யட்சன் 26

 

(@manvi-aathreesh)
Member Moderator
Joined: 3 weeks ago
Messages: 35
Thread starter  

அத்தியாயம்: 26

 

மறுநாள் காலை விடிந்ததும் கைகளை சுத்தம் செய்து பார்த்தாள் சித்ரலேகா. அவள் நினைத்ததை விட நன்றாக சிவந்திருந்தது மருதாணி. ஒரேடியாக பிரவுன் கலராக அல்லாமல் அடர்ந்த சிவப்பில் அவள் கைகளில் அழகாக வைத்திருந்த மருதாணியை ஆசையோடு வருடியவள் மூக்கின் அருகே வைத்து முகர்ந்து பார்த்தாள்.

 

"நல்ல வாசனை.. செமையா இருக்கு" என்று கால்களையும் பார்த்தாள். மணப்பெணுக்கே உரித்தான அந்த சந்தோஷம் முதன் முதலில் அவள் முகத்தில் எட்டிப் பார்த்தது.

 

"கல்யாண களை வந்துடுச்சா சித்து உனக்கு? ம்ம்ம்…"'என்று கண்ணாடியில் தன்னை பார்த்துக்கொண்டவளின் கன்னங்கள் சிவந்திருந்தது. இராவணனின் நினைவு வர ஒருமுறை உடலை உலுக்கி கொண்டவள் "ச்ச நேரம் கெட்ட நேரத்தில் அவன் நினைப்பு. எதையோ நினைச்ச உடனே வந்து நிக்குமானு சொல்லுவாங்களே.. அதுபோல" என்று எண்ணத்தை உதறியவள் குளியல் முடித்து கீழே வந்தாள்.

 

உறவினர்கள் இருப்பதை பார்த்து அவளுக்கு உணவை தனியாக கொடுத்து அடுத்தடுத்து கல்யாண வேலைகளை பற்றி கூறிக் கொண்டிருந்தார் கலாவதி.

 

என்னதான் தங்கை மகளாக இருந்தாலும் அதிக ஒட்டுதல் சித்ராவோடு தான் கலாவதிக்கு. இவள் திருமணமாகி செல்ல போகிறாள் என்று  மனதில் மகிழ்ச்சியாக இருந்தாலும் கூடவே பெண்ணை பிரிய போகிறோமே என்ற வருத்தம் கடந்த ஒரு வாரமாக அவரை ஆட்டி படைத்தது‌.

 

இவளை பார்ப்பதும் கன்னத்தை தொட்டு ஆசையாக வருடுவதும் அடிக்கடி நெற்றியில் முத்தம் கொடுப்பதும் அவள் கைகளை இறுக்கமாக பற்றிக்கொள்வதுமாய் இருந்த பெரியம்மாவின் மனநிலை அவளுக்கும் புரிந்தது.

 

"அம்மா இருந்தாலும் இப்படித்தானே பெரியம்மா உங்களை போல் செஞ்சுக்கிட்டு இருந்திருப்பாங்க" என்றதும் பெண்ணை கட்டிக் கொண்டு கதறி விட்டார் கலாவதி. 

 

"அவளுக்கு தான் கொடுத்து வைக்கலையே சித்து கண்ணா" என்று அவர் அழுகையோடு பேச, அங்கே இங்கே இருந்த உறவினர்கள் எல்லாம் இவர்களை சுற்றி நின்று கொண்டார்கள் சமாதானம் வேறு.

 

"என்ன கலா நீயே இப்படி சின்ன பிள்ளைகிட்ட அழுகுற.. அப்புறம் அந்த பொண்ணு மனசு சங்கடப்படுமா இல்லையா?"

 

"நீதான் அவளுக்கு சொல்லி தேத்தி புகுந்த வீட்டுக்கு நல்லபடியாய் பொறுப்பாய் அனுப்பி வைக்கணும்"

 

"கண்ணை துடைத்து கொண்டு பெரியவளாய் நட கலா.. பாரு சித்ராவும் அழுறா" என்று சொந்தங்கள் சுற்றி நின்று அத்தனை அறிவுரைகள். ஆனால் அறிவுரை கூறியவர்கள் கடைசி வரை நம் வாழ்வோடு வரப்போகிறார்களா? அதுதான் இல்லை வெறும் அறிவுரை கூற மட்டுமே வருபவர்கள்.

