Thread starter 05/09/2026 9:28 pm
அத்தியாயம் 9
"என்னது மொத காதலா? இவன் எப்பொழுது காதலிச்சான் எனக்கு தெரியாம?" என்று அண்ணனை ஒரு குறுகுறுப்போடு பார்த்தான் கண்ணன்.
"நீ பாட்டுக்கு உன்னோட எக்ஸ்ட்ரா இமேஜினேஷன் க்ரியேடிங் பவர வச்சு தப்பு தப்பா யோசிக்காத டா! வீட்டுக்கு போகும்போது சொல்றேன்.. தெளிவா.." என்றான் பற்களை கடித்துக்கொண்டு கிருஷ்.
அதையே தான் அங்கு மீராவிடமும் யசோதா கேட்டுக் கொண்டிருந்தார். "ஏன் டி ஏற்கனவே உனக்கு மாப்பிள்ளைய தெரியுமா?" என்று சிறு அதிர்வோடு தான் கேட்டார். மெல்லிய பூகம்பம் அவரின் மனதில்.. எங்கே இந்த வரனும் தகையாமல் போய்விடுமோ இவளால் என்று..!
கூடவே எங்கே பெண்ணை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்து அவளின் மர்ம பக்கங்கள் வெளிவந்து கல்யாணத்தை நிறுத்தி விடுவாரோ மாப்பிள்ளை என்று அச்சம் வேறு. அதுவும் நாள்ளனைக்கு திருமணத்தை வைத்துக்கொண்டு??
மகளின் இந்த செய்கை அவருக்கு நெஞ்சு வலி கம்மிங் சூன் என்றது.
'தெரியும்' என்று சொன்னவளுக்கு ஏனோ அவனின் காதலை தான் பிரித்து விட்டது தெரிந்தால் என்ன நினைப்பார்கள் தன் சுற்றம் என்று சற்றே சங்கடமாக இருக்க.. அதை பற்றி பேசாது, "அது ஸ்கூல் படிக்கும்போது நான் டியூஷன் சென்டர் போவேன்ல மா.. அப்போ அந்த அண்ணனும் அதே டியூஷன் சென்டர்ல தான் படிச்சாங்க" என்றாள் மெல்லிய குரலில்…
"எதே? அண்ணனா?" யசோதாவும் ரூபிணியும் ஒரு சேர அதிர்ந்தனர். ராதா வாய் பொத்தி சிரிப்பை அடக்கினாள்.
நறுக்கென்று அவள் முழங்கையில் ஒரு கிள்ளு கிள்ளிய யசோதா "கூட படிச்சார்னு சொல்லு.. இவ்வளவு நேரம் நீ என்ன சொல்லிவியோனு எனக்கு மனசே பதபதச்சுருச்சு.. இதுல மாப்பிள்ளைய அண்ணனு சொல்ற.. அதுவும் ரெண்டு நாள்ல கல்யாணத்தை வச்சுக்கிட்டு" என்றதும் மனம் ஏனோ படபடத்தது மீராவிற்கு, இப்பொழுது கல்யாணம் என்ற பேச்சு எடுத்தவுடன், இதுவரை கல்யாணம் வேண்டாம்..! நான் நேரில் பார்த்து பேசினால் தான் கல்யாணம் என்று ஆயிரம் சண்டை போட்டது இப்பொழுது அமைதியாக நின்றிருந்தாள்.
மனைவி மூலம் மகள் படித்த டியூஷன் சென்டரில் தான் கிருஷூம் படித்திருக்கிறான். அதுதான் இருவருக்கும் ஏற்கனவே அறிமுகம் என்று மனம் ஆசுவாசப்பட, மாப்பிள்ளையின் பக்கம் திரும்பி புன்னகைத்தார் ராஜநாராயணன்.
"இப்பதான் மாப்பிள்ள… பொண்ணு சொல்லுச்சு, நீங்க ரெண்டு பேரும் ஸ்கூல் டைம்ல ஒரே டியூஷன் தானாமே?" என்று அவனிடம் உறுதிப்படுத்துவது போல கேட்க,
"ஆம்!" தலையசைத்தவன் "சரி அங்கிள் நாங்க கிளம்புறோம்" என்றான்.
"என்னது கிளம்புறானா? இவன்கிட்ட ஒண்ணுமே நாம பேசலையே?" என்று தவிப்போடு அவனைப் பார்த்தாள் மீரா.
சாதாரணமாக மாப்பிள்ளை என்று வந்தாலே நிறைய கேள்விகள் அவனிடம் கேட்க வேண்டும் என்று மனதினை நோட்பேட்டாக பாவித்து அத்தனை குறிப்பெடுத்து வைத்திருப்பவள், மாப்பிள்ளை வேதாந்த் கிருஷ்ணா என்றதும்,
கூடவே இந்த திடீர் திருமணமும், அவளுக்கு அவன் ஏற்கனவே அறிமுகமானவன் என்பதனாலும் இன்னும் நிறைய நிறைய கேள்விகள் அணிவகுத்து நின்றது பாவையவளுக்குள்…!!
