28
“ஓ அப்போ அந்த இல்லீகமெடட் சில்ட்ரன்ஸ் இங்கு வந்திருக்கிறது அக்காவுக்கும் விருப்பம் தான். ஒருவேளை அக்காவுக்கு பையன் இல்லைன்னு எல்லாரும் ஃபோர்ஸ் பண்ணி ஏத்துக்க வச்சிட்டீங்களோ?” என்றான் கதிர்காமன் யோசனையாய்..
“இரு.. இரு.. உனக்கு சிற்பியை மட்டும் தானே தெரியும்? ராகவ்வை நீ பார்க்கவே இல்லை.. அப்புறம் எப்படி நீ ரெண்டு பேருனு சொன்ன?” என்று சந்தேகத்தோடு அண்ணனை பார்த்து கேட்டான் தென்னரசு.
‘ஆஹா.. அவசரப்பட்டு வாயை விட்டுட்டியேடா வக்கீலு..!’ என்று தனக்குள் முணகியவன்,
வலது கையால் நெற்றியை தேய்த்துக் கொண்டே “அது.. அது.. இங்க கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன் நீ கதையை மட்டும் சொல்லு” என்று கடுப்பாய் மொழிந்தான்.
“ஓகே.. ஓகே..! நீ தான் கிரிமினல் லாயர் ஆச்சே. சிற்பிய பத்தி தெரிஞ்ச உடனே ராகவ் பத்தியும் தெரிஞ்சிருப்ப” என்றதும் ஆமாம் என்று தலை அசைத்தான் ஏற்கனவே அவர்களை தெரியும் என்பதை காட்டிக் கொள்ளாமல்..!
“ஆக்சுவலி..! நீ சொன்ன அந்த இல்லீகமெட்ட் சில்ட்ரன்ஸ் வந்து அவங்க கிடையாது..! நம்ம மஹிமா தான். அதே மாதிரி அக்கா பின்னாடி அவர் இன்னொரு வைஃப்.. லைஃபை லீட் பண்ணல.. அந்த அம்மா முதுகு பின்னாடி தான் இவர் நம்ம அக்கா கூட வாழ்ந்து இருக்காரு” என்றான் தென்னரசு.
“என்னடா இது புதுசா குழப்புற?” என்று நெற்றி சுருங்க கேட்டான் கதிர்காமன்.
“ஷார்ட்டா ஒரு ஃபிளாஷ் பேக் சொல்றேன் கேட்குறியா..?” என்று புன்னகையோடு கேட்டான் தென்னரசு.
“தெய்வமே..! எவ்வளவு ஷார்ட்டா சொல்ல முடியுமோ அவ்வளவு ஷார்ட்டா சொல்லு.. இந்த மாதிரி லவ் ஃபிளாஷ்பேக் கேட்கிற அளவு எல்லாம் என் நெஞ்சில் வலு இல்லை” என்று சிரித்தான் கதிர்காமன்.
“லோகநாதன் அத்தான் சின்ன வயசுல மும்பைக்கு தொழில் விஷயமா போகும்போது தான் அங்க சிற்பியோட அம்மா சித்தாரா அக்காவோட பழக்கம்.. காதல்.. பியார்..”
“ஓ சிற்பியோயோட அம்மா உனக்கு அக்காவா?” என்றதும்,
அவனை முறைத்த தென்னரசு “அப்புறம் என்ன நம்ம அக்காவை அக்கான்னு சொல்லிட்டு அவங்கள அத்தை ஆன்ட்டினா சொல்ல முடியும்? கதை ஒரு ஃப்ளோல போகும்போது டிஸ்டர்ப் பண்ணாதடா அண்ணா” என்று கடுப்படித்தான் தென்னரசு.
“ஓகே ஓகே யூ கண்டினியூ பாய்..”
