46
தன் மீதிருந்து உருவப்பட்ட முந்தானை மீண்டும் தன் மேலே வந்து விழ.. ஆசுவாசத்தோடு சற்றே மயக்கத்திற்கு நுழைந்தாள் அஸ்திரா.
வீரா.. கண் இமைக்கும் நேரத்தில் கருப்பண்ணசாமியாய் அந்த கூட்டத்துக்குள் புகுந்து, அவர்களின் உடம்பில் கிடைக்கும் இடத்தில் எல்லாம் ஆங்காங்கே நொடிக்கும் குறைவான நேரத்தில் சர் சரென்று வெட்டுக்களை அனாயசமாக வெட்டிட.. என்ன நடந்தது என்று அவர்கள் உணரும் முன்பே அனைவருக்கும் கழுத்து கை வயிறு இடத்திலிருந்து அணைத்திறந்த வெள்ளமென ரத்தம் பாய்ந்து வெளியே வந்தது.
"எப்படி இவன் இங்கே வந்தான்?" என்று கையில் வாங்கிய வெட்டுடன் சஞ்சயன் வீராவை பார்க்க..
"என்னடா மறந்து போச்சா? அம்மாவாச அமாவாசைக்கு நம்ம இளைஞரணி சார்பில இந்த கோவில் பக்கம் எந்த தப்பும் நடக்க கூடாதுன்னு காவலுக்கு ஆள் போடுவோமே!!" என்றதும் சஞ்சயனுக்கு அந்த நினைப்பே வர "இத எப்படி மறந்தோம்?" என தலையில் அடித்துக் கொண்டான்.
"உன்னைய நம்பி ஒரு பொண்ணு வந்தா.. நீயி அவள எல்லோருக்கும் படையில் போடுவியா?" என்று சஞ்சயனை உருத்து விழித்தவன் அருகில் நின்று மற்றவர்களை தாக்கினான்.
"சஞ்சயா.. எங்கள பத்தி கவலைப்படாதே எப்படியாவது அந்த அம்பலவாணனுக்கு பதில் கொடுத்தே ஆகணும்.. இத விட்டால் வேறு சந்தர்ப்பமே கிடைக்காது. நாங்க மூணு பேருமே இவன பார்த்துக்குறோம். நீயி அவளை விடாதே!!" என்று அங்குள்ளவர்களில் ஒருவன் காத்த.. சஞ்சயன் தன் சட்டையை கழற்றி ரத்தம் வந்த புஜத்தில் இறுக்கி கட்டிவிட்டு அஸ்திராவை நெருங்கினான்.
ஓரளவு தற்போது நிதானத்திற்கு வந்தவள் மெல்ல எழுந்து நிற்க அவளுக்கு எந்த காட்சியும் தெளிவாக தெரியவில்லை கண்களுக்கு. மெல்ல நடந்து போனாள்.
இருக்க.. இருக்க.. உடுக்கை சத்தமும் கோவில் மணி ஓசையும் இன்னும் இன்னும் வேகமெடுத்தது. ஒவ்வொரு உடுக்கை சத்தத்திற்கும் அவள் உள்ளே ஏதோ ஊடுருவது போல ஒரு உணர்வு.
தட்டுத்தடுமாறி நடந்து சென்றவள் பின்னே வந்தவன், அவள் இடுப்பில் சொருகியிருந்த பாதி கிழிந்த முந்தானையை பிடித்து அவன் இழுக்க.. கையோடு வந்தது அவளது புடவை.
எட்டி இருந்து அதைப் பார்த்த வீராவுக்கு இன்னும் ஆங்காரமும் ரௌத்திரமும் பெருக.. மூன்று பேரையும் பந்தாடியவன் "தீரா.. தீரா.. ஓடு.. கோயிலுக்குள்ள ஓடு.. டேய் சஞ்சயா.. விடுடா அவள்!!" என்று அவன் கத்த..
