யட்சன் 19

 

(@manvi-aathreesh)
Member Moderator
Joined: 3 weeks ago
Messages: 35
Thread starter  

அத்தியாயம்: 19

 

தாத்ரி அம்மா அப்பாவோடு சென்னையில் இருந்து விட்டு வருகிறேன் என்று வரலட்சுமியிடம் அனுமதி கேட்டவள், அம்மாவையும் தங்கையும் பிரிந்து இருக்க முடியவில்லை என்று ராவணனிடம் கதை அளந்தவள் வந்து ஒரு நாள் மட்டுமே வீட்டில் தங்கினாள்.

 

அடுத்த இரண்டு நாட்கள் முழுக்க வெளியில் தான் ஆட்டம் போட்டாள், திரும்பவும் அவளது நண்பர்களோடு.. முன்ன இருந்த நண்பர்கள் பலர் வேற வேற ஊரில்… வேற வேற நாட்டில் குடும்பம் தொழில் என்று செட்டில் ஆகி இருந்தாலும், இரண்டு மூன்று நாட்கள் தானே என்று வேலையில் இருந்து விடுப்பு போட்டு வந்தவர்களும் உண்டு. குடும்பம் தொழில் என்று வராமல் இருந்தவர்களும் உண்டு.

 

அதே ஊரில்  மீண்டும் நட்புகளோடு சில நாள் கழிக்கலாம் என்று வந்தவர்களும் உண்டு. ஆக மொத்தம் வீட்டுக்கு வராமல் காலையில் செல்பவள் தோழிகள் நண்பர்களோடு மால் ரெஸ்டாரண்ட் சுற்றி இருக்கும் இடங்களில் எல்லாம் சுற்றி விட்டு கடைசியாக இரவில் பப்புக்கு வந்து குடித்துவிட்டு ஆட்டம் போட்டு அதற்கு பின்னே வீடு வந்து சேர்ந்தாள்.

 

அதுவும் இரவில் வரும்போது சிவப்பிரசாத்தை கூட்டிக் கொள்வாள். அவனும் தோழிக்காக என்று அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு தான் செல்வான். இப்படியாக தாத்ரி சென்னை வந்து நான்கு நாட்கள் ஓடிவிட்டது. 

 

இந்த நான்கு நாட்களும் தனிமை கிடைக்கும் நேரத்தில் இராவணனனது நெருக்கம் அதிகமானது. நெருக்கத்தை சித்ரா தவிர்த்தாள். அப்படி தவிர்த்த வேளைகளில் அவனின் அழுத்தமும் அவன் கொடுத்த வலியும் அவளை மிரளகச் செய்தது.

 

அன்றும் அதுபோல படம் வரைந்து கொண்டிருந்தவளின் பின்னால் நின்று கொண்டு இடையில் கையை அழுத்தமாக வைத்து அவளை ஒட்டி நின்றவரே அந்த படத்தை அவன் பார்க்க… இவளோ அவனின் அணைப்பு பிடிக்காமல் "கையை எடுங்க.." என்று மெல்லிய குரலில் கூறி நெளிந்து கொண்டே நின்றாள்.

 

"ஏன் அம்மாயி… நல்லா தானே இருக்கு. சில்க் மாதிரி சாப்டா பளபளப்பா" என்று அவன் மெல்ல இடையை வருட..

 

'இன்று பார்த்தா சேரியில் வரவேண்டும் நான்?' என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

 

ஏனென்றால் கலாவதி காலையிலேயே இவளை கோவிலுக்கு போகவேண்டும் புடவை கட்டு என்று விட்டார். உடம்பு இவளுக்கு சரியில்லாத போது வேண்டிக் கொண்டாராம். 

 

"அதுக்கு எதுக்கு பெரியம்மா புடவ.. சுடிதார் போட்டுட்டு வரேன்" என்றவளை வலுக்கட்டாயமாக கட்டி வர பணித்தார்.

 

"நிறைய புடவை வாங்கி வச்சிருக்கேன் சித்து.. கட்டிட்டு  வாடா. நீயும் உங்க அக்கா மாதிரியே பண்ணாத"என்று கன்னத்தை பிடித்து வருடியதும் மலை இறங்கினாள்.

 

தாத்ரி உடை விஷயத்தில் முதலாவது கலாவதியின் மூக்கை நுழைய விட்டது இல்லை.

