மாமனே 16

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 12 months ago
Messages: 306
Thread starter  

மாமனே 16

 

"என்ன பார்க்குற? என்ன பழி வாங்கத் தானே என் அய்த்த பொண்ண தூக்குன? இப்போ உன்னோட கடனை ஒன்னு இல்லாம பைசல் பண்ணிட்டேன்! என் அயத்த பொண்ண அதே மாதிரியே நீ திரும்ப என்கிட்ட ஒப்படைச்சிடு!" என்று கேட்டவன் முன் அய்யனாராக உறுமி நின்றான் மாணிக்கவேல்!!

 

"என்ன சார்? என்ன கோபம் எல்லாம் படுறிங்க? உண்மையை தானே சொல்றேன். உனக்கு முன்ன பின்ன என் அத்தை பொண்ணு தெரியாது ஏதோ சந்தர்ப்ப வசத்தால கட்டிக்கிட்ட… இல்ல இல்ல என்னை பழி வாங்குவதற்காக இந்த பணத்துக்காக தானே மலர கட்டிக்கிட்டு! இப்போ அதை நான் மொத்தமா திருப்பி கொடுத்துட்டேன்! அதனால என்ன பண்ற.. இந்த கல்யாண ட்ராமா எல்லாம் நிறுத்திட்டு.. மலர நீ வீட்டுக்கு அனுப்பிடு!" என்றான் களஞ்சியம்!!

 

ஏற்கனவே முழு எரிமலையாக கொதித்துக் கொண்டிருந்தவன் மீது பெட்ரோலை குடம் குடமாய் கொண்டு ஊற்றினான் களஞ்சியம்!!

 

நக்கலாக தன் முன்னே அமர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்த களஞ்சியத்தை கண்டதும், 'இவன் நம் வாயை பிடுங்க வேண்டியே வந்திருக்கிறான்! இவனுக்கு எல்லாம் சொல்றதை விட செயலில் காட்டுறது தான் சிறந்தது!' என்று முயன்று தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டான் மாணிக்கவேல்

 

இவனிடம் சண்டை போட்டு மோதி ஒரு பயனும் இல்லை! வீண் வம்புக்கு விவாதத்திற்கு என்று வந்திருக்கிறான். இவனை இவன் வழியில் சென்று தான் அடக்க வேண்டும் என்று நினைத்தவன், "இப்ப என்ன நான் உன் அத்தை பொண்ணு கூட வாழ்றேனா இல்லையா? நெஜமாவே நாங்க இரண்டு பேரும் காதலித்து கல்யாணம் பண்ணுனோமா இல்லையானு? உனக்கு தெரியனும்! நாங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்குமா இல்ல நடிக்கிறோமானு உனக்கு தெரியனும்! அவ்வளவு தானே… இன்னும் கொஞ்ச நேரத்துல என் பொண்டாட்டி எனக்கு சாப்பாடு எடுத்துட்டு வருவா… வந்ததுக்கு அப்புறம் நீயே பார்த்துக்கோ!" என்றான்.

 

களஞ்சியம் அதற்கு ஏதோ கூற வர..

"இரு இரு அவசரப்படாதே!" லாக்கர் அருகில் இருக்கும் அறையை காட்டி "அங்க போய் இருந்துக்கோ! நடக்குறத பாரு!" என்றான் சிரிப்போடு.

 

"நீ வேணும்னு என் கிட்ட நடிச்சேனா?" என்று களஞ்சியம் அவனை முறைத்துக் கொண்டு கேட்க…

 

"சரி.. நான் தான் நடிக்கிறேன்! ஆனால் உன் அத்தை பொண்ணு நடிக்க மாட்டா தானே.. உள்ள வந்ததிலிருந்து நாங்க கிளம்பி போற வரைக்கும் நீ வேணா பார்த்துக்கொண்டே இருக்கலாம்! பங்காளிக்கு மட்டும் ஃப்ரீ ஷோ!" என்று கண்ணடித்துக் கூறினான். 

 

களஞ்சியம் எதிரே ஹெவி பர்பாமென்ஸ் பண்ண காத்திருந்தான். களஞ்சியமும் இவனை நம்பாமல் இவனை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே அந்த அறையில் சென்று நின்றான்.

 

"என்னங்கடா காலையிலிருந்து ஒவ்வொருத்தனா வந்து என்ன கடுப்பேத்துறதா நினைச்சுட்டு காதலாட வைக்கிறீங்க.. மங்குனி அமைச்சர்களா! அய்யோ என்னை கூட வெக்கப்பட வைக்கிறானுங்க!"

