வஞ்சகன் - 19

 

(@madhusha-novels)
Member Moderator
Joined: 6 months ago
Messages: 29
Thread starter  

அத்தியாயம் 19

 

ஹாஸ்பிட்டலை விட்டு வெளியே வந்த சந்தனமல்லி, ப்ரணவ்வை பார்த்து சன்னமான சிரிப்பொன்றை உதிர்த்தவர், 

 

“நான் போயிட்டு வர்றேங்க.. அவரைக் கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க.. ரொம்ப கோபப்படுறார்..” என சொல்லிக் கொண்டே முன்னே செல்ல, ப்ரணவ் வேகமாக ஓடி வந்து மல்லியின் முன்பாக நின்றார்..

 

“என்ன?..” என்பது போல், அவர் பார்க்க.. 

 

“வாங்க, நான் உங்களை வீட்டுல ட்ராப் பண்றேன்..” என்ற ப்ரணவ்வை ஒற்றைப் புருவம் உயர்த்திப் பார்த்த சந்தனமல்லி, சிறு சிரிப்புடன் 

 

“நான் கார்ல தான் வந்திருக்கேன்..” என்றதும், ப்ரணவ்வின் முகம் சட்டென்று வாடிப் போனது..  

 

“ஓஹ்.. கார் ஓட்ட தெரியுமா?..” 

 

“ம்ம்.. ஆமா, நானும் அஞ்சலியும் தான் கார் ஒட்டப் பழகுனோம்..” என்றார்.. 

 

“ஓஹ்.. அஞ்சலியும், நீங்களும் ரொம்ப க்ளோஸ் போல..” 

 

“ஆமா, நானும் அவளும் ஒரே ஊரு.. அஞ்சலி அப்பா பெரிய பணக்காரர் எங்க ஊர்லேயே.. அவுங்களுக்கு சொந்தமா, நகைக்கடை, ஜவுளிக்கடை, தோப்பு தொறவுன்ன ஏகப்பட்டது இருந்தது.. நானும் அவளும் சின்ன வயசுல இருந்தே ஒரே க்ளாஸூ.. ஒரே காலேஜ்.. அப்புறம் கெளதம் அண்ணா..” என இழுத்தவள், ஒரு கணம் நிறுத்தி,  

 

“ஹிஹி.. நான் இப்படித்தான் பேசுனா, பேசிட்டே இருப்பேன்.. நான் போயிட்டு வர்றேன்..” என காரில் ஏறியமர்ந்தவள், ஒரு கணம் திரும்பி ப்ரணவ்வைப் பார்க்க.. 

 

அவரின் முகமோ பூவாய் மலர்ந்து, “பை..” என்றார் சிறு பிள்ளை போல, 

 

“பை..” என அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டே, வண்டியை எடுத்துக் கொண்டுச் சென்றார் சந்தனமல்லி.. 

 

அவர் சென்றதுமே வேகமாக தன் காரை எடுத்துக் கொண்டு யாதிராவின் வீட்டிற்கு சென்றார் ப்ரணவ்..  

 

வீட்டிற்குள் நுழைந்த ப்ரணவ் கண்டது நன்றாக உறங்கிக் கொண்டிருந்த யாதிராவைத் தான்..

 

அவளைப் பார்க்கும் பொழுதே பாவமாக இருந்தது.. 

 

அவன் இவளை மனைவி என மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்கிறான்.. 

 

இவள் எந்த உறவிலுமே அவனை வைத்துப் பாரக்க மறுக்கிறாள்.. 

 

எப்படி முடியும்?.. 

 

இதுநாள் வரை அண்ணன் என்ற உறவில் இருந்தவன், இனி கணவன் என்ற உறவில் வைத்துப் பார்க்க வேண்டுமென்றால் எப்படி முடியும்?.. 

 

“யாதிராஆ..” என சத்தமாக அழைத்தான்.. 

 

படுக்கையில் படுத்திருந்தவள், மெல்ல எழுந்து வாசலைப் பார்க்க, அங்கு ப்ரணவ்வைப் பார்த்து கண்களை சுருக்கினாள்... 

 

“இவர் எங்கே இங்கே?..” என கண்களை கசக்கிக் கொண்டு அறையின் வாசலில் வந்து நின்றாள்.. 

 

“என் கூட கொஞ்சம் ஹாஸ்பிட்டல் வரைக்கும் வந்துட்டுப் போறீயா?..” 

 

“எதுக்கு?..” 

