உயிரே 17

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 233
Thread starter  

17

 

எய்யா.. செத்த இரு.." என்று‌ வடிவாம்பாள் மகனை நிறுத்தி கையில் நல்லி எலும்பு சூப்பை கொடுத்து குடிக்க சொன்னார்.

 

"எம்மோவ்.. இப்பதேன் குளிச்சிட்டு வரேன்.. பாரு சில்லுக்கு தம்பி மாதிரி நின்னுகிட்டு இருக்கேன். இரு போய் முதல்ல டிரஸ மாத்திட்டு வரேன்.. அப்புறம்.. ஒத்த கையால எல்லாம் என்னால குடிக்க முடியாது. இரு என் பொண்டாட்டி வரட்டும்!!" என்று கண்ணடித்து சொன்ன மகனின் முதுகில் ஒரு தட்டு தட்டிய வடிவு "சூப்பு குடிக்க ஒத்த கை போதும் ராசா.. நீயி வேற சரி உடுப்பு மாத்திட்டு வா.. சூடு ஆறியடும் சூப்பு" என்று மகனுக்காக பக்குவமாக செய்த நல்லி சூப்பை மூடி வைத்தவர் கொல்லைப்புறம் மருமகளை பார்க்க சென்றார்.

 

ஒற்றை துண்டு மட்டுமே இவன் கட்டியிருக்க அதோடு தன் அறைக்கு சென்று அவன் வழக்கமான அவனது கதர் வேட்டியை கட்ட முடியாமல் கடுப்பாகி தூர போட்டுவிட்டு ஷார்ட்ஸும் டிஷர்ட்டை கஷ்டப்பட்டு கை வழியாக நுழைத்து கொண்டு வந்து சேர்ந்தான் கீழே கூடத்திற்கு..

 

அதற்குள் அஸ்திரா குளித்து வந்திருக்க அவளுக்கு ஆடை எடுக்க என்று வடிவு மேலே சென்றார். அமைதியாக பார்த்திருந்தவன். 

 

"நமக்கு முன்னால வந்த எந்த தர்மா எங்குட்டு போனான்?" என்று யோசித்தவாறு சாப்பாட்டு மேசையில் இருந்த சூப்பை இடது கையாலேயே ஸ்பூனோடு ஊதி ஊதி குடிக்க ஆரம்பித்தான்.

 

அப்போது அவசரமாக உள்ளே நுழைந்த தர்மா "ஏய்ய் மச்சான்…" என்று பாதி வார்த்தை இங்கேயும் மீதி வார்த்தையை வெளியே அவன் பார்க்க.. "என்னடா?? யார் வந்திருக்கா?" என்று வெளியே பார்க்காமலேயே.. "அந்த இன்ஸ்பெக்டர் வந்திருக்கிறானா?" என்று கேட்டான் வீரா.

 

"அடேய்.. எப்புடிடா பார்க்காமலே சொல்லுற? நேத்து தான் ஜார்ஜ் எடுத்துருப்பாரு போல.. வந்த உடனே சஞ்சயன் கேசு தூக்கிட்டு வந்திட்டாரு.. அதுக்காகவே அவரை இந்த ஊருக்கு மாற்றல் வாங்கி வர வைத்திருப்பான் போல அந்த அம்பலவாணன்" என்று கடுப்புடன் கூறியவன், வெளியில் நின்றிருந்த இன்ஸ்பெக்டரை ஒருமுறை திரும்பிப் பார்க்க "டேய் மாப்ள.. அந்த இன்ஸ்பெக்டரை பொத்துனாப்புல கூட்டிட்டு வந்து நம்ம வீட்டு ஹாலில் உட்கார வை இந்த சூப்பை குடிச்சு முடிச்சிட்டு வரேன்" என்றான்.

