4
என்ன நடந்தது ஏது நடந்தது என்று ஐரா அறியும் முன் அவனது வயிற்று பகுதியில் பாய்ந்திருந்தது தோட்டா..!
ஒரு நிமிடம் தான் அதிரந்தான். அடுத்த நிமிடம் இடது கையால் குண்டு விழுந்த இடத்தை பற்றி கொண்டு வலது கையால் அருகில் இருந்த பிச்சைக்காரனின் கழுத்தை எக்கி பிடித்து இறுக்க.. அவனோ ஐராவின் இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்காமல் திமிறினான் அவனிடம் இருந்து விடுபட முயன்றான்.
அவனின் அந்த முயற்சியில்த அவன் தலையில் இருந்த டோப்பா விலக, அப்பொழுது தான் தெரிந்தது அவன் முதுமையானவன் அல்ல வேடம் போட்டு வந்திருப்பவன் என்று..!
அதுவும் ஐராவை போடவென்று வந்திருப்பவன் என்று..!!
“நான் ஐரா டா..! ஐராவதன்.. கோழை போல வேஷம் போட்டு நடிக்க வந்தவன் எல்லாம் என் உயிரை எடுக்க முடியாதுலே.. நான் வீர மறவன் லே” என்று இன்னும் அவன் கழுத்தை வேகமாக இறுக்கினான்.
அதற்குள் சிக்னல் விழுந்து விட, இங்கு நடப்பது நடந்தது எதுவும் பின்னால் இருக்குற யாருக்குமே தெரியவில்லை. ஏதோ சண்டை அதுவும் ஒரு வயசானவன் கழுத்தை பிடித்து ஒருவன் நெறிக்குகிறான் என்றபடி தான் பார்த்து இருந்தனர் வெறும் பார்வையாளர்களாய்..! நமக்கு ஏன் வம்பு என்று நல்லவர்களாய்..!
அதிலும் சில மிகவும் நல்லவர்கள் தங்கள் வாகனங்களில் இருந்து வேக வேகமாக ஒலி எழுப்பி தங்கள் அவசரத்தை காட்ட முயல..
ஏற்கனவே சரக்கு திருடப்பட்டு அதன் பின் அவன் கண்டுபிடித்து எதிரியின் கையாளாய் தன் வேலையாள்..!
பின் கஸ்டம்ஸில் பிரச்சனை, தனக்கு நம்பிக்கை உரிய ஆளை தூக்கி விட்டு புதிதாக முளைத்திருக்கும் ஒருவன்..!
இப்பொழுது தன்னை கொல்ல வந்திருக்கும் ஒரு பிச்சைக்காரன்..!
இது எல்லாம் சேர்த்து என்னென்னவோ ஞாபகங்கள் யோசனைகள் ஐராவுக்கு..! தனக்கே தெரியாமல் தன்னை சூழ்ந்திருக்கும் சூழ்ச்சி வலை தன்னை கட்டும் கட்டி இருக்கும் அந்த புதிய நபர் யார்? இத்தனை நாள் இல்லாமல் தூத்துக்குடியே தன் கோட்டை என்று நினைத்திருக்க இந்த கோட்டைக்குள் ஊடுருவி இருக்கும் அந்த புதிய எதிரி யார்?
என்று என்னனவோ நினைவுகள் அவனைத் தாக்க தலைசுழன்றது அவனுக்கு.
கூடவே ரத்தப்போக்கும் அவனை கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவை இழக்க வைத்து பலம் இழக்க செய்ய..
இதில் தொடர்ந்து பின்னால் கேட்டுக் கொண்டிருந்த வாகன ஓட்டிகளின் ஹாரன் சத்தங்கள் அவனுக்கு எரிச்சலையும் கடும் கோபத்தையும் ஏற்படுத்தியது.
சட்டென்று டேஷ் போர்டில் இருந்த துப்பாக்கி எடுத்து வெளி பக்கம் நீட்டி “ஏலே.. எவேன் சத்தம் போட்டாலும் உயிரோட போக மாட்டிங்கலே..!” என்று கர்ஜித்தவனின் குரலுக்கு அனைத்து வாகனங்களும் கப்சிப்.
