அத்தியாயம் 25
ஒரு மோனநிலையிலேயே தான் சுற்றிக் கொண்டிருந்தாள் பிரக்யா.
கதிர்நயனனின் நடவடிக்கைகள் அனைத்தும் அவன் தன்னை விட போவதில்லை என்று உள்ளங்கை நெல்லிக்கனியாய் புரிந்தது அவளுக்கு.
“மாமா என்கிட்ட… இப்படி உரிமையா நடந்துக்குறாங்க.. அப்புறம் ஏன் விசாக்காவோட நிச்சயதார்த்தம் நடக்க போகுது.. உன்னை டிவோர்ஸ் பண்ணனும்னு சொன்னாங்க..” என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டாள்.
‘அட மக்கு..! அவங்களுக்கு ஏற்கனவே தான் நிச்சயதார்த்தம் நடந்துச்சே. இனிமே எதுக்கு புதுசா நிச்சயதார்த்தம் நடக்கணும்? நடந்துச்சின்னா கல்யாணம் தானே நடக்கணும்? ஆஆஆஆ… இந்த மாமா என் மண்டைய வெடிக்க வைக்குறாரு..’ என்று தலையை பிடித்து அமர்ந்திருந்தாள் மாது.
“ஹாய் அக்காடி..!” என்று தலையை மட்டும் உள்ளே நுழைத்து கைகாட்டி சிரித்தப்படி உள்ளே வந்தாள் ஆதிரா.
‘இவ ஒருத்தி அக்காடி அங்காடினு.. நாமளே எப்பயாவது தான் மண்டையை உடைத்து யோசிக்கிறோம். அதுக்கும் எண்டு கார்டு போட வந்துட்டா..’ என்று மனதுக்குள் கவுண்ட் கொடுக்க..
“என்னடி மனசுக்குள்ள என்னை திட்டுற மாதிரி தெரியுது? மாமா கூட டூயட்ல இருக்கும்போது வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டேனோ அக்காடி” என்று தாடையில் கன்னத்தை வைத்து தாங்கியவாறு அமர்ந்திருந்த தங்கையை எட்டி தலையில் நச்சு என்று ஒரு குட்டு வைத்தாள் பிரக்யா.
“அதிக பிரசங்கி..! அதிக பிரசங்கி..! ஆமா எனக்கு ஓபி டைம்ல உன்னை யாரு உள்ள விட்டா?” என்று தங்கையை முறைத்தாள்.
“ஆமா பெரிய ஓபி? யாருமே இல்லாத டீக்கடைக்கு எதுக்குடி அக்காடி வெட்டியா டீ ஆத்திட்டு இருக்க..” வம்பிழுத்தாள் ஆதிரா.
“அடிங்க.. ராஸ்கல்..! வாய்க்கொழுப்பு உனக்கு ஜாஸ்தி ஆயிடுச்சு. இந்த பக்கம் காத்து வீசுது?"
"சும்மா உன்னை பார்த்துட்டு போலாம்னு தான் வந்தேன்" என்றாள் ஆதிரா.
"யாரு? நீ என்னை பார்க்க? ஒழுங்கா உண்மைய சொல்லு எதுக்கு காலேஜ் கட் அடிச்சுட்டு இப்ப வந்த..?”
“கண்டுபிடிச்சிட்டியா? நான் கட் அடிச்சதை?” என்று கண் சிமிட்டிய தங்கை ஏதோ மறைக்கிறாள் என்று தெளிவாக புரிந்தது அவளுக்கு.
“ஆதி..! டோண்ட் ப்ளே..! பீ சீரியஸ்..!” என்று பிரக்யா முறைக்க..
“ம்ப்ச்..” என்று உதட்டை சுழித்தாள் சின்னவள்.
“ஆதி..!” என்று பிரக்யாவின் அதட்டலான அழைப்பில்..
“ம்ஹீம்..” என்று பெரு மூச்சு விட்டவள், “எல்லாம் காதல் படுத்தும் பாடு டி அக்காடி..!” என்று அந்த டேபிளிலேயே தலை சாய்த்து படுத்த ஆதிராவை கண்டு திடுக்கிட்டு போனாள் பிரக்யா.
“என்ன க்கா..கா..காதலா?”:
“ம்ம்ம்.. க்கா.. கா.. காதல் இல்லடி காதல்..!” என்றாள் முகம் விகசிக்க..
