இராவணா 30

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 244
Thread starter  

அத்தியாயம் 30

 

“எதே லிவ் இன் ஆஆ??” என்று மொத்த குடும்பமும் ஸ்தம்பித்து பார்க்க..

 

“எஸ்.!” என்றாள் ஆதி நிமிர்வாகவே.‌!

 

“எனக்கு அவனை பிடிச்சிருக்கு.. அவனுக்கும் என்னை பிடிச்சிருக்கு.ஆனா அவனுக்கு கல்யாணத்துக்கு புடிக்கல.. இந்த ஒரு விஷயத்தால அவனை இழக்க நான் விரும்பல..! சோ.. அவனுக்கு புடிச்ச மாதிரி இப்ப லிவ் இன்ல இருக்கோம்” என்று தோளை குலுக்கி அலட்சியமாக சொன்ன மகளை கண்டு மனம் விண்டது அபிராமிக்கு.

 

“கடவுள் இருக்கான் குமாரு..!” என்பது போல அக்காவை நக்கலாக பார்த்தான் கதிர்நயனன்.

 

பின்னே தப்பே செய்யாத தன் மனைவியை சிறுவயதில் இருந்து குற்றம் சொல்லி.. குற்றம் சொல்லி குளவி கொட்டுவது போல அத்தனை பாடுப்படுத்தினார் அல்லவா?

 

“அம்மா இல்லாத குழந்தை தருதலையா வளரும்.. அவளுக்கு நான் அறிவுரை தான் கூறுகிறேன்” என்ற பெயரில் மனதளவில் அவளை பலஹீனப்படுத்தினார் தன் வன்மத்தை எல்லாம் கொட்டி..!

 

அதன் உச்சமாக நயனன் செய்த தவறால் பிரக்யா கர்ப்பமாக அதனை கொண்டு எத்தனை பேச்சு பேசி இருப்பார்..??

 

இன்று அதற்கெல்லாம் திருப்பிக் கொடுத்தது போல.. அவரின் மகள் அவர் கண் முன்னாலேயே ஒரு பையனோடு அரைகுறை ஆடையில் லிவ் இன்னில் இருக்கிறேன் என்பதனை சர்வ சாதாரணமாக கூறுகிறாள், பெற்றோர் கண் எதிரிலேயே அவனுக்கு லிப் லாக் கொடுக்கிறாள்.. இதைவிட பெரிய தண்டனை எதுவும் வேண்டுமா அபிராமிக்கு??

 

“ஆதி.‌.!” என்று அதட்டலாக அபிராமியும் ரவீந்திரனும் அழைக்க.‌.

 

அவர்கள் முன்னே கையை உயர்த்தி காட்டியவள் “நான் மேஜர்..! என்னை கட்டுப்படுத்தவோ கட்டாயப்படுத்தவோ உங்களால முடியாது. மீறி இங்க உட்கார்ந்து சீன் போட நினைக்காதீங்க..!” என்றாள் தெளிவாகவே..!

 

அதற்குள் அந்த இளைஞனுக்கு கொஞ்சம் விருந்தோம்பல் உபச்சாரம் தெரிந்தது போல.. அனைவருக்கும் காஃபி கலக்கி கொண்டு வந்து டீபாயில் வைத்தவன்,

 

“எடுத்துக்கோங்க..!” என்றான் புன்னகையோடு.

 

நல்ல வேளை தன் பேர் பாடியை காட்டாமல் ஒரு டீசர்ட் அணிந்திருந்தவன், ஆதியின் அருகே நெருக்கமாக அமர்ந்துக் கொண்டான். 

 

தஞ்சாவூர் எத்தனை தான் நவநாகரீகமாக மாறினாலும் மனதளவில் இன்னும் அதே பழைய பாரம்பரியங்களையும் பண்பாடுகளையும் பழக்கவழக்கங்களையும் கொண்ட அபிராமியால் இந்த உறவு முறையை சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..!

 

ஆனால் அவனின் உபசரிப்புக்காக காஃபியை மனைவியிடம் ஒன்று கொடுத்து தானும் ஒன்று எடுத்து அருந்தினான் நயனன்.

 

“பேப்.‌ இவங்க யாருன்னு இன்ட்ரோ பண்ணல எனக்கு?” என்று அந்த இளைஞன் கேட்க..

 

“தே ஆர் மை பேரண்ட்ஸ்..!” என்று அவள் அறிமுகப்படுத்திய தினுசில்..

 

இப்படி ஒரு அறிமுகத்தை எந்த பெற்றோரும் தன் மகளிடம் எதிர்பார்த்து இருக்கவே மாட்டார்கள்..!

 

“அவர் என் தாய் மாமா.. அவ என் உமையா அக்கா” என்றாள்.

 

“தட் டாக்டர் அக்கா??” என்று அவன் யோசனையாக கேட்க..

 

“ஆமா..” என்று சிரித்தாள் ஆதி.

 

‘அடிப்பாவி..! இங்க வந்து உங்க அம்மாவுக்கு நேரா என் பேர் சொல்லி போட்டு கொடுத்த பார்த்தியா? உன்னை..!' என்று கண்களால் பிரக்யா அவளை முறைக்க..

