Share:
Notifications
Clear all

கிஷ்-மீ 11

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 225
Thread starter  

அத்தியாயம் 11

 

கிருஷூம் கண்ணனும் சென்றவுடன்,

மற்றவர்களிடம் திருமணத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்க மீரா தனியாக நழுவிச் சென்று விட்டாள் தன் அறைக்கு.

 

கண்கள் ஜன்னல் வழியாக வெளியே வெறித்துக் கொண்டிருந்தது.

 

கிருஷ் கண்ணனிடம் பகிர்ந்து கொண்ட அதே காதல் நினைவுகளை தான் மீராவும் நினைத்து கொண்டிருந்தாள்.

 

பதின்ம வயதில் அவள் செய்த அந்த கிறுக்குத்தனங்களை எல்லாம் இப்பொழுது நினைக்க.. லேசாக சிரித்து வந்தாலும், அதன் பின் நடந்த சில அனர்த்தங்கள் அவள் வாழ்கையை மாற்றிப் போட்டிருந்தது.

 

இன்று.. இப்போது.. அவள் இங்கே இருக்கும் நிலைக்கும் அது தான் காரணம்..!

 

“பழச நினைக்காதே..! பழசை

 நினைக்காதே மனமே..!” என்று தனக்குத்தானே கூறிக் கொண்டவள், இதற்கே மேல் இங்கே இருந்தால் தனக்கு கிறுக்கு பிடித்துவிடும் என்ற அவசர அவசரமாக கிளம்பினாள்.

 

வழக்கம்போல உள்ளே கழுத்து வரை இருக்கும் வெள்ளை பனியனையும் மேலே கட்டம் போட்ட‌ சட்டை அதிலும் மேலிருந்து பட்டன்கள் கழட்டிவிட்டு.. கையை முழங்கை வரை ஏற்றி வைத்து, முடிகளை தூக்கி குதிரைவால் என்று அவள் கிளம்பி வெளியே வர இப்பொழுது நாராயணன் வந்தவளை விட்டு தன் அருகில் பேசிக் கொண்டிருந்த தேசிகனை தான் அவ்வளவு முறைந்தார்.

 

“அச்சோ அச்சோ இன்னிக்கும் இவ எங்க கிளம்பி போறா? இவ செய்றதுக்கு எல்லாம் என்னை தானே இவரு முறைப்பாரு..‌ கண்டபடி ஏசுவாரு!” என்று அருகில் இருக்கும் அத்தானை மெல்ல திரும்பிப் பார்க்க.. அவர் நினைத்தது போல ஆசையோடு அவரைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார் நாராயணன்.

 

‘போச்சு.. போச்சு..! இப்ப ஆரம்பச்சிடுவாரே?’ என்று நினைக்கையிலேயே, நாராயணன் “தேசிகன்.‌.!” என்று உறும..

 

“இருங்க இருங்க அத்தான்.. நான் பேசி புரிய வைக்கிறேன்” என்றவர், பாய்ந்து மீராவின் அருகில் வந்து, அவளை பற்றி ஓரமாக இழுத்து “என்ன பாப்பா இது? ஏன் இப்படி எல்லாம் பண்ணி உங்க அப்பாவுக்கு பீபிய ஏத்துற?” என்று ஆதங்கமாக கேட்டார்.

 

திரும்பி தந்தையை ஒரு கணம் பார்த்தவள், “அப்படியா அப்பாவுக்கு பீபி அதிகமாயிடுச்சா நாராயணா நாராயணா..” என்று அவள் கேலியாக சிரிக்க “பாப்பா..‌ இது என்ன கேலி!!” என்று மாமனாய் மீராவை அதட்டினார் தேசிகன்.

 

“என்ன மாமா? நானா அவர மாப்பிள பாக்க சொன்னேன்? அதுவும் அந்த மாப்பிள்ளைய வேற பார்த்து வச்சு கல்யாணம் பண்ணியே தீர்வேனு முடிவோட இருந்தா.. இந்த மாதிரி விஷயத்தை சகிச்சி கடந்து தான் செய்யணும்.. கல்யாணம்னா சும்மாவா?” என்று ஓரப் பார்வையால் தந்தையை பார்த்துக் கொண்டு மாமனிடம் பேசினாள்.

 

‘ஐயோ இவங்க ரெண்டு கிட்டேயும் மாட்டிக்கிட்டு நான் படுற பாடு’ என்று மனதுக்குள் புலம்பியவர் வெளியில் சிரித்துக் கொண்டே “நான் பேசுகிறேன் அய்த்தான்.. நான் பேசுகிறேன்” என்று இவர்களையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்த நாராயணன் சொல்லிவிட்டு இங்கே மருமகளிடம் கெஞ்சினார்.