 

“அது..” என ஒரு கணம் தயங்கியவர், “சயந்தன் ரொம்ப ஆர்ப்பாட்டம் பண்றான்?.. குளுக்கோஸ் கூட எடுத்துக்க மாட்டேங்குறான்.. அவனுக்கு ஏதாவது ஆகிடுமோன்று பயமா இருக்கு.. நீ கொஞ்சம் வந்துட்டுப் போனா..” என அவர் இழுக்க, 

 

“வந்துட்டுப் போனா..” என்றாள் அலட்சியமாக, 

 

அவளின் அலட்சியமான பேச்சு, ப்ரணவ்வை கண்கள் சுருங்க வைத்தது.. 

 

அவளுக்கு ஆரம்பத்தில் இருந்தே ப்ரணவ்வைப் பிடிக்காது.. ஏனோ அவரைப் பார்த்தாலே ஒரு ஒட்டுதல் இல்லாத தன்மை வந்து விடும்.. 

 

எப்பொழுதும் சயந்தன் கூடவே சுற்றியதாலோ, என்னவோ?.. இவரைக் கண்டாலே அவளுக்கு ஆகாது.. 

 

“அவனை நீ பார்த்தா போதும், அமைதியாகிடுவான்.. ஒரு ரெண்டு நாள்.. அவன் ஹாஸ்பிட்டல் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதுக்கப்புறம் நான் பார்த்துப்பேன்..” என்றவரை ஏற இறங்கப் பார்த்தவள், 

 

“நீங்க அவனுக்கு முறையில மட்டும் தான் மாமாவா?.. இல்லை நிஜத்துலையும்..” என சொல்லி முடிப்பதற்குள், அவளின் கன்னத்தில் செவிப்பறை கிழியும் வண்ணம் ஒரு அறை விழுந்தது.. 

 

யாதிரா திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க.. அங்கு அனல் கக்க நின்றிருந்தான் சயந்தன்.. 

 

ப்ரணவ் சென்ற பின்னும், அவனால் அங்கு இருக்க முடியவில்லை.. டாக்டரிடம் கூட சொல்லாமல், கொள்ளாமல் ஓடி வந்து விட்டான்.. 

 

அவன் மாடிப்படியேறும் போது, ப்ரணவ் பேசியது அனைத்துமே கேட்டது.. 

 

“இந்த மாமாவுக்கு அறிவே இல்லை.. அவக்கிட்ட கெஞ்சிக்கிட்டு.. வாடி ன்னா, வரப்போறா..” என முணுமுணுத்துக் கொண்டே மேலேறி வந்தவனின் காதில் யாதிரா சொன்ன வார்த்தைகள் தப்பாமல் விழ, விட்டான் ஒரு அறை.. 

 

போலீஸ்காரனின் அடியல்லவா.. கன்னம் பண் போல் வீங்க ஆரம்பித்தது.. 

 

ஒரு பக்க கன்னத்தை வலியில் பிடித்துக் கொண்டு, அவன் அடித்த அடியிலேயே மிரண்டு விட்டாள்.. 

 

“என்னடி வாய் ரொம்ப நீளுது.. இன்னொரு தடவை என் மாமாவை தப்பா பேசுன, அப்படியே பூமிக்குள்ள உன்னை புதைச்சிடுவேன்..” என்றவனின் இறுகிய சிவந்த முகம் யாதிராவை அச்சுறுத்தியது.. 

 

“டேய்ய்ய்.. என்னடா பண்ணிட்டு இருக்க?..” என பதட்டமாக கேட்ட ப்ரணவ்வைத் தாண்டி, சயந்தனின் கன்னத்தில் சப்பென்று ஒரு அறை விழுந்தது.. 

 

கொண்டைச்சேவலைப் போன்று சிலிர்த்து எழுந்த சயந்தன் பார்த்தது என்னவோ கெளதமை தான்.. 

 

அவரைப் பார்த்ததுமே, சட்டென்று கோபம் அடங்கியது.. 

 

“என்ன, என் பொண்ணு மேலேயே கை வைக்கிற?.. பையன்னு கூட பார்க்க மாட்டேன்.. கொன்னு குழியிலே இறக்கிடுவேன் பார்த்துக்க..” என ஒரு விரல் நீட்டி எச்சரித்தவர், யாதிராவின் அருகில் சென்றார்.. 

 

கன்னத்தோடு ஒட்டியபடி பிடித்து வைத்திருந்த அவளின் கைகளை விலக்கிப் பார்த்தார்.. 