பிரக்யா முகமோ பயத்தால் வெளுத்தது.!
“ஏய்.. லூசி.. என்னடி உளறுற..?” தன் இருக்கையில் இருந்து வேகமாக எழுந்து தங்கையின் அருகே வந்தாள் பிரக்யா.
“உளறல் இல்ல.. ஊடல்.. எனக்கும் அவனுக்கும் சில விஷயங்கள்ல சண்டை.. ட்ஷ்யூம்.. ட்ஷ்யூம்..!” என்று சோகமாக முகத்தை வைத்து கூறினாள் ஆதிரா.
“எதே??? ஊடலா?” என்று அதிர்ந்தவள் இப்பொழுது தங்கையின் அருகே அமர்ந்து அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு “என்கிட்ட விளையாடலையே? நிஜமாதான் சொல்றியா? உங்க அம்மா பத்தி தெரிஞ்சும் இப்படி பேசுறியேடி?” என்று பரிதவித்தாள்.
அக்காவின் கைகளை இறுக்கப்பற்றிக் கொண்டு “எங்க அம்மா பத்தி தெரிஞ்சதுனால தான் சில முடிவுகளை அவங்க கிட்ட விடாம என் வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதை நானே எடுக்கிறேன் அக்காடி.!” என்று அவள் கண்களை கூர்ந்து பார்த்து கூறினாள் ஆதிரா.
“அச்சச்சோ.. இவளுக்கு என்னமோ ஆச்சு..! தங்கச்சி இவ்ளோ நாள் நீ ஒழுங்கா இருந்துட்டு இப்ப காதலு அது இது பினாத்துனா.. நான் வந்து தான் உன்னை கெடுத்துட்டேன்னு உங்க அம்மா என் மேல பாய்வாங்கடி” என்றாள் பிரக்யா சோகமாக..
“ச்சீ.. நீ என்னை கெடுத்துட்டியா அவளா நீ?” என்று குறும்பு புன்னகை புரிந்த தங்கையின் தலையில் மற்றொரு குட்டினை போட்டவள்,
“உதைப்படுவ ராஸ்கல்..!” என்று ஒற்றை விரல் காட்டி பத்திரம் காட்டினாள் பிரக்யா.
பிரக்யா ஏதோ பெரும் யோசனையில் இருக்க.. ஆதிராவோ ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தப்படி “ஸ்டேட்டஸ் வச்சு அவனை ஒரு வழி பண்ணிட்டு வரேன்” என்று தன்னுடைய ஃபோனில் நோண்டிக் கொண்டிருந்தாள்.
பிரக்யாவுக்கு மனமோ திக் திக் என்று அடித்தது.
‘எங்கோ போற மாரியாத்தா.. என் மேல வந்து ஏறு ஆத்தா’ என்பது போல தான் அவளது மனநிலை..!
யாரோ எதுவோ செய்தால் அனைத்தும் அவள் தலையிலே வந்து விடுவது அவளின் விதியா இல்லை சதியா என்று இதுவரை அவளுக்கு புரியாத நிலை..!
“இது சரி வராது..! மாமாவுக்கு ஃபோனை போட்டுட வேண்டியது தான்” என்று தங்கையை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டு நயனனுக்கு அவள் அழைத்தாள்.
ஆனால் நயனனோ அன்று ஏதோ முக்கியமான வேலையில் இருக்க.. இவள் திரும்பத் திரும்ப கால் செய்ய அனைத்தையும் கட் செய்துக் கொண்டே இருந்தான்..
“இந்த மாமா வேற ஆத்திர அவசரத்துக்கு போனை எடுத்து தொலையாது.. யோவ் மாமா.. ஃபோன எடுத்து தொலை யா.. உன் அக்கா பொண்ணு எனக்கு ஆப்பு ரெடி பண்றா..” என்று பிரக்யா புலம்பி தவிக்க..
அங்கோ ஆதிராவோ தன் போல பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.
“எனக்கு ஒரே மைண்ட் டிஸ்டர்பா இருக்கு. வா வா வெளியில போய் ஐஸ்கிரீம் சாப்பிட்டு அதை கூல் பண்ணுவோம்” என்று தன் கை பிடித்து இழுத்த தங்கையை பிரக்யா கோபமாக பார்க்க முயன்று பின் பாவமாக பார்த்தாள்.
