அத்தியாயம்: 23
"மாட்லாடண்டி அம்மாயி? (பேசு பொண்ணே)" என்று அவளை அழுத்தமாக பார்த்தவாறே இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கேட்டான்.
"எனக்கு நீங்க பேசுறது புரியல?" என்று மெல்லிய குரலில் கூறினாள் சித்ரா.
"அவுனா (அப்படியா)??" என்று அவளை நம்பாத பார்வை பார்த்தான்.
"காதல் என்கிற வார்த்தை இந்தியாவில் உள்ள எத்தனை மொழியில் சொன்னாலும் எல்லாருக்குமே புரியும். உனக்கு புரியவில்லை என்றால் நம்ப முடியலையே? பொய் சொல்ற அம்மாயி நீ? நுன்னு நட்டு அபத்தும் செப்புதுன்னாவா அம்மாயி (என் கிட்ட பொய் சொவ்லுவியா பொண்ணே)?" என்றவன் "நான் கேட்டதுக்கு நீ என்ன பதில் சொல்லவே இல்லை. காதலா?" என்று கேட்டான் சற்று சீற்றமாக.
உள்ளுக்குள் ரயிலின் வேகத்தோடு இதயம் தடதடக்க அவன் கண்களை பார்க்கவே முடியாமல் முகத்தை திருப்பி இல்லை என்று தலையாட்டினாள்.
அவன் முகத்தை அவள் பார்க்கவில்லை. பார்த்து இருந்தால் தெரியும் அது எத்தனை உக்கிரமாக இருந்தது என்று அவளுக்கு தெரிந்திருக்கும். அவள் கூறிய அந்த ஒற்றை வார்த்தை நரசிம்மனின் உக்கிரத்தோடு இருந்தவனை லீலைகள் புரியும் கிருஷ்ணனாய் மாற்றியது. "அப்போ காதல் இல்லாமல் ஒரு கல்யாணம்" என்றதும் அவனை முறைத்துப் பார்த்தவள் "இந்தியாவில் நடக்கும் என்பது பர்சண்ட் திருமணங்களில் எல்லாம் காதல் என்ற ஒன்று கல்யாணத்துக்கு பின்னாடி தான். முதலில் காதல் பண்ணி கல்யாணம் என்கிறது தாத்ரி மாதிரி சில பேரு தான்" என்று மெல்லிய குரலில் கூறினாலும் அவளது கருத்தை அழுத்தமாக பதிவு செய்தாள் அவனிடம்.
உண்மையில் அதுதான் வேண்டியது அவனுக்கும். அது கிடைத்ததும். "உண்மைதான் காதல் கத்திரிக்காய் இதையெல்லாம் அடுத்த நோக்கமே கட்டில் தானே?" என்றான் அலட்சியமாக.
இவள் சட்டென்று அவனது முகத்தைப் பார்த்து அருவருப்போடு திரும்பிக் கொண்டாள். "காதல் கல்யாணம் எல்லாம் எவ்வளவு புனிதம் என்று இவனுக்கு தெரியல! எப்படி பேசுறான் பாரு? அக்கா எப்படி இவனோட குடும்பம் நடத்துறான்னு தெரியல" என்று முணுமுணுத்துக் கொண்டாள்.
அவள் இரண்டு விரல்களால் சொடுக்கிட்டவன் "என் முன்னாடி பேச உனக்கு தைரியம் இல்லை எனும் எனக்கு தெரியும். அதுக்கு தான் நீ என்ன பத்தி முணுமுணக்குற. உனக்கு தான் தைரியம் கிடையாது ஆனால் எனக்கு இருக்கு.. சத்தமா பேசு" என்றதும் அவள் அமைதியாக இருந்தாள்.
"பேசு அம்மாயி" என்று சற்றே குரலை உயர்த்தி கத்த திடுக்கிட்டவள் கொஞ்ச நேரத்திற்கு முன் தான் நினைத்ததை அப்படியே கூறினாள். அவளை கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தவன் பின்பு இருக்கையில் சாய்ந்து ஹா ஹா என்று சத்தமாக சிரித்தான்.
எதற்கு இவன் ராட்சசன் மாதிரி சிரிக்கிறான் என்று மனதுக்குள் பயந்தாலும் 'உண்மையில் இவன் ராட்சசன் தான்! டீமன் அரக்கன்' என்று அவனை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்தாள். ஆனால் முகம் அத்தனை சாதுவாக இருந்தது.
அவள் அமைதியாக இருக்க அதுவரை இலகுவாக கேட்டவன் "ஏன் சிரிச்சேன் கேளு அம்மாயி" என்று கர்ஜிக்க.. மீண்டும் உடல் ஒரு முறை தூக்கி போட திக்கி திணறி ஏன் என்று கேட்டாள். அதில் எழுத்து என்னவோ இரண்டு எழுத்து தான் ஆனால் அவனின் முன்னிலையில் அது வெளிவர அத்தனை நேரம் பிடித்தது.
