அத்தியாயம்: 13
இராவணன் சம்மதம் கொடுத்தவுடனேயே அன்றிரவே வரலட்சுமி முன் நின்றுவிட்டாள் தாத்ரி.
நாராயண ரெட்டியின் மனைவி அந்த ரெட்டி குடும்பத்தின் மூத்த மருமகள். அன்பும் ஆளுமையும் நிறைந்த பெண்மணி. கணவன் இருந்தவரையில் அதிகாரத்தோடு அந்த அரண்மனையை சுற்றி வந்த கோலாச்சியவர். கணவன் தவறியதில் இருந்து சற்று தன் வட்டத்தை சுருக்கிக்கொண்டார்.
ஒற்றை ஆண் பிள்ளை விஷ்ராவணன், அவன் அவரிடம் இருந்து கொஞ்சம் தள்ளியே இருப்பது அவருக்கு மன சங்கடத்தை கொடுத்தது.
'இப்படியே இருந்து விடுவானா? திருமணம் செய்து கொள்வானா? இவனுக்கு பிறகு வாரிசு?' என்று வருத்தம் கொண்டிருந்தவரை, தாத்ரியுடனான அவனது திருமணம் அவருக்கு பேருவகையை தந்தது. பரவாயில்லை மகன் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டான் என்று கோலாகலமாக நடந்தினார் தந்தை இல்லை என்ற குறை தெரியாமல்.
பெரும்பாரம் இறங்கினாற் போல இருந்தது அவருக்கு. பிள்ளையின் கடமை முடிந்ததால், இனி அவனை மருமகள் பார்த்துக் கொள்வாள் என்று நினைத்தவர், தற்போது எல்லாம் கோயில் காரியங்கள்.. பொதுநல நற்காரியங்கள் என்று அதில் தன்னை இணைத்து கொண்டு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
ஆனால் இவருக்கு அப்படியே எதிர்ப்பதம் ஜலஜா.
நாராயண ரெட்டியின் தம்பி சீனிவாச ரொட்டியின் மனைவி. அந்த ரெட்டி குடும்பத்தின் இரண்டாவது மருமகள். சிவப்பிரசாத்தின் அன்னை, உபரி தகவல்.
வரலட்சுமி சற்று அமர்க்கையான தேகமும் அமைதியான குணமும் கொண்டவர், அதற்கு எதிர்ப்பாதம் ஜலஜா ஓங்குதாங்காக உடம்பும் அதற்கு தக்க குரலும் கூடவே அகங்காரமும் நிறைந்தவர்.
அதிலும் சீனிவாச ரெட்டி அவர் அண்ணனை போல் இல்லாமல் இருப்பது அவருக்கு மனவேதனையை கொடுக்க.. அதை கணவனிடம் செயலிலும் சொற்களிலும் காட்ட காட்ட அவரும் மதுவுக்கு அடிமையாகி பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறார்.
அதில் இன்னமும் வெறுத்து போனது ஜலஜாவிற்கு. கணவன் தான் இப்படி ஆகிவிட்டார், மகனையாவது கைக்குள் போட்டுக் கொண்டு இந்த ரெட்டி கோட்டையை பிடிக்க வேண்டும் என்பதுதான் அவரது பல வருட கனவு!
அந்த கனவு எல்லாம் நாராயண ரெட்டி இறந்ததும் தன் கணவனை அந்த கோட்டை அரியணையில் அமய வைத்து அழகு பார்த்து நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று தருணம் பார்த்து இவர் காத்திருக்கையில்.. அதை தட்டி விட்டு தந்தைக்கு பின் தனயன் என்று இராவணன் அந்த பொறுப்புகளை ஏற்றுக் கொண்டான்.
மீண்டும் இலவம் காத்த கிளியாக எப்படியாவது இந்த அரண்மனை தொழில் மரியாதை அனைத்தையும் தனதாக்கி கொள்ள வேண்டும் என்று அதற்கு சாதகமான தருணத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார் ஜலஜா.
