தளிர் - 11
காலை நேரம் தென்றல் அவளின் பூ முகத்தில் பட்டு தழுவியபடி செல்ல .
எப்போதும் போல் குளித்து முடித்த தென்றலோ , ஒரு ரோஜா நிற சுடிதார் அணிந்து அவன் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினால் . அவள் முகத்திலோ ஏதோ ஒரு இனம் புரியாத புன்னகை தவழ்ந்தது. சிறு பிள்ளைப்போல் துள்ளி குதித்து அவன் வீடு நோக்கி வந்தவளோ . வீட்டின் கதவைத் தட்டிவிட்டு காத்திருக்க . கதவைத்திறந்த நபரைக் கண்டவளுக்கோ தூக்கிவாரிப்போட்டது . வந்ததோ ஒரு பெண் . அந்த பெண்ணை பார்த்தவுடன் கண்டுகொள்ளலாம் அவள் ஒரு விலை மாது என்று . அவளோ தென்றலை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்த சென்றுவிட .
தென்றலுக்கோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அல்லவா இது . அவனின் இவ்வாறான நடவடிக்கை இன்று தானே இவளுக்கு தெரிய வருகிறது . அதன் பின் தன்னை சமாளித்துக் கொண்ட தென்றலோ வீட்டின் உள் நுழைந்து தனது அன்றாட வேலைகளில் ஈடுபட . தென்றலின் மனதில் ஏதோ ஒரு கணம் கூடிப்போனது , ஆனால் காரணம் தான் விளங்கவில்லை .
தனது வேலைகளை முடித்துவிட்டு செல்லத் தயாராக. அப்போது மேல் இருந்து பாண்டியன் இறங்கி வர , அவனை கண்ட தென்றலோ சட்டென தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டால் . காரணம் அவன் அணிந்து வந்த உடை அவ்வாறு இருந்தது . ஓரே ஒரு பேன்ட் மட்டும் அணிந்தபடி கையில் ஒரு மது பாட்டிலுடன் வந்தவனோ அங்கு ஒருத்தி இருக்கிறாள் என்பதை கூட கவனிக்காமல் அப்படியே கிச்சன் உள்ளே நுழைந்தவனோ அங்கிருந்த குப்பைக் கூடையில் கையில் இருந்த மதுபாட்டிலை போட்டுவிட்டு , தனக்கு தேவையான சாப்பாட்டை போட்டு உண்ணத் தொடங்க .
தென்றலோ அவனையே பார்த்த வண்ணம் இருக்க . சட்டென அவள் பக்கம் திரும்பியவனோ என்ன என்பதுபோல் ஒற்றை புருவம் தூக்கி வினவ .
தென்றலுக்கோ ஒருநொடி திக் என்றானது . அவளோ இல்லை என்று தலையாட்டிவிட்டு அங்கிருந்து செல்லத் தயாராக.
போகும் அவளை பார்த்த பாண்டியனோ ஏய் என்று அழைக்க .
அவளோ என்ன என்பது போல் அவனை திரும்பி பார்க்க.
பாண்டியனோ அவளையே அழுத்தமாக பார்த்தபடி அன்னைக்கு நடந்ததுக்கு சாரி , அது ஏதோ தெரியாம நடந்தது என்றுவிட்டு அவன் தான் விட்ட வேலையான சாப்பிடும் வேலையை செய்யத்தொடங்க .
தென்றலுக்குத்தான் ஏதோ போல் ஆனது . இதற்கு மேல் இங்கிருக்க கூடாது என்று அங்கிருந்து அகன்றால் அவள் .
இவ்வாறாக வாரத்தில் ஒரு நாள் யாரோ ஒரு பெண் வந்துவிட்டு செல்வது வாடிக்கையாகிப் போக , தென்றலுக்கோ ஏதோ ஒன்று தன் கைவிட்டு செல்வது போல் ஒரு இனம் புரியாத உணர்வு அவளை ஆட்கொள்ளத் தொடங்கியது . அன்று காலை உணவு எடுத்து வைத்துக் கொண்டிருந்த தென்றலோ அவனின் போனின் உரையாடலை கேட்டபடி இருக்க .
பாண்டியனோ யாரிடமோ தனக்கு தேவையானதை கேட்டபடி டேபிளுக்கு வந்தமர . அவளோ அவனுக்கு சாப்பாட்டை பரிமாறத்தொடங்க .
ஒருவாறாக தைரியத்தை வர வைத்துக் கொண்ட தென்றலோ பாண்டியனிடம் இது தப்பு இல்லையா சார் என்று தயங்கிய படி கேட்க .
