Share:
Notifications
Clear all

அத்தியாயம் - 9

 

(@aval-porsuvai)
Member Moderator
Joined: 9 months ago
Messages: 9
Thread starter  

தளிர் - 9

 

இருள் என்ற அரக்கனிடன் அகப்பட்டு இருந்த தலைவியான புவிமகளை உன் தலைவனான ஆதவன் வந்து அரக்கனிடம் இருந்து விடுவிப்பான் என்பது போல் தலைவியின் தோழியான மதிமகள் புவிமகளான தலைவியிடம் ஆறுதல் கூற . அதே போல் இருள் அரக்கனை தன் தங்க ஈட்டியால் குத்தி கிழித்துக் கொண்டு மேல் எழுந்த வெய்யோனோ தன் தலைவியை புன்னகையுடன் ஆரத்தழுவிக் கொண்டான் . தலைவன் வந்தவுடன் தலைவியும் அவனை அணைத்துக் கொண்டால் . இதில் தோழியான மதிமகளோ அவர்கள் புன்னகையுடன் கலந்து மறைந்தும் போனால். 

 

 

காலைப்பொழுதிற்கு ஏற்ப அந்த இடமே அவ்வளவு அழகாக காட்சி அளித்தது . காரணம் அது வயல் நிறைந்த இடம் என்பதால் . கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் வயல்வெளிகள் தான் . அதுவோ அப்போதுதான் கதிர் கட்டி இருப்பதாலோ இல்லை காலை நேர பனித்துளி அதன் மீது படர்ந்து இருப்பதாலோ என்னவோ அவ்வளவு அழகாக காட்சி அளித்தது . அதன் மீது சூரியனின் தங்க நிற கரங்கள் பட்டதால் நெற்கதிர்களும் அவனின் நிறமான பொன்னிறத்தை பூசிக்கொண்டது போல் மின்னிக்கொண்டு இருந்தது . 

 

அதேபோல் வயலில் அங்கங்கு வெண்ணிற நாரைகளும் தன் காலை நேர உணவிற்காக ஒற்றைக்காலில் தவம் இருக்க . இந்த காலை நேரத்து அழகை யாராக இருந்தாலும் ஒருகணம் நின்று ரசித்து விட்டுத்தான் செல்வார்கள் . 

 

ஆனால் இங்கு ஒரு ஜீவன் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தன் கலை நேர ஒட்டத்தை அந்த ஒற்றை அடி புல் படர்ந்த வயல் வரப்பில் நடந்து கொண்டு இருந்தான் . அவனது எண்ணம் முழுவதும் அவளிடம் தான் நடந்து கொண்டது மட்டுமே மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.

 

அதன் பின் தென்றலோ அவன் வீடு பக்கமே வருவது இல்லை , ஆனால் சரியான நேரத்திற்கு உணவு மட்டும் அவன் வீட்டு வாசலில் வைத்து விட்டு செல்வாள் . அவன் வந்து பார்க்கும் நேரம் அங்கு இருக்க மாட்டாள் . இப்படியாக நாட்கள் சென்று கொண்டு இருக்க இதற்கு மேல் முடியாது என்று முடிவு செய்தவனோ அவள் வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தான் .  

 

அவள் வீட்டின் அருகில் சென்றவனோ அந்த வீட்டையே சுற்றி பார்த்தான் . அதுவோ சுற்றிலும் மரவேலிகள் போடபட்ட அந்த காலத்து ஓட்டுவீடு, வீட்டின் முன் ஒரு துளசிமாடம், காலையில் வாசல் கூட்டி கோலம் போட்டதற்கான அடையாளமாக கோலம் அழகாக இருக்க . அதை கடந்து உள் சென்றவனோ அங்கு இருக்கும் வீட்டின் உள் அமைப்பையும் பார்த்துக்கொண்டிருந்தான் , உள் இரண்டு அறைகள் ஒன்று படுக்கை அறை மற்றொன்று சமையல் அறை என்று பார்த்தவுடன் கண்டு கொள்ளலாம் . 

