அத்தியாயம்: 35
உலகே உறங்கி கொண்டிருக்கும் அமைதியான இரவு பொழுது சித்ரலேகாவின் மனது மட்டும் அலைக்கடல் போல ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.
தாத்ரி அவர்களின் அந்தரங்கத்தை பார்த்தது… அதன் பின் அவளை இகழ்ச்சியாக பேசியது… கூடவே அவளது குணத்தையும் குத்தி காட்டி சென்றது என்று அத்தனையும் வலித்தது அவளுக்கு.
இராவணன், தாத்ரியின் முன் சித்ரலேகாவை தன் மனைவி என்று விட்டுக் கொடுக்காமல் பேசினாலும், அவன் கண்களில் வந்து போகும் ஒரு பழி உணர்ச்சி. அதனை மீறிய ஒரு கோபம் அனைத்தையும் அறிந்து தான் இருந்தாள் சித்ரலேகா. அமைதியாக பெண்ணாக இருந்தாலும் அனைத்தையும் அவதானிப்பதில் அவள் கெட்டி!
'தேவி அக்கா கண்டிப்பாக இங்கே நடந்தவற்றை ஊரில் போன் செய்து பெரியப்பா பெரியம்மாவிடம் சொல்லி இருப்பாள். ஆகாஷ் அண்ணனும் அருகில் இருந்திருப்பான். அவர்கள் எல்லாம் என்ன நினைத்து இருப்பார்கள் என்னை பற்றி? இனி அவர்களை சந்திக்கும் போது என்னை குற்றம் சுமப்பது போல் ஒரு பார்வை பார்த்தாலும் என்னால் தாங்க முடியுமா? முடியவே முடியாது! என்னால் முடியவே முடியாது' என்று இரு கைகளாலும் தலையை பிடித்துக் கொண்டு அந்த பால்கனி சுவற்றில் அப்படியே சாய்ந்து நின்றாள்.
எவ்வளவு நேரம் அப்படியே நின்றாளோ அவளது மனக்கண்ணில் அவளது பெரியப்பாவும் பெரியயம்மாவும் கூடவே ஆகாசம் வந்து இவரை பார்த்து குற்றம் சாட்டுவது போல சுற்றி நின்றனர்.
"என் பெண்ணின் வாழ்க்கையை இப்படி கெடுத்து விட்டாயே? நீ நல்லா இருப்பியா?" என்று பெரியம்மா கலாவதி கண்கள் கலங்க அவளுக்கு சாபம் கொடுக்க.. ஆகாசோ "உன்னையும் என் தங்கையை போல தானே பாவித்தேன். நீ என் தங்கை வாழ்க்கையில இப்படி விளையாடி விட்டாயே?" என்று பிழி சொல்வதும்..
பெரியப்பா எதுவும் பேசாமல் கண்களாலேயே அவளை குற்றம் சாட்டுவதும்…
சுற்றி சுற்றி மூவரும் வந்து நின்று கொண்டு இவள் மேல் குற்றத்தையும் பழியையும் கோபத்தையும் காட்டுவதை தாங்க முடியாமல்..
"நான் தப்பு பண்ணல.. எந்த தப்பும் நான் பண்ணல" கத்தி கதறி அழுவதையும் மனக்கண்ணில் கண்ணூற்றவள் "நோ..!" என்று அலறி கத்தியிருந்தாள்.
அவளின் சத்தத்தில் புரண்டு படுத்த இராவணன் அருகில் அவள் இல்லாத படுக்கையை தடவி "ஏய் யட்சிணி எங்கே போன..?" என்று தூக்கத்தில் உளறியபடி மீண்டும் கவிழ்ந்து படுத்துக்கொள்ள.. அங்கிருந்தே முகத்தை மட்டும் திருப்பி அவனைப் பார்த்தவளின் கண்களில் ஒரு தீவிரம்.
'இந்த வாழ்க்கை வேண்டாம்… பழி சொல்லும் வாழ்க்கை வேண்டாம். தேவி அக்காவை கலங்க வைத்து அவள் கண்ணீரில் எனக்கு இந்த வாழ்க்கை வேண்டாம். பிடிக்காத ஒருவனிடம் அதுவும் அக்கா கணவனுடனான இந்த வாழ்க்கை வேண்டவே வேண்டாம்.
இந்த அரக்கனிடமும் தினமும் அவஸ்தை பட்டு உயிரை விடுவதை விட ஒட்டுமொத்தமாக உயிரை விட்டுவிடலாம்' என்று அண்ணார்ந்து வானத்தைப் பார்த்தாள்.