பாண்டியனோ அவளை என்ன என்பதுபோல் சாப்பிட்டபடி நிமிர்ந்து பார்க்க .
அவனின் பார்வையில் சற்று பயம் ஏற்பட்டாலும் தன்னை சமாளித்துக் கொண்டு . அது இப்படி பொண்ணுங்க கூட இருக்கிறது தப்பு இல்லையா சார் என மீண்டும் அதையே கேட்க .
பாண்டியனோ இது உனக்கு தேவையா என்பதுபோல் பார்த்தவனோ தப்பு இல்லையே என்று அங்கிருந்து அகன்றுவிட .
தென்றலுக்கு அவனது இப்படியான பதில் சற்று அதிர்ச்சியை கொடுத்தாலும் . தன்னை சமாளித்தவளோ மீண்டும் அவனிடம் ஏதோ சொல்வர .
அவளை தடுத்த பாண்டியனோ ஏய் stay your limit , don't cross, you understand என்று அவளை ஒரு அழுத்தமான , அதே நேரம் அதட்டலுடன் சொல்லிவிட்டு செல்ல .
தென்றலுக்கு தான் அவனது இவ்வாறான பேச்சு என்னுமோ போல் ஆனது , அதே நேரம் அவன் தவறு செய்வதை மனமும் ஏற்கவில்லை . அவளுக்கே புரியா உணர்வு அல்லவா இது .
அவன் மேல் இருக்கும் உணர்வு என்ன என்று புரியும் நாளும் வந்தது . அன்று ஒரு நாள் தென்றலோ அங்கு இருக்கும் ஊஞ்சலில் ஆடியபடி இருந்தவளோ அருகில் இருக்கும் கிணற்றுக்குள் இருந்து ஏதோ சத்தம் கேட்க . அவளோ வேறு எங்கோ சத்தம் வருகிறது என்று சுற்றியும் தேடி பார்த்தவளோ சத்தம் கிணற்றில் இருந்து தான் வருகிறது என்பதை அறிந்தவளோ அருகில் சென்று பார்க்க கிணற்றிலோ ஒரு ஆடு விழுந்து கத்திக் கொண்டிருக்க , தென்றலுக்கோ என்ன செய்வதென்றே தெரியாமல் சட்டென கிணற்றில் தாவி குதித்துவிட. அப்போதுதான் அவளுக்கு ஒன்று விளங்கியது தனக்கு நீச்சல் தெரியாது . தென்றலோ தண்ணீர் நீந்த முடியாமல் கத்த தொடங்க .
அவளோ இரண்டு முறை நீரில் மூழ்கி மேல் எழுந்தவளோ காப்பாத்துங்க, காப்பாத்துங்க என்று கத்தியவளோ ஒரு கட்டத்திற்கு மேல் நீரின் உள் மூழ்கத் தொடங்கிய நேரம் , யாரோ ஒருவர் அவளை இடையோடு சேர்த்தணைத்தபடி மேல் செல்வது மட்டும் தெரிந்தது .
பாண்டியனோ அங்கு இருந்த மாடியில் உடற்பயிற்சி மேற்கொண்டவனை கலைத்தது தென்றலின் சத்தம் . கிணற்றின் பக்கம் சத்தம் வருவது அறிந்து அங்கு சென்று பார்க்க. அப்போதுதான் தென்றல் நீரின் உள் மூழ்கும் நேரம், கிணற்றில் குதித்து அவளை மேல் தூக்கி வந்தவனோ அவளின் கன்னம் தட்டி எழுப்பத் தொடங்க .
அவளோ ஒரு பெருமூச்சுடன் இறுமியபடி விழி திறந்தால்.
பாண்டியனோ ஏய் நீ ஓகே தான என்று கேட்க . அவளோ ஆம் என்பது போல் தலையாட்ட.
பாண்டியனோ அறிவு இருக்கா உனக்கு , நீச்சல் தெரியாம போய் தண்ணீல குதிச்சு இருக்க என்று அவளை திட்டத் தொடங்க .
அவளோ அது ஆடு தெரியாம உள்ள விழுந்துடுச்சு அதான் நான் போய் விழுந்துட்டேன் என்று சற்று பயத்துடன் திக்கி திணறி கூற .
பாண்டியனோ ஆடு போனா நீயும் போய் விழுந்து வைப்பியா , அறிவிருக்கா என்று திட்டிவிட்டு அவளின் கைபிடித்து தூக்கி விட்டவனோ அங்கிருந்து அகன்றான் .
தென்றலோ போகும் அவனையே விழி அகலாமல் பார்க்க.
