Share:
Notifications
Clear all

காமன் 31

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 2 years ago
Messages: 288
Thread starter  

31

 

 

 

அங்கே தண்ணீர் இறைக்க முடியாமல் முயன்று கைகள் சிவந்து அந்த கைகளை ஊதிக் கொண்டிருந்த மஹிமாவை பார்த்து சிரித்துக் கொண்டே “ஆழாக்கு உனக்கு தான் இதெல்லாம் வராது இல்ல.. அப்புறம் எதுக்கு நீ இதை பண்ற?” என்று திட்டிக்கொண்டே அந்த முறுக்கிய கயிறு அடங்கிய வாளியை கிணத்துக்குள் போட்டான் தென்னரசு..!

 

 

 

“அதில்ல மாமா.. அக்கா பொங்கல் வைக்கணும்னு சொன்னா. தண்ணி இந்த கிணத்துல இருந்து தான் எடுத்துட்டு வரணுமாம். வேற தண்ணி யூஸ் பண்ண கூடாதாம். அக்கா பாத்திரம் எடுக்க போயிருக்கா.. நானும் அப்பதிலிருந்து ட்ரை பண்றேன் எடுக்கவே முடியல மாமா” கூறும் மஹிமாவின் தலையை லேசாக தட்டி

 

 

 

“இதெல்லாம் செய்யணும்னா அதுக்கு உடம்புல கொஞ்சமாவது பலம் வேணும். இப்படி காத்தடிச்சா பறக்குற பலூன் மாதிரி உடம்பு வச்சிட்டு நீ இதை நீ ட்ரை பண்ண கூடாது” என்று சிரித்தவன் தண்ணீரை இறைத்து குடத்தை நிறைத்துக் கொடுத்தான்.

 

 

 

இருவரையும் சற்று தள்ளி பார்த்திருந்த ரதி “போலாமா மஹி?” என்றதும்,

 

 

 

“ஐயோ அக்கா..!” தங்களை பார்த்து ஏதும் தவறாக நினைத்து விடக்கூடாது என்று மாமனிடம் இருந்து சற்று தள்ளி நின்றவள்

 

 

 

“போலாம் கா..!” என்றாள்.

 

 

 

ஏனோ அந்த செய்கை தென்னரசுவை அதிகம் வருத்தியது..!

 

 

 

ரதி அவனுக்கு நிச்சயக்கப்பட்ட பெண் தான். உறவாக இல்லாவிடினும் இனி உரிமையுள்ள உறவாக மாறப்போகிறவள். ஆனால் மஹிமா?

 

 

 

‘என் அக்காவின் பெண் அல்லவா? அவளுக்கு நான் தாய் மாமா அல்லவா? என்னதான் நான் ரதியை திருமணம் செய்துக் கொண்டாலும் அந்த தாய் மாமன் உறவு மாறாது தானே? பின் ஏன் இவள் பதறுகின்றாள்? ரதி அப்படி ஏதும் தவறாக நினைத்துக் கொள்வாளா என்ன?' என்று திரும்பி ரதியை அவன் ஆராய்ச்சியாக பார்த்தான்.

 

 

 

ரதியின் முகத்திலோ எந்தவித கோபமும் ஆத்திரமும் காணப்படவில்லை‌ மிக இயல்பாக தான் எடுத்து வந்த பாத்திரத்தை காட்டி “இதுதான் அங்கு இருந்துச்சு மஹி.. இது கழுவணுமே எங்க கழுவுறது?” என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

 

 

“நம்ம சமைக்கிற இடத்துக்கு பக்கத்துலயே டேப் இருக்கு கா.. அங்கே கழுவிக்கலாம். இங்க கழுவ தண்ணி இறைக்கவே முடியாது. கயிறு ரொம்ப வலிக்குது கா. என்னால முடியல.. மாமா தான் தண்ணி இறைச்சு கொடுத்தாங்க” என்றாள் ஒரு சிறு தயக்கத்தோடு..!

 

 

 

“அதுக்கு என்ன? உங்க மாமாவுக்கு அதை விட வேற என்ன வேலை? உன்னை கஷ்டப்படுத்திட்டு அவர் ஜாலி உக்காந்திருப்பாராமா? அவரு வர்றதுக்கு முன்ன நீயே கூப்பிட்டு தண்ணி இறைக்க சொல்லி இருக்கணும்..” என்றாள் ரதி.

 

 

 

அதன் பின் தான் மஹிமாவுக்கு சற்று தளர்வாக இருந்தது மனம்.

 

 

 

அங்கே பாத்திரத்தை கழுவியள் மடப்பள்ளிக்குள்ளே நுழைய மனம் முரண்டியது..!

 

 

 

ஏனோ அவளுக்கு கதிர்காமன் தொட்டது அப்பொழுது ஒன்றும் தெரியவில்லை. இப்போது ஒருவித அசூசையாக இருந்தது. அதனோடு எப்படி கடவுளுக்கு அன்னம் செய்வது? படைப்பது? என்று ஒரு நிமிடம் யோசித்தவள்,

 

 

 

பூஜை முடிந்ததும் உடைமாற்றிக் கொள்வதற்காக கொண்டு வந்திருந்த இலகுவான புடவை ஒன்றை எடுத்து சற்று தள்ளி இருந்த குளியல் அறையில் மாற்றி வந்தவள், விடு விடு என்று அந்த கிணத்துக்கு சென்று இரண்டு வாளி தண்ணீரை இறைத்து தன் மீது ஊற்றிக்கொண்டு ஈரத் துணியோடு வந்து பொங்கல் வைத்தாள்.

