மாயவன் - 13

 

(@gayathri-senthil)
Member Moderator
Joined: 5 months ago
Messages: 13
Thread starter  

அவ என் மனைவியா வருவா

 

விஜயும் ஆத்மிகாவும் உடைகளை எல்லாம் வாங்கி விட்டு, அவளை ஹாஸ்டலில் விட்டு விட்டு வீட்டுக்கு கிளம்பினான்,

 

 வீட்டிற்குள் அவன் நுழைந்ததும் குடும்பத்தினர் தான் அவனை விசித்திரமாக பார்த்தார்கள், ஏனென்றால் விடயம் திவ்யாவின் மூலமாக குடும்பத்தினருக்கு தெரிய வந்திருந்தது.

 

 அஜய், சரவணன், வாசுகி ,தீபிகா என்று அனைவருமே ஹாலிலேயே தான் அமர்ந்திருந்தார்கள்,

 

“ உங்களுக்கு வேற வேலையே இல்லையா? எப்ப பாரு ரவுண்ட் டேபிள் கான்ஃபரன்ஸ் மாதிரி உட்கார்ந்துட்டு இருக்கிறது” என்று மனதில் நினைத்தபடி வேகமாக உள்ளே போனான் விஜய்.

 

“என்ன கண்ணா ஏன் வேகமா போற, காபி டீ எதுவும் வேணாமா?” என்று அழைக்கப்பட்ட சிரிப்புடன் கேட்டார் வாசுகி,

 

 அவர் குரலில் இருந்த பேதத்தை அவன் உணர்ந்தான் தான், “திவ்யா”… என்று மனதில் நினைத்தவன்,

 

 “எங்கடா உன் லைஃப்..? என்று நண்பனிடம் கேட்டான், “என்னை கேட்டா, உன் தங்கச்சியை பற்றி..?” அவன் சீரியஸாக சொல்லவும் அனைவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது,

 

 அவனை விஜய் முறைக்க, “டேய் நீ தான பொட்டிக்கு கூட்டிட்டு போன, இப்ப நீ மட்டும் வர, என் பொண்டாட்டி எங்க?” என்று மாரி கேட்டான். 

 

அவனை முறைத்து விட்டு திரும்பி தாயிடம் திரும்பியவன், “கொஞ்சம் சூடா காபி என்று அங்கே இருந்து மேலே செல்லப் போனான்,

 

 தான் இப்போது ஹாலிற்கு சென்றால் எல்லோரும் கலைந்து போவார்களே என்று அவன் செல்ல போக,

 

“ அண்ணா, எங்க கூட உட்கார்ந்து கூட காபி குடிக்கலாம், அப்படி குடிச்சாலும் காபி உள்ள இறங்கும்” என்று அழைத்தது என்னவோ அஜய் தான், அவனுக்கே ஆச்சரியம் தான், “அப்படியா?” என்று திரும்பி பார்த்தான். 

 

ஒரு கணம் அவன் பார்வையில் உள்ளுக்குள் ஜர்க்கானது அஜய்க்கு தான், இருந்தாலும் வெளியே காட்டாமல்,

 

“ வந்து உட்கார்ந்து குடித்து பாருங்க, அப்பதானே தெரியும் உள்ள போகுதா இல்லையான்னு” என்று சீரியஸாக பேசவும்,

 

“அட அட வாரேவா மாப்ள கவுண்டர் எல்லாம் கொடுக்கிற” என்று சரவணன் சொல்லவும்,

 

“ எல்லாம் உங்க ட்ரைனிங் தான் மாமா” என்றான் அஜய் சரவணனிடம்,

 

 தீபிகா சிறு புன்னகையுடன் இவர்கள் அலப்பறையை பார்த்து அமர்ந்திருந்தாள்.

 

“ வாங்க மாமா எங்க கூட உட்காருங்க” என்று அழைக்கவும் வெளியே எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தான் விஜய். 

 

 

“இல்ல சூரியன் எதோ மாறி உதித்திடுச்சா, இல்ல மழை வருதான்னு பார்த்தேன்” என்று கூறவும் அனைவரும் ஒரு கணம் கப்சிப் என்று ஆகிவிட்டார்கள்.

 

“ அதான பார்த்தேன்” என்று மனதில் நினைத்தவன், அங்கு இருந்து எழப்போக, “சாரி அண்ணா” என்றான் திடீரென்று அஜய், “எதுக்கு என்பது போல்?” நின்றான் விஜய். 

 

 

“இல்ல எல்லாத்துக்கும் தான்” என்று அவன் அழுத்தமாக கூறவும், அதற்கு மேல் விஜய் எதையும் கிண்டி கிளற விரும்பவில்லை, “சரி லீ விட்” என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே நவீனக் குளிக்கவைத்து உடைமாற்றி அழைத்து வந்தாள் திவ்யா.