 

“லவ் யூ கா” என்று இவளும் கண்சிமிட்டி சிரித்தாள். 

 

கதிர்நயனனாலும் பிரக்யாவாலும் இவர்கள் வாழும் முறையை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், 'இது அவர்கள் வாழ்க்கை.. நாம் அறிவுரை தான் கூற முடியும்.. மற்றப்படி அவர்கள் விருப்பம்' என்று விலகி விட்டனர்.

 

விடை பெற்று அவர்கள் கிளம்பும் போது “நீங்களும் என்னை போல யூ.எஸ்ல தான் படிச்சீங்கன்னு ஆதி சொன்னா” என்று அவன் கைக்குலுக்க கை நீட்ட..

 

“யூ.எஸ்ல டாக்டர் படிப்பை மட்டும் படிச்சேன். அந்த கல்ச்சரை இல்ல.. வரேன்.. ஆதிய பத்திரமா பார்த்துக்கோங்க.!” என்று கை கூப்பி விடை பெற்றாள் பிரக்யா.

 

மனைவியை ஒரு மெச்சுதல் பார்வையோடு பார்த்தவன், திரும்பி அப்படியே அக்காவை பார்த்து ‘பார்த்துக்கோ என் மனைவிய.. நீ இவளை தான் குத்தம் சொன்ன?’ என்பது போல பார்த்துவிட்டு ஆதி அருகே அவன் செல்ல..

 

“சாரி மாமா..! உங்கள்ட்ட சொல்ல தான் நினைச்சேன். ஆனா..” என்று ஆதி தலை குனிய..

 

அவளின் தலையை மெல்ல வருடியவன், “என்னதான் காதல் ஒசத்தினாலும் சில விஷயங்களை என்னால டைஜஸ்ட் பண்ண முடியல ஆதி.. முடிஞ்சா ரெண்டு பேரும் மாற பாருங்க.‌.” என்று இருவரிடமும் தலையசைத்து விட்டு அவர்கள் முன்னால் நடக்க..

 

மகளின் இந்த நம்பிக்கை துரோகத்தை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டபடி மகளை திரும்பி கூட பாராமல் சென்றனர் ஆதியின் பெற்றோர். 

 

பர்வதத்தம்மாளிடம் இந்த விஷயத்தை நயனன் பகிர்ந்துக் கொள்ள,

 

“ஏன் இந்த ஆதிக்கு புத்தி இப்படி போச்சு.. எங்களுக்கு இந்த காலத்து பிள்ளைங்க போக்கையே புரிஞ்சுக்க முடியல.. இப்படியே போனால் குடும்பம்,கட்டுப்பாடு,பழக்க வழக்கங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சு போயிடும் போல.. பிரகதீசா..!” என்று புலம்பியபடி தன்னறைக்கு சென்றார். 

 

இப்படியாக சில மாதங்கள் கடந்தது. மற்றவர்களை மறந்து கதிர்நயனனும் பிரக்யாவும் தங்கள் காதல் உலகத்தில் சஞ்சரித்தனர் எவ்வித இடையூறும் இன்றி..!!

 

“மாமா.. மாமா.. சீக்கிரமா போங்க.. ஃபிளைட்டுக்கு டைம் ஆச்சு. இப்பதான் மாட்டுவண்டி ஓட்டுற மாதிரி மெதுவா போறீங்க?” என்று அருகில் கார் ஓட்டிக்கொண்டிருந்த கணவனிடம் பதட்டமாக கூறிக் கொண்டிருந்தாள் அவ்வப்போது கைக்கடிகாரத்தை பார்த்தபடியே பிரக்யா. 

 

டெல்லியில் நடக்கும் ஒரு முக்கிய குழந்தை மருத்துவர்களுக்கான மாநாட்டில் கலந்துக் கொள்ள செல்கிறாள்.

 

திருச்சி விமான நிலையத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தது அவர்கள் கார். அவனோ முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு காரை ஓட்டிக் கொண்டிருந்தான். 

 

“போகட்டுமா போகட்டுமான்னு கேட்ட போதெல்லாம்.. போ போன்னு சொல்லிட்டு இப்ப கிளம்பும்போது மூஞ்ச தூக்கி வெச்சிட்டு உக்காந்து இருக்கீங்க. இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாவே இல்ல சொல்லிட்டேன்” என்று கணவன் புஜத்தில் குத்தினாள் அவள். 

 

“நான் என்ன செய்யட்டும் ப்ரொஃபஷனா? புருஷனா? நீ கேட்கும்போது.. புருஷனை மட்டும் பாருனு சுயநலமா சொல்ல முடியாது இல்ல..! ஆனா உனக்கே தெரியும் இல்ல. என்னால உன்னை விட்டு இருக்க முடியாதுன்னு..” என்று சிறுப் பிள்ளைப் போல் கூறியவனைக் கண்டு நகைத்தாள்.

 

“மாமா.. மாமா.. ஜஸ்ட் த்ரீ டேஸ் தான். இப்படி சொடக்கு போடுறதுக்குள்ள ஓடிடும். ரொம்ப வருஷம் கழிச்சு லீனாவை பார்க்க போறேன்.. சோ.. ரொம்ப எக்சைட்மென்ட்டா இருக்கு..!” என்று அவள் சந்தோசமாக குதூகலிக்க..

