யட்சன் 34

 

(@manvi-aathreesh)
Member Moderator
Joined: 3 weeks ago
Messages: 39
Thread starter  

அத்தியாயம்: 34

 

 

'அசிங்கமாக தன்னை பேசி சென்றது தேவி அக்கா தானா? என்னுடன் அருமை பெருமையாக வளர்ந்த என் அக்கா தானா?' என்று அதிர்ச்சி விலகாமல் செல்லும் தேவியே பார்த்திருந்தாள் சித்ரலேகா.

 

சித்ராவுக்கு ஒன்று புரியவில்லை. இப்பொழுது பேசி சென்றது அவளோடு கூட வளர்ந்த அக்கா இல்லை. அவளுக்கு கணவனாகப்பட்டவனின் முதல் மனைவி! அந்த வலி வேதனை தாத்ரிக்கும் இருக்கும் அல்லவா? அதிலும் காதல் கொண்ட மணாளன் அடுத்தவளோடு இருக்கும் தருணத்தை பார்க்க நேர்ந்தவளால் அப்படி தான் பேசி செல்ல முடியும். அதுவும் தாத்ரி மாதிரி.. தான் என்ற அகம்பாவம் ஆணவம் கொண்டவள் பேசிய.. இவை எல்லாம் கொஞ்சமே!

 

இராவணன் கூரிய கண்களில் கோபம் தெறிக்க அவளைத் தான் பார்த்திருந்தான். உடனே தண்டிக்க அவன் என்ன அரசனா? அரக்கன்!! "இதுக்கு இருக்கு தாத்ரி உனக்கு ஸ்பெஷலா.. ரொம்ப ஸ்பெஷலா.. இராவணனின் ஸ்டைலில்" என்று சிரித்துக் கொண்டே சித்ரலேகாவை திரும்பி பார்த்தான்.

 

சித்ராவுக்கு தாத்ரி சொல்லி சென்றதை நினைத்து பெரும் வலி மனதில். 'அக்கா சொல்வது உண்மைதானே.. சட்டப்படியான உண்மையான மனைவி அவள் தானே! ஆனால்.. நான்.. நானாக வந்து அவளின் வாழ்க்கையை தட்டி பறிக்கவில்லையே? அவளின் தாலியை நான் பறித்துக் கொள்ளவில்லையே? என்‌ வாழ்க்கை தானே இங்கே கேள்வி குறியாய் இவனிடம்.. இந்த ராட்ஷசனிடம் சிக்கி உள்ளது. ஆம்.. சீதை போல இந்த இராவணனிடம் உண்மையில் நான் இங்கு சிறை அல்லவா இருக்கிறேன். ஏதோ இவனோடு கூடிக் களித்துச் சந்தோஷமாக வாழ்வது போல் அல்லவா அக்கா சொல்லி விட்டு செல்கிறாள்? இத்தனை வருடத்தில் என்னைப் பற்றி அக்காவுக்கு தெரியவில்லையா?' என்று யோசித்து யோசித்து அவள் மனம் நொந்ததுதான் மிச்சம்.

 

"ரொம்ப இந்த அழகு மண்டை யோசிக்குது. இது சரி இல்லையே?" என்று அவளை கூர்ந்து பார்த்தான் இராவணன்.

 

அவன் பார்வை அவளுக்கு அருவருப்பை தர முகத்தை அவ்வளவு கோபமாக வைத்து 'உன்னை பார்க்க பிடிக்கவில்லை. உன் அருகாமை எனக்கு உவப்பில்லை' என்பது போல திரும்பிக் கொண்டாள்.

 

"ம்ஹூம்.. இது சரியில்லையே அம்மாயி!" என்றவன் அவளை கையை பிடிக்க முனைய.. சட்டென்று அவள் கையை பின்னால் இழுத்துக் கொண்டாள்.

 

அவள் முறைத்தாள். இவனோ விடுவதாயில்லை. இவனை பார்த்தவாறே அவள் பின்னே மெல்ல மெல்ல எட்டுகளை எடுத்து வைத்தாள். ஏனோ அவன் கண்களின் பாவம் அவனிடம் இருந்து தள்ளி இரு என்றே அவளை எச்சரித்துக் கொண்டே இருந்தது.

 

இரையை பிடிக்கும் கழுகின் கூரிய பார்வை இராவணனிடம். அவனும் அவளை பார்த்து கொண்டே மெல்ல அவளை போலவே நெருங்கினான். அவன் இதழ்கடையில் யாரும் அறியா ரகசியச் சிரிப்பு.

 

"ஓஹ்.. ரொம்ப கோபங்கா உன்னா அம்மாயி? (ரொம்ப கோபமா இருக்கியா அம்மாயி)" என்று கேட்டுக் கொண்டே தான் அவளிடம் நெருங்கினான். அவள் படப்படப்பை மறைத்துக் கொண்டே. பின்னே எட்டு வைத்தாள்.

 

"அலாகே உண்டு.. அலாகே உண்டு.. (இருந்துக்கோ .. இருந்துக்கோ)" என்று சிரித்தவன், அவள் வந்திருந்த பகுதியை பார்த்தான். சட்டென்று கண்களில் ஒரு ரசனை மேலிட, விசில் அடித்தப்படி, அவள் உணரும் முன் சட்டென்று அவளை கைகளில் தூக்கிக் கொண்டு அந்த பகுதியில் இருக்கும் நீச்சல் குளத்தில் அவளோடு விழுந்தான்.

 

"இப்போ மண்ட சூடு போயிந்தா அம்மாயி?" என்ற நக்கலோடு.

