Share:
Notifications
Clear all

கிஷ்-மீ 1

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 245
Thread starter  

அத்தியாயம் 1

 

"அட ரைட்டரே!! என்ன டைட்டில் இது?"

 

அப்படின்னு நீங்க அதிர்ந்து ஆச்சரியமான சிரிப்போட என்னை பார்த்து கேட்கிறது புரியுது?

 

நீங்க நினைக்கிற போல இல்ல!

 

அந்த கிஸ் மீ வேற…!

இந்த கிஷ் மீ வேற..!

 

கிஷ்-ங்குற நம்ம வேதாந்த் கிருஷ்ணாவுக்கும்.. மீ-னு செல்லமா அழைக்கப்படுற நம்ம ராஜ மீராவுக்கும்.. நடக்குற அடிதடி சண்டை.. கெஞ்சல் கொஞ்சல்..‌ மோக தாபம்.. ஊடல் கூடல்.. எல்லாம் சேர்ந்து எப்படி லவ்வாங்கி ஆகி.. 

 

கிஷ்ஷூம் மீயும் சேர்ந்து எப்படி

கிஷ்-மீ யா மாறாங்க என்பது தான் இக்கதை! 

 

அப்போ ஜூட்… போகலாமா????

 

"ஹாய் கிஷ்.." என்று கிறக்கமாக ஒலித்தது அந்த ஆங்கிலோ பெண்ணின் குரல் அவள் லோரா!

இந்தியாவில் கிருஷ் என்று அழைத்தவனை கிஷ் ஆக்கிய பெருமை இவர்களையே சாரும்.

 

"ஹாய்… லோரா!" என்று அழைத்தவன் அருகில் வந்து அமர்ந்தாள் ஒயிலாக அவள்.

 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்திருக்கும் ஒரு பிரபல ஐடி நிறுவனத்தின் காப்ட்டேரியா அது!

 

அதில் தான் தனது மதிய சாப்பாட்டை சாப்பிட்டு கொண்டு இருந்தவனின் அருகில் வந்து எவ்வளவு நெருங்கி அமர முடியுமோ அவ்வளவு நெருக்கமாக இருக்கையை போட்டு அமர்ந்திருந்தாள் அந்த பெண் லோரா.

 

அவனோடு ஒரு நெருக்கம்!

கண்களில் ஒரு மயக்கம்!

உடல் மொழியில் ஒரு கிறக்கம்!

 

ஆனால்… கிஷ்ஷூக்கோ தயக்கம்!

 

கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக அவன் ஆன்சைட் வேலைக்காக வந்ததிலிருந்து, அவளும் எப்படி எப்படி எல்லாமோ தன் மன அபிலாஷயை கூறுகிறாள் தான். அனைத்தையும் சன்ன சிரிப்போடு கடந்து விடுகிறான் இந்த கிஷ்! 

 

"எப்படி இவனால் மட்டும் இப்படி முடிகிறது? செய்ன்ட் மாதிரி?!" என்று சில நேரம் அலுத்துக் கொண்டாலும் பல நேரம் பெரும் வியப்பு அவளுக்கு.

 

சிறிது நேரம் அவளோடு பேசிக்கொண்டே உணவை முடித்தவன் "பை லோரா..! என்று நகர முயன்றவனை தடுத்து நிறுத்தியவள்,

 

"வாட் அபொவுட் டுடே நைட்?" என்று இதழ்களை மடித்து கண்களில் தாபம் வழிய மோகன பார்வை பார்த்தாள்.

 

"ஓஹ்.. நாட் இன்ட்ரஸ்ட் பட்டி! டோண்ட் மைண்ட்!" என்று இரு தோள்களையும் குலுக்கிக் கொண்டு புன்னகையோடு நகர்ந்து சென்று விட்டான்.

 

இவளோ கோபமாக அவனையே பார்த்து பெருமூச்சு விட்டாள். அவளின் கோப பெரு மூச்சை சுவாசித்தப்படி அருகில் அமர்ந்தான் நிக்!

 

"ஏய் லோரா.. நீ ஏன் படியாத அவனுக்கு பிராக்கெட்டை போட்டுக் கொண்டிருக்குற?" என்று கோண வாய் சிரிப்போடு அவன் கேட்டான்.

