Share:
Notifications
Clear all

அத்தியாயம் - 8

 

(@aval-porsuvai)
Member Moderator
Joined: 9 months ago
Messages: 9
Thread starter  

தளிர் - 8  

 

சூரியன் மறைந்த நேரம் என்பதை உணர்த்தும் விதமாக மெல்ல இருள் சூழத்தொடங்கியது . அனைவரும் தங்கள் பணி முடிந்த வீடு நோக்கி படையெடுத்தனர் . அது பஸ் ஸ்டாண்ட் என்பதை உணர்த்தும் விதமாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்திற்கு செல்வதற்காக காத்துக் கொண்டிருந்தனர் . அதே போல் இதழும் அங்கு வந்தமர அவளது நினைவுகளோ இன்று காலை நடந்தது அவளது கண் முன் நிழலாடியது . 

 

செழியனின் பார்வை முழுவதும் அவளது தாலி மீதே நிலைத்து இருந்தது.அவளோ என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்து கொண்டிருக்க . 

 

அவனோ அதை கையில் எடுத்தவனோ இது எப்போ நடந்தது , இது எத்தனையாவது தாலி என்று அவன் அவளை நக்கல் புன்னகையுடன் பார்க்க.

 

அவன் ஒவ்வொரு வார்த்தையும் பெண்ணை வாள் கொண்டு வெட்டுவது போல் அல்லவா இருந்தது . அவளோ விழிநீர் கலங்க அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க . 

 

அவனோ என்னடி இதுக்கு பதில் சொல்லு என்று அவன் கேட்க .

 

அவளோ அவனை விட்டு விலகி அங்கிருந்து செல்ல , அவள் பின்னோடு வந்தவனோ அவள் கைபிடித்து கேட்ட கேள்விக்கு பதில் வேணும் என்று கோபத்தில் அவள் கையை அழுத்திக் கூற .

 

அவளோ அவனிடம் இருந்து கையை உருவிக்கொண்டு அது உங்களுக்கு தேவையில்லாதது மிஸ்டர் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டால் . 

 

போகும் அவளையே கண்களில் அனல் பொங்க பார்த்துக் கொண்டிருந்தான் . 

 

இதழுக்கு மனதில் இனம் புரியாத வலி ஊடுருவி அவளை கொன்று கூறு போட்டது , என்ன வார்த்தை கூறுகிறான் . கண்களில் கண்ணீர் வழிந்த வண்ணம் இருக்க . அவளது மனமோ நீ தானே இதற்கு எல்லாம் காரணம் அப்பொழுது நீ தான் இதனை அனுபவித்து ஆக வேண்டும் என்று கூற .

 

அங்கு கேடினில் அமர்ந்தவளுக்கோ அடுத்து அடுத்து வேலைகள் அவளை கரம் நீட்டி இழுத்துக்கொள்ள, அவளது எண்ணங்களுக்கும் அத்துடன் முற்றுபுள்ளியும் வைக்கப்பட்டது . 

 

அவளது எண்ணத்தை கலைத்தது அங்கு வந்து நின்ற அவள் செல்லும் பஸ் . அதுவோ பார்ப்பதற்கு ஏதோ ஊரில் உள்ள அனைத்து கூட்டமும் இங்கு தான் இருப்பது போல் அவ்வளவு கூட்டம் அதில் இருந்தது . 

 

இதழோ எப்படியோ அடித்து பிடித்து உள்ளே ஏறிவிட்டால். உள்ளே ஏறி சென்றவளோ ஒரு கம்பியை பிடித்துக்கொண்டு நின்றுவிட்டால் . 

 

அதே நேரம் செழியனோ வெறி பிடித்தவன் போல் அங்கு இருக்கும் பொருட்களை எல்லாம் உடைத்தவனோ அங்கு இருந்து அதே வேகத்துடன் காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டுவிட்டான் . அவனது நண்பன் கதிரோ அவனது செயல்களை புரியாமல் பார்த்தவாறு இருக்க . அதே சமயம் கதிருக்கோ ஒரு அழைப்பு அதை எடுத்து காதுக்கு கொடுத்தவனோ இன்னும் ஒரு பத்து நிமிசத்துல வந்துடுறேன் என்றுவிட்டு அங்கிருந்து அகன்றான் . 

