வஞ்சகன் - 13

 

(@madhusha-novels)
Member Moderator
Joined: 6 months ago
Messages: 29
Thread starter  

அத்தியாயம் 13 

 

“கல்யாணம் ஆன புது ஜோடி நாங்களே சிக்கீரம் வந்துட்டோம்.. நீங்க வர்றதுக்கு இம்புட்டு லேட்டா?.. ” என சிடுசிடுத்தான் சயந்தன்..

 

“நீ எதுக்கு டா இங்கே வந்த?.. அதான் உன்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பிட்டேனே..” என கேட்டபடி உள்ளே நுழைந்தார் கெளதம்.. 

 

“ஹலோ.. என்னைப் பெத்தவரே..” 

 

“சொல்லுங்க..எனக்குப் பொறந்தவரே..” 

 

“நாங்க, இங்கே விருந்துக் கொண்டாட வரலை..” 

 

“பின்னே.. எதுக்கு வந்த?..” 

 

“நான் என்னோட திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டுப் போக வந்தேன்?..” 

 

“உன்னோடது எல்லாம் தான் எடுத்துட்டுப் போயிட்டீயே?.. அப்புறம் இங்கே என்ன இருக்கு?..” 

 

“அப்போ, என் பொண்டாட்டி திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டுப் போக வந்தேன்னு வச்சிக்கலாம்..” என்றான் தோளைக் குலுக்கிக் கொண்டே, 

 

“ரொம்ப சந்தோஷம்.. எடுத்துட்டுப் போய்த் தொலைஞ்சிடு.. அதான் உனக்குன்னு கவர்மெண்ட்ல குவாட்டர்ஸ் கொடுத்திருக்காங்களே, அங்கேயே போயத்தொலை” என்றார் கெளதம்.. 

 

“தொலையணும்னு தான் ஆசை மிஸ்டர்.கெளதம்.. ஆனா என்ன பண்றது?.. நான் போயிட்டா, நீங்க சந்தோஷமா இருப்பீங்களே.. அதுக்காகவே நான் இங்கேயே வந்துடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. உங்க பையனுக்குத் தானே இங்கே இடமில்லை.. உங்க வீட்டு மாப்பிள்ளைக்கு இந்த வீட்டுல இடம் இருக்கு தானே.. வீட்டோட மாப்பிள்ளையா வந்துட்டேன்னு கூட சொல்லலாம்..” என்றான் சகஜமாக, 

 

“ஏதோ பண்ணித் தொலை.. எனக்கு தலைவலிக்குது?.. நான் ரெஸ்ட் எடுக்கிறேன்..” என கெளதம் தன்னறைக்குச் சென்று விட, 

 

அவரின் பின்னாடியே செல்லப் போன அஞ்சலியை தடுத்து நிறுத்தினான் சயந்தன்.. 

 

“கொஞ்சமாவது உனக்கு கூறு இருக்கா மம்மி, இப்படி அப்பா பின்னாடியே போற?.. வந்து உன் மகனையும், மருமகளையும் கவனி..” 

 

“ச்சீ.. இப்படி சொல்லாதே டா.. கேட்கவே நாராசமாக இருக்கு?.” என தன் இரு காதுகளையும் பொத்திக் கொண்டார் அஞ்சலி..  

 

“இருக்கும். இருக்கும்.. கேட்கவே நாராசமா தான் இருக்கும்.. ஆனா என்ன பண்றது?.. கேட்டுத்தானே ஆகணும்.. நான் உன் புள்ள ன்னா.. அவ உனக்கு மருமக தான்.. இப்படியே பிக்ஸ் ஆகிக்கோ.. இப்போ போய் ஏதாவது சாப்பிட கொண்டு வா மம்மி.. செம்ம பசி..” 

 

“வரும் போதே ஏதாவது தின்னுட்ட வர வேண்டியது தானே டா..” 

 

“ஆயிரம் ஹோட்டல் இருந்தாலும், உன் கை ருசிக்கு ஈடாகுமா மம்மி.. ஏதாவது செஞ்சுத் தா..” என்றவர், அப்பொழுது தான் கவனித்தார் யாதிராவை காணும் என்பதை.. 

 

“யாது பாப்பா எங்கே டா?.. அவளும் சாப்பிட்டுருக்க மாட்டால்ல..” 

