மௌனமாக வந்த காதல்
 
Share:
Notifications
Clear all

மௌனமாக வந்த காதல்

 

(@nikitha-sree)
Member Moderator
Joined: 3 weeks ago
Messages: 12
Thread starter  

அத்தியாயம் 10   

 

ஆதித்யாவின் வீடு

 

“சேகர் உயிரோட இருக்கார்…”

 

லட்சுமியின் வார்த்தைகள் ஆதித்யாவின் மனதில் திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டிருந்தன.

 

“அம்மா, இத்தனை வருஷமா அவர் உயிரோட இருக்கிறதைக் கூட நாம தெரிஞ்சுக்க முடியல. இப்போ திடீர்னு வந்து அப்பாவோட மரணத்துக்கும் அந்த அக்ரீமெண்ட்க்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்றாரே… ஏன்?”

 

லட்சுமி பதில் சொல்லாமல் தலையைக் குனிந்தாள்.

 

“அம்மா, என்கிட்ட ஏதாவது மறைக்கிறீங்களா?”

 

“ஆதித்யா… சில உண்மைகளைச் சொல்றதுக்குத் தைரியம் வேணும். அந்தத் தைரியம் எனக்கு இவ்வளவு வருஷமா வரல.”

 

“ஆனா, இனிமேல் நான் காத்திருக்க மாட்டேன். என் அப்பாவுக்கு என்ன நடந்ததுன்னு தெரிஞ்சாகணும்.”

 

ஆதித்யா அங்கிருந்து செல்ல முயன்றபோது, லட்சுமி அவன் கையைப் பிடித்தாள்.

 

“சேகரை நீ தனியா சந்திக்காதே!”

 

ஆதித்யா திரும்பிப் பார்த்தான்.

 

“ஏன் அம்மா?”

 

“ஏன்னா… உன் அப்பா இறப்பதற்கு முன்னாடி கடைசியா சந்திச்சது சேகரைத்தான்!”

 

அந்த வார்த்தையைக் கேட்ட ஆதித்யா அதிர்ச்சியில் உறைந்து போனான்.

 

அனன்யாவின் வீடு

 

அனன்யா தன்னுடைய போன்யைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆதித்யாவிடம் பேச வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவன் மனதில் இப்போது எவ்வளவு குழப்பம் இருக்கும் என்று நினைத்து அவனைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.

 

அப்போது அவளுக்குப் புதிய மெசேஜ் வந்தது.

 

“உண்மையைத் தெரிஞ்சுக்க ஆசையா? அப்படின்னா உன் அப்பாவோட பழைய பெட்டியைத் திறந்து பார்.”

 

அனன்யாவின் இதயம் வேகமாகத் துடித்தது.

 

அவள் நேராகத் தன்னுடைய அப்பாவின் அறைக்குச் சென்றாள். அங்கே பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அலமாரியைத் திறந்து தேடினாள்.

 

அதன் அடிப்பகுதியில் ஒரு சிறிய மரப்பெட்டி இருந்தது.

 

அதைத் திறந்ததும், சில பழைய    லெட்டர்களும் ஒரு புகைப்படமும் கிடைத்தன.

 

புகைப்படத்தில் ரவி, ஆதித்யாவின் அப்பா, லட்சுமி, சேகர் ஆகிய நால்வரும் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

 

ஆனால் அந்தப் புகைப்படத்தின் பின்னால் எழுதப்பட்டிருந்த வரிகளைப் பார்த்ததும் அனன்யாவின் கண்கள் கலங்கின.

 

“இந்தக் குழந்தைகளுக்கு நம்முடைய தப்புகளுக்ககாக தண்டனை கிடைக்கக் கூடாது.”

 

அதற்குக் கீழே அவளுடைய அப்பாவின் கையெழுத்து இருந்தது.

 

“அப்பா… நீங்க என்னதான் மறைச்சு வச்சிருக்கீங்க?”

 

அவள் பெட்டிக்குள் இருந்த கடைசிக் லெட்டர்த்தை எடுத்தாள்.