அப்போது வரையிலும் அவனிடமிருந்து விடுபட போராடிக் கொண்டிருந்த அந்த பிச்சைக்கார கொல்லயனை அவன் விடவே இல்லை.
அவனை ரௌத்திரமாக பார்த்தவன் “ஐராவையே போடு வந்துட்டு அவ்வளவு சுலுவா தப்பிட முடியுமாலே.. எனக்கு மரணத்தை காமிச்ச உனக்கு அதை பரிசாக கொடுக்கலைனா நான் ஐராவே இல்லலே..” என்றவன்,
இடது கையால் காரை ஓட்டிக்கொண்டே வலது கையால் அவன் கழுத்தை பிடித்த பிடியை விடாமல் தரதரவென்று இழுத்துக் கொண்டே கார் ஓடிச் சென்றான் ஐரா.
‘இப்படி ஒருத்தனை தரதரவென்று அதுவும் பிச்சைக்காரனான வயோதிகனை இழுத்து செல்கிறானே..! பாவி.. பாவி..!’ என்று இந்த காட்சியை கண்டவர்கள் அனைவரும திகைத்து போயினர்.
‘ஆஹா.. கிடைத்ததடா கண்டெண்டுக்கு புது ரீல்ஸ் இதை வைத்து விதவிதமாக இன்று பதிவேற்றலாம்’ என்று எண்ணிய வலைத்தளங்களில் தங்கள் மதிய இழந்து சிக்கித் தவிக்கும் இளவட்டங்கள் முதல் ரிலீஸ் பைத்தியங்கள் அனைத்தும் இந்த காட்சியை விடாமல் தங்கள் செல்லுக்குள் பத்திரப்படுத்தினர்.
ஆனால் அதுதான் ஐராவுக்கு சாட்சியாக போகிறது என்று பாவம் அவர்கள் எண்ணவேயில்லை.
“அச்சோ பாவம் அந்த வயசானவரு.. ஏன் இந்த ராட்சசன் அவர இப்படி இழுத்துட்டு போறான்” என்று அந்த வயோதிகன் முகத்தை ஜூம் செய்து, அவனின் வலி மிகுந்த முகத்தை விதவிதமாக போட்டோ எடுத்து அடுத்த பத்து நிமிடத்தில் அனைத்தும் வலைதளத்தில் ஏற்றப்பட தயார் நிலையில் இருந்தது.
அந்நேரம் அங்கிருந்த பொது மக்கள் அனைவரும் ஐராவிடம் சென்று பேச அஞ்சி “ஐயோ பாவம் பரிதாபம் ஒரு பிச்சைக்காரனை இப்படி இழுத்துட்டு போறானே படுபாவி..!” என்று ஐராவதம் சபித்தனரே ஒழிய உண்மையில் அங்கு நடந்தது என்னவென்று அறிய முற்படவே இல்லை..!
பெரும்பாலான நேரம் நாமும் அப்படித்தானே??
வெளியில் காட்டப்படும் செய்திகளின் உள் நிலவரத்தை உண்மையை யோசித்து இல்லை..! அதனை ஆராய்ந்து கண்டுபிடிக்காமல் பாதிக்கப்பட்டவரை மட்டும் பார்த்து “ஐயோ பாவம்” என்று பாவப்படுவோம்.. அவர் பால் இரக்கப்படுவோம்..!
ஆனால் பெரும்பாலான நேரங்களில் அவன் அப்பாவி இல்லாமல்
அட பாவி ஆக கூட இருந்திருக்கலாம்..!
ஏனெனில் ஒவ்வொரு நாணயத்திற்கும் இரண்டு பக்கங்கள் உண்டு..!
சுற்றும் முற்றும் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அதைப் பற்றி சிறிதும் வருத்தம் கொள்ளாமல், தன்னை கொல்ல வந்தவனின் உயிர் மூச்சை எடுப்பதே குறியாகக் கொண்டவன்,
காரின் வேகத்தோடையே அவனை இழுத்துக்கொண்டே வந்தவன், எதிரே வந்த ஒரு டேங்கர் லாரியின் மீது அவனை வேகமாக மோத விட்டு, அவன் உயிர் துடிக்க இறப்பதை கண்கள் சிவக்க கண்டு திருப்தி கொண்டவன், அதன் பின் வண்டியை விரட்டினான் அருகில் இருந்த மருத்துவமனையை நோக்கி ஐரா..!
