தளிர் - 10
வானில் மதிமகளோ இரவில் தன் காதலனை தேடியபடி மேக கூட்டங்களில் உலா வந்து கொண்டிருக்க , அவள் உலா வரும் பாதையில் முல்லை மலர்கள் மலர்ந்து கொட்டி கிடப்பது போல் நட்சத்திரங்கள் மலர்ந்து வழி நெடுகிலும் கொட்டி அவளுக்கு வழித்துணையாக , அவளோ தன் காதலனை பார்க்கும் வரை உலா வருவேன் என்பது போல் சுற்றிக் கொண்டிருக்க .
அதே நேரம் அவளது வாயை மூடி அவளுடன் படுக்கையில் சரிந்தவனை
தன் பலம் கொண்டு அவனிடம் இருந்த பிரிந்தவளோ அவனை விட்டு விலகி அமர . அவனோ மீண்டும் அவளை அணைத்துக் கொண்டு அவள் என்ன என உணரும் முன் கன்னம் , நெற்றி, கழுத்து , இதழ் ,மார்பு என அனைத்து இடங்களிலும் போதையில் முத்தமிட்டபடி படுக்கையில் சரிய . ஒரு கட்டத்தில் அவளும் தன்னை அறியாமல் அவனை முத்தமிடத் தொடங்க, இருவரது இதழும் இதழ் போரைத்தொடங்கியது . நீண்ட நாள் தவிப்பு , பல நாள் ஏக்கம் என அனைத்தும் அந்த இதழ் முத்தம் பிரதிபலித்தது . அவனது கைகளோ இடையில் வந்து இளைப்பாற , அவளும் அவனது சட்டையை அழுந்த பற்றியபடி இருக்க .
அவர்களது இதழ் முத்தத்தை ஜன்னல் வழி கண்ட பிறைநிலவோ வெட்கத்தில் மேகம் என்னும் திரை கொண்டு தன்னை மறைத்துக் கொள்ள .
அவளோ அவன் முத்தத்தில் சிறிது நேரம் மயங்கி இருந்தாலும் , அதன் பின் நிதர்சனம் உரைக்க , சட்டென அவனிடம் இருந்து விலகி அமர்ந்தவளோ அவனை விட்டு விலக பார்க்க
செழியனுக்கோ குழந்தையிடம் இருந்து சாக்லேட்டை பிடுங்குவது போல் தவிப்பாக மீண்டும் அவளை தன்னோடு சேர்த்தணைத்தபடி முடிந்த இடத்தில் இருந்து மீண்டும் தொடங்க.
இதழோ ஒருகட்டத்தில் அவன் அசந்த நேரம் அவனை விட்டு விலகி அமரந்தவளுக்கோ மூச்சு வாங்க அவனை முறைக்க.
செழியனோ அதை எல்லாம் எங்கு கண்டான் ஏய் எதுக்குடி இப்ப தள்ளிப் போற என்று மீண்டும் அவளை அணைக்க வர .
அவளோ அவன் வாயை தன் கை கொண்டு மூடியவளோ சத்தம் போடாதீங்க யாராவது வந்துட போறாங்க என்று பயத்துடன் அறையின் வாசலையே பார்க்க .
அவனோ நான் ஏன்டி சத்தம் போடக்கூடாது என்று மீண்டும் குரல் எழுப்ப .
அவளோ அவனையே கெஞ்சுதலாக ஒரு பார்வை பார்க்க .
அவள் பார்வையில் என்ன கண்டானோ அப்படியே அவனும் அமைதியாகிவிட .
இதழோ நீங்க எப்படி இங்க வந்தீங்க என்று மெதுவாக கேட்க .
செழியனோ நான் எப்படியோ வந்தேன் என்று போதையில் உளறத் தொடங்க .
இதழுக்கோ அப்போதுதான் ஒன்று புரிந்தது அவன் போதையில் இருக்கிறான் என . இல்லையென்றால் இவன் நடவடிக்கை வேறாக அல்லவா இருக்கும் .
அவளோ அவனை பார்த்து குடிச்சு இருக்கீங்களா என்று கேட்க
செழியனோ ஆமாடி குடிச்சு தான் இருக்கேன் என்னடி பண்ணுவ என்று அவனின் கைகளோ அவளது இடையை பிடிக்க வர.
அவனின் கைகளை பிடித்துக் கொண்ட
இதழோ ஏங்க இப்படி வந்து பிரச்சனை பண்றீங்க என்று பயத்துடன் கேட்க .
செழியனோ நீதான்டி பிரச்சனை பண்ற , உன்னால தான்டி நான் இப்படி இருக்கேன் , எல்லா பிரச்சனைக்கும் நீதான்டி காரணம் ராட்சசி என்று அவன் போதையில் சத்தத்துடன் கூற .
இதழுக்கோ பயம் யாராவது வந்து விடுவார்களோ, இவனை கண்டால் என் நிலை அவ்வளவு தான் என்று தவிப்பாக வாசலையே பார்த்தவள் இவனை எப்படியாவது இங்கு இருந்து அனுப்பியாக வேண்டும் என்பதில் மட்டும் குறியாக இருக்க .