 

ஏதாவது சொன்னால் முகத்தில் அடித்த மாதிரி பேசி விடுவாள். காலாவதிக்கு மகளை இப்படி உடுத்தி பார்க்க வேண்டும், அப்படி அழகு உ பார்க்க வேண்டும் என்றே எண்ணம் இருப்பதை தாத்ரியால் புரிந்து கொள்ள முடியாது. தன் மன அபிலாசைகளை விருப்பத்தை சித்ரா விடும் நிறைவேற்றிக் கொள்வார் கலாவதி.

 

அதனால் அவர் ஆசைப்படி புடவை கட்டிக்கொண்டு காலையில் கோவிலுக்கு சென்றவள், அங்கு அவள் பேரில் சிறப்பு அபிஷேகம் அன்னதானம் நடைபெற்றது. எப்பொழுதும் போல பெரியம்மாவின் அன்பில் கரைந்து போனாள் சித்ரலேகா.

 

அதோடு அப்படியே ஆபீசுக்கு வந்த தன் முட்டாள்தனத்தை நூறாவது தடையாக நொந்து கொண்டு அவன் கையை பிடிக்க உயர்ந்து தோற்று அவனை பாவமாக பார்த்தாள். 'என்னை விட்டு விடேன்!' என்றது அவள் பார்வை…

 

அவனோ வெகு சீரியஸாக அவளிடம் அவள் வரைந்த ஓவியங்களில் உள்ள சில குறைகளை கூறி நிறைவான இடங்களை பற்றி விவாதித்தான். இவளால் முழு மனதோடு அதில் கலந்து கொள்ள முடியவில்லை. அதே நேரம் இடையில் இவன் நடத்தும் ஜாலங்களை பொறுத்துக் கொள்ளவும் முடியவில்லை.

 

அப்போதுதான் அவளது வாய் சும்மா இல்லாமல் சனீஸ்வரனை வாடகை வாங்கியது. "உங்களை விட சிவா பாவா நல்லவர். ஜெம் பெர்ஷன்" என்று கூறிவிட்டாள். அதிலும் சிவா என்றதைவிட அவனுக்கும் பாவா என்று அடைமொழி கொடுத்து கூறியதை இந்த முதல் பாவாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவன் கைகள் நன்றாக இடையில் அழுத்தத்தை அதிகரித்தது.

 

அவனோடு நிற்க பயந்து விழி விரித்தவளின் கண்களுக்குள் ஆழ்ந்து பார்த்தவன் "இன்னொரு முறை பாவானு அவன சொன்ன.. சொல்வதற்கு முன் இந்த அழகிய லிப்ஸ் இருக்காது அம்மாயி" என்றான் கண்களில் அனலை காட்டி.

 

"இல்ல.. இல்ல… சொல்லல.." என்று மெதுவாக அவள் உச்சரித்த பின்னே தான் இவன் அழுத்தத்தை குறைத்தான். ஆனால் அப்போதும் விடுவித்தான் இல்லை.

 

"வாட் டூ யூ மீன்?" என்று நெற்றி சுருங்க கேட்டான்.

 

"உங்கள மாதிரி அவர் கிடையாது என்னை இப்படி எல்லாம் டச் பண்ணி பேசவே மாட்டார். சிறிதளவே தெரியாம தீண்டினா கூட அத்தனை தடவை சாரி கேட்பார். ஆனா நீங்க… பொண்டாட்டியாய் தாத்ரி வச்சுக்கிட்டு என்கிட்ட இப்படி எல்லாம் நடக்குறீங்க? சுத்தமா உங்கள எனக்கு பிடிக்கவே இல்லை. கொஞ்சம் கூட பிடிக்கவே இல்லை!!" என்று அழுகையை விட கூறினாள்.

 

பதிலுக்கு ஏதோ அவன் சொல்ல வாய் திறக்கும் முன் "சித்து.." என்று கூறிக்கொண்டு உள்ளே சிவப்பிரசாத் வர.. சட்டென்று அவளை விலகியவன் "நான் சொன்ன கரெக்ஷன் எல்லாம் பார்த்து கரெக்ட்டா நோட் பண்ணி வச்சுக்கோ.. சும்மா இப்படி அழுதுகிட்டு இருக்காத" என்றதோடு அவன் சென்று விட்டான்

 

இராவணன் இறுக்கிப்பிடித்த இடையை மெதுவாக வருடி கொடுத்தாள். "சரியான முரடன் காட்டுமிராண்டி!" என்று முணுமுணத்துக் கொண்டாள்.

 

"ஓ சாரி சித்து! அண்ணன் கொஞ்சம் அப்படித்தான். கொஞ்சம் முரட்டுத்தனமா பிஹேவ் பண்ணுவான். ஏதாவது பேசி இருந்தா.. நான் சாரி சொல்கிறேன்" என்றான்.

