அத்தியாயம் 29
“ஏன் டி உன் மேல பழிய போட்டுக்கிட்ட.. அப்பவே என் கர்ப்பத்துக்கு இந்த அயோக்கிய ராஸ்கல் தான் காரணம்னு சொல்லி இருக்கலாம்ல..” என்று நூறாவது தடவையாக கேட்பவனை ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடி வழியாக பார்த்தவள், கையில் இருந்த சீப்பை தூக்கி எறிந்து அவனை அடித்தாள் பிரக்யா..!
“அவ்வளவுதான் பார்த்துக்கோங்க..! டெய்லி விதவிதமா வித்தியாசமா ஒரே கேள்வியை கேட்டு என்னை டார்ச்சர் பண்றீங்க நீங்க.. இப்படி டார்ச்சர் பண்ணுவீங்கன்னு தெரிஞ்சு இருந்துச்சுனா அப்பவே சொல்லி தொலைச்சு இருப்பேன்” என்று கடுப்படித்தாள் அவள்.
“அது இல்லடா செல்லம்.. எவ்வளவு பேர் என்ன எல்லாம் பேசி இருப்பாங்க. எப்படியும் விசயம் நம்ம வீட்டு வழியா வெளியில் போகலனாலும்.. என் அக்கா ஒருத்தி போதுமே பிபிசி என்டிடிவி நியூஸுக்கு மேல எல்லாத்தையும் ஒளிபரப்பியிருப்பா.. எனக்கு அதுதான் கஷ்டமே..!” என்றவன்,
மீண்டும் ”அப்பவே சொல்லி இருக்கலாம் இல்ல” என்று சற்றே மாடுலேஷனை மாற்றி கேட்டான்.
“போய் வேற வேலைய பாருங்க மாமா.. கொண்டாங்க என் சீப்பை.. எனக்கு ஹாஸ்பிடலுக்கு நேரம் ஆகிடுச்சு..” என்று சீப்பை அவள் பிடுங்க..
“அட்லீஸ்ட் இப்போ சீப்பை விட்டு விசிறி அடிச்சல அந்த மாதிரியாவது நாலு அடியாவது அடியேன் டி. என் மனபாரமாவது கொஞ்சமே கொஞ்சம் குறையும். நீ இப்படி பெருந்தன்மையா இருக்கிறது எனக்கு இன்னும் குற்ற உணர்ச்சிய அதிகரிக்குது டி சின்னு” என்றான்.
பசிக்கு ஏங்கும் பிள்ளை போல பாவம் பார்த்து நின்றவனை கண்டவள், அவன் கன்னம் வருடி லேசாக தட்டி “போதுமா..” என்று சிரிக்க..
‘இவ்வளவு அன்பை நேசத்தை தன்னிடம் கொட்டுபவளுக்கு தான் தீங்கிழைத்து விட்டோமே.!’ என்று அவன் மனம் மீண்டும் கலங்க..
“ப்ளீஸ் சின்னு.. எனக்கு நல்லா வலிக்கிற மாதிரி நாலு அடியாவது அடி டி..!” என்று அவளை தலைவாரவிடாமல் கையைப் பிடித்துக் கொண்டு அவன் கெஞ்ச..
அவளோ “முடியாது மாமா.. போங்க” என்று மிஞ்ச..
ஒரு கட்டத்தில் அவனது இந்த தொந்தரவு தாங்க முடியாமல்.
“அம்மம்மா..” என்று அலறியப்படியே கீழே ஓடி வந்தவளை பயந்து பார்த்தார் பர்வதத்தம்மாள்.
காலை பூஜை முடித்து கணவனிடம் வேண்டுதலை வைத்துவிட்டு அவர் திரும்ப.. இப்படி தலைவிரி கோலமாய் ஓடிவரும் பேத்தியை கண்டால் அவர் என்ன நினைப்பதாம்?
அதுவும் பின்னாலே அவளை துரத்திக் கொண்டு “நில்லு சின்னு.. நில்லு.. நான் சொல்றதை கேளு” என்றபடி வந்த மகனை கண்டால் என்ன நினைக்க தோன்றுமாம்?