 

அதில் முதல் வரியாக எழுதப்பட்டிருந்தது:

 

“ஆதித்யாவோட அப்பாவுக்கு நடந்தது விபத்து கிடையாது…”

 

அனன்யாவின் கைகள் நடுங்கின.

 

அந்த நேரத்தில் அவளுடைய அறைக்கதவு திறந்தது.

 

“அனன்யா!”

 

ரவி நின்றிருந்தார்.

 

அவருடைய பார்வை அனன்யாவின் கையிலிருந்த லெட்டர்த்தின் மீது விழுந்தது.

 

“அந்த லெட்டர்  எங்கிருந்து எடுத்த?”

 

“அப்பா, இதுல என்ன எழுதியிருக்கு? ஆதித்யாவோட அப்பாவுக்கு நடந்தது விபத்து இல்லன்னு ஏன் எழுதியிருக்கீங்க?”

 

ரவி அவளிடமிருந்து லெட்டர் வாங்க முயன்றார்.

 

“அனன்யா, அதை என்னிடம் கொடு.”

 

“முடியாது அப்பா! இத்தனை வருஷமா என்னிடம் உண்மையை மறைச்சிருக்கீங்க. இனிமேல் என்னால அமைதியா இருக்க முடியாது!”

 

ரவி சில நொடிகள் அவளைப் பார்த்தார். பிறகு சோர்வுடன் நாற்காலியில் அமர்ந்தார்.

 

“நான் உண்மையைச் சொல்லலன்னா, அதுக்குப் பின்னாடி ஒரு காரணம் இருக்கு. ஆனா இப்போ நீ தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் ஒண்ணு இருக்கு…”

 

அவர் பேசுவதை நிறுத்தினார்.

 

“என்னப்பா?”

 

“ஆதித்யாவோட அப்பாவுக்கு நடந்த அந்தச் சம்பவத்துக்கு முன்னாடி, நான் அவரைச் சந்திக்கவே இல்லை.”

 

அனன்யா குழம்பினாள்.

 

“அப்போ இந்த லெட்டர் ?”

 

ரவி பதில் சொல்லவில்லை.

 

அந்த நிமிடத்தில், வெளியே யாரோ கதவைத் தட்டினார்கள்.

 

அலுவலகம்

 

ஆதித்யா அனன்யாவைச் சந்திக்க வந்திருந்தான். அவளுடைய முகத்தில் ஏதோ கவலை இருப்பதைப் பார்த்ததும் அவன் அருகில் வந்தான்.

 

“என்ன ஆச்சு, அனன்யா?”

 

அவள் அவனைப் பார்த்தாள். உண்மையைச் சொல்லலாமா என்று தயங்கினாள்.

 

“ஆதித்யா… உங்க அப்பாவைப் பற்றிய ஒரு விஷயம் எனக்குத் தெரிஞ்சிருக்கு.”

 

அவன் உடனே அவள் கையைப் பிடித்தான்.

 

“என்ன விஷயம்?”

 

“உங்க அப்பாவோட மரணம் ஒரு விபத்து இல்லன்னு ஒரு லெட்டர் எழுதியிருக்கு.”

 

ஆதித்யாவின் முகம் மாறியது.

 

“அந்த லெட்டர் உனக்கு எப்படிக் கிடைச்சது?”

 

“எங்க அப்பாவோட பழைய பெட்டியிலிருந்து…”

 

அவன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனுடைய கண்களில் கோபமும் குழப்பமும் கலந்திருந்தன.

 

“அனன்யா, உன் அப்பாவுக்கு இதைப் பற்றி ஏற்கெனவே தெரியுமா?”

 

“எனக்குத் தெரியல. அவர் ஏதோ மறைக்கிறார். ஆனா அவர் சொல்றதை என்னால முழுசா நம்பவும் முடியல.”

 

ஆதித்யா அவளுடைய கையை மெதுவாக விட்டான்.

 

“நான் உன்னை நம்புறேன், அனன்யா. ஆனா இந்த விஷயத்துல நாம கவனமா இருக்கணும்.”

 

“நாம சேர்ந்து உண்மையைக் கண்டுபிடிக்கலாம்.”