 

“அவ ரூம்ல இருக்கா..  நீ ரூம்ல போய் சாப்பாடுக் கொடுத்துடு.. நைட்டு வேலை இருக்குல்ல.. அதான், ரெஸ்ட் எடுக்கட்டும்னு விட்டுட்டேன்..” என்றவனை அதிர்ந்துப் பார்த்தார் அஞ்சலி.. 

 

“என்னடா சொல்லுற?.. நைட்டு வேலையா?..” என கேட்கும் போதே முகமெல்லாம் வேர்வைப் பூக்கள் பூத்தது.. 

 

இவன் எதைப் பற்றிப் பேசுகிறான் என நினைக்கும் பொழுதே அவருக்குள் ஒரு வித பயப்பந்து வாயிற்கும், வயிற்றிற்கும் நடுவில் உருண்டுக் கொண்டிருந்தது.. 

 

“ஆமா நைட்டு வேலைதான்.. அதுக்கென்ன இப்போ?..” 

 

“நைட்டு என்ன வேலை?..” என்றவரின் உள்ளமோ, ட்ரம்ஸ் வாசிக்க ஆரம்பித்து விட்டது.. 

 

“மம்மி, என்ன பேசுற நீ?.. நானும் யாதிராவும்.. புருஷன் பொண்டாட்டி.. அதுவும் எங்களுக்கு இன்னைக்குத் தான் கல்யாணம் முடிஞ்சிருக்கு.. அப்போ எனக்கு இன்னைக்கு பர்ஸ்ட் நைட் தானே..” என்றதும், தொப்பென சரிந்து சோபாவில் விழுந்தார் அஞ்சலி.. 

 

அவரைப் பார்த்த சயந்தனின் கண்கள் இடுங்கியது.. 

 

“எதுக்கு இந்த மம்மி ஓவர் ரியாக்ட் பண்ணுது.. காலங்காலமா நடக்கிறது தானே இது..” என நினைத்தவன், நெற்றியை சுருக்கி அஞ்சலியைப் பார்க்க, அவரோ தீயாய் முறைத்தார் அவனை.. 

 

“ஏன்டா, பெத்தவ கீழே விழுறேனே.. வந்துக் காப்பாத்த மாட்ட..” 

 

“அதான் சேஃபா சோபாவுல விழுந்துட்டீயே.. அப்புறம் என்னத்துக்கு நான் வரணும்?.. இன்னைக்கு பர்ஸ்ட் நைட்னு சொன்னதுக்குத் தான் இந்த அதிர்ச்சியா?..” 

 

பட்டென்று சோபாவில் இருந்து எழுந்து நின்றார் அஞ்சலி.. 

 

“என்னடா நினைச்சிட்டு இருக்க?.. உன்னைத் தட்டிக் கேட்க ஆளு இல்லைன்னா.. நான் இருக்கேன்.. என் யாதுக்குட்டிக்காக நான் இருக்கேன் டாஆஆஆஆஆஆஆஆஆஆ..” என அவர் கத்திய கத்தலில், யாதிராவில் இருந்து கெளதம் வரை அத்தனை பேரும் அறையில் இருந்து வெளியே வந்து விட்டார்.. 

 

“ஏன்டி இப்படிக் கத்துற?..” என அதட்டியபடி அங்கு வந்து நின்றார் கெளதம்.. 

 

“ஹான்.. நான் கத்துறது தான் இங்கே எல்லாருக்கும் தெரியுது.. இவன் பர்ஸ்ட் நைட் கொண்டாடுறேன்னு சொல்லுறது உங்க யாருக்காவது தெரியுமா?..” என்றவரைக் கண்டு அதிர்ந்துப் போனார் மஹா.. 

 

“என்னது பர்ஸ்ட் நைட்டா?..” என கேட்கும் பொழுதே, கண்கள் விரிந்து அதிர்ச்சியில் அவர் நின்ற கோலம் அனைவரையும் கலங்க வைக்கும்.. 

 

ஆனால் கலங்க வேண்டியவன், கல்லுக்குண்டான் மாதிரி அல்லவா நின்றுக் கொண்டிருந்தான்.. 

 

“என்ன டா இது?.. அவ இன்னும் சின்னப் பொண்ணு.. மைனர் பொண்ணு.. 17 வயசுக்கூட ஆகலை..” என்றார் சந்தோஷ் மனத்தாங்கலாக, 

 

“என் பொண்ணு இன்னும், என்னென்ன சித்திரவதை எல்லாம் அனுபவிக்கப் போறாளோ?..” என வாய்விட்டே புலம்பினார் மஹா.. 

