42
வீரா மருத்துவமனையில் இருந்து வந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. அவனது காயங்களும் இப்பொழுது நன்றாக ஆறி விட்டாலும்.. அஸ்திராவின் கவனிப்பு இன்னும் அவன் அடிபட்ட அன்று எப்படி இருந்ததோ அப்படியேதான். அவனுக்கும் அவளின் இந்த மாற்றம் மிகப்பிடித்தம்!! அதை வாய் மொழியால் சொல்லாமல் விழி மொழி வழியே அவளிடம் கடத்துவான்.
வீராவுக்கு அனைத்தையும் இவளே பார்த்து பார்த்து செய்ய.. இவளின் உடல் நிலை கருதி அவன் வேண்டாம் என்று மறுத்தாலும் விடமாட்டாள். அதில் வடிவம்பாளுக்கு ஏக பெருமிதமும்.. பெரும் நிம்மதியும்!! மகனை மருமகள் கவனித்துக் கொள்ள.. மருமகளின் ஆரோக்கியத்தை அவர் பார்த்துக் கொண்டார்.
அதுவும் அவனருகில் நின்று அவள் அவனுக்கு உணவு பரிமாறும்போது ஆகட்டும்.. அவனுக்குப் மாத்திரைகள் எடுத்துக் கொடுக்கும் போது ஆகட்டும்.. கொல்லைப்புற கிணத்தடியில் எண்ணெய் தேய்த்துவிடும் போதாகட்டும்..
காயங்களுக்கு மருந்து போட்டு விடும் போதாகட்டும்..
அப்போதெல்லாம் அவளை விழுங்குவது போன்ற அவன் பார்வையும் அதில் வழியும் காதலும் மோகமும் பெண்ணவளை வெட்கத்தில் நாணி சிவக்க வைக்கும்.
"கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டீகளா மாமா??" என்று இடது கையால் அவனது கண்களை பொத்திக் கொண்டு வலது கையால் மற்ற வேலைகளை செய்வாள் அவனுக்கு.
அவனும் சும்மா இராமல் இரு கைகளாலும் அவளது இடையை இறுக்கிப் பிடித்துக் கொள்வான்.
"என்னது இது சின்ன பிள்ளை மாதிரி? கையை எடுங்க மாமா!!" என்று இவள் சிணுங்க..
"ஏய்.. நான் என்னடி பண்ணட்டும்.. யேன் கண்ண பொத்திட்ட.. இருட்டுனா எனக்கு பயமடி.. அதேன் உன்னை இறுக்கி புடிச்சுகிறேன்" என்று அவன் சொல்லும் விதமே அப்பட்டமாகப் புளுகுறான் என்று அவளுக்குப் புரிந்து விடும்.
"மாமா…!!!" என்று அதட்ட முயன்று சிணுங்கினாள் அவன் கை அவள் வெற்று இடையில் செய்யும் சேட்டையில்..
இதற்கு இடையில் அவளின் வாசம் மட்டுமல்ல ஸ்பரிசமும் வேண்டுமென வேண்டி நின்றது வீராவின் ஆண்மை!!
அஸ்திராவுக்கு மூன்று மாதங்கள் கூட முடியவில்லை. மேலும் வீராவின் உடல்நிலை வேறு.. இவற்றையெல்லாம் பூங்கொடி அவளுக்கு கோடிட்டுக் காட்டி தள்ளி இருக்கச் சொல்லி இருந்தாள்.
எப்படி முடியும் வீராவால்?
வீராவின் மீது அஸ்திரா கோபம் கொண்ட பொழுதே அவளை தள்ளி இருக்க விடாமல் தன் கையணைப்பிலும் கண் பார்வையிலுமே வைத்திருந்தவன், இப்போது அவளின் முட்ட முட்ட காதலில் திளைப்பவனுக்கு எங்கணம் பிரிந்திருக்க தோன்றும்?? இழுத்து அணைத்து இதழ் முத்தம் பதிக்கவே தோன்றியது!!
ஆனால் அஸ்திராவோ நாத்தனாரின் பேச்சை நாடி பிடித்து கொண்டு கடைபிடிக்க.. திக்குமுக்காடி போனது வீரா தான். இரவு அவனுக்கு கொடுக்க வேண்டிய மாத்திரைகளை கொடுத்து விட்டு இதோ வருகிறேன் என்று கீழே செல்பவள் இவன் உறங்கிய பின்னே அறைக்குள் நுழைவாள். அதிலும் கட்டிலில் அவனருகே படுக்காமல் கீழேதான் அவளது ஜாகை!!