 

 

 

சுலோச்சனாவும் லோகநாதனும் பதறி “என்ன சிற்பி இது ஈரத்தோடு வந்து பொங்கல் வைக்கிற? இவ்வளவு ஈரத்துல எப்படி இருப்ப?” என்று பதற்றத்தோடு கேட்க..

 

 

 

அவளால் என்னவென்று விளக்க முடியும் அமைதியாக இருந்தாள்.

 

 

 

ஆனால் பூசாரியோ “இப்படி ஈர உடையோட அம்பாளுக்கு நெய்வேத்தியம் செய்வது ரொம்ப விசேஷம். மனம் போல் மாங்கல்யம் நிறைவான வாழ்க்கை குழந்தைகள் எல்லாம் கிடைக்கும்” என்றார்.

 

 

 

அதுபோலவே தங்கையின் உதவியோடு பொங்கல் செய்து முடித்தவள், சாமிக்கு அபிஷேகம் முடிந்து அலங்கார நடந்துக் கொண்டிருக்கும் வேளையில்.. அந்த கோவிலை சுற்றி ஈர உடையுடன் அடி பிரதக்ஷணம் செய்தாள்.

 

 

 

“போதும் போதும் சிற்பி.. டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா சாமிக்கு அலங்காரம் முடிஞ்சிட்டு தீபாராதனை எடுக்க போறாங்க” என்று சுலோச்சனா வந்து சொல்லவும் தான் வேறு உடை மாற்றி வந்தாள்.

 

 

 

மற்றவர்களுக்கு இது ரதியின் பக்தியாகவும் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று அவளது வேண்டுதலாகவும் பார்க்க…

 

 

 

ஆனால் அந்த ஒருத்தனுக்கு மட்டும்தான் தெரியும் அவள் எதற்காக குளித்தாள் என்று..!

 

 

 

“நான் தொட்டா குளிப்பியா நீ?” உதட்டில் கோப புன்னகையோடு அவளையே வெறித்துப் பார்த்திருந்தான் கதிர்காமன்..!

 

 

 

அவனுக்கான நேரத்திற்காக காத்திருந்தான்..!

 

 

 

அம்மனுக்கு அலங்காரம் முடிந்து தீபாராதனை எடுக்கும் நேரம் தென்னரசுவையும் ரதியையும் அருகிலேயே நிற்க வைத்தனர் பெரியோர்கள்.

 

 

 

அவர்கள் பின் நின்ற கதிர்காமனோ சரியாக ஆரத்தி முடித்து பூசாரி தீபத்தோடு வரும் நேரத்தில் இருவருக்கும் இடையில் நுழைந்திருந்தான்..!

 

 

 

அதை யாரும் அப்பொழுது பெரிய விகற்பமாக எடுக்கவில்லை.. ஆனால் ரதியோ அவனது செய்கையை கண்டு பல்லைக் கடித்தாள்.

 

 

 

அதே நேரம் மஹிமா தென்னரசு அருகில் நிற்காமல் சற்று தள்ளி நிற்பது.. அப்படி நின்றால் கூட யாராவது பார்க்கிறார்களா என்று அவசரமாக பார்த்துவிட்டு நகர்ந்துக் கொள்வது.. ரதியும் அவளும் நிற்கின்ற நேரத்தில் தென்னரசு அவர்கள் புறம் வந்தால் உடனே விலகிச் செல்வது.. என்று அவளது நடவடிக்கைகள் அனைத்தையும் தென்னரசு ஒருவித கோபத்தோடு அவதானித்திருந்தான்.

 

 

 

காலையில் ஆரம்பித்த பூஜைகள் முடியவே மதியத்தை நெருங்கியது.

 

 

 

இங்கே பூஜை முடித்து அம்மனுக்கு மட்டுமல்ல இவர்களின் குலத்துக்கே காவல் தெய்வமாக இருக்கும் காவல் தெய்வத்திற்கு மத்தியானம் கிடாவெட்டி பூசை ஏற்பாடு செய்திருக்க.. மொத்த குடும்பமும் அங்கே சென்று அந்த வேண்டுதலையும் முறையாக முடித்து வீடு திரும்பவே இரவு போல் ஆனது.

 

 

 

வழக்கம் போல வீரராகவன் இரவுக்கு மேல் ரத்தினவேல் குடும்பத்தை செல்ல அனுமதிக்கவில்லை..!

 

 

 

அனைவரும் இருந்த களைப்பில் சரி என்று அன்றும் அங்கேயே தங்கிவிட்டனர்..!

 

 

 

இரவு ஃபோனில் பேசிக்கொண்டே தன் அறையில் இருந்து மெதுமெதுவாக நடந்து வராண்டாவில் அவள் நடந்துக் கொண்டிருக்க..

 

 

 

சட்டென்று அவள் கை அழுத்தமாக பற்றி ஒரு அறையின் உள்ளே அவள் இழுக்கப்பட.. அதிர்ந்து பயத்தில் கத்தியவளின் இதழ்கள் முரட்டு கையால் முரட்டுத்தனமாக அடைக்கப்பட்டன..!

 

 

 

அவள்… மஹிமா..

 

அவன்… தென்னரசு…!!

 

 

 

தொடரும்..


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top