அத்தியாயம் 3
அர்ஜுனன் ரித்து குட்டியின் அருகில் சென்று அவளுக்கு மட்டும் கேட்கும் படியான மெல்லிய குரலில் ஏதோ கூறி அவனது கையை நீட்டி அழைத்தான்… அவன் கூறியதை கேட்ட குழந்தையும் வேகமாக அவனிடம் தாவி சென்று அழுத படியே அவனது கழுத்தை கட்டி கொண்டு யாரையும் பார்க்காமல் அவனது தோளில் முகத்தை புதைத்து கொண்டாள் மழலை மொட்டு..
அர்ஜுனன் குழந்தையை எங்கே அழைத்து செல்கிறான் என்று அறிந்தே வைத்திருந்தனர்.. அதனால் யாரும் அவனிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை.. அர்ஷித் மட்டும் தன்னிடம் வராமல் அழுது அடம்பிடித்த மகள் தனது தம்பியிடம் தாவி சென்றதை பார்த்து ரித்து குட்டியின் தந்தையானவனுக்கு தனது தம்பியின் மீது சிறிது பொறாமை தோன்றியது உண்மையே.. அர்ஜுனன் குழந்தையை எங்கே அழைத்து செல்கிறான் என்று புரியாமல் குழப்பத்தோடு பார்த்து கொண்டிருந்தான்..
அர்ஷித்தை தவிர அங்கிருந்த அவனது குடும்பத்தினர் அனைவரும் குழந்தை எதற்க்காக திடீரென அனைவரையும் அடித்து கொண்டு அழுதாள் என்ற காரணத்தை அறிந்திருந்தும் அமைதியாகவே நின்றிருந்தனர்…
அர்ஜுனன் குழந்தையை தூக்கி கொண்டு வெளியே சென்ற மறு நிமிடம் மயூரி, மகள் தன்னிடம் வராமல் அழுததை நினைத்து முகத்தில் கவலையின் காரணமாக சோக ரேகை படர ஏதோ யோசனையில் இருந்த அர்ஷித்தின் அருகில் சென்று அவனது கையை பிடித்து கொண்டு, “மாமா.. பாப்பாக்கு புது இடம் அதனால தான் இப்படி அழுது அடம் பிடிக்கிறா… நீ அவளை நினைச்சு கவலை படாத.. இன்னும் கொஞ்ச நேரத்தில அவளே அழுகையை நிறுத்திட்டு சமத்தா வருவா பாரு..” என்று கூறி அவனை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டாள் மயூரி…
அர்ஷித்தும் அவள் சொன்னதை கேட்டு சரி என்று தலையசைத்து விட்டு அவளது கையில் இருந்து தனது கையை விடுவித்து கொண்டு கண்களை மூடி கொண்டான்..
அர்ஷித்தால் மயூரியை தனது மனைவியாக நினைத்து கூட பார்க்க முடியவில்லை…. அவன் பல முறை யோசித்து பார்த்தும் மயூரியை அவன் திருமணம் செய்து கொண்டது போல் எந்த நினைவும் வரவில்லை..
மூன்று வருட நினைவை இழந்தவனால் எந்த நினைவையும் ஞாபகப்படுத்த முடியவில்லை… அவன் அதிகமாக பழைய நினைவுகளை திருப்பி கொண்டு வர யோசிக்கும் போது தாள முடியாத தலை வலி ஏற்பட்டது.. தலை வின் வின்னென்று வலிக்க ஆரம்பித்தது..
வலியை பல்லை கடித்து பொறுத்து கொண்டவன் உடல் சோர்வினால் கண்களை மூடி தூங்க முயற்சி செய்தான்.. ஆனால் உடல் சோர்வு இருந்தும் அவனால் தூங்க முடியவில்லை..
