வஞ்சகன் - 20

 

(@madhusha-novels)
Member Moderator
Joined: 6 months ago
Messages: 29
Thread starter  

அத்தியாயம் 20 

 

“ஃபாலோ மீ..” என சொன்ன அஞ்சலியின் பின்னாடியே, பூம் பூம் மாடு போல் சென்றுக் கொண்டிருந்தனர் சந்தோஷூம், மஹாவும்.. 

 

வேறு வழி.. பெண்ணின் வாழ்க்கையாயிற்றே.. அஞ்சலி சொல்வதெற்கெல்லாம் மண்டையாட்டிக் கொண்டிருந்தனர்.. 

 

“மெதுவா வாங்க..” என சத்தமாக சொல்லிக் கொண்டே போனார் அஞ்சலி.. 

 

பின்னாடியே செல்லப் போன மஹாவின் ஜடையைப் பிடித்திழுத்த, சந்தோஷ், “ஏன்டி சத்தமா, பேசுறதே அவுங்க தான்.. நம்மளை சத்தமா பேசாதிங்கன்னு சொல்லுறாங்க..” என சொல்லி முடிக்கவில்லை.. 

 

“இப்போ தானே, சொன்னேன்.. சத்தமா பேசாதிங்கன்னு.. அதையும் மீறி பேசுனா, என்ன அர்த்தம்?.. வர வர அண்ணிங்குற மரியாதை இல்லாம போச்சி..” என சந்தோஷை முறைத்துக் கொண்டே சொன்னாள் அஞ்சலி.. 

 

“அக்கா, நம்ம பிள்ளைங்க வாழ்க்கையை விட, உங்களுக்கு உங்க மரியாதை தான் முக்கியமா?..” என்றார் மஹா.. 

 

“அதானே, எனக்கு மரியாதையா முக்கியம்?..”  என்றபடி சென்ற அஞ்சலி ஏதோ யோசனை வந்தாற் போன்று திரும்பினார்.. 

 

படக்கென்று திரும்பிய அஞ்சலியைக் கண்டு சந்தோஷூம், மஹாவும் நெஞ்சில் கை வைத்துக் கொண்டனர்.. 

 

“நீ என் மானம், மரியாதையை பத்தி ஏதாவது பேசுன?..” என்றார் மஹாவை முறைத்துக் கொண்டே, 

 

“அய்யோ, அக்காஆஆ.. நான் அப்படி பேசுவேனா?.. நீங்க தான் என் உசிரு.. மத்ததெல்லாம் எனக்கு மசி..” என சொல்ல வந்தவளின் வாயை இறுகப் பொத்தியிருந்தார் அஞ்சலி.. 

 

“ம்ம்.. புரியுது.. வாங்க நாம ஆப்ரேஷனை ஸ்டார்ட் பண்ணலாம்?..” என அஞ்சலி, மெதுவாக படிக்கட்டு வழியே ஏற, அவரின் தோளை மெல்ல சுரண்டினார் மஹா.. 

 

“என்னஹ்?..” என ஹஸ்கி வாய்ஸில் கேட்டார் அஞ்சலி.. 

 

“நாம பேய் ஓட்டப் போகலையா?.. ஆப்ரேஷன் பண்ணப் போறோமா?..” என்ற மஹாவைப் பார்த்து, பல்லைக் கடித்த அஞ்சலி.. 

 

“இல்லை உன்னை அடக்கம் பண்ண போறோம்.. மூடிட்டு வா டி..” என சயந்தன் அறைக்கு முன்பாக வந்து நின்றார்.. 

 

அவருக்கு அடுத்ததாக, மஹா.. சந்தோஷ் இருவரும் வந்து நின்றனர்.. 

 

“டொக்..டொக்..” என கதவை தட்டிய அஞ்சலி, வேகமாக சுவற்றில் பல்லி போல் ஒட்டிக் கொண்டனர்.. 

 

அவரைப் போலவே செய்தனர் மங்கூனி அமைச்சர்கள் மஹாவும்.. சந்தோஷூம்.. 

