Share:
Notifications
Clear all

அழகன் 24

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 321
Thread starter  

அழகன் 24

 

 

 

நேற்று காலை சரபேந்திரனிடம் பேசி வந்த உடனேயே, அழகன் அவனின் பர்னீச்சர் கடைக்கு செல்லாமல் நேராக வீட்டிற்கு வந்திருந்தவன்,

 

அன்னை தந்தை அப்பத்தா தாத்தா மனைவி என்று அனைவரையும் கூடத்தில் வந்து அமர சொல்லி அழைத்தான் கள்ளழகன்.

 

அப்போது தான் மதிய உணவிற்கு என்ன செய்யலாம் என்று மருமகளோடு பேசிக்கொண்டிருந்த கலையரசி “என்ன இவேன் போன சுருக்குள்ள வந்துட்டியான்.. கடைக்கு போலையா? எதுக்கு இப்ப எல்லாரையும் அங்கன வந்து உட்கார சொல்லுறவன்? உனக்கு ஏதும் தெரியுமா பாப்பா?” என்று ஆண்டாளிடம் கேட்க..

 

அவளௌ தோளை குலுக்கி உதட்டை பிதுக்கி தெரியாது என்று தலையை அசைத்தாள்.

 

‘நாம நேத்து ராத்திரி அவ்வளவு பீட்ட போட்டு இவரிண்ட பேசினதுக்கு ஒண்ணுமே ரெஸ்பான்ஸ் பண்ணலையே நெனச்சேன். இன்னைக்கு ஏதோ பண்ணிட்டு வந்திருக்காரு போலவே? இல்ல இனிமேதான் சம்பவத்தை பண்ண போறாரா?’ என்று யோசித்தபடி அவளும் கூடத்திற்கு வந்தவள், கணவனை கிஞ்சித்தும் நிமிர்ந்து பார்க்க வில்லை. 

 

‘அது எப்படி நேத்து அப்படி இருந்துவிட்டு காத்தால நீ என்னாண்ட சொல்லாம.. அட்லீஸ்ட் பார்க்காம வேலைக்கு சொல்லலாம்?’ என்று கோபம் அவள் முகத்தில் இன்னும் மீதம் இருந்தது. 

 

அதனை புரிந்து கொண்ட அழகனுக்கோ, மெல்லிய குறுஞ்சிரிப்பு இதழ்கடையில்..!

 

“என்ன பேரான்டி ஏதாவது முக்கியமான விஷயமா?” என்றபடி அப்பத்தா வந்து அமர்ந்தவர், 

 

“உங்க தாத்தனுக்கு ஒழுங்கா எழுந்து உட்கார முடியாது. நீ இப்படி உட்கார்ந்து பேசினாலே அவருக்கு நல்லாவே காது கேக்கும்” என்றார் சொக்கியம்மாள்.

 

அதே சமயம் மாமியார் அருகில் வந்து கலையரசி அமர, கலையரசி அமர்ந்திருந்த இந்த சோபா திண்டில் அமர்ந்து கொண்டாள் கணவனுக்கு எதிரே ஆண்டாள்.

 

அவனோ கண்களால் அவளை முறைத்து பார்த்து, ‘பக்கத்துல வந்து உட்காருடி.!’ என்று செய்கை செய்து கையால் தன் அருகே இருக்கையை தட்டி காண்பிக்க..

 

‘அதெல்லாம் முடியாது போங்கோ.! நீ மட்டும் காலைல என்னாண்ட சொல்லிட்டு போனேளா.. இப்ப நீங்க சொன்ன உடனே நான் கேட்கணுமா?’ என்பது போல முறைத்துப் பார்த்தவள், வெடிக்கு என்று முகத்தை திருப்பிக் கொண்டாள். 

 

‘இந்த பொம்மா வேற.. நேரம் காலம் தெரியாம..!’ என்று பல்லை கடித்தவன்,

 

‘இப்போ வரப்போறியோ? இல்லையாடி?’ என்று உதட்டை கடித்து மனைவியை பார்த்து நெற்றி சுருக்கி கண்களால் கேட்க..

