Share:
Notifications
Clear all

காமன் 29

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 2 years ago
Messages: 288
Thread starter  

29

 

 

 

நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்த நேரம்… தை மாத காலம்..‌ உள்ளத்தையும் உடலையும் நடுங்க வைக்கும் வண்ணம் நன்றாக பனி பெய்துக் கொண்டிருந்தது.

 

 

 

“ஸ்ஸ்ப்ப்பா செம குளிரு..!!” என்று தன் கைகள் இரண்டையும் இணைத்து உள்ளங்கைகளை பரபரவென தேய்த்து விட்டுக் கொண்டாள் ரதி.

 

 

 

”அவ்வளோ குளிரா.. ?? எனக்கு ஒண்ணும் தெரியலையே..!” என்ற ஆண்மை மிகுந்த குரலில் அவள் மனம் திடுக்கிட்டாலும், அதனை உடல் மொழியில் காட்டாமல் இலகுவாக கையாண்டு மெல்ல அவனை திரும்பி பார்த்தாள், எந்தவித சலனமும் இல்லாமல் ரதி..!

 

 

 

அவளை தனிமையில் சந்திக்கும் வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருந்தவனுக்கு அவளைக் கண்ட நொடி கிளர்ச்சியில் அவனின் உடம்பும் மனசும் சிலிர்க்க.. பரவசம் பொங்க அவள் பக்கத்தில் நெருங்கிப் போய்,

 

 

 

“ரதி… ஐ மிஸ் யூ பேட்லி..” என்றான் அவள் கைகளைப் பற்றி..!

 

 

 

அவளோ அமைதியாக அவனையும் அவன் பற்றி இருந்த தன் கைகளையும் மாறி மாறிப் பார்த்தவள்,

 

 

 

“இப்படித்தான் உங்க தம்பியோட ஃபியான்சி கையை பிடிப்பீங்களா? நான் தனியா இருந்தா அது உங்களுக்கான தருணமா மாறுதா?” என்றாள் குரலில் எந்த உணர்வையும் காட்டாமல்..!

 

 

 

கதிர்காமனோ அவள் இதழ்களை மிக அருகில் பார்த்தான் வெகு மாதங்களுக்குப் பின், அவளது விரிந்த இதழ்களை கவ்விக் கொள்ள அவனின் இதழ்கள் தயாராக தவியாய் தவித்தன.. அவளின் செவ்விதழ் நீர் பருக.. அவனின் தொண்டைக்குழி தவித்துக் கொண்டிருந்தது..!

 

 

 

“நான் இருந்த வேகத்திற்கு உன் இதழ்களை தான் இதழ்களால் பற்றி இருக்கணும்..! ஆனா.. நானோ மிகப் பெருந்தன்மையா உன் கைகள மட்டும் தான் பற்றியிருக்கிறேன்..!” என்றான் ஒற்றைப் புருவம் உயர்த்தி..!

 

 

 

அவன் பிடியிலிருந்து தன் கையை உதறிக் கொண்டவள் “உங்க பெருந்தன்மையை நினைச்சு நான் ரொம்ப பெருமைப்படுகிறேன் லாயர் சார்” என்றவளின் பார்வை எங்கோ தூரத்தில் நிலைத்திருந்தது.. !!

 

 

 

“அஃப் கோர்ஸ்..! என்னோட பெருந்தன்மையை உன்னைத் தவிர வேற யாரு நன்கு அறிவார்?” என்றவன் பார்வையோ அவள் மீது மட்டுமே நிலைத்திருந்தது..!

 

 

 

அவன் ரதியைப் பார்த்தான். அழகி தான்..! அதிலும் இந்த இரவு உடையில் அவளின் கவர்ச்சிக்கும்.. இளமை வனப்புக்கும் துளியும் குறைவில்லை.. !!

 

 

 

அளவான உயரம்.. அம்சமான உடலமைப்பு..!!

 

கும்மென ஆளை அசரடிக்கும் மென்மைகள்..!!