 

“ஆமா, இப்போ எதுக்கு நாம ஒழிஞ்சு இருக்கோம்..” என சந்தோஷ், மஹாவின் காதில் கிசுகிசுக்க.. 

 

“ப்சச்ச்.. கம்முன்னு இருக்க மாட்டீங்களா..” என அஞ்சலி அப்பொழுதும் அதட்டியவர், 

 

சுவரோடு ஒட்டிக் கொண்டே, மெல்ல கதவை நீக்கிப் பார்த்தார்.. உடனே கதவு திறந்துக் கொண்டது.. 

 

“பூட்டாத ரூம்க்குள்ள போகத்தான் இவ்வளவு பயந்தோமா?..” என கேட்டுக் கொண்டே, உள்ளே நுழைந்தனர் மூவரும்.. 

 

அங்கு கட்டிலில் நல்ல உறக்கத்தில் இருந்தான் சயந்தான்.. 

 

டாக்டர் ஒருவரை வீட்டுக்கே அழைத்து வந்து, சிகிச்சை பார்த்திருந்தார் ப்ரணவ்.. 

 

டிம் லைட் வெளிச்சத்தில் மூணு பக்கிகளுக்கும் சரியாக கண் தெரியவில்லை.. 

 

“ஏன், அண்ணி.. கண்ணுக்கு ஒன்னுமே தெரிய மாட்டேங்குதே.. நான் வேணும்னா லைட் போடவா..” 

 

“ஏன், தாரை தப்பட்டை எல்லாம் கூப்ட்டு வந்து, மோளம் அடிச்சு.. பேயை ஓட்டுவோமோ?..” என கடுப்பாக கேட்டார் அஞ்சலி.. 

 

“இல்லை அண்ணி.. கண்ணுக்கு எதுவுமே தெரியலை?..” என்ற சந்தோஷ் மெல்ல சுவற்றையே வெறித்துக் கொண்டிருந்தார்.. 

 

“பொண்ணு வாழ்க்கை முக்கியமா?.. இல்லை கண்ணு முக்கியமா?.” என எரிந்து விழுந்தவளைக் கண்டு, ஏகத்துக்கும் முறைத்தார் சந்தோஷ்.. 

 

“இன்னும் அவ வாழ்க்கைக்காக என்னென்ன பண்ணப் போறேனோ?..” என யோசித்தபடி, அஞ்சலி சொல்வதெற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருந்தார்.. 

 

அய்யோ பாவம்.. பொண்ணைப் பெத்த பாவத்துக்கு, அவர் இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறாரோ?.. 

 

குறுகுறுவென பார்த்த அஞ்சலி, சயந்தனின் முகத்தையே உற்றுப் பார்த்தார்.. 

 

“என்ன அப்படிப் பார்க்கிற?..” 

 

“இல்லை என் பையன் அழகா தூங்குறான்ல..” என தாயாய் அவர் மனம் சயந்தனை ரசிக்க, 

 

“இப்போ நாட்டுக்கு ரொம்ப அவசியம் பாரு, நாம வந்த வேலையைப் பார்ப்போம்.. நானே குருட்டாம் போக்குல எல்லாத்தையும் பார்த்துட்டு இருக்கேன்.. இந்தம்மாவுக்கு இதுல பையன் அழகா இருக்கானாம்.. பாம்புக்கூடத்தான் அழகா இருக்கும்.. ஆனா விஷத்தைக் கக்கும்.. அது மாதிரி தான் இவனும்..” என சயந்தனின் மேல் இருக்கும் வன்மத்தைக் கொட்டினார் மஹா.. 

 

“சரி, சரி.. வந்த வேலையைப் பார்ப்போம்..” என்ற அஞ்சலி, தன் இடுப்பில் சொருகியிருந்த வேப்பிலைக் கொத்தை கையில் எடுத்தார்.. 

 

“இது என்னத்துக்கு?..” 