 

அப்படியே சயந்தனின் கைத்தடம் விழுந்திருந்தது.. 

 

கண்கள் சிவந்தது கெளதமிற்கு.. 

 

“அரக்கன்.. அரக்கன்..” என முணுமுணுத்துக் கொண்டே, அங்கிருந்து யாதிராவை அழைத்துக் கொண்டுச் சென்றார் கெளதம்.. 

 

சந்தோஷ், மஹாலெட்சுமி , அஞ்சலி என யாருமே அங்கில்லை.. 

 

மனம் சஞ்சலமாக இருந்ததால், யாதிராவை உறங்க வைத்து விட்டு கோவிலுக்குச் சென்றிருந்தனர்.

 

கெளதம் மட்டுமே யாதிராவின் காவலுக்கு இருந்தார்.. 

 

“நீ வாடா..” என யாதிராவை காரில் அழைத்துக் கொண்டுச் செல்வதை ஜன்னல் வழியாக ப்ரணவ்.. சயந்தன் இருவருமே பார்த்தனர்.. 

 

“உனக்கு ஏன்டா, இந்த வேண்டாத வேலை?.. ஹாஸ்பிட்டல்ல நீ அமைதியா இருந்திருந்தா, நான் இந்தப் பேச்சு வாங்கியிருப்பேனா?..” என்றார் ப்ரணவ்.. 

 

அவருக்கு மனதே தாங்கவில்லை.. வலித்தது.. 

 

ஆனால் வெளியேக் காட்டிக் கொள்ள முடியவில்லை.. 

 

அங்கே நாலு சுவத்தைப் பார்க்க முடியாம தான் மாமா இங்கே வந்தேன்.. இவ மூஞ்சியைப் பார்த்தாலே போதும்னு.. ஆனா இவ.. கொஞ்ச நஞ்சா பேச்சா, பேசுறா.. பஜாரி மாதிரி பேசுறா.. ச்சை.. ஏன் தான் கல்யாணம் பண்ணோம்னு இருக்கு மாமா.. என்றவனை இடுப்பில் கை வைத்து முறைத்தார் ப்ரணவ்.. 

 

அவரின் முறைப்பில் கள்ள முழி முழித்தான் சயந்தன்.. 

 

“ஏன்டா, அந்தப் புள்ளையை டார்கெட் பண்ணி கல்யாணம் பண்ணிட்டு, என்னமோ ரொம்பத்தேன் சலிச்சிக்கிற?.. மைனர் புள்ளையை கல்யாணம் பண்ணதை மறக்காதே மாப்ள..” என்றார் எச்சரிக்கும் குரலில்.. 

 

“ஆமா, பெரிய மைனரு.. அவ பொறந்ததே எனக்குத் தான் மாமா.. என்னை விட்டா, யார் இருக்கா அவளுக்கு..” என்றவன், கட்டிலில் சென்று அப்படியே மல்லாக்க படுத்தான்.. 

 

“டேய்ய்ய்.. ஹாஸ்பிட்டல் வா டா.. படுத்துட்ட..” 

 

“இனி ஹாஸ்பிட்டல் வர்ற எண்ணமெல்லாம் எனக்கில்லை.. நீ நல்லதா ரெண்டு நர்ஸை ஏற்பாடு பண்ணிட்டுப் போ மாமா..” என்றவன் கண்களை மூடிக் கொள்ள, 

 

“அவ ஒரு பேச்சுக்குத் தான் டா சொன்னா?.. ஆனா நீ உண்மையாவே என்னை மாமாவா ஆக்கிடுவ போல.. எக்கேடோ கெட்டுப் போ..” என முணுமுணுத்துக் கொண்டே சென்றார் அவர்.. 

 

சந்தோஷ், அஞ்சலி, மஹாலெட்சுமி மூவரின் முகத்திலும் ஈயாடவில்லை.. 

 

“என்னடா, இந்த ஜோசியரு இப்படிச் சொல்லிட்டாரு?..” என்றார் மஹாலெட்சுமி.. 

 

“அதானே, இப்போ என்ன பண்றது?.. அவர் சொல்றதையெல்லாம் பண்ண முடியுமா என்ன?..” என்றார் சந்தோஷ்.. 

 

“ஏன்.. ஏன்.. ஏன்.. பண்ண முடியாதுங்கிறேன்.. நாம பண்றோம்..” என சூளுரைத்துக் கொண்டார் அஞ்சலி.. 

