யட்சன் 17

 

(@manvi-aathreesh)
Member Moderator
Joined: 3 weeks ago
Messages: 35
Thread starter  

அத்தியாயம்: 17

 

ரங்கராஜன் சம்மதிக்காமல் சென்று விட, தந்தையிடம் இருந்து இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்காத தாத்ரி விக்கித்து அமர்ந்திருந்தாள். அவளது கல்யாணததின் போதும் அவருக்கு கொஞ்சம் பிடித்தமின்மை தான். ஆனாலும் மகள் காதலிக்கிறாள் அதுவும் பெரிய இடம் என்று ஒத்துக் கொண்டிருந்தார்.

 

ஆனால் கண் காணாத தூரத்தில் தெரியாத குடும்பத்தில் இன்னொரு மகளையும் கொடுக்க அவருக்கு கொஞ்சமும் விருப்பமே இல்லை. அதுவும் தாத்ரி மாதிரி சித்ரா இல்லை. மென்மையான குணம் கொண்ட அவளுக்கு அந்த வீட்டில் நடக்கும் அரசியல் ஒத்து வராது. 

 

"என்னதான் தாய் தந்தை ஸ்தானத்தில் நாம இருந்தாலும் பெற்றவர்கள போல் ஆகாது அல்லவா? அதனால் சித்து போற இடத்தில அவளைத் தாங்குகிற மாதிரி மாமியார் வேண்டும் கலா" என்று இரவில் மனைவியிடம் கூறிக் கொண்டிருந்தார் ரங்கராஜன்.

 

ஏனென்றால் தாத்ரியின் கூற்று கலாவதிக்கு சரி என்று பட்டது. இரு பெண்களும் ஒரே குடும்பத்தில் இருந்தால் இவள் அவளையும்.. அவள் இவளையும் பார்த்திப்பாள். இங்கே உள்ளது போல குடும்ப ஒற்றுமை அங்கேயும் தொடரும் என்று நினைத்திருந்தார். அதை கணவனிடமும் அவர் வலியுறுத்த…

 

"என்ன ரங்கராஜனையும் மணிகண்டராஜனையும் மாதிரி அங்கு நாராயண ரெட்டியும் சீனிவாச ரெட்டியும் ஒன்னும் நினைச்சியா? அவங்க குடும்பத்தில் உள்ள எவ்வளவு பாலிடிக்ஸ் நடக்குதுன்னு தெரியுமா? ஏன் நாராயணன் திடீர்னு இறந்த அந்த நேரத்துல அவரு தம்பியே பண்ணி இருக்கலாம் என்கிற மாதிரி நிறைய கருத்து உலாவிட்டு இருந்திச்சு‌. இதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது. அதுவும் அந்த ஜலஜா அம்மா நம்ம சம்மந்தமா போல கிடையாது. பணக்காரங்கறத மண்டையில ஏத்தாம மனுஷங்களை ஓரளவு மதிக்கிற பணம் கொண்டவங்க வரலெட்சுமி அம்மா..‌ ஆனால் அந்த சிவபிரசாத்தோட அம்மா இருக்காங்களே அவங்க கண்டிப்பா அப்படி இருக்க மாட்டாங்க. நம்ம பொண்ணு அங்கேயே போய் கஷ்டப்பட வேண்டாம். நம்ம சொந்தத்திலேயே நம்ம ஊர்லயே பார்த்துக்கலாம்" என்றார் பிடிவாதமாய்.

 

கலாவதிக்கு இரண்டுங்கட்டான் நிலைமை. சில சமயம் மகளிடம் பேசும்போது மகள் சொல்வது ஏற்புடையதாக இருந்தது. கணவனிடம் சொல்லும் போது கணவன் சொல்வது ஏற்புடையதாக இருக்கிறது.