சட்டென பேத்தியை தன் பின்னால் மறைத்துக் கொண்டு “எதுக்குடா அவளை அடிக்க துரத்துற?” என்று அவர் சற்று காட்டமாக கேட்க..
“எதே? அவளை அடிக்க துரத்துறேனா? யாரு நானா? சரியா போச்சு..! நானே நாலு அடி என்னை அடின்னு அவகிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்கேன் மா” என்றதும்,
மருமகளை திரும்பிப் பார்த்து கண்களாலே ஆமாவா என்று அவர் கேட்க.. அவளும் அலுப்போடு ஆமா என்று கண்களாலேயே பதில் கூற கலகலவென்று சிரித்தார் அவர்.
“இங்க வா நயனா..” என்று மகனை அருகில் அழைத்து “நீ வேணும்னு தப்பு செய்யல.. ஆனா செஞ்சது தப்புன்னு நீ உணர்ந்துவிட்ட தானே? இன்னும் அதையே நினைச்சுட்டு இருந்தா.. வருங்காலம் எப்படி சுபிக்கும் சொல்லு? இப்படி பேசிப்பேசியே அவளையும் டார்ச்சர் பண்றதை விடு” என்று அறிவுரை கூற..
அன்னைக்காக சரி என்றவன் காலையில் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது,
“ஏன் சின்னு என் மேல நீ இவ்ளோ பாசத்தை கொட்டுற? இவ்வளவு நேசத்தை காட்டுற? கொஞ்சமாவது என்னை திட்டி என்னோட எல்லா இழப்புக்கும் நீ தான்டா காரணம்னு பேசியிருக்கலாம்ல..?” என்று வேதனைப்பட்டவனின் முகத்தை தன் புறம் திருப்பி,
“மாமா.. சின்ன வயசுல இருந்து எனக்காக அத்தனை செஞ்சீங்க.. சித்தி திட்டும்போதெல்லாம் என் மேல பழி போடும் போதெல்லாம் எனக்கு சப்போர்ட் பண்ணுவீங்க.. என்கிட்ட முறைச்சுக்கிட்டு கடுமையா இருந்தாலும் அதற்கு பின்ன இருக்கும் உங்க அன்பு பாசம் எனக்கு தெரியாதா மாமா? நீங்க அம்மம்மா தாத்தா எல்லாரும் எனக்கு அன்பை விதைக்க.. கொடுக்க.. மட்டும் தான் சொல்லிக் கொடுத்து இருக்கீங்க. அப்ப நான் எப்படி இருப்பேனாம்?” என்றவள் தலை சாய்த்து புன்னகையோடு கேட்க..
“ஆனாலும்…” என்றவனின் அதரங்களை தன் அதரங்களால் உரசி “எனக்கு சோக பாட்டு பாடுகிற மாமா வேணாம்.. நல்ல கிக்கா கில்மா பாட்டு பாடுற மாமா தான் வேணும்” என்று கண் சிமிட்டி புன்னகைத்தவள்,
அவனது சட்டையை கொத்தாக பற்றி காது மடலில் அவள் இதழ்கள் உரச, “நான் தொலைச்ச நம்ம குழந்தையும் எனக்கு சீக்கிரமே சீக்கிரம் வேணும் மாமா” என்று ஹஸ்கி வாய்ஸில் கூறிவிட்டு, வெட்கப் புன்னகை சிந்தி மருத்துவமனைக்குள் சென்றவளை மன நிறைய காதலோடு பார்த்திருந்தான் கதிர்நயனன்.
ஆனது.. இதோடு ஒரு மாதம் இந்த பிரச்சனைகள் எல்லாம் முடிந்து..!
ஆதி எங்கே இருக்கிறாள்? யார் கூட இருக்கிறாள்? என்று அவள் சென்ற இரண்டே நாட்களில் அனைத்தையும் தெரிந்திருந்தான் கதிர்நயனன். ஆனால் அவளிடம் பேசவோ அவளை பார்க்கவோ செல்லவில்லை.
‘மாமனாக என்னிடம் இந்த பிரச்சனையை கொண்டு வந்திருந்தால் நாம் சரி செய்து இருக்கலாம். அவளாக ஒரு முடிவை தேர்ந்தெடுத்து சென்று விட்டாள். இனி அவ பாடு.. அவங்க குடும்ப பாடு' என்று அமைதியாக விட்டுவிட்டான்.
