யட்சன் 16

 

(@manvi-aathreesh)
Member Moderator
Joined: 3 weeks ago
Messages: 35
Thread starter  

அத்தியாயம்: 16

 

காய்ச்சல் காலையில் தான் கொஞ்சம் மட்டு பட்டு இருந்தது சித்ராவுக்கு. ஆனாலும் மன அழுத்தம் குறையவில்லை.

 

'பாவா ஏன் இப்படி என்னிடம் நெருக்கமாக நடந்து கொண்டார்?' என்ற கேள்விக்கு விடை தெரியாமல், மீண்டும் மனதில் அழுத்தம் வேறு. அதில் உடம்பு மீண்டும் லேசாக காய்ச்சல் காண ஆரம்பித்தது.

 

அந்த நெருக்கம் மட்டும் அவளுக்கு தெரிந்திருந்தது. அன்றிரவே அவளை முத்தாடி இருந்தான் என்று தெரிந்திருந்தால் இன்னும் அவளின் நிலை என்னவாக இருக்குமோ? அவளை அவளே மன்னித்து இருக்க மாட்டாள்.

 

"சித்து..!!" என்ற கூவலோடு வந்த அக்காவை கண்டதும் தேவையில்லாத எண்ணங்களை எல்லாம் விலக்கி விட்டு…  "அக்கா..!" என்று தாத்ரியை அணைத்துக் கொண்டாள்.

 

ஆனால் மனதோ வலித்தது. இவ்வளவு பாசமாக இருக்கும் அக்காவின் கணவனைப் பற்றி உண்மையை அவளிடம் சொல்லி விடலாமா என்று கேள்வி கேட்டது.

 

"வேண்டாம்.. வேண்டாம் நம் துன்பம் நம்மோடு போகட்டும். அக்காவுக்கு தெரிய வேண்டாம். தெரிந்தால் அவள் தாங்கிக் கொள்ள மாட்டாள். அவரை காதலித்து ஆசையாக கல்யாணம் செய்து கொண்டிருப்பவள், ஒருவேளை பாவாவே ஏதோ தெரியாமல் நடந்து கொண்டிருக்கலாம். அந்த ஓவியத்தை பார்த்த ஈர்ப்பில் அவரை மறந்து கூட அப்படி அணைத்து வாக்கில் நின்று வரைந்து இருக்கலாம். அதனால் யாரையும் நாம் போட்டு குழப்ப வேண்டாம். அதோடு.. இந்த விஷயத்தை கூறினால் ஏற்கனவே அக்காவின் திருமணத்தை ஏற்காமல் இருக்கும் பெரியப்பா இப்பொழுது இன்னும் பிரச்சனை பண்ணி அக்காவை வீட்டோடு கொண்டு வந்து விட்டால்… அவளின் ஆசை வாழ்வு என்னாவது? இது எதுவும் யாருக்கும் தெரிய வேண்டாம்" அனைத்தையும் தன் மனதில் போட்டு புதைத்துக் கொண்டு அமைதியாக அக்காவை எதிர்கொண்டாள்.

 

இவ்வளவு நேரம் தன் மனதின் சூழலுக்குள் அவள் சுழன்று கொண்டிருக்க, அவளை அணைத்து கொண்டே தாத்ரி பேசியது எதுவுமே அவளது காதில் விழவில்லை.

 

"என்னடி நான் இவ்வளவு பேசிக்கிட்டே இருக்கேன்.. நீ பாட்டுக்கு அமைதியா இருக்க? உனக்கு ஓகேவா? இல்லையா?" என்றதும் அவள் எதை கேட்கிறாள் என்று முதலில் புரியவில்லை சித்ராவுக்கு.

 

ஒருவேளை உடம்பு சரியில்லாததை பெரியம்மா சொல்லி இருப்பார்கள். அதனால் இப்பொழுது நான் ஓகேவா இல்லையா என்று கேட்கிறாள் போலும் என்று அவளாகவே நினைத்துக் கொண்டு "எனக்கு ஓகே கா!" என்றாள்.

 

இன்று அவள் கூறிய "எனக்கு ஓகே" இரண்டே இரண்டு வார்த்தைகள் தான். ஆனால் அவளின் வாழ்க்கையை தலைகீழாக மாற்ற போவது அந்த இரண்டு வார்த்தைகள் தான் என்று அப்போது சித்ராவுக்கு தெரிந்திருக்கவில்லை.

 

"இப்ப தான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சித்து. எங்க நீ ஓகே இல்லைன்னு சொல்லிடுவியோனு பயந்துட்டேன். சரி ரொம்ப நேரம் பேசி உன்னை டயர்டாக்கல… நீ ரெஸ்ட் எடு. நம்ம நைட் டின்னருக்கு பாத்துக்கலாம். நீ சாப்டியா மதியம்?" என்று தாத்ரி கேட்டாள்.

