யட்சன் 25

 

(@manvi-aathreesh)
Member Moderator
Joined: 3 weeks ago
Messages: 35
Thread starter  

அத்தியாயம்: 25

 

உள்ளத்தில் ஏதோ குறுகுறுப்பு உணர்வு தோன்று சற்றென நிமிர்ந்து பார்த்தவள் எதிரே இராவணனை எதிர்பார்க்கவில்லை. இரு கைகள் முழுக்க மெஹந்தி போட்டிருக்க.. கால்களிலும் தாத்ரியின் உபயத்தால் முழங்கால் வரை போட்டு இருந்தாள்.

 

முதலில் இந்த மாதிரி மெஹந்திக்கு என்று விழாவே அவளுக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் சஞ்சலம் கொண்ட மனது இந்த சந்தோஷங்களால் திசை திரும்பும் என்று சம்மதித்திருந்தாள். கையில் போட்டு விட்ட பின் காலில் போடும்போது "அக்கா இவ்வளவு தூரம் எதுக்கு வேண்டாம்" என்று மறுத்ததும் "என்ன இப்படி கேட்டுட்ட இதெல்லாம் வாழ்க்கையில ஒருமுறைதான் வரும். வரும்போதே அனுபவிச்சுக்க சும்மா முகம் தூக்க கூடாது. இந்த கல்யாணம் முழுக்க என்னோட பிளான்.. நான் பிளான் பண்றப்படிதான் நடக்கும். என் கல்யாணத்தின் போது நீங்க எல்லாம் எப்படி என்ஜாய் பண்ணுனிங்க என்னை இப்படி உட்கார வைத்துவிட்டு.. இப்பொழுது உன்னோட டைம் நீ அனுபவி" என்று கிண்டலாக முடிந்தாள் தாத்ரி.

 

அவர்கள் சொந்தம் மட்டும்தான் என்கிற போது வேற யாரும் வர வாய்ப்பில்லை என்று தான் மாடி வராண்டாவில் பெண்கள் எல்லாம் அமர்ந்து மெஹந்தி போட்டுக் கொண்டிருந்தது. அவரவர் முடித்து தங்கள் அறைக்கு சென்று விட சில பேர் உணவருந்த சென்றுவிட, கல்யாண பெண்ணுக்கு என்று ஸ்பெஷலாக போட்டதால் சற்று நேரம் உலரட்டும் என்று அமைதியாக அமர்ந்தவள், முன் தான் ஜம்பமாக நின்று இருந்தான் ராவணன்.

 

உச்சி முதல் பாதம் வரை அவளை பார்த்தான். மஞ்சள் உடையில் அன்றிலர்ந்த சாமந்தி சூரியகாந்தி பூவாய் மிளிர்ந்தவளை கண்டவன் கண்கள் அவள் அழகை ருசிக்க இவளுக்கு உள்ளே தவிப்பு.

 

தாத்ரி வேறு கால்களில் உடைபட்டு விடக்கூடாது என்று அவள் அணிந்திருந்த லெகங்காவை உடையோடு சேர்த்து பின் செய்து விட்டிருந்தாள். அதை சரி செய்ய முடியாமல் கையில் இருந்த மெஹந்தி அழிந்து விடுமே என்று மறைக்க முடியாது அமர்ந்திருப்பது தவிப்போடு இருந்தாள சித்ரலேகா.

 

"சாலா அண்டங்கா உண்டன்டி (ரொம்ப அழகா இருக்க பொண்ணே) அம்மாயி.. பெத்த சைஸ் சாமங்கி பூ போல" என்றான்.

 

"உங்க பாராட்ட யாரும் இங்கே கேட்கல" என்று முகத்தில் அடித்தால் போல் பதில் கூறினாள். அவன் இவ்வளவு ரசனையாக பார்ப்பது இவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவஸ்தையாக இருந்தது.

 

அவள் பேசியதை அவன் காதிலே வாங்கிக் கொள்ளவில்லை. மெல்ல குனிந்து அவளது கைகளை பார்க்க இவளோ கையை சட்டென்று பின்புறம் வைத்துக் கொள்ள… அவளை நெருங்கி அமர்ந்தவன் அவள் புஜத்தை பற்றி அவளது வலது கையை அவன் முன் அழுத்தமாக இழுத்து வைத்தான். ஆனால் மருதாணி அழியாமல்.

 

அவன் பிடித்தபடி அவ்வளவு வலித்தது சித்ராவுக்கு. கண்கள் கலங்கிவிட, அதை அவள் முகத்தில் காட்ட "இவ்வளவு வலியும் தாங்குற கிரேட் அம்மாயி" என்று இன்னும் அழுத்தம் கொடுத்தான். எங்கே கையை முறித்து விடுவானோ என்று பயந்து மெல்ல இளக்கம் கொடுத்து அவன் முன் கையை நீட்டினாள். மறுக்கையும் அவன் கண்களால் காட்ட தயக்கத்துடனே இரு கைகளையும் அவன் முன்னே நீட்டினாள்.

