30
கதிர்காமனுக்கோ கண்களில் தூக்கம் எட்டவே இல்லை உதட்டில் நெளிந்த புன்னகையோடு விட்டத்தை பார்த்தவாறே படுத்திருந்தான்.
இத்தனை மாதங்களாக ரதியை தேடி தேடி.. எங்கே சென்றாள்? எங்கே மறைந்தாள்? எப்படி அவளால் செல்ல முடிந்தது? என்னுள் இருக்கும் ஈர்ப்பு அவளுக்கு இருக்கவில்லையா? நான் அவளுக்கு ஒன்றுமே இல்லையா? என்று ஏதேதோ யோசித்துக்கொண்டு விடிய விடிய நடப்பவன், அதன்பின் சோர்ந்து போகும் கால்களும் களைத்து போகும் உடம்பும் தூக்கத்திற்கும் ஓய்விற்கும் கெஞ்ச அதன் பின்னே உறங்குவான்.
இன்றும் அவனுக்கு தூக்கம் வரவில்லை தான். ஆனால் காரணம் வேறு..!
அவன் தேடி அலைந்தவள் இன்று அவன் கை அருகில்… ஆனால் மாற்றானின் கல்யாண பாவையாக?
தம்பி என்றாலும் அவன் மாற்றான் தானே??
அவள் கல்யாணப் பெண் தானே?? இன்னும் மனைவியாகவில்லை அல்லவா?
அப்போ அதுவரைக்கும் எனக்கு சான்ஸ் இருக்கு..!
ஒருமுறை அவளைத் தவற விட்டேன்.. இனி ஒரு முறை தவறவிட மாட்டேன் என்ற சங்கல்பம் எடுத்தவன் அதன் பின்னே நிம்மதியாக உறங்கினான்.
மறுநாள் விடியற் காலையிலேயே வீரராகவனின் குடும்பமும், ரத்னவேலுவின் குடும்பமும் வீரராகவனின் குலதெய்வக் கோயிலை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தனர்.
நேற்று இருந்த தடுமாற்றம் சோர்வு எதுவும் இல்லாமல் இன்று கண்களும் முகமும் பளிச்சென்று மின்ன.. தன் அருகில் அமர்ந்திருந்த அண்ணனை உற்று உற்றுப் பார்த்தான் தென்னரசு..!
“டேய் என்னடா என்னை சைட்டு அடிச்சிட்டு வர? அவனா நீ?” என்று கண்ணடித்து கதிர்காமன் கேட்ட தினுசில்..
“கதிர்காமன் இஸ் பேக்.!” என்று சிரித்தான் தென்னரசு.
காலையிலேயே தலை முடியை சீர் செய்து தாடியை ட்ரீம் செய்து உதட்டை மறைத்த மீசையை அழகாக ஒடுங்குபடுத்தி கற்றை மீசை ஆக மாற்றி.. வெள்ளை சட்டை கருநீல ஜீன்ஸில் கிளம்பி வந்தவனை குடும்பமே பார்த்து ரசித்தனர்.. அதிசயித்தனர்..!
“டேய்.. நான்தான் சொன்னேனே ஒரு ஆறு மாசமா முக்கியமான ஒரு ப்ராஜெக்ட்ல இருந்தேனு.. அந்த ப்ராஜெக்ட் கம் டு எண்ட். அதனால இப்ப நான் என்னை க்ரூம் பண்ணிக்கிட்டேன்” என்று ஸ்டைலாக தோள் குலுக்கும் அண்ணனின் அந்த மேனரிசத்தை ரசித்தவன்,
“நீ நடத்து நடத்து ராசா..! ஆனாலும் கொஞ்சம் அடக்கியே வாசி. கல்யாண மாப்பிள்ளை நான் தான்” என்றான் தென்னரசு.
“ஹூ நோஸ்? மாப்பிள்ளை மாறலாம்” என்று சிரித்தவனிடம்,
“என்ன சொன்ன? என்ன சொன்ன?” என்று தென்னரசு கேட்க,
“ஓகேனு சொன்னேன் டா தம்பி பையா..!” என்று சிரித்தான் கதிர்காமன்.
ஒரு வழியாக கோயில் வந்து இறங்கினர் இரு குடும்பமும்.
சுலோச்சனா தன் அன்னை மற்றும் சித்தி உதவியோடு பூஜை பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.
பெண்ணை கட்டி கொடுத்த காலம் தொட்டு அவர்கள் செய்யும் வழக்கம் பைரவிக்கும் பார்கவிக்கும் தெரியும் தானே? பெண்ணுக்கு உதவியப்படி அவர்கள் நிற்க.. மஹிமாவும் ரதியும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்க.. ராகவ்வை அழைத்து கதிர்காமனை அறிமுகப்படுத்தி வைத்தான் தென்னரசு.
