அத்தியாயம்: 15
இராவணனின் இந்த டிவிஸ்டை தாத்ரி எதிர்பார்க்கவில்லை. "எனக்கு வேலை இருக்கிறது" "நான் பிஸி.. வரவில்லை" என்று இப்படி ஏதாவது காரணங்களை அடுக்குவான், காரணத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து வம்படியாக இவனோடு தங்க வேண்டும் என்று நினைத்து இருந்தாள், வந்தாள்.
கடலின் குளுமையான காற்று… ஊரிலிருந்து தள்ளி இருக்கும் ரிசார்ட்…. அதுவும் இருவர் மட்டுமேயான தனிமை அதில் இனிமை காணலாம் என்று நினைத்து அவள் வந்திருந்தாள்.
சிவப்பிரசாத் திருமணம் பற்றி முடிவு எடுப்பது இரண்டாவது வேலை தான் தாத்ரிக்கு. அவளது வேலை தான் முதன்மை அவளுக்கு. கொஞ்சம் அல்ல ரொம்பவே சுயநல காரிதான்.
முதல் வேலை இராவணனை மடக்கி போடுவது தான். அதை முடித்துவிட்டு நிதானமாக அந்த வேலையை பார்க்கலாம் என்று மனப்பால் குடித்திருக்க…
If you bad...
I am your dad..
என்ற வாக்கியத்தின் ஏற்றபடி இருந்தான் விஷ்ராவணன்.
இதே தனிமை.. இதே இரவு… இதே இளமை… தான் ஆந்திராவில் அவர்கள் வீட்டிலும் இருக்கிறது. ஆனாலும் ஆறு மாதங்களாக அவளால் ஒன்றும் செய்ய முடியாமல் இங்கே இருக்கும் இந்த ஆறு நாட்களில் செய்து விடும் முடியுமா என்று யோசிக்கவில்லை தாத்ரி.
எப்படியாவது தன் இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு இராவணன் உடனான உறவு வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயார் என்கிற நிலையில் தான் இப்பொழுது தார்தி நிலை.
பாவம் அவளுக்கு இன்னும் ஆராவணனை பற்றி தெரியவில்லை. சரியாக புரியவில்லை. அவனோடு வளர்ந்திருந்த சிவப்பிரசாத்துக்கு கூட சிறிது தான் தெரியும். அதன் பொருட்டே தான் தாத்ரியை இறக்கிவிட்டு அவன் ஓடி விட்டான்.
"ஆனாலும்.. இத்தனை நாட்களாக இந்த தாத்ரி அவன் பொண்டாட்டியாக நீடித்திருப்பது அதிசயம் தான். பரவால்ல இவளுக்கும் ஏதோ கொஞ்சம் மூளை இருக்கிறது. அதனால் அவனை நேருக்கு நேர் நின்று பார்க்கும் தைரியமும் இருக்கிறது" என்று அவ்வப்போது நினைத்துக் கொள்வான் சிவப்பிரசாத்
இத்தனை நாட்களாக விஷ்ராவணன் இவளை விட்டு வைத்திருக்கிறான்… தன் அருகே வர இத்தனை தூரம் அனுமதித்திருக்கிறான்... அவன் கையால் தாலி கட்டி இருக்கிறான்… என்றால் அதற்கு பின்னால் ஒரு வலுவான காரணம் இருக்க வேண்டும். அந்த வலுவான காரணமும் அவன் உண்மை என்று நம்பும் வரை மட்டுமே இந்நிலை!
அவ்வுண்மை என்று இல்லை என்று ஆகிறதோ… அன்று இருக்கு தாத்ரிக்கு பூஜை புனஸ்காரம் தீபாவளி பொங்கல் எல்லாம்.
குளியலறையில் இருந்து வெளிவருபவனை பார்க்க கண்களை தீட்டிக்கொண்டு ஆவலாக தாத்ரி காத்திருந்தாள். ஆனால் அவளுக்கு அப்படிப்பட்ட காட்சி எல்லாம் சென்சார் போட்டு கட் செய்து விட்டான் நம் இராவணன்.