 

அவளைப் பார்த்தவுடன் என்றும் அவனுள் எழும் சபலம்.. சலனம்.. ஈர்ப்பு.. மோகம்.. வரிசையாய் வழக்கம் போல இன்றும் அவனுள் எழுந்தது.. !!

 

அவளை உச்சாதி பாதம் முதல் அணு அணுவாய் பார்த்தான்.

 

 

 

இத்தனை மாதங்களாக அவளை பார்க்க வேண்டும்.. அவளை பார்த்தவுடன் இறுக்கி அணைக்க வேண்டும் என்று அவனின் பெரும் தவிப்பு எல்லாம் கட்டுக்குள் வைத்திருந்தான். காரணம் அவள் இன்று மற்றொரு ஆணின் கல்யாணப் பெண் என்று இல்லை..!

 

தன் தீவிரத்தை அவள் தாங்க மாட்டாள் என்று நல்லெண்ணத்தில்..!

 

 

 

ஆனாலும் அவளை ரசிப்பதை அவன் விடவில்லை..!

 

 

 

அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த மீன் டாலரோடு கூடிய மெல்லிய செயின் அவளது கழுத்து வழியாக.. மென்மைக்குள் புதைந்திருக்க.. அவனின் பார்வை அதிலிருந்து மீள முடியாமல் தவித்தது..! தகித்தது..! அவனை வதைத்தது..!

 

 

 

“உங்க பார்வை ரொம்ப தப்பா இருக்கு லாயர் சார்..” என்றாள் அவனுக்கு முதுகு காட்டி நின்று..!

 

 

 

”ஆமா..! அதுக்கு என்ன பண்ணலாம்னு இருக்க..?”

 

அவன் பார்வையால் அவளது செழிப்பான இளமையின் வனப்பை வருடிக் கொண்டே கேட்டான்.

 

 

 

அவன் பார்வை சென்ற திக்கை கண்ட கோபத்தில் அவள் மார்பு கூடு இரண்டும் ஏறி இறங்க.. ஒரு ஆழப் பெருமூச்சுடன் தூரத்தில் இருந்த பார்வையைத் திருப்பி அவனைப் பார்த்தாள். மெல்லிய காற்றுக்கு சிலிப்பிக் கொண்டு வந்து முகத்தில் விழுந்த தன் கற்றை முடியை எடுத்து காதோரம் விட்டுக் கொண்டாள்.

 

 

 

“பார்க்குற கண்ணு முழி ரெண்டையும் நோண்டிடுவேன்” என்றாள் அழுந்த குரலை உயர்த்தாமல், இரு புருவங்களையும் உயர்த்தி..!

 

 

 

“ஆஹான்.. ஆனா.. கண்ண முழி மட்டும் நோண்டினா போதுமா? என் உடம்புல உள்ள ஒவ்வொரு அணுவும் உன்னை அணு அணுவாக தான் பார்த்து ரசிக்குது.. ருசிக்க கேட்குது..!” என்றான், அவளை நெருக்கமாக நெருங்கி நின்று..!

 

 

 

“கொஞ்சம் கூட உங்களுக்கு உங்க தம்பிய கட்டிக்க போற பொண்ணு கிட்ட இப்படி பேசுறோம்னு அருவருப்பா இல்லையா? மனசாட்சி இல்லையா?” என்றவளின் கூர்பார்வையில் அவனோ சிகையை கோதி சிரித்தான்.

 

 

 

“மனசாட்சியா..?? ம்ம்ம்.. மனசாட்சி உறங்கும் போது மன குரங்கு ஊர் சுத்த போச்சாம்..! ஒரு அறிஞர் சொன்னது, எவ்வளவு சரியில்ல..?” சிரித்தவன்,

 

“ஹலோ மிஸ் ரதி.. அவன் இப்ப வந்தவன். ஆனா நான்..” என்று அவளை அர்த்தமுள்ள பார்வை அவன் பார்க்க..

