Share:
Notifications
Clear all

அத்தியாயம் - 14

 

(@aval-porsuvai)
Member Moderator
Joined: 10 months ago
Messages: 14
Thread starter  

தளிர் - 14

 

இதழின் பார்வையோ செழியனையே பார்த்தபடி இருக்க. அதே நேரம் கதவை திறந்து கொண்டு உள் நுழைந்தான் கதிர் . அவனை கண்ட இதழோ பதட்டத்துடன் காலை இறக்கிவிட்டு அங்கிருந்து வெளியே செல்ல பார்க்க. 

 

போகும் அவளையே வெறித்த வண்ணம் இருந்தது செழியனின் விழிகள் . உள்ளே வந்த கதிரோ என்னடா பண்ற என்று அவன் முன் இருக்கையில் அமர. 

 

செழியனோ எதுவும் சொல்லாமல் அமர்ந்து இருக்க .

 

கதிரோ சலிப்பாக இருபக்கமும் தலையாட்டிவிட்டு பணி நிமித்தமாக பேசத் தொடங்கிவிட.

 

செழியனும் தன் வேலையை செய்யத் தொடங்க. 

 

அதே நேரம் இங்கு கேன்டீன் உள் வந்த இதழோ அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தபடி தன் பாதத்தையே பார்த்தபடி இருக்க .

 

அவளை கலைத்தது அங்கிருந்த இரவு ஊழியர்களின் சத்தம் . பின் தனது வேலையை முடித்துவிட்டு . தனது பையை எடுத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினால் .

 

இரவு நேரம் என்பதால் பார்ப்பதற்கு அந்த இடமே சற்று மிரட்டக் கூடியதாக இருந்தது . இதழோ மெதுவாக நடந்து சென்று பஸ்ஸ்டாப்பில் இருந்த நிழற் கூடத்தின் உள் அமர்ந்து கொண்டவளோ . பாதத்தை மெதுவாக அழுத்திவிட . அதுவோ சூடான டீ பட்டதால் நன்றாக சிவந்து காயம் ஏற்பட்டு இருக்க . வலியில் கண்கள் கலங்கிவிட . பின் மீண்டும் பஸ் வரும் பாதையை பார்த்தபடி இருக்க .

 

அந்த பஸ் ஸ்டாப்பில் ஒரு சிலர் மட்டுமே இருந்தனர் . அவள் செல்லும் இடத்திற்கான பேருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒன்று தான் வரும் அவளும் காத்துக் கொண்டிருக்க .

 

அதே நேரம் செழியனும் தனது வேலை முடிந்து வீடு நோக்கி அவள் பஸ்ஸடாப் இருக்கும் வழியில் காரில் கடந்து செல்ல .

 

போகும் அவனையே விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தால் அவள் .

 

சிறுது நேரம் கழித்து அவள் செல்லும் பேருந்தும் வந்து நின்றது .

 

இதழோ வீட்டில் நுழையும் நேரம் அவளது சித்தியின் சத்தமே காதை கிழித்துக் கொண்டிருந்தது .

 

உள்ளே வந்த இதழை கண்ட அவளது சித்தியோ ஏய் இன்னைக்கு என்ன இவ்ளோ நேரம் என்று சிறு அதட்டலுடன் கேட்க .

 

இதழோ சிறு பதட்டத்துடன் அது கொஞ்சம் இன்னைக்கு வேலை அதிகம் என்று அவளது அறைக்குள் நுழைந்து கொள்ள .

 

அவளது சித்தியோ ஏய் தமிழு எங்கடி இருக்க என்று அவளிடம் ஏதோ சத்தம் போட தொடங்க .

 

அதே நேரம் இங்கு காரில் வந்தவன் மனதோ அனலாக அல்லவா கொதித்துக் கொண்டிருந்தது . அவளை வதைப்பதும் அவனே அவளுக்கு மருந்தாவதும் அவனே .

 

இங்கு வீட்டின் உள் நுழைந்தவனோ தனது அறையில் நுழைந்து . தனது உடையை மாற்றியபடி அங்கு இருக்கும் அவனது உடற்பயிற்சி அறையினுள் நுழைந்து அங்கிருந்த பன்ச்ங் பேக்கில் குத்திக் கொண்டிருக்க .

