உயிரே 7

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 316
Thread starter  

7

 

"புதுசா பார்க்க.. செய்ய என்ன இருக்கு.. அல்லாம் ஏற்கனவே இன்னொருத்தனால பழகப்பட்ட பார்க்கப்பட்ட உடம்புதேன்" என்றாள் சற்றே நக்கல் குரலில்.. அப்போதாவது அவனுக்கு சுர்ரென்று கோபம் ஏறி நம்மை விட்டு விலகுவான் என்று நினைத்தாள்.

 

முதலில் அவள்‌ சொன்னவுடன் அவனுக்கும் சுர்ரென்று கோபம் வந்தது என்னவோ உண்மை தான்!! ஆனால் அவள் தன்னைத் கோபப்படுத்த.. எட்டி நிறுத்தவே இவ்வாறு சொல்கிறாள் என்பதை நொடியில் உணர்ந்து கொண்டான். அதிலும் அவளை அறியாதவனா இவன்? சிறு வயதில் இருந்து பார்க்கிறான் தானே!!

 

அவள் எதிர்பார்த்த அந்த கோபத்தில் இறுகிய முகம் அவளுக்கு உள்ளுக்குள் சந்தோஷத்தைக் கொடுத்தது. அதிலும் அவனது கை-முஷ்டி இறுகி அவளது கழுத்தை பிடிக்க நெருங்கிய கையைப் பார்த்ததும் இன்னும் குஷியானது அவளுக்கு.

 

'அப்பாடி!! இனி இவன் என்னைய தொட மாட்டான்.. இதுதேன் நல்ல வழி.. இனிமேலு இதை சொல்லி சொல்லியே குத்திக் காட்டியே அவன தள்ளி நிறுத்திபுடனும். யார் கிட்ட நானு அஸ்திரா டா!' என்று அவள் மனதில் சங்கல்பம் எடுத்து சந்தோஷப்பட்டுக் கொள்ள அவனது முகம் மெல்ல மாறியது. இறுக்கத்தில் இருந்து இலகுவாக..

 

அவன் கோபத்தில் கூட இவள் கூலாக இருப்பாள்!!

ஆனால்.. அவனது நிதானத்தில் தான் இவள் நடுக்கம் கொள்ளுவாள்!!

 

கழுத்தை பிடிக்க நெருங்கிய கை வெகு நிதானமாக அவளது வெண்ணிற கழுத்தில் ஊர்வலம் சென்றது. மெல்ல மெல்ல.. அவளது கழுத்தில் அங்கும் இங்கும் ஆலவட்டம் போட்டு, கடைசியாக பயத்தில் ஏறி இறங்கிய தொண்டை குழியில் நிற்க.. விரல்கள் அங்கே ஆராய்ச்சி செய்ததை கண்டு இன்னும்‌ பயம் பீடித்தது தீராவுக்கு.. கண்கள் நெருப்பு கோழி முட்டையென என விரிய.. அதில் தன் கண்களை கலக்க விட்டான் வீரா.

 

மெல்ல மெல்ல அவன் உருவம் தனக்கு மிக நெருக்கமாக நெருங்குவதை பார்த்தவள் அப்படியே பின் பக்கம் சாய.. முன்னே வந்தவன் இதழ்கள் இப்போது மெல்ல கடித்தது அவளது ஏறி இறங்கிய தொண்டை குழியில்!!

 

அவளால் விலக முடியவில்லை..

அவன் விரும்பினால் மட்டுமே விலகுவான்.. என்று இந்நாளில் அவனை‌ புரிந்துக் கொண்டவள், வலிக்க வலிக்க தன் நக குறியை‌ அவன் முதுகில் பதித்தாள். சற்றும் அசராமல் அதை வாங்கிக்கொண்டவன் அஸ்திராவதியை தன் இஷ்டம் போல முத்தாடி முடித்த பின்னே எழும்பினான்.

