Share:
Notifications
Clear all

அத்தியாயம் - 15

 

(@aval-porsuvai)
Member Moderator
Joined: 10 months ago
Messages: 15
Thread starter  

தளிர் - 15 

 

காலை ஆதவன் மெல்ல மெல்ல மலையின் மறைவு பகுதியை விட்டு மேல் எழுந்து முழு உருவத்தையும் புவிக்கு காட்சி கொடுக்க .

 

அறையில் மெல்ல தென்றல் காற்று வீச . காற்றில் ஒரு நல்ல நறுமணம் தவழ்ந்து வந்தது . அவன் கண் விழித்து பார்க்க அங்கிருந்த டேபிளில் ஆவி பறக்க ஒரு காபி கப் இருக்க . அதை கண்டவனோ அதை யார் வைத்திருப்பார்கள் என்று அறிந்தவனோ சற்று கடுப்புடன் அதை எடுத்தபடி கீழே இறங்கி செல்ல . 

 

அங்கோ கிச்சனில் இருந்து ஒரு அருமையான மணம் அவன் நாசியை அடைந்தது.  

 

தென்றலோ இஞ்சி , பூண்டு தட்டி போட்டபடி உருளை கிழங்கு வறுவல் ஒரு பக்கம் வறுத்துக் கொண்டிருக்க . 

 

மற்றொரு பக்கமோ பூண்டுடன் சிறிது சீரகம் , மிளகாய் சேர்த்து இடித்து எண்ணெய் விட்டு சிறிது வறுத்து அதனுடன் தண்ணீராக தக்காளி சேர்த்து புளி கரைசல் ஊற்றியபடி ரசம் கமகமவென மணம் பரப்பியபடி கொதித்துக் கொண்டிருக்க . மற்றொரு பக்கம் சாதம் வெந்து கொண்டிருக்க . தென்றலோ அனைத்தையும் ஒரு முறை பார்த்தபடி வெங்காயம் நறுக்கியபடி இருக்க .

 

பாண்டியனோ அனைத்தையும் ஒரு பார்வை பார்த்தபடி கிச்சன் உள் நுழைந்தவனோ ஒரு நொடி அவளது பின் பக்கம் நின்றபடி அவளையே கண் எடுக்காமல் பார்க்க .

 

 

  வெளிர் நீல நிற புடவை அணிந்து , வேலை செய்வதற்கு ஏற்ப தூக்கி கட்டிய முடி , அதுவும் சிறிது பறந்து அவளது முதுகில் விளையாட , ஜாக்கெட் மறைக்காத வெற்று முதுகு , பா வடிவ அமைப்பு கொண்ட ஜாக்கெட்டோ அவளின் முதுகை கனகச்சிதமாக காட்ட , அதுவும் வேலை செய்வதால் அதில் முத்துமுத்தாக வேர்வை துளிகள் வழிந்து கொண்டிருக்க .

 

புடவை ஏற்றி சொருகியபடி . அதில் மறைந்தும் மறையாத இடையழகு, அதன் ஓரத்தில் பொட்டு வைத்தாற் போல் ஒரு சிறு மச்சம் . 

 

ஏற்ற இறக்கத்துடன் பின்னழகு , புடவை மறைத்த தந்த கால்கள் , அதன் முடிவில் தொட்டால் சிவந்துவிடும் என்பது போல் குழந்தை பாதம் . என்று அவன் பார்வை அவளை வெறித்துக் கொண்டிருக்க . பின் தன் எண்ணம் போகும் போக்கை எண்ணி தலையை உலுக்கியவனோ அவளை நோக்கி வேகமாக சென்று அவளின் முழங்கையை பற்றி தன்னை நோக்கி திருப்பியவனோ அவள் முகத்தையே அழுத்தமாக பார்க்க .

 

தென்றலுக்கோ திடீரென யாரோ தன் கையை பற்றி இழுப்பதால் திடுக்கிட்டு முழிக்க . 

 

அவனோ அவள் பயந்து போனதால்

மருண்ட விழிகளையே ஒரு கணம் அசைவின்றி பார்க்க . 

 

அவளோ என்ன என்று சற்று மருண்டு கேட்க 

 

பின் தன்னை சரி செய்து கொண்டவனோ . 

 

ஏய் உன்னை இங்க வரக்கூடாது தான சொன்னேன் அப்புறம் மறுபடியும் இங்க வந்திருக்க , உனக்கு எல்லாம் அறிவே இல்லையா என்று அவளை கண்டபடி திட்டத் தொடங்க . 