 

“பார்றா பாப்பா.. எப்படி இருந்தாலும் இன்னொரு வீட்டுக்கு நீ கல்யாணம் பண்ணி போக வேண்டியவ தானே? அதுவும் தீனதயாளன் குடும்பத்தை ரொம்ப வருஷமா தெரியும். அவங்க பையனும் கூட ரொம்ப நல்ல மாதிரி தான்.. நீ செய்யுற ஆர்கனைசர் வேலையை கூட அவங்க ஏதும் சொல்லலையே டா? யோசிச்சு பாரு எப்படியும் உன்னை கல்யாணம் பண்ணாம இருக்க விட மாட்டாங்க.. அதுக்கு இந்த குடும்பம் பெட்டர் இல்லையா?” என்றதும் அவளும் யோசிப்பது போல முகத்தில் பாவனையைக் காட்டி..

 

“ஓகே மாமா..! நீங்க இவ்வளவு தூரம் சமாதானம் பண்ணி பேசி அந்த குடும்பம் நல்லா குடும்பம்னு மார்கெட் பண்றதுனால நா ஒத்துக்கிறேன். அதுக்காக வீட்டிலேயே இரு..! வெளியில போகாதே..! அத பண்ணாத..! இத பண்ணாத..! இந்த புடவை கட்டு.! அந்த நகையை போடு..! இப்படியெல்லாம் என்னை போட்டு டார்ச்சர் பண்ண கூடாது சொல்லிட்டேன்” என்று ரக்குடு கேர்ளாய் அவள் சட்டையை சுருட்டி கொண்டே பேச..

 

“இல்ல.. இல்ல.. அதெல்லாம் இல்ல அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். நீ சம்மதிச்சதே போதும் டா பாப்பா” என்று மருமகள் சமாதானமானதே போதும் என்று பெருமூச்சு விட்டார்.

 

பின்பு அத்தனை பார்த்து கட்டைவிரலை தூக்கி சக்சஸ் செய்து காட்ட அதுவரை கடுகடு என்று இருந்த நாராயணனும் இப்பொழுது திருப்தியோடு அமைதியாகினார். 

 

“ஆமா இப்ப எங்க கிளம்பிட்ட?”

 

“என்ன மாமா இப்படி பொறுப்பு இல்லாம கேக்குறீங்க.. நாம எப்படிப்பட்ட பிசினஸ்ல இருக்கோம்? நம்மள நம்பி எத்தனை குடும்பங்கள் அங்க காத்திருக்கு தெரியுமா?” என்றதும், அவர் புரியாமல் மருமகளை பார்த்தார். 

 

“என்ன மாமா இப்படி பேனு பார்க்கிறீங்க? நேத்து நைட்டு தானே போன் வந்துச்சு.. அந்த சைதாப்பேட்டை எக்ஸ் டான் மருதமுத்து இறந்துட்டார்னு.. அங்கதான் கிளம்பிட்டு இருக்கேன். நம்ம ஆளுங்க ஏற்கனவே அங்க போயிருப்பாங்க.. நான் போய் மத்த வேலையெல்லாம் பார்க்கணும்..” என்று கிளம்பினாள்.

 

“இப்பதான் உங்க அப்பாவ கொஞ்சம் சமாதானப்படுத்தி இருக்கேன். நீ இன்னும் அதுக்குள்ள அவரு கோபத்தை மறுபடியும் ஏத்துற? கொஞ்சம் கருணை காட்டுமா இந்த தாய் மாமன் மேல” என்று கெஞ்சினார்.

 

“இங்க பாருங்க.. நான் இப்ப மருதமுத்து ஓட கடைசி பார்ட்டிக்கு போயே ஆகணும். நீங்க என்ன சொல்லி சமாளிப்பீங்களோ உங்க அய்த்தான அது உங்க கஷ்டம்..?” என்று வேகமாக வெளியே போக போனவள்,

 

தலையை மட்டும் நீட்டி “அப்புறம் என் கல்யாணத்துக்கு வெளியில கொடுத்த ஆர்டர் எல்லாம் கேன்சல் பண்ணிடுங்க.. நம்ம டீம் வச்சு அசத்திடலாம்” என்றதும் இப்போது நிஜமாகவே நெஞ்சு வலி வரும் போல இருந்தது தேசிகனுக்கு. 

