அத்தியாயம் 1
அமெரிக்காவின் பிரபல மருத்துவமனையின் குழந்தை நலப் பிரிவு..!
“ஹே பிரக்.. கங்க்ராட்ஸ்.. அந்த கிட் ராபின் சரியாகிட்டான்னு கேள்விப்பட்டேன். சூப்பர்..” என்று பிரக்யாவை பாராட்டியப்படியே அவள் கூடவே அந்த மருத்துவமனை வளாகத்தில் நடந்தான் அபிஜித்.
அபிஜித்தும் அதே மருத்துவமனையில் பொது நலப்பிரிவில் மருத்துவனாக பணியாற்றுகிறான்.
“தேங்க்ஸ் அபி..! கொஞ்சம் அடமண்டா தான் இருந்தான். அப்புறம் பேசிப் பேசியே அவனை சரி கட்டிட்டேன். அவனும் ட்ரீட்மென்ட்க்கு நல்லாவே ஒத்துழைப்பு கொடுத்தான். சோ...கிரட்டிட்ஸ் எனக்கு மட்டுமல்ல அந்த ராபினுக்கும் தான்” என்று அவனிடம் பேசியப்படியே வேகமாக அந்த காரிடரில் நடந்துக் கொண்டிருந்தாள் பிரக்யா.
அவள் சொன்ன அந்த பேசிப்பேசியே என்பது கெஞ்சி கொஞ்சி என்று சாம தான பேத தண்ட முறைகளை பின்பற்றுவது தான்..!
“பிரக்.. வாட் அபௌட் திஸ் வீக் எண்ட்.. டேட் போலாமா?” என்று தலையை சாய்த்து கொஞ்சலாக கேட்டவனை பார்த்தால் எந்த இளம்பெண்ணுக்கும் மறுக்க தோன்றாத வசீகரம்..!
ஆணழகன் போட்டிக்கு செல்ல உடல், முகம், வசீகரம் என்று அனைத்தும் பக்காவாய் உள்ள மருத்துவன்..!
ஆனால் எப்பொழுதும் போல புன்முறுவல் பூத்தாள் பிரக்யா.
“ஹேய்.. இப்படி சிரிச்சு மழுப்பாதே.. நானும் நீ இங்க வந்தா நாளா கூப்பிட்டே இருக்கேன். பட் நீ என்னை கன்சீடர் பண்ணவே மாட்டேங்குற.. முன்ன தான் தெரியாதவன், ஆனா இத்தனை வருஷத்துல நாம நல்ல பிரண்ட்ஸ் தானே..!” என்று அபிஜித் கண்களில் மின்னும் ஆசையோடு கேட்டான்.
பிரக்யாவோ “அது சரி வராது அபி” என்றாள் ஒரு பெருமூச்சை வெளியிட்டப்படியே..!
“வொய்..? வொய்..?” என்று அவளின் அருகே நெருங்கி அவன் கேட்க,
“ம்ம்.. என்ன சொல்ல? டேட்னா ஜஸ்ட் டின்னருக்கா என்னை கூப்பிடுற? டெஃப்னட்லி நாட்..! அதோட நெக்ஸ்ட் ஸ்டெப்.. ம்ஹீம்.. உனக்கு வாய்ப்பில்ல கண்ணா” என்று கேலியாக கூறி கண் சிமிட்டி சென்றவளின் அழகில் வழக்கம் போல அபிஜித்தின் மனம் நழுவிச் சென்றது.
“ஹே பிரக்.. இட்ஸ் நாட் ஃபேர்.! எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் நீ” என்று விடாமல் அவளுடன் நடந்தான்.
அவளோ நழுவுற மீன் போல அவன் பேசும் அனைத்துக்கும் சிரித்துக் கொண்டே அவளின் கேபின் முன்னால் வந்துவிட, அவளின் முன் தடுத்தாற் போல் நின்றவன்,
“ஹேய்.. பிரக்.. ஜஸ்ட் டேட் தானே? வாட்ஸ் இஸ்ட் இன் பிக்? கமான் பிரக்.. லெட்ஸ் பிரேக் யுவர் அன்நெசசரி கல்சுரல் செண்டிமெண்ட்ஸ்..” என்று இரு தோள்களையும் ஸ்டைலாக குலுக்கி அவளை இப்பொழுது வற்புறுத்தினான்.
“அபி.. சில விஷயங்கள் அப்படித்தான். என்னால ப்ரேக் பண்ண முடியாது..! மே பி நான் செண்டிமெண்டல் ஃபூல்லாவே இருந்திட்டு போறேன்” என்றவளின் பார்வை அவளின் பெயர் பலகை மீது அழுத்தமாக பதிந்திருந்தது.