தந்தையால் முடியாததை மகன் நிறைவேற்ற வேண்டும் என்று பெரும் கனவு கொண்டவரிடம் வேறு ஏதோ தொழில் தொடங்க போறேன் என்றவனை, வம்படியாக சிவில் கற்க வைத்து இந்த தொழிலில் அவனை நுழைத்துவிட்ட பெரும் பெருமை ஜலஜாவையே சேரும்.
ரெட்டி கோட்டையின் அரண்மனையை இரண்டு பகுதிகளாக தான் இருக்கும். பொதுவாக அரண்மனை அதற்குப்பின் பெரியவருக்கு என்றும் சிறியவர்க்கு என்றும் பகுதிகள் இரண்டு பியிவுகளாக.. காலங்காலமாக இப்படி இரண்டு பிள்ளைகள் இருந்தால் மூத்தவர் அதிலும் சிறியவர் அதாலும் என்று, தொண்டு தொட்டு வரும் வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பெரியவரின் பகுதியில் அவர்களின் பிரம்மாண்டமான அறையில் அமர்ந்து இராவண காவியம் படித்துக் கொண்டிருந்த வரலட்சுமி முன் வந்து நின்றாள் தாத்ரி தேவி.
தாத்ரியின் அழகும் ஆளுமையும் வரலட்சுமிக்கு நிரம்ப பிடிக்கும். அதனை விட யாருக்கும் கட்டுப்படாத மகனை கல்யாணம் என்ற பெயரில் கட்டி வைத்திருக்கிறாளே அந்த ஒரு தகுதி போதாதா என்று மருமகளை பற்றி பெருமிதம் உண்டு வரலட்சுமிக்கு.
ஆனால் ஜலஜாவிடம் காணப்படும் சில பல சின்ன புத்திகள் இவளிடம் இருப்பதை கண்டு அதை அவ்வப்போது சுட்டிக்காட்டி திருத்திக்க செல்வார். அதனால் பெரும்பாலும் மாமியாரின் பக்கம் வந்து விடமாட்டான் மருமகள்.
அதிசயமாக இன்று அவளே வந்திருக்கிறாள் என்று அணிந்திருந்த கண்ணாடி ஒருமுறை ஏற்றுவிட்டு வியப்பாக அவளைப் பார்த்தார்… அதுவும் இவ்வளவு நேரம் கடந்து இரவில் வந்திருக்கிறாளே என்று காத்திருந்தவளின் அருகில் வந்தவள் சம்பிரதாயத்துக்காக "சாப்டீங்களா அத்தமா?" என்று அன்பொழுக கேட்டாள்.
"என்ன அதிசயம் தாத்ரி?? இந்த பகுதியில் நீயும் நானும் மட்டும்தான் நிறைய நேரம் இருக்கிறோம். இன்னைக்கு அதிசயமாக உனக்கு கண் தெரிந்திருக்கிறது.. அதுவும் அத்தையை பார்க்க வேண்டும் என்று ஆவல் பெருகி இருக்கிறது… அதைவிட அத்தை சாப்பிட்டாரா என்று அன்பும் வந்திருக்கிறது.. என்ன ஆச்சரியம்??" என்று கேலி போல் கேட்டாலும் அதில் அவளுக்கான குத்தும் இருக்க தான் செய்தது.
"என்னத்த செய்ய அப்பப்போ நானும் எங்க கம்பெனி வேலையை இங்கிருந்து செஞ்சு கொடுக்கிறேன். உங்க பையன் தான் என்னை இங்க கம்பெனி பக்கமெல்லாம் கூட்டிட்டு போய் காட்ட மாட்டேங்குறாரு… சும்மாவே இருந்தா எனக்கு மனசுல என்னனென்னவோ நெனப்பு எல்லாம் வருது. அதை போகத்தான் ஊரில் இருக்கும் எங்கள் கன்ஸ்ட்ரக்ஷனுக்கு அப்பா கேட்கும் போது எல்லாம் நான் வரைந்து கொடுப்பேன் பிளானிங் கூட போட்டு தருவேன்" என்று கதை அளந்து விட்டாள்.
