அத்தியாயம் 18
தன்னோடு சேர்ந்து நுழைந்த உருவத்தை திரும்பிப் பார்த்தாள் மல்லி என்கின்ற சந்தனமல்லி..
ப்ரணவ்வும் அதே சமயம் திரும்பிப் பார்த்தான்.
திரும்பிப் பார்த்த இருவரின் விழிகளிலுமே ஒரு வித அதிர்வு..
“நீங்க..” என கண்கள் மின்ன கேட்டார் ப்ரணவ்..
“என் ப்ரண்டோட பையனுக்கு உடம்பு சரியில்லை.. இந்த ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கேன்னு சொன்னா, அது தான் வந்தேன்..”
“ஓஹ்..” என்றார்..
“நீங்க, இங்கே..” என அவரைப் பார்த்துக் கேட்டார் மல்லி..
“ஒரு மடப்பய உள்ளே அட்மிட்டாகி இருக்கான்.. அவனால வேற யாருக்கும் பீபி எகிறிரக் கூடாதுன்னு நான் வந்திருக்கேன்..” என்றவரின் பேச்சில் மென் சிரிப்பு மல்லியிடம்..
மல்லியின் சிரிப்பைப் பார்த்த ப்ரணவ்வின் உதட்டிலும் சிறு சிரிப்பு..
“என்னங்க நீங்க, என் கஷ்டத்தை சொல்லுறேன்.. சிரிக்குறீங்க?..” என்றார், மல்லியிடம் இன்னும் பேச்சை வளர்க்க வேண்டுமென்று,
அதை அறியாத மல்லியோ, “அச்சோ அப்படி இல்லைங்க, நீங்க சொன்ன விதம் சிரிப்பு வந்திருச்சு.. ரியல்லி சாரி..” என கண்கள் மின்ன மன்னிப்பு கேட்டார்..
“இதுக்கு எதுக்குங்க சாரி எல்லாம்?.. நான் சும்மா விளையாட்டுக்குத் தான் சொன்னேன்.. உண்மையாவே அவனால் யாருக்கும் பீபி வந்துடக்கூடாதுன்னு நான் வந்திருக்கேன்..” என்றவர் பேசிக் கொண்டே, சயந்தன் இருந்த அறைக்கு முன்பாக வந்து நின்றான்..
அதே சமயம், மல்லியும் அதே அறைக்கு முன்பாகத் தான் வந்து நின்றாள்..
இருவரும் ஒருவரையொருவர் புரியாமல் பார்த்துக் கொண்டனர்..
“நீங்க, இங்கே..” என இழுத்தார் ப்ரணவ்..
“என் ப்ரண்ட் பையன்.. இங்கே தான் அட்மிட்டாகியிருக்கான்.. அவ இந்த ரூம் நம்பர் தான் சொன்னா?..”
“என் மாப்பிள்ளையும் இங்கே தான் இருக்கான்..” என்றவர், ஒரு கணம் நிறுத்தி,
“ஆமா அவன் பேர் என்ன?..”
“சயந்தன்..” என்றார் மல்லி..
“போச்சிடா.. அவனைத் தான் நானும் பார்க்க வந்தேன்..”
“ஓஹ்.. நீங்க தான் அவர் மாமாவா?..”
“ம்ம்.. ஆமா.. நீங்க அஞ்சலிக்கு ப்ரண்டா?..” என்றார் ப்ரணவ்..
“ம்ம்.. ஆமா..” என்றவள், கதவை லேசாக தட்டிட,
“பார்த்துங்க.. கதவுக்கு வலிக்கப் போகுது..” என்றார் ப்ரணவ் சற்று கிண்டல் தொணியில்,
“ம்ம்..” என இடுப்பில் கை வைத்து, அவனை திரும்பிப் பார்த்து முறைத்தார் சந்தனமல்லி..
மறுபடியும் அவள் கதவை தட்டப் போக,
“அட நீங்க வேற.. நாம கதவை தட்டுறோம்னு தெரிஞ்சா, முழிச்சேக் கிடந்தாலும், ம்ம் னு ஒரு வார்த்தை சொல்லமாட்டேன்.. க்ராதகன்..” என கதவை தள்ளிக் கொண்டு, மல்லியையும் சேர்த்து இழுத்தபடி உள்ளே நுழைந்தார் ப்ரணவ்..