 

 “அண்ணனைப் பார்த்ததும் லேசாக சிரிப்பு வந்தது, என்னன்னா ஆத்மி ஹாஸ்டல் போய்ட்டாளா?” என்று அழுத்தமாக கேட்கவும், “வாளு” என்றான் அவன்.

 

 இருந்தாலும் ஒரு பெண்ணோடு வைத்து தன்னை இத்தனை பேர் கலாய்த்து கொண்டிருப்பது அவனுக்கு சங்கடமாகத்தான் இருந்தது லேசாக காதுமடல் வரையில் சிவக்க ஆரம்பித்ததை பார்த்து தீபிகா தான் அதிசயத்துப் போனாள்

 

 

 கணவன் காதோரம், “மாமா வெட்கப்படுறார் போல” என்று கூறவும், “வாட்” என்று அதிர்ந்தவன் மெதுவாக விஜயின் புறம் திரும்ப, கையில் இருந்த காபி கோப்பையை இறுக்க பிடித்திருந்தாலும் அவன் காது சிவப்பது நன்றாகவே தெரிந்தது. 

 

மாஸாக இருக்கும் தன் அண்ணன் வெட்கப்படுவதை பார்ப்பது அரிதிலும் அரிதல்லவா, சிரிப்பை அடக்கியபடி, “அம்மா எங்களுக்கும் காபி” என்று கூறவும்,

 

“ டேய் இப்ப தானடா குடிச்சீங்க?” என்று வாசுகி கேக்க, “இருந்தாலும் அண்ணா கூட ஒன்ஸ்மோர்” என்று சொல்லவும், 

 

“சரிதான்” என்று காபி கொண்டு வா என்று அவளையும் அழைத்துக் கொண்டு சென்றார் வாசுகி.

 

அங்கே விஜய அமர்வதற்கு தான் மிகவும் சங்கடமாக இருந்தது, இருந்தாலும் கெத்தை மெயின்டெயின் பண்ணனுமே கால் மேல் கால் போட்டபடி, 

 

“என்ன இப்போ உங்களுக்கு?” என்று விசாரித்தான்.

 

“ இல்லடா மச்சான் முகத்துல ஒரு ஒளிவட்டம் தெரியுது, அதான் என்னன்னு பார்த்தேன்” என்று சரவணன் கூறவும்,

 

“ தெரியும் தெரியும்” என்று நக்கலாக கூறினான் விஜய், “ஆமாடா மச்சான்” என்று அவன் மீண்டும் சொல்ல,

 

“ ஏன் மச்சான் ஒளி வட்டம் தலைக்கு பின்னாடி தானே தெரியும், முகத்தில் தான் தெரியுமா என்ன?” என்று கேட்க,

 

 “அது வந்து அவருக்கு எக்சைட்டிங்க்ல தப்பு தப்பா சொல்றாரு, முகத்துல பல்பு எரியுதுன்னு சொல்றதுக்கு பதிலா, ஒளிவட்டம் சொல்லிட்டார்” என்று திவ்யா காபியை கொண்டுவர, திரும்பி தங்கை முறைத்தான் விஜய்.

 

 அவள் சிரிப்பை அடக்கிக் கொண்டு, “அம்மா உன் கூட வந்தா அண்ணா டிரஸ் பர்ச்சேஸ் பண்ணி கொடுத்து இருக்காங்களா? உங்களுக்கும் சேர்த்து காசு கொடுத்திட்டு போவார், நான்தான் போய் வாங்கணும் என்று நிறுத்தினாள்.

 

  இல்லடா.. என்று வாசுகி சொல்ல..

 

அம்மா என்றான் விஜய்,

 

“ அவ கேட்டாலே அதுக்கு சொன்னேன்” என்று குறைப்படுவது போல சிரிப்புடன் கூறினார். 

 

அவளை முறைத்தான் விஜய், “இன்னைக்கு என்னவோ நிறைய வாங்கி..” என்று சொல்லவும் இதற்கு மேல் பொறுமையை கடைப்பிடிக்க முடியாத விஜய்,

 

“ ஓகே மா எல்லாரும் இருக்கறதுனால நான் ஓப்பனாவே சொல்லிடுறேன், நான் ஆத்மியை மேரேஜ் பண்ணனும்னு நினைக்கிறேன்” என்று அவன் ஓப்பனாக சொல்லி விடவும், அதிர்ந்து போய் தான் பார்த்தார்கள்.

 

 எதிர்பார்த்ததுதான் இருந்தாலும் இப்படி பட்டென்று அவன் போட்டு உடைத்து விடவும் ,அவர்களுக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. 