 

அவளை அவனை வழி எடுக்காமல் பார்த்தபடி இருக்க .

 

பாண்டியனோ அவளை கிழி கிழி என கிழித்துக் கொண்டிருக்க .

 

தென்றலோ அவனை நெருங்கி நிற்க . பாண்டியனோ அவள் நெருங்கி வருவதை அறிந்து விலகி நிற்க .

 

அவளோ மீண்டும் நெருங்கி நின்றவளோ அவன் தோளை சுற்றி கைகளை போட்டபடி அவன் கண்ணோடு கண் பார்த்து நான் இங்க வர வேண்டாமா என்று கிசுகிசுப்பாக கேட்க .

 

பாண்டியனுக்கோ ஒருகணம் பேச்சே தடைபட்டு போனது அவள் நெருக்கத்தில் . அவள் கையை தட்டிவிட்டவனோ ஏய் உனக்கு அசிங்கமாவே இல்லையா ஒரு ஆம்பிள பார்த்து இப்டி கேட்கிற என்று அவன் வார்த்தை சூடாக வந்து விழ .

 

தென்றலோ சிரித்தபடி கண்டவன் கிட்ட இப்படி கேட்டாதான் தப்பு கட்டிக்க போறவன் கேட்டா தப்பு இல்ல என்று மீண்டும் அவனை நெருங்கி நின்றவளோ .

 

அவன் கண்ணோடு கண் பார்த்து இந்த கண்ணுல தான்டா நான் விழுந்துட்டேன் ஏதோ இந்த கண்ணுல இருக்கு மயக்கமாக கூறியவளோ அவன் என்ன என உணரும் முன் அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட .

 

பாண்டியனுக்கு அவள் நெருக்கத்தில் தடுமாறும் தன்னையே நினைத்து நொந்து கொண்டவனோ , அவள் முத்தமிட்டவுடன் அவள் கையை தட்டிவிட்டபடி அங்கிருந்து நடக்க தொடங்க. 

 

தென்றலோ நீங்க என்ன அங்க இங்க நின்னு பார்க்கிறது எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறீங்களா , எல்லாம் எனக்கு தெரியும் , அதே போல உங்களுக்கும் என்னை பிடிக்கும் அதை காட்டாம இருக்கிறதுக்குதான இத்தனை நடிப்பு என்று அவள் கத்தி கூற .

 

சென்ற பாண்டியனோ மீண்டும் அவள் முன் வந்து ஏய் என்னடி உன் பாட்டுக்கு என்னுமோ உளறிட்டு இருக்க , எனக்கு உன்ன பிடிக்குமா என்ற நக்கலுடன் கேட்க .

 

அவளோ ஆமா என்று அமர்த்தலாக பதில் கூறிவிட்டு அடுப்பில் இருந்த சாதத்தை இறக்கி வைத்தவளோ என்ன பிடிக்காமத்தான் அன்னைக்கு நான் கிணத்துல விழுந்தப்போ அப்படி பதறுனீங்களா , அன்னைக்கு என் பாட்டி ஹாஸ்பிட்டல் இருந்தப்போ நைட் யாருக்கும் தெரியாம என்ன வந்து பார்த்துட்டு விடியகாலை வரை அங்க கார்ல வைட் பண்ணிட்டு விடிஞ்ச அப்புறம் உள்ள வந்தீங்களே இதுலாம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சிட்டீங்களோ என்று அவனை நக்கலுடன் கேட்க .

 

பாண்டியனோ அது எல்லாம் ஒரு மனிதாபிமானத்துல செஞ்சது , யாருக்காக இருந்தாலும் நான் செஞ்சு இருப்பேன் என்று ஒரு சிறு தடுமாற்றத்துடன் கூற .

 

அவளோ அடுப்பில் இருக்கும் உணவை சரிபார்த்தபடி அட எல்லாருக்கும் செய்வீங்கன்னு எனக்கும் தெரியும் சார் . ஆனா எனக்கு செஞ்சது உங்க காதலோடு வெளிப்பாடு . அதோட அன்னைக்கு நான் உங்க கண்ணுல எனக்கான தவிப்ப பார்த்தேன் என்று அவள் வேலை செய்தபடி கூற .