போனை நோண்டிக் கொண்டிருந்த சயந்தன் ஒரு கணம் தலையை உயர்த்தி, சந்தனமல்லியையும், ப்ரணவ்வையும் மாத்தி மாத்திப் பார்த்தவன்,
“என்ன மாமோய்ய்ய். வரும் போது அத்தைக் கூட வர்ற?..” என்றதும், ப்ரணவ் ஒரு கணம் அதிர்ந்து, மல்லியை விட்டு இரண்டெட்டு தள்ளி நின்றார்..
“பார்றா.. பம்முறதை.. ஆயிரம் தான் சொல்லு மாமோய்ய்ய்.. இவுங்க அழகுக்கு முன்னாடி நீ ஒன்னுமேயில்லாம போயிடுற?.. உனக்கு இப்படி ஒரு நச்சு பீகர் கிடைக்கணும்னு விதி இருக்கு போல..” என கிண்டலாக சொன்னவன், மல்லியை திரும்பிப் பார்த்தான்..
அவர் வலது கையையும், இடது கையையும் மாறி மாறிப் பார்த்தவனை புரியாமல் பார்த்தார் சந்தனமல்லி..
“என்னாச்சி?..” என்றார் மல்லி சிறு தயக்கத்துடனே,
அவன் எதுவுமே கூறாமல் ப்ரணவ்வை பார்த்தான்.. அவர் கையையும் மாற்றி மாற்றிப் பார்த்தான்..
“என்னடா பண்ணுற?.. கைல என்ன இருக்கு?..” ப்ரணவ் சற்று காட்டமாக கேட்க,
“அதான் ஒன்னுமில்லையே.. உங்க ரெண்டு பேருக்கும் மூளைன்னு ஒரு இருக்கா?.. இப்படி ஹாஸ்பிட்டல்ல அட்மிட்டாகி இருக்கிறவனை வெறுங்கையோட பார்க்க வருவீங்களா?.. உங்களுக்கெல்லாம் மூளை முணு கிராம் அளவாது இருக்கா?..” என்றவனை அதிர்ந்துப் பார்த்தனர் இருவரும்..
அவன் நெஞ்சில் வழிந்த ரத்தத்தைப் பார்த்த சந்தனமல்லிக்கு வேற எதுவும் தோன்றவில்லை..
அவனுக்கு என்னவானதோ என பதறி, அபிஜித்திடம் விபரத்தைக் கூறிவிட்டு, நேராக இங்கே வந்து விட்டார்..
“பின்னே, இருந்திருந்தா.. ஒரு பேஷன்ட்டை பார்க்க வர்றோமோ, ஒரு ஹார்லிக்ஸ், பூஸ்ட், ஆப்பிளு, ஆரஞ்சு.. அதெல்லாம் விடுங்க சாமி.. ஒரு சாத்துக்குடி ஜூஸ் வாங்கிட்டு வரணும்னு தோணிச்சா உங்களுக்கு.. நாக்கெல்லாம் வறண்டுப் போய்க்கிடக்கு..
எனக்கு பொண்டாட்டின்னு ஒருத்தி வந்திருக்காளே, அட அடா.. அவ்வளவு அருமையான பொண்டாட்டி.. நான் செத்தேன்னா.. முதல்ல மாலை போடுறது அவளாத் தான் இருக்கும்..” என தன் போக்கில் புலம்பியவன், தன் முன்னே இருந்த இருவரையும் பார்த்து முறைத்துக் கொண்டே,
“வந்திருக்கீங்க பாருங்க ரெண்டும் கையை வீசிக்கிட்டு,ஜோடியா..” என்றதும், மல்லி திருதிருவென முழிக்க.. ப்ரணவ்வோ தலையில் வெளிப்படையாக அடித்துக் கொண்டார்..
“ஏன்டா, நீ என்ன சோத்துக்கு செத்தவனா, ஆப்பிளு, ஆரஞ்சுன்னுட்டு கிடக்க.. நான் அவசரத்துல ஓடிவந்துட்டேன் டா.. அடுத்த தடவை வரும் போது வாங்கிட்டு வர்றேன்..”