"ஏன்னா இந்த லவ் மேரேஜ் இதெல்லாம் சுத்த ஹம்பக். இதெல்லாம் ஜஸ்ட் பூசி மொழுகுற வார்த்தைகள். எல்லாத்துக்கும் காரணம் இந்த ஹார்மோன்களின் சித்து விளையாட்டுக்கள் மட்டுமே.. அட் எண்ட் எல்லாமே லஸ்ட் தான்" என்றவன் அவளையே ஊடுருவி பார்க்க அவனது பார்வையில் உடல் கூச, ஏற்கனவே போட்டிருந்த சுடிதார் ஷாலை ஒரு முறை நன்றாக இழுத்து விட்டுக் கொண்டாள்.
சிறிது நேரம் அவனிடமிருந்து பேச்சு வரவில்லை என்றதும் அவள் "எனக்கு வேலை இருக்கிறது" என்று எழுந்து கொள்ள போக,
"உட்காரு சித்ரலேகா. இது என் கோட்டை. என் ராஜ்ஜியம். என் அனுமதி இல்லாமல் உன் கண் இமைகள் கூட சிமிட்ட கூடாது" என்றான் ஆழ்ந்த குரலில். அவளும் அமைதியாக இருந்தாள். ஆனால் நிமிர்ந்து அவனை பார்க்கவில்லை. எவ்வளவு நேரம் அவளை அப்படியே அமர்ந்து வைத்திருந்தான் என்று அவனுக்கும் தெரியவில்லை அவளுக்கும் தெரியவில்லை.
"எல்லாம் இந்த கல்யாணம் வரைக்கும் தான். அதற்குப்பின் இத்தனை உரிமையோடு என்னை அதட்டி உருட்ட உன்னால் முடியாது" என்று அவள் மனதில் நினைத்துக் கொண்டிருந்தாள் தன் போக்கில்.
"போய் லன்ச் சாப்பிட்டு வா" என்று
அவன் கூற…
"என்னது லஞ்சு சாப்பிட்டு வரவா? அடப்பாவி காலையில் டிபன் முடிச்சு வந்தவளை இவ்வளவு நேரம் சும்மாவே உட்கார வைத்து பார்த்து இருக்கிறியே? நீயெல்லாம் என்ன மனுஷன் டா" என்று மனதுக்குள் அவனை திட்டிக் கொண்டு மெல்ல எழுந்தவள் கதவு அருகே சென்றவளின் மனதில் "எல்லாம் கல்யாணம் வரை தான். பொறு மனமே!" என்று நினைக்க..
அவள் மனதினை படித்தவன் போல "இந்த கல்யாணம் நடக்கணும்னா அது நான் மனசு வச்சா மட்டும் தான் முடியும்!" என்றான் எகத்தாளமாக!
சட்டென்று ஒரு கோபம் உண்டது எரிச்சல் வந்தது சித்ரலேகாவுக்கு. அதுவும் காலைல இருந்து ஒரே இடத்தில் அவளை அமர்த்தி வைத்திருந்தது வேறு கை காலெல்லாம் சற்று வலிக்க திரும்பி அவனை முறைத்தவள் "நீங்க என்ன சொன்னாலும் இந்த கல்யாணத்தை நான் நிறுத்த மாட்டேன். சிவப்பிரசாத் உடனான என்னுடைய கல்யாணம் கண்டிப்பாக நடக்கும். நடந்தே தீரும்" சாமி வந்தவள் போல கத்தினாள்.
'இவன் இப்படியே சுற்றினால் இவன் வாழ்க்கையோடு தொடர்புடைய தாத்ரி வாழ்க்கை வீணாவதோடு துரோகி என்ற பெயரை வாங்கி என் வாழ்க்கையும் அல்லவா வீணா போகும். இவன் ஒருவனால் எத்தனை பேர் வாழ்க்கை தான் வீணாவது?' என்று நினைத்தபடி தன்னை மீறி ஆத்திரம் பொங்க கத்தி விட்டாள்.
இவ்வளவு பேசியதற்கு அவன் ஏதாவது திரும்பி பேசுவானோ இல்லை எதிர்ப்பானோ என்று எதிர்பார்த்து அவள் நின்றிருக்க, இராவணன் நிதானமாக அவளை நெருங்கி "நான் எப்போ இந்த கல்யாணம் நடக்காதுன்னு உன்கிட்ட சொன்னேன். இல்ல நிறுத்த போறேன்னு ஏதாவது சொன்னானா?" என்று சுட்டு விரலை அவள் முன் ஆட்டி இல்லை என்று மறுத்தவன் "இந்த கல்யாணம் கண்டிப்பாக நடக்கும். கெட் ரெடி ஃபார் மேரேஜ் அம்மாயி" என்று அவளது கன்னத்தில் தட்டி விட்டு இவன் வெளியேற, செல்லும் அவனை புரியாத புதிராய் பார்த்து நின்றிருந்தாள் சித்ரலேகா.
சொன்னது போலவே கல்யாணம் வெகு பிரம்மாண்டமாக நடந்தது. ஆனால், சித்ரலேகாவின் கழுத்தில் தாலி கட்டியது சிவப்
பிரசாத் அல்ல இராவணன்.. விஷ்ராவணன்.
தொடரும்…
