26
அலங்கரிக்கப்பட்டு நிச்சயதார்த்த மேடையை நோக்கி அழகு பதுமையென அன்ன நடையிட்டு வந்துக் கொண்டிருந்த ரதி சிற்பிகாவை தான் கண்ணெடுக்காமல் அதிர்ச்சி விலகாமல் பார்த்து இருந்தான் கதிர்காமன்.
ரதியை அவன் கடைசியாக தேடிச் சென்ற பொழுது பூட்டியிருந்த வீடே அவனை வரவேற்க..
அங்கே அக்கம்பக்கத்தில் ரதி மற்றும் ராகவ் எங்கே சென்றார்கள் என்று விசாரித்தான்..
ஆனால்.. இவனையும் இளப்பமாக பார்த்து பேசியவர்களை கண்டவன் அவர்கள் நெற்றியில் கன் வைக்காத குறையாக பேச.. அப்பொழுது தான் தெரிந்தது ரதி அங்கே இருந்தவர்களின் வாய் வார்த்தைகளால் அத்தனை வதைப்பட்டு இருக்கிறாள் என்று..!
ஒரு பெண்.. அதுவும் அம்மா அப்பா இல்லாமல் தனியாக இருக்கும் ஒரு பெண், நள்ளிரவில் ஒரு ஆணோடு காரில் வந்து இறங்கினால்.. கட்டாயமாக அவள் தப்பு செய்தவளாகத்தான் இருக்க வேண்டும் என்ற சமுதாயத்தில் இந்த சிறிய கண்ணோட்டத்தின் அடிப்படையில்.. அவளை தப்பானவளாக உருவகப்படுத்தி.. அதையே அக்காலனி முழுவதும் வதந்திகளாக பரப்பி.. பின் கனல் கங்குகளான வார்த்தைகளால் அவளை சுட்டு.. விரட்டி விட்டார்கள் என்று தெரிய வர கொதித்து போனான் கதிர்காமன்..!
“நான் ஒரு கிரிமினல் லாயர்” என்று தன் ஐடியை அவர்கள் முன்னால் தூக்கிப் போட்டவன், அவள் தன்னிடம் வீட்டு வேலை செய்தாள் என்பதை மறைத்து,
“என்கூட தான் ஒரு கேஸ்ல ஒர்க் பண்ணிட்டு இருந்த பொண்ணு.. அந்த பொண்ணு லாயர்னு உங்களுக்கெல்லாம் தெரியாதா? வேலை முடிந்து நைட் நேரம் அவளை தனியாக அனுப்ப பயந்து நானே கொண்டு வந்து விட்டால்.. நீங்கள் எல்லாம் உங்க இஷ்டத்துக்கு பேசுவீங்களா?” என்று கர்ஜித்தவனை கண்டு அங்குள்ளவர்கள் எல்லாம் தப்பு பண்ணிட்டோமோ என்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“இந்தக் காலனியில் ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பா அணுசரனையா இருப்பீங்கன்னு பார்த்தா.. அடுத்தவங்கள பத்தி அவதூறு பரப்பிக்கிட்டு இருக்கீங்க? ம்ம்ம்.. ஐ டிசைடட்..! இந்த காலனியே இனி இங்க இருக்காது..! என்னைப் பத்தி தெரியாம அவதூறு பரப்புனீங்க இல்ல.. யூ ஆர் ஆல் டிசர்வ் இட்..!” என்று சீறியவன் அடுத்து அந்த காலனியை ஒரு எம்என்சி நிறுவனத்தின் மூலம் வாங்க வைத்து, அந்தக் காலனியே அங்கு இல்லாமல் தரை மட்டமாக எடுக்க வைத்து, அங்கே புத்தம் புதியதாக அப்பார்ட்மெண்டுகளை கட்ட வைத்திருந்தான்..!
தான் ஒரு ‘கார்ப்பரேட் லாயர்’ என்று நிரூபித்தான்..!
அந்த காலனியே இப்போது இல்லை. அங்கு வாழ்ந்தவர்கள் எல்லாம் மும்பையின் வேற வேற பகுதிக்கு சென்று விட்டனர்.
