27
“என்ன டா உன் கதை? நோ.. நோ.. நம்ம அக்கா வீட்டு கதை?” என்று இரவின் தனிமையில் தன் தம்பியிடம் வினவினான் கதிர்காமன்.
அந்த நீண்ட பெரிய பால்கனியில் அவர்கள் இருவரும் மட்டுமே இருந்தனர்.
பால்கனியின் கம்பிகளை பிடித்தவாறு.. இரவு வெளியில் உலா வரும் நிலாவை பார்த்திருந்த தென்னரசுவின் மனதுக்குள் அந்த நிலவை பார்த்ததும் ரதியின் அழகு முகம் ஞாபகம் வர.. அவனோ கதிர்காமன் கேட்டதை காதில் வாங்காமல் தன் கற்பனைக்குள்ளேயே மிதந்துக் கொண்டு இருந்தான்.
“கேள்வி கேட்டா இவன் இப்பதான் ட்ரீம்ஸ்ல இருக்கான்.. விடக்கூடாது இவனுக்கு இப்படிப்பட்ட ட்ரீம்ஸ் எல்லாம் இனி வரவிடவே கூடாது. தம்பி இப்போதைக்கு உனக்கு கல்யாணம் யோகமே இல்ல..!” என்று கண்கள் கூராக பற்களை கடித்துக் கொண்டு பேசினான் கதிர்காமன் தென்னரசுவின் முகத்தில் தெரிந்த அந்த நேசத்தில்..!
“நீ நேசப்படு.. காதல் படு… ஏன் கலவி கூட பண்ணு..! ஆனா.. அதெல்லாம் என் ரதி கிட்ட கூடாது டா தம்பி..!” என்று பற்களைக் கடித்துக் கொண்டு பேசியவன், தம்பியை நெருங்கி நிஜமாகவே அவனது முதுகில் சுள்லென்று ஒரு அடி போட்டான்.
“ஆஆஆஆ.. டேய் கதிர்.. இப்ப எதுக்குடா என் முதுகுல அடிச்ச?” என்று இரு கைகளாலும் முதுகை தடவியப்படி முகத்தில் வலி மிக கேட்டான் தென்னரசு.
தம்பியின் முகத்தில் வலியை பார்த்ததும் இவனுக்கும் பாவமாகத்தான் இருந்தது. ஆனாலும் சற்று முன் அதே முகத்தில் தானே ரதியை நினைத்து இவன் காதலில் கரைந்து உருகினான்.. அப்போ இவனுக்கு இது தேவை தான்..! என்று இளகிய மனதை இறுக்க பிடித்தவன்,
“நான் எவ்வளவு நேரமா கேட்டுக்கிட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு அந்த நிலாவை பார்க்குற.. பக்கத்துல இருக்குற நட்சத்திரத்தை பார்க்குற.. அப்புறம் உனக்குள்ள சிரிச்சிக்கிற.. என்னடா ஆச்சு பைத்தியம் புடிச்சிருச்சா?” என்று ஒன்றும் அறியாதவன் போல கதிர்காமன் கேட்க..
“ஹான்.. ஆமா கதிர்.. பைத்தியம் பிடிச்சு அது இப்போ முத்தி போயிருச்சு எல்லாம் அவளால.. என் அவளால…” என்றதும் அந்த அவள் எவள் என்று தெரிந்த கதிர்காமனோ தன் கோபத்தை அடக்க கைகள் முஷ்டியை இறுக்கினான்.
“உன் காதல் கதையை அப்புறம் சொல்லு.. இப்போ அக்கா வீட்ல என்ன நடக்குது? என்ன நடந்தது? மஹிமா தானே அக்கா பொண்ணு இப்போ திடீர்னு முளைச்ச இந்த.. என்ன பேரு சொன்ன சிற்பமோ ஓவியமோ ஏதோ சொன்னியே..” என்று தெரியாதது போலவே ஆஸ்கார் நாயகனாய் நடித்தான்.
“சிற்பம் ஓவியம்னு கிண்டல் பண்ற.. அவ என் ஏஞ்சல் டா..!’ என்று மீண்டும் கண்கள் மின்ன கனவுலகத்தில் சஞ்சரிக்கப் போனவன் தலையில் இரண்டு கொட்டு கொட்டி..
“ஒழுங்கா சொல்லு டா.. என்ன நடந்துச்சு? என்னை போல பிக் ஷாட் கையால குட்டு பட்டா நல்லதுன்னு சொல்லுவாங்களே.. அதுக்காக வேணும்னே கொட்டு வாங்காதே.!” என்று துளி கர்வமாக முறைப்பாக கேட்ட அண்ணனை கண்ட தென்னரசு..