 

அவனது நினைவே இப்படி ஒரு நாள் அவன் பயிற்சி செய்து கொண்டிருந்த போது அவன் முன் வந்து நின்றவளோ எப்படி இப்படி பண்றீங்க என்று அவனை தன் கண்களை அகல விரித்தபடி ஆச்சர்யமாக கேட்டாளே, அதை எல்லாம் மறக்க முடியுமா ? . 

 

அவனும் அவளுடன் ஏதோ சொல்லி அவளை கிண்டல் அடித்து அவளை வம்புக்கு இழுத்தானே அதை எல்லாம் மறக்க முடியுமா அவனது எண்ணங்களோ அதை நோக்கி பயணித்தது .

 

அன்று அவன் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவன் முன் வந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளை கண்டவனோ என்ன என்பது போல் ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க.

 

அவள் அருகில் வந்தவனோ அவள் இடையில் சொருகி இருந்த சேலையை அவள் இடையை வருடியபடி எடுத்து தன் முகத்தை துடைத்தவனோ.

 

இடையோடு கைவிட்டு தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவனோ என்னடி பார்வை ரொம்ப பலமா இருக்கு என்று அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தபடி கேட்க .

 

அவளோ அவன் நெருக்கத்தில் மயங்கி, கிறங்கி நின்றிருந்தாலும் சிறிது நேரத்தில் தன்னை சமாளித்துக் கொண்டவளோ. 

 

அவனை விழி அகலாமல் பார்த்தபடி தோளைச்சுற்றி தன் கைகளை போட்டபடி ஆமா எப்படி இந்த எக்சைஸ் பண்றீங்க என்றபடி அவன் புஜத்தை தன் கையால் வருடியபடி கண்களில் ஒரு வித ஆர்வத்துடன் கேட்க .

 

அவனோ மெலிதாக சிரித்தபடி அவள்

கன்னத்தை தன் பெருவிரல் கொண்டு பூவை வருடுவது போல் மென்மையாக வருடியவனோ .

 

அது ஒன்னும் இல்லடி டெய்லியும் தொடர்ந்து செஞ்சா இது சுலபம் தான் என்றவனோ அவளை இடையோடு தூக்கியபடி அங்கிருந்த டேபிள் மீது அமர வைக்க .

 

அவளோ அவன் தூக்கியதால் அவன் தோளை அழுந்த பற்றி கொண்டவளோ. 

 

அது எப்படிங்க எனக்கும் சொல்லித்தர முடியுமா என்று சிறுபிள்ளை போல் கேட்டவளை ரசித்தவனோ.

 

 அவள் கன்னம் கிள்ளி பிள்ளை முத்தம் கொடுத்தபடி சொல்லி தந்துட்டா போச்சு என்று அங்கிருந்து இறக்கி விட்டவனோ. 

 

அவள் கேட்டது போல் அந்த பன்சிங் பேக் முன் அவளை நிற்க வைத்தவனோ அவள் கையில் கிளவுசை மாட்ட .

 

அவளோ நீங்க வெறும் கையில தான பண்ணீங்க என்று சந்தேகம் கொண்டு கேட்க .

 

அவனோ அது எனக்கு பழகி போனது ஆனா நீ புதுசு இல்ல முதல்ல பண்ணும் போது இப்படி தான் பண்ணனும் என்றவனோ அவளை தன் முன் நிறுத்தி அவள் பின் பக்கம் நின்றவனோ.

 

அவள் கைகளை சண்டைக்கு போவது போல் நிறுத்தி அவளுக்கு சொல்லித்தர அவளோ சில நிமிடங்களில் மூச்சு வாங்கியபடி இதுக்கு மேல் என்னால முடியாது என்று கிளவுசை கழட்டிவிட்டு அங்கிருந்து செல்லத் தயாராக.  

 

அவனோ ஏய் எங்க ஓடுற என்றவனோ அவளை இடையோடு தூக்கியபடி அங்கிருந்து நடக்கத் தொடங்க .

