அத்தியாயம்: 24
'இவன் என்னிடம் நடந்தது அத்தனையும் தப்பு… ஆனால் கல்யாணம் நடக்க விடமாட்டேன் என்று ஏதேதோ உளறுவான் என்று பார்த்தால் கல்யாணம் நடக்கும் என்கிறானே? இல்ல… எனக்கு புரியல! நான் பைத்தியமா இல்லை… இவன் பைத்தியமா?' என்று கையில் போட்டிருந்த மெஹந்தியை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள் சித்ரலேகா.
ஜலஜாவிடம் என்ன பேசினான் இராவணன் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் ஜலஜா திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார். அவரே மகனிடம் பேச அருகில் நின்றிருந்த வேலையாளை கூப்பிட்டு அவரை நறுக்கென்று கிள்ளி பார்த்துக் கொண்டான் சிவப்பிரசாத்.
"தும் பாகல் ஓஹையா?" என்று ரீதியில் "என்ன ஆச்சு இந்த முதலாளிக்கு?" என்று விசித்திரமாக பார்த்து சென்றான் சிவப்பிரசாத்தை. திடீரென்று இத்தனை பாசமாக அழைத்து திருமணத்திற்கு சம்மதம் என்று கூறும் அன்னையை அவன் எதிர்பார்க்கவில்லை. சின்னதாக சண்டை சச்சரவு கொஞ்சம் பெரியதாக கையில் விச பாட்டிலை வைத்து மிரட்டுவார். அப்படி இப்படி என்று இவன் நிறைய கற்பனை வளர்த்து வைத்திருக்க.. அதில் எப்படி இருந்து தப்பிக்கலாம் இல்லை அண்ணனிடம் காலடியில் விழுந்து விடலாமா என்று யோசித்து கொண்டிருக்க.. அனைத்தையும் புஷ்வானமாக்கி ஒப்புதல் அளித்திருந்தார் ஜரஜா.
அது மட்டுமல்லாமல் மறுநாளே பெண் கேட்டு குடும்பமாக வருவதாக கூற நெஞ்சை படித்துக் கொண்டு தள்ளாடி விட்டான். அதிலும் அண்ணனின் வேகத்தை கண்டு மூச்சு முட்டியது சிவப்பிரசாத்துக்கு.
'அவரை எல்லோரும் புகழ்வதிலும் ஒரு அர்த்தம் இருக்கிறது. எப்படி இவ்வளவு சீக்கிரம் வேலையை முடித்தார் தெரியலையே இந்த அண்ணையா?' என்று இராவணனின் அதிவிரைவு செயல்களை கண்டு பிரமித்தான்.
அந்த கணத்தில் இருந்து வெளிவர சில நொடிகள் தேவைப்பட்டது அவனுக்கு. அதற்கு பின்னே தாத்ரியை அழைத்து வீட்டிலிருந்து அம்மா பேசியது, இரண்டு நாட்களுக்கு முன்பு அண்ணன் விசாரித்தது என்று அனைத்தையும் கூறி "நாளைக்கு பெண் கேட்டு வருவதாக அம்மா சொன்னாங்க" என்றவுடன் அவளுக்கும் வியப்புதான்.
அதும் ராவணன் அவ்வளவு சீக்கிரம் சம்மதிக்க மாட்டான் என்று நினைத்திருந்தாள். அதற்காகத்தான் அவள் வரலட்சுமியை உதவிக்கு அழைத்தது.
"பரவாயில்லை.. என்னதான் கோவக்காரனாக திமிர் பிடித்தவனாக பொண்டாட்டியின் அருமை தெரியாதவனாக இருந்தாலும் அம்மாவின் பேச்சை தட்டாமல் செய்கிறானே.. நமக்கு காரியம் ஆனால் சரி! அது யார் மூலமா நடந்தால் என்ன? காரியம் தான் பெரியது!" என்று அடுத்தடுத்து திட்டங்களை மனதுக்குள் போட்டுக் கொண்டு அதன் பின் அம்மாவிடம் சொல்ல போக.. அதற்கு முன்னே அவருக்கு விஷயம் தெரிந்து தேவி என்று அழைத்துக் கொண்டே வந்தார்.
விஷ்ராவணன் போதையில் கிடந்த சித்தப்பாவிற்கு ஃபோன் செய்ய அவர் ரங்கராஜனுக்கு செய்து பெண் பார்க்க வருவதாக கூற, அடுத்த அடுத்த காரியங்கள் மிக விரைவாக நிறைந்து ஓடியது. அதிலும் 50% ஷேர் மகனுக்கு என்றதும் வரலட்சுமியை ஒரு பார்வை பார்த்துக் கொண்டார் ஜலஜா.