அவள் காதில் தீரா என்ற வார்த்தையும் வீராவின் குரலும் கேட்க தன்னை சமாளித்து எட்டிப்போட்டு நடக்க முயன்றவளை காலால் தட்டி விட்டான் சஞ்சயன். அதில் உருண்டு விழுந்தாள் அஸ்திரா.
தன் மேலே பாய வந்தவனிடமிருந்து தப்பித்து உருண்டு போனாள். அமாவாசை நடுநிசி நேரம்.. எங்கும் இருள் பரவியிருக்க.. அங்கே இங்கே சிறு சிறு விளக்குகள் அதுவும் கோயில் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த அரை வெளிச்சம் மட்டுமே.. கூடவே இந்த உடுக்கை சத்தம்.. மந்திர ஒலி.. கோவில் மணி ஓசை.. எங்கும் நிறைய ஒரு அமானுஷ்ய உணர்வை அனைவருக்கும் ஏற்படுத்திக்கொண்டிருந்தது
"இங்கே பாரு வீரா.. இது உனக்கு தேவையில்லாதது. அந்த அம்பலவாணனால நாங்க எல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டோம்னு உனக்கு தெரியாது. இதுல நீயி தலையிடாம போயிடு.." என்று அடி வாங்கிக்கொண்டே தங்களுக்கு தெரிந்தவற்றை சொல்ல.. அதில் துணுக்குற்றறான் வீரா.
"அதற்காக ஒரு பொண்ண இப்படி பண்ணுவீகளா டா.. நீங்க எல்லாம் அக்கா தங்கச்சி கூட பொறக்கல.." என்று மீண்டும் மீண்டும் அவளை தொட நினைத்த கைகளையும் அவளை தப்பாக பேசிய வாய்களையும் இனி ஒன்றும் செய்ய முடியாத அளவுக்கு அவன் அடித்து ஒடித்திருந்தான். அவர்களிடமிருந்து அஸ்திராவை நோக்கி ஓடிவந்தவனை மூவரும் கால்களை இறுகப் பற்றிக்கொண்டு நகரவிடாமல் செய்தனர்.
அஸ்திராவோ கொடூர காமபோதையில் வெறி வந்து தள்ளாடும் சமஞ்சயனிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள இங்குமங்கும் உருண்டு பிரள.. அவள் கைகளில் தட்டுப்பட்டது அங்கே கருப்பண்ணசுவாமிக்காக நடப்பட்டிருந்த அருவாள். அவ்வூரில் அருவாளை மட்டுமே கருப்பண்ணசுவாமி ஆக நினைத்து வழிபடுபவர்கள் அவர்கள்.
அதை ஊன்றி எழுந்தவள் "அருக வராத சஞ்சயா.. நிச்சயமா உன்னை வெட்டிபுடுவேன்.. உசுர காப்பாத்த நினைச்சா ஓடிப் போயிடு டா" என்று அவள் கத்த, இவனோ இகழ்ச்சியான புன்னகையோடு அவள் அங்கங்களை கண்களால் மேய்ந்து கொண்டு "உன்னால முடியாது என்னைய வெட்ட முடியாது அஸூ.. என்கிட்ட வந்துடு.. நான் உன்ன பூ போல தான் தொடுவேன்" என்றவாறு அவளை நெருங்க..
அதேநேரம் கோவிலில் இன்னும் உடுக்கை சத்தமும்.. கோவில் மணிச் சத்தமும் உச்சிக் தொணியில் கேட்க..
மறுபக்கம் வீரா ஓடு ஓடு என்று கத்த..
சஞ்சயா விடாத அவள விடாத என்ற மற்றவர்களும் ஓலமிட..
ஒரு விபரீத தளமாக மாறியது அந்த ஆலமர கூட்டம்..
தன்னை நோக்கி வந்தவனை முதலில் பார்த்து மிரண்டாலும் அவளுக்குள் அந்த உடுக்கைச் சத்தம் ஏதோ ஒரு தைரியத்தை உண்டு பண்ண அருகிலிருந்து அருவாளை ஆட்டி ஆட்டி எடுத்தே விட்டாள்.