கதிர்காமனை வைத்து தான் அக்காவை அங்கே காலனியில் உள்ளவர்கள் தப்பாக பேசியதால் இங்கேயும் ஏதேனும் அக்காவின் பெயர் அவப்பெயராக விடுமோ என்று பயந்தவன் கதிர்காமனை முதல் முறை பார்ப்பது போலவே முகமன் தெரிவித்தான்.
'அக்காவும் தம்பியும் நல்லாவே சமாளிக்கிறீங்கடா.. ம்ம்ம் கிரேட்..!' என்று நினைத்த கதிர்காமனும், ராகவ்வை முதல் முறை பார்ப்பது போலவே நலம் விசாரித்து அவன் படிப்பை பற்றி கேட்டுக் கொண்டிருந்தான்.
ரத்னவேலுவும் வைரவேலுவும் வீரராகவன் மற்றும் லோகநாதன் உடன் அமர்ந்திருந்தனர்.
அங்காள பரமேஸ்வரி அம்மன் தான் அவர்கள் குலதெய்வம். வீரராகவன் பங்காளி முறைகளுக்கு மட்டும் பாத்தியப்பட்ட குலதெய்வ கோயில் என்பதால் பெரிதாக விசேஷ நாட்களைத் தவிர மத்த நாட்களில் கூட்டம் இராது.
அங்கு வந்த பூசாரி “அம்மா பொங்கல் வச்சிடுறீங்களா?” என்று சற்றே பவ்யமாக கேட்க..
“என் பெரிய பொண்ணுக்கு தான் கல்யாணம் பேசி இருக்கோம். அவளை விட்டு பொங்கல் செய்ய சொல்லிவிடுறேன்.." என்றார் சுலோச்சனா.
“சரிங்கம்மா..! பாத்திரம் எல்லாம் மடப்பள்ளில இருக்கு. வேற ஏதாவது தேவைனா அங்க தள்ளி இருக்கிற ஸ்டோர் ரூமில் இருந்து எடுத்துக்கோங்க..” என்று அதன் சாவியை சுலோச்சனாவிடம் கொடுத்தார்.
சுலோச்சனா அந்த சாவியை வாங்கியவர், மகள்கள் இருவரையும் அழைத்து பொங்கல் வைக்க சொல்ல.. ஓரளவு சமையல் தெரிந்த ரதி சரி என்று மடப்பள்ளி நோக்கிச் சென்றாள் மஹிமாவோடு.
அங்கு தேவையானவற்றை இருப்பை எல்லாம் ஆராய்ந்தவள் மஹிமாவிடம் ஒரு குடத்தை கொடுத்து “இதுல நீ தண்ணி பிடிச்சிட்டு வந்துரு மஹி” என்றாள்.
எவ்வளவு அரிசியில் பொங்க வைக்க வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை சுலோச்சனாவிடம் கேட்டு வந்தவள்,
“இந்த பொங்கல் பானை பத்தாதே.. வேற பெருசா தான் வேணும்” என்று மீண்டும் அவரிடம் வந்து நிற்க..
தன்னிடம் இருந்த சாவியை கொடுத்து சற்று தள்ளி இருக்கும் அறையைக் காட்டி “அங்க நிறைய பாத்திரங்கள் இருக்கும் சிற்பி.. உனக்கு தேவையானதை எடுத்துக்கிட்டு வா” என்றார்.
ஏற்கனவே குடும்பத்தாரோடு இரண்டு மூன்று முறை இங்கே வந்திருக்கிறாள். அதனால் இவ்விடம் அவளுக்கு பழக்கம் தான்..!
சுலோச்சனாவிடம் சாவி வாங்கிக் கொண்டு அந்த அறையைத் திறந்த ரதி, சற்று பெரிய வெண்கல பானையைத் தேடிக் கொண்டிருந்தாள். கூடவே ராகவ்வும் இவளுக்கு துணைக்கு வந்திருந்தான்.
ரதி மேலேயே ஒரு கண்ணை மட்டுமல்ல மொத்த கவனத்தையும் வைத்திருந்த கதிர்காமனும் இவர்கள் பின்னாலே வந்திருந்தான்.
தற்போது ராகவ்வை அப்புறப்படுத்த எண்ணி, “ராகவ்.. உன்னை உங்க தாத்தா கூப்பிடறார்” என்றான்.