 

"இதில் எதை நான் ஒத்துக்கிட்டு யாருக்கு நான் தலையாட்ட?" என்று அவர் தான் தலைக்கு குழம்பிப் போனார். பகலில் ரங்கராஜன் அவர்களது அலுவலகத்திற்கு சென்றவுடன் அன்னையைப் பிடித்து அவருக்கு மண்டை சலவை செய்வாள் தாத்ரி. "அப்படியே அப்பா கிட்ட ஒப்பிக்கணும்" 

 

ஆனால் அவரோ கணவனிடம் இரண்டு ஒரு வார்த்தை பேசும் முன்பே ரங்கராஜன் மீண்டும் தன் கருத்துக்களை எடுத்து வைக்கும் போது 'ஒருவேளை இவர் சொல்வதும் சரிதானோ?' என்று மீண்டும் கணவனால் மடைத் திறப்பப்பட்டு தாத்ரியிடமே திருப்பி அனுப்பப்படுவார்.

 

"இவங்க ரெண்டு பேருக்கும் இடையில நான் மாட்டிட்டு முழிக்க வேண்டிய தான் இருக்கு. இன்னிக்கு ரெண்டு பேரும் என்னை எப்படி புடிக்கிறாங்க பார்க்கிறேன்" என்று சித்து அறையில் சென்று பதுங்கிக் கொண்டார்.

 

தாத்ரியும் அன்று பகல் முழுக்க பழைய நண்பர்கள் அவர்களுடனான சந்திப்பு என்று மால் பப் என்று சுற்றிக் கொண்டிருந்ததனால் அன்னையை விட்டு விட்டாள்.

 

இரண்டு நாளில் சித்ரலேகாவுக்கும் உடல் நன்றாகி விட மறுநாள் காலை ரங்கராஜனுடைய அவர் அலுவலகத்திற்கு கிளம்பினாள்.

 

"உன்ன தான் ஒரு வாரம் வேலைக்கு போகவேனா லீவு போடுனு சொல்லி இருக்கேன் தானே? அப்புறம் எங்க கிளம்பறேன் சித்து நீனு?" என்று கலாவதி கண்டிப்புடன் கேட்டார்.

 

"பெரியம்மா நான் அந்த சைட்டுக்கு போனால் தான் வேலை பார்ப்பேன். இங்க நான் பெரியப்பா கூட தான் போறேன். அதனால ஒன்னும் பிரச்சனை இல்ல.. பயப்படாதீங்க முடியலன்னா அங்கே படுத்து தூங்கிடுவேன்" என்று வெகுவாக பெரியம்மாவை தாஜா செய்து கொண்டிருந்தாள்.

 

சித்ராவுக்கு உடல்நிலை சரியில்லாததால் அங்கு வேலை பாதியோடு நின்றிருந்தது. அதற்கும் சேர்த்து தம்பியை தான் திட்டிக் கொண்டிருந்தான் ராவணன்.

 

"அவ தான் உடம்புக்கு முடியல லீவுல இருக்கா. உனக்கு ஆல்டர்நேடிவ் யாரையாவது அரேஞ்ச் பண்ணனும் அறிவே இல்லையா? நம்ம ஒர்க்கர்ஸ் எல்லாருக்கும் டெய்லி பே பண்ணல.. கான்ட்ராக்ட் பேஸில ஹையர் பண்ணியிருக்கோம்.

இன்னைக்கு அவங்க வேலை செய்யாம இருந்தா நமக்கு தான் லாஸ்" என்று ஒரு வழியாக்கி விட்டான் தம்பியை இராவணன்.

 

ஏற்கனவே ராவணன் என்றால் இவனுக்கு கொஞ்சம் உதறல்தான். இப்பொழுது அண்ணன் இப்படி பேசவும் இன்னும் பயந்து போனான். எதிர்காலத்தில் தனக்கு வேலை கொடுப்பான இல்லையா என்று தெரியாமல், அடித்து பிடித்துக் கொண்டு ரங்கராஜன் வீட்டுக்கு வந்து நின்றான்.

 

அந்த சமயம் தான் ரங்கராஜ் கிளம்ப.. அவருடன் கிளம்புவதாக சித்ரலேகா காலாவதியிடம் தர்க்கம் செய்து கொண்டிருக்க ன.. "அங்க படுத்து தூங்குவதுக்கு இங்க நம்ம ப்ராஜெக்ட் நடக்குற இடத்துல வந்து படுத்து தூங்கு சித்து. அங்கேயும் தூக்கம் வரும்" என்று பேசியவனை புரியாமல் விழித்தனர்.