"அருவா வச்சியிருந்தா நீயி பெரிய காளியாத்தாவோ.. உன்னால என்னைய ஒரு கீறல் கூட போட முடியாது. அவ்வளவு ஏன் இதை தூக்க கூட உன்னால முடியாது" என்று கிண்டலாக கூறி அவளை நெருங்கி சென்றவனை தடுத்தது அருவாளின் கூர்முனை.
"சஞ்சயா.. வேணாம்.. சொன்ன கேளு. அவ மேல கை வைச்ச உன் உசுரு உனக்கு சொந்தமில்ல..!!" என்று கர்ஜித்தான் வீரா.
"வாடா.. வாடா.. வா.. ஓஓஓஓ.. இவ உன் காதலி இல்ல.. அதேன் இவ்வளோ அக்கற.. பாரு பாரு உன் கண்ணு முன்னாலேயே அவளை நாங்க அனுபவிக்கிறது சந்தோசமா பாரு" என்றவன் அவளை நெருங்கும் முன் தன் காலைப் பிடித்து இருந்தவர்களை உதைத்து தள்ளி சஞ்சயனை நெருங்கி அடித்து துவைத்திருந்தான் வீரா.
ஆனாலும் பழி வெறிகொண்ட சஞ்சயனை அவனால் அடக்க முடியவில்லை. அவளிடம் செல்ல முயன்றவனை "அவ கையால தேன் நீயி சாவ.. அவகிட்ட போனா" என்று வீரா எச்சரித்தான்..
"யாரு இவ? என்ன வெட்டிடுவாளா? எங்க வெட்டு டி பார்ப்போம்!!" என்று அவளை திட்டிக்கொண்டே இடையிடையே அம்பலவாணன் செய்த தவறுகளை எல்லாம் சொல்லிச் சொல்லி 'அதற்கு உன்னை அப்படி செய்யவேண்டும்! இப்படி செய்யவேண்டும்! உன் அப்பனிடம் போட்டோவை காட்டி அவனைப் அதிர வைக்க வேண்டும்!' என்று தன் திட்டங்களை இவன் உளறிக்கொண்டு இருக்க..
அவற்றையெல்லாம் கேட்டு வீரா.. ஒருவேளை இவன் சொன்னதெல்லாம் நடந்திருந்தால்.. என்று நினைக்க உள்ளுக்குள் நடுங்கி தான் போனான். நல்லவனாக இருந்தவன் மனதுக்குள் இவ்வளவு நஞ்சா என்று அதிர்ந்து பார்க்க..
இது எதுவுமே அஸ்திராவின் காதில் விழவில்லை. தன்னை நெருங்கியவனையே வேக மூச்சு விட்டு பார்த்துக் கொண்டிருந்தவள்,
அவளை நெருங்கி அவளது ரவிக்கையில் இவன் கை வைக்க.. அங்கார சத்தத்தோடு தனது கையில் இருந்த அருவாளை தூக்கி அவன் கையில் ஒரே போடாக போட கை வெட்டுப்பட அதில் இருந்து ரத்தம் வர.. அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தவனை, அடுத்த கணம் யோசிக்காமல் அடுத்த வெட்டை அவனது கழுத்தில் இறக்கினாள் அஸ்திரா காளியாத்தாவாய்!!
துடிதுடித்து கண்களில் நீரைத் தேக்கி விழுந்தவன் அஸ்திராவை பார்க்க.. அவளோ ஆத்திரம் காளியாய்.. இன்னும் அருவாளை தூக்கி.. "தொடுவியா?? என்னை தொடுவியா??" என்று அவனது இரு காலிலுல் மாறி மாறி வெட்டினாள்.
வீராவுக்கும் இது பெரும் அதிர்ச்சி தான்!! ஆனால் வெட்டும் என்று பார்த்திருந்தவன், இவள் அடுத்த வெட்டை வெட்டும் முன் "தீரா…!!" என்று இவன் பாய்ந்து அவளை பிடிக்க முயல.. அவன் கைப்பட்ட ஸ்பரிசத்தில் அனைத்து உணர்வுகளும் வெள்ளமென வடிய அவனை பார்த்தவாறே மயங்கி சரிந்தாள் அஸ்திரா.