“சரி.. சரி.. நீ வாங்கிட்டு வரலைன்னாலும் பரவாயில்லை.. என் பொண்டாட்டியை ஒரு பத்து நிமிஷம் உள்ளே அனுப்பி வை.. அவ சிடுசிடுன்னு இருக்கிறதைப் பார்த்தா மனசு ஒரு மாதிரி குளுகுளுன்னு இருக்கும்.. போ மாமா.. அவளை வரச் சொல்லு.. மயக்க மருந்துக் கொடுத்தேன்னு சொன்னானுங்க, மயக்கமே வந்துத் தொலைய மாட்டேங்குது.. ஒரு வேளை டூப்ளிகேட் டாக்டரோ?..”என்றவனைக் கண்டு மற்றவர்கள் அதிர்ந்து நிற்க,
“என்ன மாமா, இப்படி சிலை மாதிரி நிற்கிற?.. போய் என் பொண்டாட்டியை வரச்சொல்லு..” என்றான் சயந்தன் கோபத்துடன்,
“இல்லை டா.. அவ வீட்டுக்குப் போயிட்டா..” என சொல்லி முடிக்கவில்லை.. கையில் ஏறிக் கொண்டிருந்த ஷிலானை பிய்த்து எறிந்தவன், தொங்கிக் கொண்டிருந்த குளூக்கோஸ் பாட்டிலை எடுத்து, தரையில் விசிறியடிதத்தான்..
“என்ன மயி**க்கு அவ வீட்டுக்குப் போனா?.. யாரைக் கேட்டுப் போனா அவ?.. புருஷன்காரன் சாவாம செத்துக் கிடக்கானே, அவனுக்கு பக்குவமா, பக்கத்துல இருந்து பார்த்துப்போம்னு அக்கறை வேணாம்..” என ஹாஸ்பிட்டலில் ஸ்பீக்கர் கட்டிவிட்டதைப் போல் கத்த,
“நீதான் அவளை வெளியே போ ன்னு சொன்னீயாம்.. அக்கா சொல்லிட்டு அழைச்சிட்டுப் போனா..”
“வெளியே போ ன்னு தான் சொன்னேன்.. வீட்டுக்குப் போ ன்னா சொன்னேன்.. எனக்கு வந்து வாச்சிருக்குப் பாரு..” என சிடுசிடுத்துக் கொண்டேயிருந்தவனின், நெஞ்சில் சிறு ரத்தத்துளிகள் வெளியேற ஆரம்பித்தது..
“டென்சன் ஆகாத டா.. ரத்தம் வருது பாரு..”
“பக்கத்துல வந்தா, உன் கழுத்தை அறுத்துப் போட்டுருவேன் மாமா.. தள்ளிப் போயிடு..” என ஆங்காரத்தில், அங்குமிங்கும் நடை போட,
அப்பொழுதும் கோபம் தணியாமல், டேபிளின் மேல் வைத்திருந்த மாத்திரை, மருந்துகளை தட்டி விட்டான்..
அவன் ஆடிய ஆட்டத்தில் சந்தனமல்லி பயந்து ப்ரணவ்வின் பின்னே ஒளிந்துக் கொண்டார்..
“டேய்ய்ய்.. நிறுத்தித் தொலை டா..” என சயந்தனை நெருங்க முயன்ற ப்ரணவ்வின் சட்டையை யாரோ பற்றி இழுப்பது போல் தோன்றிட, சட்டென திரும்பிப் பார்த்தார்..
சந்தனமல்லி தான் பயத்தில், அவரின் இடை சட்டையை அழுத்தமாக பற்றியிருந்தார்..
“போகாதிங்க.. பயமா இருக்கு.. எதையாவது தூக்கி அடிச்சிடப் போறான்..” என அவள் கண்கள் மிரண்டு முழிக்க,
“அச்சோ..” என்றானது ப்ரணவ்விற்கு..
அவருக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.. எத்தனை ரவுடிகளை துவம்சம் செய்திருப்பார்..
இவனெல்லாம் ஒரு ஆளா?.. என்று தான் தோன்றியது..
மல்லிக்கு அப்படியில்லை.. உடல் நடுங்க, கண்கள் மிரள, சயந்தனையே மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்..
அவன் நின்றக் கோலம் அவரை அலற வைத்தது..
“இங்கே பாரு மாமாஆஆ.. இப்போ நீ போய்.. என் பொண்டாட்டியை அழைச்சிட்டு வர்ற.. இல்லை..” என்றவனின் பார்வை சந்தனமல்லியின் மீது அழுத்தமாக பதிய, நடுங்கியே விட்டார் மல்லி..
“ஹாஸ்பிட்டல்ல உடம்புக்கு முடியாதவனை பார்க்க வந்தது ஒரு குத்தமாடா..” என்பதை போல், அவர் ப்ரணவ்வை முறைக்க, அவரின் முறைப்பில தலைகோதி அமைதியாக நின்றார் ப்ரணவ்..