 

இரவு பதினோரு மணியளவில் வட்ட மேஜை மாநாடு நடந்தது அஞ்சலியின் வீட்டில்.. 

 

யாதிரா தன்னறையில் உறங்கிக் கொண்டிருந்தாள்.. 

 

சயந்தன் தன்னறயில் உறங்கிக் கொண்டிருந்தான்.. 

 

மீதியிருந்த நான்கு பேரும் உறக்கத்தை தொலைத்து தோட்டத்தில் அமர்ந்திருந்தனர்.. 

 

நீண்ட நேரம் எதையோ யோசித்துக் கொண்டிருந்த அஞ்சலியைப் பார்த்து, கெளதமின் உச்சக்கட்ட பொறுமையும் எங்கோ பறந்துப்போனது.. 

 

“எதுக்கு டி, இப்போ மனுசனை தூங்க விடாம இம்சைப் படுத்துற?.. காலையில உன் பையன் பாடாப்படுத்துறான்?.. இப்போ நீ தூங்க விடமாட்டேங்குறா..” என புலம்பினார் கெளதம்.. 

 

“ஓஹோ.. அப்போ, நம்ம பையன் வாழ்க்கையை விட, உங்களுக்குத் தூக்கம் தான் முக்கியம்.. அப்படித்தானே..” 

 

“ஆமா, எனக்கு தூக்கம் தான் முக்கியம்.. உன் பையன் கொழுப்பெடுத்துப் போய் ஏதாவது செய்வான்.. நான் நைட்டெல்லாம் தூங்காம உட்கார்ந்திருக்கணுமா?..” என கோபமாக எழுந்த கெளதமின் கையைப் பிடித்தாள் அஞ்சலி.. 

 

“ப்ளீஸ், கெளதம்.. ப்ளீஸ்.. எனக்கு என் பையன் வேணும்.. அவன் மேல இருக்கிற பேயை ஓட்டணும்..” என்ற அஞ்சலியை புருவம் சுருக்கிப் பார்த்தவன், 

 

“பேயா?.. என்ன உளறுற?..” 

 

“நம்ம பையன் உடம்புக்குள்ள பேய் இருக்கு.. அதான் அவன் இப்படிக் கூறுகெட்டத் தனமா, என்னவோ பண்ணிட்டுத் திரியுறான்.. இல்லைன்னா, தங்கச்சியைக் கல்யாணம் பண்ணுவானா?..  அவனுக்குள்ள வசிய யக்ஷன் இருக்கா.. அதுனால தான் இப்படி முறைகெட்டுப் போய் திரியுறான்..” என்ற அஞ்சலியை, ஒரு மார்க்கமாக பார்த்தார் கெளதம்.. 

 

‘இன்னைக்கு என்னென்ன கூத்து பண்ணப் போறான்னு தெரியலையே?..” என மனதுக்குள் நினைத்துக் கொண்டே

 

“சோ, இப்போ பேயை ஓட்டுறதுக்கு ஆள் வர்றாங்களா?..” 

 

“ஆள், ஏன் வரணும் கெளதம்?.. அதான் நான் இருக்கேனே..” என்றவளைக் கண்டு வெளிப்படையாக தலையிலடித்துக் கொண்டார் கெளதம்.. 

 

“இங்கே பாரு அஞ்சலிம்மா.. நீ பண்றது எதுவும் சரியில்லை.. பேசாம வா.. நம்ம ரூம்க்குப் போயிடலாம்..” 

 

“மாட்டேன்.. என் பையன் உடம்புக்குள்ள இருக்கிற பேயை விரட்டாம நான் வரவே மாட்டேன்..” என்றவர் வேகமாக வீட்டிற்குள் சென்றார்.. 

 

“எங்கே போறா?..” எனக் கேட்ட கெளதமிற்கு, சந்தோஷ்.. மஹா இருவரும் பதிலே சொல்லவில்லை.. 

 

அமைதியாகவே அமர்ந்துக் கொண்டனர்.. 

 

“ஏன்டா, வாயைத் திறந்தா, உங்க வாய்ல இருக்கிற முத்து எதுவும் கீழே விழுந்துடுமா?..” என எரிச்சலில் கத்தினார் கெளதம்.. 

 

“எங்களை எதுவும் பேச வேண்டாம்னு அஞ்சலி சொல்லியிருக்கா..” என்றார் சந்தோஷ்.. 

 

“உங்களை கெடுக்குறதே அவ தான்.. வரட்டும் அவ..” என சொல்லிக் கொண்டிருக்கும் பொழுத,

 

“கெளதம்..” என அழைத்துக் கொண்டே வந்தார் அஞ்சலி.. 