 

இவர்களின் பேச்சில் பெரியம்மா வேதனைப்படக்கூடாது என்று எண்ணிய சித்ரா "பெரியம்மா எந்த புடவை கட்டணும். காட்டுறேன்னு சொன்னீங்களே.. வாங்க வாங்க இப்ப என் கூட வந்து நீங்களே செலக்ட் பண்ணி சொல்லுங்க" என்று மெதுவாக தன்னறைக்கு அழைத்து வந்தவள் அவரை அமர வைத்து மடியில் படுத்துக் கொண்டாள்.

 

பெண்ணின் மனதை புரிந்து வரும் சிறிது நேரம் அவள் தலையை கோதிக் கொடுக்க.. அங்கே அமைதியாக அம்மா மகளுக்கான அன்பின் பரிமாற்றம் அழகாய் அரங்கேறியது.

 

பெண்ணின் தலையை கோதிக் கொண்டு வழக்கமான அன்னையர்கள் போல பெண்ணுக்கு நிறைய அறிவுரை கூறினார். 

 

அதன்பின் மகளுக்கு புடவை தேர்ந்தெடுத்து கொடுத்து "இந்த பட்டு புடவைய கட்டி நகையோடு கீழே வா.. சொந்தங்கள் எல்லாம் இருக்காங்க. ஏதாவது சொல்லிகிட்டே இருப்பாங்க. நான் மத்த வேலை பார்க்க போறேன்" என்று சென்றுவிட்டார்..

 

இரவில் நண்பர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சங்கீத் நிகழ்ச்சியில் சொந்தக்காரர்களும் கலந்து கொண்டாலும் இன்றைய இளைஞர்களின் இந்த ஆடல் பாடலை ஒட்டும் ஒட்டாமலும் சற்று தள்ளியே இருந்து பார்த்தார்கள்.

 

சங்கீத் நிகழ்ச்சியிலும் இருவரையும் அருகருகே அமர வைக்க தாத்ரி பிரியப்பட கலாவதியோ கண்டிப்பாக வேண்டாம் என்று மறுத்துவிட்டார். "இன்னும் நிச்சயம் கூட செய்யல ஒப்புத்தாம்பூலம் தான் மாற்றி இருக்கோம். அதற்குள் நீ பக்கத்துல எல்லாம் உட்கார வைக்காதே.. இப்படி தள்ளித்தள்ளி பிரண்ட்ஸோட இருந்து நீங்க என்ன வேணாலும் பண்ணிக்கோங்க. ஆனா எல்லாம் லிமிட்டோட இருக்கணும். ஆகாஷ் நீ கொஞ்சம் பக்கத்துல இருந்து கவனிச்சுக்கோ.. உன் பெரிய தங்கச்சி சில சமயம் நம்ம எல்லைக்கெல்லாம் வரவே மாட்டா" என்றார் கண்டிப்புடன். 

 

"நான் பார்த்துக்கிறேன் அம்மா.. நீங்க டென்ஷன் ஆகாதீங்க" என்று அன்னையை அனுப்பி வைத்தான்.

 

பாசக்கார அண்ணனாய் சித்ரலேகாவின் அருகிலேயே இருந்து கொண்டான். நண்பர்களுக்குள் கலாய்ப்பதும் ஓட்டுவதும் அவ்வப்போது வாழ்த்துவதும் டிஜே அதற்கு தகுந்தமான பாடல்களை போடுவதும் ஆட்டம் பாட்டம் என்று கழிந்தது.

 

சிவப்பிரசாத் சிறிது நேரம் மட்டுமே வந்து இருந்துவிட்டு சென்றுவிட்டான். இங்கே சம்பந்தி சீனிவாச ரெட்டியோடு ரங்கராஜனும் ஜலஜா வரலட்சுமி கலாவதி இவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க.. சிவப்பிரசாத் திரும்பி செல்வதை பார்த்த கலாவதி "என்ன சம்மந்தி.. மாப்பிள்ளை அர்ஜென்டா கிளம்பி போறார் போல"

 

'அவனுக்கு கொஞ்சம் வேலை அதிகம் சம்பந்தி. கல்யாணத்துக்குள்ள முடிக்க வேண்டிய வேலை நிறைய இருக்கு இல்லையா?" என்று அலட்டாமல் பதில் சொன்னது ஜலஜா தான். பையனின் பெருமையை புட்டு புட்டு வைத்தார். வரலட்சுமி அமைதியாக உள்வாங்கியபடி அமர்ந்திருந்தார். கலாவதிக்கு கலக்கமாக இருந்தாலும் சொல்வது சம்பநதியாயிற்றே என்று அமைதியாக பொறுத்துக் கொண்டார்.