 

லோரோ அவனை முறைத்து பார்த்தவள் "அதெல்லாம் படிந்து விடுவான்! இன்னும் கொஞ்ச நாளில்.. இப்பவே இவ்வளவு நெருங்கி விட்டேன்.. கூடிய சீக்கிரம் அவனையே மேரேஜ் பண்ணி காட்டுகிறேன் பார்" என்று அவளும் விரைப்பாய் சபதம் செய்ய..

 

தன் கையில் இருந்த உணவை உண்டபடி அவளைப் பார்த்து சிரித்த நிக் "அப்படி எல்லாம் அவனை நீ நெருங்க முடியாது. பெரும்பாலும் இந்தியர்கள் பழக ஜாலியா இருந்தாலும்.. ஏன் லிவிங்ல இருந்தாலும் கூட கல்யாணம் எனும் போது ரொம்ப உஷாரா அவங்க ஒரு இந்திய பொண்ண தான் கல்யாணம் பண்ணிக்குவாங்க.. அவனும் அப்படித்தான்! முயற்சி செய்து ஏமாந்து போகாதே!" என்று கூறியவன் "இன்னைக்கு நைட்டு நான் ஃப்ரீ தான்!" என்று கண்ணடித்தான்.

 

அவளோ சிரித்தபடி அவன் முதுகில் தட்டி "ஐ அம் நாட் இன்ட்ரஸ்ட் நிக்!" என்று சென்று விட்டாள்.

 

"அவளுடைய இன்ட்ரஸ்ட் எல்லாம் அந்த கிஷ் தான்!" என்று தலையாட்டிக் கொண்டவன், அவனிடமே சென்று "எப்படிடா இவ்வளவு கண்ட்ரோலா இருக்க? ஆனாலும் இந்த விஷயத்தில் இந்தியர்களை நான் பார்த்து பொறாமைப்படுறேன்! நீங்க எவ்வளோ கண்ட்ரோலா இருக்கீங்க" என்று புலங்கிதம் அடைந்தான்.

 

அவனுக்கு என்ன தெரியும்? அடி வெளுத்து வாங்கி உடம்பு புண்ணாகிய நம் கிஷ்க்கு அல்லவா தெரியும்? எதனால் இப்படி அவன் ஒழுக்க சீலனாக வளர்ந்தான் என்று!!

 

அது என்ன கிஷ்… வேதாந்த் கிருஷ்ணா என்பதின் சுருக்கம் தான் இந்த கிஷ்!

 

தன்னைப் பார்த்து பெருமைப்பட்டுக் கொண்டிருந்த நிக்கிடம் உண்மையை கூற முடியாமல் அதே சமயம் பெண்ணை ஏறெடுத்தாலே பெல்ட்டை உருகும் தன் அப்பா ஞாபகம் வர தலையை உலுக்கி கொண்டான் வேதாந்த் கிருஷ்ணா! 

 

எதுக்கு இவ்வளவு பெரிய நீளமா பேரு நம்மளும் லோரா போலவே கிஷ் என்று அழைப்போம். நியூயார்க்கில் மட்டும்!

 

"டேய் தகப்பா… இப்படி கடல் கடந்து வந்து என்னை புலம்ப வச்சிட்டியே? நான் பொண்ணங்கள பார்க்க மாட்டேனா? என் நிலைமைய பார்த்தாயா? சுத்தி கலர் கலரா ரகம் ரகமாக விதம் விதமா பொண்ணுங்க.. அதுவும் கிருஷ்ணானு என் பேருக்கு ஏத்த மாதிரியே என்னை சுத்தி சுத்தி வருதுங்க.. ஆனால் ஒன்னுத்தையும் என்னால நெருங்க முடியல.. ஏறெடுத்து பார்க்க முடியல..!! எல்லாத்துக்கும் காரணம் நீ தான்யா தகப்பா! உன்னை யாருய்யா சின்ன வயசுலேயே இவ்வளவு கட்டுப்பாட பெல்ட்லா அடிச்சு என்னை வளர்க்க சொன்னது?" என்று தன் ஒற்றைப் படுக்கறை வீட்டில் இருக்கும் தங்களது குடும்ப புகைப்படத்தில் நடுநாயகமாக நின்று சிரித்து கொண்டிருக்கும் தன் தகப்பனை பார்த்து தான் அத்தனை கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தான் நம் கிஷ்!