 

“என் பையனுக்குள்ள இருக்கிற பேயை அடிச்சி விரட்ட வேண்டாம்..” என அஞ்சலி கண்களை உருட்ட, 

 

“எனக்கென்னமோ, சயந்தன் எழுந்து நம்மளுக்கெல்லாம் சமாதிக் கட்டிருவான்னு தோணுது.. பயமா இருக்கு அஞ்சலி.. போயிறலாம் அஞ்சலி.. வா அஞ்சலி.. போயிறலாம் அஞ்சலி..” என பயத்தில் உளறிக் கொண்டிருந்தார் மஹா.. 

 

“ஏய்ய்ய.. ச்சை.. நிப்பாட்டு.. அவன் என் பையன்.. என் மேல அவனுக்கு தனிப்பாசம் இருக்கு.. கண்டிப்பா அவன் திட்ட மாட்டான்..” என்றவளை ஏளனமாக பார்த்தாள் மஹா.. 

 

இதுவரை அவன் கழுவி ஊத்தாத நாளே இல்லை.. எதையாவது சொல்லி திட்டி விட்டுத் தான் போவான்.. அப்பேற்பட்டவனா, இன்று அஞ்சலியை மதிக்கப் போகிறான்?.. 

 

“அண்ணி, அவன் எழுந்தா, உங்களை மிதிக்க வேணா செய்வான்.. மதிக்க எல்லாம் மாட்டான்..” என்ற சந்தோஷை ஏகத்துக்கும் முறைத்த அஞ்சலி.. 

 

“ஓஹோ.. அவ்வளவு ஏப்ப சப்பையா போயிட்டேனா நானு.. இன்னைக்கு தெரியும் இந்த அஞ்சலி யார்ன்னு..” என சபதமிட்டவர், தன் கையிலிருந்த வேப்பிலையைக் கொண்டு சயந்தனின் உச்சந்தலையில் வைத்தார்.. 

 

“மஹா.. இந்த புத்தகத்துல இருக்கிற 108 சாமிப் பேரைச் சொல்லு..” 

 

“சொன்னா..” 

 

“ம்ம்.. பேய் ஓடிடும்..”

 

“ஓஹ்..” என்றவள், 

 

“ஓம்.. காட்டு முனியே நமஹ.. எங்க சயந்தனை பிடிச்ச பேயே ஓடிடு நமஹ..” என சொல்லிக் கொண்டே அஞ்சலி சயந்தனின் முகத்தில் வேப்பிலையை வைத்து ஓங்கி அடிக்க, 

 

அவ்வளவு தான்.. அய்யனாரைப் போன்று விருட்டென்று எழுந்து அமர்ந்தான் சயந்தன்.. 

 

தன் முன்னால் நிழல் உருவமாய் தெரிந்தவர்களைக் கண்டு புருவம் சுருக்கியவன், வேகமாக லைட்டை ஆன் பண்ணினான்.. 

 

ஆஆஆஆ.. என அலறியே விட்டான் சயந்தன்.. 

 

அதிலும் அஞ்சலியின் உருவத்தைப் பார்த்தவனுக்கு, ஏக கடுப்பாகியது. 

 

“என்ன மம்மி கெட்டப் இது?..” 

 

“கெட்டப் இல்ல, சயு.. அம்மா பேய் ஓட்டப் போறேன்.” 

 

“பேயா?.. எங்கே?.” என்றான் புருவம் இடுங்க, 

 

“உனக்குள்ள தான் பேய் இருக்கு..” 

 

“வாட்ட்.. எனக்குள்ளேயா ..” 

 

“ஆமா டா.. உனக்குள்ள வசிய யக்ஷன் இருக்காம்.. மதியம் நாங்க ஜோசியம் பார்க்கப் போனோமோ, அப்போதான் அந்த ஜோசியர் சொன்னாரு.. உனக்குள்ள பேய் இருக்கு.. அதை ஓட்டிட்டா, நீ யாதிராவை விட்டுப் போயிருவேன்னு..” என அவர்கள் ப்ளான் அனைத்தையும் ஒன்று விடாமல் ஒப்பித்துக் கொண்டிருந்தார்.. 

 

“ஒஹ்.. வேற..” என்றவனின் குரலில் ஒரு வித நக்கல்.. 

 

அஞ்சலியை சீண்டிப்பார்க்க வேண்டுமென்று தோன்றியது அவனுக்கு.. 