 

“ஓகே.. ஓகே..! டெய்லி எனக்கு கால் பண்ணனும். அதுவும் வீடியோ கால்”

 

“ஏதே.‌ நோ வே..!”

 

“அப்படியெல்லாம் சொல்லக்கூடாது செல்லக்குட்டி டெய்லி வீடியோ கால் வா..” 

 

“அஸ்கு புஸ்கு.. எப்படியும் நானும் லீனாவும் ஒரே ரூம்ல தான் ஸ்டே பண்ணுவோம். அவளை பக்கத்துல வச்சுக்கிட்டு உங்களுக்கு வீடியோ கால் பண்ண முடியாது” என்று நாணினாள்.

 

“டேக் கேர் சின்னு” என்று அவளை இறுக்க அணைத்து நெற்றியில் முத்தமிட்டு மனைவிக்கு பிரியா விடை கொடுத்தான். 

 

முதல் இரண்டு நாள் எப்படியோ ஓட்டிவிட்டான். இரண்டு நாளாக வெறும் ஃபோனில் மட்டுமே குடும்பம் நடத்த.. அவனுக்கோ வெறுப்பாக இருந்தது. 

 

மனைவியின் அன்புக்காக.. அணைப்புக்காக.. அரவணைப்புக்காக.. ஏன் அவளின் அனைத்தும்-க்காக ஏங்கினான் தலைவன்.

 

இரண்டாவது நாள் சரியாக அவனிடம் பேசக்கூட இல்லை பிரக்யா.

 

“மாமா.. ப்ளீஸ் நாங்க இன்னைக்கு ஷாப்பிங் போறோம். அதனால நைட்டு ரூமுக்கு வந்துட்டு உங்க கிட்ட பேசுறேன் ஓகேவா” என்றவள் சென்று விட..

 

இங்கே நயனனோ செல்ஃபோனையே உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் நொடிக்கு ஒரு தரம். 

 

மகராசியோ 11 மணிக்கு மேல் தான் அவனுக்கு அழைத்தாள்.

 

“சூப்பரா இருந்துச்சு மாமா ஷாப்பிங்.‌ ஸ்ட்ரீட் ஃபுட்.. அக்ஸஸரீஸ் அது இது நிறைய திங்ஸ் வாங்குனேன்” என்று அடுக்கிக் கொண்டே வந்தவள்,

 

“ஹான்.. சொல்ல மறந்துட்டேன்.. ஆருவை பார்த்தேன். அவனுக்கு இங்க இன்டர்வியூவாம். பிரண்ட்ஸ் கூட வந்திருந்தான். ஆனா ரொம்ப பேச முடியல” என்றாள்.

 

நயனனோ வெறும் ம் மட்டும் கொட்டிக் கொண்டிருந்தான்.

 

“சரி மாமா நான் வச்சுடுறேன்.. குட் நைட் உம்மா..” என்று அவள் ஃபோனை வைத்துவிட.. அவனோ இரவு தூக்கம் இல்லாமல் புரண்டான்.

 

மூன்றாவது நாள் அவனால் சுத்தமாக முடியவே இல்லை..! 

 

“அம்மா நான் போய் உங்க மருமகளை கூட்டிட்டு வரவா?” என்று அவன் கேட்ட தினுசில்.. அதுவும் பேத்தி போய் மருமகள் வந்ததை கவனித்த பர்வதத்தம்மாள் சிரித்த முகத்தோடு, “அதுக்கு என்ன யா.. மகராசனா போய் கூட்டிட்டு வா” என்று அனுப்பி வைத்தார்.

 

புதிதாய் காதல் முளைத்த பருவ வயது காதலனாய்.. சிறகில்லாமல் வானத்தில் பறந்தவாறு.. அந்த இயந்திரப் பறவையில் உற்சாகமாக பயணித்து டெல்லியை வந்து அடைந்தான் நயனன். அதுவும் காலை வேளையிலேயே..!

 

அப்போது தான் லீனாவும் பிரக்யாவும் மூன்றாம் நாள் கூட்டத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்.

 

அப்பொது லீனா ஒரு கவரை பிரக்யாவிடம் நீட்டினாள்.

 

“என்னடி இது? எங்க மேரேஜ் கிஃப்ட்டா?” என்று ஆவலாக பிரித்துப் பார்த்தவள், உள்ளே இருந்த அவளது டைரியை கண்டு விழி விரித்து “இது எப்படி உன்கிட்ட?” என்று ஆச்சரியமாக கேட்டாள்.

 

“அன்னைக்கு உங்க மாமா வந்து உன்னை அவசர அவசரமா ஹாஸ்டல் வெக்கேட் பண்ணி கூட்டிட்டு போனாங்களே.. அப்ப இதை மிஸ் பண்ணிட்ட. ஆனா உன்கிட்ட என்னைக்காவது ஒருநாள் நேர்ல பார்க்கும்போது கொடுக்கணும்னு பத்திரமா எடுத்து வைச்சிருந்தேன்” என்றதும், புன்னகையோடு அதை புரட்டினாள் பிரக்யா. 

