண்டாள்.

 

"அட நீ ஏன் சித்து.. புரியாம! அவர் என்னை திட்டியது உன்னை வைத்து தான். காரணம் உன்னை தனியா விட்டுட்டு நான் மட்டும் லஞ்சுக்கு போய்ட்டனாம்... இங்கே தெரியாதவங்க எத்தனையோ பேரு வேலை பாக்குறாங்களாம்… கிட்டத்தட்ட மாநிலம் மட்டும் மாநிலம் வந்த வடக்கனஸ் எல்லாம் கூட நிறைய பேர் இருக்காங்களாம்.. யார் என்ன எப்படின்னு தெரியாம ஒரு பெண்ணை எப்படி தனியா விட்டுட்டு போனேனு தான் எனக்கு அவ்வளவு திட்டு!" என்றதும் வியந்து பார்த்தாள் அவனை.

 

"கூடவே கொஞ்சமா உனக்கும். தெரியாத இடத்துல அப்படி என்ன உனக்கு தூக்கம்னு.. அப்படி தூக்கம் வந்தா அங்கே ஆபீஸ் இருக்க வேண்டியது தானேனு. தனியா ஒரு ஆபீஸ் மாதிரி செட் அப் முன்னாடியே கட்டிக்கோங்க என்று‌ எனக்கு அத்தனை அட்வைஸ்" என்று சிரித்தான்.

 

சித்ரலேகாவோ அதிர்ந்து சிவப்பிரசாத்தை பார்த்தாள். அவனை அரக்கன் ராட்சசன் என்று அத்தனை சொல்கிறாரக்ள். ஆனால் உண்மையில் நம்முடைய நலத்தை பார்த்து இருக்கிறானே? நாம் கூட அப்படி நினைத்தது இல்லையே!!

 

"பாவா உண்மையிலேயே நல்லவர் தான்! அக்கா காதலிச்சு ஒத்த காலுல  நின்னு அவரை கட்டிக்கிட்டது ஆச்சரியமே இல்லை! வொர்த்தானா ஆளு தான்" என்று ராவணனை பற்றி பெருமையாக நினைத்துக் கொண்டாள். அந்தப் பெருமை எல்லாம் ஒரு நாள் எருமை மேய்க்க போகப்போகிறது என்று அப்போது தெரியவில்லை அவளுக்கு.

 

ஆனால் அதை அப்படியே விடாமல் அன்று மாலை வீட்டுக்கு சென்றதும் பெரியம்மா கலாவதியிடம் அனைத்தையும் கூறி "நாம நெனச்சது மாதிரி எல்லாம் இல்ல பெரியம்மா.. என்னதான் பெரிய பணக்காரங்களா இருந்தாலும் பாவா ரொம்ப நல்லவர்தான் போல பெரியம்மா. அக்கா இவ்ளோ பிடிவாதம் பிடிச்சதுக்கு ஒர்த் தான்" என்று சிரித்தாள்.

 

"அது என்ன டி பாவானு சொல்ற? நம்ம முறைப்படி அக்கா வீட்டுக்காரர அத்தான் தானே சொல்லணும். அப்படியே கூப்பிடு" என்றதும் அவள் விழி விரித்து "அய்யோ பெரியம்மா நான் முதல்ல அப்படித்தான் கூப்பிட்டேன். அவர் தான் பாவானு கூப்பிடுனு கண்ணுல அப்படியே கத்திய வச்சுக்கிட்டு பார்த்துட்டு சொல்றார். அவரை எதிர்த்து என்னால பேசலாம் முடியாது. நான் இப்படியே கூப்பிட்டுக்கொள்கிறேன் விட்டுருங்க" என்று கையெடுத்து கும்பிட்டவள் தன் அறையை நோக்கி ஓடினாள்.

 

ஏனோ அன்று இரவும் அதே யட்சன் அவளை அள்ளிக் கொண்டு மேகத்தின் ஊடே பறந்து கொண்டிருக்க.. சித்ரா அச்சத்தோடு மேலிருந்து கீழே பார்த்து "அய்யய்யோ என்னை விட்டு விடாதே" என்று அவனது தோள்களில் மாலையாக தனது கைகளை போட்டுக் கொண்டாள்.

 

அந்த மார்பும் அதன் திண்ணிய உறுதியும் எங்கோ யுக யுகத்திற்கு முன்பு பழகியது போலவே இருந்தது. அந்த க

டினத்திலும் ஒரு மென்மையை உணர்ந்தாள்.

 

 

தொடரும்…

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top