Share:
Notifications
Clear all

கிஷ்-மீ 10

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 225
Thread starter  

அத்தியாயம் 10

 

அவன் நினைவுகள் அந்த காலத்திற்கே சென்றுவிட.. நினைவூட்டங்களில் வந்து அழகாக சிரித்து.. கடை கண்ணால் அவனைப் பார்த்து.. கன்னங்கள் சிவக்க அவனைக் கடந்து சென்றாள் அந்த பதின்ம வயது பெண். இப்பொழுது அவளை நினைத்தவன் வதனத்தில் மெல்லிய புன்னகை குரலில் அத்தனை மென்மை.

 

“அந்த பொண்ணு டியூஷன் சென்டர் வரும் போது நான் பிரண்ட்ஸோட கும்பலா நிற்பேன் டா.. அப்படியே ஒரு பார்வை பாத்துட்டு போவா.. பாரு.. ஸ்ஸ்ஸ்.. அப்படியே சில்லுனு சாரல் மழை பெஞ்சு மாதிரி மனசு குளுகுளுன்னு ஆயிடும்” என்றான்,

 

“அப்ப அந்த பொண்ணு தான் பாத்தாச்சா? நீ பார்க்கலையா?”

 

“அத்ப்புரா..?? ஒரு பொண்ணே நம்மள பாக்கும்போது நாம பார்க்கலைன்னா எப்படி? நானும் பார்ப்பேன்”

 

“அப்புறம்??”

 

“நான் பார்க்க.. அவள் பார்க்க..”

 

“பெரிய கம்பர் இவரு. அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்னு கவிதை சொல்றான்” என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தான் கண்ணன்.

 

“இந்த பார்வை அப்படியே ஒரு மாசம் போச்சு…"

 

"நாசமா போச்சு..!!"

 

"டேய்..!!"

 

"ஒன்னுமில்ல யூ கண்டினியூ…"

 

"ஒரு மாசம் போச்சா… அப்புறம் ஒரு நாள்… தனியா நான் படிச்சிட்டு இருந்தேன்னா.‌‌. அப்போ அவ வந்தா… வந்து…"

 

"வந்து…???!!!" கண்களில் ஆர்வம் கொப்பளிக்க கேட்டான் கண்ணன்.

 

"வந்து… தைரியமா என் பக்கத்துல உட்கார்ந்தா…"

 

“உட்கார்ந்து…” கண்கள் விரிய கேட்டான் கண்ணன்.

 

"உட்கார்ந்து.‌. உட்கார்ந்து..

ஷி கேவ் கிஸ் மீ" என்றான் வெட்கத்தோடு கிருஷ்.

 

"ஷி கேவ் கிஸ் மீ யா? அது அப்படியா வரும்.. இல்லையே.. ஷி கேவ் மீ அ கிஸ்! இப்படி தானே வரும்" என்றவன் ஆங்கில இலக்கணம் எடுக்க..

 

"எரும… எரும… அந்த வயசுல எப்படி டா கிஸ் எல்லாம்? அதுவும் இல்லாம கிஸ் அடிச்சா புள்ள பொறக்கும்னு நினைச்ச வயசு டா அது?” என்றதும் கண்ணன் வெடித்து சிரிக்க.. கிருஷின் முறைப்பில் வாயை மூடிக் கொண்டான்.

 

"நீ தான் டா சொன்ன.. ஷி கேவ் கிஸ்னு" குழம்பினான் கண்ணன்.

 

"கிஸ் மீ தான்.. ஆனா அது கிஸ் மீ சாக்லெட் கொடுத்தா…" என்று கூறி கண்ணடித்தான் கிருஷ்.

 

"அடப்பாவி..!! நான் கூட நீ பிஞ்சிலேயே பழுத்தவனு நினைச்சேனடா அண்ணா" என்று தன்னை ஒரு வார்த்தையில் முட்டாளாக்கிய அண்ணனை முறைத்தான் கண்ணன்.