எதிரில் நின்றவனோ அவளின் பார்வை சென்ற இடத்தை கவனிக்காமல் அவளை எப்படியாவது சமாதானப்படுத்தி அந்த வார இறுதியில் தன்னுடன் டேட் அழைத்து செல்ல முடிந்த மட்டும் அவளை சமாதானப்படுத்த பிரம்மப்பிரயத்தனம் போட்டுக் கொண்டிருந்தான்.
அவன் வார்த்தைகள் எல்லாம் அவள் செவியில் தான் வந்து விழுகிறது. ஆனால் அவை மூளைக்கு கடத்தப்படாமலே அடுத்த காது வழியே வெளியே வந்து விழுந்ததை பாவம் அந்த ஆணழகன் அபிஜித் அறியவில்லை..!
“எனஃப் அபி..! நோ மீன்ஸ் நோ..!” என்றபடி அவனை தள்ளி விட்டு கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தவளுக்கு பேரதிர்ச்சி காத்திருக்க.. அங்கே நின்றிருந்தவனை கண்டதும் அவளோ சிலையென சமைந்து நின்றாள்.
ஆனால்.. அபிஜித்தோ அதை எதையும் கண்டுகொள்ளாமல் அவள் கையை பற்றி தன் புறம் திருப்பி “நான் கேட்டுக்கிட்டே இருக்கேனே பிரக்..! எத்தனை வருஷமா நானும் உனக்காக வெயிட் பண்றேன்.. அது உனக்கு தெரியும் தானே? அப்புறம் ஏன் கொஞ்சம் கூட கன்சிடர் பண்ணவே மாட்டேங்குற..!” என்றவனின் கோபம் கலந்த உரிமையான வார்த்தைகளில் அதிர்ந்தவள், அவனையும் தன் எதிரில் இருந்தவனையும் மாறி மாறி பார்த்தாள். அவன் பிடியிலிருந்து அவன் கையை விடுவித்துக் கொள்ள எவ்வளவு போராடியும் முடியவே இல்லை..!
“நீங்க இன்னும் எத்தனை வருஷம் வெயிட் பண்ணாலும் அவ உங்களுக்கு எஸ் சொல்ல மாட்டா மிஸ்டர்..!” என்று அழுத்தமாக வந்து விழுந்த வார்த்தைகளில் அபிஜித் அதிர்ந்து திரும்பி பார்க்க..
அங்கே ஆறடி உயரத்தில் அம்சமான திராவிட நிறத்தில் தலை கொள்ளா கேசத்தோடும் முறுக்கிய மீசையோடும் கூர் விழிகளால் அவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தான் நெடியவன் ஒருவன்..!
அவனை நெற்றி சுருக்கி பார்த்த அபிஜித்துக்கோ தங்கள் அந்தரங்கத்தில் அடுத்தவன் நுழைவது பிடிக்காமல்..
“ஹலோ மிஸ்டர்..! இது டாக்டரோட கேபின். பர்மிஷன் இல்லாம உள்ள வரக் கூடாது.. ப்ளீஸ்..” என்று வாயில் கதவை காட்டினான் அபிஜித்.
அந்த நெடியவனோ பிரக்யாவின் கேபினில் இருந்த அந்த டேபிளில் நன்றாக சாய்ந்து இரு கைகளையும் தன் பேண்ட் பாக்கெட்டில் விட்டப்படி நின்றவன்,
“இஸிட்? இது டாக்டரோட கேபின்னு உங்களுக்கு இப்பதான் தெரிஞ்சுதா? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அந்த டாக்டரையே டேட்டுக்கு கூப்பிடும் போது தெரியலையா?” என்றவனின் குரலில் ஏகத்துக்கும் நக்கல் வழிந்தது.
“தட் நன் ஆஃப் யுவர் பிஸினஸ்..! அது எங்க பர்சனல்” என்றான் அருகில் நின்ற பிரக்யாவின் கையை விடுத்து இப்பொழுது லேசாக தோளோடு அவளை அணைத்தவாறு..!
அபிஜித் கண்களில் இப்பொழுது ஒரு உரிமை உணர்வு தென்பட்டது..! கூடவே ‘ஸ்டே அவே‘ என்ற பொருளும்..!
தோழமையோடு தொட்டு பேசுவது தோளோடு அணைப்பது விளையாட்டாக கையில் தட்டுவது
என்று நட்பில் தொடுகைகள் அழகே..!