'உன் மருமகளை விட என் மருமகளுக்கு இந்த வீட்டில் சொத்து தொழில் பங்கும் அதிகம்' என்றவாறு.
'நீ எல்லாம் எந்த காலத்துக்கும் திருந்த மாட்ட!' என்று ஒரு அரசியின் ஆளுமையோடு அவரைப் பார்த்தார் வரலட்சுமி. இதெல்லாம் நடந்தது சித்ராவை பெண் பார்க்க வரும் இடத்தில்.
அதன் பின் நிச்சயதார்த்தம் எப்பொழுது கல்யாண தேதியை எப்பொழுது குறிக்கலாம் என்று அதி விரைவாக திட்டங்கள் தீட்டப்பட சீனிவாச ரெட்டியோ அதனை ஆட்சேபணை செய்தார்.
"உங்க வீட்டிலயும் ஒரு துக்கம் நடந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. அதனால இப்படி நிச்சயதார்த்தம் கல்யாணம் இதெல்லாம் தனித்தனியா வேணாம் நம்ம நேரா கல்யாணத்துக்கு போயிடுவோம்" என்றதும் "ஆனால் மாமா… இந்த சங்கீத் மெஹந்தி இதெல்லாம் இல்லாமலா?" என்று தாத்ரி கேட்டாள்.
"இதெல்லாம் நம் குடும்ப பழக்கமே இல்லையே அம்மாயி.. வடநாட்டு முறைகள் அல்லவா? நம் குடும்ப பழக்கம் என்னவோ அதை செய்தால் போதும்" என்று இப்படி பாயிண்ட் பாயிண்டாக பேசிய கணவனை விசித்திரமாக பார்த்தார் ஜலஜா. வ எப்போதும் குடியும் கும்மாளமுமாக இருக்கும் இவர் குடும்ப குலவிளக்கு அது இது என்று பேசுகிறாரே என்று விசித்திர ஜந்துவை போல அவரைப் பார்த்தார்.
ஆனால் அவர் வெறும் பொம்மை என்று அவருக்கு தெரியவில்லை. இந்த பொம்மலாட்டத்தில் ஒவ்வொரு கயிறுகளையும் தன் கையில் இறுக்கிக் கொண்டு ஆட்டி வைத்துக் கொண்டு இருந்தது என்னவோ இராவணன் தான். அதுவும் இந்த வைபவத்துக்கு வராமலேயே அனைவரையும் தன்னிடம் உள்ள நூல் கொண்டு ஆட்டிக் கொண்டிருந்தான்.
அவன் பேச நினைப்பதை தான் சீனிவாச ரெட்டி பேசினார். அவன் நடத்த இருப்பதைத்தான் அவர் நடத்த சொன்னார்.
ரங்கராஜனுக்கு இதில் மறுப்பும் ஒன்றும் இல்லை. "ஆனால் இந்த மாத கடைசியில் தான் என் மகன் சிங்கப்பூரில் இருந்து வருகிறான். அவன் வந்ததும் தான் கல்யாணம் நடக்க வேண்டும்" என்றார்.
சீனிவாச ரெடி "கண்டிப்பாக சம்மந்தி ஒத்த பிள்ளையோ வச்சிருக்கீங்க. தங்கச்சி கல்யாணத்துக்கு அவர் வராமல.. அதெல்லாம் அவர் வந்ததுக்கு அப்புறம் நடக்கும். அதுக்கு முன்னாடி நம்ம நாள் மட்டும் குறிச்சிடலாம்" என்று அவர் கையோடு கொண்டு வந்திருந்த தேதிகளை கொடுத்து "எது பெண்ணுக்கு சரிப்பட்டு வரும் என்று கேட்டு சொல்லுங்கள்" என்றார்.
இவரின் வேகத்தை கண்டு ரங்கராஜனுக்கே சந்தேகம். நம் எதிரில் இருப்பது சீனிவாச ரெட்டி தானா? என்று.. அவருக்கு தான் இவரின் பழக்க வழக்கங்கள் எல்லாம் அரசல் புரசலாக ஆக தெரிந்திருந்தது. பல காலமாக இந்த தொழில் இருப்பவர்களுக்கு இதே தொழிலை சேர்ந்தவர்கள் மற்றவர்களின் நிலையும் தெரியும் அல்லவா? அதனால் அத்தனை ஆச்சரியம்.