 

“ஹா.. ஹா..” என்று சிரித்த கிருஷ் “எப்படி நீ அந்த ஒரு வார்த்தையில் கன்பியூஸ் ஆனாயோ.. அதேபோலத்தான் அந்த ஒரு வார்த்தையை போட்டு அந்த கிராதகி என் காதலை கவுத்துப்புட்டா…” என்றான் துக்கம் பெருக..

 

“அப்போ இது காதல்னு நீ கன்ஃபார்ம் பண்ணிட்ட..! நடத்து நடத்து” என்று கேட்டான் அண்ணனைப் பார்த்து கண்ணன். 

 

“அப்கோஸ்ட்டா கண்ணா.. டெய்லி அவ எனக்கு கிஸ் மீ கொடுப்பா…” என்றான் உற்சாகத்தோடு.

 

“வெயிட்.. வெயிட்..! சாக்லேட் கொடுப்பான்னு சொல்லு! திரும்பவும் அந்த வார்த்தை சொல்லி என்னை கோபப்படுத்தாதே” என்று பல்லை கடித்தான் கண்ணன்.

 

“ஓகே.. ஓகே.. கூல் படி.. கூல்! அவ எனக்கு சாக்லேட் கொடுப்பாளா.. நான் அவளுக்கு கிரீட்டிங்ஸ் கொடுப்பேன் அதுவும் நானே சாட் பேப்பர்ல செஞ்சு டிசைன் டிசைனான கிரீட்டிங்ஸ்..” என்று அந்த 17 வயது காதலின் நினைவை கண்களுக்குள் கொண்டு வந்தான் கிருஷ்.

 

“அடேய் அண்ணா.. வெயிட் வெயிட்.. என்னை போய் அந்த பூ பறிச்சுட்டு வா இந்த பூ பறிச்சிட்டு வா.. இந்த இலையை இப்படி காய வைனு என்னோட பழைய புக்குக்குள்ள எல்லாம் இதை வைத்து பாடம் பண்ணுவியே.. அதெல்லாம் இந்த கருமத்துக்கு தானா?” என்று அன்று தன்னை வேலை வாங்கிய அண்ணனை கண்டு முறைத்தான்.

 

“அது ஒரு அழகிய காதல் காலம் டா கண்ணா..”

 

கிருஷூக்கு வந்ததெல்லாம் காதல் இல்லை வெறும் க்ரஷ் தான் என்று வெகு கன்ஃபார்ம் ஆக நினைத்தான் கண்ணன்.

 

“இப்படியே எங்கள் லவ் போயிட்டு இருந்துச்சா..”

 

“ஆமா பெரிய அம்பிகாபதி அமராவதி காதல்..??” என்று உதட்டை சுழித்தான் கண்ணன்.

 

"அம்பிகாபதி அமராவதி காதலும் எங்கள் காதல் போல தான் சேராமல் போனது தான். உண்மையான காதல் எல்லாம் எங்கடா இந்த காலத்தில் சேருது?" என்று பெருமூச்சு விட்டான்.

 

"ஓகே ஓகே.. நீ கதைக்கு வா!" என்று காதை குடைந்தான் கண்ணன்.

 

“இப்படியே ரெண்டு மாசம் போச்சு. எங்களுக்குள்ள இப்போ ஓர கண்ணால் பார்த்து சிரிக்கிறது எல்லாம் போய் நேரா பார்த்து சிரிக்கவும், ஒன்னு ரெண்டு வார்த்தை பேசவும் ஆரம்பிச்சோம். நானும் படிப்பு டென்ஷன்.. வீட்ல அப்பாவோட டென்ஷனில் இருந்து இவளை பார்க்கும் போது தான் கொஞ்சம் மனசுக்கு இதமா உணர்ந்தேன். கடைசியா ஹாப் இயர்லி எக்ஸாமுக்கு முன்… அவளை பார்க்க வெயிட் பண்ணுனேன். ஆனா அவள் வரவே இல்லை. எக்ஸாம் முடிஞ்சு லீவ் எல்லாம் முடிஞ்சு தான் வந்தா.. வந்தனைக்கு அவளிட்ட நான் பேசலாம் போனேனா.. அந்த டைம் குறுக்க வந்தா பாரு இந்த கிராதகி…”

 

 

“யாரு அண்ணியா?” என்று ஆர்வமாக கேட்டான் கண்ணன்.