கண்களை மூடினாலே மித்ராவின் கலங்கிய விழிகளே கண் முன்னால் வந்து நின்றது…. அவளது கலங்கிய முகத்தையும், தான் அவள் மீது கோபப்பட்டு பேசியதும் கண்கள் குளம் கட்ட தன்னை வலி நிறைந்த பார்வை பார்த்ததும் அவன் கண் முன்னால் வந்து நின்றதும் அவனது இதயத்தில் தாள முடியாத வலி ஏற்பட்டது… அவளது கண்ணீரை பார்த்து தனக்கு ஏன் இவ்வளவு வலிக்கிறது என்று யோசித்து கொண்டிருந்தான்.. தனது மனைவி மயூரி இருக்கும் போது தான் எதற்க்காக ஒரு வேலைக்காரிக்காக துடிக்க வேண்டும் என்ற ஈகோவில் தனது எண்ண போக்கை நினைத்து கோபம் கொண்டவன் தனது கோபம் முழுவதையும் மித்ரா மீதே வளர்த்து கொண்டவன் தனது கோபம் தீரும் வரை அவளை வெறுத்து முடிந்த மட்டும் அவளை தன்னை நெருங்க விடாமல் வார்த்தைகளால் காயப்படுத்த வேண்டும் என்று வன்மமாக நினைத்து கொண்டான்.. தான் இன்று வேலைக்காரி என்று கோபமாக பேசி அவளை காயப்படுத்தியதும், இனி வரும் நாட்களில் அவளை காயப்படுத்த நினைத்ததற்கும், தனது வார்த்தையாலும், செயலாலும் காயப்படுத்துவதால் மித்ராவை விட அதிகமாக அவளை காயப்படுத்தியதை நினைத்து துடிக்க போகிறான் என்று அறியாமல் போனான்.. ஒருவேளை அறிந்திருந்தால் அவளை காயப்படுத்தாமல் இருந்திருப்பானோ என்னவோ…?? கடவுளுக்கே வெளிச்சம்.
ரித்து குட்டியை தூக்கி கொண்டு அறையை விட்டு வெளியேறிய அர்ஜுனன் சுற்றும் முற்றும் பார்த்து யாரையோ தேடியவன் அங்கே ஓரமாக இருந்த இருக்கையில் அமர்ந்து வாயை தனது இரு கைகளால் பொத்தி சத்தம் போடாமல் கதறி அழுது கொண்டிருந்த மித்ராவை பார்த்தவன் அவள் அமர்ந்திருக்கும் இடத்தை நோக்கி சென்றான்…
தனது வேதனையை யாரிடமும் சொல்ல முடியாமல் கதறி அழுது கொண்டிருந்த மித்ரா, குழந்தை ரிதன்யாவின் அழு குரல் கேட்டு அழுகையை உதட்டை கடித்து நிறுத்தியவள் தனது முகத்தை அழுத தடம் தெரியாமல் துடைத்து கொண்டு அது வரை தலை குனிந்து அமர்ந்திருந்தவள் நிமிர்ந்து பார்த்தால்… குழந்தையோ அவளை நோக்கி கையை நீட்டி கொண்டு அழுது கொண்டிருந்தது..
குழந்தையை பார்த்ததும் சட்டென எழுந்து வேகமாக குழந்தையின் அருகில் வந்தவள் அர்ஜுனனின் கையில் இருந்த குழந்தையை வாரி அணைத்து கொண்டாள்..
குழந்தையும், மித்ராவின் கழுத்தை இறுக்கி கட்டி கொண்டு அவளது தோளில் சாய்ந்து விம்மி கொண்டிருந்தாள் குட்டி மழலை...
மித்ராவும் குழந்தை ரித்து அழுவதை தாங்க முடியாமல் கண்கள் கலங்க நின்றிருந்தாள்…
அவளின் நிலையை புரிந்து கொண்ட அர்ஜுனன் அங்கிருந்து ஒரு அறைக்குள் அவளை அழைத்து சென்று விட்டு அறையை விட்டு வெளியேறியவன்… சில நிமிடங்களில் குழந்தைக்கு கொடுக்க பாலும், பிஸ்கட்டும், மித்ராவுக்கு டீயும் கொண்டு வந்து கொடுத்தான்..