இடையில் இரண்டு முறை மருத்துவ பரிசோதனைக்குச் சென்று வந்துவிட்டான் வீரா. ஒருமுறை அவளையும் மகளிர் மருத்துவரிடம் காண்பித்து கூட்டி வந்து விட்டான். ஆனாலும் அவன் மனைவி அவள் ஜாகையை மாற்றிக் கொள்ளவில்லை.
'இனி மயிலே மயிலேனா இறகு போடாது நாமதேன் பிடுங்கனும் போல' என்று அன்று அவள் மாத்திரை கொடுக்கும்போது அதை விழுங்கியவன் முணுமுணுக்க..
"என்ன மாமா? என்ன சொல்லுறீக? புரியலையே??" என்று இவள் கேட்க..
"ஒன்னும் இல்ல அதேன் காயமெல்லாம் ஆறிட்டே.. எதுக்கு இன்னும் மருந்து சாப்பிடணும்னு கேட்டுட்டு இருக்கேன்" என்றான்.
"இது வலிக்கான மாத்திரை இல்ல மாமா.. சத்துக்காம்!! நிறைய ரத்தம் போயிடுச்சு இல்லையா? அதுக்கு தேன் கொடுத்துறுக்காக டாக்டரு" என்று வருத்தத்தோடு கணவனின் காயத்தை வருடியவாறு அவள் கூற..
"விடு தீரா.. அதுதேன் சரி ஆயிடுச்சே. எல்லாம் சரியாயிடும் இனி" என்று அவனின் கண்களில் மையலை கண்டவள் சட்டென நகர்ந்து "சரி.. சரி.. தூங்குக டைம் ஆயிடுச்சு" என்று விலகிப் படுத்துக் கொண்டாள்.
படுத்தவுடன் அசதியில் உறங்கியும் விட்டாள் அஸ்திரா. இருபக்கமும் தலையணைகளை கட்டிக்கொண்டு நடுவில் அவள் உறங்குவதைப் பார்த்தவனுக்கு மனதில் ஏதேதோ இனிய கற்பனைகள். ஆனால் சிறிது நேரத்திலேயே தலையை மட்டும் உயர்த்தி அவன் விழித்து இருக்கிறானா? என்று அவள் பார்த்த விதம் அவனைத் தாக்க..
'என்னிடமிருந்து எஸ்கேப் ஆகுறதுலேயே குறியா இருக்கா.. வாடி வா' என்றவாறு தன் கண்களை மூடி கொண்டான். மெல்ல எழுந்தவள், அவனின் தூக்கத்தை உறுதி செய்ய அருகில் சென்று பார்க்க.. சட்டென்று இழுத்து அணைத்துக் கொண்டான்.
அருகே இழுத்தவன் மலைப்பாம்பு போல அவளை இறுக்கி தன்னுள் உள்ளிழுத்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தான். பின் அவள் தாடையைப் பற்றி கண்களை கூர்ந்து பார்க்க.. அவன் பார்வையில் தெரிந்த புதுப்புது அர்த்தங்களில் அஸ்திராவின் வயிற்றுக்குள் கிலி பிடித்தது.
'இவரு பார்க்கும் பார்வையே சரியில்லையே.. இன்னும் அவருக்கு உடம்பு சரியாகலையே..'
என்று உதறல் எடுத்தது. அவளின் மன நிலையை சரியாக கண்டு கொண்டவுடன் கண்களில் மின்னல் வெட்ட.. "அதெல்லாம் இந்த முறை டாக்டர் செக்கப் போகும் போது விலாவாரியாக கேட்டுட்டேன்" என்று கூறிக் கண்ணடித்தான். அவள் விழி விரித்து பார்க்க..
இதுவரை இருந்த தாபம் மட்டுப்பட.. தாபம் கனன்ற கண்களில் இப்பொழுது சுவாரசியம் மின்னியது. அவளை அங்குலம் அங்குலமாக ரசித்து தனக்குள்ளேயே புதைத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது அவனுக்கு.
அவன் மனதில் எழுந்த அவள் மீதான எண்ணங்கள் கரையை கடக்கும் காட்டாற்று வெள்ளம் போல அவளை ஆக்கிரமிக்க.. அதிலிருந்து தப்ப இயலாது எதுவும் எதிர்வினை ஆற்ற முடியாமல் அவனை விழி விரிய பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் அஸ்திரா..