“ப்ளீஸ் டி வா.. அப்புறம் அந்த ஜமீன் கோட்டைக்குள்ள போனோம்னா என்னால வெளியிலேயே வர முடியாது” என்று கையை பிடித்து இழுத்து வந்தவள்,
வெளியே இருந்த செவிலியரிடம் “எங்க அக்காவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல. அதனால நான் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். பேஷண்ட் வந்தா நீங்க வேற டாக்டர்ஸ்க்கு மாத்தி விடுங்க” என்று பிரக்யாவுக்கு பதில் அவள் பேச செவிலியர் கண்டு விழிக்க..
ஆமாம் என்பது போல தலை அசைத்தாள் பிரக்யா..
இதுபோலெல்லாம் பிரக்யா செய்ய மாட்டாள் என்பதால் நிஜமாகவே அவளுக்கு உடல்நிலை சரியில்லை என்று நினைத்த செவிலியர்,
“ஓகே டாக்டர் பேஷன்ட் யாரும் வந்தாங்கன்னா ஜெகதீசன் சாரை பார்க்க சொல்றேன்” என்றாள்.
“சரி சரி வா” என்று காரிலேயே அமர்ந்தவள்,
“காரை வீட்டுக்கு விடாதீங்க முரளி அண்ணா பக்கத்துல இருக்கிற ஐபாகோவுக்கு விடுங்க..” என்ற ஆதிராவின் உத்தரவில் டிரைவர் திரும்பி பிரக்யாவை பார்க்க.. அவளும் கண் மூடி தலையசைக்க அடுத்து ஐந்தாவது நிமிடம் அந்த ஐஸ்கிரீம் பார்லரில் நின்று இருந்தது அவர்கள் கார்.
“ஏன் டி இந்நேரத்துக்கு மதியான சாப்பாட்டை சாப்பிட்டு இருக்கலாம் இல்ல.. எதுக்குடி ஐஸ்கிரீம் பார்லருக்கு கூட்டிட்டு வந்திருக்க அங்க அம்மம்மா வேற சாப்பாடு ரெடி பண்ணி வச்சிருப்பாங்க..”
“ஒன்னும் அவசரம் இல்ல.. பொறுமையா இங்க ஐஸ்கிரீம் சாப்பிடுறோம். அதுக்கு அப்புறம் அந்த ஐஸ்கிரீம் சாப்பிட்டது செரிக்க பக்கத்துல சின்னதா ஷாப்பிங் பண்றோம்.. அப்புறம் ஹோட்டல் போறோம். வெட்டு வெட்டுன்னு வெட்டுறோம்.. அது செரிக்க ஷாப்பிங் மால் போறோம் சரியா?” என்று அடுக்கிக் கொண்டே வந்த தங்கையை பார்த்து உள்ளுக்குள் திக் என்று இருந்தாலும் வெளியில் சிரித்து வைத்தாள் பிரக்யா.
ஆனால் வெளியே சிரித்து லூட்டி அடித்தாலும் அவள் உள்ளுக்குள் எதையோ மறைப்பது போல மறுகுவது போலவே உணர்ந்தாள் பிரக்யா. அதனால் அவள் கையை இறுக்க பிடித்தப்படி “ஆல் இஸ் வெல்டா அம்மு.!” என்றாள்.
“ஏய்.. என்ன நான் பாட்டுக்கு ஜாலியா தானே இருக்கேன். இந்த மாதிரி எல்லாம் பேசி என்னை சென்டிமென்ட் ஆக்கி அழ வைக்க பார்க்குறியா? அப்படியெல்லாம் அழமாட்டா இந்த ஆதி.!” என்று கெத்தாக கூறினாலும் அவள் குரல் லேசாக உடைந்தது.
இருவரும் பேசிக் கொண்டு ஐஸ்கிரீம் சாப்பிட்டு பின் காரில் ஏற “வீட்டுக்கு போய் லன்ச் சாப்பிடுவோமா? வீட்டுக்கு வரியா?” என்ற பிரக்யாவிடம்..
“வேணாம்.. வேணாம்.. அடுத்த நிமிஷம் என் ஆத்தா அபிராமி தேவிக்கு விஷயம் போயிடும்.. வா வா.. இத்தனை வருஷமா சம்பாரிச்சு சேர்த்து வச்ச காசை எல்லாம் எனக்கு இன்னைக்கு செலவு பண்ணு” என்று அக்காவின் புஜத்தை பிடித்தபடி சுற்றிக் கொண்டிருந்த தங்கையை ஆசையாக பார்த்தாள்.