அங்கே இரவில் உலா வந்த நிலாவும் அதன் அருகில் கண்சிமிட்டி கொண்டிருந்த நட்சத்திரங்களும் அவளையே பார்த்து கேலி செய்வது போல உணர்ந்தவள், 'அந்த நட்சத்திரங்களில் என் அம்மாவும் அப்பாவும் இருப்பாங்க தானே.. அப்போ அவங்களும் என்னை பார்த்து கேலி செய்றாங்க இல்லையா? இப்படி என் சொந்தங்களே என்னை வெறுத்து கேலி செய்யும் நிலைக்கு உள்ளான இந்த வாழ்க்கை வேண்டாம்! அதற்கு காரணமான இந்த உயிரும் வேண்டாம்' என்று நிமிடத்தில் முடிவு எடுத்தவள் சட்டென்று பால்கனியிலிருந்து குதித்து விட்டாள்.
தற்கொலை எண்ணம்…
மன பலவீனம் உடையவர்கள் மட்டுமே தற்கொலை எண்ணத்தால் தூண்டப்படுகிறார்கள் என்று எண்ணாதீர்கள். தற்கொலை எண்ணம் என்பது பல்வேறு சூழலில், எல்லா வயதினருக்கும் ஏற்படக் கூடிய எண்ணமே‚ தற்கொலை முயற்சிகள் சட்டென்று அந்த நேர மன அழுத்தத்தால் தூண்டப்படும் ஒரு உணர்ச்சி. அந்த நேரத்தை கடந்தால் அந்த உணர்வு வடிந்து மன அழுத்தம்.. மன பாரமாக மாறிவிடும்.
சித்ரலேகாவும் இதே மாதிரியான ஒரு மன அழுத்தத்தில்தான் பாதிக்கப்பட்டிருந்தாள். தன் மீதான தவறான கருத்தும்.. தன் சொந்தங்களே எதிரியாக துரோகியாக பார்ப்பார்களோ என்று எண்ணமும்.. அதீத மன அழுத்தத்தை உண்டாக்கி இருந்தது. கூடவே இந்த அரக்கனின் செயலும் அதனை தூண்டிவிட தாமதிக்காமல் குதித்து விட்டாள்.
கொஞ்சம் கொஞ்சமாக அவளது உடல் கீழ் நோக்கி செல்கின்றது. 'இன்னும் சிறிது நேரம் தான். அந்த லானில் போடப்பட்டிருக்கும் நடைபாதைக்கான கடப்பாக் கல்லில் மோதி என் தலை தெறித்து ரத்தம் அதிகமாகி நான் இறக்கப் போகிறேன். இந்த துன்பங்களிலிருந்து எனக்கு விடுதலை வரப்போகிறது. அம்மா அப்பா ஏதோ நானும் உங்களுடன் வந்துவிடப் போகிறேன்.. என்னை அரவணைத்து கொள்ளுங்கள்' என்று எண்ணங்கள் அவளை சூழ இருக்க.. கண்களை மூடிக்கொண்டு அவளின் மனக்கண்களில் வெறும் இருள் மட்டுமே..
அந்த இருளில் சிறு கீற்று வெளிச்சமாய்… யட்சிணி என்ற அழைத்தான் அவனது யட்சன்.
வெகு நாள் சென்று அவள் கனவில் அந்த யட்சனின் குரல் அவளை திடுக்கட செய்ய… அதிர்ந்து விழித்தவள் விழுந்தது என்னவோ இராவணன் விரித்த வலையில்..
ஆம் வலையில் தான். அதுவும் இராவணன் விரித்த வலையில் தான். அவள் அறியாதது இவளை அழைத்து வரும்போதே.. இம்மாதிரியான முட்டாள்தனமான வேலைகளில் இவள் ஈடுபடக்கூடும் என்று அதற்குத் தக்கவாறு வீட்டில் சில ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தான் இராவணன்.
இம்மாதிரியான பால்கனிகளில் சட்டென்று விரிந்து கொள்ளும் வலை அமைப்புகளும் ஷாக் அடிக்காமல் இருப்பதற்கு சர்க்யூட்களில் சில மாறுபாடுகளும் என்று செய்திருந்தான்.