 

அண்ணனுக்காக வருந்திய இவனை கண்டதும் அவள் மனதிற்குள் அப்போதுதான் அந்த எண்ணம் இருந்தது. ‌

 

வேறு யாரை திருமணம் செய்து கொண்டாலும் இவன் எதுவும் செய்ய முடியும். ஆனால் சொந்த தம்பி என்றால் இவனால் நெருங்க முடியாது அல்லவா. ஒரே வீட்டுக்குள் தம்பி மனைவியிடம் அத்துமீற முடியாது அல்லவா? என்று நினைத்தவளுக்கு கொஞ்சம் போல கண்களில் மின்னல் வெட்டியது.

 

அன்று இரவு மீண்டும் தாத்ரி அப்பாவிடம் பேசினாள். முதலில் ஆறப்போட்டவள் அதன் சாதக பலன்களை அவர்கள் யோசிக்கட்டும் என்று அவ்வப்போது அம்மாவும் மூலம் ஸ்குரு கொடுத்து அனுப்பி இருந்தார். இப்பொழுது மீண்டும் அவள் கேட்க ரங்கராஜனும் மனைவியை பொறுமையாக பார்க்க.. அந்த பார்வை சொன்னது 'இனி ஒரு வார்த்தை கூட நீ பேசக்கூடாது' என்று அதிலேயே பவ்யமாக தலையாட்டிக் கொண்டார் கலாவதி.

 

"இங்க பாரு தேவி.. ஏற்கனவே உன்கிட்ட சொன்னது தான். இப்படி தெரியாத இடத்துல எல்லாம் அவளை கொண்டு போய் என்னால கொடுக்க முடியாது. அவளோட கேரக்டருக்கு உங்க மாதிரி வீடு செட்டே ஆகாது. அவளுக்கு தகுந்த மாதிரி மாப்பிள்ளை தேடி கண்டுபிடிச்சு நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் நீ இந்த பேச்சை இனிமேல் எடுக்காதே!"

என்றார தீவிரமாக.

 

இப்படிப்பட்ட குரலில் தந்தை பேசிவிட்டால் அதற்கு பின் அவரது முடிவை மாற்ற யாராலும் முடியாது என்பதை மகள் நன்றாக அறிந்து வைத்திருந்தாள்.

 

அது மட்டுமல்ல இவரை இந்த பேச்சில் சித்ராவை அவள் உள்ளே நுழைக்கவில்லை. இப்பொழுது சித்ராவின் நிலை ஆட்டத்தை மாற்றி அமைக்க யோசித்தாள் சதுரங்க ராணியாக.

 

"சரிப்பா நான் உங்க பேச்சை சம்மதிக்கிறேன். ஆனால் இந்த விஷயத்தை சித்து கிட்ட நீங்க பேசுங்க. அவளுக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டா நான் இந்த பிரச்சனையை.. இந்த ப்ரொபோஸலை இதுக்கு மேல நான் கண்டினியூ பண்ணல" என்றாள்.

 

தாத்ரிக்கு பெரும் நம்பிக்கை இவ்வளவு நாளில் கண்டிப்பாக சிவபிரசாத் அவள் மனதில் இடம் பிடித்திருப்பான். அதே நேரம் அம்மாவின் பேச்சையும் அவள் கேட்பாள். அம்மாவை இன்னும் கொஞ்சம் பிரைன் வாஷ் பண்ணினால் போதும் என்று எண்ணம் அவளுக்கு. அதே நேரம் ரங்கராஜனும் பெரிய மகள் சொன்னதும் சிறிய மகளை தான் பார்த்தார்.

 

தாத்ரி "என்ன சித்து உனக்கு ஓகே தானே?" என்றதும் அப்பொழுதுதான் 'அன்று... வந்தன்று இவள் இதை சொல்லித்தான் நம்மிடம் பர்மிஷன் கேட்டு இருக்கா.. நாம தான் சொதப்பிட்டோமோ' என்று புரிய..

 

ஆனால் இப்போது இருக்கும் நிலையில் சிவப்பிரசாத்தை திருமணம் செய்து கொள்வது தான் மிக உசிதமான காரியம் என்று முடிவு எடுத்தாள் சித்ரலேகா. ஆனால் அதுதான் பலரின் வாழ்க்கையை காவு

வாங்க காத்திருக்கிறது என்பதை அப்பொழுது அவள் அறியவில்லை.

 

தொடரும்….

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top