அவளுக்கு பிடித்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அவளுக்கு பிடித்த உணவுகளை வாங்கி கொடுத்து தானும் அவற்றையே உண்டு கதை பேசி என்று நேரம் சென்றுக் கொண்டிருக்க..
சற்றென்று ஏதோ தோன்றி பிரக்யா திரும்பி பார்க்க.. அங்கே அபிராமியும் இன்னும் சில பெண்களும் நின்று இருந்தனர்.
“அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?” என்று சிரித்து பேசிய ஆதிராவின் கையை ஒற்றை விரலால் சுரண்டி,
“கெஞ்சம் திரும்பி பாரு டி” என்று அடிக்குரலில் கூறிய பிரக்யாவை கண்டு கொள்ளாமல் அவள் கதை பேசிக் கொண்டிருக்க…
வேகமாக இருவருக்கு அருகில் வந்து நின்ற அபிராமி “என்னடி இது காலேஜ் கட் அடிச்சுட்டு..” என்ற அதட்டலில்..
அதுவரை இருந்த சிரிப்பு மறைந்து போய் “இல்லம்மா கொஞ்சம் ஃபிவேரீஷா இருந்துச்சு.. அதான் அக்கா கிட்ட காமிக்கலாம்னு வந்தேன். லன்ச் சாப்பிட கூட்டிட்டு வந்தா அக்கா” என்று பாவம் போல சொன்ன தங்கையை பார்த்து சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.
“அதுக்குன்னு என்கிட்ட இன்ஃபார்ம் பண்ணாம நீ உன் இஷ்டத்துக்கு காலேஜ் கட் அடிச்சிட்டு வருவியா? வீட்டுக்கு வா இருக்கு உனக்கு..!” என்று அவர் சென்றுவிட..
“கனல் புயல் அடிச்ச மாதிரி இல்ல.. எப்பப்பா என்ன கோபம் என்ன கோபம்.. இவங்களை என்னனு பெத்தாங்க இந்த அம்மம்மாவும் தாத்தாவும்? என்னனு இந்த அம்மா கூட வாழ்ந்துட்டு இருக்காரு எங்க அப்பா?” என்று தோளை குலுக்கிக் கொண்டவள், திருப்தியாக உண்டு முடித்தே வீட்டுக்கு சென்றாள்.
அவளை அவர்கள் வீட்டு வாயிலில் இறக்கிவிட “உள்ள வாடி அக்காடி” என்று கண்ணடித்து கூப்பிட்ட தங்கையை பார்த்து.. ஒற்றை விரல் பத்திரம் காட்டியவள், “சிங்கம் சிக்கும்.. இந்த சில்வண்டு சிக்காது நான் ஜூட்” என்றாள் பிரக்யா.
“யக்கா.. இன்னைக்கு மாமாவுக்கு பர்த்டே ஞாபகம் இருக்கா உனக்கு?” என்றதும் தான் அவளுக்கு ஞாபகத்துக்கு வர..
“உன் புருஷனோட பர்த்டே உனக்கு ஞாபகம் இல்லாமல் இருக்குமா? என் விஷ்ஷையும் மாமாக்கு சொல்லிடு நான் காலையில கால் பண்ணும் போது அவர் எடுக்கவே இல்ல..” என்று வீட்டின் உள்ளே சென்று விட்டாள் ஆதிரா.
ஒரு பெரிய அலை அடித்து ஓய்ந்தது போல் இருந்தது அவளது மனநிலை..!
ஆதிராவின் விஷயம் சித்திக்கு தெரிய வந்தால்?? சித்தி என்னை பேசினால்?? மாமா என்ன சொல்லுவாரு? என்று வீடு வரும் வரை அதே எண்ணிக் கொண்டிருந்தவளுக்கு கதிர்நயனன் பிறந்தநாள் பற்றி ஆதிரா ஞாபகப்படுத்தியது மறந்தே போனது.
காலையில் கதிர்நயனன் சீக்கிரமே வெளியே சென்று இருக்க.. இவளும் சாப்பிடும் போது ஃபோனில் யாரிடம் பேசிக் கொண்டே இருந்ததால் பர்வதத்தம்மாளும் இவளிடம் கூறவில்லை. எப்படியும் பேத்திக்கு தெரியும் என்று நினைத்திருந்தார்.