 

“ஆமா அதே பாதகி தான்.! நானும் அவளும் சந்திக்கலாம்னு எல்லோரும் டியூஷன் முடிஞ்சு போனதுக்கு அப்புறம், அவள மெதுவா தயங்கி தயங்கி பார்த்து மெல்ல அவளிட்ட பேச போக.. அவளும்‌ ஆர்வமாக என்னை பார்த்து.. தயங்கி தயங்கி என்னை நோக்கி வந்தா.. வந்து..”

 

“வந்து??” ஆர்வம் தாங்காமல் நகத்தைக் கடித்தான் கண்ணன்.

 

“அப்போ குறுக்கு வந்தா இந்த டேங்க் லாரி.. வந்தவ சும்மா இல்லாம ‘நேத்து நீங்க கொடுத்தது ரொம்ப நல்லா இருந்துச்சு.. வெரி வெரி ஆசெம்… பட் நான் சின்ன பிள்ளை.. இனிமே இப்படி என்னை ஏமாத்தி கொடுக்க கூடாது! சரியா?’ என்று அவள் சொன்ன தினுசில் எதிரே வந்தவள் ஜெர்க்காகி.. ‘என்ன என்ன கொடுத்தார் இவர் உனக்கு?’ என்று அவள் படப்படப்பாக கேட்க..”

 

“ஹி கிவ்ஸ் மீ கிஸ் மீனு? இரண்டாவது மீய உள்ளுக்குள்ளே முழுங்கிட்டா.. அவ பார்த்த ருத்ர பார்வையில…”

 

“அப்புறம் என்னாச்சு?” பொங்கி வந்து சிரிப்பை அடக்கிக் கொண்டு, ஆர்வத்தோடு கேட்டான் கண்ணன்.

 

“அப்புறம்.. விழுப்புரம்!! அப்புறம் என்ன ஒத்த மீ-யால என் லவ் புட்டுக்கிச்சு!” என்றான் சோகமாக கிருஷ்.

 

முதலில் புரியாமல் இருந்த கண்ணனுக்கு அதற்கு பின் தான் நினைத்த மாதிரி தான், அண்ணன் காதலித்த பெண்ணும் நினைத்து இருக்கிறாள் என்று நினைத்து சிரித்தவன் “ஆமாம் இதில் எங்கு அண்ணி திடீர்னு வந்தாங்க எனக்கு புரியல” என்றான்.

 

“அது இடையில் கொஞ்ச நாள் இவ வரலையா.. எப்பவுமே அவளே எனக்கு சாக்லேட் கொண்டு வந்து கொடுக்குறாளே ஒரு தடவ நாம கொடுப்போமேனு அப்படி ஒரு நாள் சாக்லேட் வாங்கிட்டு வந்து இருந்தேன். அன்னைக்குன்னு பாத்து இவ வரல.. நான் கையில சாக்லேட் வச்சிருந்தேனா.. அப்போ இவ பர்த்டேனு டியூசன்ல எல்லாருக்கும் சாக்லேட் கொடுத்தா.. சரி நம்ம ஆளு தான் வரலையே பர்த்டே பேபிக்கு இந்த சாக்லேட் கொடுத்துவிடுவோம்னு அதை அவளிட்ட கொடுத்தேன் டா! அதைத்தான் அந்த பக்கி அப்படி வந்து சொல்லி என் காதலை நான் குத்துவிளக்கு ஏத்துறதுக்கு முன்னாடி பெரிய அணுகுண்டா போட்டுட்டு போயிட்டா..” என்றான்.

 

“ஆஹா.. ஹா…” என்று வாய்விட்டு சிரித்தான் கண்ணன். 