 

சத்தமாக சொன்னவள் எல்லாரையும் பார்த்து பை கைஸ் என்று பொதுவாக கூறிவிட்டு வேகமாக தனது பைக்கை எடுத்துக்கொண்டு எப்பொழுதும் போல வீலிங் செய்து கொண்டே போக, பெருமூச்சு விட்டப்படி மருமகளை பார்த்தவர் பின் அத்தானின் அருகில் வந்து அமர்ந்தார். 

 

“அவ செய்றது கொஞ்சம் கூட சரியில்ல தேசிகன். எல்லாம் நீ கொடுத்த செல்லம் தான்” என்று நாராயணன் கோபமாக பேச.. 

 

அமைதியாக அத்தானை பார்த்தவர் “நான் கொடுத்த செல்லம் இல்ல அத்தான்..! நீங்க அவளை விட்டது தான் காரணம். அன்னைக்கு நான் அவ்வளவு சொன்னேன் அவள விடாதிங்க அவள விடாதீங்கனு. நீங்க கொஞ்சம் இழுத்து புடிச்சி இருக்கலாம். ஆனா யாரையோ சமாதானப்படுத்த என் மருமகளை பலியாக்கிட்டீங்க இல்ல?? இன்னைக்கு வந்து அவ அப்படி பண்றா எப்படி பண்றான்னு சொல்றீங்க அத்தான். அம்மா அப்பானு ஒரு கூட்டில் ஒழுங்கா வாழ்ந்திருந்தால் என் மருமகளுக்கு இப்படி யாரோ மாதிரி வீட்டுக்கு வர்றதும் போறதுமா இருப்பாளா என்ன?” என்று விழ இருந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு அத்தானிடம் சண்டை போட்டார். 

 

தேசிகன் கேட்பதும் அத்தனையும் நியாயம். எப்பொழுதுமே.. அன்றிலிருந்து இன்று வரை நியாயத்தை மட்டுமே பேசுபவர் அவர். அதன் பக்கமே நிற்கும் அவரை எங்கனம் மறுத்து பேச இயலும்?

 

பெருமூச்சு விட்ட நாராயணனா “நடந்தது நடந்து போச்சு அதையே யோசிச்சுக்கிட்டே இருந்தா என்ன பண்ணலாம் சொல்லு? அவளை கொஞ்சம் மாத்து தேசிகா இன்னொரு வீட்டுக்கு போக போற பொண்ணு” என்றார் நாராயணன் இப்பொழுது மன்றாடும் குரலில்..

 

“அவள எப்பொழுதும் எங்கேயாவது விரட்டிக் கிட்டே இருக்கிறதே உங்களுக்கு பொழப்பா போச்சு. இங்க அந்த பொண்ண நிம்மதியா கொஞ்ச நாள் கூட இருக்க விட மாட்டேங்கறீங்க?” என்று குறை சொன்னபடி எழுந்து வெளியே செல்ல போக..

 

“ஏலே தேசிகா அவ கேட்ட மாதிரி அவ கம்பெனிக்கு எல்லாத்தையும் தூக்கி கொடுக்க முடியாது. ஏற்கனவே கேட்டரிங் மத்த அரேஞ்ச்மென்ட் நான் ஏற்பாடு பண்ணிட்டேன். வேணும்ன்னா அவ ஆசைக்காக ஹால் டெக்கரேஷன் அவ கம்பெனிக்கு கொடுக்கிறேன்.. அப்படியே வர்ற உறவினர்களை வெல்கம் பண்ணி வெல்கம் ட்ரிங் கொடுக்கிற பொறுப்பையும் பார்த்துக்க சொல்லு” என்றார்.

 

அத்தனை பார்த்து சிரித்தார் தேசிகன். மகளை சமாதானமாக்கும் பொருட்டு இவர் செய்கிறார் என்று தெரியும். ஏற்கனவே கல்யாண வேலை அனைத்தையும் ஈவண்ட் ஆட்களுக்கு இடம் கொடுத்து விட்டார் ராஜநாராயணன். 

 

இப்போது மகள் கேட்டதற்கு இணங்க இந்த ஒன்றையாவது அவளிடம் கொடுக்கலாம் என்றுதான் ஹாலிடெக்ரேசன் மகள் செய்யட்டும் என்று அத்தானை பார்த்து ‘இவரு நல்லவரா? கெட்டவரா?’ என்ற படியே கல்யாண வேலை பார்க்க கிளம்பி சென்றார் தேகிசன். 