என்று சிரித்துக் கொண்டவன் தன் காதல் கண்மணியோடு காதலாக காதலாட காத்திருந்தான்!!

 

"கதிரேசன் பேச்சை நம்பி இங்க வந்துட்டோம்… இவனும் நம்ம பழிவாங்க தான் மலர தூக்கி இருக்கிறானு நினைத்துக்கொண்டு இருக்கோம்!! ஆனால் நிஜம் அதுதானா? ஒருவேளை நம்மை ரூம்ல வச்சு பூட்டி விடுவானோ? ச்சசே… அப்படி எல்லாம் பண்ண மாட்டான்! நாம நாலு மாசம் வட்டி கட்டாத போதே ஒன்னும் செய்யல.. அதுவும் இப்போ அவன் பொண்டாட்டி என் அத்தை பொண்ணு!! என்னதான் நடக்குது பார்ப்போம்?" என்று அங்கிருந்து நாடா கட்டில் அமர்ந்து இருந்தான்.

 

ஜீவன் போகும்போது அருகில் தெரிந்த ஆட்டோ பையனிடம் மலர்விழியை கடைக்கு அழைத்து செல்ல பணித்து விட்டு செல்ல… அவர்கள் சென்று சிறிது நேரத்திற்கெல்லாம் வந்த ஆட்டோ பையன் "அக்கா.. போகலாமா?" என்று வெளியில் இருந்து குரல் கொடுக்க..

 

"இன்னொரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணு தம்பி! வரேன்!" என்றவள் சமைத்து முடித்து, தன் உருவத்தை பார்க்க.. வியர்வையில் குளித்து தலையெல்லாம் கலைந்து எப்படியோ இருக்க.. வேகமாக ஒரு காக்கா குளியலை போட்டு அழகாக தன்னை அலங்கரித்துக் கொண்டு கூடவே காலையில் தொடுத்து வைத்து மதுரை மல்லியையும் இரு பக்கம் வழிய சூடிக்கொண்டு ஒருமுறை கண்ணாடியில் பார்க்க.. திருப்தியாக இருந்தது!!

 

"அழகி டி நீ மலரு!" என்று கண்ணாடியில் தன்னை கொஞ்சிக் கொண்டாள்!

 

அதிலும் மேல் உதடு சற்றே தடித்து காணப்பட்டது. காலையில் அவன் செய்த கலாட்டாவினால்… அதை நினைத்து உதடு கடித்து சிரித்தவள் மெலிதாக லிப்ஸ்டிக்கால் அதை மறைத்து தீட்டினாள். இன்னும் வசீகரமாய் இருந்தது அச்செவிதழ்கள்.

 

கேரியரில் சாப்பாட்டோடு தனியாக ஒரு பாட்டிலில் மோர் கடைந்து அதில் இஞ்சி வெட்டிப்போட்டு எடுத்துக் கொண்டாள். அடுத்த பத்தாவது நிமிடம் மாணிக்கத்தின் கடையின் முன்னே மலர்விழி!!

 

ஆட்டோ சத்தம் கேட்டவுடன் மெல்ல எட்டிப் பார்த்தவன் மலர்விழி வந்ததும், வேகமாக அந்த அறைக்குள் வந்து "உன் அத்த பொண்ணு வந்துட்டா.. கதவை லைட்டா தான் சாத்தி வைக்கிறேன்" என்றவன் உள்ளே இருப்பவன் தெரியாதவாறு ஒருக்களித்து வைத்தான் கதவை.

 

வேலை இருப்பது போல நடித்தவன், "விழி…கொஞ்சம் வேலை இருக்கு, இரு வரேன்!" என்றான்.

 

"சரிங்க.. நீங்க வேலை பாருங்க, நான் சாப்பாட்டை கொண்டு போய் ரூமுக்குள்ள வைக்கிறேன்" என்று அவள் அறைப்பக்கம் செல்ல..

பதறியவன், "நில்லு.. நில்லு

. அங்க என் பிரண்டு படுத்து இருக்கான். ஊர்ல இருந்து பார்க்க வந்திருந்தான். கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடுக்கிறேன்னா அதான் அங்க படுக்க வச்சேன். நாம இங்கேயே சாப்பிடலாம். இரு கடையை அடைச்சிட்டு வரேன்" என்றவன் எழுந்து கடையை அடைத்து விட்டு லஞ்ச் பிரேக் போர்டு மாட்டி விட்டு வந்தான்.