பின்னர் மித்ராவிடம் தீவிரமாக ஏதோ ஒரு விஷயத்தை கூறி விட்டு வருத்தத்துடன் அறையை விட்டு வெளியேறினான் அர்ஜுனன்..
அவன் கூறிய செய்தியை கேட்டு மித்ராவின் கண்கள் கலங்கி போனது… மடை திறந்த வெள்ளம் போல் கண்ணீர் கன்னத்தில் வழிய ஆரம்பித்தது… எதையோ நினைத்து வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தாள்…
அப்போது அவளது கன்னத்தில் சிறு பிஞ்சு விரல் ஸ்பரிசம் ஏற்பட்டது.. மடியில் அமர்ந்திருந்த ரித்துவை பார்த்தாள்.. அவளது கண்ணீரை தனது பிஞ்சு விரல்களால் துடைத்த படியே உதட்டை பிதுக்கி அழ தயாரானாள்…
குழந்தை ரிதன்யா உதட்டை பிதுக்கி அழ தயாராவதை பார்த்து பதறிய மித்ரா தனது கண்ணீரை வேகமாக துடைத்து கொண்டு குழந்தையை அழ விடாமல் சமாதானப்படுத்தும் நோக்கில் பேச ஆரம்பித்தாள்…
குழந்தையின் பட்டு கன்னத்தில் முத்தமிட்டு, “தங்கம்.. எதுக்கு இப்போ அழ தயாராகுறீங்க… நான் அழல பட்டு மா.. கண்ணுல தூசி விழுந்திடிச்சு… நான் கண்ணை துடைச்சிட்டேன்..” என்று தனது வேதனையை மறைத்து கொண்டு போலி புன்னகையை உதட்டில் தவழ விட்ட படியே கூறினாள்..
மித்ராவின் புன்னகையை பார்த்த பிறகே குழந்தை ரித்து குட்டியான பால் பற்கள் தெரிய சிரிக்க ஆரம்பித்தது…
மித்ராவும் குழந்தையின் பசியை போக்க பாலில் பிஸ்கட்டை தோய்த்து ஊட்டி விட ஆரம்பித்தாள்.. குழந்தையும் பசியில் வேகமாக சாப்பிட ஆரம்பித்தது.. குழந்தை பசியில் வேகமாக சாப்பிடுவதை பார்த்த மித்ராவுக்கு கண்கள் கலங்க ஆரம்பித்தது.. ரித்து குட்டியை சரியாக கவனிக்க தவறி விட்டோமோ என்ற குற்றஉணர்வு ஏற்பட்டது..
தனது கையில் இருந்த பிஸ்கட் முழுவதையும் பாலில் தோய்த்து குழந்தைக்கு முழுவதும் ஊட்டிய மித்ரா.. பாலையும் குடிக்க வைத்தாள்..
குழந்தையும் சாப்பிட்டு பசி போனதும் மித்ராவின் மடியிலேயே அயர்ந்து உறங்க ஆரம்பித்தது… குழந்தை உறங்குவதை பார்த்த மித்ரா குழந்தையின் தலையை மெதுவாக கோதி கொடுத்தாள்..
அவளுக்காக வாங்கி வந்த டீயை பார்த்தால் ஆறி போயிருந்தது.. அதை குடிக்க மனமில்லாமல் குழந்தையின் முகத்தை பார்த்து கொண்டிருந்தாள் மித்ரதேவிகா..