 

“ஏலே வீரபாஞ்சான் என்னாலே ஆளுங்கள இட்டாந்திருக்க நீயு? இந்தா புட்டுக்குன்னு போய் கிடக்கிறாரே மருதமுத்து.. எம்மாம் பெரிய டானு தெரியுமா ஒரு காலத்துல? நீ இன்னிமோ சப்ப பசங்களா இட்டாந்து ஆட வைக்கிற? என்ன ஆட்டமே இத்தெல்லாம்” என்று அங்கே மருதமுத்துவின் பிணத்திற்கு முன் ஆடிக்கொண்டிருந்தவர்களை கண்டு கொதித்து எழுந்து வீரபாஞ்சானிடம் பாஞ்சு பாஞ்சு சண்டை போட்டுக் கொண்டிருந்தாள் ஆர்கனைசர் மீரா.

 

“இந்த ஒரு தபா மன்னிச்சுக்கோ க்கா.. நம்ம ஆப்போசிட் டீம் கஜா குரூப்ல அவன் எனக்கு முன்னாலே போய் இந்த கானா பாட்டு ஆட்டம் போடுற ரெண்டு டீம்ம அலேக்கா வேற இரண்டு இடத்துக்கு தள்ளிக்கினு போயிட்டான். இப்போதிக்கு இம்புட்டு தான் தேரிச்சு.. நீ ஒன்னியும் வொர்ரி பண்ணாதக்கா‌‌.. நானும் பசங்களோட ரெண்டு குத்து போட்டு டான்ஸ வேற லெவலுக்கு கொண்டு போயிடலாம்” என்றவன் அவனும் அந்த கூட்டத்தோடு இறங்கி ஆட..

 

மருதமுத்துவின் மகனோ “ஏம்மா.. உன்னைய இட்டாந்தது எதுக்கு? கொடுத்த பணத்துக்கு பக்காவா பண்ணுவேனு தானே? கஜாவை விட்டுவிட்டு உன்னான்ட வந்து கொடுத்தேன். என்னம்மா ஆட்டம் இதெல்லாம்? எங்க அப்பா எப்படி வாழ்ந்தவரு தெர்யுமா? அவருக்கு முன்னாடி எப்படி ஆட்டம் போடணும் தெர்யுமா?” என்று வகைத் தொகையாக அவன் பாடம் எடுக்க..

 

“சார் விடுங்க சார்.. விடுங்க சார்.. நானே இறங்கி ஆடி உங்க நைனாவை எப்படி கொண்டு போறன்னு மட்டும் நீங்க பாருங்க சார்” என்றாள்‌‌ மீரா.

 

“என்னது நீ இறங்கி ஆட போறியா?” என்று அதிர்ச்சியாக மருதமுத்துவின் மகன் கேட்க.. ஆமாம் என்று தலையாட்டியவளோ அதுவரை தப்பு அடித்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி ஒரு விசில் அடித்து நிறுத்துங்கள் என்பது போல கையை உயர்த்தி காட்டியவள்,

 

 “அண்ணாத்த நான் சொல்றதுக்கு நீ மெட்டு போடுற” என்ற அவள் விசிலாலேயே அடித்துக் காட்ட 

 

“இந்தா கப்புனு புடிச்சிட்டு உன் பின்னாலே வருகிறேன் பாருக்கா” என்றபடி தப்பு அடிப்பவர்களும் அவள் போட்டு டியூனுக்கு மெட்டமைத்தனர்.

 

அப்புறம் என்ன?? மீரா நடுநாயகமாக ஆட.. அவளோடு வீரபாஞ்சான் இன்னும் பிறரும் ஆட.. அங்க வந்திருந்த கூட்டமோ “பாருங்கடி.. பொண்ணு என்னா ஆட்டம் ஆடுறா?” என்று வாய் பிளந்து பார்த்தவர்கள் மருதமுத்துவை மறந்து தான் போனார்கள்.

 

மருதமுத்துவுக்கு இறுதிகடனை நன்றாக செலுத்தி விட்டு உள்ளே வந்தவள், அங்கே தந்தை கடும் கோபமாக அமர்ந்திருப்பதை கண்டு அமைதியாக அவர் முன் பின்னால் கைகளைக் காட்டிக் கொண்டு தெனாவட்டாக நிற்க.. 

 

எங்க கணவன் பேசினால் ஏதாவது விபரீதம் ஆகி விடுமோ என்று ஓடிவந்த ரூபினி “பாப்பா நீ போய் முதல்ல குளி போ” என்று மகளை அனுப்பி வைத்தவர் கணவனிடம் கண்களால் கெஞ்சினார். 

 

“எப்படியோ போங்க எல்லாரும்.. அவளுக்கு கல்யாணம் முடியல நான் மனுசனா இருக்க மாட்டேன். ஞாபகம் வச்சுக்கோங்க” என்று கையில் இருந்த டம்ளர் விசிறி அடித்து விட்டு தன் அருகில் நுழைந்து கொண்டார் ராஜ நாராயணன்.