 

 

 

அவளோ அவன் பார்வையில் கூசி போனவள், பின் அவனை நிமிர்ந்து நேர் பார்வை பார்த்து,

 

 

 

“நீங்க ஆஃபர் பண்ண பொண்ணு எல்லாரையும் இப்படித்தான் செகண்ட் ரவுண்டு போய் தேடி பார்க்குறீங்களோ? அவங்க கிட்டேயும் இப்படிதான் வழிய வழிய பேசுவீங்களோ?” என்று அவளின் கேள்வியில் அவன் புருவம் நெறிய அவளை கூர்ந்து பார்த்தவன்,

 

 

 

“அது அந்த பொண்ணுங்களோட பர்ஃபார்மென்ஸை பொறுத்து..!” என்றதும் மேற்பற்களால் கீழ் இதழை அழுத்தமாக கடித்துக் கொண்டாள் ரதி.

 

 

 

இவனும் அவளுக்கு வலது புறமாக அந்த பால்கனி கிரில் கம்பியில் சாய்ந்தவாறு நின்று க் கொண்டான். ஆனால் அவளோடு ஆன நெருக்கத்தை விடவில்லை.

 

 

 

“இந்த கல்யாணத்தை நிறுத்திடு ரதி..!” என்றான் மிகக் கூலாக..

 

 

 

கதிர்காமன் தான் சுலோச்சனாவின் தம்பி என்று அறிந்தாளோ.. அன்றிலிருந்து அவனிடமிருந்து சில பல எதிர்ப்புகளை எதிர்பார்த்துதான் இருந்தாள் பாவை.

 

 

 

எந்த அண்ணனுக்கு தான் தான் கூடி களித்த பெண் தம்பிக்கு மனைவியாய் வர பிடிக்கும்? தங்கள் குடும்பத்தின் குலவதுவாக விளங்கப் பிடிக்கும்? ஒவ்வொரு முறை அவளை பார்க்கும் போதும் அவளோடனான நெருக்கம் அல்லவா அவனுக்கு ஞாபகத்தில் வரும்?

 

 

 

அதனால் தான் யார் என்று தெரிந்தவுடன் இந்த கல்யாணத்தை நிறுத்துவதற்கு கதிர்காமன் கண்டிப்பாக முயற்சி செய்வான் என்று எதிர்பார்த்து இருந்தாள் ரதி.

 

 

 

“சோ சேட்..! என்னால நிறுத்த முடியாது உங்களால முடிஞ்சா கோ ஹெட்.‌.” என்று அலட்சியமாக தோளை குலுக்கி இரண்டு கைகளையும் உயர்த்தி கூறிய ரதியை.. அவளது இந்த மேனரசத்தை கண்டு ரசித்தவன், அவளின் இளமைகளை மீண்டும் களவாடத் துடித்தது காமனின் மோக உள்ளம்.

 

 

 

ஏனென்றால் இந்த திருமணத்தின் போது வீரராகவன் தெளிவாக உரைத்து விட்டார்.

 

 

 

“எக்காரணத்தைக் கொண்டும் இந்த திருமணம் முடிவான பின் பின்வாங்குவது கூடாது. நீயும் உங்க அம்மா போல வேறு யாரையாவது மனசுல வச்சிருந்தா.. இப்பவே சொல்லிடு.. குடும்பத்துக்கு வேணும்னு அவப்பெயர் கொண்டு வராத” என்றதும் அவளுக்கு அத்தனை கோபம் வந்தது.

 

 

 

ஆனால் இங்கே தம்பியின் நல்ல எதிர்காலத்தை எண்ணி தன்னை அடக்கிக் கொண்டவள்,

 

“கண்டிப்பா தாத்தா..! என் மனசுல ஒருத்தன் இருந்தா நானும் எங்க அம்மா போல அவன் ஒருத்தனை மட்டும் தான் நினைச்சுக்கிட்டு இருப்பேன்.. வாழ்வேன்..! பெத்தவங்க சொல்றாங்க மத்தவங்க சொல்றாங்கன்னு அவனுக்கு துரோகம் பண்ணிட்டு இன்னொருத்தனுக்கு கழுத்தை நீட்ட மாட்டேன்” என்றாள் பொட்டில் அடித்த மாதிரி பேசிய பேத்தியை கண்டவர், கோபத்தில் கண்கள் இடுங்க மகனை முறைத்தார் வீரராகவன்.