சட்டையை கழட்டி வயிற்று அருகே இறுக்கி கட்டிக் கொண்டவன் வேகமாக உள்ளே நுழைந்தான். எதிரே வந்த அனைவரும் அவனின் செந்நிற குருதி வழிந்த சட்டையை கண்டு அவனை திகலுடன் பார்த்து வழி விட்டு நிற்க.. அவனோ வேக நடை போட்டான், எதிரே அமர்ந்து ரிஜிஸ்டர் நோட்டைப் பார்த்துக் கொண்டிருந்த வேதிகாவின் கழுத்தில் கத்தியை வைத்தான்.
அவளோ தன் கழுத்தருகே ஏதோ ஒரு ஒரு பொருள் உரசுவது போலிருக்க என்னவென்று என்று பார்த்தவள் சத்தியமாக அங்கே கூர்மையான கத்தியை எதிர்பார்க்கவில்லை..!
கூர்மையான கத்தியையும் அது பிடித்து இருக்கும் ஆஜானுபாகுவான உடலை கொண்டவனையும் கண்டு அதிர்ந்து “ஐயோ அம்மா..!” என்று அவள் அலற..
“சத்தம் போட்ட ஒரே சீவு தாம்லே” என்றான் அழுத்தமாக..
அவளோ பயந்து போடவில்லை என்பதாய் வாயைப் பொத்தி தலையை இடவலமாக ஆட்டினாள்.
“ஒருத்தன் வயித்து கிட்ட சுட்டுட்டான் வந்து அந்த தோட்டாவை எடுலே” என்றதும் அவளுக்கு கைகால் எல்லாம் உதறியது.
“சார் சார் நான் சிஸ்டர் டாக்டர் இல்லை.. அவர் இன்னும் இங்கே வரவில்லை..” என்றாள் திக்கி திணறி..!
அவனா கண்களை மூடி ஒரு நிமிடம் யோசித்தவன் “உனக்கு தையல் போட தெரியுமாலே?” என்றதும் அவள் வேகவேகமாக தலையாட்ட, அவளை இழுத்துக் கொண்டு அருகில் இருக்கும் ஆபரேஷன் தியேட்டர் எங்கே என்று கேட்டு உள்ளே நுழைந்து வேகமாக கதவை சாத்தினான்.
அவளோ அதிர்ச்சி விலகாமல் அவனையே பார்த்து நின்றாள்.
“என்ன மசமசனு நிக்குறவ.. ஸ்டெர்லைஸ் பண்ண கத்தி எல்லாம் எடு” என்றவன் ஒவ்வொன்றாக ஆணையிட இதோ என்று கையை சுத்தம் செய்தவள்,
“நீங்களும் கையை சுத்தம் செஞ்சுக்கோங்க சார்” என்று நடுக்கத்துடன் கூற அவளை முறைத்து பார்த்துக் கொண்டு சுத்தம் செய்தவனிடம் க்ளவுசை அவள் நீட்ட..
வாங்கி வேகமாக மாட்டிக் கொண்டவனோ இப்பொழுது மருத்துவனாய் தனக்குத்தானே குண்டை எடுக்க ஆயுத்தமாக, அந்தப் பகுதியை கிழித்தான்.
அதை பார்த்தவளோ மீண்டும் அலற, இடது கையால் அவள் முடியை பற்றி தன்னை நோக்கி இழுத்த ஐரா அவள் உதட்டில் அழுத்தமாக தன் உதட்டை புதைத்து எடுத்தான்.
“அடுத்து ஒரு சத்தம் வந்துச்சு..” என்று அதட்டியதும், இல்லை என்று கூறி அதிர்ச்சியுடன் அவனை விழி விரித்து பார்த்து இருந்தாள்.
தூத்துக்குடிக்கு வந்த முதல் நாளே இப்படி ஒரு அனுபவம் ஏற்படும்
என்று சொல்லி இருந்தால்.. பாவம் அவள் இந்த பணி மாறுதலுக்கு ஒப்பியிருக்கவே மாட்டாள்..!
தொடரும்..