 

"ஆனா ஒன்னு யா.. கண்டிப்பா நான் அரேஞ்ச் மேரேஜ் பண்ணிக்க மாட்டேன்! பாத்துகிட்டே இரு… நல்ல அட்ட கருப்பியா.. ஜெய்ஜான்டிக்கா.. நல்ல ஆப்பிரிக்கா பொண்ண கட்டிட்டு கூட்டிட்டு வரல??" என்று அந்த புகைப்படத்தை விரல் நீட்டி அவன் கேட்க..

 

அந்த போட்டோவிலேயே அவன் அப்பா ஒற்றைப் புருவத்தை உயர்த்தி பார்ப்பது போலவே தோற்ற பிழை அவன் கண்களுக்கு தெரிய "வரல தான்! போய்யா…!" என்று கடுப்போடு கட்டிலில் கவுந்து படுத்து விட்டான்.

 

இவ்வளவுதான் நம் நாயகன்!!

 

என்னதான் வீர வசனங்கள் பேசினாலும்.. ஆன் சைட்டுக்காக வெளிநாட்டில் வந்து வேலை செய்தாலும்.. தகப்பனை தாண்டிய மகன் அல்ல!

 

அக்மார்க் அப்பா சொல்லை தட்டாத பையன்..

 

அந்த அப்பா என்ன செய்கிறார்? இவனுக்கு தான் கல்யாணம் ஏற்பாட்டை செய்து கொண்டிருக்கிறார் இவனுக்கு தெரியாமலேயே!!

 

அத்தனை நம்பிக்கை மகன் மீது!!

 

வந்தாரை வாழவைக்கும் சென்னையில் தான் இப்பொழுது தீனதயாளின் வாசம்! 

 

தீனதயாளன் வேற யாரும் அல்ல நம் வேதாந்த கிருஷ்ணாவின் தந்தை!

 

அவரது சொந்த ஊர் புதுக்கோட்டை! சிறுவயதிலேயே அவரது தந்தை பிழைப்பிற்கு என்று இங்கே வந்துவிட.. அவர் வைத்த சிறு பெட்டிக்கடை தீனதயாளினின் அதீத உழைப்பாலும் நிறைய கடன்களாலும் இன்று டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஆக உருவெடுத்து வளர்ந்து நிற்கிறது. அதுவும் ஒன்று அல்ல இரண்டு சென்னையின் முக்கியமான பகுதியில்!

 

கிருஷ்'ஸ் என்று மகனின் பெயரில் தான் அதை ஆரம்பித்தார். பெயர் கொண்ட ராசியோ அல்லது அவரது அதிர்ஷ்டமோ.. காற்று அவர் பக்கம் வீச.. சிறிதாக இருந்த மளிகை கடை இப்பொழுது இரண்டு அடுக்குகளை கொண்ட டிபார்ட்மெண்ட் ஸ்டோராக கம்பீரமாக நின்று பன்னாட்டு நிறுவனங்களுக்கே டஃப் கொடுக்கிறது!!

 

பின்னே சிறு பெட்டிக்கடைகளையும் அண்ணாச்சி என்று விளித்து கடன் வாங்கி செல்லும் சிறு சிறு மளிகை கடைகளையும் தான் இப்பொழுது காண முடிவதில்லையே..!! 

 

எல்லாத்தையும் ஒட்டுமொத்தமாக ரீடைல் ஷாப் எம்என்சி என்ற பெயரில் அழித்து, நமக்கு நாமே நாமம் சூட்டிக் கொண்டோம்!!

 

அன்று வெள்ளைக்காரன் கம்பெனி என்ற பேரில் உள்ளே நுழைந்தான் என்றால்.. இன்று நாமே எம்என்சி என்று பரங்கியனுக்கு தலையை கொடுத்துக் கொண்டோம்!

ஆடு வசமாக மாட்டிக் கொண்டது என்று அவனும் பிடித்து நம்மளை பிரியாணி போட்டுக் கொண்டிருக்கிறான்..

 

அட!? என்ன வர வர நாமளும் ரொம்ப பொறுப்பா பொது நியாயம் எல்லாம் பேசுகிறோம்?? தப்பாச்சே..!! வாங்க வாங்க கதைக்குள்ள போகலாம்!!

