அத்தியாயம்: 18
நீராலி மண்டபத்தின் குளியல் அறை பகுதியில் சிங்கம் முகம் ஒன்று அழகாக வீற்றிருக்க.. அதில் வாயிலிருந்து தண்ணீர் ஊற்றுவது போல் இல்லை. ஒரு பட்டனை அழுத்தினால் அதுவரை சாதாரணமாக இருந்த சிங்கத்தின் பிடரிகள் நொடியில் சிலிர்த்து போல மாற, அதில் இருந்து தண்ணீர் வெளிவந்து, அந்த நீச்சல் குளத்தில் அழகாக பீச்சி அடித்தது. அதை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தாள் சித்ரலேகா.
"சிவா செமையா இருக்கு.
உங்க அண்ணன் இந்த டிசைன் வரையும்போது கூட எப்படி இருக்கும்னு நான் எதிர்பார்க்கல"
என்றாள். அவளை பார்த்து சிரித்தவன் "எங்க அண்ணய்யா இதுல எல்லாம் கரைச்சு குடிச்சவரு. உன்னோட ட்ராயிங்க்ல அன்னைக்கு சிங்கமுகம் வரைந்து வைத்திருந்தாரு. அதை ஏதோ ஒரு பாரின் டெக்னாலஜி யூஸ் பண்ணி இப்படி பண்ணலாம்னு சொல்லி உடனே பண்ணிட்டாரு. நல்லா இருக்குல்ல சித்து?"
"ரொம்ப நல்லா இருக்கு" என்று அவளும் பாராட்டினாள்.
அதற்குள் ஒர்க்கர்ஸ் மேனேஜர் வந்து "சார்.. ஒர்க்கர்ஸ் கொஞ்சம் பிரச்சனை பண்றாங்க.. கொஞ்சம் என்னன்னு வந்து பாருங்க சார் என்னால சமாளிக்க முடியவில்லை" என்றதும் "நீங்க போங்க.. நான் வரேன்" என்றவன் "சித்து பார்த்து இருந்துக்கிறியா? என்னான்னு பாத்துட்டு உடனே வந்துருவேன். இது மட்டும் என் அண்ணாய்யாவுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்! அடுத்த முறை பேச மாட்டார் ஒன்லி ஆக்சன் தான்" என்று துப்பாக்கி வைத்து சுடுவது போல சுட்டிக்காட்டி விட்டு அவன் சென்றான்.
அந்த சிங்கமுகத்தை இவள் பார்த்துக் கொண்டிருக்க.. அவளை ரசித்தவாறு பிடரியில்லா சிங்கமாய் அவள் பின்னே நின்றிருந்தான் இராவணன். அவனின் மூச்சுக்காற்று உஷ்ணமே அவனை அவளுக்கு தெரியப்படுத்தியது. தொண்டைக்குழி ஏறி இறங்க மெல்ல பயத்தோடு அவள் திரும்பிப் பார்க்க…
"என்ன அம்மாயி உடம்பு பரவா இல்லையா?" என்றதும் இவளுக்கு பதில் பேச்சுக்கு வாய் வரவில்லை தலையை மட்டும் ஆட்டினாள்.
"உடம்பு நல்லா ஆயிடுச்சின்னா அப்ப வர வேண்டியதுதானே.. ஏன் வரல? உங்க அப்பா ஆஃபீஸ்க்கு எதுக்கு நீ போன?" என்று கைகளை பேண்டில் விட்டபடி நிமிர்ந்து நின்று கேட்கும் அவனிடம் பொய் சொல்ல நாக்கு ததுங்கிநத்தோம் ஆடியது.
உண்மையில் இவனுக்கு பயந்து தான் அவள் செல்ல நினைத்தாள். 'கொஞ்ச நாள் அப்பா ஆஃபீஸில் இருப்போம். எப்படியும் தாத்ரி இவனும் சென்னை வீட்டு கிளம்பியதும் மீண்டும் அங்கு ப்ராஜெக்ட் இடத்துக்கு செல்லலாம்' என்று தான் அவள் கனவு கோட்டை கட்டி வைத்திருந்தாள். அத்தனையும் ஒற்றை வாள் வீச்சில் தகர்க்கும் பெரும் சத்ரியனாய் அவளின் திட்டத்தை தகர்த்தவன்,
அவள் முன்னே அவளை இங்கு அழைத்து வந்தது தான் என்று கூறினான்.
"நீ பயந்து ஓடினால் அப்படியே உன்னை விட்டுவிடுவேனு நினைத்தாயா அம்மாயி? எப்படி உன்னை என்கிட்ட கூட்டிட்டு வந்தேன் பாத்தியா!" என்று இடது புருவத்தை உயர்த்தி அவன் கூறிய தினுசில் அவளுக்கு நெஞ்சு கூடு காலியானது.
தன் அண்ணன் திட்டுவதாக வந்து கலக்கம் நிறைந்த குரலில் பேசிய சிவப்பிரசாத் ஞாபகத்திற்கு வந்தான். 'ஆக அனைத்தும் இவன் பிளான்னா?' என்று அவள் கண்களிலேயே கேட்க "அவுனு அம்மாயி" என்று ஸ்டைலாக ஒற்றை தோளைக் குலுக்கி கொண்டான்.
"அப்படி என்ன பயம் என்னிடம்? நான் வந்து உன்னை சிங்கம் மாதிரி பிடிச்சு தின்றுவேனா?" என்றவன் பற்களை கடிப்பது போல அவளது தொண்டை அருகே கொண்டு சென்றான்.