அதோடு கூட தன்னால் தான் பிரக்யாவுக்கு இவ்வளவு பிரச்சனைகள் என்று அறிந்து அந்த குற்ற உணர்ச்சி வேறு அவனை கொன்று தின்றுக் கொண்டு இருக்க.. எங்கிருந்து மற்றவர்கள் விஷயத்தில் அவன் தலையிடுவது?
இப்பொழுது பிரக்யாவின் அன்பான பேச்சால் சில நேரமும்.. அதிரடியான செயல்களால் பல நேரங்களிலும்.. அவளை நோக்கி ஈர்க்கப்பட்டுக் கொண்டிருந்தவன் பழையவற்றை மறந்துக் கொண்டிருந்தான்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் தானே.. வாழ்க்கை??
அந்த பழையது என்பது கசந்த பழைய காலம்.. அதை கடந்துச் சென்று விட்டால் இனிப்பான எதிர்காலம் நம் கையில்..!
மனைவி அம்மா தொழில் என்று அந்தக் கூட்டை விட்டு வெளியே வராமல் சுற்றிக் கொண்டிருந்தான் கதிர்நயனன். அவனை அப்படி சுழற்றிக் கொண்டிருந்தாள் பம்பரமாய் பிரக்யா.
“தம்பி இன்னைக்கு பிரதோஷம் ரெண்டு பேரும் பெரிய கோயிலுக்கு போயிட்டு வாங்களேன்” என்று பர்வதத்தம்மாள் கூற..
வெகு நாள் ஆகிவிட்டது பிரதோஷத்தன்று பெரிய கோவில் சென்று..!
“சின்னுவுக்கு எப்படின்னு தெரியலையே அம்மா.. ஈவினிங் ப்ராக்டிஸ் இருந்தா?” என்று மனைவியை பார்த்து கேட்க..
“இல்லை மாமா இன்னைக்கு ஒரு நாள் தானே சீக்கிரம் முடிச்சிட்டு ஏழு மணி போல ரெடியா இருக்கேன். நீங்க ஹாஸ்பிடல் வந்துருங்க சேர்ந்து போகலாம்” என்றாள் பிரக்யா.
எந்த ஒரு விஷயத்தையும் மனைவியை கலக்காமல் கதிர்நயனன் செய்வதில்லை..!
அதே போல கணவன் சொல்லும் போது அதுக்கு உடனே மறுப்பு தெரிவிக்காமல் தன்னால் இதுதான் முடியும். இதற்கு ஒத்து வருவாயா என்பது போல அவள் புரிந்து நடந்துக் கொள்வதில் இருவருக்கும் வாழ்க்கை சுமூகமாக சென்றுக் கொண்டிருந்தது.
இப்பொழுது எல்லாம் தினமும் கதிர்நயனனே அவளை மருத்துவமனை கொண்டு வந்து விடுவதும்.. அழைத்து செல்வதுமாக இருந்தான்.
“உங்களுக்கு வேலை ஜாஸ்தி மாமா ரொம்ப அலைச்சலா இருக்கும். நான் வழக்கம் போல முரளி அண்ணன் கூட வந்துக்குறேனே” என்றாலும், அவன் கேட்கவே இல்லை.
என்னவோ அவளின் அருகாமை அவனை கனிய வைத்தது.
அவள் பால் உருக வைத்தது.
இருவருக்குமான தனிமையான பேச்சு அவனுக்கு அத்தனை பிடித்தமாகி பித்தாகி போனது.
அவள் காரில் இருந்து இறங்கும் பொழுது இப்பொழுதெல்லாம், அதரங்கள் தீண்டிச் செல்லும் அவசர முத்தத்தில் அவன் தன்னை தொலைத்துக் கொண்டிருந்தான்.
இன்று இவள் மறந்து திரும்ப.. சட்டென்று அவளை இழுத்து அதரங்களை அரை இன்ச் அருகில் வைத்தவன் “மறந்துட்டியா?” என்று உயிர் உருகும் குரலில் கேட்க..
அவன் கண்கள் ஒரு சேரக் காட்டிய அந்த காதலும் தவிப்பும் அவளை கொல்ல..