அவனை நம்பாமல் ஏற இறங்க பார்த்தவன் “அவர் என்னை கூப்பிடணும்னா எனக்கு ஃபோன் பண்ணுவார்” என்றான் அக்கா அருகில் இருந்து நகராமல்..
“ம்ப்ச் படுத்துறானே இவனும்..! டேய் சொன்னா கேளுடா.. உங்க அக்கா கிட்ட நான் கொஞ்சம் பேசணும். உங்க அக்காவை ஒன்னும் நான் முழுங்கிட மாட்டேன். நீ அந்த பக்கம் போ.. அவ கூடவே பாத்திரத்தை தேடி நான் எடுத்துட்டு வரேன்” என்றான் கதிர்காமன்.
அன்றைக்கு பிறகு தாங்கள் அவ்வூரில் இருந்து மறைந்ததை அக்காவிடம் கேட்க விளைகிறான் என்று எண்ணிய ராகவ், “சரி நான் கொஞ்சம் தள்ளி இருக்கேன் நீங்க சீக்கிரம் பேசிட்டு வெளியே வாங்க” என்றான் பெரிய மனிதத் தோரணையில்..!
கதிர்காமனை சிறிதும் கண்டுகொள்ளாமல் வேறு என்னென்ன பாத்திரங்கள் தேவைப்படும் என்பதைப் போல அவ்விடத்தை நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள் ரதி.
அவள் அருகே சென்றவன், அவளுக்கு மிக அருகில் நின்றான்.
அவனது உடல் சூடு அவளுக்குள் பரவியது..! அவளது வாசம் அவனைச் சுற்றியது..!
பழைய பொருட்கள் வைத்திருக்கும் அறை என்பதால் மெல்லிய வெளிச்சம் மட்டுமே அங்கே..!
அதுவும் அந்நேரம் பார்த்து மின்சாரம் துண்டிக்கப்பட.. இருட்டில் அவர்கள் இருவரும் மட்டுமே இருந்தனர். ரதிக்கோ ஒருவிதமான பயமும், அதேசமயம் ஒருவிதமான தைரியமும்..
“கிடைச்சுருச்சு போலாம்” என்று அவள் திரும்ப, அவனோ அவளது கையை லேசாகப் பிடித்தான்.
“நான் உன்னை தான் தேடி வந்து இருக்கேன்னு உனக்கே தெரியும். ஆனால் கண்டுக்காம கிளம்புற?” என்று ஒருமாதிரியான குரலில் கேட்டான்.
“நமக்குள்ள எல்லாம் முடிஞ்சிடுச்சுன்னு சொன்னா நீங்க கேட்கல.. அதுக்கு நான் என்ன பண்ண?” என்றவள், அவனை முறைத்தப்படி அவள் கையை எடுக்க முயன்றாள், ஆனால் அவனோ அவளது கையை விடவில்லை. அவள் வலுவாக அவனது கையைத் தள்ள.. தன் கைகளால் இறுகப் பற்றிக்கொண்டான்.
“பயப்படாத ரதி.. இது கோவில்.. சுற்றிலும் நம்ம சொந்தங்கள் தான் இருக்காங்க.. அப்படி என்ன பண்ணிடுவேன் நான்னு உனக்கு இவ்வளோ பயம்?” என்றவன், அவளது கையை மெதுவாக வருடினான்.
அவனது ஸ்பரிசம் அவளைச் சிலிர்க்க வைத்தது. அவளது உடலுக்குள் ஒருவிதமான நெருப்பு பற்றிக்கொண்டது. ஆனாலும் அது எதையும் அவனிடம் காட்டாமல் இருக்க பிரம்ம பிரயத்தனம் பட்டாள்.
காமன் அவளை மெதுவாகத் தன் பக்கம் இழுத்தான். அவள் தடுக்கவில்லை. இருட்டில் அவளது இடுப்பைப் பிடித்தான். அவனது விரல்கள் அவளது மென்மையான இடுப்புப் பகுதியைப் பற்றிக்கொண்டன. அவள் ஒருமுறை நடுங்கினாள்.
“ரதி… இந்த புடவையில நீ ரொம்ப அழகா இருக்க,” என்று அவளது காதருகே கிசுகிசுத்தான். அவனது மூச்சுக்காற்று அவளது காதில் பட்டதும், அவளுக்கு உள்ளுக்குள் ஒருவிதமான நடுக்கம் ஏற்பட்டது.
அவன் மெதுவாக அவளைத் தன் மார்போடு அணைத்தான்.
அவனது இளமையான உடலின் சூடும், அவனது அணைப்பின் இறுக்கமும் அவளுக்கு அன்றைய நாளை ஞாபகப்படுத்தின…!