அதில் அவள் பயந்து இரண்டு அடி பின்னி வைக்க தனது ஒற்றை கையால் அவள் இடுப்பை பிடித்து விழாமல் தடுத்தவன் "அப்படி எல்லாம் என்னிடம் இருந்து நீ தப்பிக்க முடியாது" என்றான்.
அவளுக்கு நாக்கு மட்டுமல்ல உடம்பே தந்தி அடித்தது. "பாவா இதெல்லாம் தப்பு" என்று அவள் திக்கி திணறி கூறும் முன்னே "என் பேர் என்ன தெரியுமா ராவணன்" என்று சொல்லி கொஞ்சம் விகாரமாக சிரித்தான்.
அதில் இன்னும் நடுக்கம் கொண்டது பெண். எங்கே டாட்டா பாய் சொல்லிட்டு சென்ற காய்ச்சல் திரும்ப வந்து விடுமோ என்று பயம் வேறு அவளுக்கு.
அவள் மேனி நடுங்குவதை அவன் கைகள் நன்றாக உணர மெல்ல அவளை விடுவித்ததும் தான் நெஞ்சில் கை வைத்து அசுவாசப்படுத்திக் கொண்டாள். ஆனாலும் இன்னும் கலக்கமாக தான் அவனை பார்த்தாள்.
"என்ன ஆனது இந்த பாவாவுக்கு? அழகிய மனைவியை வீட்டில் வைத்துக்கொண்டு என் பின்னால் ஏன் இப்படி சுற்றுகிறான் இவன்? அதுவும் மனைவியின் தங்கையிடமே.. நினைக்கவே அருவருப்பாக இருக்கிறதே.. இவனெல்லாம் என் மனுசன்?' என்று வெளியே பேச தைரியம் இல்லாமல் மனதுக்குள்ளயே அவள் அவனைப் பற்றி கோபமாக குழம்பிக் கொண்டிருந்தாள்.
சட்டென்று அவளை நெருங்கியவன் அவளது கன்ன தாடைகளை இறுக்கமாக படித்து தன் முகத்திற்கு அருகே இழுத்து "ரொம்பலாம் குலம்பாத போன ஃபீவர் திரும்ப வந்துரும். அடுத்த முறை பீவர்னு நீ வீட்டில் படுத்தேனா .. பிரசாத் வரமாட்டான். நானே வருவேன்! வந்து உன்னை தூக்கிட்டு வந்திடுவேன் புரியுதா அம்மாயி?" என்றதும் அவளது தலை அவளது சம்மதம் இல்லாமலேயே அவனுக்கு சம்மதம் சொன்னது.
அவன் எவ்வளவு வேகமாக அவளது கன்ன தாடைகளைப் பற்றினானோ அதைவிட வெகு மெதுவாக அவளது கன்னத்தை உரசி கொண்டே கைகளை எடுத்தான் "குட்! மன்சி பிள்ளா அம்மாயி!" என்று அவள் கன்னத்தை தட்டி விட்டு சென்றான்.
அவன் தட்டி சென்றதும் அங்கமெல்லாம் அவளுக்கு அனல் கொண்டு பூசியது போல எரிந்தது. இது யாரிடமும் சொல்ல முடியாமல் தனக்குள் போட்டு அவள் தவித்துக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில் சிவப்பிரசாத் வந்துவிட அவனிடம் பேச முடியாமல் இவள் தடுமாறினாள். ஆனால் இந்த தடுமாற்றமும் சிவப்பிரசாத்துக்கு இல்லை அல்லவா அவன் எப்பொழுதும் போலவே உரையாட, இவள் அனைத்திற்கும் ஆம் இல்லை என்று ஓரிரு வார்த்தைகளில் மட்டுமே பதில் அளிக்க..
"என்ன சித்து திரும்பவும் ஃபீவர் வந்துட்டா?" என்று அவன் அவளை நெற்றியில் தொட மோக அவனது கையைத் தட்டி விட்டு விலகி நின்று அவனை முறைத்தாள்.
"ஓ சாரி! இன்டென்ஷனா இல்ல ஜஸ்ட் பீவர் இருக்கான்னு தான் பார்த்தேன். நீ ஒன்னும் தப்பா எடுத்துக்காதே..ப்ளீஸ் சித்து" என்றான் பதறி போய். அப்படிப்பட்ட அண்ணனுக்கு இப்படிப்பட்ட தம்பியா என்று இருவரையும் ஒப்பிட்டுப் பார்த்தாள்.
இந்த பிரச்சனை அவனின் நெருக்கம் அன்றோடு முடியவில்லை. அது தொடர் கதையானது. எப்பொழுது எங்கிருந்து வருகிறான் என்றே தெரியாது. புயல் போல் வருபவன், பூவை அவளை அணைத்து ஆக்கிரமித்து அவனின் அச்சாரத்தை அவளில் விட்டுவிட்டு செல்வான்.
மிகவும் சோர்ந்து போனாள சித்து. மனம் அமைதியாக நிம்மதியாக சந்தோஷமாக இருந்தால் தான் அது நம் உடலிலும் முகத்திலும் பிரதிபலிக்கும். ஆனால் மனதில் ஏகப்பட்ட அழுத்தங்கள் அவளை அழுத்திக் கொண்டிருக்க வீட்டில் யாரிடமும் பகிர முடியாமல் ஏன் இரவில் பேசும் அண்ணனிடம் கூட கூற முடியாமல் தனக்குள்ளேயே மருகிக் கொண்டிருந்தாள் சித்ரலேகா.
ஆனால் அப்படி மருகி கொண்டிருந்தவள் திடகாத்திரமான முடிவை எடுக்க வைத்தான் ராவணன். அதாவது சிவப்பிரசாத்தை திரு
மணம் செய்து கொள்ளலாம் என்ற பெரும் முடிவு.
தொடரும்…