“சிற்பியோட அம்மா சித்தாரா அக்காவும் கொஞ்சம் வசதியானவங்க தான். ஆனா அத்தான் ஒரு ஜமீன் பரம்பரைனு அவங்க கிட்ட சொல்லல.. சொல்லாமலே லவ் பண்ணி இருக்காரு.. இது சிற்பியோட அம்மா வீட்டுக்கு தெரிஞ்சு அவங்களுக்கு இந்த மாதிரி நாடோடி பையன் வேணாம்னு.. அவங்க பெரிய குடும்பத்துல கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ண, இவங்க ரெண்டு பேரும் திருட்டுத்தனமா கல்யாணம் பண்ணிட்டாங்க. சிற்பியும் பொறந்தா..”
“கொஞ்ச நாள் அங்கே இருந்துட்டு திரும்ப இங்கே அத்தான் ஊருக்கு வரும்போது வீரராகவன் மாமாவுக்கு விஷயம் எல்லாம் தெரிந்து போய் கிட்டத்தட்ட அத்தானை ஹவுஸ் அரெஸ்ட் பண்ணிட்டாரு..!”
“ஹவுஸ் அரெஸ்டா எதுக்குடா?”
“பின்ன.. இவர் பாரம்பரியம் ஜமீன் வம்சம் அப்படி இப்படின்னு பார்க்கிறவரு.. எங்கேயோ தெரியாத ஊர்ல.. தெரியாத பாஷையில்.. ஏதோ ஒரு ஜாதி பொண்ண கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தினால் ஒத்துக்குவாரா? அதான் ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி அவசர அவசரமா மிரட்டி நம்ம அக்காவோட கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க..”
“டாமிட் ..! இந்த மாதிரி குடும்ப கௌரவம் ஆணவம்னு பிடிச்சிட்டு தொங்குற வயசானவங்களை எல்லாம் முதல்ல சுட்டு தள்ளணும் டா..! அப்பதான் நாடு உருப்படும்” என்று உறுமினான் கதிர்காமன்.
“ஆனா அத்தான் வந்து அந்த விஷயத்தை அக்கா கிட்ட சொல்லிட்டாராம்..!”
“இதை கல்யாணத்துக்கு அப்புறம் சொல்லி என்ன புண்ணியம்?” என்றான் கதிர்காமன் கோபமாய்.
அதனை மறுத்த தென்னரசு “கல்யாணத்துக்கு முதல் நாள் ராத்திரி சொல்லி அக்காவை கல்யாணத்தை நிறுத்த சொல்லி இருக்காரு அத்தான்..”
“வீரராகவன் மாமா பத்தி தான் தெரியும்ல அதனால எங்க கல்யாணத்தை நிறுத்தினா.. அவர் வேற ஏதாவது நம்ம குடும்பத்து மேல வன்மம் கொண்டு ஏதாவது செஞ்சுடுவாருனு பயந்து தான் அக்கா யாரிடமும் சொல்லாம கல்யாணமும் பண்ணிக்கிச்சு..”
“சரியான லூசு அக்கா..!” என்று திட்டினான் அக்காவை காமன்.
“எவ்வளவு முறை அத்தான் டிவோர்ஸ் பண்ணிட்டு போயிடுன்னு சொல்லியும் அக்கா தயங்கி தயங்கி ஒரு வழியா ஒரு வருஷம் முடிஞ்சவுடனே டிவோர்ஸூக்கு அப்ளை பண்ணி இருக்காங்க.. வீரராகவன் மாமாவோட நரி தந்திரத்தால அதாவது அங்குள்ள பேமிலியை அத்தானுடைய பொண்ணு ஏதாவது பண்ணிடுவேன்னு பயமுறுத்தி இங்க அக்காவோட வாழ வச்சிருக்கார் இந்த பெரிய மனுஷன்..!”
“இவங்களுக்கு இங்கே மஹிமா பிறந்த உடனே அத்தான் அந்த பழைய லவ் விட்டுடுவாருனு மாமா நினைச்சிருக்காரு.. பட் லோகநாதன் அத்தானால அது முடியல..”