வீராவின் கைகள் அவள் இடை பற்றி அவனை நோக்கி இழுத்ததையும், இறுக்கமாக அணைத்ததையும் தடுக்க முடியாமல் வாளாக இருந்தவள். இடையில் நர்த்தனமாடும் அவனது கைகளை தடுக்க முயற்சிக்க.. அவளின் அனைத்து செயல்களையும் தனது ஆளுமையால் தடுத்தவன், ஆசை மோகம் தாபம் என அனைத்தையும் ஒருங்கே அவளிடம் காட்டிக்கொண்டிருந்தான்.
கண்களோடு கண்கள் கவி பேச..
இதழ்களை சூறையாடும் நோக்கத்தோடு இதழ்கள் நெருங்க..
விரல்களோ ஆலியிழை வயிற்றின் மென்மையை ஆராய்ச்சி செய்ய..
உடலோ அவளது உடலோடு பசை போல ஒட்டி உறவாட..
அவனை தடுக்க முடியாமல் செய்வதறியாமல் கண்கள் பல பாவனைகளை பாவையவள் காட்ட.. அனைத்தையும் தன் கண்களால் கைது செய்து கொண்டிருந்தான் கோமகன்.
அதேநேரம் அவள் தேன் சிந்தும் இதழ்களை நெருங்கிய அவன் இதழ்களோ மென்மையாக தீண்ட.. கைகளோ தன் கழுத்தில் இருந்த செயினை கழட்டி அவளது கழுத்தில் மாட்டி விட்டது. அவள் அதிர்ந்து அவனை பார்த்தாள். அதுவரை தீண்டி தீண்டாமல் இருந்த இதழ்கள் நான்கும் அவளின் விலகலில் இறுக்கமாக இணைந்தன..
இணைந்த அவன் இதழ்கள் ரெண்டும் அவளின் இதழ்களோடு கலந்து உறவாட.. இதை சற்றும் எதிர்பார்க்காத அஸ்திரா அதிர்ந்து அனைத்தும் மறந்தாள்.. அவனை எதிர்க்க வழியின்றி அவள் அமைதியாக இருக்க.. இடையில் அவளின் மென்மைக்கு அழகு சேர்க்க அவன் மாட்டிவிட்ட அந்த செயினை மெதுவாக அவன் விரல்கள் வருட.. அதில் கூச்சத்தில் அவள் அவனை உதறித்தள்ள.. சட்டென்று அவளது பின்னந்தலையின் முடியை இறுகப் பற்றி தன் இதழ்களை அழுத்தமாக அவள் இதழ்களோடு பொருத்திக் கொள்ள முனைந்தான். முனைப்பில் வெற்றி பெற.. இதழ்கள் இன்னும் இணைப்பில் லயப்பில் அழுத்தமாய்!! ரசனையாய்!!
அவனது கண்களில் இப்பொழுது காதலும் காமமும் சேர்ந்து மையமிட அவளை பார்த்தான். இதழ்களின் சங்கமத்தில் இதுவரை அவளுள் இருந்த அனைத்து வேதனைகளும் துன்பங்களும் மனதை அரிக்கும் நிகழ்வுகளும் மரித்து போவதை நிம்மதியுடன் உணர்ந்தாள். இந்த நிம்மதி இவனால் மட்டுமே சாத்தியம்.. ஒற்றை நிமிட காதலோடு கூடிய இதழ் சங்கமமே இவ்வளவு நிம்மதியை தரும் பொழுது.. வாழ்நாள் முழுக்க இவனோடு ஒன்றி வாழும் பொழுது தன்னிடம் உள்ள அனைத்து கிலேச்சங்கள் அனைத்தும் பறந்துபோகும் என்று புரிந்த தருணம் அது!!
ஆம்!! அவளையே உணர்ந்த தருணம்!! இதுவரை அவனை பார்க்கும் போதெல்லாம் வெள்ளமென பெருகி வரும் காதல் எதனால் என்று புரிந்த தருணம்!!
யாவும் நீயானாய் என்று உணர்ந்த தருணம்!!
அவனின் காதலை அன்பை முற்று முழுதாய் அறிந்த தருணம்!!
காதலோடு இயந்த வாழ்வில்
சுகமாய் குளிர்ந்த தருணம்!!
தன்னையே காதலாக பார்த்துக் கொண்டிருக்கும் பெண்ணை அவனும் கொஞ்சும் காதலோடு பார்த்தான்!!
கொஞ்சி காதலாட பார்த்தான்!!
கொஞ்சம் களவாடவும் பார்த்தான்!!
