Thread starter 22/02/2026 10:39 pm
டீஸர்
டீஸர்.. 1
வணக்கம் ப்ரண்ட்ஸ்...
#அதிகாயனின்_ஆரணங்கே
இதுவரை நான் தொடாத களம்.
#ஆன்டி_ஹீரோ தொடர் தான்.
விரைவில்... கெட் ரெடி டியர்ஸ்..???
#tit_bits
அதிகாயனின் ஆரணங்கே…
தன் முன்னே ஒரு உயிரை துடிக்க துடிக்க கொன்றுவிட்டு எதுவுமே நடக்காதது போல நின்றிருந்தவனை கண்டவளுக்கு உள்ளும் புறமும் நடுங்கியது.
அதிலும் அந்த ரத்தம் தொய்ந்த கையை தன் சட்டையிலேயே துடைத்துக் கொண்டு அவளை நெருங்கி வந்தவனை கண்டவளுக்கு ஏற்கனவே நடுங்கிய உடல் உதறத் தொடங்கியது.
“அய்… ஐரா..” என்று அதற்கு மேல் வார்த்தை வரவில்லை, அவளது தொண்டையிலிருந்து..!
ஏன்.. வெறும் காத்து கூட வரவில்லை. காற்றுக்கு ஏங்கி தரையில் கடந்து துடிக்கும் மீனை போல வாய் குவித்து குவித்து அவனை பார்த்தாள்.
அவளின் குவிந்த அதரங்கள் அது ஓவென குவிந்து விரியும் அழகை கண்டவனுக்கு அதுக்கு முன் இருந்த ரௌத்திரம் மோட் போய்.. இப்போது காதல் மோட் ஸ்டார்ட் ஆனது.
அவன் கையிலிருந்த அந்த மெல்லிய கத்தியை சட்டையின் மீது போட்டிருந்த மற்றொரு சட்டையின் கீழ் புறத்தில் துடைத்தவன்,
“என்ன லோட்டஸ் பயந்துட்டியா? இதெல்லாம் ஜஸ்ட் வொர்க்..! உன் வொர்க்லநான் தலையிட மாட்டேன் அதுபோல என் வொர்க்ல நீ தலையிடாதே..!” என்றவன் அவள் முன்னே கத்தியை வைத்து ஆட்டி ஆட்டி பேச..
அந்த கத்தியை ஆட அதன் வழியே அவள் கருவிழிகளும் அவ்வாட்டத்திற்கு ஏற்ப ஆட.. இதோ இப்போ வந்து விடுவேன் என்றது போலவே மயக்கம் அவளை சூழ்ந்து நின்றது.
“நீ செய்றதுக்கு பேரு ஒர்க்கா? கொலை..! கொடூரம்..! ஒரு உயிரை வதைக்கிற” என்று தீனக் குரலில் கூறியவளின் உதடுகள் நடுங்கியது.
“சோ.. வாட்?” என்றவன், அந்த கத்தியை அவளது நடுங்கும் உதடுகளுக்கு அடியில் வைத்து வருட..
சற்று முன் தான் அந்த ரத்தம் தொய்ந்த கத்தி ஒரு உயிரை குடித்திருந்தது.
அது.. அது.. அந்த கத்தி.. இப்பொழுது என் உதட்டிலா? என்று அதற்கு மேல் யோசிக்க முடியாமல்.. அந்த அருவருப்பும் அவனின் கொடுமையும் தாங்காது மயங்கி சரிந்
தாள் மாது.
ஆரம்பிச்சிடலாமா??? 😜😜😜