 

‘ம்ப்ச் போயா முடியாது..!’ என்பது போல அவளும் உதட்டை இறுக்கமாக வைத்து கைகளை மார்புக்கு முன்னே கட்டிக்கொண்டு அழுத்தத்தோடு அமர்ந்திருந்தாள்‌.

 

இவனும் சளைக்காமல் அவளை பார்த்தபடியே அமர்ந்திருக்க.. 

 

அவளும் இவனுக்கு குறையாமல் வீம்போடு அமர்ந்திருக்க..

 

“ஆக.. உங்க ரெண்டு பேரோட மோதல் ஊடெல்லாம் பார்க்க தேன் எங்கள இங்க வந்து உட்கார சொன்னியா பேராண்டி?” என்று சொக்கியம்மாள் கேட்ட தினுசில் சிகையைக் கோதி சிரித்துக்கொண்டவன், உடனே பேச்சை மாற்றி “அப்பா தோப்புக்கு போயிட்டாரோ?” என்று வீட்டை சுற்றி முற்றி பார்த்து கேட்டான்.

 

“இல்ல.. இல்ல.. அவேன் தோப்புக்கெல்லாம் போல. ஒன் தங்கிச்சியோட ஜாதகத்தை எடுத்துக்கிட்டு, ஏதோ மாப்பிள்ளை ஜாதகம் வந்து இருக்குனு நம்ம மருதைய்யன் கூப்பிட்டியான்.. அதான் அவனோட சேர்ந்து ஜாதகம் பொருந்துதானு பாக்க போயிருக்கியான்” என்றார் சற்றே அலுத்த குரலில் சொக்கியம்மாள்.

 

“ஓஓஓ…!” என்று மீசையை முறுக்கிக் கொண்டு யோசித்துக் கொண்டிருந்தவனை கண்டு மூன்று பெண்களும் ஒருவரை ஒருவர் கேள்வியாக பார்த்துக் கொள்ள.. மூவருக்குமே அதற்கான பதிலும் தெரியாமல் உதட்டை பிதுக்கி திரும்பவும் அழகனையே பார்த்திருந்தனர் அவனே சொல்லட்டும் என்று..!

 

அப்பவும் தீவிர யோசனையுடன் தான் இருந்தான் அழகன். எதுவும் கூறவில்லை. இவன் இப்படியே வாயை மூடிட்டு இருந்தால் என்ன செய்ய?

 

“யேன் பேராண்டி உன் அழகு எங்களுக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும்.‌ அதனால தேன் உனக்கு அழகனு நாங்க பேர் வெச்சதே.. உன் பொண்டாட்டிய வேணா இப்படி உன் ஏத்தாப்புல உட்கார வைச்சு நான் உங்களுக்கு உன்னை ரசிக்க சொல்லிக்கிட்டு இரு..” என்றவர்,

 

“ஆனா எங்களுக்கு ஜோலி கழுதை கெடக்கு. நேரா நேரத்துக்கு உன் தாத்தானுக்கு கறி கஞ்சு குடுக்கணும். இந்த வயசான கிழவிக்கும் சோறு ஆக்கி போடணும் இதெல்லாம் உங்க அம்மா தேன் பார்க்கணும். உன் பொண்டாட்டி கூட மாடா நின்னு ‘சூப்பரு அத்த.. செமையா இருக்கு அத்த.. வாவ் அத்தனு’ நல்லா இருக்கு டேஸ்டா இருக்குனு’ சொல்றத தவிர வேற எதுவும் செய்ய மாட்டா..” என்று அவர் பேரனிடம் சொன்ன தினுசில் ஆண்டாள் கோபமாக “அம்மாச்சி..!” என்று கத்தினாள்.

 

“என்ன ஆத்தா? கூப்படியாக்கும்?” என்று அவர் ஆசையாக திரும்ப கேட்க..