 

“உனக்கு ஓகேன்னா எங்களுக்கும் சந்தோஷம்தான் பா” என்று கூறினார் வாசுகி,

 

 “இத்தனை வருஷம் நீ மேரேஜ் பண்ணாம இருக்கிறதே எனக்கு கஷ்டமா இருந்தது, ஆத்மிகாவை ஏற்கனவே விரும்பினியா?” என்று தன் மனதில் இருந்து சந்தேகத்தை கேட்டார்.

 

 ஒரு கணம் ஆழப் பெருமூச்சு அறிந்தவன், “அதை அப்புறமா பாத்துக்கலாம், இப்போதைக்கு இந்த விஷயம் அவளுக்கு தெரிய வேணாம், அவ மனசுல சில காயங்கள் இருக்கு இல்லையா, அதெல்லாம் சீக்கிரம் ஆறின பிறகு அதுக்கப்புறம் பார்க்கலாம், ஆனா இந்த வீட்டுக்கு மருமகளா என் மனைவியா வருவா” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான். 

 

என்னதான் கொஞ்சம் இயல்பாக இருந்தாலும் முழுதாக அவனால் அவர்களிடம் தன் இறுக்கத்தை தளர்த்தி பழக முடியவில்லை. அவர்கள் எப்போதும் போல் இயல்பாகத்தான் இருக்கிறார்கள் அவனிடம் அந்த மரியாதை நிமித்தம் ஒதுங்கி இருந்தார்கள். இப்பொழுது அவர்கள் இயல்பாக பேச நினைத்தாலும் அவனால் அது முடியவில்லை. 

 

ஆனால் ஆத்மிகா விடம் அப்படியவனால் இருக்கவே முடியவில்லை, அவளை பார்க்கும் பொழுது அணைக்க வேண்டும், முத்தமிட வேண்டும் தோன்றும் உணர்வுகளை எல்லாம் அவனால் என்னவென்று சொல்வது, அப்படியே தூக்கிக் கொண்டு வந்தாலும் வந்துவிடுவான்.

 

 ஆனால் அவளின் மனநிலையை கருதி அமைதியாக இருந்தான், இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக தன் கூட்டிற்குள் இருந்து வெளியே வர ஆரம்பித்திருக்கிறாள், திரும்பவும் வேதாளம் முருங்கை மரம் ஏறி விட போகிறது என்று நினைத்தபடி பெட்டில் சாய்ந்தான்.

 

 அதே நேரம் அவன் வாங்கித் தந்த அனைத்தையும் கொண்டு வந்து பெட்டின் மீது வைத்து யோசனையுடன் நின்று இருந்தால் ஆத்மிகா அவள்,

 

 கடவுளே அவர் யார் கிட்டயும் அப்படி பழக மாட்டார், இது என்ன அதிசயமா இருக்கு, சரியான மிலிட்டரி ஆஃபிஸர்னுல நினைச்சேன், கரெக்டா எனக்கு பிரச்சனை வரும் போதெல்லாம் வந்து ஹெல்ப் பண்றார் என்று அவளையும் அறியாமல் அவள் எண்ணங்கள் எல்லாம் விஜயை சுற்றி இருந்தன.

 

 அதுவும் அன்று தான் சொன்னாளே, கைய புடிச்சா கற்பு போய்டாதுனு, அதை இன்னுமா ஞாபகம் வச்சிருக்கான் என்பது போல் நின்றிருந்தாள்.

 

 வெளியே அப்பொழுது அவளை, “ஆத்மிகா உன்னை பார்க்கறதுக்கு ஒரு ரெண்டு பேர் வந்திருக்காங்க” என்றவர் யாருன்னு தெரியவில்லை.

 

 அவளுக்கு, “யாரு” என்று யோசனையும் கேட்டாள். மீண்டும் சுரேஷா என்று ஒரு கணம் திக் என்று இருந்தது.

 

அவர்களை அழைத்து வந்து பேசிக்கொண்டு வெளியே வந்தாள் ஆத்மிகா.

 

 ஆம் அவள் தம்பியும் அம்மாவும் வந்திருந்தார்கள், “என்னடி பண்ணிக்கிட்டு இருக்க நீ? மாப்பிள்ளை வீட்ல என்னென்னமோ சொல்றாங்க?”..

 

“ அம்மா” என்று பல்லை கடித்தபடி கூறினாள் அவள்.

 

“ என்னடி அம்மா, ஒழுங்கா மாப்பிள்ளையோட சேர்ந்து வாழும் வழிய பாரு, என்ன வேலை பண்ணிட்டு இருக்க,?”