 

"ஆமா.. என்ன சொன்ன.. ஏற்கனவே பார்த்த.. பழகிய உடம்பா? ஹா.. ஹா.. அடியே பொண்டாட்டி!! நீ புதுசா பழசானு எனக்கு தெரியுமடி!! நேத்து நைட்டே எனக்கு தெரிஞ்சிடுச்சு உனக்கு தெரியலையா என்ன? உன்னை கன்னி கழித்தவன் உன் புருஷன் தானு.. இந்த வீராதானு!" என்று அவள் நெற்றி முட்டி பேசியவனின் பேச்சில் தான் அவளுக்கு சகலமும் புரிய.. 'ச்ச இப்படி வாய் விட்டு மாட்டிக்கிட்டோமே!' என்று நொந்து கொண்டாள்.

 

"அதான் உன்னைய பிடிக்கலைன்னு சொல்றேனுல.. அப்புறம் நீயேன் என்னைய நெருங்கி நெருங்கி வரவன்" என்று பதிலுக்கு சுல்லென்று விழுந்தாள்.

 

"எனக்கு உன்னைய பிடிச்சிருக்கு அது போதும் பொண்டாட்டி!! ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தருக்கு பிடிச்சா போதும். குடும்ப வண்டி நல்லா ஓடும்" என்று அவன் வியாக்கியானம் பேச..

 

"ரெண்டு கை தட்டினா தான் ஓசை வரும். தெரியுமா உமக்கு? ஒத்த கையில தட்டினா ஒன்னும் வராது" என்று அவள் அவனுக்கு புரிய வைக்க முயன்றாள்.

 

இன்னும் பலமாக சிரித்தவன் "அடியே... இந்த அருந்த பழசான டயலாக் எல்லாம் விட மாட்டியா நீயி" என்று கூறி இன்னும் சிரித்தவன் "ஒத்த கையில ஓசை வராதுனு எந்த கூமுட்ட சொன்னான்" என்று அவள் முன் தன் ஒத்த கையால் சொடக்கு போட்டு காண்பித்து "இப்ப வருதா பொண்டாட்டி.. இனிமே இது மாதிரி எல்லாம் பேசாத லூசுதனமா.. இன்னும் வேற விதமா ஓசை வர செய்யவா?" என்றவன் அவளது கன்னத்தில் இச்சு இச்சு என்று நச்சென்று சத்தம் வர முத்தங்களை பதித்தான் இடைவிடாமல் இடையை விடாமல்..

 

மேலும் அவளிடம் ஹஸ்கி வாய்ஸில் "எப்போ பாரு நான் மட்டுந்தேன் ஆக்டிவா இருக்கேன் டி.. நீ பேஸிவாதேன் இருக்க.. ஆனாலும் சத்தம் வருது இல்ல" என்றான் இடதுகையால் மீசையை முறுக்கியவாறு..

 

அவள் அப்பவும் அவனை முறைத்துக் கொண்டே அமர்ந்திருக்க "தூக்கம் வரலையா உனக்கு? இரண்டு நாளா போட்டு படுத்திட்டோமே இன்னைக்கு உனக்கு ரெஸ்ட் கொடுக்கலாம்னு பார்த்தேன்.. நீதேன் முட்ட முட்ட முழிச்சுக்கிட்டு இருக்கியே.. எதுக்கு தனியா ஒத்தையா வீணா முழிச்சிட்டு இருக்கணும்? சொல்லு??" என்றவன், அதன் பின் அவளை பேச என்ன.. யோசிக்கக் கூட விடாமல் ஆட்கொண்டு இருந்தான், அவனது பாதையில்.. சற்றி வன்மையாக அதில் சிறிது மென்மையாக இடை வளைத்து இடையினம் புகுத்தி காதல் மேவிட மோக லயத்தில் இணைத்தான்.