 

அதுவரை அக்கா கூறிய மற்றதை மறந்து, "ரொம்ப சாப்பிட முடியல அக்கா. அதனால பெரியம்மா பூண்டு போட்டு கஞ்சி வைத்துக் கொடுத்தாங்க. அதை குடிச்சிட்டேன். நைட்டும் ஏதாவது லைட்டா சாப்பிட்டுக்குவேன் என்‌ ரூம்லயே" என்றாள்.

 

"அதெல்லாம் கிடையாது. நைட்டு ரூமில் எல்லாம் சாப்பிடக்கூடாது என் கூட கீழே டைனிங் ஹால் வந்து தான் சாப்பிடணும். புரியுதா? இவ்ளோ நாளா அங்கேயும் நானும் அத்தை மட்டும் தான். அத்தையும் கரெக்டா டைத்துக்கு சாப்பிடடுட்டுவாங்க நான் மட்டும் தனியா சாப்பிடணும். இங்க உங்க எல்லார் கூடவும் சேர்ந்து என்னால சாப்பிட ஆசையா வந்தேன். சோ.. மறுக்காம வா" என்று பாச பயிரை வளர்த்தாள். 

 

"அப்போ பாவா?" என்று கேட்க கூடாத நினைத்தேன் அந்த கேள்வியை கேட்டு விட்டார் சித்ரா.

 

அவளின் பாவாவில் ஒரு நிமிடம் கேள்வியாக கூடவே வியப்பாகவும் உயர்ந்தது தாத்ரியின் புருவங்கள்.

 

"உங்க பாவா வீட்ல சாப்பிடலாம் நேரமே கிடையாது. ஏதாவது விசேஷ நாளில் அத்தம்மா கண்ட்ரோல் பண்ணா மட்டும்தான் சாப்பிடுவார்" என்றவள் பின் யோசனையாக "ஆமா இந்த பாவானு திடீர்னு கூப்பிடுற ஏன்? பொதுவா அக்கா வீட்டுக்காரரை மாமா அத்தான் இப்படித்தான் கூப்பிடனும்?" என்று அழகாய் கண்களை சுருக்கி யோசிப்பது போலவே தாத்ரி கேட்க..

 

அக்காவின் அழகில் ஒரு நிமிடம் அவளை ரசித்துப் பார்த்த சித்ரா "நீ ரொம்ப அழகு கா" என்று வெள்ளந்தியாக கூறி அவள் கன்னத்தை தடவினாள். 

 

"அதுவா.. இந்த புது ப்ரொஜெக்ட் பண்றது பாவாவோட ப்ரண்டுக்காம். அப்பப்போ வந்து அவரு செக் பண்ணிட்டு போவாரு. அப்போ ஒரு தடவ அவரு ஏதோ கேள்வி கேட்க.. நான் அவர பார்த்த பயத்தில் அத்தான் மாமா என்று மாத்தி ஏதேதோ உளறுனேனா.. மூஞ்ச உர்ருன்னு வச்சுக்கிட்டு ஒரு பார்வை ஒன்னு பார்த்தாரு.. ஸ்ஸப்பா எனக்கு கொலையே நடுங்கி போச்சு. நீ எல்லாம் எப்படித்தான் அவரு கூட குடும்பம் நடத்துகிறாயோ?" என்றதும் தாத்ரி வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தாள்.

 

"சிரிக்காத அக்கா!" என்று கெஞ்சினாள் சித்ரா. சிரிப்பை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் மேலே சொல்லு என்பதாய் கை அசைக்க "அப்பத்தான் நான் இப்படி என்ன சொல்றதுன்னு தெரியாம சொல்றத பார்த்துட்டு பாவானு சொல்லுன்னு சொன்னார் கா.. பெரியம்மா கூட கேட்டாங்க நீ அத்தானு கூப்பிட வேண்டியதுதானேனு.. அவர் முன்னாடி நிக்கவே எனக்கு கை கால் எல்லாம் உதறுது. இதுல எங்க அவர் சொன்னதை மீறி நான் வேற பேச எனக்கு தைரியம் வர" என்றதும் "அசடு.. அசடு.." என்று அவள் தோளில்  தட்டிய தாத்ரி "சரி நீ ரெஸ்ட் எடு நானும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறேன்" என்று தன் அறைக்கு சென்று விட்டாள்.