“இதுல நம்ம அக்காவோட பெருந்தன்மை இருக்கு பார்த்தியா? அதுதான் ரொம்ப சிறப்பு..! அதுக்கப்புறம் திரும்பவும் சிங்கப்பூருக்கு போறேன்னு மாமா கிட்ட பொய் சொல்லிட்டு திரும்பவும் மும்பைக்கு போய் எப்படியாவது சித்தாரா அக்கா கிட்ட விஷயத்தை சொல்லலாம்னு முயற்சி பண்ணி இருக்காரு அத்தான்.. ஆனா அவங்களோட தூய அன்பிலேயும் அப்பழுக்கு இல்லாத பாசத்துலேயும் சொல்ல முடியாமல் தவிச்சு கொஞ்ச நாள் அங்க இருந்து திரும்பி வந்துட்டாரு.. இங்க வந்ததுக்கு அப்புறம் தான் சித்தாரா அக்கா கர்ப்பமாக இருந்திருக்காங்க..! அவங்களுக்கு ரெண்டாவதா பையனும் பிறந்தான். இதில் டிவிஸ்ட் என்ன தெரியுமா?”
“இந்த கதையில டிவிஸ்ட் வேறயா? சொல்லி தொலை..!” என்று கதிர்காமன் எரிச்சலாய்..
“இந்த லோகநாதன் அத்தான் இவ்வளவு செஞ்சு தன்னோட அப்பா பேரையே குல வழக்கப்படி தன் மகனுக்கும் வச்சிருக்கார் ராகவ்னு” என்று தென்னரசு கூறிய தினுசில் வாய்விட்டு சிரித்தான் கதிர்காமன்.
“அப்புறம் ..??” என்று சுவாரசியமாக கதை கேட்ட கதிர்காமனின் தோளில் கை போட்ட தென்னரசு,
“அப்புறம் என்ன? இங்க ஃபேமிலி இருந்தும் தனக்கு தெரியாம அடிக்கடி தன் புள்ள அங்க போயிட்டு வருவதை கவனிச்சு, இங்கே அவருக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கிறது எப்படியோ சித்தாரா அக்காவுக்கு அங்க தெரியிற மாதிரி பண்ணிட்டாராம் வீரராகவன் மாமா..”
“அவர் வீரராகவன் மாமா இல்லடா சரியான சகுனி மாமா.!” என்றான் கதிர்காமன்.
“ஹா.. ஹா.. சரியான பேரு டா..! சித்தாரா அக்காவுக்கு தான் காதலிச்சு வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணவரே தனக்கு துரோகம் பண்ணத தாங்கிக்க முடியாமல் ஒட்டுமொத்தமா லோகநாதன் அத்தானை விட்டு பிரிஞ்சிட்டாங்களாம். தனியா போராடி தான் ரெண்டு பேரையுமே அவங்க தான் வளர்த்திருக்காங்க.. கொஞ்ச நாள் முன்னாடி தான் இறந்திருக்காங்க..! அதுவும் இங்கே யாருக்கும் தெரியல… அவங்க சிறுக சிறுக சேமிச்சு கட்டுன வீட்டையும் ஒரு கார்ப்பரேட் காரன் புடுங்கிட்டானாம். அந்த பிள்ளைங்க அதனால ரொம்ப பாதிக்கப்பட்டிருக்காங்க..” என்று பாவப்பட்டான் தென்னரசு.
அந்த விஷயம் தான் கதிர்காமனுக்கு தெரியுமே..! தென்னரசு சொல்ல சொல்ல அவன் கைமுட்டி இறுகி தன் கோபத்தை அடக்கிக் கொண்டான்.
“ஆனா டா கதிர்.. இவங்க இங்க வீட்டுக்கு வந்தது ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரியுமா?” என்றதும்..
என்ன என்று காமன் புருவத்தை உயர்த்த..