 

அவளோ ஒருக்களித்த கதவை உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கே களஞ்சியமோ இவர்கள் பேசுவதை கேட்டால் போதும் என்றபடி கதவுக்கு பின்னால் தான் நின்று இருந்தான்.

 

கீழே சில பழைய செய்தித்தாள்களை போட்டு "இது மேல சாப்பாடு எடுத்து வை விழி.." என்றான். அவளும் சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டே "ரொம்ப க்ளோஸ் பிரண்டா மாமா?" என்று கேட்டாள்.

 

"ஆமா.. சின்ன வயசுல இருந்து நானும் அவனும் ரொம்ப ஃப்ரெண்ட். மதுரைக்கு வரும்போது எல்லாம் என்னையும் பார்க்க வருவான். நான் ஊருக்கு எப்பவாவது தானே போவேன்.. அதனால் அவனே வரும் போது என்னை பார்ப்பான்" என்றவன் இருவருக்கும் தட்டை எடுத்து வைக்க இவளும் பரிமாறிக் கொண்டே, "நம்ம கல்யாண விஷயம் தெரியுமா மாமா?" என்றாள்.

 

"தெரியும்!! இப்ப வந்த போது தான் சொன்னேன். ஊருக்குள் நடக்கும் கல்யாணத்துக்கும் வர சொல்லி இருக்கேன்" என்றான் அமர்ந்துக் கொண்டே…

 

'என்ன மாமா ரொம்ப பம்மிக்கிட்டே பேசுறாரு? இவரு இப்படிப்பட்ட ஆள் இல்லையே? அவர் பிரண்டுக்கு முன்னாடி அடக்க ஒடுக்கமா இருக்காரோ? மவனே காலையில் அத்தானுக்கு முன்னாடி என்னைய என்ன பாடு படுத்துன? விழி விழின்னு கூப்பிட்டு… கொஞ்ச நேரம் அந்த மனுஷன் கிட்ட என்னைய பேச விட்டாயா? இருடா மாப்பு… உனக்கு நான் திரும்பி வைக்கிறேன் ஆப்பு!" என்ற நினைத்தவள், 

 

"மாமா.. மாமா.. இன்னைக்கு சமைச்சதுல என் கை கால் எல்லாம் ஒரே வலி! மூணு பேரு என்னை விட்டுட்டு சினிமாவுக்கு வேற போய்ட்டாய்ங்க.. நான் மட்டும் தேன் செஞ்சேன்" என்றதும், "நீயே செஞ்சதா.. பிரியாணி நல்லா இருக்கு விழி!" என்று இவன் சாப்பிடுவதில் பிஸியாக..

 

"என்னால கையை தூக்கி சாப்பிட முடியல மாமா.. அதனால நீங்க எனக்கு ஊட்டி விடுங்க!" என்றாள் பாவமாக முகத்தை வைத்து…

 

'என்னடா நாம எதுவும் பண்ணாமலே இவளே பர்பாமென்ஸ் பண்ண ஆரம்பிக்கிறா.. ஆக்சுவலி நாமதான் ஊட்டிவிட சொல்லலாம்னு யோசித்து இருந்தோம்? ஆனா இவ சொல்றா?

எலி இப்ப எதுக்கு அம்மணமா ஓடுதுன்னு தெரியலையே…??" என்று யோசித்துக் கொண்டவன் 'பரவால்ல.. இதுவும் நமக்கு நன்மைதான்!' என்று அவளுக்கு ஊட்டி விட ஆரம்பித்தான் ஓரக்கண்ணால் கதவை பார்த்துக் கொண்டே…

 

ஒரு நிமிடம் அவர்களை எட்டிப் பார்த்த களஞ்சியமோ "ஊட்டி விடுவதெல்லாம் லவ் ஆயிடுமா? போடா.. போடா.. சின்னப்புள்ளத்தனமா இருக்கு!" என்று திரும்பிக் கொண்டான் அவர்களை பார்க்காமல்…

 

"மாமா.. மாமா… இந்த ஷேர்ட்ல நீங்க அம்சமா இருக்கீக!" என்றாள்.

 

"எதே.. இந்த வெள்ளை சட்டையிலா? ம்ம்ம்.. இருக்கும் இருக்கும். நீ சாப்பிடு!" என்று தொடர்ந்தான்.

 

"நீங்க ஊட்டுங்க.." என்று வாயை திறந்தவள், அவனது கையை பிடித்து ஒவ்வொரு விரலாய் சப்புக் கொட்டி சாப்பிட்டாள்! 