 

“எதுக்கு இப்படி என்ன இப்படி டேமேஜ் பண்றீங்க? நேக்கு என்ன தெரியுமோ அதை நான் செய்றேன் தானே? என்னால முடிஞ்ச அளவு எங்க அத்தைக்கு நான் ஹெல்ப் செய்கிறேன். நீங்க வந்து என்னை போட்டு கொடுக்க வேண்டாம்..” என்றாள் முகத்தை உர்ரென்று வைத்து.

 

“என்னது நான் போட்டுக் கொடுக்காறானே.. அட சொக்கநாதா..!” என்று மே வாயில் கை வைத்த அப்பத்தாவோ,

 

“பாரடி உன் மருமவள யேன் மருமவளே..! என் மருமகள் கூட என்னைய இந்த மாதிரி சிண்டு முடிஞ்சீ விட்டவனு குறை பேசினது கிடையாது. இப்போ வந்து சின்ன சிறுக்கி இவ என்னைய குறை பேசுறா?” என்றார் நக்கலாக…

 

“இங்க பாருங்கோ ஆச்சி.. நீங்க என்ன என் மாமியாரா உங்க மாமியாரிடம் நான் போட்டு கொடுக்க? நீங்கதான் இப்ப என்ன என் ஆத்துக்காரர் கிட்ட போட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறேள்.!” என்றாள் அவளுள் விடாமல்..

 

“ஆமா.. நான் சொன்னதுக்கு அப்புறம் தேன் ஒன் புருஷனுக்கு உன்னோட பகமான தெரியப்போதாக்கும். நீ எப்படின்னா அவனுக்கு ஏற்கனவே தெரியும் டி. புது பொண்டாட்டி சமையலையும் என் பேர இத்தன நாளா ஒரு நாளாவது சாப்பிட்டு இருப்பானா ஏதோ அவன் தலையெழுத்து காலம் முழுக்க அவேனுக்கு அவேன் அம்மா சமையல் தேன் போல..” என்றார் சோகமாக மூச்சு விட்டப்படி.

 

இதற்கு பதில் பேச முடியவில்லை ஆண்டாளால். அவளுக்கு சமைக்கத் தெரியாது என்று இல்லை. இவர்கள் பக்க சமையலை அவள் இப்பொழுதுதான் கற்றுக் கொண்டிருக்கிறாள் கலையரசியிடமிருந்து.. 

 

அதனால் அவர் சமையல் செய்யும் போது அருகில் நின்று பார்த்துக் கொள்ளுவாளே தவிர.. இவளாக எதுவும் செய்ததில்லை. அவருக்கு சிறு சிறு உதவிகள் செய்து கொடுப்பாள். அதை தான் இப்படி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல அவளின் செயல்களை சொல்லிக் காட்டிக் கொண்டிருந்தார் சொக்கியமாள்.

 

இருவரின் சம்புஷணயை பார்த்து சிரித்து விட்டான் அழகன். 

 

“அப்பத்தா.. விடுக யேன் பொண்டாட்டிக்கு என்ன சமைக்க தெரியும்னு எனக்கு ஏற்கனவே தெரியும். நாங்க ஸ்ரீவில்லிபுத்தூர் போயிருக்கும் போது அவளும் தான் சமைச்சா..” தன்னை விட்டுக் கொடுக்காமல் பேசிய கணவனைக் கண்டவுடன் கண்களில் காதல் பெருக, இருவர் அறியாமல் பறக்கும் முத்தத்தை கணவனுக்கு பார்சல் செய்தாள்.

 

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் தான் “ஸ்ப்பா என்னா வெயிலு.. என்னா வெயிலு” என்றபடி உள்ளே நுழைந்தார் போஸ் பாண்டி.

 

கணவனை கண்டதும் கலையரசி ஆர்வத்தோடு அருகில் சென்று “என்னாச்சுங்க..” என்று கேட்டார்.