அவனை பின்னால் இருந்து கட்டிக்கொண்டு “இன்னமும் நீ மாறவே இல்லடா..! அந்த கர்வம் அப்படியே இருக்கு உன் கிட்ட பாரேன்” என்று சிரித்தபடி கூறினான்.
“எல்லோருக்கும் இலகுவானவனாக இருந்தா இளிச்சவாயன்னு நெத்தில நாமம் போட்டுட்டு போயிடுவாங்க தம்பி.. எப்பவும் இப்படி நாம ஆட்டிடியூட் ஆ இருக்கிறது தப்பு இல்ல..! மோர்ஓவர்.. உன்னை போல ஒரே ஊர்ல குண்டுச் சட்டியில குதிரை ஓட்ட என்னால முடியாது. அது உனக்கு சொன்னாலும் புரியாது..!" என்றான் கதிர்காமன் சிகரெட்டை பற்ற வைத்த படி..!
சிகரெட் பாக்கெட் தம்பியின் புறம் நீட்ட.. அவனோ “அய்யோ சாமி.. ஆள விடு..! சின்ன வயசுல ஒரு தரம் இப்படித்தான் நீ சிகரெட் குடிச்சிட்டு என்னையும் குடிக்க வைக்க ட்ரை பண்ணுன.. ஆனா எனக்கு அது ஒத்துக்காம புரை ஏறி கண்ணெல்லாம் சிவந்து தண்ணி வந்து வீட்ல மாட்டிக்கிட்டேன் தெரியுமா? ஆனால் நீ எஸ்கேப் ஆயிட்ட” என்று அண்ணனை குறை கூறிய தம்பியின் புஜத்தில் செல்லமாக அடித்த கதிர்காமனோ,
“ம்ம்.. வீட்ல மாட்டிக்கிட்டா பொருத்தமா பொய் சொல்லணும். எதுக்கு இருமுனனு கேட்டா வேற எதாவது ரீசன் சொல்லி தப்பி இருக்கணும் தம்பி..! அதை விட்டுட்டு புகை ஒத்துக்கல அது இதுன்னு வாய் விட்டது நீனு.. அதனால மாட்டிக்கிட்ட” என்றான் ஸ்டைலாக தோளை குலுக்கி..
அண்ணனின் இந்த மேனரிஸம் தென்னரசுக்கு மிகவும் பிடிக்கும். அவனது மேனரிஸம் மட்டுமல்ல அண்ணனையே அவ்வளோ பிடிக்கும் அவனுக்கு..!
“என்ன செய்றது நான் கதிர்காமன் இல்லையே.. நான் தென்னரசு..! என்னால உன்னை மாதிரி ஸ்பான்டேனிஷா பொய் சொல்ல முடியாது. அதனாலதான் நீ இப்போ மும்பையில லீடிங் லாயரா இருக்க” என்று அவன் அண்ணனை வார..
“அடிங்க..! டேய் தம்பி அது ஒரு சாமர்த்தியம் தானே டா..! உனக்கு அது வரலைங்கறதுக்காக என்ன குறை சொல்லுவியா நீ?” என்று நிக்கோட்டின் புகையை ஆழ்ந்த இழுத்து அந்த இருளில் வெளியிட இருளின் கருப்பினை கிழித்துக்கொண்டு வெண்ணிற புகையாக அது வெளியேறுவதை ஒருவித வெறுமையுடன் பார்த்தான் கதிர்காமன்.
பின் தம்பியின் புறம் முகத்தை திருப்பி “டிராக்கை மாத்தாத..! அக்கா வீட்ல என்ன நடக்குதுன்னு சொல்லு?” என்று அவன் பேச்சில் இப்பொழுது கிண்டல் தொனி மறந்து.. ஒருவித அழுத்தம் குடியேறியிருக்க.. தென்னரசு அண்ணன் அருகில் வந்து பால்கனியின் பின்னால் கைகளை வைத்துக்கொண்டு அவனைப் பார்த்தவாறு நின்றான்.
“நீ நினைக்கிற மாதிரி பெரிய ஃபிளாஷ் பேக் எல்லாம் இல்ல கதிர்.. அஸ் இஸூவல்.. எல்லா ஜமீனுக்கும் ஒரு முன்னால் காதல் இருக்கும்ல.. அதே தான் இங்கேயும்..! அதாவது நம் அத்தான் லோகநாதனுக்கு..!”
“வாட்? இன்னொரு ஃபேமிலியா? அதுவும் நம் அத்தானுக்கா?” என்று அதிர்ச்சி விலகாமல் கேட்ட கதிர்காமனை பார்த்து ஆம் என்ற தலையசைத்தான் தென்னரசு.