“ஏதாவது பண்ணி என்னை வெளியே அழைச்சிட்டுப் போயிடுங்க..” என ப்ரணவ்வின் காதோரம் கிசுகிசுக்க,
“சரி டா.. நான் போய் யாதிராவை அழைச்சிட்டு வர்றேன்.. அதுவரைக்கும் அமைதியா இரு.. ஹாஸ்பிட்டல் பொருளை உடைக்கிறீயே, உங்கப்பனா வந்து காசுக் கொடுப்பான்?..”
“ஏன்.. என்னத்துக்கு என் அப்பன் காசு கொடுக்கணும்?.. மாமா ன்னு நீ என்னத்துக்கு இருக்கிற?..”
“இதுல எல்லாம் குடும்பமே தெளிவாத்தான் டா இருக்கீங்க, என் காசை கரியாக்குறதுல உனக்கு எவ்வளவு ஆர்வம்..” என சிடுசிடுத்தாலும், அவனின் மீது அளப்பரிய அன்பு உண்டு அவருக்கு..
அதை எக்காலமும் அவர் மறுக்க முடியாதே..
அவனிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே, சந்தனமல்லியை நைசாக வெளியே அழைத்து செல்ல முயன்றிட
“நில்லு..” என்றான் சயந்தன் கர்ஜனையாக,
“அதான் யாதிராவை அழைச்சிட்டு வர்றேன்னு சொல்லிட்டேனே, அப்புறம் என்ன டா?.”
“நீ மட்டும் போ.. அத்தை இங்கே இருக்கட்டும்..” என்றவனைக் கண்டு பீதியாகிப் போனார் மல்லி..
“ந்நா. ந்நான்ன்.. இங்கே இருக்கணுமா?.. அய்யோ வேண்டாம்.. என்னை விட்டுப் போயிடாதிங்க.. ப்ளீஸ் எனக்கு அவரைப் பார்த்தாலே பயமா இருக்கு.. நான் ரத்தம் னாலே பயந்துடுவேன்..” என ப்ரணவ்வின் முழங்கையை அழுத்தமாகப் பற்றிக் கொண்டார் மல்லி..
“இங்கே பாரு, யாதிரா நான் அழைச்சிட்டு வர்ற வரைக்கும், உங்க அம்மாவை..” என ப்ரணவ் இழுக்க,
“யோவ்வ்வ்.. அவுங்களை மட்டும் உள்ளே விட்ட.. உன்னைக் கழுத்தை நெறிச்சிக் கொன்னுடுவேன் பார்த்துக்கோ.. பேசியே எல்லாரையும் கொல்லுது.. எப்படித்தான் அந்தாளை, அதை வச்சிக் காலம் தள்ளுராறோ, பாவம் தான்..” என புலம்பியவன், சந்தனமல்லியை உறுத்து விழிக்க.. அவரோ ப்ரணவ்வின் பின்னாடியே பம்மியபடி வெளியே சென்று விட்டார்..
அறையை விட்டு வெளியே வந்த பின்பு தான் அவருக்கு மூச்சே வந்தது..
“என்னங்க அவர், இந்த ஆட்டம் ஆடுறாரு?..”
“அவன் எப்பவும் அப்படித்தான்.. எங்களுக்குப் பழகிடுச்சி.. சின்ன வயசுல ருந்தே ரொம்ப அடமண்ட்..” என்றவரை ஏகத்துக்கும் முறைத்த மல்லியை கண்கள் சுருக்கிப் பார்த்த ப்ரணவ்..
“இப்படியே முறைச்சீங்க, ரூம்க்குள்ள தள்ளி கதவை சாத்திடுவேன்..”
“அச்சோ.. வேணாம்ங்க.. அப்புறம் காட்டுக்குரங்கு கடிச்சி வச்சிரும்..” என பயத்துடன் உளறிக் கொட்டியவர், நாக்கைக் கடித்து, அவரைப் பார்க்க..
“ஓஹோ.. இவ்வளவு பயமா அவன் மேல?..”
“இப்படியாங்க மனுசங்க இருப்பாங்க.. இவரை மாதிரி ஒருத்தரை நான் பார்த்ததேயில்லை..”
“எல்லா நேரமும் இப்படியில்லைங்க.. இன்னைக்கு ஏதோ நல்ல மூட்ல இருக்கான் போல.. அதான் கொஞ்சம் அமைதியாக இருக்கான்..” என்றவரை முறைத்துக் கொண்டே வேகமாக வெளியே சென்று விட்டார் சந்தனமல்லி..
போகும் அவரின் முதுகையே வெறித்துப் பார்த்தார் சந்தனமல்லி..