ரதியை பற்றி அவதூறாக பேசியவர்கள் அங்கு இல்லை. ஏன் இப்படி ஒரு பேச்சு நடந்ததாக பிற்காலத்தில் யாருக்குமே செவி வழியாக கூட செய்தி வர வாய்ப்பு இல்லாமல் செய்து விட்டான்.
ஆனாலும்.. இப்படியா ஒரு பெண்ணை பற்றி அவதூறுகள் பேசுவார்கள் என்று சகிக்க முடியவில்லை அவனால்..!
அதுவும் சிறிய பெண்ணை பெற்றோர்கள் இல்லாமல் தன் காலில் நிற்க முனையும் பெண்ணை எவ்வாறு இவ்வாறெல்லாம் பேச முடிந்தது?
பேசியே அவளை விரட்டி விடும் அளவுக்கு அவள் மனதை எப்படி காயப்படுத்த முடிந்தது?
அப்படி பேசியவர்களுக்கு சரியான தண்டனை கொடுத்து விட்டான் தான்..!
ஆனாலும்.. இவனுக்கு ஆறவே இல்லை மனம்..! அதனோடு கூடிய அவன் மனதில் அவள் மீதான அந்த ஒரு நெருக்கம்.. ஒரு ஈர்ப்பு.. அதையும் அவனால் விட முடியவில்லை..!
அவனால் அவளிடம் கண்ட அந்த சுகம் மற்ற பெண்களை அவனை நாட விடவில்லை..!!
எங்கே சென்றிருப்பாள்? என்று யோசித்தவனோ..
ஒரு கட்டத்தில் “எங்கே சென்றாயடி?”
என்று மனம் குமைய.. அதில் அவள் பால் சரிந்த மனதை புரிந்துக் கொண்டான்.
அவனை விட்டுச் சென்றது அவள் மட்டுமல்ல அவனின் இதயம் என்று முற்றும் முழுதாக உணர்ந்தான்..!!
அதன்பின் மும்பை முழுவதும் சல்லடை போட்டு கடந்த ஆறு மாதங்களாக தேடி அலைந்து கலைத்து கருத்துப் போய் இருந்தான் கதிர்காமன்..!
கிளீன் ஷேவில்.. சீராக வெட்டப்பட்டு ஜெல் போட்டு வாரிய சிகை.. நேர்த்தியான உடை.. மிடுக்கான நடை என்று எப்பொழுதும் டாப் மாடல்களுக்கு குறையாமல் எலைட் லாயராக வலம் வந்தவன்,
இந்த ஆறு மாத காலத்தில் அவன் உருவ அமைப்பே மாறி போயிருந்தது.
வெட்டப்படாத சிகை.. மழிக்கப்படாத தாடி.. கண்களில் கருவளையம் என்று ஆளே மாறி போயிருந்தான்.
தம்பியிடம் அவன் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் வைரவேல் பார்கவி அனைவரும் அவன் அருகே வந்து,
“என்னடா இப்படி இருக்க ஆளு? உன்னை சரியாவே பார்த்துக்கிறது இல்லையா நீ? கண்ணெல்லாம் பாரு எப்படி இருக்கு? தாடி எல்லாம் வச்சிட்டு.. என்னடா இப்படி இருக்க?” என்று மாறி மாறி அன்னையும் சித்தியும் அவனிடம் பாசத்தோடு பரிதவிப்போடு கேட்க..
“ஹலோ மாம்ஸ்.. ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்..! ஒரு முக்கியமான ப்ராஜெக்ட்.. அந்த வேலையில மாட்டிக்கிட்டேன். அதுதான் அந்த வேலை முடிஞ்சுச்சுன்னா சரியாயிடும்..!” என்று அவர்களையும் சமாதானப்படுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் தான்
“பொண்ணு வந்தாச்சு..!” என்ற சத்தத்தில் அனைவரும் திரும்பி பார்க்க…
“போங்க.. போங்க.. நீங்க போய் பொண்ண இங்க அழைச்சிட்டு வாங்க” என்று ரத்னவேல் இரு பெண்களை அனுப்பி வைக்க..