“எப்படி அக்கா இதை அக்செப்ட் பண்ணுனா? அந்த பொண்ணு இல்லிகமேடட் சில்ட்ரன்..! நாளை காலை அக்காவை பார்த்து ஒரு கேஸ் கொடுக்க சொல்லணும்..” என்று அக்காவுக்கு அத்தான் துரோகம் இழைத்ததை பொறுக்க முடியாமல் தம்பியாய் இவன் நியாயம் பேச..
“அடப்பாவி..! மொத்தமா என் லைஃபுக்கே நீ ஆப்பு வச்சிருவ போலவே?” என்று அதிர்ந்து அண்ணனின் கையை பிடித்தான் தென்னரசு.
“பின்ன… அக்காவை ஏமாத்தி அத்தான் அவ முதுகுக்கு பின்னாலயே இன்னொரு லைஃப் லீட் பண்ணி இருக்காரு.. இதுல அவருக்கு பசங்க வேற.. எப்படிடா பொறுத்துக்க முடியும்?’ என்று கோபமாக இருந்தவன் வேக வேகமாக அந்த சிகரெட்டை உள்ளிழுத்து உள்ளே கனன்றுக் கொண்டிருந்த கோபத்தை நிக்கோட்டின் புகை மூலம் இன்னும் ஏற்றிக் கொண்டான்.
“ம்ம்ம்.. பார்றா.. சாத்தான் வேதம் ஓதுறத..?” என்று நக்கல் அடித்தான் அரசு, அண்ணனின் காம விளையாட்டினை அறிந்தவனாய்..!
“உனக்கு எப்படி இவ்வளோ கரெக்டா பேரு வைச்சாங்க தெரியல டா பெரியப்பா..!” என்று கிண்டல் அடித்த தம்பியின் மேல் தன் சிகரெட் கங்கினை தட்டி விட்டான் கதிர்காமன்.
“அடேய்.. கிராதகா.. கதிர்காமா..! எனக்கு இன்னும் பத்து நாளுல கல்யாணம் டா.. என் ஸ்கினை சுட்டு கருக்கிடுவ போல.. ஏற்கனவே அவ என்னை விட கலரா இருப்பா.. இதுல நீ வேற ஏன் டா..” என்று அவனை கடிந்தப்படி தன் கையினை உதறினான் தென்னரசு.
‘இதுக்கே உன்னை ஒட்டு துணியில்லாம நிக்க வைச்சு உடம்பு பூரா சுடணும்டா.. என் சக்காளத்தான்..!’ என்று முணுமுணுத்தான் கதிர்காமன்.
“என்ன டா முணுமுணுக்குற?” என்றவனிடம்,
“நீ என்னை ஜட்ஜ் பண்ணாம அக்காவை பத்தி சொல்லு.. இல்லனா அடுத்து எந்த இடத்துல சூடு வைக்கலாம்னு யோசிக்கிறேன்?” என்று தென்னரசுவில் தலையில் இருந்து கால் வரை பார்த்த அண்ணனை கண்டு ஜெர்க்கானவன்,
“அடேய் அண்ணா.. என்ன டா ஆன்டி சைக்கோ ஹீரோஸ் ஹீரேயினை பழிவாங்கற மாதிரி நீ யோசிக்கிற?” என்று அதிர்ந்து கேட்டவனை கண்டு கடகடவென்று சிரித்தான் கடோத்கஜனை கதிர்காமன்.
“கிட்டத்தட்ட என் சிச்சுவேஷனும் அப்படித்தான். நீ சொல்ற முடிவை வச்சுத்தான் நான் சைக்கோ ஆன்டி ஹீரோ மாதிரி ஆகணுமா இல்ல வில்லனாவே மாறணுமானு யோசிக்கணும்?” என்றான் கண் சிமிட்டி காமன்.
“வாட்?? வில்லனா? யாருக்கு டா?” என்று அதிர்ந்த அரசுவின் முகத்தில் இப்போது நிக்கோட்டின் புகையை ஊதி விட்டவன்,
“பேஸிக்கலி ஐ அம் வெரி வெரி பேட் மேன்” என்றான் அவன் புறம் குனிந்து..!
“நீ ஒரு முடிவோட தான் சுத்திட்டு இருக்க என்ன?”
“வாட்எவர்..! என் லைஃப் என் சாய்ஸ்..!” என்றான் கதிர்காமன் கர்வமாய்..!
“அது போல தான்.. அக்கா லைஃப் அக்கா சாய்ஸ்..!" என்றான் தென்னரசு இப்பொழுது தெனாவட்டாய்..!
தொடரும்..