சட்டென அவனது தடித்த துடித்த அதரங்களை தன் வசம் ஆக்கினாள் மாது..!
நொடி நேர முத்தமோ.. இன்று நொடிகள் பல கடந்தும் வினாடிகள் வரை நீடித்தது..!
அவள் மருத்துவமனைக்கு உள்ளே சென்று வெகு நேரம் ஆகியும் இவன் பார்க்கிங்லே மந்தகாச புன்னகையோடு அமர்ந்திருந்தான்.
இதுவரை இல்லாத ஒரு பரவசம் இப்போது அவனை ஆட்கொண்டது.
ஜிவ்வென உணர்ச்சி வானில் பறந்தான்..!
முத்தம்…
இரு அதரங்களின் சேர்க்கை அல்ல..!
இது மனங்களின் சேர்க்கை அது..!
அவளை முழு மனதாக மனைவியாக ஏற்றுக் கொண்ட பின் வம்படியாக அவளுக்கு பல முத்தங்களை கொடுத்திருக்கிறான் தான்.
அப்போதில்லாத ஒரு பரவசம் இப்பொழுது அவனிடம்..!
சரியாக மாலை 7 மணிக்கு “ரெடியா உமையா கிளம்பலாமா?” என்று அவன் அனுப்பியிருந்த செய்தி அவளுள் உற்சாக ஊற்றை கிளப்பியது.
அவளுக்கும் அவனுடன் பொழுதுகளை கழிப்பதில் ஏக ஆனந்தம்..!
“எஸ்.. மாமா, நான் எப்பவோ ரெடி” அவன் குறுந்தகவலுக்கு குறும்பதில் அனுப்பியிருந்தாள் அவள்.
“ரெடியாகி…” என்று பாதியில் முடிந்திருந்தது அவனது குறுந்தகவல்.
“மாமா இஸ் பேக்..! பொல்லாத மாமா” கொஞ்சிக் கொண்டாள். சின்னதாகவே அவன் அனுப்பியிருந்த பதிலை கண்டு.
இப்போ மட்டும் அவன் அருகில் இருந்திருந்தால்.. அவனை கட்டிபிடித்து கடிக்குமளவுக்கு காதலுற்றிருந்தாள் தன்னவன் மேல்.
“கோவிலுக்கு போக தான்” இவள் பதில் அனுப்ப..
“அப்போ என் ப்ரின்ஸஸ் வெளிய வாங்க. உங்க தரிசனத்துக்காக தான் அடியேன் வெயிட்டிங்..” என்றவன் பதிலில்..
குப்பென அவளிலிருந்து வெடித்த துண்டுகள் சிகப்பு வண்ண ஹார்டின் பலூன்களாக அறையெங்கும் மிதந்ததை போல் உணர்ந்தாள் பிரக்யா.
“கம்மிங் சூன்” அவன் தந்த காதலால் கரைந்திருந்தவள், அவசர அவசரமாக அறை வாசலை நோக்கி நடந்தாள்.
திடீரென்று நினைவு வந்தவளாக, ரெஸ்ட் ரூம் கண்ணாடி முன்னால் ஓடி நின்று தன் முகம் பார்த்து முடிகளை சரி செய்து.. தன் ஹேண்ட்பேக்கில் இருந்து அவளது சிறிய மேக்கப் கிட்டை எடுத்து, கண் மை வரைந்தாள். லேசாக டச்சிங்கில் தன்னை அலங்கரித்தவள், திருப்தியோடு வெளியே வந்தாள்.
அவள் அறைக்கு வெளியே காலடி எடுத்து வைத்து அவனை தேட.. அறைக்கு எதிரிலேயே இருக்கையில் அமர்ந்து சிரித்தவன், ஒன்றை மட்டுமே அவளுக்கு உணர்த்தினான்.
அவள் உயிர் சங்கமிக்கும் இடம் அவனென்று..!!
இருவரும் அன்றைய தினம் கோவில்
பிரதோஷ வழிபாட்டை கண்ணாற கண்டு, திருப்தியாய் பிரார்த்தனை முடித்து, பிரசாதம் பெற்று கோவில் வளாகத்திலேயே புல்தரையில் அமர்ந்தனர்.