அந்த நேரம் அறைக்குள் நுழைந்த அர்ஜுனன் மித்ரா டீ குடிக்காமல் அமர்ந்திருப்பதை பார்த்து அவனுக்கே அவள் நிலையை நினைத்து பாவமாக இருந்தது.. ஆனால் அவள் இப்படியே இருக்க கூடாது என்று நினைத்தவன் அவளது அருகில் சென்று குழந்தையின் உறக்கம் கலைய கூடாது என்று மெதுவான குரலில், “இப்படியே சாப்பிடாம இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா.. உங்களை நீங்களே வருத்திட்டு இருந்தா.. அவன் வந்து கேட்கும் போது.. நான் என்ன பதில் சொல்ல முடியும்.. உங்களை எதுவும் சொல்ல மாட்டான்.. உங்களை சரியா பார்த்துக்கலைன்னு என் கிட்ட தான் கோபத்தை காட்டி கத்துவான்.. என்னை கொன்னாலும் கொன்னிடுவான்.. அவனை பத்தி தான் உங்களுக்கே தெரியுமே..” என்று சற்று கோபம் மற்றும் வருத்தம் கலந்த குரலில் கூறினான் அர்ஜுனன்..
அவன் கூறியதை கேட்ட மித்ராவின் கண்கள் கலங்கி போனது.. அர்ஜுனனை பார்த்து விரக்தி புன்னகை புரிந்தாள்.. அவள் மனம் படும் பாடு அவள் மட்டுமே அறிவாள்.. தன்னை உயிருக்குயிராக காதலித்து தனது அனைத்துமாக இருந்தவன் அல்லவா இப்போது அவளை மொத்தமாக மறந்து போனது மட்டுமல்லாமல் அவளை வார்த்தையால் காயப்படுத்தி அனுப்பி அவள் மீது வெறுப்பை காட்டினான்.. அதை நினைத்தே அவள் வேதனையில் அழுது கொண்டிருக்கிறாள்..
அர்ஜுனன் மித்ராவின் அழுகை இன்னும் அதிகரிக்க வேண்டாம் என்று நினைத்து அறையை விட்டு வெளியேறி மீண்டும் கடைக்கு சென்று டீயை வாங்கி கொண்டு அறைக்குள் நுழைந்தவன் மித்ராவை மிரட்டி குடிக்க வைத்து விட்டு அவளுக்கு ஆறுதல் வார்த்தைகளையும் இன்னும் சில விஷயங்களையும் கூறி விட்டு குழந்தையை வாங்கி அவளின் தூக்கம் கலையாதவாறு தோளில் சாய்த்து அணைத்து பிடித்த படியே அர்ஷித் இருந்த அறைக்குள் நுழைந்தவன் குழந்தை ரிதன்யாவை அர்ஷித் யாதவனின் அருகில் மெதுவாக படுக்க வைத்தவன் தனது அன்னை பார்வதியின் புறம் திரும்பி கண்ணசைத்து எதையோ கூறினான்.. அவன் கூறியதன் அர்த்தம் புரிந்தது போல் அங்கிருந்து நகர்ந்து அறையை விட்டு வெளியேறி மித்ராவை தேடி சென்றார்…
அறையை விட்டு செல்லும் தனது மனைவியை பார்த்த ராகவேந்திரன் அவர் இப்போது வெளியே செல்வதே நல்லது என்று நினைத்து அமைதியாக நின்றிருந்தார்..
மயூரி, அர்ஷித் அருகில் சென்று அவனிடம் பேச முயற்சி செய்தாள்.. அவனோ அவளிடம் பேசாமல் தனது அருகில் தூங்கி கொண்டிருந்த மழலை மொட்டின் தலையை மெதுவாக கோதி கொடுத்தான்.. தந்தையின் ஸ்பரிசம் பட்டதும் தூக்கத்திலும் அழகாக புன்னகைத்தாள் அர்ஷித்தின் செல்வ சீமாட்டி…
தனது மகள் மயூரியின் அருகில் சென்ற அவளது அன்னை மகேஸ்வரி.. மகளை மெதுவாக அங்கிருந்து அழைத்து சென்றார்.. தங்கையும், மருமகளும் சென்றதும் அவர்களுடனே சென்றார் ராகவேந்திரன்..