ஆனால் அது எதற்கும் சந்தர்ப்பம் கொடுக்காமல் "நான் நேத்து நைட்டு தான் அங்கிள் ஊர்ல இருந்து வந்தேன். இங்க வந்து பார்க்கிறது ஒரு முறை இல்லையா… அதனால்தான்…! உங்களுக்கும் நிறைய வேலை இருக்கும்ல எங்க மேரேஜ் சம்பந்தமா, நீங்க பாருங்க நம்ம நிதானமா பேசிக்கலாம்" என்றவன் அனைவரிடமும் சிரித்த முகத்தோடு முறையாக விடை பெற்றவன், அவளை கண்களால் அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தபடியே விடைப் பெற்று சென்றான்.
அவளோ கண்களாலேயே கேள்வியை கணைகளை அனுப்பி, ஒரு புருவத்தை உயர்த்தி கேள்வியை அவனைப் பார்த்தாள்.
அவனோ அவளை கேள்விக்கணைகளை கண்டும் காணாமல், அவளைப் பார்த்து அலட்சியமாக உதடு சுழித்து சென்று விட்டான் தம்பியுடன் கிருஷ்.
"நல்லவேள டா அண்ணா.. கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்ட.. இல்லையென்னா உன்னை இங்க கூட்டிட்டு வந்து பாவத்துக்கு மாட்டிருப்பான் இந்த கண்ணா..” என்று ரைமிங் பேசியவனின் பிடரியில் ஒன்று கொடுத்து “ஒழுங்கா ரோட்ட பார்த்து கார ஓட்டுடா” என்றான் கிருஷ்.
“சரி.. சரி..” காரை ஓட்டிக்கொண்டே அண்ணன் புறம் திரும்பி
“எங்க உன் லவ்வ பிரிச்ச கோவத்துல கல்யாணம் வேணாம்னு சொல்லிடுவியோனு பயந்துட்டேன்!" என்று சிரித்தான் கண்ணா…
"நான் ஏன் டா கல்யாணம் வேணாம்னு சொல்லணும்? இவளால் தானே என் காதல் போச்சு… அதுவும் என் முதல் லவ்..! எல்லோருக்கும் முதல் லவ் எவ்ளோ ஸ்பெஷல் தெரியுமா?” என்ற அண்ணனை பாவமாக பார்த்தான் கண்ணன்.
“அந்த பொண்ணு எவ்வளவு அழகா இருப்பா தெரியுமா? அப்போ அவ டென்த் படிச்சிட்டு இருந்தா!" என்றான் கண்களில் அந்த கால காதல் நினைவுகளை தேக்கி…
"என்னது அந்த பொண்ணு 10த் படிச்சிட்டு இருந்தாளா? அப்ப நீனு?
"நான் அப்போ பிளஸ் டூ டா!" என்று வெட்கப் புன்னகையோடு கூறினான் கிருஷ்ணா அந்த மாய கண்ணனாய்!!
"அடேய்… அது பப்பி லவ்வு டா!" அலறினான் கண்ணன்.
"பப்பி லவ்வுனாலும் லவ்வு லவ்வு தானே?" என்ற அண்ணனை ஒரு மார்க்கமாக பார்த்தான் கண்ணன்.
"ஹே மேன்.. என்னா லுக் விடுற? மனசுல எந்த கல்மிஷனும் இல்லாம எந்த எதிர்பார்ப்பும் இல்லாம, அந்த வயசுல வர லவ் தான் டா.. ப்யூர் லவ் டா!" என்றவனின் விளக்கத்தில் இடவலமாக தலையை ஆட்டிக் கொண்டான் கண்ணன்.
“இன்னுமாடா அண்ணா அந்த டென்த் புள்ளயவே நினைச்சுட்டு இருக்க?”
“எப்படிடா மறக்கிறது? ஃப்ரீயா இருந்தா ஹார்ட்ல ஃபேவிக்யூக்கா ஒட்டிக்கிட்டவளை?” என்று இடப்பக்கம் நஞ்சை தடவி கொடுத்த அண்ணனை பார்த்து பதறினான் கண்ணன்.
“இங்க பாரு அண்ணா.. பர்ஸ்ட் கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும். ஆனா போக போக பழகிடும். அதுவும் இத்தனை வருஷத்துல அந்த லவ் காணாமலே போயிருக்கும். அந்த பொண்ணு என்னால வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகி இருக்கும். நீயும் ஒழுங்கா அண்ணிய கல்யாணம் பண்ணி சந்தோஷமா குடும்பம் நடத்தி குழந்தை குட்டி பெத்துக்கிட்டு வாழ்க்கையில் செட்டில் ஆகுற வழியை பாரு” என்று அறிவுரை கூறினான்.
“கண்டிப்பா அவள கல்யாணம் பண்ணுவேன் டா. அவ மட்டும் தான் கல்யாணம் பண்ணுவேன் டா..!” என்றான் பல்லை கடித்த படி..!