 

“உனக்குள்ள இருக்கிற யக்ஷனை வெளியேக் கொண்டு வர்றதுக்காகத்தான், இந்த ஏற்பாடு..” என அருகில் இருந்த டேபிளைக் காட்டினார்.. 

 

அதில் தாம்பூலத் தட்டு இருந்தது.. 

 

“இது வேறையா?..” என மனதுக்குள் நினைத்துக் கொண்டே வேகமாக அவர் புறம் திரும்பியவன், 

 

“இதெல்லாம் வச்சி என்ன பண்ணுவீங்க?..” 

 

“என்ன பண்ணுவேன், 108 தடவை ஸ்லோகம் சொல்லி, இந்த வேப்பிலையை வச்சி உன்னை அடிச்சி, அப்புறம் மஞ்சள் தண்ணியை உன் முகத்தல தெளிக்கணும்..” 

 

“ம்ம்.. அப்புறம்?.” என சுவாரசியமாக கேட்டான் சயந்தன்..

 

ஏனோ அஞ்சலி செய்வதை நினைத்து சிரிப்பு தான் வந்தது அவனுக்கு.. 

 

“வேப்பிலையை வச்சி உச்சந்தலையில இருந்து உள்ளங்கால் வரைக்கும் அடிச்சி, இந்த மஞ்சள் தண்ணியை உன் மூஞ்சில தெளிச்சி விடணும்.. அப்புறம் கோமியத்தை குடிச்சிடணும்..” என அஞ்சலி சொல்லி முடித்த கணம், 

 

“உவ்வேக்க்க..” என முகத்தை சுழித்தனர் அப்ரண்டீஸ் இருவரும்.. 

 

“கோமியமா?.. அப்படின்னா, ஏதாவது கசாயமா?..” என்றான் சயந்தன்.. 

 

அவன் அறியப்படாத வார்த்தை என்பதால், அவனுக்கு எதுவும் விளங்கவில்லை.. 

 

“கசாயம் இல்லை மாட்டு மூத்திரம்..” என்றார் சந்தோஷ்.. வேண்டா வெறுப்பாக, 

 

“மம்ம்மிஈஈ..” என பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்தான்..

 

ஓரக்கண்ணால் அஞ்சலியைப் பார்த்துக் கொண்டே, 

 

“மம்மி.. இப்போ எனக்குள்ள இருக்கிற பேயை விரட்ட ஒரு வழி இருக்கு.. சொல்லவா?..” 

 

“ம்ம்.. சொல்லு..” 

 

“மினுக்.. ஜிலுக்.. இரவுக்கு ஏற்பாடு பண்ணு.. அப்போ தான் எனக்குள்ள இருக்கிற பேய் ஓடிப்போகும்....” என அஞ்சலி கையிலிருந்த வேப்பிலையால் அஞ்சலியின் தலையிலேயே ஓங்கி அடித்தான்.. 

 

“மினுக்கு.. ஜிலுக்கு.. இரவாஆஆ.. அப்படின்னா என்ன டா?..” என அவனிடமே பதில் கேட்டார் அஞ்சலி.. 

 

“அப்படின்னா.. என்னன்னு தெரியாதா?.. அதான் மொத ராத்திரி..” 

 

“ஏது.. மொத ராத்திரியா?.. அதெல்லாம் முடியாது.. நான் பொண்ணுக்கு எங்கே போவேன்?..” 

 

“அதான் எனக்குன்னு ஒருத்தி இருக்காளே, அவளைக் கூப்பிடுங்க..” என்றான் அசால்ட்டாக, 

 

“அது ஒன்னும் பொண்டாட்டி இல்லை.. உன் தங்கச்சி..” 

 

“மொத ராத்திரி.. கடைசி ராத்திரின்னு, என் பொண்ணை ஏதாவது பண்ணு.. அம்புட்டு பயல்களுக்கும்.. சோத்துல விஷத்தை வச்சிருவேன்..” என மஹா கோபத்துடன், சந்தோஷை அழைத்துக் கொண்டு வெளியே சென்றார்.. 