 

ஏய் என்ன பார்த்து பேசுடி , அவளை தன்னை நோக்கி திருப்பியவனோ இது என்ன புது வித முயற்சியோ என்ன உன் பக்கம் இழுக்க என்று கடுமையுடன் கேட்க . 

 

அவளோ நான் ஏங்க உங்கள என் பக்கம் இழுக்க போறேன் அதான் நீங்க ஏற்கனவே என் பக்கம் வந்துட்டீங்களே என்று அவனுக்கும் அவளுக்கும் இருக்கும் இடைவெளியை கிண்டல் தோணியில் சுட்டிக்காட்ட .

 

அவனோ அவளையே முறைத்து பார்க்க .

 

தென்றலோ என்ன ஒத்துக்கிறீங்களா என்ன உங்களுக்கு பிடிக்கும்னு என்று கைகட்டியபடி கேட்க .

 

அவனோ உன்ன எதுக்குடி எனக்கு பிடிக்கனும் என்று கிண்டலுடன் கேட்டவனோ அங்கிருந்த திண்டில் ஏறி அமர. 

 

தென்றலோ சிரித்தபடி அவன் அருகில் வந்தவளோ என்ன பிடிக்காமத்தான் இப்போ நான் கொடுத்த முத்தத்தை வாங்கிட்டு சும்மா நின்னீங்களோ , இல்லை அன்னைக்கு என் பிறந்த நாளுக்கு முத்தம் கொடுத்தீங்களோ 

என்று கிண்டலுடன் கேட்க .

 

பாண்டியனோ அவளையே அழுத்தமாக பார்த்தபடி எனக்கு உன் முத்தம் ஒன்னும் புதுசு இல்ல எனக்கு நிறைய பொண்ணுங்க முத்தம் கொடுத்திருக்காங்க தான் அது போல தான் நீயும் , அதே மாதிரி அன்னைக்கு ஏதோ ஒரு நியாபகத்துல கொடுத்தேன் என்று அவளை பார்த்தபடி வார்த்தைகளை ஈட்டியாக இறக்க .

 

தென்றலோ அவன் வார்த்தையில் சற்று தடுமாறினாலும் தன்னை சமாளித்துக் கொண்டு , நானும் மத்த பொண்ணுங்களும் ஒன்னா என்று அவன் சட்டையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தபடி முறைத்தபடி கேட்க .

 

பாண்டியனோ சிரித்தபடி ஆமாடி ஆமா வேணும்னா ஒரு நைட் என்னோட இருக்கியா அதுக்கு தான இந்த காதல் , கத்திரிக்கா அப்டின்னு சுத்திட்டு இருக்க என்று அவளை வார்த்தைக் கொண்டு வதைக்க .

 

தென்றலுக்கோ சட்டென கண்கள் கலங்கிவிட . அவனையே ஒருகணம் வெறிக்க பார்த்துவிட்டு அங்கிருந்த நடக்கத் தொடங்க.

 

போகும் அவளையே விழிகளில் ஒரு அழுத்தத்துடன் பார்த்தவனோ.

 

ஏய் இங்க இனிமே வரக் கூடாது வந்தன்னா இனிமே நான் சும்மா இருக்க மாட்டேன் , அப்புறம் இப்படி காயப்பட்டு போவ என்று அவளுக்கு கேட்கும் படி கூற .

 

தென்றலோ திரும்பி அவனை பார்த்தவளோ என்ன இப்டி வார்த்தை எல்லாம் சொன்னா நான் வராம போய்டுவேன் தப்பு கணக்கு போடாதீங்க சாரே , எனக்கு நீங்க வேணும், இதுக்கு மேல நீங்க எவ்ளோ காயப்படுத்தினாலும் நான் வருவேன் என்று சொன்னவளோ அவனை ஒரு அழுத்தப்பார்வை பார்த்துவிட்டு செல்ல .

 

பாண்டியனுக்குதான் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு அவனை ஆட்கொள்ள தொடங்கியது .

 

இப்படி அவள் வருவதும் போவதுமாக இருக்க பாண்டியனோ அதற்கு மேல் எதையும் கண்டு கொள்ளாமல் விட்டுவிட . 

 

அன்று ஒரு நாள் அவன் அறைக்குள் சென்றவளோ அவனை எழுப்ப அவனோ கோபத்துடன் அவளை ஏக வசனத்தில் திட்டத் தொடங்க .