“அப்பாடி..! சூப்பர் டா அண்ணா. எங்க உன் காதல பிரிச்சு கோவத்துல அண்ணிய கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு கல்யாணத்தை நிறுத்தி விடுவியோனு கொஞ்ச நேரத்துல பயந்துட்டேன்” என்றான் ஆசுவாசமாக..!
“அப்படியெல்லாம் நான் சொல்ல மாட்டேன்..! என் காதல பிரிச்சவள கண்டிப்பா கல்யாணம் பண்ணி நான் ரிவேஞ்ச் எடுக்க போறேன் டா" என்று ஆன்ட்டி ஹீரோ போல எள்ளும் கொள்ளும் முகத்தில் வெடிக்க பேசினான் கிருஷ்.
“என்னது ரிவெஞ்ச் எடுக்க போறியா?” என்றவன் பயத்தில் கைகள் நடுங்க ஸ்டேரிங்கை சரியாக பிடிக்க முடியாமல் கார் தாறுமாறாக ஓட.. வேறு வழியின்றி அவசராமாக அவன் ப்ரேக்கை மிதிக்க.. க்ரீச் என்ற பெரும் சத்தத்தோடு காரை நிறுத்தினான் கண்ணன்.
இவன் இப்படியாக சடன் பிரேக் போட்டு கார் நிறுத்திய பாவத்தில் பின்னால் வந்த கார்களும் சட் சடனென்று சடன் பிரேக் போட்டு, நிறுத்தின.. சில கார் ஓட்டுநர்கள் அவனை முந்தி வந்து நல்ல சென்னை தமிழில் வசைப்பாடி சென்றனர்.
“பாவி கொஞ்ச நேரத்துல கொல்ல பாத்தியேடா” என்று அண்ணனின் புஜத்தில் குத்தியவன், அருகில் இருந்த தண்ணீரை எடுத்து மடக்கு மடக்கு என்று குடித்தான்.
“ஐயோ இந்த விஷயம் அப்பாவுக்கு தெரிஞ்சா.. போச்சு போச்சு..!” என்று புலம்பித் தவித்தான்.
"இங்க பாரு கிருஷ்.. நீ ப்ளஸ் டூ படிக்கும்போது 10த் பொண்ணு மேல ஆசை வச்சதெல்லாம் எவ்வளவு பெரிய அஃபென்ஸ் தெரியுமாடா? நல்ல வேலை அப்பாவுக்கு இதெல்லாம் தெரியல! ஒரு வேளை வெளியில தெரிஞ்சு போலீஸ் கேஸ் ஆகியிருந்தா… உன்னை பிடிச்சு உள்ள போட்டு இருப்பானுங்க! ஏதோ என் வருங்கால அண்ணி தயவுனால நீ தப்பிச்சிருக்க.. பாரேன் அப்பவே அண்ணி உனக்கு நல்லது தான் செஞ்சிருக்காங்க" என்றதும் அவனை முறைத்தான் கிருஷ்.
"உங்க அண்ணி ஒன்னு எனக்கு நல்லது செய்யல.. அவ எனக்கு செஞ்சது எல்லாமே அளவில்லா அனர்த்தங்கள் தான்.. என் லவ்வ பிரிச்ச பாதகி.. கிராதகி!” என்றான் கோபத்தோடு.
சிறிது நேரம் கிருஷிடம் உஷ்ணம் பேச்சில்.. காரில் அமைதி நிலவ ஏசியின் அளவை கூட்டிய கண்ணனோ, அண்ணனை சகஜமாக பொருட்டு "ஏன்டா கிருஷ் நிஜமாவே நீ டுவல்த் படிக்கும்போது லவ் பண்ணியாடா? எப்படிடா உனக்கு அவ்வளவு தைரியம்? அதுவும் அப்பாவ தெரிஞ்சும்.. நீ எப்படி செஞ்ச??" என்று யோசனையாக கேட்டான்.
"அந்த விஷயம் தெரிஞ்சு தானடா அப்பா என்னை பெல்டால விலாசுன விலாசலுல அதுக்கப்புறம் பொண்ணுங்கள பாக்குறதே கொஞ்ச நாள் விட்டேன்” என்று பெருமூச்சு விட்டு கிருஷின் நினைவுகளில் அழகோவியமாக வந்து சிரித்தாள் அந்த பதின்ம வயது பெண்.
“என்னது அப்பா பெல்டான விலாசினாரா?” என்று கண்ணனின் கேள்விகள் எல்லாம் கிருஷின் நினைவுகளை கலைக்க முடியவில்லை.
அவன் நினைவுகள் அந்த காலத்திற்கே சென்றுவிட.. நினைவூட்டங்களில் வந்து அழகாக சிரித்து.. கடை கண்ணால் அவனைப் பார்த்து.. கன்னங்கள் சிவக்க அவனைக் கடந்து சென்றாள் அந்த பதின்ம வயது பெ
ண். இப்பொழுது அவளை நினைத்தவன் வதனத்தில் மெல்லிய புன்னகை குரலில் அத்தனை மென்மை.