 

இரவு உணவுக்கு அனைவரும் வந்ததும் வேலை ஆட்களை கண்களாலேயே தள்ளி போக சொன்னாள் தாத்ரி. மகள் எதுவோ முக்கியமாக பேச நினைக்கிறாள் என்று புரிந்து கொண்ட தாயும் தந்தையும்  ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

 

கலாவதிக்கு அடுத்து என்ன பூதம் வரப்போகிறதோ என்று மனதில் ஒரு பயம். ஏனென்றால் இராவணனை இவள் காதல் செய்கிறேன் என்று சொல்லும்போது கூட இப்படித்தான் மூடு மந்திரம் போல எல்லோரையும் வெளியே அனுப்பி விட்டு இவர்களிடம் கூறினாள்.

 

"அப்பா சித்துவுக்கு ஏதும் மாப்பிள்ளை வரன் பாத்திருக்கீங்களா?" என்று கேட்டதும் சித்ரா சாதாரணமாகத்தான் இருந்தாள்.

 

"இல்லம்மா இப்பதானே படிச்சு முடிச்சிருக்கா.. என்ன ஒரு ஆறு மாசமா நம்ம கூட வேலையில இருக்கா. இன்னும் கொஞ்சம் நல்ல வேலையெல்லாம் கத்துக்கிட்டுமே. அவ சொந்தக்கால நிக்கிற அளவுக்கு அவளுக்கு திறமை வளத்துக்கணும். கூடவே நம்ம கம்பெனில அவளும் ஒரு பார்ட்னர் இல்லையா?" என்றதும் சுருசுருன்று மனதில் எழுந்த கோபங்களை அடக்கி கொண்டாள் தாத்ரி.

 

"சரிப்பா.. நான் ஒரு விஷயம் சொல்றேன் அதை கன்சிடர் பண்ணுங்க. நீங்க ஏன் சிவப்பிரசாதத்துக்கு சித்துவை கல்யாணம் பண்ணி கொடுக்க கூடாது?" என்றதும் கலாவதி ரங்கராஜன் இருவருமே அதிர்ந்து பார்த்தனர் அவளை.

 

"இல்ல நாங்க ரெண்டு பேரும் ஒரே வீட்டில் வாக்கப்பட்ட ஒருத்தருக்கு ஒருத்தர் துணையாக இருந்துப்போம் இல்லையா? கூடவே சிவப்பிரசாத்தும் நல்ல பையன் தான். என் வீட்டுக்காரர் அளவுக்கு கொஞ்சம் மூடி டைப் எல்லாம் இல்லக்ஷ எல்லார்கிட்டயும் நல்லா சகஜமாக பழகுவான். ஏன் இத்தனை வருஷமா நம்ம வீட்டுக்கு வந்து போயிட்டு இருக்கானே.. அவன்  பற்றி உங்களுக்கு தெரியுமே?" என்றாள்.

 

"அந்த பையன் எதாவது சித்து மேல அபிப்பிராயத்தோடு இருக்காரா?" என்று ரங்கராஜன் மகளை கூர்ந்து பார்த்து கேட்டார்.

 

ஆம் என்று சொல்லி சிவப்பிரசாத் மீது ஒரு பிளாக் மார்க்கு ஏன் வைக்க வேண்டும் என்று யோசித்தவள் "அப்படியெல்லாம் இல்லப்பா.. நானா தான் யோசிச்சேன். இப்போ நிறைய ப்ராஜெக்ட் என் வீட்டுக்காரர் அவருக்கு பண்ண கொடுத்துகிட்டே இருக்காரு. ஜலஜா ஆன்ட்டியும் அவருக்கு கல்யாணம் பண்ண போறதா பேசிட்டு இருந்தாங்க. அப்பதான் எனக்கு இந்த ஸ்பாரக்கு வந்துச்சு. ப்ளீஸ்பா சித்துவை சிவப்பிரசாத்துக்கு பேசலாம் பா. நான் சொன்ன அந்த வீட்ல யாரும் மறுக்க மாட்டாங்க பா" என்று அத்தனை பேசி அப்பாவை சம்மதிக்க வைக்க முயன்றாள்.

 

"இல்லம்மா.. இது சரி வராது! ஒன்னு கொடுத்தது மட்டும் போதும். ஏற்கனவே நம்ம உறவுக்காரங்க யாரும் நம்ம கூட முன்ன மாதிரி பேசுறதில்லை. இப்ப இவளையும் கொடுத்துட்டா ..வேண்டவே வேண்டாம். இந்த பேச்ச இதோட முடி" என்று பேச்சையும் சாப்பாட்டையும் முடித்துக்கொண்டு எழுந்து சென்று விட்டார் ரங்

கராஜன்.

 

தாத்ரி விக்கித்து அமர்ந்திருந்தாள்.

 

தொடரும்…

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top