 

அவளோ என்ன பண்றீங்க எனக்கு வேலை இருக்கு நான் போகனும் என்று அவன் கைகளில் இருந்து துள்ளி இறங்க முயற்சி செய்ய .

 

அவனோ அதுலாம் அப்புறம் பார்த்துக்கலாம் இப்போ குளிக்கலாமா ? என்று அங்கிருந்த தண்ணீர் தொட்டியை கண்களால் காட்ட .

 

அவளோ நான் காலையிலேயே குளிச்சுட்டேன் என்ன இறக்கி விடுங்க என்ற சிணுங்க .

 

அவன் எங்கு விட்டான் தொட்டியின் அருகில் வந்தவனோ அவளை இறக்கிவிட்டு அப்படியே தொட்டியில் இருவரும் சேர்ந்து பொத்தென்று விழுந்துவிட .

 

அவளுக்கு அதிர்ச்சி சட்டென இப்படி செய்வான் என்று அறியாதவளோ தண்ணீர் உள் மூழ்கி மேல் எழுந்தபடி அவன் மார்பில் பட் பட் என்று அடித்தவளோ எதுக்கு இப்படி பண்ணீங்க என்று முகத்தில் இருந்த தண்ணீரை துடைத்து எடுத்தவளோ அவன் முகம் பார்க்க. அவன் எங்கு அவள் முகம் பார்த்தான் . 

 

அவனது பார்வை முழுவதும் வேறு எங்கோ நிலைத்து இருப்பதை உணர்ந்தவளோ. அவன் பார்வை செல்லும் இடம் கண்டு கன்னங்கள் இரண்டும் சிவந்து விட . சட்டென தன்னை மறைத்துக் கொள்ள புடவையை சரிசெய்ய முயற்சி செய்ய .

 

தண்ணீரில் நனைந்ததால் அவள் உடலோடு ஒட்டிய புடைவையின் வழியாக அவளது வனப்பு அனைத்தும் வெட்ட வெளிச்சம் ஆகிவிட. அவனோ வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க . தலையில் இருந்து இறங்கிய நீரோ அவள் நெற்றியில் இருந்து வழிந்து அவள் இதழ் தீண்டி, கழுத்தில் வழிந்து புடவை மறைத்த பெண்ணின் அழகில் மறைந்து விட . அவனுக்கு நீர் சென்ற இடம் எது என்பதிலேயே பார்வை இருக்க .

 

அவளோ அவன் பார்வையில் நாணம் கொண்டு எதுக்கு இப்படி பார்க்கிறீங்க என்று தன் வெட்கத்தை மறைக்க அங்கிருந்து வெளியே செல்ல முயல .

 

அவனோ தண்ணீரில் மூழ்கியதால் பளிச்சென மின்னிய தங்க இடையில் கைகொடுத்து தன் உயரத்திற்கு தூக்கியவனோ நீரில் மூழ்கியதால் உதடோ சிவந்து மினுமினுக்க அவனோ அதை மேலும் சிவக்க வைக்க நினைத்தானோ என்னவோ .இதழோடு இதழ் பதித்து நீரோடு நீராக இருவரும் மூழ்க .

 

செழியனின் நினைவை கலைத்தது போன் அடிக்கும் சத்தம் . மீண்டும் அவனது முகம் கடுமையை தத்தெடுத்துக் கொள்ள . மீண்டும் 

அந்த பன்சிங்க பேக் கிழியும் அளவு அடித்து நொறுக்கிவிட்டே அங்கிருந்து அகன்றான் .

 

அன்று காலை தாமதமாக எழுந்த இதழோ சக்கரம் கட்டியது போல் சுழன்று கொண்டிருக்க . அவளை அழைத்த அவளது சித்தியோ எனக்கு இன்னைக்கு பூரியும் கிழங்கும் வேணும் என்று அவளுக்கு வேலை ஏவ .

 

அங்கு வந்த தமிழோ ஏம்மா நீ வீட்டுல தான இருக்க நீ செஞ்சு சாப்பிட்டுக்க கூடாதா என்று அவளிடம் காய .