அதை தாண்டி அவள் இருக்கும் அறை முழுக்க யாருக்கும் தெரியாத சிறுசிறு கேமராக்கள் அங்கங்கே இருந்தன. அதை ராவணனால் மட்டுமே பார்க்க முடியும். அதனால் அவனைத் தாண்டி கையை கிழித்துக்கொள்ளவோ.. பாத் டப்பில் அமிழ்ந்து அவளால் தன் உயிரை மாய்த்துக் கொள்ளவோ.. முடியாது என்பதில் வெகு திண்ணமாக திட்டமிட்டு அனைத்தையும் செய்திருந்தான் இராவணன்.
பகலிலேயே அவனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் இரவில் விட்டு விடுவானா என்ன?
அவள் எழுந்ததுமே இவனுக்கு தெரியும். ஆனாலும் அமைதியாக தான் படுத்திருந்தான். அதுவும் அவள் பால்கனியில் இருந்து கத்த அதனை கண்டு கொள்ளாமல் உளுறுவது போல நடித்தான்
அப்பொழுதாவது வந்து படுப்பாள் என்று பார்த்தான்.
இவளோ நொடியில் விழுந்து விட இவன் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த பட்டனை அழுத்த, அந்த வலை விரிந்தது. அதில் தான் வாகாக விழுந்திருந்தாள் யட்சனின் யட்சிணி.
'என்ன இவ்வளவு நேரம் ஆகி ஒரு வலியும் இல்லை. மண்டையும் அடிபடல' என்று நினைத்தவர்களுக்கு அப்போதுதான் வலை கையில் பட, அதிலிருந்து எழ முடியாமல் வலையில் மாட்டிக் கொண்ட மீனை போலவே அவள் தத்தளிக்க பால்கனியில் இருந்து அவளை பார்த்தவன் இராவணன்.
வெற்று மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு அவன் நின்ற விதமே அவளுக்கு அச்சம் ஊட்டுவதாக இருந்தது. அதுவும் இரவின் நிழல் ஓவியமாய் படிக்கட்டு தேகங்களுடன் அவன் நின்ற தோரணை அவளுக்கு கிலி பரப்பு வலையில் படுத்தபடி அவனை பார்த்தாள்.
"அப்படியே கிட விடியும் வரை. அப்பதான் இது மாதிரி கிறுக்குத்தனமான வேலை எல்லாம் இனி செய்ய மாட்ட.. குட் நைட்" என்றவன் உண்மையில் சென்று படுத்து உறங்கி விட்டான்.
சித்ரா "அடப்பாவி என்ன இப்படி செய்கிறான்?" என்று நம்ப முடியவில்லை. தன் உயிரைக் காக்க வலை விரித்து இருக்கிறான் என்று புரிந்தது. அதே சமயத்தில் 'இப்படியே கிட என்று சென்று விட்டானே.. விடிய விடிய இதில் தான் கிடக்க வேண்டுமோ?' என்று எழுந்து நிற்கும் முயன்று.. அவளால் முடியவில்லை.
வலையும் ஆட பயந்தாள். பால்கனியிலிருந்து குதிக்கும் போது இருந்த தைரியம் இப்பொழுது போய்விட.. இங்கிருந்து சில அடிகள் தூரமே இருந்த லானில் குதிக்க பயந்து அப்படியே படுத்திருந்தாள் சித்ரலேகா விடியும் வரை.
ஒரு கட்டத்தில் அப்படியே உறங்கியும் விட்டாள் சித்ரா. காலையில் அவள் மேல் விழுந்த தண்ணீரில் அடித்துப் பிடித்து அவள் எழ..
முயன்று முடியாமல் மீண்டும் அந்த வலையிலேயே விழுந்தவள் அன்னார்ந்து பார்க்க அங்கே கையில் ஜாடியில் இருந்த தண்ணீரை அவள் மீது ஊற்றிவிட்டு அவளைத்தான் அழுத்தமாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் இராவணன்.
இரவில் பார்க்கும் போது பயங்கரமாக இருந்தவன் இப்போது விடியலில் அதுவும் சூரிய கதிர்கள் அவன் மேல் பட்டுவிட வியர்வை துளிகள் அவன் உடம்பில் பட்டு மின்ன .. யட்சனோ கந்தர்வனோ எண்ணும் வகையில் அவளை முறைத்தபடி நின்று இருந்தான் இராவணன்.
"அம்மாயி.. சால சந்தோஷ
க்கனு உன்னாவா?" என்றான் முகத்தில் கோபத்தை தேக்கி வைத்து.
தொடரும்..