 

செழியனோ வீடு வந்து சேர அவனை வரவேற்றது என்னவோ அவனது மற்றொரு நண்பனான ரகு .

 

அவனோ டேய் செழியா எப்படி இருக்க என்று அவனை அணைத்து கொள்ள . அப்போதுதான் செழியனும் கவனம் கலைந்து நண்பனை அணைத்து கொண்டான் . 

 

என்னடா செழியா எப்படி போகுது என்று இருவரும் தங்களை பற்றி பேசிக் கொள்ள . செழியனும் எல்லாம் நல்லா தான்டா போகுது , உன்னோட பிசினஸ் எப்படி போகுது என்று கேட்க .

 

ரகு நல்லா தான் போகுது என்று ஒருவித சலிப்புடன் கூற .

 

செழியனோ ஏன்டா இப்படி சொல்ற என்றுவிட்டு அங்கிருக்கும் கிச்சன் உள்ளே நுழைந்தவனோ இருவருக்குமான காபியை போட்டவாறு எடுத்து வந்து ரகுவிடம் கொடுக்க , அவனோ அதை வாங்கி குடித்துக் கொண்டே அது அப்படிதான்டா என்றுவிட்டு இருவரும் வேறு பேச்சுக்கு மாறிவிட .

 

அதன் பின் இரவும் சூழ்ந்தது ரகுவோ சரி வெளிய போலாம் செழியா என்று கேட்க .

 

செழியனும் சரி எங்க போலாம் என்று அவன் கார் சாவியை எடுக்க . இருவரும் அங்கிருந்து கிளம்பி ஒரு club இன் உள் சென்றனர் . அந்த கேளிக்கை விடுதி என்பதை உணர்த்தும் விதமாக அங்கும் இங்குமாக கூச்சலும் , பாட்டு சத்தமும் காதை பிளக்க , ஒவ்வொருவரும் தங்களது கையில் ஒரு கண்ணாடி குடுவையில் தங்க நிற திரவத்தை குடித்தவாறு இருக்க .

 

அவர்களோடு வந்து சேர்ந்த கதிரோ இருவரையும் முறைத்து தள்ளினான். 

 

ஏன்டா இங்க தான் வரனுமா வேற எங்கயும் போறதுக்கு இடம் இல்லையா என்று அவர்களோடு வந்தமர .

 

ரகுவோ வேற எங்க போக சொல்ற இதுதாண்டா ஜாலி என்று அவனிடம் ஒரு மதுவை நீட்ட , அதை வாங்க மறுத்த கதிரோ வேறு ஜூசை ஆர்டர் செய்தவாறு குடிக்க தொடங்கினான் . 

 

அதன் பின் செழியனோ அங்கிருந்து எழுந்து சென்று அங்கு தலை கத்தரிக்க குடிபோதையில் ஆடிக்கொண்டிருந்த கூட்டத்தில் அவனும் கலந்து ஆடத் தொடங்க . 

 

அப்போது அங்கிருந்த ஒரு அழகியோ அவனை நெருங்கி ஆடத் தொடங்க . 

 

அவனும் புன்னகையுடன் அவளுடன் ஆட , அதே சமயம் அவனது மூலையில் ஏதோ ஒரு நினைவு 

 

ஏதோ ஒரு பூப்போன்ற கையோ அவனது சட்டை காலரை இழுத்து பிடித்து என்னை தவிர வேற எந்த பெண்ணையும் பார்க்க கூடாது என்று கண்களை உருட்டி அவனை முறைக்க , அவனும் சிரிப்புடன் அவளையே பார்க்க . 