 

அதே போல் அந்த படுக்கை அறையில் இருந்து ஏதோ சத்தம் வர அவனோ அந்த அறை நோக்கி உள் சென்றவனோ உள் இருந்தவளை பார்த்தவனுக்கு ஏகத்துக்கும் கடுப்பு தான் ஏறியது . அவளது பாட்டியோ எழுந்து கொள்ள முடியாமல் இருக்க அவளோ அவரை பிடித்து தூக்க முயற்சி செய்து முடியாமல் மீண்டும் அவரை படுக்கையில் படுக்க வைக்க .

 

பாண்டியனோ ஏய் என்று அவளை ஒரு அதட்டு அதட்ட .

 

திடீரென கேட்ட குரலில் பயந்த தென்றலோ யார் என்று திரும்பி பார்க்க அங்கு நின்று இருந்தவனை கண்டவளுக்கோ தூக்கிவாரிபோட்டது . அவளோ அவனையே கண்களில் அதிர்ச்சி விலகாமல் பார்த்துக்கொண்டிருக்க .

  

அவள் அருகில் வந்தவனோ கட்டிலில் படுத்து இருந்த அவளது பாட்டியை பார்க்க. அவரோ உடலுக்கு முடியாமல் கண்கள் மூடி படுத்து இருக்க . அவரை கண்டவனோ தென்றலிடம் என்ன ஆச்சு என்று கேட்க .

 

அவளோ அது அது காய்ச்சல் சார் அதுதான் என்று ஒருவாறாக கூறிவிட .

 

பாண்டியனோ அதுக்கு இப்படிதான் வயசானவங்களை தூக்கி கஷ்டப்படுத்துவாங்களா என்று அவளை முறைத்துக் கொண்டு கேட்க. 

 

தென்றலோ சாப்பாடு குடுக்க எழுந்து தான் சார் ஆகனும் அதான் உட்கார வைக்க முயற்சி பண்ணேன் என்று கூற .

 

அவனோ ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனியா என்று கேட்க .

 

அவளோ திரு திரு என முழிக்க .

 

அவனோ இப்ப எதுக்கு இப்படி திருட்டு முழி முழிக்கிற என்று அதட்ட .

 

அவளோ அது இனிமே தான் கூட்டிட்டு போகனும் என்று சமாளிப்பது போல் கூற .

 

பாண்டியனோ அவளை அழுத்தத்துடன் பார்த்தவனோ அப்போ இன்னும் கூட்டிட்டு போகல என்று கேட்க .

 

அவளோ தலையை குனிந்தவாறு இல்லை என்று தலையாட்ட .

 

அவள் கூறியதை கேட்டவனுக்கோ ஏகத்துக்கும் கடுப்பு கிளம்ப .

 

ஏன் என்று கேட்க .

 

தென்றலோ காசு இல்ல சார் என்று மெல்லிய குரலில் கூற .

 

பாண்டியனின் புருவமோ யோசனையில் சுருங்கியது . அவனோ ஆமா சம்பளம் வாங்குற தான அப்போ அதுலாம் எங்க போகுது என்று கேட்க . 

 

தென்றலோ என்ன சொல்வதென்று தெரியாமல் அதுலாம் செலவாகிடுச்சி சார் என்று சமாளிக்க .

 

பாண்டியனோ இருபக்கமும் சலிப்பாக தலையாட்டிவிட்டு சரி இரு நான் கார் எடுத்துட்டு வரேன் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகலாம் என்றுவிட்டு வெளியே செல்ல .

 

தென்றலோ அதுலாம் வேண்டாம் சார் நானே பார்த்துக்கிறேன் என்று நலிந்த குரலில் கூற .

 

அவளை திரும்பி ஒரே ஒரு பார்வை தான் அதன் பின் எங்கு அவள் வாய்திறக்க .