 

அவன் அவளைப் பார்த்துச் சிறிய புன்னகை செய்தான்.

 

“என்ன நடந்தாலும் என்னோட இருப்பியா?”

 

அனன்யா அவன் கண்களைப் பார்த்தாள்.

 

“உண்மை எதுவா இருந்தாலும், அதைத் தெரிஞ்சுக்கிற வரைக்கும் நான் உங்களை விட்டுப் போக மாட்டேன்.”

 

ஆதித்யா அவளுடைய கையை மீண்டும் பிடித்தான்.

 

அந்த நெருக்கத்தில் இருவருக்கும் இடையே சொல்லப்படாத காதல் இன்னும் ஆழமானது.

 

ஆனால் அவர்கள் அறியாத ஒரு விஷயம் இருந்தது.

 

அவர்களுடைய உரையாடலை யாரோ மறைந்திருந்து கவனித்துக்கொண்டிருந்தார்.

 

பழைய கட்டிடம்

 

சேகர் ஒரு பழைய அறைக்குள் நுழைந்தார். அங்கே மேசையின் மீது ஒரு ஃபைல்களை பழைய புகைப்படமும் வைக்கப்பட்டிருந்தன.

 

அவர் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தார்.

 

“இத்தனை வருஷம் மறைச்ச உண்மை இனிமேல் மறையாது…”

 

அப்போது அறைக்குள் ஒருவர் வந்தார்.

 

“சேகர், நீங்க திரும்பி வந்ததே தப்பு. அந்த ஃபைல் வெளியே வந்தா எல்லாமே முடிஞ்சிடும்.”

 

சேகர் அமைதியாக அவரைப் பார்த்தார்.

 

“எல்லாமே முடிஞ்சிடக் கூடாதுன்னுதான் நான் இவ்வளவு நாள் அமைதியா இருந்தேன். ஆனா இப்போ ஆதித்யாவுக்கு உண்மை தெரிய வேண்டிய நேரம் வந்துடுச்சு.”

 

“அந்த உண்மையைச் சொன்னா, அனன்யாவோட குடும்பமும் ஆதித்யாவோட குடும்பமும் மீண்டும் பிரிஞ்சிடும்!”

 

சேகர் சிரித்தார்.

 

“அதுதான் உன்னோட பயமா? இல்ல… அந்த இரவு நீ என்ன செஞ்சன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிடுமோங்கிற பயமா?”

 

அந்த மனிதரின் முகம் வெளிறியது.

 

சேகர் டேபிள்யிலிருந்த  ஃபைல்களை எடுத்தார்.

 

“இந்த ஃபைல் ஆதித்யாவோட அப்பாவுக்கு என்ன நடந்ததுன்னு நிரூபிக்கிற ஆதாரம் இருக்கு.”

 

அவர் ஃபைல்களைத் திறந்தார்.

 

அதற்குள் இருந்த புகைப்படத்தைப் பார்த்ததும் அவருடைய முகம் மாறியது.

 

அந்தப் புகைப்படத்தில் ஆதித்யாவின் அப்பாவுக்குப் பின்னால் நின்றிருந்தது ரவி அல்ல… லட்சுமி!

 

சேகர் மெதுவாகத் தலையை உயர்த்தினார்.

 

“லட்சுமி… நீயும் இந்த உண்மையை இன்னும் மறைச்சுக்கிட்டிருக்கியா?”

 

அதே நேரத்தில், ஆதித்யாவின் போன்க்கு ஒரு புதிய மெசேஜ் வந்தது.

 

“உன் அப்பாவைக் கொன்ற உண்மையான காரணம் தெரிஞ்சுக்கணும்னா, உன் அம்மாவையே கேள்.”

 

ஆதித்யா அந்தச் மெசேஜ் பார்த்தான்.

 

அவனுடைய முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது.

 

அனன்யாவைப் பார்த்த அவன் மெதுவாகச் சொன்னான்:

 

“அனன்யா… நாம தேடுற உண்மை நம்மைச் சேர்த்து வைக்குமா… இல்ல நிரந்தரமா பிரிச்சிடுமா?”

 

தொடரும்❤️

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top