“சுகந்தி அக்கா அம்மம்மா வீட்ல இல்லையா?” என்று கேட்டபடி உள்ளே வந்தவளிடம்,
“இன்னைக்கு தம்பி பொறந்த நாளு இல்லையா.. அதான் பெரிய கோவிலுக்கு போய் இருக்காங்க அம்மா” என்றார் அவர்.
“அச்சோ..!” என்று நாக்கை கடித்துக் கொண்டவள் இந்நேரத்துக்கு மேல கிளம்பி கோவிலுக்கும் போக முடியாது.
‘மாலை போல மாமன் வரும்போது ஏதாவது கிஃப்ட் பண்ணலாம்’ என்று நினைத்தவள், சிறு தூக்கம் போட்டு எழுந்து குளித்து புது மலராய் வெளியே கிளம்பினாள்.
அந்நேரம் பர்வதத்தம்மாள் ஃபோனில் கோவில் அர்ச்சகரியிடம் பேசிக் கொண்டிருக்க இவள் கைகாட்டி விட்டு சென்று விட்டாள்.
ஆண்களுக்கான பிரத்யேக ஆடை உலகத்திற்குள் நுழைந்தவள், என்ன வாங்கலாம் என்று யோசித்தப் படியே அங்கே சுற்றி திரிந்தாள்.
“மாமாவோட ஷர்ட் சைஸ் தெரியாது.. ம்ப்ச் மாமா என்ன மாதிரி ப்ராண்ட் வாங்குவாருனு எதுவுமே தெரியாது. என்னத்தை வாங்கி அவருக்கு நீ கிஃப்ட் பண்ணுவ?” என்று புலம்பி, அதை கைவிட்டு அவன் உபயோகப்படுத்தும் வாசனை திரவியம் மற்றும் அவனுக்காக உயர் ரக பேனா இரண்டையும் கிஃப்ட் ராப்பர் செய்துக் கொண்டு வந்தவள் எதிரே வந்த ஸ்கூட்டியை கவனிக்காமல் அதில் மோதிக்கொண்டாள்.
கீழே விழுந்து முன் நெற்றியில் லேசாக புடைத்து போனது. கையிலும் இரண்டு இடத்தில் லேசான சிராய்ப்பில் இரத்தம் வேறு கசிந்தது..!
இவள் மேல் ஸ்கூட்டி மோதிய பொண்ணோ பயத்தில் நடுங்க..
“ஒன்னும் இல்ல நீ போமா” என்று அவளை அனுப்பி வைத்துவிட்டு இவள் தள்ளி பார்க்கிங்கில் நின்றிருந்த காரில் ஏறி அமர்ந்தவள், “முரளி ணா ஹாஸ்பிடல் போங்க” என்றாள்.
வரும்பொழுது “இன்னிக்கு ஒர்க்குக்கு போகல சும்மா ஷாப்பிங் தான்” என்று கூறியவள் இப்போது இப்படி கூறியதும்,
“ஏதும் திடீர் கேஸா பாப்பா?” என்று அவர் கேட்க..
“இல்ல ணா.. ஒரு பொண்ணு வந்து ஸ்கூட்டில மோதிருச்சு..”
“ஐயோ என்னம்மா அடி ஏதுமா மா.. நான் இருங்க ஐயாவுக்கு போன் பண்ணி வர சொல்றேன்” என்று பதறினான்.
“இல்ல ணா.. லேசான சிராய்ப்பு தான். ஒரு டிடி போட்டுட்டா போதும் அதுக்கு தான் ஹாஸ்பிடலுக்கு..” என்று அங்கு எமர்ஜென்சி டிபார்ட்மெண்டில் சிராய்ப்புகளுக்கு மருந்திட்டு டிடி இன்ஜெக்ஷன் போட்டு விட்டே வீட்டிற்கு வந்தாள்.
வந்தவள் சுகந்தியிடம் “அக்கா கொஞ்சம் டயர்டா இருக்கு நான் படுக்கிறேன். நைட்டு மாமா வந்ததும் சாப்பிடுறேன்” என்று சென்று படுத்து விட்டாள்.