அந்த இளம் புல்லின் குளிர்ச்சியும் மெல்லிய காற்றின் ஈரப்பதமும் இருவரின் மனதிலும் தேகத்திலும் குளுமையை ஏற்றியது. ஒரு வித அமைதியை கொடுத்தது..!
காரில் ஏறி அமர்ந்ததும் வீட்டுக்கு செல்லும் பாதையில் அவன் காரை செலுத்தவில்லை. அவன் மனம் போன பாதையில் காரை ஓட்டிக் கொண்டிருக்க.. அதே மனநிலையில் இருந்த பிரக்யாவும் மெல்ல மாமனின் புஜத்தில் தலை சாய்த்தாள்.
“ரிசார்ட்டுக்கு போலாமா சின்னு?” என்று அவன் கேட்க.. சரி என்று அவளும் தலையசைக்க அன்னையிடம் ரிசார்ட் செல்கிறோம் என்று கூறிவிட்டு இருவரும் அங்கே சென்றனர்.
முதலில் வந்த போது அவள் பார்த்தது என்னவோ என்டர்டைன்மென்ட் கேம்ஸ் மட்டும்தான். அதைத் தாண்டி உள்ளுக்குள் சிறு சிறு குடில்களை அந்த இயற்கையோடு இயைந்து வாழ்வது போல அழகுற கட்டி இருந்தான் கதிர்நயனன்.
இருவருக்கான இரவு உணவினை வரவழைத்தவன் ஒரு பக்கம் ஜன்னல் திரையை விலக்கி காட்ட…
இரவு பூச்சியின் மெல்லிய ரீங்கார சத்தமும்.. பச்சை வாசனையோடு கூடிய மெல்லிய காற்றின் குளிர்ச்சியும்.. அவளை வேறொரு உலகத்திற்கு இட்டு சென்றது..
இரவில்.. பனி நிலவில்..
அவளும் அவனும்..!!
“சாப்பிட வா சின்னு” என்று அழைக்க வந்தவன், அவளது சிவந்த அதரங்கள் அவனை பித்தேற்ற.. இப்போது அதனை பிய்த்து தின்னும் எண்ணத்தில் அவன்..!
“சின்னு.. இதை.. இந்த லிப்ஸை தொட்டு பார்க்கவா?” ஏக்கத்தோடு கேட்டான்.
ஒரு கணம் அவன் கண்களை பார்த்தாள். அதில் அவ்வளவு ஏக்கம் கொட்டி கிடந்தது.
“நைட்” கண் சிமிட்டி மெல்ல சிரிப்போடு சொன்னாள்.
அவள் சொன்ன பிறகே தான் அர்த்தம் புரிய ‘ஐயோ.. நானா சொன்னேன்’ என்று நாக்கை கடித்துக்கொண்டாள்.
“அப்போ.. நைட் என்னென்ன தொட்டு பார்க்கலாம்…” கிண்டலான காதலுடன் அவளின் இடை வளைத்து கேட்டான் அவன்.
அவளுக்கோ வெட்கம் பிடுங்கி தின்றது.
‘மாமா இஸ் பேக்.. இனி வைச்சு செய்வாரே’ என்று மிகவும் யோசித்து..
“இப்போ எதுவும் வேண்டாம்..” என்றாள் சிரிப்போடு.
“ஏன்??” வினவிக்கொண்டே அவன் இடது கையை அவளின் வயிற்றில் மெல்ல அழுத்த, அவள் நாக்கு சுழன்று போனது. வார்த்தைகள் வெளியே வரவில்லை..!
“ச்.. ச்… சும்மா…” அவள் திணற
“சும்மா எல்லாம் முடியாது… ஏன் வேணாமா?” என்றவன் அவளை பின்னிருந்து அணைத்து பின் கழுத்தில் அதரங்களை அழுத்தமாகப் புதைத்துக் கொண்டு கேட்க..
இப்படி கேட்டால் எப்படி வேணாம் என்பதாம்?
அவன் அருகாமையும்.. அணைப்பும்.. அவன் ஆண்மையின் வாசமும்..
இன்னும் கொஞ்சம் நேரம்.. இன்னும் கொஞ்சம் தூரம் என்று அவளின் மனதை அலைபாய விட்டன.