 

அவரோ ஏன் அவ என்ன எனக்கு மட்டுமா சமைக்க போறா நீங்களும் தான அதை சாப்பிட போறீங்க என்று அவர் முகத்தை கோண .

 

தமிழோ மீண்டும் ஏதோ சொல்லும் முன் அவளை தடுத்த இதழோ நான் பார்த்துக்கிறேன் சித்தி என்று சமையல் அறையில் நுழைந்து கொண்டவளோ அனைத்தையும் செய்து முடித்துவிட்டு அவளது அலுவலகம் வந்து சேர எப்போதும் வரும் நேரத்தை விட சற்று அதிகமாக ஆகிவிட .

 

அதே நேரம் கேன்டீன் இருந்த நபர்களோ ஏதோ பதட்டத்தில் இருக்க . 

 

அங்கு வந்த இதழோ தன் அன்றாட வேலையை செய்யத் தொடங்க . அவள் அருகில் வந்த கனகாவோ என்ன இதழ் இன்னைக்கு இவ்ளோ லேட் என்று அவளிடம் சற்று பதட்டத்துடன் கேட்க .

 

இதழோ அது வீட்ல கொஞ்சம் வேலைக்கா அதான் ஆமா ஏன் அக்கா எல்லாம் ஒரு மாதிரி இருக்கீங்க என்று சுற்றி இருந்தவர்களை பார்த்தபடி கூற .

 

அவரோ அதுவா இன்னைக்கு வாரத்துல முதல் நாள் அப்படிங்கிறதால கொஞ்சம் எல்லாரையும் சமாளிக்கனும் இல்ல அதான் எல்லாரும் கொஞ்சம் பதட்டமாக , கொஞ்சம் வேலையாவும் இருக்காங்க என்றவரோ அவரது பணிக்கு சென்றுவிட .

 

இதழோ தனது பணியான அன்றைய உணவு பட்டியல் , உணவு சமைக்கும் இடம் என அனைத்தையும் சரிபார்த்துக் கொண்டிருக்க . அதே நேரம் அந்த இடத்தில் ஏதோ சிறு சலசலப்பு ஏற்பட இதழோ அதை எதையும் கவனிக்காமல் அங்கிருந்த மளிகை பொருட்களை கணக்கு எடுத்துக் கொண்டிருந்தவளோ சிறிது நேரத்தில் எந்த சத்தமும் அந்த இடத்தில் இல்லை என்பதை உணர்ந்த இதழோ அப்போதுதான் ஒன்றை கவனித்தால் அந்த இடத்தில் யாரும் இல்லை என்று . அவள் இருப்பதோ சமைக்கும் இடத்தில் இருந்து சற்று தூரம் தள்ளி இருக்கும் ஸ்டோர் ரூம் போன்ற சிறு தடுப்பதுடன் இருக்கும் ஒரு சிறு அறை போன்ற அமைப்பு . அது டீ குடிக்கும் நேரம் என்பதால் அனைவரும் அங்கிருந்து சென்று இருக்க . அவளோ மீண்டும் தனது வேலையில் ஈடுபட . அதே நேரம் அவளின் இடையை ஒரு கரம் வலிக்க பற்றியபடி தன்னை நோக்கி திருப்பியது .

 

இதழுக்கோ ஒருகணம் தூக்கிவாரிப்போட , அதே அதிர்வுடன் அவன் முகம் பார்க்க . அவனோ கோபத்துடன் அவளை முறைத்தவனோ அங்கிருக்கும் சுவரோடு சுவராக அவளை தள்ளி சென்று அழுத்தியபடி அவளிடம் ஒரு கேள்வி கேட்க .

 

இதழுக்கோ அவன் கேட்ட கேள்வியில் அவனையே ஒரு அதிர்வுடன் நோக்க .

 

தொடரும் ...

 

படிக்கிறவங்க கதை எப்படி இருக்குன்னு சொல்லிட்டு போங்க .

 

Follow பண்ணிட்டு படிங்கப்பா updates சீக்கிரம் கிடைக்கும் . 

 

மற்ற கதைகள் 

 

அரசனோ என் அரக்கனோ 

 

மாறனின் மலரிவள் .

 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top