ஆனால் அவள் கார் ஓட்டியோ நயனனுக்கு இரண்டு மூன்று முறை கால் செய்து விட்டான்.. நயனனோ முதலில் எடுக்கவில்லை.
முரளி ஏதாவது முக்கியமாக இருந்தால் தான் போன் செய்வான் என்று தெரிந்தவன், பிரக்யாவுக்கு ஏதாவதா என்று பயந்து அவன் திரும்ப ஃபோன் செய்ய.. முரளி அனைத்தையும் கூறி விட பல்லை கடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான் நயனன்.
அப்பொழுதுதான் உணவு முடித்து எழுந்த பர்வதத்தம்மாள் மகன் கோபமாக வேகமாக வருவதை பார்த்து “என்ன யா? இன்னைக்கு கோவிலுக்கு கூட வரல? ரொம்ப வேலையா?” என்று கேட்க..
“காலையில கோவிலுக்கு போயிட்டு தான் ஆபீஸுக்கே போனேன்” என்று மெதுவாக சொன்னவன், பின் “எங்க உங்க பேத்தி?” என்று சீறினான்.
“ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்து டையர்டா இருக்காங்கன்னு படுத்திட்டாங்க தம்பி” என்றார் சுகந்தி.
“என்னப்பா? என்ன ஆச்சு?” என்றவர் பதறி கேட்க..
“ஒன்னும் இல்லம்மா.. எங்கேயோ முட்டி மோதி விழுந்து எழுந்து வந்திருக்கா உங்க பேத்தி”
“அய்யய்யோ!!” என்ற பதறியவரிடம் “நான் பார்த்துக்கிறேன் நீங்க ரெஸ்ட் எடுங்க” என்றவன், விடு விடு என்று மாடி ஏறினான்.
அப்பொழுதுதான் பிரக்யா ஒரு தூக்கம் முடித்து எழுந்து இருந்தாள். அறைக்குள் வந்தவன் என்ன ஏது என்று கூட கேட்காமல் அப்படி ஒரு வசை மழை..
ஏன் திட்டுகிறான் எதற்கு திட்டுகிறான் என்று தெரியாமலேயே “வொய் பிளட் சேம் பிளட்” என்று அனைத்தையும் வாங்கிக்கொண்டு இருந்தாள்.
"பேரு தான் மெத்த படிச்ச டாக்டரு.. ஆனா.. இப்படி அலட்சியமாவா நடப்ப?”
ஆக்சிடென்ட் பற்றி தெரிந்து திட்டுகிறான் என்று அவள் தலை கவிழ்ந்து நின்றாள்.
அலட்சியமாக இருந்ததற்கு ஒரு திட்டு..!
தன்னிடம் சொல்லாததற்கு ஒரு திட்டு..!
வீட்டிலும் ஒருவரிடமும் தெரியப்படுத்தாததற்கு திட்டு..! என்று திட்டுக்கள் எத்தனை வகைப்படும் என்று அவளுக்கு புரிய வைத்துக் கொண்டிருந்தான் கணவனாய் கதிர்நயனன்.
பாவமாய் பாவை பார்த்திருக்க.. அந்த பார்வை அவனை ஏதோ செய்ய..
"ம்ப்ச்.. இவளை.." என்று அவள் கையோடு இழுத்தான், அவனின் மார்பிலே வந்து விழுந்தாள் பூவை.
“எங்க அடிபட்டிச்சு?” என்று மென்மையாக கேட்க..
“நெத்தியிலும் கையிலும்” என்று காட்டினாள்.
“டிடி போட்டியா?”
“ம்ம்ம்..”
அவள் நெற்றியில் புடைத்த இடத்தை மெல்ல வருடியவன் "பாரு எப்படி அடிப்பட்டு இருக்கு.. கவனமா வரணும்னு தெரியலையா?" என்று கடிந்தவன்,
“வலிக்குதா?” என்று மென்மையாக கேட்க..
அவளோ ஆம் இல்லை என்று எல்லா பக்கமும் தலையசைத்தாள்.
“ஆமா இல்லைன்னு ஒரு பக்கம் தலையாட்டு டி எதுக்கு எல்லா பக்கமும் ஆட்டுற?” என்று முறைக்க..
“அடிபட்டது ஒன்னும் வலிக்கல.. நீங்க இவ்வளவு பேசுறது தான் ரொம்ப வலிக்குது” என்றாள் எங்கோ பார்த்து..