பைரவியும் பார்கவியும் மனம் மகிழ மணப்பெண்ணை அழைத்துக் கொண்டு வர..
அன்னைமார்களுக்கு நடுவில் வந்தவளை அதிர்ச்சி குறையாமல் பார்த்தான் கதிர்காமன்.
தென்னரசு மணமகனாய் முகிழ்த்த வெட்கத்தை மறைக்க தோன்றாமல் அப்பட்டமாய் தன்னவளின் பேரழகை ரசித்துப் பார்த்தவனை இளவட்டங்கள் ஓஓஓ என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய..
தென்னரசுவோ “அடேய்ஸ் போதும் நிப்பாட்டுங்கடா..! நான் என் ஆள தான் டா சைட் அடிக்கிறேன். உங்களுக்கு என்னடா வந்தது?” என்று அந்த மேடையிலேயே அப்பட்டமாக கூற..
“அட மாப்பிள்ளை இப்பவே கவுந்தாச்சா?” என்று இன்னும் சந்தோஷ கூக்குரல் அவ்விடத்தை நிரப்பியது.
இப்படி அனைவரும் சந்தோஷமாக மகிழ்ச்சியாக மணமக்களை பார்த்து ரசித்து கலாய்த்து என்று இருக்க..
ஒருவன் மட்டும் மெல்ல நெஞ்சு பகுதியை நீவி விட்டுக் கொண்டு தன் எதிரே இருந்தவளை நம்ப முடியாமல் பார்த்து இருந்தான்.
“ரதி..!” என்று அவனது இதழ்கள் மென்மையாக மிக மிக மென்மையாக உச்சரித்தன..!
‘என் ரதி..! இந்த காமனின் ரதி..! ஆறு மாதங்களாக இவளை தேடி அலையாத இடமில்லை அங்கே மும்பையில்.. இவள் எப்படி இங்கே வந்தாள்? அதுவும் என் தம்பிக்கு மணமகளாய்..? என் அக்காவுக்கு மகளாய்..! ஒன்றும் புரியவில்லையே..!’ என்று யோசித்தவன் தம்பியின் தோளைத் தட்டி,
“ஏன் டா அரசு.. நீ சுலோ அக்கா பொண்ணு மஹிமாவை தானே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்ன.. இது மஹிமா இல்ல. அப்போ.. இது..” என்று தன் அதிர்ச்சியை மென்று முழுங்கியவாறு தம்பியிடம் மெல்லிய குரலில் கேட்டான் கதிர்காமன்.
“ஆமா கதிர்.. இது நம்ம அக்கா பொண்ணு மஹிமா இல்ல. ஆனாலும் அக்கா பொண்ணு தான்..!” என்று நன்றாக குழப்பி விட்டான் தென்னரசு.
“என்னடா குழப்புற?” என்று பற்களை கடித்தான் கதிர்காமன்.
“இப்போதைக்கு இவ என் ஆளு ரதி சிற்பிகா..! மத்ததெல்லாம் நான் அப்புறம் உனக்கு விளக்கமா சொல்றேன். என் ஆள கொஞ்சம் சைட் அடிக்க விடுடா அண்ணா” என்று தென்னரசு கதிர்காமனிடம் கண்ணடித்து பேசிக் கொண்டிருக்கும் பொழுதே.
ரதி சிற்பிகா இவர்களை சமீபத்து விட “அரசு வா.. வா.. வந்து மருமக பக்கத்துல நில்லு..!” என்று பார்கவி தென்னரசுவின் கையை பிடித்து இழுத்து ரதியின் அருகில் நிறுத்த..
கதிர்காமனுக்கோ அன்னையின் இந்த செயலை சகிக்க முடியாமல் நின்றான்.
இருவரையும் ஜோடியாக பார்த்துக் கொண்டிருந்த கதிர்காமனுக்கு இதயம் வேகமாக துடித்தது..! அதைக் காட்டிலும் தன்னை ஒரு பொருட்டாக மதிக்காமல் ஏன் தன்னை நிமிர்ந்து கூட பார்க்காமல் ஏதோ மூன்றாமானவனை பார்ப்பது போல பாவனையுடன் நின்று இருந்த ரதி சிற்பிகாவின் இந்த செயலை சற்றும் எதிர்பார்க்கவில்லை கதிர்காமன்.