அதனால் இது நாள் வரை அபிஜித் அவளை இம்மாதிரி தொட்டவைக்கெல்லாம் பெருசாக முகம் சுளித்தது கிடையாது பிரக்யா.
அவளுமே அவனை அடித்து இருக்கிறாள்.. போயா என்று தள்ளி இருக்கிறாள்.. லேசாக அணைத்து இருக்கிறாள்.. அவை எல்லாம் அவள் அகராதியில் தோழமையின் வெளிப்பாடு..!
ஆனால் இப்போது ஒரு உரிமையோடு அபிஜித் அவளை தோளோடு அணைத்திருந்தான். அதுவும் சற்று இறுக்கமாகவே..!
அதனை அவனிடம் அவள் எதிர்பார்க்கவில்லை. அது அவளுக்கு பிடிக்கவும் இல்லை..!
சட்டென்று அவன் கையை எடுத்துவிட்டு கீழ் பார்வையில் அவனை முறைத்தபடி தள்ளி நின்று இருந்தாள் பெண்.
இப்போது வெளிப்படையாகவே அபிஜித்தை பார்த்து சிரித்தான் அந்த நெடியவன்.
“பிரக்..” என்று சற்றே குரலை உயர்த்தினான், அதுவும் உரிமைக் குரல்..!
“ஹலோ.. மிஸ்டர்..! டோண்ட் ரைஸ் யுவர் வாய்ஸ்” என்றான் அமர்த்தலாகவே அவன்.
“ம்ப்ச்..! ஹலோ யாரு நீங்க.. இது எனக்கும் பிரக்யாவுக்கும் உள்ள பர்சனல்.. இதுல குறுக்கிட நீங்க யாரு?” இதுநாள் வரை எப்படியும் தனக்கு உரிமையாகி விடுவாள் என்று பெண்ணின் மீதான தன் உரிமையை இப்போது நிலை நாட்ட முனைந்தான் அபிஜித்.
லேசாக சிரித்தவன், “ஐ அம் கதிர்நயனன்..!” என்றவனின் வார்த்தைகளில் அத்தனை அழுத்தம்..!
கதிர்நயனனா இந்த பெயரை எங்கோ கேட்டிருக்கோமே என்று அபிஜித் விழிக்க..
“ஞாபகம் வந்திருச்சா என்ன? வெளியில நேம் போர்டில் பார்த்திருப்பீங்களே..!” என்றான் அந்த நெடியவன் இன்னும் அழுத்தமாக..!
“ஆமாம் இல்ல.. பார்த்தோமே..! ஆனா அதுல..” என்று யோசித்தவன் அதிர்ந்து தன் அருகில் இருந்த பிரக்யாவை பார்த்தான்.
ஏனென்றால் அங்கே பெயர் பலகையில் இருந்தது, “பிரக்யா கதிர்நயனன்..!” என்ற பெயர்தான் இருந்தது.
‘அப்போ இத்தனை நாட்களாக கதிர்நயனன் என்ற அவளின் பிற்பாதி பெயர் தான் நினைத்தது போல அவளது அப்பாவின் பெயர் இல்லையா?’ என்று அவன் விழித்திருக்கையில்..
அவன் முன்னே வந்த கதிர்நயனனோ “நைஸ் டு மீட் யூ மிஸ்டர் அபிஜித்.. ஐ அம் கதிர்நயனன்..! பிரக்யாஸ் ஹஸ்பெண்ட்” என்றவன்
அவளை இடையோடு அழுத்தமாக அணைத்துக் கொண்டு “எக்ஸ்கியூஸ் மீ..!” என்று இப்பொழுது வாயில் கதவை அவன் காட்ட..
இதை சற்றும் எதிர்பார்த்திராத இந்த திடீர் தோல்வியை தாங்க முடியாமல் பிரக்யாவை குற்றம் சாட்டும் பார்வையோடு நோக்கி விட்டு வெளியேறினான் அபிஜித்..!
அவளது கேபினில் இருந்து மட்டுமல்ல.. அவளது வாழ்க்கையில் இருந்தும்..!
அபிஜித் சென்ற அடுத்த நிமிடம் அவளை மேலும் இறுக இடையோடு கட்டி அணைத்தான் கதிர்நயனன்.
அவனின் முரட்டு கையில் அவளது சிற்றிடை நொறுங்க “ம்ப்ச் விடுங்க.. வலிக்குது” என்றாள் சிறு குரலில்..!