 

அவன் காரை எடுத்துக் கொண்டு வர . அவளோ மீண்டும் அவரை தூக்க முயற்சி செய்ய , உள்ளே வந்த பாண்டியனோ தென்றலை நகர சொல்லி , அவனே அவரை தூக்கி கொள்ள . 

 

தென்றலோ அவனையே விழி அகலாமல் பார்க்க . பாதி தூரம் சென்றவனோ ஏய் தென்றல் உள்ள என்ன பண்ற என்று பாண்டியன் ஒரு அதட்டலுடன் அவளை அழைக்க .

 

அதன் பின்பே நினைவு கலைந்தவள் அவன் பின்னோடு ஓடிச் சென்று பாட்டியின் அருகில் அமர்ந்து கொள்ள .அதன் பின் ஹாஸ்பிட்டல் நோக்கி பயணமாகினர் .

 

டாக்டரோ அவரை பார்த்துவிட்டு என்னம்மா இவ்வளவு அதிகமான காய்ச்சல் இருக்கு முதல்லயே பார்க்கிறது இல்லையா என்று அவளை திட்டிவிட்டு , அவருக்கான ஊசியையும் போட்டு மருந்து மாத்திரைகளை எழுதி கொடுத்தவரோ ஒரு நாள் இருந்து பார்த்துட்டு போங்க என்று அவர் சென்றுவிட . 

 

தென்றலிடம் இருந்த மருந்து சீட்டை வாங்கியவனோ நீ இங்க இரு நான் வாங்கிட்டு வரேன் என்று அவன் வெளியே சென்றுவிட. போகும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளை அவளின் பாட்டி அழைக்க. 

 

அவர் அருகில் சென்றவளோ அவரின் கைபிடித்து கொண்டவளோ இப்போ எப்படி இருக்கு என்று கேட்க .

 

அவரோ இப்போ பரவாயில்லை என்று சோர்வாக கூற .

 

தென்றல் இது வேண்டாம் , நாம தப்பு பண்றோம் தென்றல் அவளிடம் கூற .

 

தென்றலோ எனக்கு வேற வழியில்ல என்று அவரையே ஒரு அழுத்தத்துடன் பார்க்க .

 

அதே சமயம் உள் நுழைந்த பாண்டியனோ அவளிடம் வாங்கி வந்த மருந்துகளை கொடுத்து விட்டு , அதோடு உணவினையும் கொடுத்து விட்டு , அவரை நலம் விசாரித்துவிட்டு அங்கிருந்து அகன்றான்.  

 

தென்றலுக்கோ மனம் வேதனையில் கலங்க தொடங்கியது , இது தவறு என்று தெரியும் இருந்தும் அவளுக்கு வேறு வழியில்லை அல்லவா . அவளோ தன் கண்ணில் வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டு , பாட்டிக்கு உணவினை கொடுத்தவிட்டு , அங்கு இருந்த இருக்கையில் கால் இரண்டையும் தூக்கி வைத்தவாறு அப்படியே உறங்கிவிட்டால் . 

 

 

காலை நேர சூரியனின் சூடான கரம் அவள் முகத்தில் விழ , கண்விழித்த தென்றலோ அப்போதுதான் தான் இருக்கும் இடம் அறிந்து பாட்டியை பார்க்க . அவரோ நன்றாக உறங்கி கொண்டிருக்க . அங்கு இருக்கும் பாத்ரூமில் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டவளோ , அங்கிருந்து வெளியே சென்று டீ வாங்கி வர . அறையின் உள் நுழைந்தவளை வரவேற்றது என்னவோ பாண்டியனின் குரல் மட்டுமே .

 

பாட்டியை பார்த்து பேசிக்கொண்டிருந்தவனோ தென்றலிடம் ஒரு பார்வை மட்டுமே . தென்றலோ எதுவும் பேசாமல் டீ ஊற்றி பாட்டியிடம் நீட்டியவளோ , மற்றொன்றை அவனிடம் நீட்ட , அவனோ வேண்டாம் என்று மறுப்பாக தலையசைக்க.  