வேணும் வேணாம் என்பதை எல்லாம் தாண்டி.. அவளை அவனுள் தொலைத்துக் கொண்டிருந்தது உண்மை..!
அவள் மீதான உரிமையில்.. உணர்ச்சியில்.. தாபமும் மோகமும் சேர அவளை அணைத்தான்.
அவளாலும் அவனைவிட்டு விலக முடியவில்லை..! இயலவில்லை என்பதே உண்மை..!
‘என்னை என்னவோ செய்து கொள்ள டா’ என்றவள் கண்களை மூடி நின்றுக் கொண்டாள்.
அவளின் மார்பு அதிவேகத்தில் துடிக்கத் தொடங்க..
மார்பு கூடும் ஏறி இறங்க..
அவளின் உணர்ச்சிகளை அறிந்துக் கொண்டவன் போல அவன் அதரங்கள் கழுத்திலும் மார்பிலும் அழுத்தமாக முத்தங்களை அள்ளிக் கொடுத்தன.
அவளது வடிவான முகத்தில் அவனுடைய உதடுகள் பதிந்து,
நீள கண்கள்..
சிப்பி இமைகள்..
கூர் மூக்கு..
கனிந்த கன்னங்கள்..
என ஒவ்வொன்றாக ரசித்து ருசிக்க..
அவளது மேனியோ இவ்வுணர்ச்சியினை தாங்காது நடுங்கியது.
பருவம் பூத்த அவளின் மேனியில்.. பரிச்சயம் இல்லாத ஒரு செயல் நிகழும்போது
அவளின் உடம்பு அதை ஏற்க முடியாமல் நடுங்கியது.
“மாமா..” நடுங்கியபடி அவள் முணங்க..
‘“ம்ம்..??” என்று கிறங்கினான்.
திரும்பவும் மாமா என்று சிணுங்கினாள். அதை தவிர அவளுக்கு வேறு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
ஆனால் அவனோ அவள் சொல்வதை கேட்பவனாக இல்லை..! அவளிடம் எடுப்பவனாகவே இருந்தான்.
அதரங்களை அழகோடு கொய்தவனோ அதனை ருசிக்க..அவனுக்கு தன் அதரங்கள் என்ன சுவையைக் கொடுத்திருக்கும் என்று
அவளுக்கு தெரியவில்லை.
ஆனால் அவன் சுவைப்பதை வைத்துப் பார்த்தால்…
அதில் அவன் பேரின்பம் காண்கிறான் என்பது மட்டும் அவளுக்கு புரிந்தது.
இது அதரங்களை அடைவதோடு நின்று விடாது.. அவளை அடையும் வழியே அதரங்கள் தான் என்று அவளுக்கு புரிய..
அவளின் கைகளும் கால்களும்
அவளையும் மீறி நடுங்கிக் கொண்டிருந்தன..
அடிபட்ட புறா போல அவளின் நெஞ்சம் படபடவென அடித்துக் கொண்டிருந்தது, அவனின் ரசித்து ருசிக்கும் செய்கையில்..!
அவள் நிற்க முடியாமல் கீழே விழுந்து விடுவோமோ என பயந்துக் கொண்டிருந்த வேளையில்..
அவளை கட்டியணைத்த வாக்கில் தன்னோடு இறுக்கிக் கொண்டான் நயனன்.
எத்தனையோ நாட்கள் கனவுகளிலும் கற்பனைகளிலும் சஞ்சரித்த அவள் மாமனின் காதல் இப்போது நிதர்சனமாகிக் கொண்டிருந்தது.
அந்நேரத்தில் அவளுக்குள் என்னென்னவோ மாற்றங்கள நிகழ்ந்த வண்ணமிருந்தன..
அவனின் மோகத்தில் அவளும்
மோகவயப்பட்டு முயங்கியிருந்தாள்.
சூடான மூச்சுக் காற்றும்.. குளிர்ந்த உதடுகளும் மங்கைக்குள் மாயம் செய்திட.. அவளே அறிந்திடாமல் கண்கள் சொருகியது அவளுக்கு. சுக வேதனையில் அவள் சுகிக்க..
அவனின் சூடான முத்தங்கள் பெருக.. மோகத்தீ பற்றிக்கொண்டது இருவருக்குள்ளும்..!