 

“அச்சோஓஓ.. இந்தப் பய கிட்ட நம்மளை ஒத்தையில விட்டுட்டுப் போயிட்டாளே.. பாதகத்தி.. நல்லா இருப்பீயா?.. நாளைக்கு பாத்ரூம்க்குள்ள தான் இருப்ப?..” என சாபமிட்டு திரும்பியவரை பின் பக்கமாக இருந்து அணைத்துக் கொண்டான் சயந்தன்.. 

 

அவ்வளவு தான்.. வீடே அதிரும் வண்ணம் வீலென்று அலறி விட்டார் அஞ்சலி.. 

 

“ச்சை.. யம்மாஆஆ, நான் தான்.. உன் புள்ள..” 

 

“நீயா டா?.. நாசமத்துப் போறவனே.. இப்படியா பின்னாடி வந்துக் கட்டிப்பிடிப்ப?..” என திட்டிக் கொண்டே, அறையை விட்டு வெளியே செல்ல முயன்ற அஞ்சலியின் கையைப் பிடித்து நிறுத்தினான் சயந்தன்.. 

 

திடீரென்று தன்னைப் பிடித்திருந்த கைகளை பீதியுடன் பார்த்துக் கொண்டே திரும்பினார் அஞ்சலி.. 

 

“இங்கே பாரு.. நீ உன் சொந்த தங்கச்சியை கல்யாணம் பண்ணியிருக்கான்.. இதெல்லாம் ஊரு, உலகத்துல தெரிஞ்சா எவ்வளவு அசிங்கம் தெரியுமா?.. வீட்டுல எல்லாரும் நாண்டுக்கிட்டுத் தான் சாகணும்.. அதுனால தான் ஜோசியரைப் பார்க்கப் போனேன்.. 

 

அவன் தான் சொன்னான்.. உன் உடம்புக்குள்ள வசிய யக்ஷன் இருக்குன்னு.. நீ பழி வாங்கணும்னா, அந்த ஜோசியக்காரனைத் தான் பழி வாங்கணும்.. நான் வேணும்னா அட்ரஸ் தரவா?..” என ஜோசியரைப் போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார் அஞ்சலி.. 

 

அவ்வளவு நேரம், விளையாட்டாக சிரித்துக் கொண்டிருந்த சயந்தனின் முகம் இறுகியது.. 

 

“சோ.. உங்களுக்கு நான் இப்போ மட்டுமில்லை.. எப்பவும் பெருசில்லை.. எப்பவும் யாதிரா.. யாதிரா.. யாதிரா மட்டும் தான். அவளைத் தான்டி எதையும் யோசிக்க மாட்டீங்க.. அப்புறம் எதுக்கும்மா என்னைப் பெத்தீங்க?..” என கேட்டவனைக் கண்டு சர்வமும் நடுங்கிப் போனது அஞ்சலிக்கு.. 

 

“நான் ஏன் பெத்தேன்னா கேட்குற?..” என கேட்கும் பொழுதே, அவரின் விளையாட்டுத் தனங்கள் எங்கேயோ சென்று விட்டது. 

 

“ஆமா ம்மா.. உங்களை பார்த்தாலே, சம்டைம் எரிச்சலாகுது.. நீங்க என்ன குழந்தையா?.. சில்லியா பிகேவ் பண்ணிட்டு சுத்துறீங்க?.. ஒரு பெரிய பிசினஸ்மேனோட பொண்டாட்டி.. ஒரு போலீஸ் ஆபீசரோட அம்மா.. 

 

என்னைப் பார்த்தாலே அவன் அவன் ஸ்டேஷன்ல பயந்து நடுங்குவாங்க.. என் மூஞ்சியில கோமியம் அடிப்பீங்களா நீங்க?.. இன்னொரு தடவை இந்த மாதிரி கோமாளித்தனம் பண்ணிட்டு சுத்துனீங்க?.. அம்மான்னு கூட பார்க்க மாட்டேன்.. அசிங்கமா திட்டிருவேன்.. போ ம்மா.. என் மூஞ்சியிலேயே முழிக்காதே..” என திட்டிவிட்டு கதவை டமாரென்று அடித்துச் சாத்திட, 

 

அவ்வளவு நேரம் திரண்டு நின்றிருந்த கண்ணீர், கன்னத்தில் கோடாய் இறங்கியது.. 