 

அவனுக்கோ கொஞ்சம் கூச்சமாகி போனது. எங்களைப் பார்த்து தெரிந்து கொள் என்று களஞ்சியத்திடம் கூறிவிட்டான் தான். ஆனால் மற்றவன் முன்னே இப்படி அந்நியனோனியமா இருக்க விரும்பவில்லை. இப்பொழுது மனது குறுகுறுத்தது!! அதைவிட இவள் செய்யும் அலும்பில் கருத்த தேகம் கொண்டவனும் செக்க சிவந்த வானமாய் மாறி போனான்!!

 

"மாமா… மாமா…"

 

"ஏம்மா?"

 

"நான் சமைக்கும் போது கூட இந்த பிரியாணி இவ்வளவு டேஸ்ட்டா இல்ல மாமா.. இப்போ இவ்ளோ டேஸ்டா இருக்கு பாருங்களேன்?" என்று கண் சிமிட்டி அதிசயத்தாள்.

 

"ஏனாம்?" கேட்டான் குறும்பில் உதட்டுக்குள் சிரித்துக் கொண்டே…

 

"ஏன்னா.. என் மாமா எனக்கு ஆசை ஊட்டி விடுவதால் தான், பிரியாணிக்கு டேஸ்ட் வந்துருச்சாம்!" என்று கண்களை உருட்டி உருட்டி காதில் இருக்கும் இரண்டு ஜிமிக்கிளும் கன்னத்தை தொட்டு தொட்டு விளையாட.. தலையை சாய்த்து பேசியவளை கொள்ளை கொள்ளும் வேகம் எழுந்தது மாணிக்கவேலுக்கு!!

 

"போடி வாலு….!" என்றான் மீண்டும் அவளுக்கு ஊட்டிக் கொண்டு, இம்முறை தனக்கு ஊட்ட வந்த கையை அப்படியே அவன் பக்கம் திருப்பி "நீங்களும் சாப்பிடுங்க மாமா! அப்புறம் சூடு ஆறி போயிடும்! ருசியும் போய்டும்" என்றாள்.

 

"ரொம்ப தான் மாமா மேல அக்கறை டி உனக்கு! பாதி பிரியாணி உள்ள போனதுக்கப்புறம் தான் மாமன பத்தி உனக்கு நினைப்பே வந்திருக்கு" என்றான்.

 

"ஏன் தெரியுமா? கிட்ட வாங்க சொல்றேன்?" என்று மெல்லிய குரலில் சொல்ல.. அவன் வரவில்லை. 

 

"அட..! கிட்ட வாங்க மாமா!!" என்று அவன் இரு கன்னங்களையும் கிண்ணங்களாக இரு கைகளால் தாங்கி தன் முன்னே இழுத்தாள்.

 

"என்ன பேச்சைக் காணோம்?" என்று மெல்ல எட்டிப் பார்த்த களஞ்சியத்தின் கண்களோ விரிந்து கொண்டது. இருவர் முகமும் அருகாமையில் இருக்க.. அதுவும் மலரின் பின்புறம் மட்டுமே தெரிந்த அந்த நெருக்கத்தில் பட்டென்று போய் அந்த நாடா கட்டிலில் உட்கார்ந்து கொண்டான். வியர்த்து வழிந்தது அவனுக்கு.

 

"ஏன்னா…காதலை விட பிரியாணி முக்கியம் பிகிலு!" என்று கிசுகிசுப்பான குரலில் கூறி சிரித்தவளின் இதழ்கள் அவன் இதழ்களை உரசி விட்டு சென்றது அழுத்தமாக… உரிமையாக…

 

"அடியே…!!" என்று அலறிவிட்டான் மாணிக்கவேல். அதுவும் பக்கத்துல களஞ்சியம் இருக்கிறான் என்று தெரிந்ததும் இன்னும் சங்கடமாகி போனது அவனுக்கு.

 

"என்ன மாமா… ஏதோ புதுசா கொடுக்குறது போல அலறுரிங்க!! இதெல்லாம் டூ பேட் மாமா… நீங்க காலையில பண்ணாததையா நான் இப்ப பண்ணிட்டேன்! பாருங்க என் உதடு எப்படி தடிச்சு போய்ட்டு!" என்று உதடு குவித்து காட்டினாள். 