இவள் எந்த வழியாக வேணாலும் இங்கே வந்திருக்கலாம்.
ஆனால் என்னை பார்த்ததும் அவள் முகத்தில் ஒரு சிறு அதிர்ச்சி கூட இல்லையே? ஏன்? நிஜமாகவே என்னை தவிர்க்குறாளா? இல்லை என்னை தெரியாதது போல நடிக்கிறாளா? என்று புரியாமல் இவன் ரதியைத்தான் விடாமல் பார்த்து இருந்தான்.
“அரசு இந்த மோதிரத்தை ரெண்டு பேரும் மாத்திக்கோங்க” என்று சுலோச்சனா அழகிய வேலைப்பாடுடன் கூடிய வெள்ளித் தட்டில் ஜோடிகளுக்கான வைரம் பதித்த அழகிய இரு பிளாட்டின மோதிரங்களை கொண்டு வந்து நீட்ட, பெரும் புன்னகையோடு அவளுக்கானதை கையில் எடுத்தான் தென்னரசு.
அதே நேரம் சிரித்த பாவனையோடு மணமகனுக்கான மோதிரத்தை எடுத்தாள் ரதி இல்லை இல்லை சிற்பிகா..!
“சிற்பி.. சிற்பியே வடித்து வைத்து சிலை போல அழகா இருக்கா உன் மருமக பைரவி” என்று அருகில் இருக்கும் முதிய பெண்மணி ஒருவர் கூற..
அவர் சும்மா பேச்சுக்காக சொல்லி இருந்தாலும்.. உண்மையிலேயே இன்றைய நாயகியான ரதி சிற்பிகா அப்சரஸை போன்ற அழகுடன் தான் மிளிர்ந்தாள்.
அந்தப் பெண்மணி கூறியதை அங்கிருந்த அனைவரும் பெரும் மகிழ்வோடு ஆமோதிக்க.. ஒருவன் மட்டும் பொறுமலோடு நின்றிருந்தான்.
அவனால் கொஞ்சம் கூட ரதி தன் தம்பியின் வருங்கால மனைவியாக வருவதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
அவன் பொறுமினாலும் கோபத்தில் பொங்கினாலும் இங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த அழகிய நிகழ்வு நடந்துக் கொண்டு தான் இருந்தது.
இரு வீட்டு பெரியவர்களின் ஆசியோடு.. வந்திருந்த உறவினர்களின் வாழ்த்துக்களோடு.. இள பட்டாளங்களின் சந்தோஷ கொண்டாட்டத்தோடு..
இருவரும் மோதிரத்தை மாற்றிக் கொள்ள..
அதை காண சகிக்காமல் கண்களை மூடி முகத்தை திருப்பிக் கொண்டவனின் கை முஷ்டியோ இறுகி இருக்க.. கை நரம்புகளோ புடைத்திருந்தது ஆத்திர மிகுதியில்..!
“எப்படி எப்படி இது சாத்தியம்? ரதி எப்படி இங்கே வந்தாள்? அதுவும் என் அக்காவின் மகளாக? அவள் எப்படி?” என்று அவனுக்கு புரியவே இல்லை..!
முதலில் கதிர்காமனை தான் திருமணத்திற்கு கேட்டார் பார்கவி.
அவனோ “திருமணத்தில் எல்லாம் எனக்கு விருப்பமும் இல்லை..! கூட நம்பிக்கையும் இல்லை. நான் இங்கு வேறு மாதிரி வாழ்க்கை வாழ்கிறேன் என்னை தொந்தரவு செய்யாதீங்க மா” என்று கூறி விட்டான்.
இவன் எந்த மாதிரியான வாழ்க்கை வாழ்கிறான் என்று அரசல் புரசலாக குடும்பத்தாருக்கு தெரிந்தாலும் தோளுக்கு மேல் வளர்ந்தவன்.. பல பேருக்கு இவனே சட்ட ஆலோசராக உள்ளான்.. எப்படி புத்திமதி சொல்லி திருத்துவது என்று தெரியாமல் விட்டுவிட்டனர்.