 

“பாரேன் உனக்கு கூட பொறுப்பு வந்திருக்கு.. பத்திரமாக இத்தனை வருஷம் வச்சிருக்க பாரு..”

 

“நீ வேற பொறுப்பும் இல்ல ஒன்னும் இல்ல.. நீ போனதுக்கு அப்புறம் உன்னை நான் ரொம்ப மிஸ் பண்ணேன். சரி அப்படி என்னதான் இதுல எழுதி வச்சிருக்கேன்னு உன் கவிதையை என்னோட நெட் மூலமா அர்த்தம் தெரிஞ்சிக்க ஆரம்பிச்சேன். வாவ்.. எப்படி டி.. இப்படி ஒருத்தர் மேல பித்தாகி கவிதை எழுத முடியுமா? எனக்கு பயங்கர ஆச்சரியம்..! அப்ப முடிவு பண்ணுனேன்..”

 

“என்னன்னு?” என்று சிரிப்போடு கேட்டாள் பிரக்யா.

 

“ம்ம்ம்.. கல்யாணம் பண்ணுனா, நானும் இந்த மாதிரி எவனையாவது லவ் பண்ணி அவன் மேல பித்து பிடிச்சு அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணி செட்டில் ஆகணும்னு.. ம்ம்ம்.. எங்க? இன்ன வரைக்கும் ஒருத்தனும் கிடைக்கல..” என்று பெரு மூச்சு விட்டவளை பார்த்து கலகலத்து சிரித்தாள் பிரக்யா. 

 

“ஆமா.. கேட்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன். இதுல நீ மென்ஷன் பண்ணி இருக்குற அந்த ராவணன் தான் உன்னோட ஆளா? ஆனா இப்ப நீ உங்க மாமாவை தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேனு சொன்ன? இதுல வேற.. அந்த அப்பார்ட் ஆன குழந்தை..! ஆனா உன் வாழ்க்கைல இவ்வளவு சிக்கல் இருக்கக் கூடாது ப்ரக்” என்று அணைத்து உண்மையாக பிரக்யாவுக்காக வருத்தப்பட்டாள் லீனா. 

 

“நீ வருத்தப்படாத லீனு. வாழ்க்கை என்னை வச்சி செய்யல.. நாம நம் அன்புக்கு உண்மையாக இருந்தா.. நேசத்தை பரிசுத்தமா வச்சிருந்தா.. அந்த இயற்கையே நம்மள அவங்க கிட்ட போய் சேர்க்கும்” என்றாள் கண்களில் கனவு மின்ன.

 

“இயற்கையே சேர்க்குமா?” லீனா அவளை குழப்பமாக பார்க்க..

 

“எஸ்..! உன்னோட மூன்று கேள்விக்கும் ஒரே பதில்.. கதிர்நயனன்” என்று அழகாக புன்னகைத்தாள் பிரக்யா.

 

“மூணு கேள்வினா.. இந்த கவிதையில வர்ற ராவணன்.. இறந்து போன குழந்தை.. இப்ப உன் மாமா..” என்று யோசித்தவளுக்கு விடை புரிய,

 

“ஓ மை காட்..! ஓ மை காட்..! அப்ப நீ உருகி உருகி லவ் பண்ணி எழுதின அந்த ராவணன் உங்க மாமா தானா?” என்றதும் வெட்கப் புன்னகையோடு தலையசைத்தாள் பிரக்யா. 

 

“ஆனா குழந்தை எப்படி டி?” என்று அவள் கேட்க நடந்ததை எல்லாம் அவளிடம் கூறி முடித்தாள்…

 

“எப்பா??!!! எப்படி டி உங்க சித்திய சமாளிச்ச? மனுஷியா டி அந்த பொம்பள.. எனக்கு மட்டும் இப்படி ஒரு சித்தி கிடைச்சிருந்தா ஜெயிலுக்கு போனாலும் பரவால்லன்னு விஷ ஊசி போட்டு கொன்னு இருப்பேன்” என்று பல்லை கடித்தாள் லீனா. 

 

“ஈஸி பேபி.‌! நாம உண்மையான அன்பு வைக்கிறவங்கள எப்படி இயற்கை நம்ம கிட்ட சேர்க்குமோ.. அதே போல நமக்கு தீங்கு செய்றவங்களுக்கும் அது ஒரு தண்டனையை கண்டிப்பா வச்சிருக்கும். கர்மா இஸ் பூமராங்னு நீ கேள்விப்பட்டது இல்லையா?” என்றவள்,

 

அங்கே அவளது உடைமைகள் வைத்திருந்த இடத்தில் அந்த டைரியை பத்திரப்படுத்திவிட்டு இருவரும் கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்தனர்.

 

அங்கே அழகிய வசீகர புன்னகையுடன் நின்று இருந்தான் கதிர்நயனன், “மிஸ் யூ சின்னு” என்று..!!

 

“மாமா.. வாட் அ சர்ப்ரைஸ்..!” என்று அவளே முன் சென்று அவனை கட்டிக் கொள்ள.. அவனும் அவளுக்கு அழுத்தமாக அணைப்பு கொடுத்து மெல்ல விடுவித்தான். 