 

களஞ்சியத்தின் காதுகள் மட்டுமல்ல உடம்பே கூசியது இந்த காதலர்களின் சம்பாஷனையில்… 

 

"அடேய் கதிரேசா!!! உன்ன நம்பி வந்தேன் பாரு.. என்ன சொல்லணும் டா.. என்ன சொல்லணும் டா!" என்று தனக்கு தானே திட்டிக்கொண்டு இவர்கள் பேச்சு கேட்காத தூரமாய் அந்த ரூமின் ஓரத்தில் போய் அமர்ந்து கொண்டான்.

 

"ஆமா மாமா.. கேக்கும்னு நினைச்சுட்டு இருந்தேன். அது என்ன நேத்து வரைக்கும் அம்மிணி வாங்க போங்கனு அத்தனை மரியாதையா பேசுனீங்க.. இப்ப என்னமோ வாடி போடினு சொல்றிங்க? என்ன விஷயம் சொல்லுங்க… சொல்லுங்க.." என்று அவள் ஒற்றை புருவத்தை உயர்த்தி கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்து கேட்ட விதத்தில் இன்னும் பித்து பிடிக்க வைத்தாள்.

 

மாணிக்கவேலுக்கு தான் வெட்க வெட்கமாக வந்தது. அதுவும் அடுத்த அறையில் களஞ்சியம் இருக்கிறான் என்பதே அவனுக்கு இன்னும் நாணமுறச் செய்தது.

 

'முழுதும் நனைந்தாச்சு இனிமே முக்காடு எதற்கு?' என்பது போல 'கொஞ்ச நேரம் முன்னே நடந்ததையே பார்த்திருப்பான் இதை கேட்டா மட்டும் என்ன?' என்று நினைத்த மாணிக்கவேல் "நேத்து நம் நெருக்கத்திற்கு பிறகும் வாங்க போக வேண்டுமா அம்மிணி?" மந்தகாச புன்னகையோடு கேட்டான்.

 

"ச்சீ போ மாமா… பொல்லாத மாமா… சரியான இராட்ஷஸ மாமா…!" என்று வெட்கப்பட்டு கொண்டு அவன் புஜத்தில் குத்தினாள் மலர்விழி.

 

சாப்பிடும் வரை அவர்களின் சம்பாஷனை இப்படியேதான் தொடர்ந்து கொண்டு இருந்தது. 

 

"உள்ளே களஞ்சியமோ தெரியாம வந்துட்டேன் டா.. என்னை விட்டுடுங்கடா!" என்று கவுண்டர் கொடுத்துக் கொண்டு தான் அமர்ந்திருந்தான.

 

'ஒரு கன்னி பையன் இல்லை இல்லை காஜி பையனின் சாபம் உங்களை எல்லாம் சும்மா விடாதுடா!' என்று சாபம் வேறு!!

 

சாப்பிட்டு முடித்து பாத்திரத்தை எல்லாம் எடுத்து வைத்தவன் "கொஞ்சம் இரு விழி பிரண்டு கிட்ட சொல்லிட்டு வந்துடறேன்! தூங்குறேன்னா பார்க்கிறேன். தூங்குனா நம்ம கடையை சாத்திட்டு போவோம்" என்று அந்த அறையை நோக்கி சென்றான்.

 

"எங்க மாமா போறோம் நாம.." என்று கேட்க..

 

"கல்யாணம் ஆனதில் இருந்தது உனக்கு ஏதாவது வாங்கி கொடுக்கணும்னு நினைச்சிட்டே இருந்தேன். அதுக்கு தான் மூணு பேரையும் அங்க தியேட்டருக்கு பார்சல் பண்ணிட்டு உன்னை இங்கு வர வெச்சேன்" என்று அவன் கண்ணடிக்க..

 

"எப்பா!! செம ஆளு மாமா நீங்க!" என்றவள் அவனை உரசி கொண்டே நிற்க.. மனைவியின் இந்த புது நெருக்கத்தில் அவனுக்கு கொஞ்சம் கூச்சமாகி "தள்ளி இருடி என் ப்ரண்ட் இருக்கான்!" என்றான்.

 

"இருக்கட்டுமே! இருந்தா இருக்கட்டும்!! காலையில் மட்டும் என் மாமா பையன் முன்னாடி என்ன அலும்பல் பண்ணீங்க நீங்க.. அவரை பேச விட்டீய்ங்ககளா? அத்தனை தரம் விழி விழினு என்னை கூப்பிட்டு கூப்பிட்டு எப்படி எல்லாம் பாடாய் படுத்தினீங்க.. சாட்சிக்கு என் உதடு கூட இருக்கு! அதுக்கு உங்களை பழிவாங்க வேண்டாம்" என்று அவள் கூறி சிரிக்க..