அதற்குள் சஞ்சயனின் நண்பர்கள் என்று வந்த மூவரும் அவ்விடத்தை விட்டு ஓடிவிட.. இந்த நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு புறம் மெல்ல மெல்ல இறந்து கொண்டிருக்கும் சஞ்சயன். மறுபுறம் உணர்வே இல்லாமல் கிடந்த அஸ்திரா.. வழக்கம்போல நண்பர்களுக்கு போன் செய்து ஜகனை வரவழைத்தான் கூடவே தர்மாவை.
அவர்கள் வரும் முன் அங்கே காளி அம்மனுக்கு பூஜை போட்டு மந்திரவாதிகள் சென்றிருக்க கோவிலுக்குள் நுழைந்தவன் அம்மன் கட்டியிருந்த புடவையை எடுத்து வந்து தன்னவளுக்கு கட்டி விட்டான். சஞ்சயனின் அருகில் அமர்ந்து அவன் கன்னத்தில் தட்டி "சஞ்சயா.. சஞ்சாயா.." என்று கூப்பிட அவனது உயிர் உலகை விட்டுப் பிரிந்து இருந்தது. அந்நேரத்தில் மெதுவாக தலைதூக்கிப் பார்த்த அஸ்திரா விழிகளில் உயிரிழந்து கிடந்த சஞ்சயனும் அவனுக்கு அருகில் இருந்த வீரமும் மட்டுமே தெரிய.. "கொலை.. கொலை.." என்று முனகியவாறே மயங்கிவிட்டாள் அஸ்திரா.
ஜகனும் தர்மாவும் பதறி அடித்து வந்து என்னவென்று கேட்க "தெரியலடா.. வழக்கம் போல நான் இன்னிக்கு இங்க காவலுக்கு வந்தேன். பார்த்தால் யாரோ இவங்க ரெண்டு பேரையும் தாக்கிட்டு இருந்தாங்க. நான் வர்றதுக்குள்ள சஞ்சயன…" என்று மௌனம் காத்தவர், "என்னால அஸ்திராவ மட்டும்தான் காப்பாத்த முடிஞ்சுது" என்றவன் உண்மையை மறைத்தான். வேறு எதுவும் வரவிடாது.
வெளி ஊரில் யாரோ நாலு பேர் அஸ்திராவிடம் முறைதவறி நடக்க.. தடுக்க வந்த சஞ்சயனை வெட்டிப்போட்டு சென்றதாகவும் அங்கு காவலுக்கு நின்ற வீராகும் மற்றவர்களும் சேர்ந்து அஸ்திராவை காப்பாற்றியதாகவும் செய்திகள் பரவியது. அந்த மூவரையும் தேடி பிடித்து அவர்களிடம் சில பல தகவல்களை பெற்று அவர்களை வேறொரு வழக்கில் வெளியே வர முடியாதபடி உள்ளே தள்ளினான் வீரா.
பெரும் அதிர்ச்சியில் இருந்த அஸ்திரா அவ்வப்போது கண் விழித்துப் பார்ப்பதும்.. மயங்குவதுமாய் இருக்க, டாக்டரோ "அது அதிர்ச்சி மயக்கம். பயப்படவேண்டாம்!!" என்று சொல்லி சென்றார். ஒரு வாரம் கழித்து கண்விழித்த அஸ்திராவிற்கு கடைசியாக கோவிலுக்குச் சென்றதும், இடையில் உயிரிழந்த நிலையில் கிடந்த சஞ்சயனும் அவன் அருகில் நின்ற வீராவும் மட்டுமே ஞாபகம் இருந்த
து. மற்ற அனைத்தையும் அதிர்ச்சியின் விளைவால் மறந்திருந்தாள்.