இப்படியாக திருமணம் பேசப்பட்டு இரண்டு நாளில் தேதி உறுதிப்படுத்துகிறோம் என்று ரங்கராஜன் கூற,ரெட்டி வீட்டு மருமகள் என்ற சார்பில் தாத்ரி தான் அந்த வீட்டுக்கு வர போகும் மருமகளான சித்ரலேகாவிற்கு வரலட்சுமி கொடுத்த வைர மாலை ஒன்றை அணிவித்தாள்.
இதில் எந்த வைபவத்திலும் சிவப்பிரசாத் வெறும் பார்வையாளராக இருந்தான். அவனே தான் தாத்ரியிடம் நெருங்கி "ஏண்டி மோதிரம் மாத்துற மாதிரி நீ ஏதாவது அரேஞ்ச் பண்ணி இருக்கலாம் இல்ல? இப்படி திடுதிப்புன்னு பொண்ணு பாக்க தான் வருவாங்க நினைச்சா.. என்னமோ குட்டி நிச்சயதார்த்தம் மாதிரி நகை எல்லாம் போட்டுட்டாங்க.. புடவை எல்லாம் வச்சு கொடுத்துட்டாங்களே" என்று தாம்பூலம் மாற்றுவதை பார்த்து தோழியிடம் கேட்டான்.
"எனக்கு என்னடா தெரியும். நான் இந்த கல்யாண விஷயத்தை பத்தி அவர்கிட்ட எதுவுமே பேசல.. அவரும் விஷயததை என்னிடம் எதுவும் சொல்லல.. இப்படி சடசட நடக்கிறத பார்க்கும்போது அவர்தான் எல்லாம் சொல்லி அனுப்பி இருப்பாரு நினைக்கிறேன்" என்று சரியாக யோசித்தாள் தாத்ரி.
"இப்ப என்னடா.. ஒரு மோதிரம் மாத்துறது பெரிய விஷயமா? எங்க அண்ணன் அடுத்த மாசம் தான் வரான். அதுக்கப்புறம் மேரேஜ்னா எப்படியும் கல்யாணத்துக்கு இடையில ஒரு பத்து நாள் இருக்கும். ஒரு நாள் சும்மா அவுட்டிங் நகை வாங்கி கொடுக்கிறேன் ஏதாவது காரணத்த சொல்லி கூட்டிட்டு போய் அவளுக்கு புடிச்ச மாதிரி நீயே வாங்கி கையில மாட்டி விட்று" என்றாள்.
"சூப்பர் ஐடியா டி" என்றான்.
ஆனால் அதற்குப் பிறகு அப்படி ஒரு வாய்ப்பு சிவபிரசாத்துக்கு கிடைக்கவே இல்லை. "திருமணம் முடியறதுக்குள் முக்கால்வாசி முடித்திருக்க வேண்டும்" என்று அவனை விரட்டினான் இராவணன்.
அந்த ப்ராஜெக்ட்டை முடிக்க அவனை இரவில் தூங்க மட்டுமே வீடு என்ற நிலை. அங்கேயே பலியாக கிடந்து வேலையை முடிக்க பிரம்ம பிரயர்த்தனம் பட்டுக் கொண்டிருந்தவனால், சித்ரலேகாவை அழைத்துக் கொண்டு வெளியே செல்ல முடியவிவ்லை. அந்த வாய்ப்பை இராவணன் சிவபிரசாத்துக்கு வழங்கவே இல்லை என்பதுதான் உண்மை.
ஊரில் வந்து ஆகாசுக்கும் இந்த திருமண விஷயம் பிடித்திருந்து. ரங்கராஜன் ஏற்கனவே
ஆகாஷிடம் பேசி இருந்தார்.
"சிவப்பிரசாத் நல்ல சாய்ஸ் தான். ஆனாலும்… இவன விட பெட்டரா தேடி இருக்கலாம். ஆனால் இரு தங்கைகளும் ஒரே வீட்டில் இருக்கும்போது எனக்கும் சந்தோஷம்" என்றவன், அவ்வப்போது தங்கையை கிண்டல் செய்து கொண்டு இருந்தான். அவளும் ஆகாசவாணி என்று அவனை கிண்டல் அடிக்க.. நேரம் பறந்து செல்ல..
இதோ இவர்கள் சொந்தத்தோடு சின்னதாக மெஹந்தி பங்ஷனை வைக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து வைத்திருந்தாள் தாத்ரி. அப்பொழுதுதான் தனியாக அமர்ந்திருந்த சித்ரலேகாவுக்குள் இந்த யோசனைகள் எல்லாம் ஓடியது.
அவளின் எண்ணத்தின் நாயகனே
அவளின் எதிரே நின்று இவளை தான் பார்த்திருந்தான்.
தொடரும்…