 

“நீ பண்ணது பேர் எல்லாம் லவ்வாடா? சாக்லேட் கொடுத்து கொடுத்து அந்த புள்ளையை ஏமாத்திருக்க… இதுல அமராவதி அம்பிகாவதி காதல்ன்னு.. எனக்கு ஏதாவது வாயில நல்லா வந்துரும்! அண்ணனும் பார்க்கிறேன்..” என்று திட்டினான்.

 

ஆனாலும் பப்பி லவ் என்றாலும் அவன் மனதில் தோன்றிய அந்த முதல் பெண்ணை இப்பொழுது நினைவில் கொண்டு வந்தான் கிருஷ்! கண்ணன் சொன்னது போல அதில் ஆத்மார்த்தமான காதல் இல்லை வெறும் அந்த வயதுக்கு உரிய இன கவர்ச்சி மட்டுமே…

 

“சரிதான்..” என்று தலையசைத்து சிரித்துக்கொண்டான்.

 

“இப்ப புரிஞ்சிருக்குமே உனக்கு..! சும்மா லவ்வ கெடுத்துட்டா.. அது பண்ணிட்ட.. அவளை பழி வாங்குறேன்னு சொல்லிட்டு…” என்று கடுப்பிடித்தான் கிருஷ்.

 

“உண்மையாவே அவன் என் லவ்வ கெடுத்தவடா” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கண்ணனுக்கு அழைத்து விட்டார் தீனதயாளன்.

 

“கண்ணா.. என்னப்பா போயிட்டு வந்தாச்சா எங்க இருக்கீங்க?” என்று விவரம் கேட்டார். எங்கே மூத்த மகன் எடக்குமடக்காக ஏதும் பேசி பிரச்சினை இழுத்து விடக்கூடாது என்று பயம் அவருக்கு.

 

அவனும் “ஜஸ்ட் போனோம் பா.. அண்ணிய பார்த்தோம். மரியாதைக்காக இரண்டு வார்த்தை பேசிட்டு உடனே கிளம்பிட்டோம்பா.. இதோ வீட்டுக்கு தான் போயிட்டு இருக்கோம்” என்றதும் “டேய் கண்ணா.. நிஜமாதான் சொல்றியா? உங்க அண்ணன் ரெண்டு வார்த்தை பேசிட்டு உடனே கிளம்பிட்டானா? நம்பற மாதிரி இல்லையேடா?” என்று அவர் அங்கு தாடையே தடவி யோசித்துக் கொண்டு கேட்க…

 

“என்னதான் இருந்தாலும் உங்க புள்ளையாச்சேப்பா.. எங்க எப்படி நடக்கணும் அண்ணனுக்கு தெரியாதா?” என்ன என்றதும் தம்பியை முறைத்தான் அண்ணன்.

 

“இதை நீ சொல்லும்போது தான்டா இன்னும் எனக்கு பயந்து பயந்து வருது! சரி எப்படியோ போகுது. வீட்டுக்கு பத்திரமா போய் சேருங்க” என்று ஃபோனை வைத்துவிட்டார் தீனதயாளன்.

 

கிருஷ் தனது ஃப்ளாஷ்பேக்கை பேசி முடித்து தீனதயாளன் ஃபோன் பேசி முடிக்கிறதுக்குள் வீடு வந்து சேர்த்து இருக்க.. இரண்டாவதாக ‘என் காதலை அவர் தான் டா கெடுத்தாள்” என்று கிருஷ் சொன்ன விஷயம் கண்ணனின் ஞாபகத்திற்கு வரவே இல்லை. அவன் சொன்ன அந்த பப்பி லவ்வு மட்டுமே அவன் ஞாபகத்தில் இருக்க.. “இவனும்.. இவன் பப்பி லவ்வும்..” என்று சிரித்துக் கொண்டே சென்று விட்டான் கண்ணன்.

 

கிருஷின் அடுத்த காதலையும் அவள் தான் கெடுத்தாள் என்று சொன்னால்..?? என்ன சொல்வான் இந்த கண்ணன்?

 

தொடரும்..


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top