இதழோ முதல்ல நீங்க இங்க இருந்து கிளம்புங்க என்று அவனை வெளியே அனுப்ப முயல .
அவனோ அவளை தன் அருகில் அமர வைத்து அவள் மடியில் தலைவைத்து படுத்துக் கொள்ள .
இதழுக்கோ அவனது இப்படியான நடவடிக்கையில் தூக்கிவாரிப்போட்டது . அவனோ அவள் மடியில் ஏதோ தலையணை போல் தலைவைத்துப்படி அவள் வயிற்றில் முகம் புதைத்துக் கொள்ள, அவளுக்கோ என்ன செய்வதென்றே புரியா நிலை . அவனின் மூச்சுக்காற்று அவள் வயிற்றில் பட பட பெண்ணவளுக்கு சொல்ல முடியா உணர்வு .
இதழோ அவனை விலக்க போராடா அவனோ நன்றாக அவளை இடையோடு கட்டிக் கொண்டு படுத்துக் கொள்ள .
சிறிது நேரம் அவளும் அப்படியே இருக்க , மீண்டும் அவன் முகம் பார்த்தவளோ என்ன நினைத்தாலோ அவனது தலையை தென்றல் தீண்டுவது போல தன் பூவிரல் கொண்டு கோதத் தொடங்கினால் . அவன் முகத்தை ஆழ்ந்து நோக்கினால் படர்ந்த நெற்றி , நெற்றியின் ஓரத்தில் ஒரு மச்சம், அடர்ந்த புருவம் , போதையினால் சிவந்த கண்கள் , இப்போது முடி இருக்க , கூர் நாசி , தடித்த இதழுக்கு மேல் இருக்கும் அடர்ந்த மீசை , இதழோ அவன் மீசையை முறுக்கிவிட்டு அவன் கன்னம் கிள்ளி முத்தம் வைக்க , அவனோ நன்றாக பூனை சொகுசாக இடம் கண்டால் சுருண்டு கொள்ளுமே அதுபோல் அவள் மடியில் சுருண்டு கொள்ள .
இதழுக்கோ மெல்லிய புன்னகை அவனை அணைத்து பிடித்தபடி அவன் முகம் பார்த்தவாறு இருந்தவளோ என்ன நினைத்தாலோ அவனது நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தமிட .
அவள் கண்களில் இருந்து இரு சொட்டு கண்ணீர் வழிந்து அவன் உச்சந்தலையில் விழ . தன் கண்ணீரைத் துடைத்தவளோ அவனையே விழி அகலாமல் பார்க்க.
ஒற்றை முத்தம் சொன்னதோ அவளின் ஏக்கத்தை !
எத்தனை நாள் தவிப்பு இந்த முகத்தை இனி பார்க்க மாட்டோமா ? , இந்த அணைப்பு இனி தனக்கு கிடைக்காதா ? என்று ஏங்காத நாட்கள் இல்லை . ஆனால் அன்று அவனை அலுவலகத்தில் பார்த்தபோது அப்படி ஒரு மகிழ்ச்சிஅவளிடம் . ஆனால் அவன் கேட்ட வார்த்தைகள் தானே அவளை வாள் கொண்டு கூறு போட்டது , அதற்கு காரணமும் அவள் தானே . இதழோ இவ்வாறு நினைத்தபடி இருக்க.
அவனிடம் சிறு அசைவு தெரிய மீண்டும் மன்னனின் சிகையை மயிலிறகு வருடுவது போல் வருடத் தொடங்கினால் .
அவளது தலைகோதலிலும் , நெற்றி முத்ததிலும் அவனது இதழில் ஒரு மெல்லிய புன்னகை இழையோடியது .
இதழுக்கோ அவன் முகம் பார்க்க , பார்க்க வேதனையே மிஞ்சியது . இது அனைத்திற்கும் காரணம் நான் தானே என்பதை மட்டும்உணர்ந்து கொண்டால்.
சிறிது நேரத்தில் கண் விழித்த செழியனோ அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்து பசிக்குதுடி என்று வயிற்றை தடவ .
இதழுக்கோ அய்யோ என்றானது .
அவளோ அவனை படுக்கையில் படுக்க வைத்துவிட்டு கிச்சன் நோக்கி செல்ல எத்தனிக்க ,
அவனோ அவள் கைப்பிடித்து எங்க போற என்று போதையில் வாய் குலறியபடி கேட்க.
இதழோ சாப்பாடு எடுக்க என்று அவனை விலக்கி விட்டு கிச்சன் உள் நுழைந்து சாப்பாட்டை எடுத்து வந்து அவனிடம் நீட்ட .
அவனோ வேண்டாம் என மறுப்பாக தலையாட்டிவிட்டு படுக்கையில் இரு கைகளை பின்பக்கமாக ஊன்றியபடி , கால்களை ஆட்டியபடி, போதையில் தலை குனிந்தபடி
இருக்க .
இதழோ இது தெரிந்த ஒன்றுதான் என அவளே சாப்பாட்டை பிசைந்து ஊட்டத் தொடங்கினால் .