 

 

 

“என் மக கேட்பது சரிதானே? விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்? நீங்க தானே இவ்வளவையும் செஞ்சீங்க.. அப்ப என் மக கேட்கிற கேள்விக்கு பதிலும் நீங்கதான் சொல்லணும். என்னமோ என்னை முறைச்சு பார்க்கிறீங்க?” என்று திருப்பி கொடுத்த மகனை கண்டவர்,

 

 

 

“என்னடா நேரம் பார்த்து அடிக்கிறியா?” என்று சீறினார்.

 

 

 

“இல்லப்பா நான் உங்களை எதுவுமே சொல்லல.. ஏன்னா நான் காதலில் கரைஞ்சவன். அன்புக்கு கட்டுப்பட்டவன். என் தாராவுக்கும் என் பிள்ளைகளுக்கு எதுவும் ஆக கூடாதுன்னு உங்களுக்கு கட்டுப்பட்டு, என் காதலுக்கு மனைவிக்கு துரோகம் செஞ்சேன். ஆனா சந்தோஷமா இருக்கு என் பிள்ளைங்க என்னை மாதிரி இல்ல.. அவங்க அம்மா மாதிரி தைரியமா இருக்காங்க..!” என்றார் நிமிர்வோடு.

 

 

 

இந்த ஃபேமிலி ட்ராமா சென்டிமெண்ட் எல்லாம் பார்ப்பதற்கு ரதிக்கு துளி கூட விருப்பமில்லை. தன் அம்மாவை ஒதுக்கி வைத்தவர், தன் அம்மாவால் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்டவர் வீட்டிற்கே வந்து இருக்கிறோமே என்று அவளுக்கும் ராகவ்வுக்கும் பெரும் வருத்தமாகவும் வேதனையாகவும் தான் இருந்தது.

 

 

 

ஆனால் அன்றைய சூழ்நிலையில் அதுவும் தம்பியின் எதிர்காலத்தை கருதியே இங்கே இவர்களோடு வர சம்மதித்தாள். தம்பியையும் வற்புறுத்தி அழைத்து வந்தாள்.

 

 

 

ஆனால் அவள் எதிர்பார்த்ததுக்கு மாறாக சுலோச்சனாவிடம் இருந்து கிடைத்த தாய் அன்பை இருவரும் ஏற்க தயங்கினார்கள்.

 

என்னதான் அவர்கள் தயங்கினாலும் சுலோச்சனா அப்படியெல்லாம் விடவில்லை. மஹிமாவிடமும் சிறுவயதிலிருந்தே இருவரையும் சொல்லி வளர்த்திருந்ததால் அவளுக்கும் இவர்களிடம் ஒதுக்கமில்லை.

 

 

 

வீரராகவன் லோகநாதன் செய்த தவறுக்கு, எங்களைப் போல இவர்களும் பலியாடு தானே?

 

 

 

அதனால் அன்னையையும் தங்கையையும் ஏற்றுக்கொண்டவர்களால் தந்தையையும் பாட்டனையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 

பெரியவளான இவளுக்கு திருமணத்திற்கு பார்க்கிறோம் என்றதும் முதலில் மறுத்தவள் தம்பியின் அறிவுரையில் தான் சம்மதித்தாள்.