 

தலையை ஆட்டி பெரு மூச்சு விட்டவர், “ஏழு பொருத்தம் தேன் இருக்காம்” என்றார்.

 

“ஏழு பொருத்தம் இருக்கே.! அது போதாதா?” என்று கலையரசி ஏக்கமாக கேட்டார்.

 

“முக்கியமான ரஜூ பொருத்தமே இல்லையாம் கலை” என்றார்.

 

கணவனின் பேச்சில் மிகுந்த மன வருத்தமும் மன அழுத்தமும் ஏற்பட்டது கலைக்கு.

 

சோர்ந்து வந்து சொக்கியம்மாள் அருகில் அமர்ந்தவரின் தோளைத் தட்டிக் கொடுத்த அப்பத்தா, “எல்லாம் சரியாகும் கலை.‌. நீ இப்படி மனசு குழப்பிக்கிட்டு கிடைக்காத.. நம்ம பொண்ணுக்குனு வரவன் ஏற்கனவே பிறந்திருப்பான் கலை. இனிமேவா பிறக்க போறியான்? நீ மூஞ்சி எப்படி வெச்சிருக்காத..!” என்றார் ஆறுதலாக மருமகளுக்கு..!

 

அவருக்குமே உள்ளூரக் கவலை பேத்தியைக் கொண்டு இல்லை.. இப்படி மகனும் மருமகளும் பேத்தியின் வாழ்க்கையை நினைத்து தங்களை வருத்திக் கொள்கின்றனர் என்றுதான்..!

 

போஸ்பாண்டி கள்ளழகர் அருகே அமர்ந்து “என்ன இன்னைக்கு கடைக்கு போகாம இந்நேரத்துல இங்க இருக்க?” என்று கேட்க.. 

 

“ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு வீட்டுக்கு வந்தேன்பா.. நீங்க வெளிய போய் இருக்குறதா அம்மா சொன்னாங்க.. அதேன் நீங்க வரட்டும்னு காத்துட்டு இருந்தேன்” என்றான் அழகன்.

 

“அம்புட்டு என்ன முக்கியமான விசயம் அழகா? கடையை விட்டுட்டு இங்கன உக்காந்து இருக்க?” என்று அவர் சற்று அசதியோடு கேட்க..

 

அந்நேரம் பார்த்து ஏற்கனவே கடைந்து வைத்திருந்த மோரில் சிறிது இஞ்சி கொத்தமல்லி கருவேப்பிலை சிறிது பெருங்காயத்தூள் இரண்டு துண்டு ஐஸ் கட்டி என்று சேர்த்து நல்ல நுரைக்க பொங்க ஆற்றி மண் குடுவைகளில் எடுத்துக் கொண்டு வந்து அனைவருக்கும் கொடுத்தாள் ஆண்டாள்.

 

“சோறாக்க கத்துக்குறியா இல்லையோ இந்த மாதிரி புதுசு புதுசா பானகம் செய்ய கத்துக்கிட்டே ராசாத்தி நீ” என்று அப்பவும் அவளை குத்தியவாறு பேசிய சொக்கியம்மாளை முறைத்துக் கொண்டே தான் அவருக்கு மோரை நீட்டினாள் ஆண்டாள்.

 

“சும்மா இரேன்மா.. என் மருமக என்ன பொறுப்பா வெயில்ல வந்தவனுக்கு குளுகுளுன்னு மோர் கடைஞ்சு கொண்டு வந்து இருக்கு.. அதுக்கு பாராட்டாம குறை பேசுறியே?” என்று போஸ்பாண்டி மருமகளுக்கு வக்காலத்து வாங்கினார்.

 

“நீ ஒருத்தன் தான் டா பாக்கி” என்று முகத்தை திருப்பினாலும் அதில் கோபம் கிடையாது அவருக்கு.