 

தந்தை சொன்னவுடன் தான் மீராவின் நினைவுகள் எல்லாமே கிருஷை சுற்றி சுற்றி வந்தன. அவனைப் பற்றி நினைக்கலையே கோபம் ஆத்திரத்தை தாண்டி மெல்லிய புன்னகை ஒன்று அவள் இதழோரம் வந்து அமைதியாக அமர்ந்திருந்தது.

 

அறையில் தனியாக உட்கார்ந்து ஏதோ தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்த மீராவின் முன் நின்ற ராதாவோ “ஏய் மீரு.. அப்பவே கேட்கணும் நினைச்சேன். அதுக்குள்ள நீ வெளியில போய்ட்ட.. உண்மையை சொல்லடி.. வெறும் கூட படிச்சவர் மட்டும் தான் அத்தான்? உன் மூஞ்சிய பாத்தாலே ஏதோ பெருசா பண்ணிருக்கேன் தெரியுது.. அதுவும் அத்தான் அவ்வளவு அதிர்ச்சியோடு ‘நீயானு?’ கேட்கிறாருன்னா… சம்திங் ராங்” என்றதும் அவளை முறைத்து பார்த்தவள் ஒன்றும் பேசவே இல்லை.

 

“நீ டியூஷன் போனது என்னவோ 9th 10th ல தான்.. அதுக்கப்புறம் அந்த டியூஷன் மாத்திட்டாங்க அப்பா. அதுவும் இல்லாம டியூஷன்ல படிச்சே பல வருஷம் ஆகியிருக்கும். எப்படி இவ்வளவு வருஷமா ஞாபகம் வைத்திருக்கிறாரு அத்தான்?? ஏதோ சம்திங் இடிக்குதே.. உண்மைய சொல்ல போறியா இல்லையா? நான் அப்பா கிட்ட போட்டு கொடுத்திடுவேன் டி” என்று மிரட்டி விரட்டினாள் ராதா. 

 

ஆனால் மீராவா அந்த மீரட்டலுக்கு பயப்படும் ஆள்?? நெவர் எவர்!!

 

அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்த மீரா, “டியூஷன்ல மட்டுமல்ல காலேஜூம் இரண்டு பேரும் ஒன்னா தான் படிச்சோம். அவர் எனக்கு சூப்பர் சீனியர்.. தட் மீன்ஸ்..” 

 

“ஹே.. ஹே.. தெரியும் டி சூப்பர் சீனியர்னா.. அப்போ நீ ஃபர்ஸ்ட் இயர் சேர்ந்த போது அவர் லாஸ்ட் இயர்ஆஆ?” ராதா யோசனையோடு கேட்டாள்.

 

ஆமாம் என்று தலையாட்டிய மீரா

“ஐ ப்ரோக் ஹிஸ் லவ் டி!” என்றாள் மெல்லிய தயக்கத்தோடு!!

 

“வாட்?? அத்தான் உன்ன லவ் பண்ணாறா? நீ ப்ரேக் அப் பண்ணிட்டியா? எவ்வளவு பெரிய விஷயம்… இதை என் கிட்ட நீ சொல்லவே இல்ல?? நான் மட்டும் எனக்கு வர ப்ரோப்ஸல்.. லவ் லெட்டர் எல்லாம் உன் கிட்ட சொல்றேன்ல.. போதாகுறைக்கு அந்த வீணா போன வினோத் கொடுத்த லவ் கார்டை நீ தானடி பிரிச்சி படிச்சதே?” என்று ஜல்லிக்கட்டில் நிற்கும் காளையாய் மூக்கில் பெரு மூச்சு விட்டப்படி நின்றிருந்தாள் ராதா!

 

“ஏய்.. லாசு.. நான் என்னா சொன்னேன்? நீ என்ன புரிஞ்சிகிட்ட? நான் அவர் காதலை ப்ரேக் பண்ணுனேன் சொன்னேன். ஆனா.. நான் அவரை காதலிச்சேனு சொன்னேனா?” என்றாள் மீரா.

 

“என்னடி உளர்ற?” என்று ராதா விழிக்க..

 

“அவர் வேற பொண்ணை லவ் பண்ணினார்.. நான் ஆட்டைய கலச்சி விட்டேன்” என்றாள் நமட்டு சிரிப்போடு!

 

ராதாவோ நெஞ்சில் கை வைத்து அமர்ந்து விட்டாள்!!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top