 

அவளோ அவன் திட்டுவதை எல்லாம் எங்கு கேட்டாள் அவனை இறுக்கி அணைத்தபடி சிறிது நேரம் படுத்து இருக்க .

 

பாண்டியனோ அவள் அணைப்பில் ஒரு கணம் தடுமாறினாலும் , பின் சமாளித்துக் கொண்டவனோ அவளை உதறித் தள்ளிவிட்டு எழுந்து வெளியே சென்றுவிட. 

 

தென்றலோ போகும் அவனையே ஒரு நமட்டு சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்க.  

 

அன்று எப்போதும் வீட்டின் உள் நுழைந்த தென்றலை வரவேற்றது அங்கு மேல் இருந்து கீழ் இறங்கி வந்த ஒரு பெண்ணின் சிரிப்பு சத்தம் , பாண்டியனும் அப்பெண்ணுடன் பேசியபடி இறங்கி வர , வாசல் வரை சென்றவனோ அவளை அணைத்து விடுவித்து ஓகே பாய் என்று அவளும் அவனிடம் கொஞ்சல் மொழி பேசிவிட்டு செல்ல .

 

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த தென்னலோ எதுவும் சொல்லாமல் கிச்சன் உள்ளே நுழைந்து கொள்ள . பாண்டியனோ அவளை ஒரு அழுத்தமான பார்வை பார்த்தபடி கிச்சன் உள்ளே நுழைய . அவளோ தனது வேலையில் ஈடுபடத் தொடங்க .

 

பாண்டியனோ அவளை ஓரு பார்வை பார்த்துவிட்டு தன் அறை நோக்கி செல்ல .

 

அவனை அழைத்த தென்றலோ ஏன் சார் உங்க காசை இப்படி கண்டவர்களுக்கு எல்லாம் கொட்றீங்க , அதுவும் சும்மாவே இப்படி கொட்றீங்க என்று கிண்டலாக கேட்க .

 

அவனோ அவளை புரியா பார்வை பார்க்க . 

 

அவன் அருகில் வந்தவளோ அந்த பொண்ணுக்கும் உங்களுக்கும் ஒன்னும் நடக்கலன்னு எனக்கே தெரியும் ஏன் இப்படி என்ன விரட்ட என்னென்னுமோ செய்றீங்க , நீங்க இப்படி என்ன செஞ்சாலும் நான் உங்கள விட்டு போறதா இல்ல என்று அவள் அமர்த்தலாக கூற .

 

பாண்டியனுக்கோ அவளது பேச்சில் சுர்ரென கோபம் வர .

 

அப்படியா மேடம் இன்னைக்கு என்னவிட்டு ஓடுற பாருடி என்று அவள் இடையோடு தூக்கி தன் தோளில் போட்டவனோ மாடி நோக்கி ஏறத் தொடங்க .

 

தென்றலுக்கு அவனது இவ்வாறான நடவடிக்கையில் சிறிது பயம் ஏற்பட்டாலும் அதனை எல்லாம் மறைத்துக் கொண்டு அவன் தோளில் இருந்து இறங்க முற்பட .

 

அவனோ அவள் இடையை அழுந்த பற்றி அவளை இறங்க விடாமல் செய்தவனோ அறையில் இருந்த படுக்கையில் தொப்பென்று தூக்கி போட .

 

அவன் தூக்கி போட்டதில் அவள் புடவையோ முழங்காலுக்கு மேல் ஏறிவிட. அவனோ அதையே வெறித்தபடி இருந்தவனோ அவள் அருகில் நெருங்கி வர . 

 

அவன் பார்வை பயத்தை கொடுத்தாலும் அதை சரி செய்தவளோ அவனை நேர் கொண்டு பார்வை பார்க்க.  

 

பாண்டியனுக்கோ கண்டிப்பாக அவள் பயப்படுவாள் , கத்துவாள் என்று பார்க்க அவளோ எதுவும் செய்யாமல் அவனையே பார்க்க .

 

அவனோ என்னடி உனக்கு பயமே இல்லையா என்று அவள் அருகில் நெருங்கி வந்தவனே அவள் இருபக்கமும் கைகள் ஊன்றி அவள் காது மடல் உதடு உரச கேட்க .

 

தென்றலோ அவன் வாசத்தை உள்வாங்கியபடி மயங்கியவளோ நான் ஏன் பயப்படனும் என்றவளோ அவனை அதே பார்வை பார்க்க .