அன்றும் ஒரு பெண் வீட்டின் உள் நுழைய அவளைத் தடுத்த தென்றலோ இனி நீ இங்கு வரவேண்டாம் என்று அவளை அனுப்பிவிட .
அதே நேரம் பாண்டியனோ தனக்கு வர வேண்டிய பெண் இன்று வரவில்லை என்று அவனுக்கு வாடிக்கையாக அனுப்பும் நபரிடம் கேட்க . அவனோ அனைத்தையும் கூறிவிட .
பாண்டியனுக்கோ கோபம் தலைக்கேறியது, அதே கோபத்துடன் கிச்சன் நோக்கி செல்ல .
தென்றலோ அப்போதுதான் சமையல் முடித்துவிட்டு இருக்கும் பாத்திரங்களை கழுவிக்கொண்டு இருக்க , அங்கு வந்த பாண்டியனோ அவளின் முழங்கையை பிடித்து தன்னை நோக்கி திருப்பியவனோ .
ஏய் உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க ,ஹான் யார கேட்டு இப்படி பண்ணிட்டு இருக்க என்று அவளிடம் கத்தத் தொடங்க .
அவளோ யார கேட்கனும் என்று அவனிடம் இருந்து தன் கையை விலக்கிக் கொண்டவளோ , மீண்டும் தன் வேலையை செய்யத் தொடங்க .
பாண்டியனுக்கோ கோபம் எல்லை கடக்கத் தொடங்கியது .
பாண்டியனோ அவள் கைபிடித்து ஹாலுக்கு வெளியில் இழுத்து வந்தவனோ ஏய் முதல்ல நீ யாருடி , இதெல்லாம் பண்ண , உனக்கு என்னடி உரிமை இருக்கு என்று கோபத்தில் அவளின் கையை அழுத்தி பிடிக்க .
அவனின் கோபத்தில் சற்று பயம் தோன்றினாலும் , அதை மறைத்துக் கொண்டவளோ சார் இதுலாம் தப்பு சார் என்று மீண்டும் அதையே சொல்ல . அவனோ அவளை உறுத்து விழிக்க .
அவனோ இதுக்கு மேல என் விஷயத்துல தலையிட்ட உன்ன என்ன பண்ணுவேன் எனக்கே தெரியாது என்று அவளின் கையைப்பிடித்து வீட்டின் வெளியே தள்ளிவிட .
தென்றலோ நீங்க எத்தனை பேர வரவச்சாலும் எல்லாரையும் நான் இப்படித்தான் துரத்துவேன் என்று அவள் கத்தி கூற .
ஏய் யாருடி நீ நான் என்னுமோ பண்ணுவேன் , அதை சொல்ல நீ யாருடி , உனக்கு என்னடி வந்தது என்று கேட்க.
தென்றலோ ஏன்னா நான் உங்கள காதலிக்கிறேன் சார் என்று கத்திக் கூற .
பாண்டியனுக்கோ ஒருகணம் அதிர்ச்சி தான் என்றாலும் அடுத்த கணம் தன்னை சமாளித்துக் கொண்டவனோ என்னடி இது புது நாடகமா , என்று நக்கல் புன்னகையுடன் கேட்டவனோ.
அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவனோ காதலிக்கிறீயா அப்படி என்ன எத்தனை நாள் தெரியும் , என்னப்பத்தி என்னத் தெரியும் காதலிக்கிறன்னு சொல்ற என்று அவன் அவளை அழுத்தமாக பார்க்க.
தென்றலோ எந்த பதிலும் சொல்லாமல் அவனையே பார்க்க .
தொடர்ந்த பாண்டியனோ அட உன் பாட்டிக்கு உதவி பண்ணதால என் மேல காதல் வந்துடுச்சா என்று நக்கலுடன் கேட்க .
தென்றலோ எதுவும் சொல்லாமல் அப்படியே நிற்க .
அவளை அழுத்தமாக பார்த்த பாண்டியனோ இனிமே இங்க நீ வரவேண்டாம் என்று அவன் உள்ளே செல்லத் தயாராக.
அவனை அழைத்த தென்றலோ நீங்க என்ன என்ன சொன்னாலும் வருவேன் சார் , எனக்கு உங்கள பிடிச்சு இருக்கு , எப்ப பிடிச்சது , எதனால பிடிச்சது அப்படிங்கிறது எல்லாம் எனக்கு தெரியாது , ஆனா பிடிச்சு இருக்கு என்றவளோ அங்கிருந்து நடக்கத் தொடங்கினால்.
போகும் அவளை விழிகளில் ஒரு அழுத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் .
தொடரும் ...