 

 

 

கதிர்காமன் சுலோச்சனாவின் தம்பி என்று அவர்களுக்கு தெரியவே தெரியாது. ஆனால் அனைத்து பேச்சுவார்த்தை முடிந்த பின்பு, ஒருநாள் சுலோச்சனா கதை கதையாக அவர்கள் குடும்ப கதையை சொல்லும் பொழுது தான்.. அதிலும் தன் தம்பியை பற்றி பெருமையாக அவர் கூறும் பொழுது தான்.. அவனின் பெயர் தொழில் வசிக்கும் இடம் அனைத்தும் ஒத்து போக மனதுக்குள் திடுக்கிட்டு போனாள்.

 

 

 

ஆனாலும் தன்னை காமத்துக்கு மட்டுமே கைக்குள் வைத்து பொம்மையாக பயன்படுத்தியவன் வீட்டுக்கு தான் செல்ல போகிறோம் என்று விதியின் விளையாட்டை நினைத்து சிரித்தவள், கதிர்காமனின் வரவுக்காக பெரிதாக காத்திருந்தாள்..!

 

 

 

அன்றைய தப்பிற்கு இவளும் சரி பங்கு தான் காரணம். ஆனால் அதை திருமணத்திற்கு முன் தென்னரசுவிடம் கண்டிப்பாக கூறி விட வேண்டும் என்று எண்ணியிருந்தாள்.

 

 

 

அதுபோலவே நிச்சயதார்த்தத்திற்கு முன் மோதிரம் எடுக்க வேண்டும் என்று சுலோச்சனா ரதியை அழைத்துக் கொண்டு செல்லும் பொழுது தென்னரசுவும் வந்துவிட..

 

 

 

“நீங்களே பார்த்து டிசைன் செலக்ட் பண்ணுங்க” என்று இருவருக்கும் தனிமை கொடுத்து மஹிமா ராகவ்வுடனும் இவர் வேறு பகுதிக்கு சென்றுவிட்டார் புதிய ஜோடிக்கு தனிமையை கொடுத்து..!

 

 

 

அந்த தருணத்தை பயன்படுத்திக்கொண்டவள் தன்னைப் பற்றி முழுவதுமாக கூறிவிட்டாள் ரதி.

 

கதிர்காமனின் மீது அவள் கொண்ட அந்த சலனம் அதனால் கொண்ட மெல்லிய ஈர்ப்பு, பின் ஒரு கட்டத்தில் தம்பியை காப்பாற்றியதற்காக அவனிடம் தன்னை ஒப்படைத்தது.. அதை அவன் வேறு விதமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தது என்று அனைத்தும் கூறியவள், அவன் யாரென்று கூறவில்லை..!

 

 

 

“ஆனா.. சப்போஸ் நம் மேரேஜ் நடந்தா.. ஆஃப்டர் மேரேஜ் நான் கண்டிப்பா உங்களுக்கு உண்மையா இருப்பேன் என்கிற நம்பிக்கை உங்களுக்கு இருந்தா.. நீங்க எனக்கான ரிங்கை செலக்ட் பண்ணலாம்” என்று அமைதியாக அவனைப் பார்த்து ரதி அமர்ந்திருக்க..

 

 

 

தென்னரசு ஒரு நிமிடம் கண்மூடி தன்னை நிதானித்தவன், பின்பு “இந்த டிசைன் நல்லா இருக்கு சிற்பி.. இதை எடுக்கலாமா?” என்று எடுத்து அவளிடம் காட்டியவன் “உன்னோட பாஸ்ட் இஸ் பாஸ்ட் எனக்கு அது தேவையில்லை..! கல்யாணத்துக்கு அப்புறம் நாம ரெண்டு பேரும் எப்படி இருக்கோம்கறது தான் முக்கியம்” என்று விட, இப்போது தங்கள் இருவரையும் தம்பதிகளாக காணும் பொழுது கதிர்காமனின் முகம் எப்படி இருக்கும்? அவனின் எண்ண போக்கு எவ்வாறு இருக்கும்? என்று அறிய பெரும் ஆவல் கொண்டவளாய் அவனுக்காக காத்திருந்தாள் ரதி சிற்பிகா..!