 

“இப்போ எதுக்கு நீ கலங்கி நிக்கிற மஹா.. இவன் நினைச்சா, பர்ஸ்ட் நைட் கொண்டாட விட்டுருவேனா நானு..” என்ற கெளதமை நக்கலாக பார்த்துப் புன்னகைத்தான் சயந்தன்.. 

 

“ஏன் கொண்டாட விட மாட்டீங்களா?..” என்றான் கோணலாக இதழ் வளைத்தபடி, 

 

“ஆமா டா.. கொண்டாட விடமாட்டேன்.. நீ அவ மேல கை வச்ச, மைனர் பொண்ணை ரேப் பண்றேன்னு சொல்லி.. நானே போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுப்பேன்..” என்றார் கெளதம்.. 

 

“அப்போ நானும் கேஸ் கொடுப்பேன்.. மைனர் பொண்ணை குடும்பமா சேர்ந்து கட்டாயப்படுத்தி, எனக்குக் கட்டிக் கொடுத்தேன்னு சொல்லுவேன்..” என்றவனைக் கண்டு ஆத்திரத்தில் அடிக்கப் பாய்ந்தார் கெளதம்.. 

 

அவரின் கையை சட்டென்று பற்றிக் கொண்டார் அஞ்சலி.. 

 

“விடுறி என்னைய்ய்.. நானா இல்லை அவனான்னு, ஒரு கைப் பார்க்கிறேன்..” என சீறிக் கொண்டு பாய,

 

“சட்டுன்னு கையை நீட்டிட போறாங்க..” என்ற அஞ்சலியை திரும்பிப் பார்த்தாரே ஒரு பார்வை.. 

 

சத்தியமாக அது பாசப்பார்வை இல்லைங்க.. அஞ்சலியை பஷ்பமாக்கிடும் பார்வை தான்.. 

 

“என்னடி உன் பையனை எதுவும் பண்ண முடியாதுன்னு சொல்லுறீயா?..” 

 

“நீங்க சொன்னாலும், சொல்லாட்டியும்.. அது தான் நிசம்.. இத்தனை நாள், அவன் என்ன நினைக்கிறானோ, அதுக்குத் தான் நம்மளை மண்டையாட்ட வச்சிருக்கான்..” என்றவரைக் கண்டு அனைவரும் சற்று அமைதியாகி தான் போயினர்.. 

 

உண்மை தானே.. அவன் என்ன நினைக்கிறானோ, அதைத் தானே அவன் செயல்படுத்திக் கொண்டிருக்கிறான்.. 

 

அவன் காதலிக்கிறேன் என ஒளிவு மறைவின்றி சொன்னதில் இருந்து, கல்யாணம் செய்துக் கொள்கிறேன் என சொன்னது வரை.. அத்தனையும் அவன் இஷ்டப்படி தானே நடந்துக் கொண்டிருக்கிறது.. 

 

“என்னடி உங்களால என்ன பண்ண முடியும்னு?.. குத்திக் காட்டுறீயா?..” 

 

“நான் குத்தியெல்லாம் காட்டலைங்க.. நடக்கிறதை சொன்னேன்..நான் சயந்தன் கிட்ட பேசுறேன்..” என சொல்லிக் கொண்டே அஞ்சலி திரும்பிட, அங்கு சயந்தன் நிற்பதற்கான அடையாளமே இல்லை.. 

 

“எங்கே அவன்?..” என பதட்டமாக மஹாவைப் பார்க்க, 

 

“அவன் நீங்க சண்டை போடுற கேப்புல எங்கேயோ கிளம்பிப் போயிட்டான்..” என்றதும், சட்டென பார்வையை திருப்பிட, அங்கு சந்தோஷின் பக்கத்தில் தான் யாதிரா நின்றிருந்தாள்.. 

 

“நல்லவேளை இவளை விட்டுட்டுப் போயிட்டான்.. திக்கு திக்குன்னு இருக்குதுய்யா நம்மப் பொழைப்பு.. இவனைப் பெத்ததுக்கு..” என புலம்ப, 

 

அவரின் காதருகே குனிந்த கெளதம், “பேசாம பத்து நிமிஷம் தள்ளிப் படுத்திருக்கலாம்.. அதானே..” என்ற கெளதமைக் கண்டு, ஹான் என விழித்தார் அஞ்சலி.. 