“இங்க பாரு டி” என்றவன், அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு, “எதுக்காக இன்னைக்கு ஹாஸ்பிடல் கூட போகாம ஷாப்பிங் போன?” என்று வினவ..
“அது.. அது..” என்று வெகுவாக தயங்கினாள். அவனுக்காக தான் அவள் சென்றதே..! அதை அவனிடம் பகிர ஏதோ ஒரு வெட்கம் அவளை ஆட்கொண்டது.
"கேட்கிறேன்ல.. சொல்லு" என்றான்.
"அது.. கண்ண மூடுங்க சொல்றேன்" என்றவளை அவன் புரியாமல், மாட்டேன் என்பது போல பார்க்க…
தன் ஷாலால் அவனின் கண்களை கட்டினாள் மாது.
“உன் பில்டப் எல்லாம் பார்த்தா.. வேற மாதிரி இருக்கே டி சின்னு” என்று அதுவரை இருந்த கோபம் மறைந்து மெல்லிய தாபம் எட்டிப் பார்த்தது கோமகனிடம்..
"இப்ப திறங்க" என்றாள். மெல்ல விழிகளை திறந்தான் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது.
"ஹாப்பி பர்த்டே மாமா" என்றாள்.
இதழில் புன்னகையுடன்.. கண்ணில் பொங்கிய நேசத்துடன் தனக்கான பிறந்தநாள் பரிசோடு நின்றவளை விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தான் நயனன்.
இரவு விளக்கு வெளிச்சத்தில் தனக்கான பரிசினை கையில் ஏந்தி இறக்கை இல்லாத தேவதையாக தன் முன் நின்றவளை ரசனையோடு பார்த்தான் நயனன்.
“இந்த இராவணன்.. இப்ப இராமனாகிட்டானா என்ன?” என்று அவளை பின்னிருந்து அணைத்த வாக்கில் கேட்டான்.
“மொதல்ல.. இதை வாங்குங்க மாமா” என்றவள், பிடறியில் உணரும் அவனின் மூச்சுக் காற்றின் வெம்மையில் நெளிந்தாள்.
“வாங்கலாம்.. வாங்கலாம்.. ஆனா.. இதை விட வேற ஒரு பர்த்டே கிஃப்ட் கிடைச்சா.. இந்த பர்த்டே வேற லெவல் தான்” என்று அவள் காது மடலில் ரகசியம் பேசினான்.
அவளுக்கும் அவன் சொன்ன கிஃப்ட்டின் அர்த்தம் புரிந்ததுதான்..!
ஆனால்.. ஏதோ ஒரு தடை.. அதை உடைத்து அவனிடம் நெருங்க.. அவனை நெருங்க விட அவளுக்கு பயம்.
அவன் விரல்கள் அவளின் தோள்பட்டையில் அழுந்தின. அவள் தோள்களை மெதுவாக அழுத்தி தன் தாபத்தினை பதிவு செய்தான்.
பின் அவளை சோதிக்க நினைத்து தான் சோதனை தீயில் விழுந்து விடாமல் சுதாரித்தவன்,
அவள் கொடுத்த பிறந்தநாள் பரிசை ஆசையோடு வாங்கி பிரித்துப் பார்த்தான்.
அவள் கொடுத்த பேனாவினாலே அவள் முதுகிலேயே அவன் பெயரை எழுதிப் பார்க்க..
“மாமா என்ன பண்றீங்க?” என்று நெளிந்தாள் அவள் கூச்சத்தில்..
“பென் நல்லா எழுதுதானு சரி பார்க்கிறேன் சின்னு” என்று விலகினான்.
இன்னும் அவ்விடத்தில் அங்கே இருந்தால் அவளை முழுவதுமாக விலக்கி வைக்க முடியாது என்பதை உணர்ந்து..
“ஷர்ட் வாங்கலாம்னு போனேன். எனக்கு உங்க ஷர்ட் சைஸ் தெரியல” என்றாள் உதடு பிதுக்கி..!
“தெரிஞ்சுக்கணும்” என்றவன் கண்களோ அவள் உதட்டில் குத்திட்டு நின்றது.
“எப்படி தெரிஞ்சுக்க நீங்க சொன்னா தானே?”
சட்டென்று அவளை இழுத்து அவள் இரு கைகளாலும் தன்னை இறுக்க அணைத்து பிடிக்க வைத்தவன் “இப்படித்தான் தெரிஞ்சுக்கணும்” என்றான்.