 

 

அவள் இடையை அணைத்து அடுத்த நொடி அவள் எதிர் பாரா வண்ணம் நீச்சல் குளத்தில் குதித்து இருந்தான் இராவணன். அவன் கையில் தூக்கியதும் திமிறியவள் அருகில் இருந்த நீச்சல் குளம் அவள் பார்வை வட்டத்தில் விழுந்தாலும், அதில் அவன் விழ வைப்பான் என்ற எண்ணமில்லை. அவள் அண்டம் எல்லாம் அவனிடமிருந்து தப்பிப்பதிலே இருந்தது.

 

 

ஆனாலும் அவன் குதிக்கும் போதும் ஓரளவு சுதாரித்து மூச்சை அடக்கி அவனுடன் மேலே எழும்பினாள் சித்ரா.

 

"மன்சி அம்மாயி… ஸ்விம்மிங் தெரியுமா உனக்கு? அப்போ இனி ஜலக்கீரிடை நடத்திடலாம்" என்று அவளின் இடையில் கைகள் கோர்த்திருந்தான். 

 

அவ்வளவு பெரிய நீச்சல் குளம் அல்ல அது. ஐந்தரை அடி ஆழம் மட்டுமே இருக்கும். ஆனாலும், அவள் உயரத்துக்கு மூழ்கும் படி தான் இருந்தது. 

 

 

அவனின் பேச்சில் தடுமாறி மீண்டும் அவள் கீழே செல்ல, இராவணன் அவள் முழங்க காலில் கையிட்டு வாகாக தூக்கி கொண்டான் தன் உயரத்துக்கு.  இப்போது அவள் தலை அவன் தலையோடு முட்டி நின்றது.

 

பயத்தில் அவனை பார்த்தவள் முத்தத்தில் இருந்த நீரை வழித்து விட்டு.. "நீயெல்லாம் மனுஷனா.. இப்படி தூக்கி போடுவ? மூச்சு முட்டி செத்து இருந்தா?" என்று கேட்டாள்.

 

"செத்து இருந்தா… தாஜ்மஹால் கட்ட மாட்டேன். உனக்கு தங்கச்சி முறையில யாராவது இருந்தா அவள கட்டுவேன்!" என்று வாய் விட்டு சிரிக்க.. அவன் கையில் வாகாக இருந்துக் கொண்டே.. அவனை அடித்தாள். 

 

"இராட்ஷஸன்.. இராட்ஷஸன் டா நீ, விடு டா.. விடு டா என்னை" என்று அவள் அழுகையினுடே அவனை அடித்தாள்.

 

"ஹேய்.. என்ன ரொம்ப கை நீளுது.. உன்னை.." என்றவன்‌ அவளை பிடித்திருந்த பிடியை விட்டு விட்டான்.

 

பயந்து பெரும் சுவாசம் ஒன்றை இழுத்து விட்டவள்,  அவன் கழுத்தில் தன் கைகளை கோர்த்து கொண்டு தன்னை நிலைப்படுத்தி கொண்டாள். அவனை தீப்பார்வை பார்க்க..

 

நீச்சல் குளத்தின் நடுவே எழிலோவியமாய் அவள். 

பார்க்கவே மூச்சு முட்டியது அவனுக்கு.‌ ஏனோ சித்ரபாவையென இந்த சிதர்லேகாவின் அழகு அவனை இம்சித்தது. அவன் மனதில் இருக்கும் கோபத்தை மீறி தாபம் மட்டுமே அவளிடம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

 

இருவரின் பார்வையும் ஒன்றை ஒன்று கவ்வி கொண்டன. ஆனால் அதில் காதல் இல்லை. ஆசை இல்லை. விருப்பம் இல்லை. ஒரு ஜோடி கண்களில் அதீத கோபமும். மற்றொரு ஜோடி கண்களில் அதிதாபமும் மட்டுமே.

 

அவளின்‌ ஈர உடைகள் அவனுக்கு அவள் மீதான‌ உரிமையை நிலைநாட்ட அழைப்பு விட, மீண்டும் மூச்சு முட்டியது இந்த அரக்கனுக்கும்.

அரக்கன்‌ என்றாலும் ஆசை தாபம் நிறைந்த மனிதன் தானே..

மூட்டிய மூச்சினை சீராக்க அவளது இதழ்கள் வழி தன் இதயத்துக்கு அனுப்பிக் தொண்டிருந்தான் சுவாசத்தை.

 

 

நிலவின்றி வானம் இருளில் மூழ்கி இருக்க.. மின்னும் நட்சத்திரங்கள் 

 

இவளை கண்டுகண் அடித்து கேலி  சிரித்து கொண்டிருந்தன போல இருந்தது சித்ரலேகாவுக்கு. நீச்சல் குளத்தில் ஆரம்பித்த அவனது மோகம் அவளை ஆட்கொண்டதும் தான் விட்டது. இப்போது கூட‌ தன்னை இறுக்கி அணைத்துக் கொண்டு படுத்திருக்கும் அரக்கனை தள்ளி விட்டே, எழுந்து பால்கனியில் வந்து நின்றிருந்தாள்.

 

பிரபஞ்சமே அவளை எள்ளி நகையாடுவது போல இருந்தது. 

 

'இப்படி இகழ்ச்சியான வாழ்க்கை உனக்கு தேவையா சித்து?' என்று கேட்டுக் கொண்டவள் சிறிதும்‌ யோசிக்காமல் பால்கனியில் இருந்து கு

தித்து விட்டாள். இராவணனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

 

தொடரும்..

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top