 

"அடிப்பாவி..!!" என்று சிரித்தவன், 

"அப்போ என்ன பழிவாங்க தான் இதெல்லாம் செஞ்ச.. அப்படித்தானே?" என்று அவளை பார்த்து ஒரு மாதிரியாக கேட்க…

 

"அப்படின்னு சொல்ல முடியாது! ஆனா கொஞ்சம் அப்படி தான். ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் மாதிரி.." என்று அவள் சிரிக்க..

 

"ஆமா என் பிரண்ட உனக்கு இன்ட்ரோ பண்ணனும்ல.. டேய் நண்பா கொஞ்சம் வெளியில வா!" என்றான் சத்தமாக…

 

அசட்டு புன்னகையோடு வெளிவந்த களஞ்சியத்தை பார்த்தவளோ "அய்யய்யோ மாமா.. இவரா இவ்ளோ நேரம் உள்ள இருந்தாரு?" என்று கேட்டவளுக்கு முகம் மருதாணியாய் சிவந்து போக கணவன் பின்னே ஒளிந்து கொண்டாள்.

 

"என்ன ப்ரோ.. உங்க சந்தேகம் எல்லாம் தீர்ந்ததா?" என்று மாணிக்கவேல் கேட்க..

 

"ஆளை விடுங்கடா சாமி!!" என்று களஞ்சியம் சென்று விட்டான் மலரிடம் தலையசைத்து விட்டு..

 

அவளும் அசட்டு சிரிப்போடு வழி அனுப்பி வைத்தாள். "என் மாமா பையன் தான் உள்ள இருக்கான்னு ஏன் என்கிட்ட சொல்லவே இல்ல? போச்சு.. போச்சு.. என் மானம் போச்சு! என் மருவாத போச்சு!" என்று அவள் புலம்ப… மாணிக்கவேல் வெடித்து சிரித்தான்.

 

"நான் என்னடி பண்ணட்டும்! அவனா வான்டடா வந்து வாங்கிட்டு போறான்!! விடு.. விடு.. ஆனாலும் உன் முறை பசங்களால் காலையில் இருந்து இன்னைக்கு ஒரே குஜால் தான்!" என்றவன் மனைவி அழைத்துக்கொண்டு முதலில் நகை கடைக்கு சென்றான். 

 

பார்த்து பார்த்து அவளுக்கு பெரிய ஆரம் தோடு கைக்கு ப்ரேஸ்லெட் என்று வாங்கி கொடுத்தவன், அடுத்து அவள் விரும்பிய வண்ணத்தில் பட்டு புடவை சாதாரண புடவைகள் என்று வாங்கினான். அதனை எல்லாம் ஒரு பெட்டியில் வைத்து அடுக்கி, பெட்டியை கடையில் கொண்டு போய் வைத்துவிட்டு தான் வீட்டிற்கு சென்றான்.

 

என்னதான் இதை ஆசையாக வள்ளியிடம் தேனிடம் மலர் காட்டினாலும் அவர்களுக்கு இந்த நிலைமையில் பொறாமை தான் எழும் என்று புரிந்து கொண்டவன், ஊருக்கு போகும்போது பெட்டி எடுத்துட்டு போகலாம் என்று மனைவியிடம் கூறி விட்டான்.

 

நகை இருப்பதால் அப்படி சொல்கிறான் என்று அவளும் ஒன்றும் கூறவில்லை.

 

அன்றிரவும் மொட்டை மாடியில் தான் மாணிக்கவேலுக்கு படுக்கை!! ஆனாலும் கொஞ்ச நேரம் பிறகு..

மெல்லிய கொலுசு ஒலி இசைக்க…

 

"மொட்டை மாடி.. மொட்டை மாடி..

ஒரு லவ் ஜோடி.. லவ் ஜோடி..!" என்று பாடலுக்கு ஏற்ப திருட்டுத்தனமாக மேலேறி வந்து கணவனோடு படுத்துக் கொண்டாள் மலர்விழி!!

 

மறுநாள் காலையிலேயே மலர்வழி குடும்பம் தனியாக ஒரு பஸ்ஸில் கோயம்புத்தூரை நோக்கி செல்ல.. இவர்கள் அனைவரும் தனி காரில் கோயம்புத்தூர் நோக்கி சென்றனர்.

 

கருமத்தம்பட்டி அவர்களை கலகலப்போடு வரவேற்றது!!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top