 

“இவ லீனா உங்களுக்கு தெரியும் இல்ல” என்றதும் ஆம் தலையாட்டியவன், அவளிடம் நலம் விசாரித்தான்.

 

“நீ உங்க மாமா கிட்ட பேசிட்டு சீக்கிரம் மீட்டிங் ஹாலுக்கு வந்துடு நான் முன்னாடி போறேன்” என்று லீனா நகர்ந்துவிட…

 

“கியூட் கேர்ள்..! நாகரிகம் தெரிந்த கேர்ள்..!” என்று அவன் வாய்ஸ் மாடுலேஷன் பண்ணி கூற அவன் புஜத்தில் குத்தினாள் பிரக்யா செல்லமாக… 

 

“என்ன மாமா.. சடனா கிளம்பி வந்து இருக்கீங்க..” அவள் கேட்கும் முன், 

 

மீண்டும் அவளை இறுக்க அணைத்து “மிஸ் யூ டி” என்று அவள் காது மடலில் தன் கற்றை மீசை உரச கவி பாடிக் கொண்டிருந்தான் கதிர்நயனன்.

 

கணவன் சொன்ன “மிஸ் யூ” என்பதை என்னவென்று அர்த்தம் கொள்வது என்றே பிரக்யாவுக்கு தெரிந்திருக்கவில்லை..!

 

பெரும்பாலான பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையில் இருக்கும் மனவியல் ரீதியிலான வித்தியாசங்களில் இதுவும் ஒன்று..!

 

பெண் சொல்லும் மிஸ் யூ உணர்வு ரீதியாக இருக்கும் என்றால்.. 

 

ஆண் சொல்லும் மிஸ் யூ உணர்ச்சிகள் மிகுதியாக இருக்கும்..

 

என்று சைக்காலஜியில் படித்த ஞாபகம் பிரக்யாவுக்கு. 

 

இப்போதும் அந்த சந்தேகம் இருக்கவே செய்கிறது அவளுக்கு.

 

“மாமா.. மாமா.. மிஸ் யூ டூ” என்று அவள் கூறியதும், அவனது மிஸ் யூ அவனை ஆற்றுப்படுத்தவில்லை போல்.. 

 

அவள் தோளும் அவன் தோளும் மென்மையாக அழுந்தியிருக்க.. இருவரும் அந்த நீள் இருக்கையில் அமர்ந்தனர்.. 

 

‘கைகளை கோர்த்தால் அவனின் கட்டுக்கடங்காத உணர்வுகள் கட்டுக்குள் வருமோ?’ என்று தோன்றியது அவளுக்கு.

 

வெளியில் இப்படி கோர்த்தால் மீட்டிங் வந்து இருப்பவர்கள் யாரேனும் ஏதேனும் நினைத்தால்…

 

ஆனாலும்.. நினைத்தால் நினைத்துக் கொள்ளட்டும் என்று முடிவெடுத்தவள், அவன் கையை தொடும் நேரத்தில் அவன் சிகையை கோதிக் கொண்டு..

 

“இப்போ பரவாயில்ல சின்னு. ஐ அம் கன்ட்ரோல்டு…” மிக நீண்ட மௌனத்திற்கு பின் அவன் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் இவை.

 

‘பரவாயில்லை என்றால்?? சந்தோஷமாக இல்லையா..?’ மனதிற்குள் வருந்திக்கொண்டாள்.

 

குழந்தையின் பசியாற்றாத தாயின் மனம் எவ்வாறு நொடிந்து போகுமோ, அந்த அளவு அவளின் மனமும் தன் கணவனின் மனநிலையை அறிந்து கவலையடைந்தது..!

 

பின் அவனே அவளது வலக் கையை தன் இடக் கையால் கோர்த்தான்.

 

அவன் கையோடு தன் கையை கோர்த்துக் கொண்டாள் மிக அழுத்தமாக..!

 

அதனை இறுக்கமாக மாற்றிக் கொண்டான் அவன்..!

 

“ஐ லவ் யூ உமையா…” என்று வலப் பக்கம் சாய்ந்து அவளது இடது தோளில் மென்மையாக உதடுகளால் அழுத்தி ஆழமான ஒரு முத்தம் தந்தான்..!

 

அந்த முத்தத்தின் அழுத்தம் அவளை திக்குமுக்காட செய்தாலும், கணவனுக்கு இப்போது என்ன வேண்டும் என்பது அவளுக்கு தெளிவானது..!

 

‘அவருக்கு இப்போது என் அருகாமை தேவைப்படுகிறது…!

என் அரவணைப்பு தேவைப்படுகிறது…!

என் காதல் தேவைப்படுகிறது..!

என் ஈடில்லா நேசம் தேவைப்படுகிறது..!’

 

என்றவளின் எண்ணத்தில் இடையிட்டது,

 

அவனின் இன்னொரு முத்தம் அதே இடத்தில்…!

 

இம்முறை அவளை அறியாமலேயே அவளின் தேகம் சிலிர்த்து சிணுங்கியது. 

 

அவள் முகமோ முறுவலித்தது..! ஒரு நிமிட நரம்பின் மனது உறுக்கல்கள் இளக, அவன் காதில் கிசுகிசுத்தாள்.