 

"என்ன வூட்டுக்குள்ளையா?? உனக்கு அறிவு இருக்கா? அவனே எப்படா சமயம் கிடைக்கும் உன்னைய தூக்கி உள்ள வைக்கலாம்னு காத்துக்கிட்டு இருக்கிற மாதிரியே பாக்குறான். நீயி இப்பதேன் சாவகாசமாக உட்கார்ந்து சூப்ப சூப்பி சூப்பி குடிச்சிட்டு இருக்க.. வாடா வெரசா!!" என்று தவியாய் தவித்தான் தர்மா. ஏனென்றால் வந்தவன் கண்களில் அத்தனை குள்ளநரித்தனம் தெரிந்தது. வந்தவனும் விசாரிப்பது போல கேட்கவில்லை. ஏதோ வீரா தான் கொலையை செய்துவிட்டு தப்பிக்க முயல்வது போல இருந்தது அவனது நடவடிக்கைகள் எல்லாம்.

 

"அடேய் யாருடா இவன்! அந்த இன்ஸை எப்படி சமாளிக்குறதுனு எனக்கு தெரியும். ஆனா வடிவ போல சமாளிக்கிறது ரொம்ப குஷ்டம்… இந்த சூப்ப இப்ப காலியாகலைனா.." என்று வீரா சிரித்துக்கொண்டே சூப்பை குடுத்தவனுக்கு அப்போதுதான் மனைவியின் ஞாபகம் வர… 

 

இப்போது அவள் உள்ளே வந்தாலோ அல்லது தங்கள் அறைக்குச் சென்றாலோ கண்டிப்பாக அந்த கண்ணபிரானின் கண்களில் படுவது நிச்சயம். அது கூட சஞ்சயன் கொலைவழக்கில் இவள் முன்னால் தான் விசாரிக்கப்படுவது கொஞ்சம்கூட பிடித்தம் இல்லை வீராவுக்கு. தப்பான யூகங்களை அவள் மனதில் பரப்ப அவன் விரும்பவில்லை.

 

அதனால் மெதுவாக இவனும் கொல்லப்பக்கம் செல்ல.. அப்போதுதான் அஸ்திராவுக்கு கொடுக்க வேண்டிய உடுப்பை எல்லாம் கொடுத்து விட்டு வடிவாம்பாள் வந்து கொண்டிருக்க.. அவரை அங்கேயே பிடித்தவன், "எம்மா.. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் உன் மருமகள அந்த ரூம்ல இருந்துக்கிட்டும். எக்காரணம் கொண்டும் அவளை வெளியே வர சொல்லாத" என்று அவசர அவசரமாக கூற..

 

"என்னடா இது அதிசயமா இருக்கு? கொஞ்ச நேரத்துக்கு முன்னால தான் நானு தங்க சொன்னத்துக்கு குதிச்ச.. என்னோட அறிவு விமர்சனம் பண்ண.. இப்ப என்னநீயே சொல்ற.. இப்போ உன் அறிவை மட்டும் என்ன கொல்லப்புறத்துல போய் உட்கார்ந்துகிச்சா?" என்று வடிவாம்பாள் திருப்பிக்கொடுக்க ஒற்றை கையோடு அவரை அணைத்தவன்…

 

 

"என்னைய பாரு ஆத்தா.. உன் புள்ளை குடியும் குடுத்தனமுமா இருக்கணுமா? இல்ல குடியோட குடுத்தனம் பண்ணனுமான்கிறது உன்ற கையில தேன் இருக்கு. இப்ப மட்டும் யேன் பொண்டாட்டி அந்த இன்ஸ்பெக்டர இருக்கிறத பார்த்தா.. அம்புட்டுதேன்.. ஜோலி முடிஞ்சது சொல்லிபுட்டேன்!!" என்று எது வடிவாம்பாள் வீக் பாயிண்ட் என்று பார்த்து அடித்தவன் பின்னால் அஸ்திரா வர அவளை கண்களால் காட்டிவிட்டு இவன் உள்ளே சென்று விட்டான்.