“நல்லா வலிக்கட்டும்..! எனக்கு வலிச்சுதுல..!” என்றவனை அவள் வெட்டும் பார்வை பார்க்க
பதில் பார்வை பார்த்தவனோ அவள் இதழ் ஓரம் நெருங்க.. அவளோ அவன் பார்வையை தவிர்த்தவள்,
“இது ஹாஸ்பிடல். நான் போகணும். பேஷண்ட் பார்க்க நேரம் ஆச்சு” என்றாள்.
அவனோ “அதுக்கு என்ன போலாம். ஃபர்ஸ்ட் என்னை கொஞ்சம் கவனி.. நிமிர்ந்து என்னை பாரு டி” என்றவனை அவள் கிஞ்சிற்றும் நிமிர்ந்து பார்க்கவில்லை.
“ஏக கொழுப்பு டி உனக்கு” என்று இன்னும் இறுக்கமாக கட்டி பிடித்தவன், அவள் காது மடலில் மீசையோடு உரசி.. கீழ் கழுத்தில் அழுத்தி தன் புகம் புதைக்க..
அவனின் இந்த திடீர் ஸ்பரிசத்தை தாள முடியாதவளோ “மாமா.. ப்ளீஸ் வேணாம். நாம.. நாம..” என்று திக்கி திணற..
“நாம என்ன டி? நாம ஸ்டில் ஹஸ்பண்ட் வொய்ஃப் தான். சோ.. இது தப்பில்ல..” என்றவனின் மார்பில் கையை வைத்து தள்ளியவள்,
“என்க்கு ஓபி பேஷண்ட் வருவாங்க..” என்று மெல்ல முணுமுணுத்தாள்.
அவனோ “அதை அப்புறம் பார்த்துக்கலாம். இப்ப மாமாவுக்கு ஒரே ஒரு முத்தம் கொடு” என்று அவளின் காது மடலை கவ்வி அவன் கிசு கிசுக்க..
“எதே முத்தமா?” என்று அவள் அதிர்ந்தாள்.
இதுவரை வெறும் அவனின் பெயரை மட்டுமே தன்னின் பின்னோடு தாங்கி இருக்கும் அவனது மனைவி பிரக்யா உமையாள்.
“அது.. அது.. நமக்குள்ள.. அத..” என்று அவள் திணறி அவனை தள்ளி விட்டவள்,
கதவை திறக்கும் நேரத்தில் சரியாக அவளை பிடித்து இழுத்து சுவற்று ஓரமாக அவளை தள்ளிச் சென்றவன், இரு கைகளாலும் அவளை அள்ளி அணைத்து சிறையெடுத்தான். அவளோ திமிறி விடுபட முயல..
ஆனால் கதிர்நயனனிடம் அது நடக்குமா? அவனின் உடும்பென அணைப்பில் பெண்ணவள் தளிர் அங்கங்கள் நோக..
அவளோ விடுபட முயற்சிக்க.. அவனின் முரட்டு கரங்களோ அவனை விட முரடன் போல.. தன்னவளை தன்னுடன் இறுக்கி சிறை செய்தன..!
மூன்று ஆண்டுகளாக அவளின் பிடிவாதத்தில் பிரிந்திருந்த தன்னவளை.. தன் உயிரை.. தன் நேசத்தை… தன் மனைவியை இன்று விடாமல் இறுக பற்றிக் கொண்டான்.
தண்ணீர் தாகத்திற்கு தேடி அலைந்தவனின் மனமோ சிறு ஊற்றை கண்டதும் எவ்வளவு உற்சாகம் அடையுமோ.. அதே போல தன்னவளின் ஸ்பரிசத்தில்.. அவள் வாசத்தில் தன்னை தொலைத்து அவளுள் தொலைந்து நின்றான் கதிர்நயனன்.
தன் பொக்கிஷத்தை இத்தனை வருடங்களுக்கு பிறகு கண்டெடுத்தவனின் கரங்களோ அவளை விட்டு இம்மியும் நகர மறுத்து அணைத்திருக்க..
“விசா அக்காவும் இப்படிதான்.. என் கிட்ட நடந்துக்கிட்டது போல தான்..” என்று முடிக்கும் முன்னரே அவள் கன்னம் தீயாய் தகிக்க...
ஒற்றை விரல் பத்திரம் காட்டியவன், “ஒன் ஹவர் உனக்கு டைம். எல்லாத்தையும் முடிச்சிட்டு வந்து சேரு” என்று கதவை திறந்துக் கொண்டு விடு விடு என்று வெளியே விரைந்தான் கதிர்நயனன்..!