 

 

 

கதிர்காமன் நிச்சயதார்த்தம் அன்று தான் வருவான் என்று கேள்விப்பட்டதிலிருந்து இன்னும் அவளிடம் ஒரு பரபரப்பு..!

 

 

 

ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அமைதியாகவே இருந்தாள்.

 

 

 

அதுவும் மணப்பெண்ணாய் அவளை பார்த்த தருணத்தில் அவன் முகத்தில் தோன்றிய அந்த அதிர்ச்சியை உள்வாங்கிக் கொண்டவளுக்கு.. “அப்பாடி இப்போ சேட்டிஸ்ஃபை” என்று பெரிதாக புன்னகை..!

 

 

 

அதிலும் அவன் வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்து இருக்க.. இவளோ அவனை ஒரு பொருட்டாக மதிக்காமல் சென்றதைக் கண்டு இன்னும் அவனுக்கு பேரதிர்ச்சி..!

 

 

 

அவனின் அனைத்து உணர்வுகளையும் உள்வாங்கியவளுக்குள் எதையோ சாதித்த உணர்வு..!

 

 

 

ரதியின் மனமோ பழங்காலத்தில் சுழல..

 

“நான் ஆஃபர் பண்ண பொண்ண தான் கல்யாணம் பண்றேன்னு தெரிஞ்சா என் தம்பி எவ்வளவு மனசு வருத்தப்படுவான்? உன்னை கேவலமா நினைக்க மாட்டானா? உன்னை என்னோட எச்சில்னு சொல்லி தூக்கி போட மாட்டானா? உனக்கு இந்த அவமானம் எதுக்கு? நீயே கல்யாணத்தை நிறுத்திடேன்.!” என்று அவளுக்கு சற்றே வலிக்க வேண்டும் என்று இம்மாதிரி பேசினான் கதிர்காமன்.

 

 

 

அவன் சொன்ன வார்த்தைகள் அவளை கடுமையாக பாதித்தது. அவள் கண் ஓரங்களில் சட்டென நீர் கோர்த்தது. மீண்டும் முகத்தை திருப்பி தூரத்தில் பார்த்தாள். மிகவும் சிரமப்பட்டு அழுகையை அடக்கிக் கொண்டிருக்கிறாள் என்று தோன்றியது அவனுக்கு..!

 

 

 

‘எனக்கு எப்படியாவது இந்த திருமணம் நிற்க வேண்டும். நான் உண்மையை சொல்வதை விட.. ரதியே திருமணம் வேண்டாம் என்றால் இன்னும் நல்லது அல்லவா?’ என்று எண்ணியவன்,

 

”ரதி..!!” மெல்ல அழைத்தான் காமன்.

 

 

 

அவள் மெதுவாக அவனின் பக்கம் திரும்பினாள். அவள் விழிகள் நீரில் மிதந்துக் கொண்டிருந்தது. ஆனால் முகத்தில் ஒரு நிமிர்வு தெரிந்தது..!

 

 

 

“அது என்ன நான் உன் எச்சில்? நீயும் தானே என்னுடைய எச்சில்? இன்ஃபேக்ட் என்னை விட நீங்க தான் ரொம்ப கேவலமா உணரணும். ஏன் தெரியுமா? அட்லீஸ்ட் நானாவது உன் ஒருத்தனோட எச்சில் தான். ஆனா நீ பல பொண்ணுங்களோட எச்சில்..!” என்றாள் உதடுகளை சுழித்து..!

 

 

 

இதற்காக அவன் கோபப்படுவான் என்று அவள் எதிர்பார்க்கையில் விரிந்த புன்னகை ஒன்றை கொடுத்தவன், “வெல்டன் ரதி..! ஐ லைக் யூ வே ஆஃப் டாக்கிங்..! கிரிமினல் லாயருக்கு ஏத்த லாயர்..! எனக்கு சரிக்கு சமமா பேசுற உன்னை எப்படி நான் விட முடியும்? வருங்காலம் போர் அடிக்காம நல்லாவே போகும் போல” என்றான் அவளின் இடை வளைத்து..!