 

வடிவாம்பாளும் மகனின் மந்திரத்திற்கு கட்டுப்பட்டு "ஆத்தா.. நம்ம வீட்ல எல்லாம் இப்படி ஒதுங்குனா.. வந்து.. இந்த ரூம்ல தேன் இருப்பாய்ங்க.. பயப்படாத கண்ணு ரூம்ல அல்லா வசதியும் இருக்கு" என்று அவளை அங்கு அழைத்துச் செல்ல.. அவர் சொன்னது போல கட்டில் இல்லாமல் கீழே ஒரு மெத்தை விரிப்பும் ஏசியும் பேனும் டிவி என்று சுகமாகத்தான் இருந்தது. அவள் ஆச்சரியமாக வடிவை பார்க்க.. "எல்லாம் உன்ற புருஷன் பண்ணுனது தேன். அவேன் தங்கச்சிங்க இங்கேயிருந்து கஷ்டப்படக்கூடாதுனு. பாக்குறதுக்கு டிவியிலிருந்து அதுக்கு கேபிள் கனெக்ஷன் கொடுத்தது வரைக்கும் எல்லாமே அவந்தேன்.. நீயி இரு.. உனக்கு நானு சாப்பாடு இங்கனவே கொண்டு வந்து தரேன்" என்று அவர் சொன்னப்படியே அவளுக்கு காலை சாப்பாடு கொடுத்துவிட்டு அவளை ஓய்வெடுக்கச் சொல்லி தான் இவர் அங்கிருந்து அகன்றார்.

 

தர்மாவிடம் சொன்னது போல நன்றாக சூப்பை நாக்கை சப்பி சப்பி குடித்துவிட்டு தான் இன்ஸ்பெக்டரை வரவேற்க வெளியே சென்றான் வீரா.

 

"வாங்க இன்ஸ்பெக்டர்.. உள்ளே உட்கார்ந்து பேசலாமே!!" என்று சற்று வீரா அடக்கியே வாசிக்க..

 

தன் கண்களில் போட்டிருந்த கூலரை இறக்கி அவனை மேலும் கீழும் நன்றாக பார்த்தான் கண்ணபிரான். வரும்போதே விசாரிக்காமலா வருவான்? அதிலும் முக்கியமாக இவனின் தெனாவெட்டு திமிரை கேள்விப்பட்டு.. அதை முதலில் அழிக்கிறேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வந்தவன் அல்லவா?

 

தன் முன்னே பவ்யமாக நிற்பவனுக்கும் தான் கேள்விப்பட்டவனுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாததை நினைத்து சற்று குழம்பியவன் "நீங்கதான் வீரநெடுமாற பாண்டியனா?" என்று கேட்டான்.

 

"நானே தேன் சார்!!" என்று தலையை கீழே குனிந்து அவன் கூற.. அருகில் நின்றிருந்த தர்மமோ வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு "இதோ ஆரம்பிச்சிட்டான் இல்ல மச்சான்.. இனி வந்த உனக்குத்தான் வேப்பில அடிக்கனும் டோய்" என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

 

அங்கும் இங்கும் நடந்தவாறே அவன் கையில் தலையில் இருந்த கட்டுக்களை எல்லாம் பார்த்து "இதெல்லாம் என்ன எங்க போய் சண்டை போட்டுட்டு வாங்கி வந்தீங்க?" என்று கேட்டான் கண்ணபிரான்.

 

"ஏன் சார் எனக்கு என்ன வேலை வெட்டியே கிடையாதா? பொழுது போகாமல் சுத்துறத்துக்கு நானு என்ன வருத்தப்படாத வாலிபர் சங்க மெம்பராக இல்லை ஊருக்கு நல்லது பண்றன்னு வெள்ளையும் சொள்ளையுமா சுத்திட்டு இருக்கிற பெரிய மனுசேனு நினைச்சுக்கிங்களா? எனக்குன்னு வயல்வெளி இருக்கு. அதை சார்ந்த அரவை மில் கம்பெனியின் நிறைய இருக்கு. இதைப் பார்க்கவே எனக்கு ஒத்த நாள் போது மாட்டேங்குது.. இதுல வம்பு சண்டை எல்லாம் நானு எங்குட்டு பண்ண?" என்று அவனின் குரலில் அத்தனை பணிவு இருந்தாலும், அவன் உடலே சற்றும் குழையாமல் விறைப்பாகவே நின்றிருந்தது.