திரும்பவும் ஒரு மாதத்திற்கு முன் “பெரியவனே நீ இருக்க சின்னவனுக்கு கல்யாணம் பண்ண முடியாது டா.உன் முடிவை முடிவா தெளிவா சொல்லு.. ஏன்னா சுலோச்சனா பொண்ண தானே கட்டலாம்னு இருக்கோம். நீ ஒத்துக்கிட்டேனா உனக்கு கட்டி வைப்போம்.. இல்லேன்னா அரசுக்கு பார்போம்..!” என்று பார்கவி கேட்டதும்..
‘ஐயையோ அக்கா பொண்ணு வேண்டவே வேண்டாம்..!’ என்று அன்னையிடம் கூறினான்.
‘நீங்க முன்ன கேட்டபோது என் வாழ்க்கையே வேற மாதிரி இருந்துச்சு மா.. ஆனா இப்போ என் வாழ்க்கையில அவ ஒருத்தி தானே இருக்கா.. இனி அவளைத் தவிர வேறு யாரையும் என்னால் எப்பொழுதும் நினைக்க முடியாதுனு நான் முடிவுக்கு வந்து ரொம்ப நாளாகுது மா’ என்று மனதில் நினைத்துக் கொண்டான்.
“இல்லம்மா நீங்க அரசுவுக்கே சுலோ அக்கா பொண்ண பாருங்க. இதுல எனக்கு எந்த வருத்தமும் இல்ல” என்று தெளிவாக கூறிவிட்டான்.
மும்பையில் அவனுடைய வேலை மட்டும் கிடையாது. பெண்களிடம் அவனின் சில பழக்க வழக்கங்களையும் அறிந்திருந்த பார்கவியும்,
“அப்போ கல்யாணமே வேணாம்னு இப்போ மாதிரியே ஒரு கேவலமான வாழ்க்கையை தான் இனி வாழ போற அப்படிதானே? உன்னை மாதிரி பையனுக்கு பொண்ணே பார்த்து கட்டி வைக்கவே கூடாது. அவ வாழ்க்கையையும் அழிச்சிட கூடாது..! நீ சுத்துற வரைக்கும் சுத்து.. ஆடுற வரைக்கும் ஆடு..! எங்களுக்கு இனி தென்னரசு மூலம் வாரிசு வந்தா போதும்..! ஒழுங்கா அரசு எங்கேஜ்மென்ட்க்கு வந்து சேரு..!” என்று கடுமையாக பேசி விட்டார்.
கதிர்காமன் முகத்திலோ மெல்லிய நகைப்பு மட்டுமே.. “நான் வழி தவறி சென்ற போதெல்லாம்.. தெரிந்தும் தெரியாதது போல அமைதியா இருந்துட்டு.. இப்ப நான் மாறி இருக்கும் போது என்னை திட்டுறாங்க.. என்னடா உலகம் இது?” என்று விரக்தியாக நினைத்தவனோ இன்னும் தீவிரமாக ரதியை தேடினான்.
மும்பையை தவிர அவளுக்கு வேற எங்கு சென்றும் பழக்கம் இல்லை.
அவளுடைய அம்மா வழி சொந்தங்களும் இங்கேதான் இருக்கிறார்கள் என்று அவர்களிடமும் சென்று ஆட்களை அனுப்பி விசாரித்து விட்டான். ஒரு தகவலும் அவளை பற்றி இல்லை.
அதனால் மும்பையை சுற்றி தான் அவள் எங்கேயாவது இருக்க வேண்டும் என்று அவன் மும்பையை சல்லடை போட்டு தேட..
அவளோ எப்படி தமிழ்நாட்டுக்கு அதுவும் அவர்களின் சொந்தமாக வந்தாள் என்று புரியாமல் குழம்பித் தவித்தான் கிரிமினல் லாயர்..!
மோதிரம் மாற்றிக் கொண்டதும் இருவரும் தங்கள் கையை மேலே உயர்த்தி அனைவருக்கும் காட்ட..