“ரதி… சொல்லுடி.. என்னை பிடிச்சிருக்குனு சொல்லுடி..! அரசு வேணாம்.. நீங்க தான்.. இந்த காமன் தான் வேணும்னு சொல்லுடி.!” என்றான் கதிர்காமன் அவளது கன்னத்தில் தன் கன்னத்தால் உரசிக் கொண்டே..
ரதிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவள் இத்தனை வருடங்களாக அனுபவிக்காத ஒரு உணர்வுக்குள் அவளை தள்ளி ஆட்கொண்டவன் கதிர்காமன். இன்றும் அந்த உணர்வுகளை ஊட்டி அவளை தன் வழியில் இழுக்க முயல்கிறான் மீண்டும் அவன்.
அவளது தேகம் அவன் தேகத்தோடு ஒட்டியபோது, அவளது மென்மைகள் அவனது வன் மார்பில் அழுந்தின..!
“சொல்லு ரதி..!” மெதுவாக அவளது உதடுகளின் மீது தன் உதடுகளை வைத்து கூறினான்.
ரதி மறுத்து அவளது உதடுகளை மூடிக்கொண்டாள். ஆனால் காமன் விடவில்லை. அவன் மெதுவாக அவளது உதடுகளைக் கடித்து, உறிஞ்சினான். அவனது நாக்கு அவளது வாய்க்குள் நுழைய முயற்சித்தது.
ரதிக்கோ பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
அவளது உதடுகள் மெதுவாகப் பிரிந்தன. காமனின் நாக்கு அவளது வாய்க்குள் நுழைந்து, அவளது நாக்கோடு பின்னிப் பிணைந்தது.
அவளது உடம்பில் ஒருவிதமான மின்சாரம் பாய்ந்தது. அவள் கண்களை மூடிக்கொண்டாள், அவனது முத்தத்தில் தன்னை முழுமையாக இழந்து போனாள். அவனது ஸ்பரிசம் அவளுக்குள் அணையாத காமத் தீயை மூட்டியது.
“ரதி… எனக்கு உன்னோட இப்படியே இருக்கணும்னு இருக்கு” என்று அவள் காதில் கிசுகிசுத்தான்.
அவனது கைகள் அவளது இடுப்பில் இருந்து மெதுவாக மேல் நோக்கி நகர, பட்டென சுதாரித்து அவனை பிடித்து தள்ளினாள்.
“ச்சீ.. எவ்வளவு மோசம் நீ.. ஏற்கனவே உன்கிட்ட சொல்லிட்டேன். நான் உன் தம்பிக்கு நிச்சயிக்கப்பட்ட பொண்ணுன்னு. திரும்பவும் இந்த மாதிரி வந்து உணர்வுகளை ஊட்டி.. தீயை மூட்டி அதில் குளிர்காய நினைக்கிறியே?? வெட்கமா இல்ல உனக்கெல்லாம்? நீ எல்லாம் மனுசனே கிடையாது..!” என்றவள் விடு விடுவென்று வெளியே சென்று விட்டாள்.
அக்காவுக்காக காத்திருந்த ராகவ் “என்ன கா கேட்டாரு அவரு உங்ககிட்ட?” என்றதும்,
ஒரு பெருமூச்சு விட்டவள் “இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லி கேட்கிறாரு டா” என்றதும் அவன் திடுக்கிட்டு அக்காவின் கையை பிடித்து “என்ன அக்கா சொல்லுற?” என்றான் பதட்டத்தோடு..!
தம்பியிடம் சொல்லிவிட வேண்டும் ஒரு பக்கம் மனம் துடித்துடித்தாலும் ஆனால் சில அந்தரங்கங்களை எப்படி அவனிடம் கூறுவது என்ற தயங்கியவள், மேம்போக்காக “நாம மும்பையில இருந்து இங்க வந்த பிறகு நம்மள அவரு ரொம்ப தேடி இருக்காரு போல.. அவருக்கு என் மேல ஒரு.. ஒரு..” சற்றே தடுமாறினாள்.
“அதனால கல்யாணத்தை நிறுத்த சொல்றாரு..”
“அவர் கல்யாணத்தை நிறுத்த சொல்றார் ஓகே? அதுக்கு நீ என்ன சொன்ன?” என்று அக்காவின் கண்களை பார்த்து கேட்டான் ராகவ்.
ஒரு நிமிடம் தடுமாறினாலும் “இந்த கல்யாணத்தை நிறுத்த முடியாதுன்னு சொல்லிட்டேன்” என அவர்கள் பேசிக்கொண்டே அருகில் இருந்த கிணத்து மேடைக்கு வந்திருந்தனர்.
தொடரும்..