 

உந்து உத்து இரண்டு கைகளிலும் அவன் பார்க்க "என்னத்த இப்படி பார்க்கிறான்?" என்று அவளுக்கு புரியவில்லை. சிவப்பிரசாத் கூட இப்படி ரசித்து பார்க்கவில்லை. மெஹந்தி போடும் பொழுது வந்தான் தான். சிறு தலையசைப்பு, எட்டி நின்று விசாரிப்பு, இரண்டு ஒரு வார்த்தை பேசி விட்டு "ரொம்ப நேரம் இங்கு இருக்க கூடாதுன்னு சொல்லி இருக்காங்க அம்மா.. நாளைக்கு சங்கீதில் பார்க்கலாம். பை சித்து" என்றதும் சரி என்று தலையசைத்தாள்.

 

மற்ற தோழிகள் சொன்னது போல மணமகனாய் சிவப்பிரசாத்தை பார்த்ததும் மனதில் பட்டாம்பூச்சி பறக்கவில்லை. கன்னங்கள் எல்லாம் ரூஜ் போட்டது போல சிவக்கவில்லை. மனமோ தடதடவென்று ரயில் பெட்டி போல ஓடவில்லை. கண்களில் காதல் இல்லை. முகத்தில் வெட்கமில்லை. அவனைக் கண்டதும் அவளுக்கு நாணமும் வரவில்லை. "டேய் என்னங்கடா கல்யாணம் பண்ணி வைக்கிறீங்க? அரேஞ்ச் மேரேஜா இப்படியாடா இருக்கும் இல்ல இவன் நம்ம கிட்ட இப்படி பார்முலா நடந்து கொள்வதினால் நமக்கும் ஃபார்முலாவே அவனிடம் பேசுகிறோமா? என்று திருமணம் பந்தத்தை பற்றி புரியாத அவளுக்கு அந்த நேரத்தில் இதையெல்லாம் கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ள அருகில் அன்னை இல்லை.

 

அக்கா என்ற உறவில் இருந்தவளும் இவளை இப்போது மொத்தமாக அங்க தள்ளிவிட முடிவில் இருப்பதால் யாரிடமும் மனம் விட்டு பேசாமல் சிவப்பிரசாத்துக்கு அமைதியாக தலையசைத்தாள்.

 

எதெல்லாம் அப்பொழுது சிவப்பிரசாத் அருகில் வரவில்லை என்றாலும் அதெல்லாம் இப்பொழுது தானாகவே வந்தது இவன் அருகில் வந்தாலே,... பயத்தில் மனம் படபடத்தது. அவன் உற்றுப் பார்க்கையில் உடம்பு ஏனோ கூசுகிறது. கன்னங்கள் வெட்கத்தால் சிவக்கவில்லை. ஆனால் முகமே சிவந்தது கோபத்தால்.. இவ்விதம் மாற்றமாவது இவனிடம் நிகழ்ந்தது. ஆனால் சிவப்பிரசாத்திடம் அது கூட நிகழவில்லையே..

 

எதையோ தேடிக் கொண்டிருந்தவன் கண்கள் சட்டுனு பளிச்சென்று மின்ன.. அவளை பார்த்து சிரித்தவன் "கொடுத்த பணத்துக்கு நல்ல ஒர்க்" என்றதும் அவள் புரியாமல் பார்த்தாள்.

 

"மாப்பிள்ளையின் பெயரை அழகாக எழுதி இருக்காங்க. அதை சொன்னேன்" என்றான்

 

இவளுக்கு அது தெரியாது "அப்படியா பாவா?" என்று முதல்முறையாக அவனிடம் சாதாரணமாக பேசினாள். "எங்கே இருக்கு?" என்று சற்று ஆர்வத்தோடு கேட்டாள்.

 

"இதோ இங்கே" என்று அவள் கையில் இருந்த மெஹந்தியில் அவன் ஏதேதோ காட்ட அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. "தெரியலையே.. காட்டுங்க" என்று அவள் அறிந்து கொள்ளும் ஆவலோடு கேட்டாள்.

 

வலது கையில் இருந்த சில எழுத்துக்களை காட்டி அவன் கூற அதுவும் அங்கு ஜாங்கிரியை பிய்த்து தலைகீழாக வைத்தது போல இருந்ததை இவள் உற்று உற்றுப் பார்த்தும் புரியவில்லை.

 

"அது தெலுங்கில் எழுதி இருக்கு உனக்கு புரியாது" 

 

"ஓ தெலுங்கா?" என்றதும் அதற்கு ஏன் இவன் கண்கள் இப்படி பளீச்சிட்டது அன்று அவள் யோசிக்கும் முன் "நாளைக்கு பார்ப்போம்" என்றவன், அவள் கன்னத்தில் தடவி செல்ல.. அவன் சென்ற பின் தான் உணர்ந்தாள் இரு கன்னங்களிலும் அவன் சந்தனம் கலந்த மஞ்சளை தடவி விட்டு சென்றதை..

 

அவன் சென்ற பின்னும் அந்த சந்தனத்தின் ஈரமும் குளுமையும் வாசமும் அவளுள் நிறைவதற்கு பதிலாய்

ஏனோ கலக்கம் கொள்ளச் செய்தது.

 

தொடரும்….

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top