 

காலை எழுந்தவுடன் கையோடு மனைவியை அழைத்துக்கொண்டு கீழே சென்றான். இன்னும் யாரிடமும் அவள் பழகவில்லை. 'வாங்க பழகலாம்' என்று கூப்பிடும் ரகமும் அந்த வீட்டில் யாரும் கிடையாது. வடிவாம்பாளை தவிர.. அதனால் மனைவியை தன் கண் பார்வையிலேயே வைத்திருந்தான் குஞ்சியை சிறகுகளில் பாதுகாக்கும் தாய்ப் பறவை போல…

 

இன்னும் சொந்தங்கள் எல்லாம் அவ்வளவாக போகவில்லை. திடீரென்று கல்யாணம் முடித்து வீரா வந்திருக்க.. இன்னும் முறையாக யாருக்கும் கூப்பிட்டு விருந்து வைக்கவில்லை. என்ன செய்யலாம்? எது செய்யலாம்? என்று சொந்தங்கள் இருந்து பேசிக் கொண்டே தான் இருந்தது. பெரிய வீடு என்றால் பல சவுகரியங்களோடு இம்மாதிரி சில அசௌகரியங்களும் உண்டு.. 

 

எதுவும் ஒளித்து மறைத்து செய்ய முடியாது. அதுவும் கிராமம் என்றால் ஜம்பமாக உரிமையாக வந்துவிடும் உறவினர்களில் சிலரில் என்ன நடக்கிறது? ஏன் நடக்கிறது? என்ற சிசிடிவி கண்களும் பிபிசி வாய்களுமாய் தான் வந்து அமர்ந்திருப்பார்கள். அதுவும் சாட்டிலைட் டிவி மாதிரி உடனுக்குடன் இங்கே நடப்பவையெல்லாம் ஊர் முழுக்க டெலிகாஸ்ட் ஆகிவிடும்.

 

பெரிய குடும்பத்து மருமகளாக வாக்கப்பட்டவர் இதையெல்லாம் சமாளித்து தான் வரவேண்டும். இத்தனை ஆண்டுகளாக முகத்தில் அதே சிரிப்பு மாறாமல் அனைத்தையும் திறம்பட சமாளித்து வருபவர் வடிவாம்பாள். ஆதரிப்பவர்களை ஆதரித்து.. அரவணைத்து செல்லும் உறவினரை அரவணைத்து.. இடைநிறுத்த வேண்டிய உறவுகளை அதன் எல்லைக்குள்ளேயே நிறுத்தி.. கனகச்சிதமாக அனைத்தும் செய்துவிடுவார். அதனால் வீடு பற்றிய கவலையின்றி முழுநேரமும் பஞ்சாயத்தில் தலை கொடுக்க முடிந்தது சற்குணத்தால்..

 

இதோ மகனுக்கு முன் கிளம்பி வந்து அமர்ந்திருந்தார். எப்பவுமே அவர் விடிய காலையில் எழுந்து சூரியனை எழுப்பிவிடும் ரகம். இன்றும் உறவினர்கள் இருக்க மருமகளை கண்டிப்பாக மகன் தன்னிடம் தான் ஒப்புவித்து போவான் என்று அவருக்கும் தெரியும். இவர் காத்திருக்க மாடியில் இருந்து வந்த மகனையும் மருமகளையும் வாய்க் கொள்ள புன்னகையோடு தலையசைத்து வரவேற்று மருமகளை அழைத்துக்கொண்டு பூஜை அறை சென்று விளக்கேற்ற பணித்தார்.

 

வந்தது முதல் அஸ்திராவும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாள் யார் எப்படி பேசுவார்கள் என்பதை.. அதிலும் மாமியார் அவளிடம் அன்பாக நடக்க முயல்வது அறிந்ததுதான். எனவே அவர்கள் பேச்சுக்கு கட்டுப்பட்டு இவளும் விளக்கு ஏற்றி விட்டு வந்து வீரா அருகில் நின்று கொண்டாள்.

 

அதற்குள் எழுந்து காலை காபிக்கு காலை நீட்டி உட்கார்ந்து இருந்த உறவினர்கள் சிலர் "ஏலேய் மாறா.. இப்படி வூட்டுக்குள்ளேயே இருந்தா எப்புடி?? புது பொண்சாதிய கூட்டுகிட்டு நாலு நல்ல இடத்துக்கு போயிட்டு தான் வர்றது" என்று வெற்றிகரமாக காலையிலேயே ஆரம்பித்தார்கள். இவன் அன்னையை திரும்பிப் பார்த்து முறைக்க.. 'வேணாம் தம்பி..' என்று அவள் கண்களால் கெஞ்சினார்.