“தஞ்சாவூர் பக்கம் ஒரு நிலத்தை அத்தான் பேருலேயும் அக்கா பேருலேயும் பதிவு பண்ணலாம்னு வீரராகவன் மாமா ரெஜிஸ்ட்ரேஷன் ஆபீஸ்ல கொடுத்திருக்காங்க..! அப்போ அத்தானோட டீடெயில்ஸ் அதுல செக் பண்ணும் போது.. அத்தானோட லீகல் வைஃப்னு சொல்லி சித்தாரா அக்கா பெயர் தான் வந்திருக்கு. அப்படி தன்னுடைய எல்லா ஐடிலேயும் புருஷன்னு அத்தானோட ஐடிய சித்தாராக்கா லிங்க் பண்ணி வச்சிருக்காங்க..! அதுக்கு அப்புறம் வீட்டுக்கு வந்து மனுஷன் பெரிய ஆட்டம் ஆடி.. எப்படியாவது சித்தாரா அக்காவை டிவோர்ஸ் பண்ணி.. லீகல் வைஃப்னு சுலோச்சனா அக்கா பேரு தான் இருக்கணும்னு சண்டை போட்டு இருக்காரு..”
“ஒரு வழியா சண்டை பிரச்சனை எல்லாம் முடிஞ்சு.. இவங்க சித்தாரா அக்காவை தேடி போகும்போது தான் அக்கா இறந்த விஷயம் தெரிஞ்சு பிள்ளைகளை இங்க வீட்டோட கூட்டிட்டு வந்துட்டாரு அத்தான்”
“அதுவும் இல்லாம ஜமீனுக்கு பல வருஷமா ஆண் குழந்தை இல்லைன்னு மனசுக்குள்ள ஏங்குன வீரராகவன் மாமாவுக்கு, தன் பேருலேயே ஒரு பேரன் இருப்பதை கண்டு.. அதுவும் அவங்க அம்மா இல்லாததையும் யோசிச்சு ஏத்துக்கிட்டாராம்.. இதுல பெரிய விஷயம் என்னன்னா இங்க வந்த உடனே இவங்களோட எல்லா ஐடிலேயும் அப்பா லோகநாதன் அம்மா சுலோச்சனா இருக்கணும்னு மாத்திட்டாரு வீரராகவன் மாமா..! பணத்தை பாதாள வரைக்கும் செலவு பண்ணி..! இப்ப இவங்க ரெண்டு பேரும் லீகலா நம்ம அக்கா பசங்க, அதை தான் சொன்னேன் அப்பவே உங்கிட்ட” என்றான்.
“ஆனாலும் இந்த கிழவனுக்கு இவ்வளவு கிரிமினல் புத்தி ஆகாதுடா..!” என்று கிரிமினல் லாயரையே வியக்க வைத்தார் ஜமீன்தார் வீரராகவன்..!
“சரி நீ போய் தூங்கு..! நாளைக்கு காலைல அக்காவோட குலதெய்வ கோவிலுக்கு போகணுமாம். அதனாலதான் இன்னைக்கு நம்ம ஃபேமிலிய இங்க தங்க வச்சு இருக்காங்க.. காலைல நானும் சீக்கிரமே எழணும்..! அவ என்ன கலர் புடவை கட்டுறானு தெரியல அதுக்கு மேட்சா.. நான் பார்த்து பார்த்து கிளம்பணும்..!” என்று சென்ற தென்னரசுவின் முதுகை வெறித்தான் கதிர்காமன்.
சற்று நேரம் யோசித்தவன் மெல்ல நடந்து கார் இரவின் அந்த மூன்றடுக்கு வீட்டையே கண்கள் இடுங்க பார்த்து இருந்தான்.
அவன் எதிர்பார்த்தது போல.. அவள் அறையில் இருந்து வெளியே வந்த ரதி பால்கனி நோக்கிச் செல்ல.. மெல்ல பூனை நடையோடு அவளைப் பின் தொடர்ந்தான் கதிர்காமன்.
தொடரும்..