 

“ஐ லவ் யூ மாமா”

 

காதல் நரம்புகள் எல்லாம் ரத்தத்தால் நிறைய.. உடல் உஷ்ணமடைய துவங்கியது இருவருக்கும்.. அவன் கழுத்தில் வியர்வை அரும்புகள் முளைக்க, அவளிடமும் வியர்வை துளிர்விடுவதை அவளால் உணர்ந்துக் கொள்ள முடிந்தது.

 

திடீரென கோர்த்திருந்த அவளின் கைகளை பிரித்தவன் கைகளை உயர்த்தினான். அவள் கேள்வியோடு அவன் கண்களை நோக்க, தன் வலது கையால் அவளை சுற்றி வளைத்துப் பிடித்தான். 

 

உடலெல்லாம் வெடித்துக் கிளம்பிய காதல் ஹார்மோன்கள் எல்லாம் அவளது கன்னத்தில் சிவப்பாய் படிந்து, வெட்கமாய் வெளிப்பட்டன…!

 

அவன் வலதுகை இப்போது அவளது வலது இடுப்பில் படிந்தது.பொன்மேனியாளுக்கு ஆணின் மென்மையான அழுத்தமே மிகப்பெரிய சுகத்தையும் அவஸ்தையையும் தர..

 

அவளை சேர்த்தணைக்க சிறு பலத்துடன் அவன் அவளின் இடுப்பை அணைக்க, அவளுக்கு சகலமும் வியர்த்துப்போனது..

 

ஒரு தொடுதல்.. ஒரு முத்தம்.. ஒரு இறுகிய அணைப்பு மூலம் உள்ளத்தை உணர்த்திக் கொண்டிருந்தான் நயனன்.

 

"சரி வாங்க" என்று அவன் கைபிடித்து அழைக்க எங்கே என்று பார்த்தவனிடம் “நீங்க எங்க ரூம்ல ரெஸ்ட் எடுங்க.. இன்னைக்கு லாஸ்ட் டே மீட்டிங் முடிச்சுட்டு சீக்கிரம் வந்துடுறேன்” என்றதும் ஒரு பெருமூச்சோடு அவள் காட்டிய அறையில் ஓய்வெடுத்தான் நயனன்.

 

மாலை போல கூட்டம் முடிந்து அனைவருக்கும் இரவு உணவு அங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்க.. வேண்டாம் என்று மறுத்தவள், மாமனை காண ஓடி வந்தாள்.

 

இவள் வரும்போது ஓரளவு அவளது உடைமைகளை அவன் பேக் செய்து வைத்திருக்க ஆச்சரியத்தோடு பார்த்தவுடன் “சீக்கிரம் கிளம்பு ஃப்ளைட்டுக்கு டைம் ஆச்சு” என்று அவளை இழுத்துக் கொண்டு ஓடினான்.

 

போகிற போக்கில் லீனாவை அணைத்து விடுவித்தவள் "ரொம்ப தேங்க்ஸ் டி ஒருநாள் நீ தஞ்சாவூருக்கு வா நாம கொஞ்சம் ரிலாக்ஸா பேசலாம்" என்று அவள் கூற..

 

"ஏன் ரெண்டு நாளா பேசுனது போதலையா?" என்று குறும்பாக சிரித்தவன் "டோன்ட் மேக் இட் சீரியஸ்.. லீனா எப்ப வேணாலும் நீங்க வரலாம்" என்று அவளுக்கு வீட்டுக்கு அழைப்பு விடுத்து மனைவியோடு புக் செய்து இருந்த கேபில் ஏறினான். 

 

போகிற வழியில் பெரும் கூட்டம் இருக்க “என்ன பையா இது.. ஒரே கூட்டமா இருக்கு?” என்று நயனன் ஓட்டுநரிடம் ஆங்கிலத்தில் கேட்க..

 

“ஏதோ மாநாடு ஜி.. இப்பெல்லாம் கண்டதுக்கும் இப்படி கூட்டம் கூட்டி மாநாடு நடத்துதுங்க.. உலகம் போற போக்கு புடிக்கல.. ச்சை” என்று வெறுப்பாக அந்த ஓட்டுநர் பேச 

 

“அப்படி என்ன மாநாடு மாமா?” என்று கணவனின் காதை கடித்தாள் இவள். 

 

“ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான மாநாடாம்” என்று அவனும் அவள் காதில் கிசுகிசுக்க..

 

“உவேக்..!” என்று முகத்தை சுழித்தாள் அவள்.

 

ஆனால்.. அந்த மாநாட்டில் பலவித வண்ணங்களை முகத்தில் தீட்டி நண்பர்களோடு சென்றுக் கொண்டிருந்த ஆர்யனை கண்டு திடுக்கிட்டு, “மா.. மா.. மா..மாமா.. ஆரு.. ஆரு மாமா” என்று பிரக்யா அழுகையில் உதடு துடிக்க..

 

அவளைத் தன் நெஞ்சோடு புதைத்துக் கொண்டவன் “நீ இங்க எதுவும் பார்க்கல.. எதுவும் உனக்கு தெரியாது..!” என்றவன் அழுத்தமான குரலில் கூற..