 

அவர் மனதுக்குள் நினைத்ததை அப்படியே சொல்லியவரைக் கண்டு வியந்து தான் போனார்.. 

 

கெளதமும், சந்தோஷூம் எங்கேயோ புறப்பட்டுச் செல்ல, அஞ்சலியும், மஹாவும், யாதிராவும் தான் அங்கே மிஞ்சியிருந்தனர்.. 

 

அஞ்சலியின் முகம் தீவிரமாக இருப்பதை பார்த்த மஹா, “என்னாச்சி அஞ்சலி, எதையோ ரொம்ப நேரமா யோசிக்கிறீங்க?..” 

 

“இன்னும் கொஞ்ச நேரத்துல சயந்தன் வந்திடுவான்.. அப்புறம் என் பொண்ணு வாழ்க்கை?..” என கரகரத்த குரலில் சொன்ன மஹாவைக் கண்டு அஞ்சலியின் புருவம் இடுங்கியது.. 

 

மஹாவின் பயம் என்னவென்று அஞ்சலிக்கு புரிந்தது.. 

 

நியாயமானது தானே.. பெண்ணைப் பெற்றவளாய் அவளுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்கும்.. 

 

அதை நிறைவேற்ற தன் பையன் ஒரு காலமும் விடமாட்டான் என்பது புரிந்தது. 

 

இப்படியே விட்டால் யாதிராவிற்கு எதிர்காலம் என்ற ஒன்றே இருக்காது என்பதும் பட்டவர்த்தனமாக தெரிந்தது.. 

 

தன் கண் முன்னாலேய ஒரு பெண், அதுவும் தான் மகளாய் வளர்த்த பெண்ண வாழ்க்கைச் சீரழிவதைக் கண்டும், காணாமல் அவரால் இருக்க முடியாதே… 

 

எப்படியாவது யாதிராவைக் காப்பாற்ற வேண்டும்?.. தாலி கட்டினால் அவன் நினைத்ததெல்லாம் நடக்க வேண்டுமா?.. நிச்சயமாக இல்லை.. நடக்க விடக்கூடாது.. என மனதோடு பேசிக் கொண்டிருந்தார் அவர்.. 

 

“நாம ஏன் யாதிராவை ஒளிச்சி வைக்கக்கூடாது?..” 

 

“இன்னைக்க ஒளிச்சி வைக்கலாம்.. நாளைக்கு?.. நாளான்னைக்கு?..” என மஹா கேட்க, 

 

“ஆமால்ல.. இது ஒரு பெரும் சிக்கலா தான் இருக்கு.. என்ன பண்ணலாம்?..” என குறுக்கும் நெடுக்குமாக யோசித்த அஞ்சலி, 

 

“ஐடியா..” என்றார் வலது கையால் சொடக்கிட்டபடி,

 

“என்னஹ் ஐடியா?.. என் ப்ரண்ட் வீட்டுக்கு ஒரு மூணு மாசம் யாதிராவை அனுப்பி வச்சா என்ன?..” 

 

“உன்ன ப்ரண்டா அது யாரு?..” 

 

“என் ப்ரண்ட் ஒருத்தி இங்கே தான் ஸ்கூல்ல டீச்சரா இருக்கா?.. அவ வீடு எங்கேயிருக்குன்னு கெளதம்க்கே தெரியாது.. நாம அங்கே இவளை அனுப்பி வச்சிடுவோம்..” 

 

“சரி அனுப்பிடலாம்.. அப்புறம்?.. என்றார் மஹா..” 

 

“அப்புறம் என்ன?.. அவளை மூணு மாசம் பாதுகாத்துட்டோம்னா, அப்புறம் அவ மேஜர் ஆகிடுவா. அவ சொல்லுறது தான் செல்லுபடியாகும்.. கோர்ட்ல டிவோர்ஸ் அப்ளை பண்ணி.. சயந்தனுக்கும் அவளுக்கும் டிவோர்ஸ் வாங்கிக் கொடுத்துடலாம்.. அப்புறம் வேற நல்ல பையனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கலாம்..” என்றார் அஞ்சலி.. 

 

மஹாவுக்கு அதுவே சரியாகப் பட்டது.. 

 

வேறு எதைப் பற்றியும் யோசிக்கவில்லை.. 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top