"என்னை.. என்னோட வெற்று உடம்பை பார்க்க கூட உனக்கு தகுதி இல்லை" என்று கூறாமல் கூறி குளியல் அறையிலிருந்து வரும்போதே உடையுடன் வந்தவனை முதலில் அதிர்ச்சியாக பார்த்தவள், பின் விசித்திரமாக அவனை மேலும் கீழும் பார்த்து நக்கலாக சிரித்துக்கொண்டாள்.
"ஊரையே ஆளும் இந்த இராவணனுக்கு தாத்ரியை ஆள முடியல காரணம் பயம்! நானாக நெருங்கினால் அதைவிட பெரிய பயம்.. சிரிப்புதான் வருகிறது" என்று அவனின் கோபத்தை ஏற்றி அதில் அவள் குளிர் காய நினைத்தாள். ஏற்கனவே இப்படிப்பட்ட அனுபவம் எல்லாம் அவளிடம் இராவணனுக்கு தான் எக்கச்சக்கமாக இருக்கிறதே.. அதனால் உசராகிவிட்டான்.
முதலில் அது புரியவில்லை அவனுக்கு. கோபம் ஏற்றுமாறு பேசும் அவளுக்கு தண்டனை தருவதாக எண்ணி அவளை நெருங்கி அணைத்து இதழொற்றி… சில சமயம் வன்மையாக கடித்து… அவள் மீது படர்ந்து… அவளை எடுத்துக் கொள்ளும் நொடிகளில் அவனின் யட்சிணியின் மென்மை பெண்மை இவளிடம் இல்லை என்று உணரும் நேரம்.. அவனின் யட்சிணி வந்து அவனை எட்டி நில் என்று உத்தரவிட அவசரமாக பிரிந்து எழுந்து விடுவான்.
'என்ன பேசினாலும் செய்தாலும் ஒரு சில நகர்வுக்கு மேல் அவன் செல்ல மாட்டேங்குறானே?' என்று கடுப்பும் வெறுப்பும் சம அளவு கலந்து வரும் தாத்ரிக்கு அந்த இராத்திரியில்.
ஆனாலும் பாட்டில் சொல்வது போல் 'புலி மானை தான் வேட்டையாடிடும் காட்டில்….
மான் புலியை வேட்டையாடும் இடம் கட்டில்…' என்றெல்லாம் அவனிடம் நடக்க முடியாது. ஏனென்றால் அவன் புலி அல்ல சிங்கம் காட்டையே ஆளும் சிங்கம். அவனின் ஒரு கர்ஜனைக்கு இவள் தாங்க மாட்டாள். அந்த உண்மை தெரிந்தது தான் அவனை வெறுப்பேற்றி விட்டு வேடிக்கை பார்ப்பது.
அதுபோல செய்பவளை பார்த்து அட்டகாசமாக சிரித்தவன் "டோன்ட் ப்ளே கேம் வித் மீ தார்தி.. அப்படி ஆடுனா ரொம்ப மோசமா தோத்து போவ! இதுவரைக்கும் நீ மட்டும் தான் ஆடிட்டு இருக்க.. நான் எதிர்த்து உன்னை ஆடல ஜஸ்ட் தற்காப்பு மட்டும் தான்! என்னைக்கு உன்னை எதிர்த்து நான் ஆட ஆரம்பிக்கிறேனோ… அன்னைக்கு…" என்று இன்னும் கண்களில் கோபத்தோடு அவன் சிரிக்க, அந்த கோபமும் அவன் சிரிப்பும் அவளுக்கு முதுகுத்தண்டில் குளிர் பரவியது.
"கிளம்பலாமா?" என்று அடுத்த நிமிடம் முகத்தை சாதாரணமாக வைத்து கேட்க பெருமூச்சு விட்டப்படி தனது லக்கேஜ் எடுக்காமல் வந்தவளை பார்த்தவன் "லக்கேஜி எடுத்துக்கிட்டு வா" என்று அடிக்குரலில் அவன் ஆணையிட வேண்டா வெறுப்பாக அந்த ட்ராலியை இழுத்துக் கொண்டு அவன் பின்னே சென்றாள்.
அடுத்த அரை மணி நேரத்தில் ரங்கராஜன் எதிரில் மாப்பிள்ளையின் தோரணையோடு கம்பீரமாக அமர்ந்திருந்தான் இராவணன்.