மீண்டும் அங்கே ஒரு பெருத்த கரகோஷம்..! அதனோடு இருவரும் ஜோடியாக கேக் கட் செய்து ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொள்ள பார்த்திருந்த கதிர்காமனுக்கு வெந்தணலில் நிற்பது போன்ற உணர்வு..!
இங்கே ஒருத்தன் இவளை தேடி ஆறு மாதமாக நாயா பேயா அலைந்துக் கொண்டிருக்கிறேன்.. இவள் எதையுமே கண்டுகொள்ளாமல் இப்பொழுது புது மணமகளாய் இருக்கிறாள்? எப்படி அவளால் வேறு ஒரு வாழ்வை தேர்ந்தெடுக்க முடிந்தது?
என்னவோ இருவரும் தங்கள் மனதை பரிமாறி காலம் காலமாக காதல் செய்தது போலவும் இப்பொழுது இவனை விட்டு வேறு ஒருவனை அவள் மணந்துக் கொண்டு அவனுக்கு அவள் துரோகம் இழைப்பது போலவும் அவன் நினைத்துக் கொண்டு நின்று இருந்தான்..!
அதிலும் கூட இவனை கொஞ்சம் கூட தெரிந்தது போல காட்டிக் கொள்ளாமல் இவனை கண்டு முகத்தில் ஒரு சிறு அதிர்ச்சி கூட இல்லாமல் எப்படி இவளால் இருக்க முடிகிறது என்று அதுவும் அவனுக்கு புரியவில்லை..!
மொத்தத்தில் புரியாத புதிராக தன் முன்னே நின்றவளை தான் இமைக்காமல் வெறித்திருந்தான் கதிர்காமன்..!
கேக் வெட்டியவுடன் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டவர்களை கோப கொந்தளிப்பில் பார்த்திருந்த கதிர்காமனின் கண்களில் இப்பொழுது ஒரு ஜொலிஜொலிப்பு..!
இருவரும் அருகருகே நிற்பதே அவனுக்கு மிளகாய் சாற்றை உடம்பில் தேய்த்து போல எரிந்தது.
சட்டென இருவருக்கும் இடையில் நுழைந்தவன் “வாழ்த்துகள் தம்பி” என்று தென்னரசுவிடம் கை கொடுத்தவன், அவனை ஒரு கையால் தோளோடு அணைத்து இப்பொழுது ரதியின் புறம் கையை நீட்டி, அவளின் அதிர்ச்சியை உள்வாங்க நினைக்க..
அந்தோ பாவம்..! அவளோ வெகு சாதாரணமாக அவனை பார்த்து கைகூப்பினாள்.
கண்டிப்பாக ரதியிடம் இதை எதிர்பார்க்கவில்லை அவன்..!
‘ஒருவேளை இவளுக்கு நான் யாரென்று முன்னமே தெரிந்து இருக்குமோ?’ என்று யோசித்தபடியே கண்கள் இடுங்க அவளைப் பார்க்க… அவளோ அவனை சாதாரணமாக தான் பார்த்தாள்.
அதற்குள் புகைப்பட நிபுணர் “சார் சேர்ந்து நில்லுங்க.. ஒரு ஸ்னாப் எடுத்துக்கலாம்” என்றார்.
“வொய் நாட்..!” என்றவனின் வலது கை தென்னரசு தோளில் இருக்க இடது கையோ ரதியின் இடையை பற்றி இருந்தது.
வெளியில் இருந்து பார்ப்பதற்கு சாதாரணமாக கை வைத்திருப்பது போல தான் தெரியும். ஆனால் அவனின் இறுகிய பிடியை உணர்ந்தவளோ, அதிர்ந்து அவனை பார்க்க…
“இதை.. இதை.. இந்த லுக்கை தான் ரொம்ப மிஸ் பண்ணுனேன் மிஸ் ரதி.! நௌவ் ஸ்டேட்டிஸிஃபைங்..!” என்று கண்கள் மின்ன அவளது காதில் ரகசியம் பேசினான்.
இன்னும் இன்னும் பேசுவான்..!
தொடரும்..
