இது பக்கா anti hero, romantic novel ,
அத்தியாயம் - 1
வானமோ நான் இன்றே என் சோகத்தை கொட்டி தீர்த்து விடுகிறேன் என்பதை உணர்த்தும் விதமாக கொட்டி தீர்த்துக் கொண்டிருந்தது .
அந்த முன்று அடுக்கு கொண்ட மாளிகையில் உள்ள ஒரு அறையில் இருந்து ஒரு பெண்ணின் முனகல் சத்தம் வந்த வண்ணம் இருந்தது .
அவள் மீது மோகத்தில் மூழ்கி இருந்தான் ஒருவன் அவன் நெடுஞ்செழியன் .
இந்தியாவில் விரல் விட்டு எண்ணக் கூடிய பணக்காரர்களில் அவனும் ஒருவன் . அவன் ஒன்றும் பிறப்பிலேயே ஒன்றும் பணக்காரன் இல்லையே அவன் வாழ்க்கையில் பட்ட அடிகள் அவனை இப்படி உழைத்து உயர
வைத்திருக்கிறது . அவனுக்கு என யாருமில்லை
அவன் சிறு வயதில் இருக்கும் போதே அவர்கள் இறந்து விட , ஒரு ஆசிரமத்தில் தான் வளர்ந்தான் அவன் . படித்து விட்டு தொழில் தொடங்க லோனிற்கு பேங்கில் அழைந்த போது யாரும் அவனுக்கு கை கொடுக்கவில்ல .
அவனது ஆசிரம உரிமையாளர் ஆன ராமநாதன் உதவி செய்கிறேன் நீ தொழிலை தொடங்கி எனக்கு திருப்பி கொடுத்து விடு எனக் கூற .
அதன் பின்பே உண்மை உழைப்புடன் ஒரு தனிமனிதனாக இந்த சாம்ராஜ்யத்தை உருவாக்கி உள்ளான் . அதுதான் சக்கரவர்த்தி industries தனது அப்பாவின் பெயரில் உருவாக்கிய இந்த தொழில் சாம்ராஜியம் அவனை பெயருக்கேற்றார் போல் சக்கரவர்த்தியாக உயர்த்தி நிறுத்தியது .
தனக்கு நிகர் தான் என செருக்கு கொண்டவன் அவன் . அந்த பெண்ணுடன் தனது அன்றைய இரவை முடித்துவிட்டு அந்த பெட்டில் இருந்து எழுந்தான் அவன் .
அவன் போன் சிணுங்கி அவன் கவனத்தை கலைத்தது அதை எடுத்து காதிற்கு கொடுத்தவாறு அவன் அங்கிருந்த ஜன்னல் நோக்கி நடந்தான் .
அவன் பின்னோடு வந்து கட்டிக் கொண்டால் ஒரு அழகி அவளை தன்னில் இருந்து பிரித்து அவள் இதழில் முத்தமிட்டவனோ அவளை விலக்கி விட்டு வெளியே சென்று விட்டான் அவன் .
இதுவரை தான் தான் சக்கரவர்த்தி நிறுவனத்தின் உரிமையாளன் என்பதை வெளி உலகிற்கு காட்டாமல் வைத்துள்ளான் . அனைத்தையும் தனது நண்பன் மூலமாகவே செய்து முடித்துவிடுவான்.
காலைப்பொழுது அழகாக விடியல
தொடங்கிய நேரம் அது . காலைப்பொழுது அனைவருக்கும் இனிமையும் , புத்துணர்ச்சியும் தரக் கூடியது அதுபோல வாழ்க்கையும் .
மார்கழி பனி என்பது தனி இனிமை தரக்கூடியது .குளிரோடு சேர்த்து அதற்கு இதமாக எதாவது சூடாக பருகினால் அது இன்னும் இனிமையே .
காலை எழுந்து தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு வாசலில் கோலம் இட்டு கொண்டிருந்தால் அவள் இதழினி பெயருக்கேற்றார் போல் மென்மை குணம் கொண்டவள் , சொக்க வைக்கும் அழகு .
தன் அன்றாட பணிகளை முடிக்க உள்ளே சென்றால் அவள் . அங்கு அமர்ந்து இருந்தால் அவளின் சித்தி வள்ளி .
ஏய் என்னடி இவ்ளோ நேரமா கோலம் போட என அதட்ட
ஆமா சித்தி இன்னைக்கு மார்கழி ல அதான் லேட் ஆகிடுச்சு எனக் கூற
நீ கிழிச்சது போதும் போய் எனக்கு காபி போடு என அவளை விரட்ட , அதன் பின் வள்ளியோ இந்த வீட்டுல தெண்டாம இருக்க ஒரே விஷயம் நீ மட்டும் தான் , உனக்கு வேற சோறு போடனும்னு எங்க தலையில எழுதி இருக்கு என காலையில் அவளை கரிச்சுக் கொட்ட ,
உள்ளிருந்து வெளிவந்த அவள் மகள் தமிழோ இப்ப எதுக்கு மா அக்காவ திட்டிட்டு இருக்க , அவ தான் எல்லா வேலையும் செஞ்சு கொடுத்துட்டு இருக்கா இல்ல என கேட்க.
வள்ளியோ இதோ வந்துட்டா ஒத்து ஊத வாடிமா வாடி ,அவ என்ன எனக்கு கொடுத்த வச்சிருக்கா , நான் போட
தமிழோ அதான் அவ சம்பளத்தை முழுசா வாங்கற இல்ல , அப்புறம் எதுக்கு அவள இப்படி திட்டிட்டு இருக்க .
சரிடி அம்மா அவள நான் ஒன்னும் பேசல நீ போ என அவளை விரட்டினால்
அதே சமயம் அங்கு வந்த இதழோ சித்தி காப்பி என அவளிடம் நீட்ட அதை வாங்கிய வள்ளியோ இன்னைக்கு சமையல் நான் சொன்னது தான் செய்யனும் என்றுவிட்டு அன்றைக்கான அனைத்தையும் சொல்லத் தொடங்கினால் .
அனைத்தையும் செய்து வைத்து விட்டு அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பினால் அவள் .
தொடரும் ...