 

பட்டென அந்த நினைவு கலைத்தது அந்த அழகியின் அத்துமீறல் அவனோ அவளை தன்னிடம் இருந்து விலக்கிவிட்டு அங்கிருந்து அகன்றான் .

 

வெளியில் வந்த செழியனுக்கு அவ்வளவு கோபம் கையில் இருந்த மதுவை முழுவதையும் குடித்துவிட்டு காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றான் .

 

ரகு , கதிரும் அவனை உள்ளே தேடிவிட்டு வெளியில் வர , அவர்கள் அவனை பிடிக்கும் முன் அங்கிருந்து அகன்றான் .

 

கதிரோ இவன் ஏன்டா இப்படி இருக்கான் இந்த கொஞ்ச நாளா இவன் இப்படி தான்டா இருக்கான் .

 

 

அதே நேரம் அங்கு இதழின் வீட்டிலோ அவளது சித்தியோ அவளது சம்பள பணத்தை வாங்கி எண்ணிக் கொண்டிருக்க . அதே நேரம் அங்கு வந்த

அவளது தங்கை தமிழோ ஏன்மா இப்படி மாச மாசம் அவகிட்ட இருந்து இப்படி பணத்தை வாங்கிக்கிற என்று கேட்க .

 

அவளது அம்மாவோ பின்ன இவள இங்க என்ன நான் சும்மாவா வச்சிருக்க முடியும் அதுக்கு தான் இந்த காசு என்று அதை எண்ணி எடுத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றால் .

 

இதழும் இங்கிருந்த சென்றுவிடுவால் தான் ஆனால் சரியான பாதுகாப்பு இருக்காதே , அதுவும் துணைக்கு யாரும் இல்லை என்றால் சொல்லவும் வேண்டுமா ? அதனால் தான் இந்த முடிவு . 

 

அங்கிருந்து அகன்ற இதழோ அன்றைய இரவு சமையலை முடித்துவிட்டு அவளது அறைக்கு சென்று படுக்கையில் விழ . அப்போது அவளது மார்பில் வந்து விழுந்த தாலி மீதே அவளது பார்வை நிலைத்து இருந்தது . இதுவரை இந்த விஷயம் இங்கு இருக்கும் யாருக்கும் தெரியாது தாலியை உடையின் உள்ளே மறைத்து போட்டுக் கொள்வாள் , இல்லையேல் காலர் வைத்து ஆடையை அணிந்து கொள்வாள் . இப்படியே இருக்க ஆனால் இன்று செழியன் கண்டு கொண்டானே அதுதான் அவளால் எப்படி என்று அறிய முடியவில்லை . அவளது நினைவு இது அவளது கழுத்தில் ஏறிய போது அவன் கூறிய நினைவுகளில் நிலைத்து இருந்தது . 

 

அன்று அவள் கண்ணோடு கண் பார்த்து அவ்வளவு காதலுடன் இதை அவளது கழுத்தில் கட்டினானே . ஆனால் அன்று இருந்த அந்த விழிப்பார்வை இன்று இல்லை அல்லவா . அதை நினைக்க நினைக்க அவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் வழிந்த வண்ணம் இருக்க , அப்படியே கண் மூடி உறங்கத் தொடங்கினால் . 

 

நடு இரவு என்பதை உணர்த்தும் விதமாக அந்த இடமே இருட்டாக காணப்பட்டது , வீதிகளில் இருக்கும் விளக்குகள் ஒன்று எரிந்தும் எரியாமலும் இருக்க , அங்கு இருக்கும் நாய்களோ யாரோ தெரியாதவன் வருகிறான் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக தங்களது அன்றாட பணியை செய்யத் தொடங்க .

 

அந்த இருட்டில் நடந்த வந்த ஒரு உருவமோ அங்கிருக்கும் ஒரு வீட்டின் சுவரில் ஏறி குதித்து கீழே இறங்கியது . அந்த உருவமோ தன் தலையை தட்டி தன்னை சமன் படுத்திக்கொண்டு , மெல்ல நடந்து சென்று அந்த வீட்டின் பின்புறம் இருந்த வாசல் கதவை மெதுவாக திறந்து உள் நுழையத் தொடங்கியது . மெதுவாக நடந்த வந்த உருவமோ அங்கிருக்கும் ஒரு அறையின் கதவை திறந்து உள் நுழைந்து கதவை சாற்றிக்கொண்டது. 