இவள் படிக்கும்போதும் சரி படித்து முடித்த பிறகும் சரி கம்பெனி வந்து எட்டிப் பார்ப்பதோடு சரி.. மீதி நேரம் எல்லாம் அப்பாவிடம் செலவுக்கு பணத்தை வாங்கிக் கொண்டு தோழிகளோடு மால் பீச் தியேட்டர் பப் என்று சுற்றிக்கொண்டு இருப்பாள். ஆனால் இந்த அவளுடைய பழங்கதைகள் எல்லாம் வரலட்சுமிக்கு தெரியாது அல்லவா? அதனால் உருட்டு உருட்டென்று உருட்டிக் கொண்டிருந்தாள்.
"சரிமா உன் நேரம் பொழுது பயனுள்ளதாகவே போவது எனக்கு மிக்க மகிழ்ச்சி" என்றார்.
"அத்தம்மா அவர் இப்போ சென்னைக்கு தான் போயிருக்காராம்" என்றாள் ஆவல் ததும்ப, "அதற்கு என்ன?" என்பது போல அவர் ஒரு பார்வை பார்த்தார்.
"இல்ல.. எப்படியும் அவருக்கு கொஞ்ச நாள் சென்னையில வேலை இருக்கும்னு சிவா சொல்றான்" என்றதும்…
"தாத்ரி…" என்று அவர் கண்டிக்க "பழக்க தோஷம் அத்தமா அப்படியே வந்துருச்சு! இனி மாத்திக்கிறேன்" என்று பவ்யமான பிள்ளை போல பேசினாள்.
"என்னதான் நீனும் அவனும் ஒன்றாக படித்து நல்ல நண்பர்களாக இருந்தாலும்.. உறவு முறையில் அவன் உனக்கு கொழுந்தன் அதுக்கான மரியாதை நீ கொடுக்க வேண்டும். அதுவும் இப்படி அவன் இவன் என்று முன்னே பேசியது போல அவங்க அம்மா முன்னே வைத்து பேசி விடாதே… அவ்வளவுதான் அவள் கிழித்து உன்னை தோரணம் கட்டி விடுவாள்! இவ்வளவு நாட்களுக்கு ஜலஜாவின் குணம் உனக்கு புரிந்திருக்கும்னு நினைக்கிறேன்.. பார்த்து நடந்து கொள் தாத்ரி!" என்று அறிவுறுத்தினார். அதில் இயல்பான நம் அன்னை கண்டிக்கும் அதே அழுத்தம் மட்டுமே.
"சரிங்க அத்தமா… இனிமே கவனமா இருந்துக்கிறேன்! அதான் சிவா சொன்னார் கொஞ்ச நாளையில வேலை முடியுற மாதிரி இருக்கு அண்ணன் அங்கு இருப்பாருனு.. அதான் நானும் அம்மா வீட்டுக்கு போய் கொஞ்ச நாள் இருக்க வா அத்தமா?"
அழகாக புன்னகைத்தார் வரலட்சுமி "இதற்கு எதுக்குமா என்னிடம் அனுமதி கேட்கிற? போயிட்டு வரேன்னு சொல்ல வேண்டியது தானே! நான் என்ன அவ்வளவு பெரிய கொடுமையான மாமியாரா என்ன?" அவர் கண்ணை விரித்து கேட்க புன்னகையே பதிலாக கொடுத்தாள்.
"சரி எப்போ கிளம்பனும்?" என்றதும் "காலையில் கிளம்புறேன் அத்தமா" என்று ஆர்வமாக கூறினாள்.
"சரி நான் காரியதசியே அழைத்து உனக்கு பயணத்திற்கான அனைத்து ஏற்பாட்டையும் அவரே செய்ய சொல்றேன்.. நீ காலை உணவை முடித்து அதன் பின் போகலாம்" என்றது "சரிங்க அத்தமா" என்று சந்தோஷத்தோடு தன் அறைக்கு ஓடி வந்தாள் தாத்ரி.
உற்சாகமாக வந்தவள் முதலில் போனை போட்டது என்னமோ சிவப்பிரசாத்துக்கு தான். "டேய் சிவா நம்ம பிளானோட அடுத்த கட்டத்தை நோக்கி போகப் போகிறோம். நான் சென்னைக்
கு நாளைக்கு வரப் போகிறேன்" என்று சந்தோசமாக கூவினாள்.
தொடரும்…