 

அதே சங்கீத் நிகழ்ச்சியில் தனியாக அமர்ந்து சித்ராவின் முகத்தில் வந்து போன வர்ணஜாலங்களை தன் கூலருக்கு பின்னே ரசித்துக்கொண்டிருந்தான் இராவணன். அவ்வப்போது இவன் கட்டளைகள் படியே பாடல்கள் மாறி மாறி டிஜே ஒலிபரப்ப.. அதுவும் தமிழ் தெலுங்கு என்று மாறி மாறி.

 

டிஜே மூலம் ஒலிபரப்புவது ராவணன் என்பதை அறியாது சந்தோஷமாக அந்த தருணத்தை நண்பர்கள் உறவினரில் உள்ள இளைஞர்கள் இளைஞிகளோடு கொண்டாடினாள் சித்ரலேகா. அத்தனை மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது அவள் முகத்தில். அதை எல்லாம் வெறித்த பார்வையோடு பார்த்து இருந்தான் இராவணன். 

 

இனி இதுப்போல் அவள் சிரிப்பாளா?

 

"போதும் போதும் நாளைக்கு பிரம்ம முகூர்த்தத்திலேயே கல்யாணம் இருக்கு. இப்படி‌ ஆட்டம் போட்டுக்கிட்டே இருந்தீங்கன்னா கல்யாண டயத்துல எல்லாரும் டயர்ட்டாகி கல்யாணத்தை பார்க்காமல் எல்லாரும் தூங்கிடுவீங்க.. கிளம்பலாம்" என்று ஆகாஷ் தங்கைகளின்‌ நண்பர்களை அறிவுறுத்தி அனைவரையும் அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலுக்கும் உறவினர்களை வீட்டுக்கும் அழைத்து வந்தான். 

 

மறுநாள் காலை ஒரு ரிசார்ட்டில் அருகே உள்ள பெரிய திடலில் தான் இவர்களுக்கு திருமணத்திற்கான ஏற்பாடு நடந்து கொண்டு இருந்தது.

 

அவர்களின் முறைப்படி வெண்பட்டில் அழகு தேவதையாக வந்து மாப்பிள்ளைக்கு மறுபக்கம் எதிரே சித்ரலேகா அமர, இடையில் தடுப்புக்கு அந்தப் பக்கம் சிவப்பிரசாத் அமர்ந்திருந்தான். 

 

அய்யர் மந்திர முழங்க.. சுற்றம் சூழ சூழ்ந்திருக்க.. ஒரு பக்கம் மங்கள வாத்தியங்கள் முழங்க.. பொன் தாலியை கையில் எடுத்து அமர்ந்தவள் முன்னால் சிவப்பிரசாத் நிற்க, தாத்ரியின் கண்களிலோ எல்லையில்லா சந்தோஷம். அவளது கனவு இன்னும் சற்று நேரத்தில் கை கூட போகிறது. 

 

ஆனால் நாம் நினைத்ததெல்லாம் நடந்தால் மேலே ஒருவன் எதற்கு இருக்க வேண்டும்?

 

இவர்களைப் பொறுத்தவரை அந்த ஒருவன் இராவணனே!

 

மங்கள வாத்தியங்களை முழங்கச் செய்து தாலி கட்டும் முன் மைக்ரோ செகண்ட் என்று சொல்வார்களே அதுபோல தம்பியை எட்டி உதைத்தவன் அவன் தாலியோடு உருண்டு கீழே விழ, தன் கையில் வைத்திருந்த புது பொன் தாலியை கொஞ்சமும் அலட்டாமல் சித்ராவின் கழுத்தில் கட்ட.. இதை எதிர்பார்க்காமல் வாழ்த்துக்களையும் அட்சதைகளையும் தூவின சொந்தங்கள். அவை அனைத்தும் இவர்களுக்கு ஆசிர்வாதமாய் விழ.. அடுத்த நொடி அங்கிருந்த அக்னியை வலம் வந்து அவளை இழுத்துக்கொண்டு பக்கவாட்டு வழியாக சென்றான். அவனுக்காக காத்திருந்த ஹெலிகாப்டரில்.. அதிர்ச்சி அகலாமல் அவன் இழுத்த இழப்பிற்கு வந்தவளை தூக்கி உள்ளே அமர வைத்தவன், இவனும் ஏற அடுத்த நொடி அதுவும் உயரே உயரே பறந்தது.

 

அனைவரும் வி

க்கித்து செய்வதறியாது நின்றனர் இராவணனின் அதிரடியில்…

 

தொடரும்…

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top