 

அவளோ வேண்டாமா என்று மீண்டும் கேட்க . அவனும் வேண்டாம் நீயே குடி என்றுவிட்டு அங்கிருந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டவன் பார்வை முழுவதும் தென்றலின் மீதே .

 

அவனின் பார்வை முழுவதும் அவள் அரிதாரம் இல்லாத பூமுகத்திலே நிலைத்து இருந்தது . தலையெல்லாம் கலைந்து , சரியான தூக்கம் எனக்கு இல்லையடா என்பதை உணர்த்தும் விழிகள் , புருவத்தின் மத்தியில் இருக்கும் சிறு பொட்டு , பனியில் சிவந்து போன நாசி , டீ குடிப்பதால் சுருங்கி விரியும் கோவைப்பழ இதழ்கள் . கசங்கிய ஆடை.

 

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் அலுங்கி நலுங்கிய ஒரு விதமான அழகு . அவனின் மனதில் ஒரே ஒரு பாடல் வரி மட்டுமே 

 

உச்சந்தலை வகுடு வழி 

ஒத்த மனம் அலையுதடி 

உதட்டு வரி பள்ளத்துல 

உசிரு விழுந்து தவிக்குதடி 

பாழாப்போன மனசு 

பசியெடுத்துக் கொண்ட பத்தியத்தை முறிக்குதடி. 

 

அவன் எண்ணம் போகும் போக்கை நினைத்து ஒருகணம் திடுகிட்டவனோ தன் தலையை உலுக்கி தன்னை சரி செய்து கொண்டவனோ அங்கிருந்து வெளியேறி விட்டான் .  

 

அவனது மனமோ இது சரியில்லை பாண்டியா நீ பட்ட அடிகள் போதாதா மீண்டும் உனக்கு இது வேண்டுமா என்று வேதம் ஓதியது. பாண்டியனின் முகமோ மீண்டும் கடுமையை தத்தெடுத்துக் கொண்டது .

 

அதன் பின் மருத்துவர் அவரை பார்த்துவிட்டு நீங்கள் செல்லலாம் என்று சொல்லிவிட . தென்றலோ பணம் கட்டும் இடம் நோக்கி செல்லத் தயாராக.  

 

அவளை தடுத்த பாண்டியனோ நான் கட்டிட்டேன் நீ பாட்டியை கூட்டிட்டு வா கிளம்பலாம் என்று அவன் முன்னே நடக்க . அவளும் அங்கிருந்து அகன்றால் . 

 

இவ்வாறாக வீடு வந்து சேர்ந்தனர் . பாண்டியனோ சரி பார்த்துக்குங்க என்றுவிட்டு அவன் வீடு நோக்கி புறப்பட்டான் . போகும் அவனை அழைத்த தென்றலோ சார் எவ்ளோ ஆச்சுன்னு சொன்ன நான் திருப்பி கொடுத்துருவேன் என்று கூற .

 

பாண்டியனோ அவளை ஒரு அழுத்த பார்வை பார்த்துவிட்டு ஒழுங்க சாப்பாடு மட்டும் செஞ்சு கொடு அது போதும் என்று அங்கிருந்து அகன்றான் . 

 

போகும் அவனையே விழிகளில் ஒரு அழுத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தால் . 

 

அடுத்த நாள் காலை எப்போதும் போல் அவன் வீட்டிற்கு சென்றவளோ அங்கு கதவை திறந்து கொண்டு வந்த நபரை கண்டவளுக்கோ கண்களில் அதிர்ச்சியே மிஞ்சியது .

 

தொடரும் ...

 

Review please 🙏 படிக்கிறவங்க follow பண்ணிட்டு படிங்கப்பா .

 

மற்ற கதைகள் 

 

அரசனோ என் அரக்கனோ .

மாறனின் மலரிவள் .

 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top