 

தீனதயாளன் வெகு கண்டிப்பானவர். அதேசமயம் நியாயமானவர்! ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்!

சிறுவயதிலேயே வேதாந்த் கிருஷ்ணாவை சற்று கண்டிப்போடு தான் வளர்த்தார்.

 

"பையன என்ன இப்படி வளர்த்து வச்சிருக்கீங்கனு.. நாளைக்கு யாரும் நம்ம முன்னே கைநீட்டி ஒரு கேள்வி கேட்டு விடக்கூடாது சங்கீ புரிஞ்சுதா?" என்று தன் மனைவி சங்கீதாவிடம் கூற, அவரும் பொறுப்பான தாயாக கடமை உணர்ச்சி கொண்ட மனைவியாக தலையாட்டி கொள்பவர், கணவன் தலை மறைந்ததும் மகனுக்கு செல்லம் கொடுப்பார்.

 

ஆனால் அதுவும் அளவு மீறி கிடையாது. பெற்றோரில் ஒருவர் கண்டிப்பு என்றால் மற்றவர் செல்லம் கொடுத்தால் தானே பிள்ளைகள் நன்முறையில் வளரும். ஆனாலும் அந்த செல்லம் எல்லாம் வீட்டோடு தான்.

 

அந்தச் செல்லத்துக்கு தான் இப்பொழுது கல்யாண ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார் தீனதயாளன் செல்லத்துக்கிட்ட கேட்காமலேயே!!

 

"டேய்.. கண்ணா.. கண்ணா.." என்று அழைக்க "சொல்லுங்கப்பா..!" வந்து நின்றான் ராகுல் கண்ணா. உண்மையில் அவன் தீனதயாளின் தம்பி தயாகரனின் மகன்!

 

தம்பியோடு கூட்டாக தான் இங்கே தொழில் நடத்திக் கொண்டிருந்தார். சொந்த ஊரில் திருமணத்திற்காக இவர் செல்ல முடியாமல் தம்பியையும் அவர் மனைவியையும் அனுப்பி வைக்க.. குடித்துவிட்டு கட்டுப்பாடு இல்லாமல் வந்த ஒரு மணல் லாரி திருச்சி அருகே இவர்களது வண்டியில் மோதியதில், காரையே பார்ட் பார்ட்டாக பிரித்து தான் தம்பியையும் அவர் மனைவியையும் கண்டெடுத்தார் அவர். அது முதல் பெரியப்பாவாக இருந்தவர் அப்பாவாகி போனார் ராகுல் கண்ணாவிற்கு.

 

அவனுமே அவ்வளவு பொறுப்புள்ள பையன். அவர் எள் என்பதற்கு முன் எண்ணெயாக இருப்பான். அதே நேரம் அண்ணன் என்றால் இன்னமும் அத்தனை நெருக்கம் கண்ணனுக்கு.

 

"இதுல பத்து லட்சம் பணம் இருக்கு. கல்யாணம் என்ன தான் பொண்ணு வீட்டு ஆளுங்க பண்ணாலும் சில இடத்துல நம்மளும் பங்கு எடுத்துக்கணும். நான் பொண்ணோட அப்பா கிட்ட பேசிட்டேன். அவர் ஆபீஸ்ல தான் இருப்பார்.. கொண்டு போய் இதை கொடுத்துட்டு வந்துடுறியா?" என்றதும் "சரிங்க பெரியப்பா!" என்று அந்த பையை வாங்கிக் கொண்டான் கண்ணன்.

 

"என்னங்க நீங்க? அவனே சின்ன பையன் அவங்கிட்ட போயி இவ்ளோ பணத்த கொடுத்து விடுகிறீங்க?" என்று வந்தார் சங்கீதா. 

 

இவன் அம்மா என்று பல்லை கடிக்க அவன் தாடையை பாசமாக பிடித்து "அப்படி இல்லடா கண்ணா! காலம் கெட்டு கிடக்கு இல்லையா? அதைத்தான் சொன்னேன். அதுவும் இல்லாம அவன மட்டும் அனுப்புனீங்கன்னா அத்தனை மரியாதையா இருக்காது. நம் கடை ஆடிட்டர் ஆபீஸ் பக்கம் தானே? அப்படியே கொடுத்துட்டு இரண்டு பேரும் கடைக்கு கிளம்புங்க" என்றதும் மனைவி சொல்வது சரி என்று பட "சரி சங்கீ!" என்றார்.