“அச்சச்சோ மாமா..” என்று அவள் கிண்கிணியாய் சிரிக்க..
அந்தச் சிரிப்பு சட்டென அவனுள் மோகத் தீயை தூண்டியது. தன் இரண்டு கைகளிலும் பற்றியிருந்த அவள் இடுப்பை இறுக்கி ஒரு பிடி பிடித்தான்.
“ஆவ்வ்க்க்” சன்னமாக சிணுங்கி அவன் கைகளைப் பிடித்தாள். அவள் காதில் சூடாக முத்தமிட்டான்.
“ஐ மிஸ் யூ சின்னு”
“என்ன இப்ப?” தடுமாற அவள்..!
“முடியல..” தாபத்தில் அவன்..!
“என்னது புதுசா ஃபீலிங்ஸ் எல்லாம்?” உதடு கடித்து அவள்..!
“ம்ம்.. ஃபீலிங் ஓவர்லோடட்..!” கடித்த உதட்டை வருடியப்படி அவன்..!
“ஆமா.. நாங்க உங்க லவ்வர் பாருங்க?” என்று முகம் திருப்பினாள் அவள்..!
“நீ ஏத்துக்கிட்டாலும் ஏத்துக்கலேன்னாலும் இனி நீ என் லவ்வர் தான்” என்று அவள் முகத்தை தன் புறம் திருப்பினான் அவன்.
“ஆஹா.. ஆளைப் பாருங்க.. கல்யாணம் ஆகிட்டு.. லவ்வு கேட்குதாம் லவ்வு..!”
“ஏன்.. கல்யாணமானா, லவ் பண்ணக் கூடாதா?”
“கூடாது.. கூடாது..!”
“ஏனாம்? கல்யாணம் வேற.. லவ்வு வேற மா..” என்றவன் அவள் இடையை தழுவ.. அவன் செயலை அவள் தடுக்கவில்லை.
“எப்படி வேறாகும்?”
“அது.. மேரேஜ் லைஃப்ல ஆயிரெத்தட்டு பிரச்சனைகள் வரும் போகும்.. ஆனா லவ்ல.. வெறும் லவ் மட்டும்தான் இருக்கும்” அவள் இடையில் இருந்து மெதுவாக கைகளை உயர்த்தி அவளை நெருக்கினான்.
“ஆஹா.. புதிய தத்துவம் தான்..” என்றவள், நெருங்கிய அவனின் நெஞ்சில் கை வைத்து தடுத்தாள்.
“அது.. மாமா.. இப்போ.. வேணாம். புரிஞ்சுக்கோங்க.. ப்ளீஸ்..!!” நயனனின் கண்களைப் பார்த்துக் கெஞ்சினாள்.
”மூணு வருசம் காக்க வச்சவ தானே.. ஒரு மூணு நிமிசத்துல ஒன்னும் ஆகிடாது.. இப்படியே இரு டி” என்றதும் அவள் மீண்டும் பேச..
”கொஞ்சம் பேசாம இரு டி.. இந்த நிமிஷத்தை அனுபவிக்க விடு டி.” தன் நெஞ்சில் இருந்த அவள் கையை ஒதுக்கினான். அவள் கைகள் இரண்டையும் பிடித்து விரல்களைக் கோர்த்து, அவள் கைகளை அப்படியே உயரத் தூக்கி அவள் தலைக்கு மேல் சுவற்றில் வைத்து அழுத்தினான். அவள் கண்களை ஆழ்ந்து பார்த்து, கழுத்தில் முகம் புதைத்து அவளின் வாசத்தை ஆழ்ந்து சுவாசித்தான்.. இத்தனை
நாளும் ஆக்சிஜன் இல்லாமல் வாழ்ந்தவன் போல..
அவன் மீசை முடிகள் சுள் சுள்லென குத்தியது. அவள் கொஞ்சமாய் நெளிந்தாள்.
”ஸ்ஸ்.. மாமா..”
”ம்ம்ம்ம்.. ??”
”குத்துது.. ”
“எனக்கு வேற மாதிரி கேட்குது டி” என்றவனின் பேச்சில் அவள் அதிர்ந்து வாய் பிளக்க, நிமிர்ந்து பார்த்தவன் பிளந்த அவள் இதழ்களில் புதைந்தான்.