 

"நிஜமாவே ஒர்க் எல்லாம் அப்படியே நிக்குது. உனக்கு தெரியும்ல.. நீ அடுத்தடுத்து இன்டீரியர் கொடுக்காம அவங்களுக்கு வேலையே இல்லை. அவுட் சைட் வொர்க்ஸ் மோஸ்ட்லி முடிச்சாச்சு. இன்டீரியர் மட்டும் தான் செயய்ணும். உனக்கு புரியுதா இல்லையா?"

 

"ஆனா.." என்றவள் பெரியம்மாவை பார்க்க 

 

"தம்பி அவளுக்கு இப்பதான் உடம்பு கொஞ்சம் தேறியிருக்கு.."  கலாவதி கையை பற்றி கொண்டவன் "என்னையும் கொஞ்சம் நினைச்சு பாருங்க ஆன்ட்டி. இது எனக்கு ஃபர்ஸ்ட் கிடைத்திருக்கிற பெரிய ப்ராஜெக்ட். இவ்ளோ பெரிய ப்ராஜெக்ட் இதுவரைக்கும் நான் என்னோட ஸ்டெடிஸ் முடிச்சு பண்ணதே இல்ல. 3 இயர்ஸ் ஆச்சு இந்த மாதிரி ஒரு ப்ராஜெக்ட் எனக்கு கிடைக்கவே… இது நான் சரியா செய்யலன்னா அவ்வளவுதான் எங்க அண்ணன் என்ன மொத்தமா அதுல இருந்து தூக்கிடுவான்" என்று  மாறி மாறி ரங்கராஜனையும்  கலாவதியையும் தாஜா செய்து 

"அப்படி ஒருவேளை அவளுக்கு உடம்பில் ஏதாவது கொஞ்சம் சுகம் இல்லை என்றாலும் நானே அழைத்து வந்து விட்டு விடுவதாக சத்தியம் அடிக்காத குறையாக அவன் கூறிய பிறகே அவர்கள் விட்டார்கள்.

 

முதலில் அவர்கள் ப்ராஜெக்ட் இடத்திற்கு வந்ததும் அனைத்தும் சாதாரணமாக இருந்தாலும் போகப்போக அன்று நடந்தது நினைவு வந்து மெல்லிய பயத்தால் கவ்வியது அவளது மனதை.

 

"ஆனால் கூடவே சிவா இருக்கும்போது பயப்பட தேவையில்லை" என்று தன்னை தைரியம் மூட்டிக்கொண்டாள்.

 

சிவாவுக்கும் அண்ணன் என்றால் பயம் தான். ஆனால் தம்பியின் முன்னே ஏற்கனவே திருமணம் ஆனவன் மற்றொரு பெண்ணிடம் அத்து மீற மாட்டான் தானே அந்த தைரியம் தான்.

 

மதியம் வரை நன்றாகத்தான் சென்றது. அதற்குப்பின் "பின்னாடி இருக்கிற நீராலி மண்டபத்தில் சில சேஞ்சஸ் பண்ணி இருக்கோம் சித்து.. நீ வந்து ஒரு தரம் பாரு"

 

"எது அந்த சிங்கம் தலை வைத்து, அதிலிருந்து தண்ணி கொட்டுற மாதிரி அதுவா?" என்றதும் "அதே தான். நீ ஃபீவர்ல வராதபோது அந்த வேலையெல்லாம் முடிஞ்சது. நீ ஒரு தடவை பாரு அதுல வேற ஏதாவது பண்ணலாமானு பாரு.. நாம பண்ணிக்கலாம்" என்றபடி அழைத்து சென்றான் அவளை.

 

சிங்கத்தலை கம்பீரமாக இருக்க.. பார்த்தவள் அதை ஆசையாக வருடிக் கொடுத்தவள் முன்னே சிங்கம் என்று வந்து நின்றான் ராவணன்.

 

"லீவு போட்டு உங்க அப்பா ஆபீஸ்க்கு போனா என்னிடம் இருந்து தப்பிச்சிடலாம்னு பாக்குறியே அம்மாயி?" என்றவன் கண நேரத்தில் அவளது கன்னத்து தாடைகளை அழுத்தமாக பற்றி தன் முகத்திற்கு

நேராக இழுத்தவனை கண்டவள் அரண்டு தான் போனாள்.

 

தொடரும்…

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top