 

இப்பொழுது அதிர்ச்சியோடு கணவனை நிமிர்ந்து பார்த்தவளது கண்களோ “உனக்கு முன்னமே தெரியுமா?” என்று கேட்க “ஆம்..!” என்று கண்களை மூடி திறந்தான் அவன்.

 

பிரக்யாவால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை..! கணவனை இறுக்க கட்டிக்கொண்டே அவளது பயணம் தொடர்ந்தது திருச்சியை நோக்கி..!

 

திருச்சி வந்தவன் அங்கிருந்து நேராக வீட்டிற்கு செல்லாமல் ரிசார்டுக்கே சென்றான். 

 

முதல் முதலாக முழு காதல் உணர்வோடு.. மோக உணர்ச்சியோடு அவளை உணர்ந்த அந்த அறை..! அதை யாருக்கும் வாடகைக்கு விடாமல் இவர்களுக்கு என்றே பிரத்தியேகமாக வைத்துக் கொண்டான் நயனன்.

 

இன்றும் அவளை அதே அறைக்கு அழைத்து வந்திருக்க, அவளோ சோக முகமாகவே காட்சியளித்தாள்.

 

“என்ன பிரக்யா அம்மையாரே ஏன் இப்படி சோகமாக இருக்கீங்க?” என்று அவன் வம்பிழுக்க..

 

“இது எவ்வளவு பெரிய விஷயம்.. இவ்வளவு நாளா இதை எங்ககிட்ட இருந்து நீங்க மறைச்சிட்டீங்க இல்ல?” என்று அவள் ஆத்திரத்தோடு கேட்க..

 

“முதல்ல ஆத்திரத்தை விட்டு அமைதியா யோசி உமையா!” என்று அவனும் சற்று அழுத்தமாக கூற..

 

“என்னத்த யோசிக்கிறது? எப்படி யோசிச்சாலும் எனக்கு நல்லதாவே யோசிக்க முடியல..” என்று உதடு பிதுக்கி சிறு பிள்ளை போல அழுதாள்.

 

“இங்க பாருடா சின்னு.. நீ ஒரு டாக்டர் இந்த மாதிரி இருக்கிறவங்களோட ஃபீலிங்ஸ் எல்லாம் உனக்கு தெரியும் தானே? நீ என்னதான் அவங்கள மாத்த நினைச்சாலும் முடியாது.! இயற்கையா அவங்களுக்குள்ள இருக்குற ஹார்மோன்ஸ் மாற்றம் தான் இதற்கு காரணம். இதை பற்றி உனக்கு நான் அதிகமா பேசி புரிய வைக்க தேவையில்ல..” என்றவன், அவளுக்கு முதுகை காட்டி படுத்துவிட..

 

அவளோ விடிய விடிய ஆர்யன் பற்றி யோசனையில் விழித்திருந்தவள்.. ஒரு கட்டத்தில் அவளையும் மீறி உறங்கி இருந்தாள்.

 

காலையில் எழுந்து உணவு உண்டு இருவரும் மெதுவாக அந்த பண்ணையில் வலம் வர.. அபிராமி தற்கொலைக்கு முயன்றார் என்ற செய்தியில் இருவரும் அவர்களது மருத்துவமனை நோக்கி ஓடினர்.

 

அத்தியாயம் 31

 

கழுத்துக்கு அருகே கதிர்நயனனின் மீசை குறுகுறுப்பில் தான் கண் விழித்தாள் காரிகை..!

 

“ம்ப்ச் மாமா..” என்று அவள் சிணுங்க..

 

அவன் அதரங்களுக்கு அருகிலிருந்த அவளின் பஞ்சு கன்னத்தில் பல் படாமல் அவன் கவ்வ.. அவளோ “மாமா” என்று கண்கள் சொருகினாள்.

 

அவளின் சிணுங்கல் அவனுள் போதை ஏற்ற, முகத்தை திருப்பி மறு கன்னத்தையும் அவன் கவ்வ, அவளின் மென்னுடல் தன் கணவனால் ஆக்கிரமிக்கப்படுவதை ரசித்தாள் பாவை..!

 

அவள் கிறங்கி அவன் நெஞ்சில் முகம் புதைக்க.. அவனின் அகன்ற திண்ணிய நெஞ்சில் அவளின் மெல்லிய மார்பு அடைக்கலம் புகுந்திருந்தன..!

 

தன் கன்னம் வருடிய அவன் உதடுகள், தன் உதட்டை உரச, அவளோ அரைமயக்க நிலையிலிருந்து கண்களை திறந்தாள்… 

 

தன் நிலையை உணர்ந்தவளாய் தன் வலதுகையால் அவன் நெஞ்சை அழுத்தி அவன் நெஞ்சில் தஞ்சமடைந்திருந்த தன் மார்புக்கூட்டை மெல்ல விடுவிக்க முயன்றாள்..

 

அந்நேரம் அவள் காதுகளில்,

 

“இரவுக்கு கண்கள் இருப்பின், அது கன்னியின் கனவுகள் சொல்லும் கம்பன் ஆகியிருக்கும்!” என்று அவன் ஹஸ்கி குரலில் கவி பாட.. 