 

பாண்டியனோ அவள் இதழ் நோக்கி குனிய அவளுக்கோ சிறிது உடலில் நடுக்கம் ஏற்பட்டாலும் அதை மறைத்து கொண்டு மெல்ல கண் மூடியபடி இருக்க .

 

சிறிது நேரம் அப்படியே இருந்தவளோ எதுவும் நடக்கவில்லை என்பது புரிந்து பட்டென கண் விழிக்க . 

 

பாண்டியனோ இருவரது இதழுக்கும் நூல் இடைவெளியோடு நிறுத்தி இருந்தவனோ அவள் கண் முழிக்கும் நேரம் அவள் கண்ணோடு கண் பார்த்து இதழை கவ்விக் கொள்ள .

 

தென்றலுக்கோ ஹக் என்ற துள்ளலோடு அவனை விலக்க போராட .

 

அவனோ அதை எல்லாம் தடுத்தவனோ அவளோடு படுக்கையில் சரிந்து அவள் சேலை மீது கைவைத்தவனோ அவளிடம் அத்துமீற தொடங்க .

 

சிறிது நேரம் அவனை தடுத்தவளோ அதன்பின் என்ன நினைத்தாலோ அவனிடம் தன்னை அப்படியே விட்டுவிட .

 

பாண்டியனோ அவளை பயமுறுத்தவ இங்கு அழைத்து வந்தான் ஆனால் நடந்து கொண்டிருப்பது அனைத்தும் அவன் கைமீறிச் சென்று கொண்டிருக்கிறது அல்லவா .

 

பயமுறுத்தவே இதழோடு இதழ் பதித்தான் ஆனால் உணர்ச்சி வேகத்தில் அவன் முத்தம் திசை மாறி சென்று கொண்டிருக்கிறது அல்லவா . 

 

அவன் ஒன்றும் காமுகன் அல்லவே தான் வாழ்க்கையில் பட்ட அடிகள் அவனை திசை மாற்றிவிட்டது அல்லவா .

 

அதனால் தானே யாரையும் நம்பாமல் , யாரையும் அவனை நெருங்க விடாமல் செய்கிறது . இதோ இவளது காதல் என்பதும் அவனுக்கு நடிப்பு போல் அல்லவா தெரிகிறது ஏதோ ஒரு தேவைக்காக தானே இவள் இவ்வாறு நடந்து கொள்கிறாள் என்று அவன் மனது ஆணித்தரமாக எண்ணிக் கொண்டிருக்க .  

 

இன்று வந்த பெண்ணுடன் கூட அவனால் நெருங்க முடியவில்லை அல்லவா . இதுவரை எத்தனையோ பெண்களை நெருங்கி இருக்கிறான் ஆனால் இன்று போல் இதுவரை ஆனது இல்லை . 

 

அன்று அவளை அடித்த போது அவள் ஒரு பார்வை அவனை பார்த்துவிட்டு சென்றாலே அதுவே அவன் கண் முன் வந்து செல்கிறது , அந்த பெண்ணை நெருங்கினால் அவள் முகம் தானே வருகிறது . 

 

ஆனால் அவளோ இது அனைத்தும் உண்மையடா என்று அவளது செய்கையில் மூலம் நிருபித்து கொண்டிருக்கிறாள் . நான் மற்றவர்கள் போல் இல்லை என்பதை உணர்த்துவதே இதோ படுக்கை வரை அவனுடன் வந்தது . 

 

அவனிடம் இருந்து அவள் 

எப்படியாவது விலகி ஓடி இருக்கலாம் ஆனால் அவள் ஓடாமல் அவன் செய்யும் அனைத்திற்கும் இசைந்து கொடுத்தால் அல்லவா .

 

சட்டென அவளிடம் இருந்த விலகியவனோ அங்கிருந்த ஜன்னல் ஓரம் சென்று வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்க .

 

தென்றலோ அவன் விலகி சென்றதும் சிறிது நேரம் மூச்சுவாங்க அப்படியே இருந்தவளோ அதன் பின் தன்னை சரி செய்து கொண்டுவளோ அங்கிருந்து வேகமாக இறங்கி ஓடிவிட. 

 

போகும் அவளையே ஜன்னல் வழி பார்த்துக் கொண்டிருந்தான் பாண்டியன் . 

 

தொடரும் ...

 

Review please 🙏

 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top