இருவரையும் முதல் தடவை வீட்டுக்கு வருவதால் ஆரத்தி எடுக்க கலாவதி முயல "நோ ஃபார்மாலிட்டிஸ் அத்தகாரு" என்றவன் வேகமாக உள்ளே வர கேள்வியாக கணவனை பார்த்த கலாவதியை கண்ணை மூடி அவர் சமாதானப்படுத்தினார்.
அதற்குள் தாத்ரியும் அவரிடம் வந்து "அம்மா அவரை நானே சமாதானப்படுத்தி கூட்டிட்டு வந்து இருக்கேன். நீ வேற ஏதாவது செஞ்சு கிளப்பி விட்றாதம்மா!" என்று மகளும் கூற…
"என்னமோ வேண்டாம் வெறுப்பாக புள்ளய பெத்து அதுக்கு காண்டாமிருகம்னு பேர் வச்ச மாதிரி… நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்களுக்குள்ள நடக்கும் சண்டைக்கு என்ன ஏன்டி ஆரத்தி எடுக்க வேணா சொல்ற? நீங்க காதலிச்சு கல்யாணம் பண்ணகிட்டுங்கனு வெளியில யார் கிட்டயாவது சொல்லிடாத" என்று அவர் கடுப்படித்தார்.
"நான் தான் அவரை விரும்பி கட்டிகிட்டேன். போதுமா? அதனால இதெல்லாம் நானே கவனிக்கிறேன். நீ அமைதியா வந்து மதியம் சாப்பாடு எடுத்து வை" என்றாள்.
ரங்கராஜன் மாப்பிள்ளை வரவேற்று அமர வைத்து விருந்தோம்பல் செய்ய சிறிது நேரம் அமர்ந்திருந்தவனின் கண்கள் அலை பாய்ந்தன சித்ராவை தேடி… ஆனால் அதனை வெகு லாவகமாக தனது கருப்பு கண்ணாடிக்குள் மறைத்திருந்தான். கால்களோ பரபரப்பாக அவள் இருக்கும் மாடியறைக்கு விடு விடு என்று செல்ல துடிக்க.. கால் மேல் கால் போட்டபடி தன்னை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான்.
'ஏன் அவளைக் காண இத்தனை பரபரக்கிறேன்?' என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் அவளை பார்க்க வேண்டும். அவள் ஸ்பரிசம் வேண்டும். நேற்று அணைத்த அந்த அதிரங்கள் என்றும் அணைக்க வேண்டும் என்று வெகுவாக உள்ளுக்குள் ஒரு அரக்கன் அவனை ஆட்டி படைத்துக் கொண்டிருந்தான். இவனே ஒரு அரக்கன் இவனுக்குள் ஒரு அரக்கன். அதுவும் பெண்ணவள் வேண்டும் என்று கேட்கும் ஒரு பொல்லாத அரக்கன்.
ஆனால் அதை செயல்படுத்த முடியாமல் அவனது கர்வமும் சமூகமும் தற்போது கட்டை போட்டிருக்க.. அதனை அவிழ்த்து போடும் காலம் வெகு விரைவில்..
மதிய உணவை பேருக்கு உண்டு விட்டு ஒரு தலையசைப்போடு இராவணன் கிளம்பிவிட்டான். அவன் சென்றதும் தான் பெருமூச்சு ஒன்று எடுத்துவிட்டார்கள் தாத்ரியும் கலாவதியும்.
"என்னென்னு இவரோட குடும்பம் நடத்துற டி! மனச எப்ப பார்த்தாலும் இப்படி உர்ருனே இருக்காரே. உங்கிட்டயாவது சிரிச்சு பேசுவாரா?" என்று கேட்டார். ஜலஜா கேட்ட அதே கேள்விகள் தான். ஆனால் அம்மாவின் அன்பும் ஆதங்கமும் கலந்து வந்தது கலாவதியின் பேச்சில். சிரிப்போடு அதனை கடந்து விட்டாள் "நான் சித்துவை பார்த்துட்டு வரேன்" என்று அவ்விடம் விட்டு விரைந்து விட்டாள்.
இரவு உணவின்போது சிவப்பிரசாத் சித்ரகலா திருமணத்தை பற்றி பேச ரங்கராஜன் சட்டமாக மறுத்துவிட்டார். அவரின் மறு
ப்பை எதிர்பார்க்காமல் இப்பொழுது அதிர்ந்தது தாத்ரி.
தொடரும்...