மெல்ல அவளை தன் புறம் திருப்பியவன் அவளின் உதட்டில் திகட்ட திகட்ட தேனை உறிஞ்சினான். அவளுக்கோ தேகமெல்லாம் அனலடித்தது.
அவனின் முத்தம் நின்றிடாமல் தொடர.. நங்கையவளோ மூச்சு வாங்க.. சற்று அவளுக்குள் இளைப்பாற நினைத்த அவனது அதரங்களோ உதட்டை விட்டு அவளின் நெற்றி, மூக்கு, கன்னங்கள் என்று ஒரு சுற்றடித்து முத்தங்களால் சுழற்றி அடித்தது.
அவன் முத்தத்தில் அவள் மயங்கி கிறங்கி இருக்க.. எப்பொழுது அவளை தூக்கினான்? எப்பொழுது மஞ்சத்தில் கிடத்தினான்? என்று அவள் அறியவே இல்லை..
மெல்ல மெல்ல அவளது உடைகளுக்கு விடை கொடுத்தான்.. அதில் அவளின் மென்மைகள் மெல்ல எட்டிப் பார்க்க.. அவள் நாணம் கொண்டு அதை மறைக்க முயல.. அவள் கைகளைப் பிடித்து சிறை செய்தவன்.. அறையின் மெல்லிய வெளிச்சத்தில் பல்லவன் சிலையாய் விழுந்தவளை கண்களாலேயே அள்ளி அள்ளி பருகிய அவன்.. அடுத்து அதரங்களாலும் விரல்களாலும் அவளை மீட்டி எடுத்தான் விடியும் வரை... சுகவதையில் அவளை சுகிக்க வைத்தான்.
காலையில் எங்கோ கேட்ட ஃபோன் சத்தத்தில் தான் மெல்ல விழித்து எழுந்தவன், தன் நெஞ்சத்தை மஞ்சமாக்கி உறங்கும் வஞ்சியவளின் தலையை மெல்ல வருடியபடி ஃபோனை அட்டென்ட் செய்தான்.
“என்ன மா?” என்ற மகனின் சோபையான சோர்வான குரல் பர்வத்ததம்மாளுக்கு பல செய்திகளை சொன்னாலும் “கொஞ்சம் அவசரமா வீட்டுக்கு கிளம்பி வாயா.. அபிராமி வந்திருக்கா” என்றார்.
தூங்கும் மனைவியை அவசரமாக எழுப்பி இருவரும் அரக்க பறக்க வீடு வந்து சேர்க்க.. அங்கே சந்திரமதி ஸ்டைலில் தலையெல்லாம் கலைந்து, இளைத்து கருத்து ஆனால் கண்களில் மட்டும் அந்த ஒளி குறையாமல் அமர்ந்திருந்தார் அபிராமி.
மனைவிக்கு கண்களை காட்டி தங்கள் அறைக்கு போ என்று அவன் சொல்ல.. அவளும் இவர்களிடம் அகப்படாமல் நழுவி விட்டாள்.
“இப்போ என்னம்மா?” என்று அலுப்புடன் அன்னைக்கு அருகில் அமர்ந்தான் கதிர்நயனன்.
கோபத்தில் அமர்ந்த அபிராமியையோ சோகத்தில் அமர்ந்திருந்த ரவீந்திரனையோ அவன் கண்டு கொண்டான் இல்லை.
“நயனா.. இவ பிடிவாதம் குறையவே மாட்டேங்குது. ஒரே ஒரு தடவை எனக்காக வந்து ஆதி கிட்ட பேசி பாரு நயனா.. சாப்பிடாம கொள்ளாமல் உடம்பை எப்படி கெடுத்து வெச்சி இருக்கா பாரு” என்று கலங்கிய குரலில் உதவி கேட்கும் அக்கா கணவனை முறைத்து பார்த்தவனால் மறுக்க முடியவில்லை.
தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும் என்பது போல அத்தனை உருக்குலைந்து இருந்தாலும் கண்கள் மட்டும் தீட்சண்யமாய் மின்னிக் கொண்டுதான் இருந்தது அபிராமிக்கு.