செழியனோ சாப்பாட்டோடு அவளது விரலையும் சேர்த்து கடிக்க .
இதழோ வலிக்குது என்று முகத்தை சுருக்க .
செழியனோ அவளை ஆழ்ந்து பார்த்தபடி எனக்கும் வலிக்குதுடி என்று தன் நெஞ்சை தடவியபடி சொல்ல .
இதழுக்கோ அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது புரிய வர , அவளோ அவன் முகம் பார்க்காமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள .
அவனோ அவள் ஊட்ட ஊட்ட ஒவ்வொரு வாயாக வாங்கிக் கொண்டு , அவளிடம் வம்பு செய்ய .
இதழுக்கோ அவனை சாப்பிட வைப்பதற்குள் போதும் போதும் என்றானது . ஒரு வழியாக ஊட்டி முடித்தவளோ அவனை அங்கிருந்த அனுப்ப முயற்சிக்க.
அவனோ சட்டமாக கட்டிலில் அமர்ந்து கொண்டவனோ அவளையும் தன் மடியில் அமர்த்திக் கொள்ள .
இதழோ அவனிடம் இருந்து விலக பார்க்க , அவனோ அவளை இடையோடு நன்கு வளைத்துக் கொண்டவனோ அவள் முகம் பார்த்து ஏன்டி அப்படி பண்ண , என்னால நம்ப முடியலடி நீயா இப்படி பண்ண அப்படின்னு என்று வருத்தத்துடன் கேட்க .
இதழோ அவனை ஆழ்ந்து நோக்க , அதே நேரம் கிச்சன் உள்ளே யாரோ வருவது போல் இருக்க , இதழுக்கோ தூக்கி வாரிப்போட்டது , அவளோ அவன் வாயை தன் கைகொண்டு மூடியவளோ , அவனை அமைதியாக இருக்கும்படி சைகை செய்ய .
செழியனோ அவளை தனக்கு கீழ் கொண்டுவந்து அவள் மேல் படர்ந்தவனோ , அவள் மார்பில் முகம் புதைத்து , இடையோடு அணைத்துக்கொண்டு அப்படியே உறங்கத் தொடங்க .
இதழுக்கு இதற்கு மேல் இவனை இங்கிருந்து அனுப்புவது என்பது இயலாத காரியம் என்று அவனை அப்படியே விட்டுவிட.
அவனோ நன்றாக அவளை இறுக்கி அணைத்துக் கொண்டு உறங்கியும் போனான்.
ஏதோ சத்தத்தில் உறக்கம் கலைந்த செழியனோ அப்போதுதான் ஒன்றை உணர்ந்தான் தான் இருக்கும் இடம் தன் வீடு இல்லை என்று .
கண்கள் மங்கலாக தெரிய அடித்த போதை அனைத்தும் இறங்கியது , தலையோ வலி எடுக்க , தலை தாங்கியபடி நிமிர்ந்து பார்த்தவன் கண்களில் விழுந்தது மீன் குஞ்சுபோல் சிறிதாக இதழ் திறந்து , தாயின் மேல் குழந்தை படுத்தால் அதனை விழுந்து விடாதபடி அணைத்து பிடிப்பாலே அதுபோல அவனை அணைத்து பிடித்து இருந்த இதழே தெரிந்தால் .
சிறிது நேரம் அவளது முகத்தையே ஆழ்ந்து நோக்கினான் . அவள் செய்த அனைத்தும் மீண்டும் நினைவுக்கு வர , அவனது முகமோ மீண்டும் கடுமையை தத்தெடுத்துக் கொண்டது .
சட்டென அவள் கையை உதறித்தள்ளிவிட்டு எழுந்தவனோ அறையை விட்டு வெளியே செல்ல பார்க்க.
அவன் உதறியதிலேயே முழித்துக் கொண்ட இதழோ , அவன் கைபிடித்துக போக விடாமல் தடுக்க .
செழியனோ அவளை முறைத்துவிட்டு அறையை திறந்து வெளியே செல்ல
இதழோ அந்த பக்கம் வேண்டாம் இந்த பக்கம் போங்க என்று அவனை தவிப்புடன் நோக்க .
செழியனோ நான் ஏன்டி நீ சொல்றத கேட்கனும் என்று முன் வாசல் வழியாக செல்லத் தொடங்க.
அதே நேரம் ஹாலில் யாரோ இருப்பது போல் தெரிய , இதழுக்கோ இன்று அனைத்தும் முடிந்தது என்பது போல் அவன் பின்னோடு ஓடி வந்தால் .
அங்கு ஹாலில் இருந்த நபரை கண்ட இதழுக்கோ தூக்கிவாரிப்போட்டது .
அந்த நபரோ செழியனை விழி விரிய பார்த்தபடி இருக்க , அதே நேரம் அவரது பார்வை இதழின் மீதே அழுந்த படிந்தது .
தொடரும் ...
Review please 🙏
மற்ற கதைகள்
அரசனோ என் அரக்கனோ
மாறனின் மலரிவள்