 

 “ஒரு பொண்ணோட தொடர்புல இருக்காரு, என்னால அவர் கூட வாழ முடியாது” என்றதும்,

 

 “ஆம்பிளனா அப்படித்தான் இருப்பாங்க” என்று அவள் சகோதரன் கூறவும், ஆத்திரமாக வந்தது,

 

 “ஓஹோ நீ அப்படி இருந்துட்டு உன் ஒய்ஃப் கூட இருக்கிற ஆளான பாரு” என்று சொல்ல,

 

“ ஏய்..” என்று அவன் பல்லை கடிக்கவும், தெரியுதில்ல அதுவும் இல்லாம அப்படியே கொஞ்சம் பாலினம் மாற்றி யோசிச்சு பாருங்க, உன் ஒய்ப் யார் கூடவோ ரிலேஷன்ஷிப்ல இருந்துட்டு உன்னோடும் பழகிட்டு இருக்கானா சும்மா இருப்பியா?” என்று கடுப்புடன் கேட்டாள் ஆத்மிகா.

 

“ ஏய் என்னடி வாய் ஓவராயிடுச்சா, எங்ககிட்டயே இப்படி பேசுற, மாப்பிள்ளை கிட்ட எவ்வளவு பேசுவ?” என்று அம்மாவும் பேச,

 

“ ஐயோ போதும் உங்க மாப்பிள்ளை புராணம், முதல்ல எனக்கு புருஷனா இருக்கணும் அப்புறம் தான் மாப்பிள்ளை, என் கழுத்துல இருக்குற தாலியை கூட கழட்டிட்டேன் நான், விவாகரத்தும் கிடைத்துவிடும், இன்னொரு முறை இப்படி எல்லாம் பேசிக்கிட்டு இருந்தீங்கன்னா, நான் அப்புறம் மனுஷியா இருக்க மாட்டேன்” என்றாள்.

 

“ஏய் உன்னால, எனக்கு மானமே போது, எங்கேயும் தலை காட்ட முடியல ,உன் பொண்ணு வந்துட்டாளமே வந்துட்டாளாமே எல்லாரும் கேட்கும்போது எப்படி இருக்கு தெரியுமா, உன்னை அப்படியா வளர்த்தேன்” என்று கேட்கவும்,

 

“ ஆமா நீங்க அப்படியா வளர்த்தீங்க, என்ன பண்ணாலும் அட்ஜஸ்ட் பண்ணிட்டு தானே சொல்லி வளர்த்தீங்க, என்னால இதுக்கு மேல தாங்க முடியல உங்க பொண்ணு செத்துட்டான்னு கூட சொல்லிக்கோங்க, எனக்கு யாரும் வேணாம், நிம்மதி தான் வேண்டும், என்னைய விட்ருங்க” என்று கூறினாள், 

 

“ஏய் என்னடி திமிரா?” என்று கோவமாக கேட்டார்,  

 

 இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே அங்கே வந்தார்கள் சுரேஷும் அவனுடைய அம்மாவும், அவர்களைப் பார்த்ததுமே அவளுக்கு ஒரு கணம் திக் என்று தான் இருந்தது. 

 

அவன் தான் வெளியிடத்தில் தன்னை இழிவாக நடத்துவதை ஒரு பொருட்டாகவே கருத மாட்டானே, அதனால் வாய்க்கு வந்ததை பேச ஆரம்பித்தான்.

 

 “ஏன்டி உனக்கு எவன் கூடவாவது போகணும்னா, அது சொல்லிட்டு போக வேண்டியது தானே, அதை விட்டுட்டு சும்மா இருக்கறதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கியா? என்ன டிவோர்ஸ் கொடுக்கிறியா? நீ சைன் போட்டு, நானும் சைன் போட்டா மாதிரி ஃபோர்ஜரி வேற பண்றியா?” என்று கோபமாக கேட்டான்.

 

* என்ன என்பதை போல் அதிர்ந்து பார்த்தாள் அவள், எனக்கு ஒரு காபி வந்துடுச்சு விவாகரத்து நடந்த மாதிரி, என்னடி பண்ணிக்கிட்டு இருக்கா என்று அவளின் தலைமுடியை அவன் பிடிக்க வர,

 

“ ஏய் அவ மேல கை வச்சா தொலைச்சிடுவேன், உன்னை..” என்ற குரலில் அனைவரும் திரும்பி பார்த்தார்கள். விஜய் மாயவன்.

 

“ஓஹோ இவன் கூட தான் போய் சுத்த போறியா?” என்று கோபமாக சுரேஷ்

கேட்கவும்,

 

 “ஆமா, அப்படித்தான் வச்சுக்கோயேன்..” என்று விஜயே எதிர்பாராத வகையில் பதில் வந்தது ஆத்மிகாவிடமிருந்து. 

 

தொடரும்.

 

 

 

 

 

 

 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top