“சரி மாமா.. உங்களுக்காக நான் அழைச்சிட்டு போறேன். ஆனா ஒரு கண்டிஷன் அங்க வந்து இவ வாயை திறக்க கூடாது” என்றதும் அவர் மனைவியை பார்க்க சரி என்று ஆமோதித்தார் அபிராமி.
அபிராமி என்ற குள்ளநரி பதுங்கி இருந்தது. அங்கே சென்று மகளிடம் ஏதாவது சண்டை போட்டாவது பிரித்து அழைத்து வந்து விட வேண்டும் என்ற நோக்கில்..
ஒரு லக்ஷ்ரியான அப்பார்ட்மெண்ட் உள்ளே அவர்களது கார் நுழைந்தது.
ஐந்தாவது மாடியில் உள்ள ஒரு வீட்டின் முன் நின்ற கதிர்நயனன் “இந்த வீடுதான்” என்று ரவீந்திரனுக்கு கண்களை காட்ட, அவர் காலிங் பெல்லை அழுத்தினார்.
வெகு நேரம் கழித்து வந்து கதவை திறந்த ஆதியை கண்டு இவர்கள் அதிர்ந்தார்கள் என்றால் பெற்றோரை எதிர்பார்க்காத அவளோ முதலில் அதிர்ந்தாலும் பின்பு “யார் வேண்டும்?” என்று அவர்களின் அதிர்ச்சியை பேரதிர்ச்சி ஆக்கினாள்.
“நான் சொல்லவா?” என்று அவர்கள் பின்னே நின்றிருந்த கதிர்நயனனின் குரல் கேட்டதும்.. அவள் கண்கள் தாமாக கீழே தாழ.. மெதுவாக கதவை திறந்தவள் வழி விட்டு நிற்க நால்வரும் உள்ளே நுழைந்தனர்.
வசதியாக வாழக்கூடிய அபார்ட்மெண்ட் தான் என்றாலும் இறுக்கமான டீ சர்ட் ஷார்ட்ஸில் நின்றிருந்த மகளைக் கண்டு முகம் சுழித்தார் அபிராமி.
அனைவரும் எதுவும் பேசாமல் சோபாவில் அமர, அவர்களுக்கு எதிரே ஆதிராவும் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
“அம்மா மேல தப்பு தான் ஆதி. அதுக்காக நீ இப்படி வந்து இங்கே இருக்கணுமா? சொன்னா கேளுடி.. உன் கல்யாணத்தை எப்படி எல்லாம் பண்ணி பார்க்கணும்னு ஆசைப்பட்டேன் தெரியுமா? நீ இப்படி வந்து யாருக்கும் தெரியாம திருட்டு கல்யாணம் பண்ணிட்டு வாழணும்னு தலையில எழுதி இருக்கா என்ன? எங்களோட ஊருக்கே வந்துருங்க ரெண்டு பேரும்..” என்று கெஞ்சலாகவே பேசினார்.
எப்படியாவது மகள் ஓடிப்போய் திருமணம் செய்துக் கொண்டதை ஊரார் உறவினருக்கு முன் நியாயப்படுத்தி விடும் நோக்கில் அமைதியாக பேசி காரியத்தை சாதிக்க முனைந்தார் அபிராமி.
ஆதியோ உதட்டை இளக்காரமாக சிரித்து “யார் சொன்னா உனக்கு நாங்க கல்யாணம் பண்ணிட்டு இங்க வாழ்றோம்னு?” என்றதும், ஆதிராவின் வார்த்தைகளில் அவளின் பெற்றோர் திடுக்கிட.. கதிர்நயனனும் பிரக்யாவும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டனர்.
“நானும் அவனும் லிவ்இன்ல இருக்கோம்” என்று அவள் முடிக்கும் முன்,
“பேப்.. எங்க போயிட்ட?” என்றபடி கலைந்த தலையோடு வெறும் பாக்ஸர் உயரத்தில் ஒரு ஷார்ட்ஸ் அணிந்து வந்த இளைஞனோ,
“குட் மார்னிங் பேப்” என்று எதிரில் இருப்பவர்களை கிஞ்சிற்றும் கண்டு கொள்ளாமல் அவள் உதட்டில் முத்தம் கொடுத்து செல்ல..
அதிர்ச்சியில் அவமானத்தில் உறைந்தது அபிராமியின் கண்கள்..!