 

அழுகிறாள்.. பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அழுகிறாள்.. 

 

அழுதுக்கொண்டே உள்ளே நுழைந்த அஞ்சலியைக் கண்டு பாவமாகிப் போனது கெளதமிற்கு.. 

 

எப்பொழுதும் ஏதாவது கிறுக்குத்தனம் செய்து, சயந்தனிடம் திட்டு வாங்குவது தான் என்றாலும், அஞ்சலியின் அழுகையை தாங்கிக் கொள்ளத்தான் முடிவதில்லை.. 

 

அஞ்சலி சாதாரணமாக அழும் பெண்ணில்லை.. தாங்கிக் கொள்ள முடியாத வேதனை என்றால் மட்டுமே கண்ணீர் வருமே.. 

 

“என்னாச்சி டி?..” என்றார் கனிவாக, 

 

“இன்னும் என்னவாகணும்?.. அவன் என்னைத் திட்டிட்டான்..”

 

“சரி..” என்றார் கெளதம்.. 

 

“என்னை ரொம்ப அசிங்கமா திட்டிட்டான்..” என்றதும், கண்களை சுருக்கினார் கெளதம். 

 

“அசிங்கமான்னா, ஏதாவது பேட் வார்ட்ஸ் சொல்லியா?..” என கேட்கும் போதே அவரின் முகம் இறுகியது.. 

 

கெளதமின் இறுகிய முகத்தைப் பார்த்ததுமே, சட்டென்று தன் கண்களை துடைத்துக் கொண்டார்.. 

 

சயந்தன் சொன்னதையெல்லாம் இங்குச் சொல்ல முடியாதே.. வெட்டுக்ககுத்தில் போய் முடிந்து விடுமே.. அந்தப் பயத்தில் கப்பென்று தன் வாயை அடைத்துக்கொண்டார்.. 

 

“இல்லை.. அப்படி சொல்லலை.. உங்களுக்கு எப்பவும் யாதிரா, யாதிரா, யாதிரா மட்டும் தானா?..  அப்போ எதுக்கு என்னைப் பெத்தீங்க?..” ன்னு கேட்டான்..” என அழுதுக் கொண்டே சொன்னவரை ஆறுதலாக அணைத்துக் கொண்டார் கெளதம்.. 

 

“சரி விடு டி.. அவன் நீ பண்ணுன கூத்துல அப்படிச் சொல்லியிருப்பான்..” என அஞ்சலியின் தலையை வருடிவிட்டார்.. 

 

“கெளதம்..” என்றார் கரகரத்த குரலில், 

 

“என்ன டா, ஆச்சி.. எதையாவது உள்ளுக்குள்ள  போட்டு தவிக்குறீயா?..” என பிசிறு தட்டிய அஞ்சலியின் குரலை வைத்தேக் கண்டுப் பிடித்தார்.. 

 

“அப்பாவை பார்க்கணும் போல இருக்கு.. போய் பார்த்திட்டு வரவா?..” என கேட்ட அஞ்சலியின் தலையை வாஞ்சையாக தடவி விட்டார் கெளதம்.. 

 

அவருக்கும் அஞ்சலியுடன் சேர்ந்து, ஊருக்குச் செல்ல ஆசை தான்.. 

 

ஆனால் அவரின் ஈகோவும், அந்த ஊரில் அவர் பட்ட அவமானமும் அங்கே செல்ல இடம் கொடுக்கவில்லை.. 

 

“எப்பவும் போல ரெண்டு பேரும் சேர்ந்தே போறோம்.. நான் ஊர் எல்லையில நிக்கிறேன்.. நீ அப்பாவை பார்த்துட்டு வா..” 

 

“ம்ம்..” என கெளதமின் நெஞ்சில் தலைசாய்த்துப் படுத்தார் அஞ்சலி.. அவரின் தலையை வருடிக் கொடுத்தார் கெளதம்.. 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top