 

“அடுத்த முறை இருங்க உங்களுக்கு பச்சை மிளகாய் அரைச்சு போட்டு தரேன்” என்று அவரிடம் கூறிக்கொண்டே கொடுத்தாள்

 

அனைவரும் மோர் குடித்து சற்று நேரம் ஆசிவாசம் ஆயினர். பிறகு தந்தையின் கையை பற்றியவன் “இனிமே கண்ணிக்கு மாப்பிள்ளை பார்க்க நீங்க அலைய வேணாம் பா” என்றான் அழகன். 

 

“ஏன் அழகா? நீ வேற ஏதாவது மாப்பிள்ளை பார்த்து இருக்கியா? இல்ல மணிமாறன் உன்கிட்ட திரும்ப ஏதும் பேசினானா?” என்று சற்று ஆர்வமோடு கேட்டார் கலையரசி. 

 

அவரைப் பார்த்து இல்லையென்று தலையசைத்தவன் “நானெல்லாம் மாப்பிள்ளை பார்க்கல.. உங்க பொண்ணே பார்த்து வச்சிருக்கா” என்றதும் அனைவருக்கும் ஏக அதிர்ச்சி தான்.

 

ஆனாலுமே கலையரசிக்கு அவளது ஜாதக குறிப்பிலிருந்து இப்படித்தான் திருமணம் நடக்கும் என்று தெரிந்ததிலிருந்து அப்படியாவது மகள் யாரையாவது பார்த்தால்.. அவர் நல்லவனாக இருந்தால்.. அவனுக்கு திருமணம் செய்து வைத்துவிடலாமே என்று ஒரு எண்ணம் உள்ளுக்குள் ஓடிக் கொண்டுதான் இருந்தது.

 

இன்று மகனும் அதைப்பற்றி பேசவே பெரிதாக அவரிடம் பெரிய பதட்டமோ அதிர்ச்சியோ இல்லை. ஆனால் மகளின் இந்த செயல் கொஞ்சம் அதிர்ச்சியை கொடுக்கத்தான் செய்தது.. 

 

“என்ன அழகா சொல்ற? நம்ம கண்ணியா? அப்படி எல்லாம் இருக்காது. நீ நல்லா விசாரிச்சியா இல்ல யாராவது தப்பா சொல்லி இருக்க போறாங்க? வீடு விட்டா பள்ளிக்கூடம் பள்ளிக்கூடம் விட்டா வீடுனு இருக்கிற புள்ள அது. அது போய் எப்படிப்பா?” என்று ஆற்றாமையாக பேசினார் போஸ்பாண்டி.

 

அவன் அமைதியாக தந்தையை உற்று நோக்கினான்.

 

அவன் அழுத்தமான பார்வையே சொன்னது, அவன் சொன்னது பொய்யில்லை சத்தியமான உண்மை என்று..!

 

சொக்கியம்மாளோ “யாரது அழகா?” என்று கேட்டார்.

 

ஒரு பெருமூச்சோடு “உங்க பொண்ணு வீடு விட்டா பள்ளிக்கூடம்.. பள்ளிக்கூடம் விட்டா வீடு, அதைத் தவிர எங்கேயுமே போறதில்லையா? காங்கேயன அழைச்சிட்டு அவ போறது உங்களுக்கு தெரியாதா?” என்று கேட்டதும் அனைவரும் முகத்திலும் குழப்பம் கலந்த அதிர்ச்சி.

 

“ஆமா.. நம்ம மாட்டு டாக்டர் சரபேந்திரன் இருக்காருல அவருதான்..!” என்றான்.

 

“அந்த டாக்டர் தம்பி நம்மூருக்கு வந்து கொஞ்ச நாள் தானே ஆகுது?” என்று ஏதோ புரிந்தவரை சொக்கியம்மாள் பேரனை பார்த்து கேட்டார். 