 

அதற்குள் மற்றொரு கிழவியும் "அது எப்புடி முடியும் ஆத்தா.. அவே புருஷன் செத்து இன்னுமே முப்பது நாளு கூட ஆகலைல.. தீட்டு வேற.. இதுல வெரசா எழுந்து விளக்கு வேற ஏத்திப்புட்டா.. இன்னும் கோயிலு குளத்துக்கு எல்லாம் போக முடியுமா என்ன?" என்று விளக்கம் கொடுப்பதாய் நினைத்து அஸ்திராவை அஸ்திரமின்றி தாக்கினார்.

 

கரித்துக் கொண்டு வந்தது பெண்ணவளுக்கு. 'எல்லாம் உன்னால தான்!' என்று குற்றம் சாட்டும் பார்வையுடன் அருகில் நின்றிருந்த கணவனை அவள் பார்த்தாள்.

 

'இப்போதேன் நாம பேசிப்பேசி இல்ல இல்ல மிரட்டி மிரட்டி ஏதோ கொஞ்சம் சரி பண்ணி வச்சிருந்தா.. இந்தக் கிழவிக எல்லாம் கூட்டு சதி பண்ணி அவளை திரும்பவும் முருங்கை மரத்தில் ஏற வைச்சிடும் போலையே?? முதல்ல இந்த ஊர்ல எல்லா கிழவிகளையும் நாடு கடத்தனும்.. ஊராவது உருப்படும்!!' என்று முணுமுணுத்தான். பின் தங்கையை அழைத்து சாப்பாடு எடுத்து வைக்க சொன்னான்.

 

யோகலெட்சுமியின் வார்த்தை அவரது மருமகள் வார்த்தைகளில் பிரதிபலித்தது. சாப்பாடு எடுத்த வைத்தபடியே தன் குறைகளை அடுக்கிக் கொண்டே போனாள்..

 

"ம்ம்ம்.. இந்நேரத்துக்கு வேற பொண்ண கட்டி இருந்தா.. வூடு இப்படியா இருந்திருக்கும்? கலக்கலான மக்க பேசுவதறம்.. விருந்து மருந்துனு தடபுடலாக நடக்கும்.. கேலிப்பேச்சும் குறும்பு வார்த்தையினும் இருந்திருக்கும்.. போதாக்குறைக்கு இப்படி எங்கேயும் போகாம எங்க அண்ண வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்குமா? புது பொண்டாட்டிய கூட்டிட்டு பேஷா ஊர் முழுக்க சுத்தி வந்து இருக்க மாட்ட ணே" என்று இருவருக்கும் சாப்பாடு பரிமாறியப்படி அவள் பேச.. அஸ்திரா வழக்கம்போல் வாயை இறுக்க மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள் இறுக்கமாக!!

 

பொறுத்துப் பார்த்த வீரா "ஏலேய்.. தர்மராசா" என்று சத்தமாக அழைக்க..

 

அப்போதுதான் எழுந்து வந்தவன் "ஆரம்பிச்சுட்டான் காலையிலேயே.. ஏதோ புதுசா பிரச்சனைய இழுத்து வச்சு இருப்பாங்க போலையே.. யாராக இருக்கும் என் பொண்டாட்டியா? இல்லை அம்மாவா?" என்று யோசனையோடு முகத்தைத் துடைத்துக் கொண்டு வந்து வீராவுக்கு எதிரில் அமர்ந்தான்.

 

"ஐயோ இப்பதேன் எழுந்து வரீகளோ?" என்று வீரா நக்கல் குரலில் கேட்க.. 

 

'இவன் தொனியே சரி இல்லையே?' என்று நினைத்தவன் எதற்கும் தலையை மட்டும் ஆட்டி வைப்போம் என்று ஆம் என்று தலை அசைத்தான்.

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top