 

கிளம்பும் அவரிடம் "ஏங்க.." என்று இவர் இழுக்க…

 

"சொல்லுங்க…" என்று அவரும் அதே போல இழுக்க..

 

"இல்ல கிருஷ்ணா கிட்ட… சொல்லாம…‌ இப்படி பண்ணுறது.. என்ன இருந்தாலும் வளர்ந்த பிள்ளை இல்லையா? ஒரு வார்த்தை அவன் கிட்ட…" என்று அவர் திக்கி திணறி கேட்கும் முன் மனைவியை முறைத்தார்.

 

"ஏற்கனவே ரெண்டு தடவை அவனது கல்யாணம் ஏற்பாடாகி நின்னு போச்சு! நிஜமாலுமே தானா தான் நின்னு போச்சா இல்ல உன் புள்ள தான் ஏதாவது கிறுக்குத்தனம் பண்ணி நிப்பாட்டுனானு எனக்கு இன்ன வரைக்கும் சந்தேகமா இருக்கு! அந்த கிறுக்கு பய புள்ள அப்படி செய்வதற்கும் வாய்ப்பு இருக்கு! அதனால இப்போதைக்கு அவன் கிட்ட வாயை திறக்காத! எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு சொல்லிக்கலாம்"

என்று மனைவி இடம் கூறியவர் சின்ன மகனைப் பார்த்து,

 

"ஏன்டா கண்ணா.. உனக்கு அவன் ஃபாரின் வேலை முடிஞ்சு எப்ப ஊருக்கு வரானு தெரியுமா?" என்று கேட்டார்.

 

"அடுத்த மாசம் மொத வாரத்துல வந்துடுவேனு கிருஷ் சொன்னாப்பா.. இந்த மாசம் வேலை முடிஞ்சிடும்! சில வேலைகள் எல்லாம் இருக்கு முடிச்சிட்டு அடுத்த மாசம் ஐந்து தேதிக்குள் வந்துடுறேன்னு சொல்லி இருக்கான்" என்றான்.

 

"அப்ப சரி.. அஞ்சிலிருந்து பத்துக்குள்ள எந்த தேதி நல்லா இருக்குமோ.. அந்த தேதியே ஃபிக்ஸ் பண்ணிடலாம்" என்றார் தீனதயாளன்.

 

"ஏங்க.. அந்த பொண்ணுக்கும் ஒத்து வருமான்னு கேட்டுட்டு பண்ணுங்க! எல்லாம் உங்க இஷ்டப்படி தான் பண்ண வேண்டியது! ஒவ்வொண்ணத்துக்கும் நாம தான் சொல்லிக் கொடுக்கணும்! கடையை மட்டும் பார்த்துக்கிட்டா மட்டும் போதுமா… இந்த மாதிரி விஷயத்துல யாரு பார்த்து பார்த்து செய்யுறது?" என்று நொடித்துக் கொண்டவர் கணவன் அருந்தி விட்டு வைத்த காஃபி டம்ளரை உள்ளே எடுத்துச் சென்றார்.

 

"பாருடா உங்க அம்மாவ.. இதுதான் சாக்குனு என்னை எப்படி எல்லாம் பேசுறா பாரு.. இந்த பொம்பளைங்களே இப்படித்தான்!" என்று அவர் சத்தம் போட்டு பேச..

 

அவனோ "சத்தத்தை குறைங்க.. சத்தத்தை குறைங்கப்பா! மத்தியான சாப்பாடு வேணுமா இல்லையா?" என்றதும் "ஆமா டா மகனே!" என்று வெளியே கிளம்பி விட்டனர் அப்பாவும் மகனும்.

 

அது என்னவோ தன் மகனை விட கண்ணனிடம் சற்று இலகுவாக தான் இருப்பார் தீனதயாளன். இழந்துவிட்ட தம்பி மகன் என்ற பாசமா இல்லை தான் சொன்னதற்காகவே பிஸினஸ் மேனேஜ்மென்ட் படித்து தன்னுடனே டிபார்ட்மெண்ட் ஸ்டோர் பார்த்து கொள்கிறான் என்கிற எண்ணமா தெரியவில்லை!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top