 

“இவளைய்ய்ய்..” என சலிப்பாக திரும்பிய கெளதம்.. 

 

“அய்யோ.. அம்மாஆஆ.. பேய்ய்ய்ய்ய்ய்..” என அலறியே விட்டான்.. 

 

“அச்சோஓஓ.. கெளதம் நான் தான்.. அஞ்சலி.. உங்க பொண்டாட்டி..” 

 

“என்னடி கோலம் இது?..” என்றார் எரிச்சல் மிகுந்த குரலில், 

 

“ஒஹ். இதுவா?.. ஏன் நல்லாத்தானே இருக்கு..” என்ற அஞ்சலி தன்னையே மேலிருந்து கீழாக ஒரு முறை பார்த்துக் கொண்டார்.. 

 

அடர் மஞ்சள் நிற சேலை அணிந்து, இடை தாண்டிய கூந்தலை விரித்து விட்டிருந்தார்.. 

 

அதற்கும் மேலாக அவர் நெற்றியில் பட்டை தீட்டி, நெற்றியில் வைத்திருந்த குங்குமப்பொட்டு.. சின்ன பொட்டு போன்று வைக்கவில்லை.. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒட்டியது போல நடுவே பளிச் என இருந்தது.

 

குங்குமப் பொட்டை பெரியதாக வைத்திருந்தார்.. போதாக்குறைக்கு, கழுத்தில் மண்டைஓட்டு மாலை வேறு..  

 

பார்க்கவே பயங்கரமான தோற்றத்தில் இருந்தார் அஞ்சலி.. 

 

கையில் வேறு தாம்பூலத் தட்டு இருந்தது.. 

 

பெரிய தாம்பூலத் தட்டில் எதையோ எடுத்துக் கொண்டு வந்தாள் அஞ்சலி.. 

 

அதிலிருந்ததை ஒவ்வொன்றாக எடுத்து டேபிளில் வைத்தாள்.. 

 

“ஆமா என்னதிது?..” என்றார் கெளதம், தன் கண் முன்னால் டேபிளில் வைத்திருந்த பொருட்களை கேள்வியாகப் பார்த்தபடி, 

 

“ஓஹ்.. இதுவா கெளதம்.. ஒரு சொம்பில் இருந்த தண்ணீரைக் கைகாட்டி, இது கோமியம்..” என்றாள் அஞ்சலி.. 

 

“கோமியம் னா.. மாட்டு மூத்திரம் தானே..” என்றார் சந்தோஷம்.. 

 

“அதே தான் சந்தோஷ்.. இது கோமியம்..” 

 

“இது மஞ்சள் தூள், இது விளக்கு, இது வேப்பிலை..” என சொல்லிக் கொண்டே வந்தவள், ஒரு மை டப்பாவைக் கைக்காட்டியவள், 

 

“இது காட்டு முனீஸ்வரர் கோவில்ல வச்சி, 48 நாள் பூஜை பண்ணி வாங்கிட்டு வந்த மை.. இது சயந்தன் தலை உச்சியில வச்சி அரக்குனா.. 

 

“உம் பையனுக்குள்ள காட்டு முனீஸ்வரர் இறங்கிடுவாரோ?..” 

 

“அச்சோ.. இல்ல.. என் பையனை பிடிச்ச பேய் ஓடியேப் போயிடும்..” 

 

“எனக்கென்ன மோ நீ பண்றது எதுவும் சரியாத் தோணலை.. அவன் கிட்ட அடிவாங்காம ரூம் வந்து சேரு..” என கெளதம் செல்ல, அவரின் பின்னால் செல்லப் போன மஹா, சந்தோஷ் இருவரையும் பார்த்து முறைத்த அஞ்சலி, 

 

“யாதிரா உங்கப் பாண்ணு தானே..” என்றாள்.. 

 

“ஆமா..” என்றனர் பாவமாக, 

 

“அப்போ.. ஃபாலோ மீ.. நைட்டு 12 மணிக்கு பேயை ஓட்டுறோம்.. என் பையன் நாளைக்குக் காலையிலேயே யாதிரா கழுத்துல இருக்கிற தாலியை அறுத்துடுவான்..”  என சபதமிட்டவளின் கைகளில் இருந்தது என்னவோ கோமியம் தான்.. 

 

அச்சோ.. பாவம்.. இனி அஞ்சலியின் நிலை.. 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top