 

“ம்க்கும்.. நான் சமய கட்டில் சமைக்கிறனா இல்ல எங்க அத்தையோட சும்மா நின்னுட்டு இருக்கேனானு மட்டும் நன்னா கண்ணுல விளக்கெண்ணையை ஊத்திட்டு பாருங்கோ.. ஆனா இந்த வீட்ல இருந்த பொண்ணு என்ன பண்ணினானு சரியா பாக்காதீங்கோ..! அத்தாச்சி இப்ப லவ் பண்ணல.. அத்தாச்சி லவ் பண்ண ஆரம்பிச்சு பல வருஷம் ஆகுது” என்றாள் ஆண்டாள்.

 

“இவ என்ன சொல்றா அழகா?” என்று பதட்டத்தோடு கேட்டார் கலையரசி.

 

“அவ உண்மைய தான் சொல்றா மா. அது மட்டும் இல்ல எனக்கும் கண்ணிக்கும் கொஞ்ச நாளா, அதாவது மணிமாறன் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வச்சதுல இருந்து சரியான பேச்சு வார்த்தை இல்லாததையும் கண்டுபிடிச்சு, ஏன் என்ன காரணம்னு என்ன போட்டு தொலைத்து எடுத்து.. கூடவே கண்ணியிட்டயும் போட்டு வாங்கி… இவ்வளோ விஷயத்தையும் இங்கன கொண்டு வந்து நிறுத்த காரணமே பொம்மா தேன் மா” என்றான் அவளை பார்த்துக் கொண்டே..!

 

‘என்ன பார்வை என்னாண்ட நவாப் இருக்கு.. கண்ணு அந்த பக்கம் திருப்பிக்கோ’ என்று கண்களாலேயே கணவனுக்கு கண்டனம் தெரிவித்தாள்.

 

அவனும் மந்தகாச சிரிப்போடு மனைவியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

 

அதற்குள் மற்றவர்களுக்கும் தங்கள் அதிர்ச்சி தணிய என்ன விவரம் என்று இவனிடம் கேட்டனர்ஹ

 

அவனும் ஆண்டாள் முதன் முதலில் தனக்கும் கண்ணிக்கும் இருக்கும் அந்த விலகலை கண்டுபிடித்து கேட்டது, கண்ணயின் ஒரு தலை காதலை கூறியது, அதற்கு பின் கல்யாணம் தடைப்பட்டு நின்றதை ஆண்டாளிடம் தான் கூறியது, அப்புறம் சரபேந்திரனை அவள் காதலிக்கிறாள் என்று கண்டறிந்தது அவனுடன் இன்று காலை தான் சென்று பேசியது.. என அனைத்தையும் அவர்களிடம் பகிர்ந்து கொண்டான் கள்ளழகன்.

 

“இவ்வளவு நடந்து இருக்கா? ஆனாலும் அவ எங்ககிட்ட வாயை விடல பாதிதியா வரட்டும் இன்னைக்கு?” என்று அப்பத்தா கோபமாக கூற..

 

 “வேணாம்.. வேணாம் ஆச்சி.‌ நீங்க போய் அவாட்ட கேட்க வேணாம். அவா வாயிலிருந்து வர வைக்க வேண்டியது என் பொறுப்பு”

என்ற ஆண்டாளின் மனதில் ‘இன்னும் அவாட்ட நான் கேட்க வேண்டிய கேள்விகள் இருக்கிறது அது நான் தான் கேட்பேன்’ என்று நினைத்துக் கொண்டாள்.

 

அன்று மாலை தேநீர் வேளையில் வழக்கம் போல பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் அங்கயற்கண்ணி வந்ததும் அதையே தனக்கு சாதகமாக பயன்படுத்தி, இப்பொழுது அனைவரும் முன்னும் கேள்வி கேட்டு அவளை கதறடித்

தாள் ஆண்டாள்.

 

அவள் கேட்ட கேள்விகள் அனைத்தும் சரியே என்பதால் கலையரசியை அவர்களுக்குள் நுழைய விடவில்லை சொக்கியம்மாள்.

 

தொடரும்..

 

 

 

 

 

 

 

 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top