 

"அப்புறம் இந்த காயம் எப்படி வந்தது நீங்களே போய் கைய உடச்சிட்டு கட்ட போட்டு வந்தீங்களா? உங்கள நான் விசாரிக்க வரபோவது தெரிந்தது.." என்று நக்கலாக இன்ஸ்பெக்டர் கேட்க…

 

"யேன் கையை நானே உடைச்சுக்கிற அளவுக்கு நான் ஒன்னும் முட்டாளில்ல.. நீங்க சொன்னீங்களே அந்த வேலை வெட்டி இல்லாத ஒருத்தனு.. அவந்தேன் யேன்கிட்ட வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டான். சும்மாதான் இருக்குறவன் சும்மா இல்லாமல்.. யேன்கிட்ட வந்து சும்மா சும்மா குதிச்சா.. அதான் சும்மா ரெண்டு தட்டு தட்டினேன்.. அதுல சும்மா எனக்கும் கொஞ்சம் சேதாரங்கள் ஆயிடுச்சு" என்று தோளைக் குலுக்கியவனைக் கண்ட இன்ஸ்பெக்டர் சாதாரண ஆள் போல இவன் இல்லை. இவனிடம் பார்த்துதான் விஷயத்தை கறக்க வேண்டும் என்று புரிந்து கொண்டான்.

 

"சரி சரி கிளம்புங்க போலாம்!" என்று இன்ஸ்பெக்டர் கூப்பிட.. "எங்கன சார்? என்னமோ நீங்க யேன் வூட்டுக்கு விருந்து வந்த மாப்பிள்ளையாட்டோம் வாடா மச்சான் வெளியில போய் தண்ணி அடிக்கலாம் கூப்பிட மாதிரி கூப்பிடுறீக.. எங்க வீட்டு மாப்பிள்ளையே அப்படி என்னை கூப்பிட மாட்டான்" என்று தர்மாவை பார்த்துவிட்டு கூறியவனை கண்ட கண்ணபிரானுக்கு வீராவை இழுத்து வைத்து இரு கன்னங்களிலும் அப்பு அப்பு என்று அப்பணும் போல கோபம் வந்தது.

 

 ஆனால் இது கோபத்தை காட்டும் நேரம் அல்ல என்று உணர்ந்த கண்ணபிரான் "அதான் உன் நிகழ்கால பொண்டாட்டியோட இறந்தகால புருஷன்.. ஐ மீன் எக்ஸ் புருஷனோட கொலை வழக்கில் முக்கியமான குற்றவாளியா உன்னைய தான் சொல்லி இருக்காங்க. அதை விசாரிக்க தான் உன்னை கூப்பிட்டு போறேன்" என்றான் கண்ணபிரான்.

 

"யேன் பொண்டாட்டிக்கு எக்ஸூனு சொன்னா.. அவன் உயிரோடு இருக்கிறானா?? அவனே இல்லைங்குறப்ப.. அவனுக்கு எதுக்கு எக்ஸ்.. வொய்.. இசட் பட்டமெல்லாம் நீங்க கொடுக்குறீக?" என்று குரலை மட்டும் உயர்த்தி கூறியவன்…. "என்னைய குற்றவாளினு நீங்களா முடிவு பண்ண முடியாது சார். விசாரணை தான் சொல்லணும். அப்படியே நானே குற்றவாளினாலும் அதை சொல்லி என்னைய போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போக தகுந்த சாட்சியங்களும் இருக்கணும். இது எதுவும் இல்லாமல் என்னை போட்டுத் தள்ளனு.. வெத்து ஆட்கள மிரட்டிப் பார்க்குற உங்கள மாதிரி இன்ஸ்பெக்டர்கள் எத்தனை பேரை அழைச்சிட்டு வந்தாலும்.. அத்தனையையும் தாண்டி நிமிர்த்து நிற்பான் இந்த வீர நெடுமாற பாண்டியன்!!" என்று வழக்கம் போல் இ

டது கையால் மீசையை நீவி விட்டுக் கொண்டான்!!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top