 

 

அந்த அறையோ இருட்டாக இருக்க , உருவமோ தன் பார்வையை நன்றாக இருட்டுக்கு பழகிக்கொண்டு அங்கிருந்த படுக்கையை நோக்கி நடக்கத் தொடங்கியது . படுக்கையின் அருகில் சென்ற உருவமோ அங்கு உறங்கி கொண்டிருந்த பெண்ணை விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தது . 

 

அவளோ நன்றாக உறங்கி கொண்டிருந்தால் இரவு உறங்குவது ஏற்ப இரவு உடையாக சட்டை , பாவாடை அணிந்து இருந்தவளது சட்டையோ சற்று மேல் ஏறி அவளது இடையோ அவனது கண்களுக்கு விருந்தாக்க. இடையோ கொடியிடை என்று சொல்வார்களே அதுபோல் வளைந்து இருக்க , அப்படியே மேல் சென்றவனது பார்வையோ அவளது முகத்தில் தான் விழுந்தது , குவளை மலர் போல இமைகள் இரண்டும் மூடி இருக்க , நாசியோ சீரான மூச்சோடு இருக்க , இதழோ அல்லி இதழ் போல சிவந்து காணப்பட , அதன் பின் கீழ் இறங்கிய அவனது பார்வையோ பெண்ணின் பெண்ணழகில் வந்து விழ. முடிகளோ தூக்கத்தில் கலைந்து முகத்தில் அங்கங்கு வந்து விழ . 

 

ஜன்னல் திறந்து இருப்பதால் ஜன்னலின் வெளிப்புறத்தில் வானில் இருக்கும் வெண்ணிலவின் ஒளியால் பெண்ணின் முகமோ அந்த இரவிலும் பொன்னிறமாக மின்ன . நிலவொளியால் மின்னுகிறதா ? இல்லை இவளது நிறமே இதுவா என்று எண்ணும் அளவு ஒரு அழகு வதனம் .

 

தூக்கத்தில் இருந்தவளுக்கோ தன்னை இப்படி ஒருவன் ஆளை முழுங்குவது போல் பார்க்கிறான் என்பது கூட தெரியாமல் அப்படியே புரண்டு முதுகுகாட்டி படுக்க .  

 

அவனது பார்வையோ இப்போது அவளது வெண்ணிற முதுகில் அழுந்த பதிந்து கீழ் வந்தவனது பார்வையோ மீண்டும் அவளது கொடி இடை வளைவிலேயே வந்து நின்றது . 

 

மெல்ல நடந்து வந்தவனோ அவளது அருகில் அமர்ந்து மெல்ல தன் பார்வையை தலை தட்டி சரி செய்து கொண்டு இடை வளைவில் மீசை முடி அழுந்த முத்தமிட.  

 

பெண்ணவளுக்கோ ஏதோ வித்தியாசம் தெரிந்து சட்டென கண்கள் திறந்தவளோ அங்கிருந்தவனை கண்டவளுக்கு கண்களில் அதிர்ச்சியே மிஞ்சியது . 

 

அவனை கண்டவளோ ஏதோ சொல்ல வாய் எடுக்கும் முன் அவள் வாயை தன் கைகொண்டு அழுந்த மூடியவனோ அவளோடு கட்டிலில் சரிந்தான் . 

 

தொடரும் ...

 

படிக்கிறவங்க follow பண்ணிட்டு படிங்கப்பா , அப்போதான் updates சீக்கிரம் கிடைக்கும் .   

 

மற்ற கதைகளும் இருக்கு அதையும் படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க 

 

1. அரசனோ என் அரக்கனோ .

 

2. மாறனின் மலரிவள் .

 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top