 

 

 

“என் வருங்காலம் என்னவோடு கண்டிப்பாக நல்லாவே போகும்.!” என்றாள் ரதி அழுத்தமாக..!

 

 

 

“ஆஹான்.. எவர் வருங்காலம் எவருடன் இனி அமைக்க போறது விதி அல்ல..! ஆல் இந்த கிரிமினல் லாயரின் சதி..!” என்றான் கர்வப் புன்னகையோடு..!

 

 

 

“நீ என்ன சதி பண்ணினாலும்..

 

உனக்கு பதி ஆக மாட்டா இந்த ரதி..!” என்று அவனுக்கு சரிக்கு சரியாக பேசியவளை கண்டு கண்கள் மின்னின கதிர்காமனுக்கு..!

 

 

 

“வார்ரே வாவ்..!! லெட்ஸ் ஸ்டார்ட் த வெட்ஸ் கேம்..!” என்றவன்,

 

 

 

“உன்னை நான் முன்னாடியே பார்த்து இருக்கணும் ரதி..!” என்றான் அவள் கன்னத்தை ஒற்றை விரலால் வருடி..

 

 

 

“முன்னவே பார்த்து இருந்தா என்ன பண்ணி இருப்ப? என்னை வந்து கல்யாணம் பண்ணி இருப்பியா?” என்று நக்கலாக கேட்டாள். அவளுக்குத்தான் அவனின் லீலைகள் அனைத்தும் தெரியுமே..!

 

 

 

அதிலும் இவன் கல்யாணம் வேண்டாம் என்று கூறுவதை வருத்தத்துடன் சுலோச்சனா கூற பலமுறை கேட்டு இருக்கிறாளே..!

 

 

 

“ம்ஹூம்.. அதுக்கும் மேல..! இந்நேரத்துக்கு உனக்கு நாலைஞ்சு குழந்தைகளை கொடுத்து இருப்பேன்..!” என்றான்‌ சலிக்காமல் அவனும்.

 

 

 

“ச்சீ..!” அவனின் வார்த்தைகளில் கோபப்பட்டு அவனை பிடித்து ரதி தள்ள முயல..

 

 

 

அவனோ இப்போது அவளை மிக மிக இறுக்கமாக இடை வளைத்தான்.

 

 

 

அவனது ஏக்கமும்.. தவிப்பும்.. மிக ஆழமாக அவளுக்குள் பாய..

 

 

 

தன் முகத்தை அவள் முகத்தருகில் கொண்டு போனவன்,

 

 

 

”இந்த ஆறு மாசமா உன்னை தேடி தேடி ரொம்ப ஏங்கி போயிருக்கேன். ரியலி ஐ அம் எக்ஸ்ஹாஸ்டட்..! இந்த மாதிரி.. கொஞ்சம் எனர்ஜிடிக்கா.. அப்பப்போ ஒரு பூஸ்ட் போட்டுக்கணும்.. !!” என்றவன், என்ன சொல்ல வருகிறான் என்று அவளுக்கு புரிந்து விலகும் முன்னே,

 

 

 

அவளது இளஞ்சிவப்பு உதட்டில் தன் உதட்டை வைத்து நச்சென ஒரு முத்திட்டா

ன்.

 

 

 

//எவன் மனதில் எவள்?

 

எவள் மனதால் எவன்?

 

எங்கு சந்திக்கும்

 

எங்கு உணரும்?

 

 

 

என்று மலரும்

 

என்று உதிரும்??

 

முடிவில் - எல்லாம் அவன் கையில்..!//

 

 

 

என்று கவிதை பாடியவன்,

 

 

 

“டேக் கேர் ரதி..!” என்றவன் அவளது கன்னத்தை தன் புறங்கையால் வருடி இதழை இழுத்து விடுவித்து தன் அறை இருக்கும் பகுதிக்குள் சென்றான் கதிர்காமன்.

 

 

 

தொடரும்..

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top