ராகவேந்திரன், “மயூ மா.. நீ எதுக்கு கவலைப்படுற.. உன் வாழ்க்கையை பறிக்க பார்த்த துரோகியை என் பையனே வெறுத்திட்டான்.. இனிமே உன்னோட வாழ்க்கையில எந்த பிரச்சனையும் வராது.. அந்த அனாதை நாயை என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும்.. குழந்தையை மட்டும் நல்லா பார்த்துக்கோ.. அந்த நாய் இனி நிம்மதியா இருக்ககூடாது.. அவ தினமும் நரக வேதனை அனுபவிக்க போற..” என்று வன்மமாக கூறினார்…
மகேஸ்வரி, “பாப்பா.. நீ கவலைப்படாத அர்ஷித்தை வச்சே அவளை கொடுமைப்படுத்தலாம்.. இத்தனை நாளா அவளுக்கு ஒண்ணுன்னா எப்படி எல்லாம் துடிச்சான்.. மகாராணி மாதிரி தாங்கிட்டு இருந்தான்.. இனி அவன் பண்ற கொடுமையான டார்ச்சர்ல அவளே தற்கொலை பண்ணிப்பா…” என்று கூறி வன்மமாக சிரித்தார்..
மயூரி, மகேஸ்வரி, ராகவேந்திரன் மூவரின் முகத்திலும் வெற்றி பெற்றோம் என்ற கர்வம் அளவுக்கு அதிகமாக தெரிந்தது..
மூவரும் ஒன்றை மறந்து போயினர் உயிருக்குயிராக காதலித்து கொண்டிருந்த இருவரையும் சதி செய்து பிரித்து வைத்தால் அவர்கள் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் காதலே அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கும்.. உண்மையை மறைத்து போலி பிம்பத்தை உருவாக்கினாலும் அது பல நாட்கள் நீடிக்க போவது இல்லை.. உண்மை ஒருநாள் கண்டிப்பாக வெளிவரும்..
அர்ஷித் அறையின் வெளியே யாரையோ தேடி கொண்டிருந்தான்.. அவனுக்கு மித்ராவின் கலங்கிய விழிகளே மீண்டும் மீண்டும் ஞாபகத்துக்கு வந்து கொண்டிருந்தது..
தனது தம்பி அர்ஜுனனை பார்த்த அர்ஷித், “டேய் அர்ஜு.. அந்த வேலைக்காரி எங்க டா..??” அவளை தேடும் மனதை மறைத்து கொண்டு திமிராக கேட்டான்..
அர்ஜுனன், “நீ எதுக்கு அவங்களை தேடுற.. நீ தானே உன் கண்ணு முன்னாடி வரக்கூடாதுன்னு திட்டி அனுப்புன.. அவங்க இனிமே உன் கண்ணு முன்னாடி வர மாட்டாங்க.. நான் அவங்களை வீட்டுக்கு போக சொல்லிட்டேன்..” எங்கே தனது தமையன் மீண்டும் மித்ராவை காயப்படுத்தி விடுவானோ என்ற பயத்தில் அவனிடம் பொய் கூறினான்..
அர்ஜுனன், “அண்ணா.. அவங்களை இனிமே காயப்படுத்துற மாதிரி எதுவும் பேசாத.. அப்புறம் நீ தான் ரொம்ப பீல் பண்ணுவா..” என்று மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தான்…
தம்பியின் பேச்சின் உள் அர்த்தம் புரியாத அர்ஷித், “அவ வெறும் வேலைக்காரி மட்டும் தான்.. அவளை காயப்படுத்திட்டு நான் எதுக்கு டா பீல் பண்ணனும்..” என்று திமிராக கூறியவன் அறியவில்லை இவன் இனி செய்ய போகும் ஒவ்வொரு செயலையும் நினைத்து வருங்காலத்தில் கதறி துடிக்க போகிறான்.. அவனை துடிக்க வைக்க போகிறாள் அவனின் உயிரானவள்…
தொடரும்… 🥺💔