 

அவளோ சட்டென நிமிர்ந்து கதிர்நயனனை பார்த்தாள். 

 

அதில் அப்பட்டமாக அதிர்ச்சி தெரிந்தது. 

 

“மாமா.. உங்களுக்கு.. இது எப்படி எப்படி தெரியும்?” என்று இமைகள் படப்படக்க அவள் திணற…

 

“என்னவனது பார்வையிலும் பேச்சிலும் தெறிக்கும் சில துளிகள் ஆண்மையை ரசித்து..

என்னுள்ளே கிளர்ந்தெழும் பெண்மையில் மூழ்கிவிடத்தான் துடிக்கிறேன் நான்..!

அவன் என் இராவணன்..!!” என்று நயனன் மீண்டும் அவள் காதுகளில் கவி பாட..

 

“மாமா.. டைரிய படிச்சிட்டீங்களா?” என்றவள் அதிர்ந்து வேக வேகமாக எழுந்து தன் பயண பொதிகளை ஆராய..

 

“இதையா தேடுறீங்க? அது இங்க இருக்கு மிர்ஸஸ் கதிர்நயனன்” என்றவன் அவள் டைரியை தன் கையில் வைத்து சுழட்டி காட்ட.. 

 

‘போச்சு மாட்டிக்கிட்டோம்..! படிக்கிற வயசுல உனக்கு லவ் கேட்குதா லவ்னு திட்ட போறாரு.. ஐயோ மறுபடியும் இவருக்குள் இருக்கிற இராவணன் என்ன பண்ண போறாரோ?’ என்று அவள் தலை குனிந்து நிற்க..

 

“கிட்ட வாடி..!” என்று அதிகாரமாக அழைத்தான்.

 

மெல்ல அடிகளை எடுத்து வைத்து தயங்கி தயங்கி அவன் அருகே நின்றவளோ தலையை குனிந்து நிற்க.. அவள் தாடையை ஒற்றை விரலால் நிமிர்த்து “என் கண்ண பாரு டி” என்று ஆணையிட்டான்.

 

அவன் கண்களின் கதிர்வீச்சை தாள முடியாமல் கண்களை இறுக்க மூடிக்கொண்டாள்.

 

“பூனை கண்ணை மூடிக்கிட்டா உலகம் இருண்டுடாது..! என்ன இது ஹான்.. சொல்லு டி?” என்று அவன் மிரட்ட 

 

“மாமா.. அது.. வந்து..” என்றவளுக்கு வார்த்தைகள் பஞ்சமாக..

 

“சொல்லு.. எவ்வளவு நாளா?” என்று நயனன் மீண்டும் அதட்ட

 

“அதெல்லாம் தெரியாது எனக்கு. சின்ன வயசுல இருந்து நீங்க கொடுக்கிற அந்த புரொடெக்டிவ் ஃபீலிங் ரொம்ப பிடிக்கும். ஆனா மூஞ்சுக்கு நீங்க போட்டுக்குற அந்த கடுமையான மாஸ்க் எனக்கு பிடிக்கல.. சோ எனக்கு பிடிச்ச.. என்னவன் பத்தின என் சின்ன சின்ன கிறுக்கல்கள் இது” என்றாள் அவள்..!

 

“உன்னில் ஒரு நஷா இராவணா..! ம்ம்ம்.. ஆமா.. இந்த நஷானா என்ன அர்த்தம்? விஷம் மாதிரியா??” என்றவன் அவளை கூர்ந்து பார்த்து கேட்க..

 

அவளுக்கு கோபம் நுனி மூக்கில் வந்தது. அவள் பார்த்து பார்த்து வைத்த பெயரை, இப்படி விஷத்தோடு ஒப்பிட்டு விட்டானே என்று..!

 

“நஷா’னா பொதுவா போதை மயக்கம் அல்லது போதைப்பொருள் பழக்கம்னு அர்த்தம்..” என்றதும் அவன் அவளை முறைக்க..

 

“என்ன என்ன ரொம்ப தான் முறைக்கிறீங்க.. அந்த வயசுல நீங்க.. உங்க அன்பு.. உங்க கண்டிப்பு.. உங்க பாசம்.. உங்க நேசம்.. ஏன் உங்க திட்டு கூட எனக்கு போதை தான்.‌ எப்படி ஒரு போதை பழக்கம் ஒருவனின் சிந்தையை முடக்கி எதுவும் சிந்திக்க விடாமல் செய்யுதோ.. அதே போல் தான் உங்க நினைவும் என் சிந்தையை மயக்கி முயக்கி கிறக்கி..” என்றவள் அன்றைய நாளின் அதி கிறக்கத்தோடு கூறிக் கொண்டிருக்கும் போத.. அவளது அதரங்களை கொய்தான் மாயவன்..!

 

திட்டுவான், அறிவுரை கூறுவான் என்று அவள் எதிர்பார்க்க… அதற்கு மாறாக அவனது நடவடிக்கை கண்டு இன்னும் இன்னும் அவனில்.. அவள் இராவணின் மீது நஷா அதிகரித்தது..

 

தொடரும்..


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top